Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மீனவர் சங்க குழு அடுத்த மாதம் இலங்கை விஜயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sunday, February 27th, 2011 | Posted by thaynilam

தமிழக மீனவர் சங்க குழு அடுத்த மாதம் இலங்கை விஜயம்

இலங்கை மீனவர்களுடன் அடுத்த மாதம் பேச்சுவார்த்தை நடத்த தமிழக மீனவர் சங்க குழுவை கொழும்புக்கு அனுப்புவது என்று டெல்லியில் மத்திய அரசு நடத்திய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் அச்செய்தியில்:-

கடந்த மாதம், நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, 2 தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து பலியானார்கள். அதற்கு, வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ் கொழும்புக்கு சென்று தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த மாதம், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 136 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். மத்திய-மாநில அரசுகளின் முயற்சியால், அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ் டெல்லியில் நேற்று ஒரு ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். அதில், தமிழக அரசு சார்பில் தலைமை செயலாளர் எஸ்.மாலதி மற்றும் மீன்வளத்துறை செயலாளர் கலந்து கொண்டனர். மேலும், கடலோர காவல்படை டைரக்டர் ஜெனரல், இராணுவ அமைச்சக அதிகாரிகள் ஆகியோரும் பங்கேற்றனர்.

அப்போது, 136 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதற்கு திருப்தி தெரிவிக்கப்பட்டது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டும்போது, துப்பாக்கி சூடு நடத்துவது, தாக்குதல் நடத்துவது போன்ற செயல்கள் நியாயம் அல்ல என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், இலங்கை மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மத்திய அரசும், தமிழக அரசும், தமிழக மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் குழுவை அடுத்த மாதம் கொழும்புக்கு அனுப்பி வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதுபோன்ற தொடர்புகள், பரஸ்பரம் பயனுடையவை என நிரூபணம் ஆகியிருப்பதாகவும், எனவே, அதை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது.

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவில் தமிழக பக்தர்கள் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசுடன் கலந்து பேசி தமிழக அரசு உறுதி செய்வது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மீன் பிடிக்கும்போது, மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து தமிழக மீனவர்களுக்கு அறிவுறுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை தமிழக அரசு விளக்கியது. மேலும், சர்வதேச கடல் எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்திய – இலங்கை கூட்டு செயற்குழு அமைக்கப்பட்டதற்கு கூட்டத்தில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.

தமிழக மீனவர்களின் நலன்களுக்கும், பாதுகாப்புக்கும் மத்திய, மாநில அரசுகள் உயர் முன்னுரிமை அளிக்கும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Short URL: http://thaynilam.com/tamil/?p=3279

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.