Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் வந்துள்ள சிங்கள குடியேறிகள்: பசில் ராஜபக்‌ஷ தலைமையிலான திட்டமிட்ட செயல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு பக்கம் யாழிற்கு வந்துள்ள சிங்கள அத்துமீறிய குடியேறிகள் பற்றி தமக்கு எதுவும் தெரியாது என கூறுகின்றார் வடபகுதி ஆளுநர். இன்னொருபக்கம் யாழ் அரச அதிபர் விசனம் தெரிவிக்கின்றார். எனினும் இது அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்களின் திட்டமிடப்பட்ட செயல் என தெரியவந்துள்ளது.

ஆனால் இந்த சிங்களக் குடும்பங்களின் தேவைகள் குறித்து அறிந்துகொள்வதற்காக சமுர்த்தி அதிகார சபையின் தலைமையக அதிகாரிகள் குழு நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்தது.

ஆகவே இது யாரின் அனுமதியில் நடக்கின்றது. பசில் ராஜபக்‌ஷவே இந்த சமுர்த்தி அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளாராம். என தெரியவந்துள்ளது.

இதுவே தமிழர்களாக இருந்தால் என்ன நடந்திருக்கும். உடனடியாக அந்தப்பகுதிக்கு இராணுவமும் பொலிஸாரும் அனுப்பப்பட்டு பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவித்ததாக விரட்டியடிக்கப்பட்டிருப்பர் அல்லது சிறையில் அடைக்கப்பட்டிருப்பர்.

சிங்களவர் நலனை கவனிக்க வந்துள்ள சபையின் அதிகாரியான எல்.கே.ஜி. குணதிலக்க தலைமையில் வந்த குழுவினர் சிங்கள மக்களுக்கு படிவங்களை வழங்கி விவரங்களைச் சேகரித்துள்ளனர். சிங்கள மொழியிலான அந்தப் படிவங்களை பூரணப்படுத்தி வழங்குமாறு கோரினர்.

இதேவேளை மேலும் 500 குடும்பங்கள் நேற்று மீளக் குடியமர்வதற்காக வருவதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தபோதும், 10 குடும்பங்களே வருகை தந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இன்றும் மேலும் சில குடும்பங்கள் இங்கு வந்து சேரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இதுவரை தமிழ் மக்களே தங்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கி வருவதாகவும் தமிழ் சட்டத்தரணி ஒருவர் அரிசி, சீனி பிஸ்கட் போன்றவற்றை வழங்கினார் என்றும் சிங்கள மக்கள் தெரிவித்தனர்.

யாழ்.மாவட்டத்தில் குடியேற வந்துள்ள சிங்கள மக்களுக்கு மாநகர சபையினால் குடிதண்ணீர், மலசலகூட வசதிகள், மின்சார வசதிகள் என்பன ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளனhttp://www.tharavu.com/2010/10/blog-post_8115.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.