Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜ.நா. நிபுணர்குழு இலங்கைத் தூதுக்குழு இரகசிய சந்திப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜ.நா. நிபுணர்குழு இலங்கைத் தூதுக்குழு இரகசிய சந்திப்பு

திங்கட்கிழமை, 07 மார்ச் 2011 08:04

ஜ.நா செயலாளர் நாயகம் பான் கீ முனீனால் நியமிக்கப்பட்ட இலங்கை தொடர்பான குற்ற விசாரணைகள் நிபுணர் குழுவை இலங்கை அரசின் தூதுக்குழு இரகசியமாக சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

இச்சந்திப்புக்கு முன்னதாக இலங்கை அரசின் தூதுக் குழு கடந்த வாரம் நியூயோர்க்கில் பான் கீ முனைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையிலேயே இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பானது மிகவும் இரகசியமான முறையில் ஜ.நா. செயலாளர் நாயகம் பான் கீ முன் மற்றும் விஜய் நம்பியார் ஆகியோரின் முன்னிலையிலேயே இடம்பெற்றதாக தெரியவருகிறது.

இதில் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடு தொடர்பாகவும் அதன் செயல்பாட்டின் முன்னேற்றம் பற்றியும் இலங்கை அரசின் தூதுக் குழுவினர் நிபுணர் குழுவிற்கு விளக்கமளித்தாக இலங்கை அரச தகவல்கள் தெரிவிக்கின்றது.

வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க, சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ், ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதி நிதி பாலித கோஹன்ன, மேஜர் ஜெனரல் சவேந்திர டீ சில்வா ஆகியோர் இலங்கை அரசின் சார்பில் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்புகளை மிகவும் இரகசியமாகப் பாதுகாத்துவருவதுடன் இவை தொடர்பாக இலங்கை அரசு எவ்வித அறிக்கைகைகளையும் விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

tamilcnn

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.