Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா கடற்படைக்குத் தொடர்ந்து உதவத் தயார் அமெரிக்கக் கடற்படைத் தளபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா கடற்படைக்குத் தொடர்ந்து உதவத் தயார் அமெரிக்கக் கடற்படைத் தளபதி

Friday, June 10, 2011, 8:48

போருக்குப் பின்னரான சூழலில் அமெரிக்கா தொடர்ந்தும் சிறிலங்கா கடற்படைக்கு உதவிகளை வழங்கும் என்று அமெரிக்கக் கடற்படையின் பசுபிக் பிராந்திய கட்டளைத் தளபதி அட்மிரல் றொபேட் எவ்.வில்லாட் உறுதியளித்துள்ளார்.

சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்கவை சிங்கப்பூரில் சந்தித்துப் பேசிய போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

சங்கிரிலா கருத்தரங்கு என்ற பெயரில் சிங்கப்பூரில் நடத்தப்பட்ட ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்கச் சென்றிருந்த போதே, அமெரிக்க- சிறிலங்கா கடற்படைத் தளபதிகளுக்கு இடையிலான இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா அரசாங்கம் வெற்றி பெறுவதற்கு அமெரிக்கா வழங்கிய உதவிகள் குறித்து தாம் எப்போதும் மதிப்புடன் நோக்குமாக சிறிலங்கா கடற்படைத் தளபதி இந்தச் சந்திப்பின்போது, அமெரிக்கத் தளபதியிடம் கூறியுள்ளார்.

அதேவேளை, சிறிலங்காவின் போருக்குப் பிந்திய நிலைமைகள் தொடர்பாக அமெரிக்கத் தளபதி விபரங்களைக் கேட்டறிந்துள்ளார்.

குறிப்பாக சிறிலங்கா கடற்படை தொடர்பாகவும், விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை மூழ்கடிக்கும் நடவடிக்கையில் பங்கேற்ற- அமெரிக்கா வழங்கிய ‘சமுத்திர‘ என்ற போர்க்கப்பலின் செயற்பாடு பற்றியும் அவர் விபரங்களைக் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

அமைதி திரும்பியுள்ள நிலையில் அமெரிக்கப் போர்க்கப்பல்கள் சிறிலங்கா துறைமுகங்களுக்கு வரமுடிந்துள்ளதாகவும், எனவே சிறிலங்காவுக்கான பயணங்களை அவை மேற்கொள்ள வேண்டும் என்றும் சிறிலங்கா கடற்படைத் தளபதி இந்தச் சந்தப்பின் போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

27 நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள், படை அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்கவும் கலந்து கொண்டிருந்தனர்.

அதேவேளை, இந்தக் கருத்தரங்கில் பங்கேற்று அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சிறிலங்காவின் தற்போதைய நிலைமைகள் குறித்து விளக்கமளிக்க பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச திட்டமிட்டிருந்தார் என்றும், ஆனால் கட்டுநாயக்க தாக்குதல் சம்பவத்தை அடுத்து அவர் இதில் கலந்து கொள்ளவில்லை என்றும் சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் கூறியுள்ளன.

tamilthai.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.