Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்வரும் 22 ஆம் திகதி அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெறவுள்ளன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் 22 ஆம் திகதி அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெறவுள்ளன

17 November 10 01:48 am (BST)

எதிர்வரும் 22 ஆம் திகதி அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெறும் என அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்றைய தினம் சுப நேரத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளதாகவும் 7 புதிய அமைச்சர்களுடன் அமைச்சரவை ஜனாதிபதி மகிந்த ராஜபகஷ முன்னிலையில் பதவியேற்கும் என அந்த தகவல்கள் மேலும் தெரிவித்தன. ஜனாதிபதி, இரண்டு சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்ட செயலாளர்கள் இருவரை கொண்ட குழு, புதிய அமைச்சரவையை தெரிவுசெய்து வருகிறது.

2000 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதியமைச்சர்களாக பதவி வகித்து வரும் சிலருக்கும் எதிர்க்கட்சியில் இருந்து அண்மையில் அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட மூவருக்கும் அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன. எதிர்க்கட்சியில் இருந்து அரசாங்கத்தில் இணைந்துக்கொண்ட இந்த மூவரும் ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இருந்து நாடாளுமன்றத்திற்கு nதிவுசெய்யப்பட்டவர்கள். தற்போது பிரதியமைச்சராக பதவி வகிகும் முன்னாள் அமைச்சரான கலாநிதி சரத் அமுனுகம அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

அதேவேளை அமைச்சர்களுக்கு வழங்கப்படும் பொறுப்புகள் குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை எனவும் அடுத்த சில தினங்களில் அது குறித்து இறுதி முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. வரவு செலவுத் திட்டத்தின் பின்னரே புதிய அமைச்சரவை பொறுப்பேற்கும் என முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் ஜோதிட நிலைமைகளின் அடிப்படையில் அமைச்சரவையை முன்கூட்டிய பதவியேற்க வைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறியகிடைத்துள்ளது.

GTN

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.