Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்காவுக்கும் பாகிஸ்த்தானுக்கும் இடையில் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவுக்கும் பாகிஸ்த்தானுக்கும் இடையில் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம்

திங்கட்கிழமை, 29 நவம்பர் 2010 04:44

சிறீலங்கா அரசுக்கும், பாகிஸ்த்தானுக்கும் இடையில் புதிய பாதுகாப்பு ஓப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

நான்கு நாள் பயணமாக சிறீலங்கா வந்துள்ள பாகிஸ்த்தான் அதிபரும், சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவும் இந்த உடன்பாடுகளை எட்டியுள்ளனர். இராணுவத்தளபாடங்களை பரிமாற்றம் செய்தல், இராணுவத்தினருக்கான பயிற்சிகளை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளில் பாகிஸ்த்தான் சிறீலங்காவுக்கு உதவிகளை வழங்க முன்வந்துள்ளது.

இந்த உடன்படிக்கையால் இரு நாடுகளும் படைத்துறை ரீதியாக பெரும் நன்மை அடையும் என அனைத்துலக ஊடகமான ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை (27) சிறீலங்கா வந்த பாகிஸ்த்தான் அதிபர் அசீஃப் அலி சர்தாரியை சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா விமானநிலையத்தில் வரவேற்றுள்ள அதேசமயம், சிறீலங்கா பிரதமர் டி எம் ஜெயரட்னா, சர்தாரியுடன் நேற்று (28) சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

sankamam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பாக். நாடுகள் இடையே 4 ஒப்பந்தங்கள் நேற்றுக் கைச்சாத்து மஹிந்த சர்தாரி பேச்சு

[29 நவம்பர் 2010, திங்கட்கிழமை 7:15 மு.ப இலங்கை]

கொழும்பு, நவ. 29

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக் கும் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஸிப் அல்சர்தாரிக்கும் இடையில் பேச்சுகள் இடம்பெற்றன. நேற்று மாலை ஜனாதிபதி செய லகத்தில் இடம்பெற்ற இப்பேச்சு ஒரு மணித்தியாலத்துக்கு மேல் தொடர்ந்தது.

இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி தனது கவலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் முதலில் தெரிவித்தார்.

இலங்கை மக்களை பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மீட்பதற்காக மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு வழங்கிய அர்ப்பணிப்பையும் சர்தாரி பாராட்டினார். பிராந்திய பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இலங்கையின் அநுபவம் மிகவும் இன்றியமையாதது எனத் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் கட்டியெழுப்புவது தொடர்பாகக் கவனம் செலுத்திய இரு நாட்டுத் தலைவர்களும் இலங்கையிலிருந்து தேயிலை மற்றும் இரத்தினக் கற்களை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பாகவும் ஆராய்ந்தனர் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.

இலங்கையின் சுகாதாரத்துறை அபிவிருத்தி தொடர்பாகப் பாராட்டுத் தெரிவித்த பாகிஸ்தான் ஜனாதிபதி, தமது நாட்டின் தாதியர்களுக்கு இலங்கைத் தாதியர்களைக் கொண்டு பயிற்சி அளிப்பது தொடர்பிலும் மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சு நடத்தினார். அத்துடன் பாகிஸ்தானின் கல்வி அபிவிருத்திக்காக இலங்கையிலிருந்து கணித மற்றும் ஆங்கில ஆசிரியர்களை அழைப்பிப்பது தொடர்பிலும் இரு நாட்டுத் தலைவர்களும் ஆராய்ந்தனர்.

இலங்கையின் எதிர்காலச் சந்ததியினரை போதைவஸ்துப் பழக்கத்திலிருந்து விடுவிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மதுவுக்கு முற்றுப்புள்ளி திட்டம் தொடர்பாக சிலாகித்துப் பேசினார் சர்தாரி. போதைப் பொருள்களை ஒழிப்பதற்காக பிராந்திய நாடுகள் அனைத்தும் இணைந்து செயற்படவேண்டும் எனவும் வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையில் வங்கித்துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் பேசப்பட்டது.

இரு தலைவர்களுக்கும் இடையிலான பேச்சையடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் நான்கு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.

இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு வைத்திருப்போர் விஸா இல்லாமல் இரு நாடுகளுக்கும் இடையில் பயணம் செய்வது தொடர்பான ஒப்பந்தத்தில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸும், பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மக்தூம் ஷா மஹ்முத் குரைஷியும் கைச்சாத்திட்டனர்.

விவசாயத்துறையில் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விவசாய அமைச்சின் செயலாளர் கே.ஈ.கருணாதிலக பாகிஸ்தான் தூதுவர் சீமா இலாஹி பலோச் ஆகியோர் கைச்சாத்திட்டனர். சுங்க நடவடிக்கைகள் ஒத்துழைப்புத் தொடர்பாக ஒப்பந்தம் ஒன்றும் இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்தில் கைச்சாத்திடப்பட்டது. இரு நாடுகளுக்கிடையில் கலை கலாச்சார ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புவதற்கான ஒப்பந்தமும் நேற்றுக் கைச்சாத்திடப்பட்டது.

நேற்றைய பேச்சில் பாகிஸ்தான் தூதுக்குழு சார்பில் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மக்தூம் ஷா மஹ்முத் குரைஷி, பாதுகாப்பு அமைச்சர் அஹமட் முகதார், நிதி அமைச்சர் செய்யத் முராட் அலிஷா, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் சீமா இலாஹி பலோச், பாகிஸ்தான் ஜனாதிபதியின் செயலாளர் சல்மான் பர்கியு, பாதுகாப்பு செயலாளர் செய்யத் முஹமதி அத்னன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கை சார்பாக அமைச்சர்களான ஜி.எல்.பீரிஸ், ஏ.எச்.எம்.பௌசி, சரத் அமுனுகம, பந்துல குணவர்த்தன, டீ.பி.ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

uthayan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.