Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் காணாமல் போன தமிழர்களுக்கு நடந்தது என்ன? அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்

Featured Replies

வன்னியில் காணாமல் போன ஒரு இலட்சத்து 50 ஆயிரம் தமிழர்கள் எங்கே உள்ளனர்? உயிருடனா? வதைக் கூடங்களிலா? அல்லது சிறைச்சாலைகளிலா? என்பதனை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும். போலிக் காரணங்களைக் கூறி காணாமல் போனவர்களின் உறவுகளையும் உலகத்தையும் ஏமாற்றியது போதும் என்று காணாமல் போனோரை தேடியறியும் குழு தெவித்துள்ளது. அவசரகாலச் சட்டத்தையும் பயங்கரவாத தடுப்புசட்டத்தையும் உடனடியாக நீக்கி சிறை வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும். இந்த நாட்டில் காணாமல் போன ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், தமிழர்கள் அனைவருக்கும் தற்போதைய அரசே பொறுப்புக் கூறவேண்டும் என்றும் அக் குழு சுட்டிக் காட்டியுள்ளது.

காணாமல் போனவர்களை தேடித் தர வலியுறுத்தி நேற்று புதன்கிழமை காணாமல் போனோரை தேடியறியும் குழு உரிமைகளுக்கான குரல் மற்றும் சுதந்திர ஊடக இயக்கம் ஆகிய அமைப்புக்கள் இணைந்து லிப்டன் சுற்று வட்டத்தில் ஆர்ப்பாட்டத்தினை நடத்தின. இதன்போதே மேற்கண்டவாறு தெவிக்கப்பட்டது. அங்கு உரையாற்றிய கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன கூறுகையில்:

அரசாங்கம் காணாமல் போனோரை தேட முடியவில்லை என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. இலங்கையில் காணாமல் போன அனைவருக்கும் அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும். தகவல் சுதந்திரம் அடியோடு இல்லாமல் போயுள்ளது. எத்தனையோ ஊடகவியலாளர்கள் காணாமல் போயும் கொலை செய்யப்பட்டும் நாட்டை விட்டும் ஓடியுள்ளனர். அது மட்டுமன்றி வன்னியில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் தமிழர்கள் காணாமல் போயுள்ளனர்.

யுத்தம் முடிந்து இரண்டு வருடமாகியும் இவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. காணாமல் போனவர்களின் உறவுகள் கண்ணீருடன் ஒவ்வொரு இடங்களில் தேடித்திரிகின்றனர். அரசாங்கம் மௌனமாகவே உள்ளது.

அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கைகளினால் முழு உலகமே இலங்கை மீது குற்றம் சுமத்தி வருகின்றது. அவசரகாலச் சட்டத்தையும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தையும் பயன்படுத்தி எதிரானவர்களை அரசு வேட்டையாடுகின்றது.

சர்வதேச நாணய நிதியத்தினதும் இந்தியாவினதும் தலையீடுகளை சுட்டிக்காட்டி ஊழியர்களையும் கொன்று வருகின்றது.ஆனால் மக்கள் அரசிற்கு எதிராக செயற்பட ஆரம்பித்துள்ளனர் எனக் கூறினார்.

http://akkinikkunchu.com/new/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.