Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தானின் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் குழு இன்று இலங்கை வருகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானின் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் குழு இன்று இலங்கை வருகிறது

[sunday, 2011-03-06 04:31:14]

பாகிஸ்தான் இராணுவத்தின் உயர்நிலை அதிகாரிகள் குழுவொன்று ஆறு நாள் பயணமாக இன்று இலங்கை வரவுள்ளது. பாகிஸ்தான் இராணுவத்தின் பயிற்சி மற்றும் மதிப்பீட்டுக்கான பொறுப்பதிகாரி லெப்.ஜெனரல் முசம்மில் ஹுசேன் தலைமையிலான குழுவே இலங்கை வரவுள்ளது.

பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் குழுவில் பயிற்சி, நடவடிக்கை மற்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இலங்கை இராணுவத்துடன் பயிற்சி, நடவடிக்கை மற்றும் முக்கியமான துறைகளில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக கலந்துரையாடவுள்ளனர்.

அத்துடன் இலங்கை படைகளின் பிரதான பயிற்சி மையங்களான பாதுகாப்புச் சேவை அதிகாரிகள் கல்லூரி, இராணுவப் பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றுக்கும் இவர்கள் செல்லவுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் பாகிஸ்தான் இராணுவத் தளபதி இலங்கைக்கு மேற்கொண்ட பயணத்தை அடுத்து, இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் இராணுவ அதிகாரிகளின் உயர்நிலை குழு இதுவாகும்.

இலங்கை- பாகிஸ்தான் படைகளுக்கிடையிலான நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்திக் கொள்வதே இந்தப் பயணத்தின் நோக்கமாகும். தெற்காசியப் பிராந்தியத்தில் இலங்கை படைகளின் இரண்டாவது பெரிய பயிற்சி பங்காளர் பாகிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் பாகிஸ்தானுடன் ஆண்டுதோறும் 300 மில்லியன் டொலர் வர்த்தகத்தையும் இலங்கை பேணி வருகிறது.

seithy.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் போர்ப்பயிற்சி முறைகளை அறிந்து கொள்ள பாகிஸ்தான் முயற்சி?

[Monday, 2011-03-07 16:44:17]

ஐந்து நாள் பயணமாக கொழும்பு வந்துள்ள பாகிஸ்தானின் உயர் நிலை இராணுவ அதிகாரிகள் குழு இன்று இலங்கை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.

கொழும்பிலுள்ள இலங்கை இராணுவத் தலைமையகத்தில் இன்று காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.ப்.ஜெனரல் முசம்மில் ஹுசேன் தலைமையிலான இந்தக் குழுவில், பிரிகேடியர் தாஹிர் ஹமீட், கேணல் சொஹைல் வாலி ராஜா, லெப். கேணல் வசீம் சபார் பாதி, லெப்.கேணல் வசீம் அகமட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவினர் சிறிலங்கா இராணுவத்தின பயிற்சி முகாம்களுக்கு செல்லவுள்ளதுடன், முக்கிய படை அதிகாரிகளுடனும் தீவிரமான பேச்சுக்களை மேற்கொள்ளவுள்ளனர். இந்தச் சந்திப்பின் போது, 1960ம் ஆண்டு தொடக்கம் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான இராணுவ ஒத்துழைப்புகள் பேணப்படுவது குறித்தும் ,இலங்கை படையினருக்கு பாகிஸ்தானில் வழங்கப்படும் பயிற்சிகள் குறித்தும் இருநாட்டுப் படைத் தளபதிகளும் கலந்துரையாடியுள்ளனர்.

போர் பயிற்சிக் கல்லூரி, காலாற்படை அலகு கட்டளை பயிற்சி நெறி, சமிக்ஞைப் பயிற்சிக் கல்லூரி, இளம் அதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லூரி, புலனாய்வு அதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லூரி, தேசிய பாதுகாப்புக் கல்லூரி உள்ளிட்ட பாகிஸ்தானின் பல்வேறு போர்ப்பயிற்சி கல்லூரிகளில் இலங்கை படையினருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

எல்லாக் காலங்களிலும் பாகிஸ்தான் இலங்கைக்கு தயாள குணத்துடன் இராணுவ உதவிகளை வழங்கியுள்ளதாகவும், குறிப்பாக போர்த் தளபாடங்களையும், சிறிலங்காப் படையினருக்கான பயிற்சிகளையும் வழங்கியுள்ளது குறித்து நன்றியுடன் நினைவு கூருவதாகவும் இந்தச் சந்திப்பின் போது லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றமடைந்துள்ள நாடுகளில் தீவிரவாத அச்சுறுத்தல்கள் எழுகின்ற நிலையில், பாகிஸ்தானும் இலங்கையும் போராற்றல் மற்றும் சிறப்புத்தன்மைகள் குறித்த அனுபவங்களைப் பரிமாற்றம் செய்து கொள்ளும் நடைமுறைகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை முன்வைத்தார்.

இதையடுத்து இலங்கை இராணுவத்தின் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்கவைச் சந்தித்து பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் குழு பேச்சு நடத்தியுள்ளது.

இதன்போது முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வுத் திட்டங்கள் குறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் கேட்டறிந்ததாக இலங்கை இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. ஆயினும் இலங்கை இராணுவத்தின் புனர்வாழ்வு ஆணையாளரை பாகிஸ்தான் படை அதிகாரிகள் குழு முக்கியத்துவம் கொடுத்து சந்தித்துள்ள பின்னணி குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

பாகிஸ்தான் இராணுவத்தின் பயிற்சிப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளே இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் தடுப்புக்காவலில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கிய தளபதிகள், பயிற்சி ஆசிரியர்களாக இருந்தவர்களிடம் அவர்களின் பயிற்சி முறைகள் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ள முற்பட்டதாகவும் தெரியவருகிறது.

விடுதலைப் புலிகளுக்கு ஆரம்பத்தில் இந்தியாவே போர்ப்பயிற்சி அளித்திருந்தது. அந்த பயிற்சிகளைப் புலிகள் எவ்வாறு பயன்படுத்திக் கொண்டனர்- பிற்காலத்தில் அவற்றில் என்னென்ன மாற்றங்களைச் செய்தனர் என்பது குறித்து அறிந்து கொள்ள பாகிஸ்தான் ஆர்வம் காட்டுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

seithy.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.