Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டு. போதனா வைத்தியசாலையில் குழந்தை பிரசவிக்கச் சென்ற பெண் ஊடகவியலாளருக்கு நேர்ந்த கொடூரம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டு. போதனா வைத்தியசாலையில் குழந்தை பிரசவிக்கச் சென்ற பெண் ஊடகவியலாளருக்கு நேர்ந்த கொடூரம்!

செவ்வாய், 30 நவம்பர் 2010 11:06

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பல தவறுகள் இடம்பெற்று வருவதாக அங்குள்ள மக்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி முதல் குழந்தை பிரசவிப்புக்காக சென்ற திருமதி. சர்மிளா இம்தியாஸ் வயது 26 என்ற இளம் பெண்ணிற்கு வைத்தியசாலையில் பல இன்னல்களும் விரும்பத்தகாத சம்பவங்களும் ஏற்பட்டிருக்கின்றன.

பிரசவ அறைக்குள் சென்ற இவரை அங்கிருக்கும் உதவி வைத்தியர் தகாத வார்த்தை பிரயோகங்களால் திட்டியது மட்டுமன்றி, உதவி தாதியர்கள் அடித்தும் இருக்கிறார்கள்.

முதல் குழந்தை என்பதால் ஒன்றும் புரியாத நிலையில் இருந்த சர்மிளா தன்னோடு அந்த அறையில் இருந்த ஏனைய பெண்களுக்கும் அவ்வாறு செய்யவும் வலியுடன் சகிப்புத்தன்மையையும் கடைபிடித்து குழந்தையை பிரசவித்து வெளியேறியுள்ளார்.

வீட்டிற்கு வந்த 30ஆவது நாட்கள் வரை மலம் கழிக்க முடியாமலும், வயிற்று வலியாலும் வேதனைப்பட்டிருக்கிறார். பின்னர் தனியார் மருத்துவமனையில் காண்பித்து ஸ்கேன் செய்து பார்த்த போது குழந்தை பிரசவிப்புக்கு பின்னர் வயிற்றுக்குள் இருந்த இரத்த கசிவுகளை சரிவர அகற்றாமல் தையல் போட்டுள்ளார்கள்.

இந்த தையலை மலவாசலிலும் சேர்த்து போட்டு உள்ளார்கள். மீண்டும் போதனா வைத்தியசாலைக்கு சென்று கூறிய சர்மினாவினை பரிசோதித்த மருத்துவர் ஒருவர் எந்த வித விளக்கமும் கொடுக்காமல் ‘உங்களுக்கு இன்னொரு சத்திர சிகிச்சை செய்யவேண்டும்’ என கூறி வரச்சொல்லி இருக்கிறார்கள்.

குறிப்பிட்ட திகதியில் சரியான முறையில் சிகிச்சை அளித்து அனுப்பியுள்ளார்கள். இது தொடர்பாக சர்மிளா கருத்து தெரிவிக்கையில், எனக்கு மாத்திரமல்ல இங்கு பல பெண்களுக்கு இவ்வாறு தான் நடக்கிறது. இங்கு படித்த மருத்துவர்கள் இருக்கிறார்களா? அல்லது எங்களை வைத்து தான் படிக்கிறார்களா? என்பதே புரியாமல் இருக்கிறது.

அரச வைத்தியசாலைக்கு நாங்கள் செல்சவதே நல்ல வைத்தியர்கள் இருப்பார்கள் பாதுகாப்பு இருக்கும் என்ற எண்ணம் தான் ஆனால் இங்கோ நடப்பது வேறு, தரக்குறைவான வார்த்தை பிரயோகங்களும் படித்தவர்களுக்கான நல்லொழுக்கமும் அற்ற நிலையிலேயே இங்கிருக்கும் பல மருத்துவர்களும், தாதியர்களும் உள்ளனர்.

ஒரு சில நல்ல வைத்தியர்களும், தாதிமார்களும் இருக்கிறார்கள் இல்லாமல் இல்லை. ஆனால் பல தவறான மருத்துவர்களை கண்டுவிட்டு சில நல்லவர்களை பார்க்கும் போது அவர்களையும் அவ்வாறே வெறுக்கத்தோன்றுகிறது.

சுகாதார அமைச்சு இவ்வாறாக செயல்படுபவர்களை கண்டிக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள் என்றார் ஊடகவியலாளரான சர்மிளா இம்தியாஸ்.

tamilcnn

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.