Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழரின் நிலை – ‘காய்க்கும் மரம்தான் கல்லெறி வாங்கும்’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி, பிப்ரவரி 26, 2010 12:10 | மறைச்செல்வன், ஐரோப்பா

ஈழத்தமிழரின் நிலை – ‘காய்க்கும் மரம்தான் கல்லெறி வாங்கும்’

‘முள்ளிவாய்க்கால் முடிவுடன் தமிழ் மக்களின் எதிர்காலமே முடிந்துவிட்டது. இனி அவர்களை நடைபிணங்களாக்கிய பின் தாம் நினைத்ததை எளிதாக முடித்து விடலாம்’ என்ற நப்பாசையுடன் இருந்த சிங்கள பௌத்த இனவாத அரசுக்கும், அதற்கு முண்டு கொடுத்து வந்த, இன்னும் கொடுத்து வரும் இந்தியா, சர்வதேச நாடுகள் ஆகியவற்றுக்கும் இன்று ‘கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டது’ போன்ற நிலை உருவாகிறது.

உலகம் பூராவும் மாவீரர் நினைவு நாள், முத்துக்குமார் முதல் முருகதாசன் வரை தம்உயிரை அர்பணித்த தியாகிகளின் நினைவுநாட்கள் ஆகியவற்றில் முன்னொரு போதும் இல்லாத அளவில் பெருந்திரளாகக் கூடிய புலம்பெயர் மக்களின் எழுச்சியும் ஆர்வமும், இலங்கை அரசையும் அதற்கு ஒத்தூதும் மற்றைய அரசுகளையும் வியப்பிலும் கவலையிலும் ஆழ்த்துகின்றன. அத்தோடு நின்றுவிடாது, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில், தமிழீழம் ஒன்றே ஈழத்தமிழர்களின் அரசியற் தீர்வு என உலகம் பூராவும் 99மூ ஆதரவுடன் நடைபெற்ற வாக்கெடுப்புத் தமிழ் மக்களின் மனநிலையை மீளவும் உறுதிப்படுத்திவிட்டது. மற்றும் மக்கள் அவை, நாடு கடந்த அரசு, உலகத் தமிழர் பேரவை போன்ற அமைப்புகளின் வீச்சும், இவையெல்லாம் எங்கே போய் முடியுமோ என்ற கிலியையும் கிளப்புகின்றன.

இவற்றிற்கெல்லாம் பதில் கண்டுபிடித்துவிட்டது போல் ‘புலம்பெயர் தமிழர்கள்தான் இப்படி குதிக்கின்றார்கள், ஆனால் வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழர்களுக்குத் தமிழீழம் என்ற நினைப்பே இல்லை. அவர்கள் அன்றாட வாழ்க்கையை நடாத்துவதிலேயே கண்ணாக இருக்கின்றார்கள்’ என ஒரு அபஸ்வரத்தில் தமது திருகுதாளங்களுடன் ஒரு பல்லவியை இயற்றித் தமிழ் மக்களின் மனநிலையைக் குழப்ப இந்த சக்திகள் பகீரதப் பிரயத்தனம் செய்கின்றன. இதற்கு ஆதரவாக, வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் சரத்பொன்சேகாவிற்கு வாக்களித்தார்கள் எனவும் முன்புபொல் வாக்களிப்பதைப் பகிஷ்கரிக்கவில்லை எனவும் சமாளிக்க முயற்சிக்கின்றனர்.

மேற்கூறிய சுற்றுமாற்று மூலம் எமது மக்களோ, தலைவர்களோ விலைபோகாது யதார்த்த நிலையை வெளிக்கொணர்வது இந்த நேரத்தில் அதிமுக்கியம் வாய்ந்தது ஆகும். இன்றைய நிலையில், தமிழர் மாத்திரம் அல்ல, வேறு எவருமே தமது மனநிலையை வெளிப்படையாகக் கூற (இலங்கையின் சர்வாதிகார ஆட்சியில்) முடியாது. சட்டதிட்டமற்ற, சர்வாதிகார அரசுக்கு அவசரகாலச் சட்டமும், பயங்கரவாத ஒழிப்புச் சட்டமும் இரு கரங்களாக இயங்கும் நிலையில், முட்கம்பி வேலிக்குள்ளும், அதற்கு வெளியில் திறந்த வெளிச்சிறைச்சாலையாக உள்ள வடக்கு கிழக்கு மாகாணங்களிலும், இராணுவத்தினாலும் ஒட்டுக்குழுக்களினாலும் நாள்தோறும் மிரட்டலுக்கு உள்ளாகியிருக்கும் எமது மக்கள், தமது ‘உண்மையான மன உறுதியை’ வெளிக்கொணர முடியுமா என்பது தேவையற்ற ஒரு கேள்வியெனலாம். இதில் எல்லோரையும் வியக்கவைக்கும் விடயம் என்னவென்றால், சர்வதேச சமூகத்திற்கு எமது மக்களின் மனநிலைப்பற்றி அவ்வளவு ‘கரிசனை’ இருப்பதாயின், புலம்பெயர் மக்கள் நடாத்தியது போல் தமிழீழ பரப்பிற்குள், ஐ.நா.வின் மேற்பார்வையில் ஏன் ஒரு வாக்கெடுப்பை நடாத்த முன்வரமுடியாது என்பதாகும்.

தமிழ் மக்கள் தாம் ஏன் தமிழீழமே தீர்வென தீர்மாணித்திருக்கிறார்கள் என எத்தனையோ முறை வெளிப்படையாகக் கூறியுள்ளார்கள்.

1.சரித்திரபூர்வமாகத் தமிழர்கள் இலங்கையில் தனியாக அரசு அமைத்து ஆண்ட ஒரு பரம்பரை.

2.சுதந்திரம் என்ற போர்வையில் எமது சுதந்திரத்தை பிரித்தானிய அரசு 1948-ல் சிங்கள பௌத்த

இனவாதிகளிடம் தாரைவார்த்துக் கொடுத்தது.

3.1976-ல் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மூலம் தனித்தமிழீழமே தமது அரசியற் தீர்வென ஈழம் வாழ்

தமிழ் மக்களால் பிரகடனம் செய்யப்பட்டது.

4.1977-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இது வெளிப்படையாக உறுதிச் செய்யப்பட்டது.

5.அதன்பின் கொண்டு வரப்பட்ட அரசியல் யாப்பின்கீழ், ஜனநாயக வழியில் தமிழீழம் கோருதல்

‘பிரிவினைவாதம்’ எனச் சட்டம் மூலம் தடுக்கப்பட்டது.

6.எனினும், நார்வேயின் தலையீட்டால் நடைபெற்ற சமாதானப் பேச்சின் பலனாகத் தமிழரின்

பிரதேசம் என, மீண்டும் அவர்களின் வாழ்விடம் பிரகடனப்பட்டது.

7.அதே நேரம், இலங்கையின் சிங்கள பௌத்த அரசு தனது தொடர்ந்து நடத்திய

இனப்படுகொலையால் தமிழினத்தின் இருப்பையே கேள்விக்குறியாக்கியது.

8.ஒரு கணவன்-மனைவி தமக்குள் ஒருவர்’ நியாயமற்ற முறையில்’ நடந்தால் அவர்களுக்கு

விவாகரத்து வழங்க வேண்டும் எனச்சட்டம் மூலம் கூறும் மேற்குலக நாடுகள், திட்டமிட்டு

பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள்மீது நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ நடாத்தப்பட்டு

வரும் இனப்படுகொலையை உதாசீனம் செய்து, அதை நடத்தும் சிங்கள பௌத்த அரசுடன்

தமிழர்கள் ஓத்து வாழ வேண்டும் எனப் புத்தி புகட்டுவது விந்தையிலும் விந்தையாக உள்ளது.

சில சமயம் இதைப்பற்றிச் சிந்தித்தால் அழுவதா அல்லது சிரிப்பதா என்று தோன்றலாம்.

9.தற்போது எல்லாவற்றிற்கும் மேலாக, சிங்கள தேசத்திலேயே சிங்கள பௌத்தர்கள்கூட,

இலங்கையில் நடைபெறும் சர்வாதிகார அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்க முற்படும்போது, தமது

உயிருக்கு ஆபத்தென ஓலமிடும் நிலை உருவாகியுள்ளது.

தமிழ் மக்கள் தனி ஈழம் கோருவதன் மூலம் இராஜபக்சே அரசு பயமடைந்து, சினம் கொண்டு அதை ஒரு காரணமாக வைத்து, அவசரகாலச் சட்டத்தையும் பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தையும் நீடிக்கும் எனவும் ஒரு வாதம் எழுப்பப்படுகிறது.

தமிழீழம் என்பது தமிழ் மக்களின் வாழ்வாதார உரிமைப் பிரச்சினை என்பதால், அதுபற்றித் தீர்மாணிக்கும் உரிமை தனியே தமிழ் மக்களையே சாரும். இராஜபக்சேவின் சிந்தனைகளுக்கோ, மற்றைய நாடுகள் அதைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்றோ ஆராய வேண்டிய அவசியம் தமிழ் மக்களுக்கு இல்லை. இத்தனை வாதங்களுக்கும் எதிராகச் சர்வதேச சமூகம் தமிழீழக் கோரிக்கைகளைத் தமிழர்கள் கைவிட வேண்டும் என வற்புறுத்தினால் அவர்கள் ஏதோ ஒரு சுயநலத் திட்டத்தைத் தமது மனதில் கொண்டு, வேறொரு நிகழ்ச்சி நிரலுக்கு வழிகோலுகிறார்கள் என்றே அர்த்தமாகும். இப்படியொரு துர்பாக்கிய நிலை ஏற்படின், தமிழ் மக்கள் அதனால் வருத்தப்படக்கூடும். ஆனால், அதற்காக, அவர்கள் தமது அரசியல் நிலைப்பாட்டையோ, அரசியல் இலக்கையோ மாற்றுவார்கள் என எதிர்பார்ப்பது பகற்கனவாகும். கொள்கைக்காக எத்தகைய தியாகத்தையும் புரிவதற்கு ஆயத்தமான தமிழினம், இத்தகைய சலசலப்பை கருத்தில் எடுக்கும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்றே கூறவேண்டும். அத்தோடும் அல்லாது, தமது அரசியற் கோட்பாட்டிற்காகவும், அதன் பலனாகவும் உயிர் நீத்த அத்தனை தியாகிகளுக்கும் துரோகம் செய்யத் தமிழர்கள் கனவிலும் நினைக்கமாட்டார்கள்.

இன்றைய தமிழ் இளைஞர்களின் எழுச்சியே முக்கியமாக உலகின் கண்களை உறுத்துகிறது எனலாம். இதனை நன்கறிந்த இலங்கை அரசு, இதனால் ஆபத்து வரலாம் என அச்சுறுத்திச் சர்வதேச சமூகத்தை அவர்களுக்கு எதிராகத் தூண்டுகிறது. இதை மனதிற்கொண்டு, தமிழ் மக்களுக்கு தீர்வு வரச் சற்று நேரமாகலாம் எனச் சர்வதேச சமூகம் இராஜபக்சேவின் கையாலாகாத்தனத்தை மறைப்பதற்கு இழுத்தடிக்கலாம். 62 வருடங்களாக ஒரு தீhவும் கிடைக்கப்பெறாத தமிழினம், இன்னும் சில வருடங்களில் முற்றாகவே அழிக்கப்படும் நிலையில், இத்தகைய ‘புத்திமதிகள்’ காற்றோடு போவதொழியப் பலனளிக்கப் போவதில்லை.

சர்வதேச சமூகம் தமது காது குளிர்வதற்காக ‘புலிகள் எதிர்ப்புக் கோஷங்களை’ சில பிரமுகர்களிடமிருந்து கேட்ட போதும், தமிழ் மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றிய தமிழீழக் கொள்கையை ஆதரித்து அக்கொள்கையைக் கடைப்பிடிப்பவர்களோடு தொடர்புக் கொள்பதைவிட அவர்களுக்கு வேறு வழியில்லை. தமிழ் மக்களைச் ‘சமாதானப் படுத்த வேண்டும்’ என்றொரு வார்த்தை ஜாலத்தைப் பிரயோகித்தும், ‘மக்களுக்கு அபிவிருத்திக்கு உதவுதல்’ என்று கூறியும் அவர்களை மயக்கும் முயற்சிகள் நடக்கலாம். இவ்விடயத்தில் எமது இளைய சமுதாயத்தினர் விழிப்போடு இயங்க வேண்டும். தமது அரசியல் அபிலாட்ஷைகளைத் தாமே அடையவும், பிறரிடமிருந்து எதிர்பார்ப்பதைத் தவிர்க்கவும் முக்கியமாக எமது இளைய சமுதாயத்தினர் கற்றுக்கொள்ள வேண்டும்.

மனித உரிமை மீறல், போர்க் குற்றங்கள் என ஒன்றன்பின் ஒன்றாக இலங்கை அரசு மாட்டியுள்ள இந்நேரத்தில், சர்வதேச நாடுகள் ‘தமிழின அழிப்பு’ பற்றி சிந்திக்க ஏன் தயங்க வேண்டும் என்பது ஐயப்பாட்டை எழுப்புகின்றது. ஐரோப்பாவில் கொசோவாவில், 10,000 பேர் படுகொலை செய்யப்பட்ட போது அதை இனஅழிப்புக்கு உள்ளானதாக பிரகடனப்படுத்தி, அதன்பின் அந்த நாட்டின் விடுதலையை அங்கீகரித்த இந்நாடுகள், எமது விடயத்தில் சுதந்திரமடைந்த இலங்கைத் தீவில் 62 ஆண்டுகளாக 1,50,000 ஈழத்தமிழர்கள் சிங்கள பேரினவாத இனஅழிப்பினால் பலியானதின் பின்னும், மேற்குலக நாடுகள் குறிப்பாக பிரித்தானிய அரசு எமது இனப்படுகொலையை அங்கீகரிக்கத் தவறுவது அவர்களின் அரசியல் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவதாகும். இதன் மூலம், இனஅழிப்புக்கு உள்ளானதாகப் பிரகடனப்படுத்தும் இந்நாடுகள், எமது விடயத்தில் தமிழ் மக்களின் சந்தேகத்திற்கும் கோபத்திற்கும் உள்ளாகின்றனர். 1948 முதல் இன்று வரை பல்வேறு வழிகளில் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலையை அவர்கள் ஏற்றுக்கொள்வதற்கு நாம் ஒருபாடத்திட்டம் அமைத்து அவர்களுக்குப் புகட்டத் தேவையில்லை. அப்படித்தான் தேவைவரினும் அக்கைங்கரியத்தைச் செய்வதற்குப் பல புத்திஜீவிகள் தயார் நிலையில் உள்ளார்கள். இவ்விடயத்தை நோக்கும்போது ‘நித்திரையானவனை எழுப்பலாம், ஆனால் நித்திரை போல் பாசாங்கு செய்பவனை எழுப்ப முடியாது’ என்ற பழமொழியும் நினைவுகூரப்பட வேண்டியது. இனப்படுகொலையை ஏற்றால் அதன்பின் தமிழர்கள் தமிழீழம் அடைவதை தடுக்க முடியாது என்பதே இந்தச் சிதம்பர இரகசியம் ஆகும்.

மேற்கூறிய கருத்துகளை நடைமுறையில் அரங்கேற்ற சமீபத்தில் உலகத் தமிழ்ப் பேரவை ஒரு மாநாட்டைக் கூட்டியது உற்சாகம் அளிக்கிறது. மேலும், பிரித்தானியாவில் உள்ள சர்வக்கட்சித் தலைவர்களும் மற்றும் சர்வக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களும், சரித்திரப் பிரசித்தி பெற்ற பிரித்தானியா பாராளுமன்றக் கட்டிடத்தில், தமது கட்சிக் கொள்கைகளுக்கு அமையவும், தமிழ் மக்களின் உணர்ச்சிகளை மதித்தும் உரையாற்றியமை ஒரு முக்கியமான முன்னகர்வு ஆகும். ஆஸ்திரேலியா, கனடா போன்ற தூர நாடுகளில் இருந்து அந்நாடுகளின் பிரதிநிதிகள் பங்கு பற்றியதும் ஊக்கமளிக்கும் விடயமாகும்.

pathivu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.