Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆயுதக் கொள்வனவின் போது மோசடி இடம்பெற்றது – அரசாங்கம் ஒப்புதல் வாக்குமூலம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதக் கொள்வனவின் போது மோசடி இடம்பெற்றது – அரசாங்கம் ஒப்புதல் வாக்குமூலம்!

Published on June 7, 2011

இராணுவம், கடற்படை, விமானப்படை, ஆகியனவற்றுக்கு ஆயுதங்களையும் வெடிப்பொருட்களையும் கொள்வனவு செய்வதில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக திருமதி ஷிராணி திலகவர்தன தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு 2007 ஆம் ஆண்டு சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது என்பதை அரசாங்கம் இன்று நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது.

எனினும் இது குறித்த மேலதிக விபரங்களை வெளியிட அரசாங்கம் மறுத்துவிட்டது.

ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் அரசாங்கத் தரப்பு பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன இதைத் தெரிவித்தார்.

மேற்படி ஆணைக்குழுவில் திருமதி திலகவர்தன, நிசங்க உடலகம, நிஹால் எட்வர்ட் திசாநாயக்க ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்த ஆணைக்குழு 28.01.2007 ஆம் திகதி தனது அறிக்கையை சமர்ப்பித்தது என அமைச்சர் கூறினார். எனினும் ஆணைக்குழுவின் பார்வையில் முறைகேடுகள் என கண்டறிப்பட்ட விடயங்கள் எவையென்பதை வெளியிட முடியாது. ஏனெனில் இவ்விவகாரம் தேசிய பாதுகாப்பு தொடர்பானது என அவர் கூறினார்.

அம்முறைகேடுகளில் சம்பந்தப்பட்ட நபர்களின் விபரங்களை வெளியிட முடியுமா என அஜித் பெரேரா எம்.பி. கேட்டபோது, மேற்குறிப்பிட்ட காரணத்தால் அதையும் வெளியிட முடியாது என அமைச்சர் பதிலளித்தார்.

இது தொடர்பாக அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் அஜித் பெரேரா எம்.பிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த சபையில் இது குறித்து கலந்துரையாட முடியாவிட்டால் வேறெங்கு அதை நாம்செய்ய முடியும் என சஜித் பெரேரா எம்.பி. கேள்வி எழுப்பினார்.

எதிர்க்கட்சி எம்.பிகளுக்கு இத்தகைய கேள்விகளை கேட்க உரிமை உள்ளது எனினும். சில விடயங்களை வெளியிடுவதா இல்லையா என்பதை தீர்மானிக்க அரசாங்கத்திற்கு உரிமை உள்ளது என அமைச்சர் பதிலளித்தார்.

saritham

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.