Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ பொது வாக்கெடுப்பு

Featured Replies

Choose your Language | English | தமிழ் | Français | Deutsch

அன்பின் ஜனாதிபதி ஒபாமா அவர்களே,

அண்மையில் தென் சூடானில் இடம்பெற்ற பொதுசன வாக்கெடுப்பில் சுதந்திர தென்சூடானை ஆதரித்துப் பொதுமக்கள் அமோகமாக வாக்களித்திருந்தனர். தென் சூடான் மக்களுக்கு இப் பொதுசன வாக்கு மூலம் சாத்தியமாகும் இறைமையை நாம் அங்கீகரித்து ஆதரிக்கின்றோம். இதனால் முக்கியமான இரு விடயங்கள் நிறைவேறுகின்றன. முதலாவதாக தென் சூடான் மக்களுக்குத் தங்கள் சொந்த நாட்டில் பாதுகாப்பும் அமைதியும் கிட்டுகின்றது. இரண்டாவதாகப் பல வருடங்களாக நீடித்த பயங்கரப் போர் முடிவுக்கு வந்துள்ளது.

தென் சூடானில் இடம்பெற்றதைப் போன்றே இலங்கையிலும் ஓர் பொதுசன வாக்கெடுப்பு நடாத்தப் பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகின்றோம். சூடானைப் போன்றே பல ஆண்டுகளாகத் தொடர்ந்த பயங்கரப் போரில் இலங்கை அரசு நாதியற்ற சிறுபான்மை இனத்தைக் கொடூரமாகத் தாக்கிக் கொன்றொழித்தது. தென் சூடானிய மக்களைப்போன்றே இலங்கைத் தமிழர்களும் பாதுகாப்புடன் சுதந்திரமாக வாழ இறைமையுடன் கூடிய தனி நாடு இன்றியமையாததாகும். எண்ணற்ற சிறுபான்மைத் தமிழ் இனத்தவரைக் கொன்றொழித்ததுடன் அவர்களைப் பல இன்னல்களுக்கும் ஆளாக்கியது.

இலங்கையில் யுத்த அனர்த்தம் சார்ந்த பொறுப்பேற்பு சம்பந்தமாக ஆராய ஐ.நா சபையின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பெற்ற நிபுணர் குழுவின் அறிக்கை 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 25ந் தேதி வெளியாகியது. அவ்வறிக்கையில் இலங்கை அரசிற்கெதிரான மேல் குறிப்பிடப்படும் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

1. பரவலான சரமாரிக் குண்டு வீச்சுக்குப் பொது மக்கள் பலியாக்கப் பட்டது

2. மருத்துவ மனைகளும் மக்கள் சேவை மையங்களும் குண்டுவீசித் தாக்கப் பட்டமை

3. மக்களுக்கு மனிதாபிமான உதவி மறுக்கப்பட்டமை

4. இடம் பெயர்ந்த மக்களுக்கும் விடுதலைப் புலி உறுப்பினருக்கும் எதிரான பாரிய மனித உரிமை மீறல்கள்

5.போர்க்களத்திற்குப் புறத்தே பத்திரிகையாளர்களுக்கும் அரசிற்கு முரணானவர்களுக்கும் ஏதிரான மனித உரிமை மீறல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டமை

மேற்கண்ட குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக சர்வதேச விசாரணை நடைபெறவேண்டுமென இவ்வறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கீழே கைச்சாத்திட்டிருக்கும் நாம் இலங்கையில் தமிழ் மக்களுக்குத் தங்கள் சொந்தப் பிரதேசத்தில் இறைமையுடன் கூடிய சுய ஆட்சி அமைய வேண்டுமா எனும் வினாவிற்கு விடை அளிக்கக்கூடிய பொதுசன வாக்nகுடுப்பு ஒன்று இடம்பெறுவதற்கு அமெரிக்காவின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்.

இத் தொடுப்பை அழுத்திவாக்களியுங்கள்

http://www.tamilsforobama.com/Referendum2011/tamil.asp

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

thursday, 02 June 2011 02:51

தமிழீழத் தனி நாட்டுக்கான வாக்கெடுப்பு நடத்தக் கோரி ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு மாபெரும் கையெழுத்துப் பிரசாரம்

இலங்கைத் தமிழர் சுயநிர்ணயம் வென்றெடுக்கச் சாதகமான பொதுசன வாக்கெடுப்பு ஒன்று இலங்கையில் நடாத்தக் கோரி மாபெரும் கையெழுத்துப் பிரச்சாரத்தை ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு ஆரம்பித்துள்ளது.

தென் சூடானில் சமீபத்தில் ‘தென் சூடான் தனிநாடாகப் பிரிய வேண்டுமா அல்லது சூடான் நாட்டுடன் இணைந்து இருக்க வேண்டுமா’ எனக் கேட்டு ஒரு பொதுசன வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. பிரிவதற்குச் சாதகமாக அமோக வாக்குகள் பதிவானதன் காரணமாக புதிய நாடு உதிப்பது சாத்தியமெனத் தோன்றுகின்றது.

தமிழீழத் தனி நாட்டை சாத்தியமாக்கவல்ல அதே போன்ற ஒரு பொதுசன வாக்கெடுப்பை வடக்கு, கிழக்கு இலங்கையில் நடாத்த அமெரிக்காவின் ஆதரவைக் கோரும் மனுவிற்கு கையொப்பங்கள் சேகரிக்கும் பிரச்சாரம் ஒன்றினை ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு ஆரம்பித்துள்ளது.

வடக்கு கிழக்கு இலங்கைக்கும் தென் சூடானுக்கும் இடையில் கணிசமான ஒற்றுமை உள்ளது என்பதை எமது அமைப்பு நன்கு உணர்ந்துள்ளது. தென் சூடான், காட்டூமில் இயங்கும் சூடான் அரசால் பலவிதமான கொலைப் பாதகத்திற்கும் பல இன்னல்களுக்கும் ஆளாக்கப்பட்டது.

இதே போல், வடக்கு கிழக்குத் தமிழர்களும் கொழும்பில் உள்ள சிங்கள அரசினால் அடக்கி ஒடுக்கப்பட்டு படுகொலைகளுக்கும் பல விதமான இன்னல்களுக்கும் ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள்.

தென் சூடான் பொதுசன வாக்கெடுப்பு, வடக்கு, கிழக்கு இலங்கைக்கும் முன்மாதிரியாகப் பொருந்தும் என்பதால் நாம் ஜனாதிபதி ஒபாமாவை எமது கோரிக்கைக்கு ஆதரவளித்து முன்னெடுக்குமாறு கேட்டு நிற்கின்றோம்.

வடக்கு, கிழக்கு இலங்கையில் பொதுசன வாக்கெடுப்பு இடம்பெறுவதை ஆதரித்து தமிழுர்களும் தமிழர் அல்லாதோரும் கையொப்பமிட்டுள்ள மனுவை ஜனாதிபதி ஒபாமா அவர்களுக்குச் சமர்ப்பித்து எங்கள் எண்ணத்திற்குச் செயல் வடிவம் கொடுக்கும்படி தூண்டுவோம்.

அவர் ஆதரிக்கும் இன நீதி, சுயாட்சிக் கோட்பாடுகளுக்கு அமைவாயுள்ள காரணத்தினால் எம்மைப் போன்று அவரையும் இது ஈர்க்கும் என நம்புகின்றோம்.

இராஜாங்கச் செயலாளர் திருமதி. கிலின்;டன், ஐ. நா. சபைச் செயலாளர் நாயகம் திரு. பான் கி மூன,; ஐ. நா. பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளின் நிரந்தரத் தூதுவர்கள் ஆகியோர் அடங்கலாக வேறு சிலருக்கும் இம் மனுவை நாம் அனுப்பியுள்ளோம்.

ஏராளமான கையொப்பங்கள் வாயிலாக இந்தச் சாதாரண நியாயபூர்வமான பிரேரணைக்கு எத்தகைய ஆதரவு உண்டு என்பதை நிரூபிக்க முடியும்.

எங்கள் மனு தமிழ், ஆங்கிலம், ஜேர்மன், பிரெஞ்சு மொழிகளில் உள்ளது.

மனுவுக்கான மின் இணைப்பு: http://www.tamilsforobama.com/Referendum2011/tamil.asp

sankathi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.