Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் தமிழரசுக்கட்சி தனித்து வெற்றிபெறும் என நிரூபித்தால் பிள்ளையான் பதவி விலகுவாராம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Monday, February 28th, 2011 | Posted by thaynilam

கிழக்கில் தமிழரசுக்கட்சி தனித்து வெற்றிபெறும் என நிரூபித்தால் பிள்ளையான் பதவி விலகுவாராம்

கிழக்குமாகாணத்தில் தமிழரசுக்கட்சி தனித்து நின்று வெற்றிபெறும் என்று ஆதாரத்துடன் நிரூபிக்குமானால் தான் இந்த பதவியில் இருந்து விலகுவேன் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பில் 7.5 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய பஸ் நிலையத்தை நேற்று திறந்துவைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பஸில் ராஜபக்ஷ் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் போக்குவரத்துறை அமைச்சர் குமாரவெல்கம, மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்,சிறுவர் அபிவிருத்தி,மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லா, கூட்டுறவ அபிவிருத்தி பிரதியமைச்சர் பஸீர் சேகுதாவூத் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்,

கிழக்கு மாகாணம் ஒரு விசேடமான மாகாணமாகவுள்ளது. இந்த மாகாணத்தில் பல்வேறு அபிவிருத்திப்பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தாலும் மக்கள் மத்தியில் இன்னும் உணர்ச்சிவசப்படுத்துகின்ற, கிழக்குமாகாணம் சார்ந்த போதுமான போதுமான அறிவு இன்மையால் கூறுகின்ற விடயங்கள் அல்லது தடம்புறளுகின்ற அரசியல் வியுகங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

ஏன்னென்றால் எமது மாவட்டத்தை பொறுத்தவரையில் உங்களுக்கு தெரியும் நாங்கள் தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் இணைந்து வாழும் ஒரு மாகாணமாகவுள்ளது.

எமது மாவட்டத்தை சரியாக அறிந்தவர்கள், எமது மாவட்டத்தை அறிவுபூர்வமாக விளங்கிக்கொண்டவர்கள் கருத்துக்களை உணர்ச்சிவசப்பட்டு கூறமாட்டார்கள். ஏன் இதனைக்கூறுகின்றேன் என்றால் அண்மையில் மட்டக்களப்பை பிறப்பிடமாக கொண்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஒரு கருத்தை கூறியுள்ளார். மாகாணசபையை கலைத்துக்காட்டட்டும் நாங்கள் வென்று காட்டுவோம் என்று.

வெறுமனே இந்த மாகாணத்தில் 126,000 வாக்குகளை வைத்துகொண்டிருக்கின்ற இந்த தமிழரசுக்கட்சி இந்த மாகாணத்திலே தனித்து நின்று ஆட்சியமைக்குமாகவிருந்தால் அல்லது அது தொடர்பில் பேசிய பாராளுமன்ற உறுப்பினருக்கு என்னோடு வாதிடுவதற்கான அரசியல் அறிவு போதாமல் இருக்கலாம் இருந்தும் அவரது கட்சியில் இருக்கின்ற தலைவராக இருந்தாலும் சரி செயலாளராக இந்த கிழக்கு மாகாணத்திலே தமிழரசுக்கட்சி தனித்துவமாக நின்று வெற்றிபெறும் என்று அவர்களால் ஆதாரபூர்வமாக நிரூபிக்கமுடிந்தால் உண்மையாகவே நான் இந்த அரசியலில் இருந்து ஒதுங்குவேண்.

நிச்சயமாக அப்படிசெய்யமுடியாது கிழக்குமாகாணத்தின் அரசியல் சார்ந்து பார்க்கின்றவர்கள், நில அடிப்படையில் பூகோள ரீதியில் பூரண அறிவுகொண்ட எந்த அரசியல்வாதியும் தமிழரசுக்கட்சி தனியாக ஆட்சியமைக்கும் என்று சொல்லமுடியாது.

ஆகவே, இன்னும் மீண்டும் மீண்டும் எமது மக்களை உணர்ச்சிவசப்படவைக்கின்ற அரசியலை பேசிப்பேசி அரைத்துக்கொண்டிருக்க முடியாது. எனவே நாங்கள் அபிவிருத்தியடையவேண்டும். ஏனைய நாடுகளுடனும் ஏனைய மாகாணங்களுடனும் போட்டிபோட்டு முன்னேற வேண்டுமாகவிருந்தால் சாணக்கியமுள்ள, அரசாங்கத்துடன் சேர்ந்தியங்குகின்ற பணிகளுக்கு நாங்கள் செல்லவேண்டும்.

எனவே மிக நீண்டகாலத்திற்கு பின்னர் மாகாணத்திலே அபிவிருத்திகளை செய்யவந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை நீங்கள் ஆதரிக்கவேண்டும். நாங்கள் தான் ஒரு சாணக்கியமுள்ள மத்திய அரசாங்கத்துடன் சேர்ந்தியங்குகின்ற ,தேவைப்பட்டால் அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக மத்திய அரசாங்கத்துடன் முரண்டுபிடிக்கின்ற அரசியலை செய்துகொண்டிருக்கின்றோம்.

மீண்டும் மீண்டும் எமது மக்களை சூடாக்குகின்ற அரசியலை விட்டுவிட்டு கூட்டுப்பொறுப்புள்ள சமூகத்தை கட்டியெழுப்புகின்ற அரசியலைசெய்யவேண்டும்.

இன்னமும் வீணாண கருத்துக்களை முன்வைக்கக்கூடாது. இதில் ஊடகங்கள் அதி கூடிய பங்கை ஆற்றவேண்டும்.சில சூடான செய்திகளை வெளிட்டு பத்திரிகைகளை விற்கின்றதை பார்க்கின்றதே ஒளிய ஆழமாக பாக்கப்படுகின்ற கருத்துக்களை இங்கு யாரும் கொண்டுவருவதில்லை.ஆகவே கிழக்கு மாகாணம் தனித்துவமான மாகாணம், கிழக்கு மாகாணத்துக்கு தனித்து அரசியல்,எனவே கிழக்கு மாகாணத்துடன் இணைந்து மேற்கொள்ளும் அரசியலுக்கு ஊடங்கள் ஒத்துழைக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

அந்தவகையில் கிழக்கு மாகாணம் நீண்ட காலத்திற்கு பின்னர் ஒரு வரலாற்று ரீதியான அபிவிருத்தியை அடைந்துள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.

Short URL: http://thaynilam.com/tamil/?p=3291

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.