Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோயாளியை நான்கு பேர் தூக்கிச் சென்றோம் – பங்குத் தந்தை அசிசி (ஆவணப்படங்கள்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நோயாளியை நான்கு பேர் தூக்கிச் சென்றோம் – பங்குத் தந்தை அசிசி (ஆவணப்படங்கள்)

Posted by admin2 On March 3rd, 2011 at 11:16 pm

திடீரென சுகயீனமுற்று மயங்கிய நோயாளி ஒருவரை ஒன்பது கிலோ மீற்றர் உழவு இயந்திரத்தில் ஏற்றிச் சென்று பின்னர் இரண்டு கிலோ மீற்றர் அவரைத் தூக்கிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் மன்னார் குஞ்சுக்குளத்தில் வியாழன்று இரவு நடைபெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் நோயுற்ற 18 வயதுடைய இளம் பெண் ஒருவரையே மன்னார் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்காக இப்படித் தூக்கிச் செல்ல நேர்ந்ததாக பெரிய குஞ்சுக்குளம் பங்குத் தந்தை அருட்திரு அசிசி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

பெரிய குஞ்சுக்குளம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றார்கள். இங்கு வைத்தியசாலை என்று எதுவுமே கிடையாது. நடமாடும் வைத்திய சேவைதான் நடைபெறுவது வழக்கம். இந்த நடமாடும் சேவையும் இப்போது நான்கு மாதங்களாக நடைபெறவில்லை.

பறையனாலங்குளம் சந்திக்கருகில் இருந்து பெரிய குஞ்சுக்குளத்திற்கு வரும் வீதிதான் எங்கள் ஊருக்கான பிரதான போக்குவரத்திற்குரிய மார்க்கம். அண்மைய கடும் மழையினால் எற்பட்ட வெள்ளப்பெருக்கினால் இந்த வீதியில் அமைந்திருந்த முக்கியமான பெரிய பாலம் ஒன்று வெள்ளத்தில் அள்ளிச் செல்லப்பட்டுவிட்டது. இதனால் எங்கள் ஊருக்கான தரைவழித் தொடர்பு முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரே ஒரு தடவை மிகுந்த கஸ்டத்தின் மத்தியில் சிலாவத்துறையில் இருந்து காட்டு வழியாக வைத்தியர் ஒருவர் ஒரு தடவை வந்து நடமாடும் வைத்திய சேவை செய்துவிட்டுச் சென்றார். அதற்குப் பின்னர் எமது பகுதிக்கு நடமாடும் வைத்திய சேவை நடைபெறவில்லை. எங்கள் ஊருக்கு வந்து செல்வதற்கான வீதி வசதி இல்லாததே காரணமாகும்.

வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்ட பாலத்திற்குப் பதிலாகத் தற்காலிக பாலம் ஒன்றை அமைத்துத் தருமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். இருப்பினும் பலன் இன்னும் கிடைக்கவில்லை.

இதனால்தான் இன்று இரவு நேரத்தில் பெரும் கஸ்டத்தின் மத்தியில் இந்த நோயாளியை உழவு இயந்திரத்தில் வெள்ளத்தினால் அரித்து குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ள வீதி வழியாக ஏற்றி வந்து பின்னர் நாலுபேர் சேர்ந்து அவரைத் தூக்கி பறையனாலங்குளம் பிரதான வீதிக்குக் கொண்டு வர நேரிட்டது. தொலைபேசி ஊடாக மன்னார் வைத்தியசாலையுடன் தொடர்பு கொண்டு அம்புலன்ஸ் ஒன்றை குஞ்சுக்குளம் வீதிச் சந்திக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டிருந்தேன்.

அதன்படி நாங்கள் நோயாளியை அந்தச் சந்திக்குக் கொண்டு சென்ற பின்னர் அம்புலன்ஸ் அங்கு வந்து ஏற்றிச் சென்றது. இந்தச் சந்திக்கு அந்த நோயாளியைக் கொண்டு வருவதற்கு எங்களுக்கு இரண்டு மணித்தியாலம் எடுத்தது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகாவது அழிந்து போன பாலத்திற்குப் பதிலாகத் தற்காலிக பாலம் ஒன்றை அமைப்பதற்கு அவசரமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்’

இவ்வாறு குஞ்சுக்குளம் பங்குத்தந்தை அசிசி தெரிவித்தார்.

damagetoaroad1.jpg

37247420.jpg

saritham.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.