Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் புளொட் இணைந்து போட்டி‏!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் புளொட் இணைந்து போட்டி‏!

[ பிரசுரித்த திகதி : 2011-01-19 05:00:40 PM GMT ]

உள்ளுராட்சி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) இணைந்து போட்டியிடத் தீர்;மானித்துள்ளது. யாழ்ப்பாணம் வவுனியா மாவட்டம் உட்பட கூட்டமைப்பு போட்டியிடும் சகல சபைகளிலும் இணைந்து ஓரணியில் போட்டியிடுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா எம்.பிக்களான சுரேஸ் பிறேமச்சந்திரன் எம்.சுமந்திரன் ஆகியோருக்கும் புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தனுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுக்களின்போது இந்த இணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் தொடராக நேற்று வவுனியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கும் புளொட் முக்கியஸ்தர்களுக்குமிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் எஸ்.வினோநோகராதலிங்கம் சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் புளொட் சார்பில் அதன் வன்னிப் பிராந்திய அமைப்பாளரான சிவநேசன் பவான் மற்றும் வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவர் ஜீ.ரி.லிங்கநாதன் ஆகியோர் பங்கு பற்றியிருந்தனர். இதுபற்றி விளக்கமளித்துள்ள புளொட் தலைவர் திரு.த.சித்தார்த்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒன்றிணைந்து போட்டியிடும் எமது தீர்மானம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி என்னுடன் தொடர்புகொண்டு வரவேற்பு தெரிவித்தார்.

இணைந்து போட்டியிட கட்சித்தலைமை எடுத்த முடிவுக்கமைய மாவட்டந்தோறும் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை நடத்தி வேட்பாளர் நியமனம் தொடர்பான விடயங்களில் இணக்கப்பாடுகள் காணப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாகவே நேற்று வவுனியாவில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இதுபோல் யாழ்ப்பாணத்திலும் வேட்பாளர் நியமனம் தொடர்பாக கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் இணக்கப்பாடுகள் காணப்பட்டு வருகின்றன. மக்களின் நன்மை கருதியே இம்முடிவினை எடுத்துள்ளோம்.

கூட்டமைப்பு போட்டியிடும் சகல சபைகளிலும் நாம் இணைந்து செயற்படுவோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடான சந்திப்பின்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு.வீ.ஆனந்தசங்கரி அவர்களும் கலந்து கொண்டிருந்தார். தமிழ்க் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவதற்கு அவரும் இணக்கம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நாமும் இணைந்து போட்டியிடத் தீர்மானித்தோம் என்று தெரிவித்துள்ளார்.

tamilulakam.com

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வேளையில் ஒரு விடையத்தைச் சொல்லுறன். குடாநாட்டின் பாரிய இடம்பெயர்வு நடைபெற்றவேளை. நான் வடமராட்சியில் அம்மா, ஐயா, வன்னியில் அடிக்கடி போய் எந்தையையும் தாயையும் பார்ப்போன். எனது நேர இளைய தம்பி ஜேர்மனியில அப்போது வாழ்ந்து வந்தான். அம்மாவுக்கு உடம்பு கடுமை என யாரோமூலமாக அறிந்து அன்னையைப் பார்க்க வன்னி சென்றான் அம்மா அத்துடன் மரணமடைந்துவிட்டா. ஐயா வவுனிய வந்த இடத்தில் அம்மா இறந்து நாற்பத்தியொராம் நாளில் மரணமடைந்துவிட்டார் தம்பி அதற்காக வவுனியா வந்து அப்படியே அக்கா வீட்டில தங்கிவிட்டான். ஒரு பத்துபதினைஞ்சு நாளாள பொழுதுபட வெளியிலபோன தம்பிய கனநேரமாகக் காணவில்லை, இரவு ஒன்பது மணியளவில ஒரு ஆட்டோச் சத்தம் வெளியில வந்து பார்த்தால் முனகிக்கொண்டு தம்பி, நிலத்தில யாரோ எறிந்துவிட்டுப் போயிட்டினம். அக்கா உடனடியா வவுனியா ஆஸபத்திரிக்கு ஆட்டோவில கொண்டுபேனா, அப்போது தம்பியிடம் என்ன நடந்தது எண்டு கேட்டிருக்கிறா, அவனால கதைக்கமுடியவில்லை, சத்தம்போட்டு அழக்கூட வாயில இருந்து சத்தம் வரேல்லை கண்ணால கண்ணீர்மட்டும் வந்ததெண்டு அக்கா சொன்னா. ஒரு பொம்பிளைப்பிள்ளைக்குத் தகப்பன் தனது மனைவியையோ பிள்ளையையோ வந்ததுக்குப் பாக்கவில்லை செத்தவீட்டு அலைச்சலில போகமுடியவில்லை. ஆஸ்பத்திரியில சேர்த்து நான்கைந்து மணித்தியாலத்தில மோசம்போயிட்டான். எனது தம்பி ஏதாவது இனத்துரோகம் செய்திருந்தால் பிரச்சனையில்லை தண்டனை கொடுக்கலாம். அவன் அப்படியில்லையே. இப்ப சித்தார்த்தனுடன் கூட்டாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.