Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயக உறவுகளுக்கான பொருட்கள் சேகரிப்பு

Featured Replies

தாயக உறவுகளுக்கான பொருட்கள் சேகரிப்பு

உதவும் காலம் 13.09.2010 முதல் 30.09.2010 வரை

முப்பத்தைந்து வருட வாழ்க்கையின் வடுக்கள்

உயிரிழப்பு

பொருளாதார இழப்பு

தொழில் இழப்பு

இடப்பெயர்வு

ஏதிலிகள்

வறுமை

நல்லதோர் வாழ்வு செய்வோம் நம்பிக்கை கொண்டெழு தமிழா

இன்றுள்ள தேவை

எமது மக்களின் வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்புதல்

சுயமாக வாழவைத்தல்

எமது உறவுகள் பொருளாதார மலர்ச்சி கண்டால்

சுதந்திரம் தேடிவரும்

அன்பான புலம்பெயர் வாழ் உறவுகளே

ஒருவர் ஒரு பிள்ளைக்கு கல்வி உதவி

ஒரு குடும்பம் இன்னொரு குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி

நீங்கள் விரும்பியபடி உங்கள் உதவிகளை வழங்கலாம்

பாடசாலைப் பைக்குள் தேவையான கல்வி உபகரணங்களை வைத்து (பொருட்களின் விபரக் குறிப்புடன் விரும்பின் உங்கள் பெயரையும்; குறிப்பிட்டு) ஒரு மாணவனுக்கு வழங்கக்கூடிய முறையில் அழகாக பொதி செய்து வழங்கினால் நீங்கள் வழங்கிய மாதிரியே தாயக மாணவர்களின் கைகளில் சேர்க்கமுடியும்.

2005ம் ஆண்டுக்கு பின்னான தரமான கணணி ஏற்றுக்கொள்ளப்படும். புதிதாகவும் வழங்கலாம், கொம்பாஸ் பெட்டி, அப்பியாசக்கொப்பி, கலர்ப்பென்சில் மற்றும் ஏனைய கல்வி உபகரணங்கள்.

ஒரு குடும்பத்திற்கு தேவையான புதிய அல்லது தரமான உடைகள் மற்றும் பழுதடையாப் பொருட்கள் தரமான முறையில் விபரக்குறிப்புடன் நேர்த்தியாக பொதி செய்து உடனடியாக வழங்கக்கூடிய முறையில் எமது சேகரிப்பு மையத்தில் தாயக உறவுகளுக்காக வழங்கலாம்.

பொருட்களின் விபரங்கள், வழங்கிய கொடையாளியின் விபரம் பொதியில் குறிப்பிடப்படவேண்டும்.

துன்பத்தில் இருந்து விடுவித்து

பரிவோடு பாதுகாப்போம்

கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் தமிழர் தாயக பகுதியில் இடம் பெற்ற போர் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் ஏற்பட்ட விளைவுகள் தாங்க முடியாது. உயிரிழப்பு உடமை இழப்பு இருப்பிட இழப்பு அத்துடன் அங்கவீனர்கள், விதவைகள் ஆதரவற்ற குழந்தைகள், ஆதரவற்ற முதியவர்கள், என சமுக கட்டமைப்பக்கள் குலைந்த நிலையில் எமது சமுகம் பெரும் பாதிப்புக்குள் வாழ்கின்றது. இந்த நிலையில் இருந்து எமது மக்களை மீட்டு அவர்களை சுயமாக வாழவைக்க வேண்டிய தார்மீக கடமையும் பொறுப்பும் புலம் பெயர்ந்து வாழும் அனைவருக்கும் உள்ளது. எனவே அனைவரும் ஒருமித்து எமது உறவுகளை பாதுகாப்போம், வாழவைப்போம்.

அன்பான பிரான்ஸ் வாழ் உறவுகளே தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ் முதற்கட்டமாக கல்வியை தொடர துடிக்கும் பல்கலைகழக மாணவர்களுக்கும், சாதாரண மாணவர்களுக்கும் உதவுவதற்காக கல்வி உபகரணங்களை சேகரித்து இலங்கைக்கு அனுப்ப உள்ளது. எனவே தரமான கணனிகள் அப்பியாசக் கொப்பிகள் மற்றும் கல்வி உபகரணங்கள் போன்றவற்றை செப்டெம்பர் பதின்மூன்றாம் திகதியில் இருந்து முப்பதாம் திகதி வரை உள்ள நாட்களில் வழங்கி எமது உறவுகளுக்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

உடனடித்தேவைகளை எதிர்பார்த்து காத்திருக்கும் உறவுகள்.

குடும்ப தலைவர்களை இழந்து வறுமையில் வாடும் குடும்பங்கள்.

பல தடவைகள் இடம் பெயர்ந்து துன்பங்களை அனுபவித்து முகாம்களில் வாழ்ந்து மீள சொந்த இடம் திரும்பிய குடும்பங்கள்.

கல்வி உதவிகளின்றி கல்வியை தொடரத்துடிக்கும் மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள்.

போரினால் அவயவங்களை இழந்து செயற்கை அவயவங்கள் பொருத்துவதற்காக ஏங்கிக் காத்திருக்கும் உறவுகள்.

கைதிகளாக சிறையில் தமது வாழ்நாட்களை கழிக்கும் போராளிகளின் குடும்பங்கள்.

இப்படியான நிற்கதி அற்ற குடும்பத்தவர்களை, நம்பிக்கை நிறைந்த மனிதர்காளாக வாழ

மனோ வலிமையையும் ஆத்ம பலத்தையும் கொடுத்து மனதை வருத்துகின்ற அழுத்துகின்ற பாரங்களை நீக்கி மகிழ்வோடு வாழ வைக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டல்லவா? செந்நீர் சிந்திய மக்களின் விழி நீர் துடைத்து மார்கழிச் செழிப்பாய் அவர்களின் வாழ்வு சிறக்க உதவிகள் புரிவோம்.

இமைக்கும் பொழுதில்! இவர்க்குதவி

ஈட்டும் புண்ணியம் அத்துயரில்

எமக்கும் நல்கும் உதவியென

எண்ணும் ஈர நெஞ்சத்தார்

சுமக்கும் துயரம் பயனாளர்

துறக்க உதவ அழைக்கின்றோம்.

உதவும் காலம் 13.09.2010 முதல் 30.09.2010 வரை

பொருட்கள் சேகரிப்பு மையம்

சிப்பி மண்டபம்

தாயக உறவுகளுக்கான பொருட்கள் சேகரிப்பு

உதவும் காலம் 13.09.2010 முதல் 30.09.2010 வரை

முப்பத்தைந்து வருட வாழ்க்கையின் வடுக்கள்.

12 AVENU JULES FERRY

93140 BONDY

காலை 9 மணிமுதல் மாலை 7 மணிவரை வழங்கலாம்

மேலதிக விபரங்களுக்கு த.பு.க பணியகத்துடன் தொடர்புகொள்ளவும் : 01 40 38 30 74

ஓன்றிணைவோம் சேவை செய்வோம்

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ்

காலை 9 மணிமுதல் மாலை 7 மணிவரை வழங்கலாம்

மேலதிக விபரங்களுக்கு த.பு.க பணியகத்துடன் தொடர்புகொள்ளவும் : 01 40 38 30 74ஓன்றிணைவோம் சேவை செய்வோம்

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ்

Edited by அகரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.