புதிய பதிவுகள்2

3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!

3 months 2 weeks ago
https://apnews.com/article/russia-election-putin-2024-updates-ebdaae1bf12b44343b88ba471f9f0cb0?utm_source=copy&utm_medium=share Putin extends rule in preordained Russian election after harshest crackdown since Soviet era Vladimir Putin has secured an unprecedented fifth term as president of Russia. The country’s election commission announced the results of an election in which he faced no serious challenges and which happened amid the strictest crackdown on opposition and free speech since Soviet times. Rea BY EMMA BURROWS, DASHA LITVINOVA AND JIM HEINTZ Updated 1:34 PM EDT, March 18, 2024 Share President Vladimir Putin extended his reign over Russia in a landslide election whose outcome was never in doubt, declaring Monday his determination to advance deeper into Ukraine and dangling new threats against the West. After the harshest crackdown on dissent since Soviet times, it was clear from the earliest returns that Putin’s nearly quarter-century rule would continue with a fifth term that grants him six more years. Still, Russians heeded a call to protest Putin’s repression and his war in Ukraine by showing up at polling stations at noon on Sunday.

3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!

3 months 2 weeks ago
ஆம், வேறு திரியில் பதிந்திருக்க வேண்டிய கருத்தைத் தவறுதலாக இங்கே பதிந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். இங்குதான் யாழ் கள புடின் ஆதரவாளர்கள் வெற்றியை மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறார்கள். 😂

3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!

3 months 2 weeks ago
ஆதவன்ஸ் ஐ நம்பி கருத்தெழுத ஒருமுறைக்கு இரண்டுமுறை யோசிக்க வேண்டி உள்ளது. ஆனாலும் மேற்குலகில் இந்தத் தேர்தலையொட்டி பெரிதாக யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. யாழ் களத்தினரைத் தவிர,.... 😁

3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!

3 months 2 weeks ago
ஜனநாயக முறையில் நடைபெற்ற இந்த தேர்தலிலே மிகப்பெரிய வாக்கு சதவீதத்தினால் புட்டின் வெற்றிபெற்றிருக்கின்றார். இனி ஜனநாயகத்துக்கு எதிரான மேற்குலகில் வாழும் ஜனநாயகத்துக்கு ஆதரவான மக்கள் ரஸ்யாவுக்குச் சென்று குடியேறுவார்கள் என நினைக்கின்றேன்!

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் : பிரதமர் மோடியின் கருத்துக்கு ஸ்டாலின் கடும் விசனம்

3 months 2 weeks ago
ஸ்ராலின் பங்கருக்குள் இருப்பதாக உணர்கிறேன்.🤣 மோதி , ஸ்ராலினுடன் நேரடியாக இப்படி மோதுவது மோதியின் பலவீனத்தை காட்டுகிறது.

ரஸ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் அமோக வெற்றி.

3 months 2 weeks ago
புதின்: 'போக்கிரி' சிறுவன் முதல் எதிராளியே இல்லாமல் 5-வது முறை ரஷ்ய அதிபரானது வரை - எப்படி சாதித்தார்? பட மூலாதாரம்,GAVRIIL GRIGOROV/POOL/AFP 2 மணி நேரங்களுக்கு முன்னர் விளாதிமிர் புதின் ஐந்தாவது முறையாக ரஷ்ய அதிபராகவிருக்கிறார். ரஷ்யாவில் 2000-ஆம் ஆண்டு முதல் அவர் அதிகாரத்தில் உள்ளார். சோவியத் யூனியனின் முன்னாள் சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலினுக்குப் பிறகு எந்தவொரு ரஷ்ய தலைவரும் இவ்வளவு நீண்டகாலம் ரஷ்யாவின் தலைமைப் பொறுப்பில் இருந்ததில்லை. ரஷ்ய அதிபர் தேர்தல் முடிந்து, 71 வயதாகும் புதின் ஐந்தாவது முறையாக அதிபராகத் தயாராகி வரும் நிலையில், அவரை எதிர்க்க ரஷ்யாவில் யாரும் இல்லை என்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. அவர் விரும்பினால், 2036 வரைகூட அதிபராக நீடிப்பதைத் தடுக்க முடியாது. ஆனால், புதின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது முற்றிலும் தற்செயலானது. கேஜிபி என்றழைக்கப்படும் சோவியத் யூனியன் உளவுத்துறையின் முன்னாள் பணியாளரான புதின், அவருக்கு முன் அதிபராக இருந்த போரிஸ் யெல்ட்சினின் உள்வட்டத்தில் சரியான நேரத்தில் இணைந்தார். ‘நான் ஒரு போக்கிரியாக இருந்தேன்’ பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, புதின், ஜூடோ, சாம்போ போன்ற தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொண்டார் விளாதிமிர் புதின் தனது குழந்தைப் பருவத்தை, கம்யூனிஸ்ட் லெனின்கிராட் நகரில் உள்ள ஒரு பொதுக் குடியிருப்பில் கழித்தார். அந்நாட்களில் தெருக்களில் தன்னைவிட பெரிய, வலுவான சிறுவர்களுடன் அவர் சண்டை போடுவார். அந்நாட்களைத் நினைவுகூர்ந்து, தான் ‘போக்கிரித்தனமாக’ இருந்ததாக அவரே கூறியிருக்கிறார். அந்த நினைவுகளைப் பற்றி 2015-இல் பேசிய அவர், “அந்த தெருச்சண்டைகள் முக்கியமான ஒன்றை எனக்குக் கற்றுக்கொடுத்தன. சண்டையைத் தவிர்க்க முடியாதெனில், நாம் தான் முதல் அடியை அடிக்க வேண்டும்,” என்றார். பின்னாட்களில் ஜூடோ, சாம்போ போன்ற தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொண்டார். தனது பால்யகால நண்பர்களான அர்காடி ரோட்டன்பர்க் மற்றும் போரிஸ் ரோட்டன்பர்க் ஆகியோருடன் இன்று வரை நெருக்கமாக இருக்கிறார். கேஜிபி புலனாய்வுப் பிரிவில் பணி பட மூலாதாரம்,OTHER படக்குறிப்பு, 1985-ஆம் ஆண்டு, கேஜிபி-யின் கிழக்கு ஜெர்மனி பிரிவில் பணியமர்த்தப்பட்டார் புதின் லெனின்கிராட் மாநிலப் பல்கலைக்கழகத்தில் தனது சட்டப் படிப்பை முடித்தபின் சோவியத் உளவுத் துறையில் பணிக்குச் சேர்ந்தார். அப்பணி அவருக்கு மிகவும் பொருத்தமானதாக இருந்தது. 1985-ஆம் ஆண்டு, கேஜிபி-யின் கிழக்கு ஜெர்மனி பிரிவில் பணியமர்த்தப்பட்ட அவர், 1989-ஆம் ஆண்டு அந்த கம்யூனிஸ்ட் அரசின் வீழ்ச்சியை நேரில் கண்டார். கிளர்ச்சியாளர்கள் அவரது அலுவலகத்தை முற்றுகையிட வந்தபோது அவர்களை எச்சரித்துத் துரத்தினார். ஆனால் அவருக்கு ரஷ்ய அரசிடமிருந்து எந்த உதவியும் வரவில்லை. அடுத்த ஆண்டு அவர் ரஷ்யாவுக்குத் திரும்பியபோது, ரஷ்ய கம்யூனிச அரசியல் கட்டமைப்பே ஒரு வீழ்ச்சியின் விளிம்பில் இருந்தது. புதினால் கேஜிபி-யில் பெரும் பதவிகளுக்குச் செல்ல முடியவில்லை. அவரது உயரதிகாரியாக இருந்த நிகோலாய் லியோனோவ், புதினை பெரும் திறமைகளற்ற சாதாரணமான பணியாளர் என்று கருதினார். அதிவேக அரசியல் வளர்ச்சி பட மூலாதாரம்,POOL/AFP படக்குறிப்பு, அப்போதைய ரஷ்ய அதிபர் போரிஸ் யெலிட்சினின் (இடது) நிர்வாகத்தில் பணியமர்த்தப்பட்டார் புதின் 1991-ஆம் ஆண்டு புதின், அப்போது லெனின்கிராட் நகரத்துக்கு புதிய மேயராகப் பொறுப்பேற்ற அனடோலி சோப்சாக் என்பவருக்குக் கீழ் துணை மேயரானார். சோப்சாக் பதவியிழந்தபின், புதின் மாஸ்கோவில் அதிபர் போரிஸ் யெல்ட்சினின் நிர்வாக அலுவலகத்தில் வேலை செய்ய அழைக்கப்பட்டார். அதன்பின் வந்த வருடங்களில்தான் அவரது அரசியல் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. அவர் சிலகாலம் கேஜிபி-க்கு பதிலாக உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு பாதுகாப்புச் சேவைக்குத் தலைமை தாங்கினார். அதன்பின் அதிபருக்குக் கீழ் இயங்கிய பாதுகாப்புக் குழுவின் செயலாளரானார். 1999-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், உடல்நிலை குன்றியிருந்த அதிபர் போரிஸ் யெல்ட்சின், தனது பிரதம மந்திரியை நீக்கிவிட்டு, அப்பதவியில் புதினை அமர வைத்தார். 2000-ஆம் ஆண்டில் வரவிருந்த அதிபர் தேர்தலுக்கு முந்தைய சீர்திருத்தங்களை புதின் கவனித்துக் கொண்டார். அப்போது மாஸ்கோ நகரில் பல குண்டுவெடிப்புகள் நிழந்தன. அதைத் தொடர்ந்து செச்னியா மாகாணத்தில் கிளர்ச்சியை ஒடுக்க ராணுவத்தை அனுப்பினார். அதில் பல செச்னிய மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால் புதினின் முயற்சி வெற்றியடைந்தது. இந்தக் காலகட்டத்தில் அவர் வேகமாக பிரபலம் அடைந்தார். 1999-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் பொறுப்பு அதிபராகப் பதவியில் அமர்த்தப்பட்டார். சில மாதங்கள் கழித்து தேர்தலுக்குப் பிறகு முதல்முறை முழுநேர ரஷ்ய அதிபரானார். அதிபர் பதவியின் ஆரம்ப நாட்கள் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, புதினின் அதிபர் பதவியின் ஆரம்ப வருடங்கள் பல அசம்பாவித நிகழ்ச்சிகளால் நிரம்பியிருந்தது அதிபர் புதினுக்கு முதல் சவால் வந்தது 2000-ஆம் ஆண்டில். குர்ஸ்க் எனப்பட்ட ரஷ்ய அணுஆயுத நீர்மூழ்கிக் கப்பல் பேரன்ட்ஸ் கடலில் மூழ்கியது. அப்போது புதின் விடுப்பில் இருந்தார். மேற்கத்திய நாடுகளின் உதவியை மறுத்தார். கப்பலில் இருந்த 118 பேரும் மீட்கப்படக் காத்திருந்த நிலையிலேயே இறந்தனர். நான்கு ஆண்டுகள் கழித்து செச்னிய கிளர்ச்சியாளர்கள் வடக்கு ஒசெடியா எனும் இடத்தில் இருந்த ஒரு பள்ளியில் 1,000 ரஷ்ய மக்களைப் பிணைக்கைதிகளைப் பிடித்து வைத்திருந்தனர். இதில் பலர் குழந்தைகள். ரஷ்ய காவலர்கள் அங்கு நுழைந்து தாக்குதல் நடத்தியதில், 330 பேர் இறந்தனர். செச்னிய கிளர்ச்சியாளர்களின் திட்டம் குறித்து ரஷ்ய உளவுத்துறை முன்பே அறிந்திருந்தும் செயல்படவில்லை என்று பின்னாளில் தெரியவந்தது. புதினின் அதிபர் பதவியின் ஆரம்ப வருடங்கள் இப்படி பல அசம்பாவித நிகழ்ச்சிகளால் நிரம்பியிருந்தது. புதின், 1990-களில் அரசியலில் பெரும் செல்வாக்கு செலுத்திவந்த பெரும்பணக்காரர்களை அழைத்து, அரசியலில் இருந்து விலகியிருந்து, தன்னை மட்டும் ஆதரித்தால், அவர்களது சொத்துகள் பாதுகாக்கப்படும் என்று அவர்களிடம் தெரிவித்தார். இப்படியாக அவர்களை ‘வழிக்குக் கொண்டுவந்தார்’. மறுபுறம் மக்கள் ஆதரவையும் அவர் சம்பாதித்தார். பட மூலாதாரம்,TIMM SCHAMBERGER/DDP/AFP படக்குறிப்பு, முதலில் மேற்கத்திய நாடுகளுடன் புதின் நட்புறவைப் பேணினாலும் பின்னாட்களில் அந்த உறவு கசந்தது மேற்கத்திய நாடுகளுடன் உறவுகள் ஆரம்ப நாட்களில் புதின் மேற்கத்திய நாடுகளுடன் நட்புறவைப் பேணினார். 2001-ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களின் மீது விமானத் தாக்குதல் நடத்தப்பட்டபோது, அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை முதன்முதலில் அழைத்துப் பேசிய தலைவர்களில் ஒருவர் புதின். அச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் மேல் தாக்குதல் நடத்த அமெரிக்காவுக்கு உதவவும் செய்தார் புதின். அப்போது அமெரிக்க அதிபர் புஷ், புதினை ‘மிகவும் நம்பத்தகுந்தவர்’ என்றழைத்தார். ஆனால் விரைவிலேயே இந்த நட்புறவு கசப்பாக மாறியது. 2006-ஆம் ஆண்டு புதினை எதிர்த்து வந்த அலெக்ஸாண்டர் லிட்வினென்கோ என்ற முன்னாள் கேஜிபி அதிகாரி இங்கிலாந்தில் கொலை செய்யப்பட்டபோது, இங்கிலாந்துடனான புதினின் உறவு கசப்பானது. 2007-ஆம் ஆண்டு, ம்யூனிக் பாதுகாப்புக் கூட்டத்தில், அமெரிக்கா தனது எல்லைகளைத் தாண்டி மற்ற நாடுகளின் விஷயங்களில் தலையிடுவதாகக் குற்றம்சாட்டினார் புதின். இது மீண்டும் ஒரு பனிப்போர் சூழ்நிலையை உருவாக்கியதாக அப்போது கருதப்பட்டது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, புதின் நேரடியாகத் தனக்குக் கீழ் வேலைசெய்யும் ஒரு தேசிய காவல்படையைக் கட்டமைத்துள்ளார் மேற்கத்திய உலகுக்கு மேலும் நெருக்கடி கொடுத்த புதின் 2008-ஆம் ஆண்டு, மூன்றாவது முறையாகத் தொடர்ந்து அதிபராக இருக்க ரஷ்ய அரசியல் சட்டம் அனுமதிக்காததால், அவர் பிரதம் மந்திரியாக அதிகாரத்தில் இருந்தார். ஆனாலும் அவர் மிக அதிகப்படியான அரசியல் அதிகாரத்தைக் கொண்டிருந்தார். இந்தக் காலகட்டத்தில், மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவாக இருந்த முன்னாள் சோவியத் நாடுகளின் மீது ராணுவ அதிகாரத்தைப் பயன்படுத்தினார். உதாரணமாக ஜார்ஜிய ராணுவத்தை தோற்கடித்து, அப்காஸியா, தெற்கு ஒஸெட்டியா ஆகிய பகுதிகளின் தன்னாட்சியை ரஷ்ய ராணுவம் நிலைநிறுத்தியது. எதிர்ப்பை முற்றிலும் ஒழித்த புதின் பட மூலாதாரம்,ALEXEY DRUZHININ/SPUTNIK/AFP படக்குறிப்பு, புதினின் ஆதரவோடு பல வருடங்கள் இயங்கிவந்த யெவ்ஜெனி ப்ரிகோசின் 2023-ஆம் ஆண்டு புதினுக்கு எதிராக ஒரு கிளர்ச்சியை முன்னெடுத்தார். அது முறியடிக்கப்பட்டது. பின்னர், ப்ரிகோசின் ஒரு மர்மமான விமான விபத்தில் இறந்தார் கடந்த 2021-ஆம் ஆண்டு, மூன்றாவது முறை தொடர்ந்து அதிபராவதைத் தடுக்கும் சட்டத்தை வளைத்து, தான் ஐந்தாவது மற்றும் ஆறாவது முறையும் அதிபர் ஆவதற்கான சாத்தியத்தை உறுதிப்படுத்தினார். புதினை விமர்சிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் காலப்போக்கில் காணாமல் போயிருக்கிறார்கள். 2011-இல் தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்திய போரிஸ் நெம்ட்சோவ், 2015-இல் சுட்டுக் கொல்லப்பட்டார். புதினை மிகக் கடுமையாக எதிர்த்துவந்த அலெக்ஸெய் நவால்னி மீது, 2020-இல் விஷவாயு தாக்குதல் நடத்தப்பட்டது. 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் சிறையில் அடைக்கப்படார். அவர், கடந்த மாதம் (பிப்ரவர்ய் 2024) இறந்தார். நவால்னியின் மனைவி, புதின்தான் நவால்னியைக் கொலைசெய்துவிட்டதாகக் குற்றம்சாட்டி வருகிறார். புதின் ஆதரவோடு பல வருடங்கள் இயங்கிவந்த யெவ்ஜெனி ப்ரிகோஜின் 2023-ஆம் ஆண்டு புதினுக்கு எதிராக ஒரு கிளர்ச்சியை முன்னெடுத்தார். அது முறியடிக்கப்பட்டது. பின்னர், ப்ரிகோஜின் ஒரு மர்மமான விமான விபத்தில் இறந்தார். புதின் ரஷ்ய பழமைவாத தேவாலயத்தின் ஆதரவைப் பெற்றிருக்கிறார். நேரடியாகத் தனக்குக் கீழ் வேலைசெய்யும் ஒரு தேசிய காவல்படையைக் கட்டமைத்துள்ளார். ரஷ்ய ஊடகங்கள் பெரும்பாலும் புதினின் அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்பட்டவையாகவே இருக்கின்றன. புதின் 2014-இல் க்ரைமியா தீபகற்பத்தைக் கைப்பற்றிய போதே யுக்ரேன் மீதான புதினின் யுத்தம் துவங்கிவிட்டது என்கின்றனர் நிபுணர்கள். கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் யுக்ரேன் மீது ராணுவத் தாக்குதலைத் தொடங்கினார். அந்தப் போர் இன்றுவரை தொடர்கிறது. இந்நிலையில்தான் புதின் ஐந்தாவது முறையாக ரஷ்ய அதிபராகவிருக்கிறார். https://www.bbc.com/tamil/articles/cn0w5v99035o

இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு

3 months 2 weeks ago
காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர், மொசாட் தலைவர் பேச்சுவார்த்தை Published By: SETHU 18 MAR, 2024 | 03:46 PM காஸா போர் நிறுத்தம் தொடர்பில், கட்டார் பிரதமர், இஸ்ரேலின் புலனாய்வு அமைப்பான மொஸாட்டின் தலைவர் மற்றும் எகிப்திய அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கத்தார் பிரதமர் மொஹம்மத் பின் அப்துல்ரஹ்மான் அல் தானி, மொசாட் தலைவர் டேவிட் பார்னியா, மற்றும் எகிப்தி அதிகாரிகள் ஆகியார் இன்று கட்டார் தலைநகர் தோஹாவில் எதிர்பார்க்கப்படுவதாக தன்னை அடையாளப்படுத்த விரும்பாத வட்டாரமொன்று ஏ.எவ்.பியிடம் தெரிவித்துள்ளது. காஸாவில் 6 வார கால போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான திட்டத்தை பேச்சுவார்த்தை மத்தியஸ்தர்களான எகிப்து மற்றும் கட்டாரிடம் ஹமாஸ் கடந்த வெள்ளிக்கிழமை முன்வைத்திருந்தது. எனினும் அதை இஸ்ரேல் நிராகரித்தது. இத்திட்டத்தின்படி, 42 நாட்களுக்கு போர் நிறுத்தம் கடைபிடிக்கப்படும். அக்காலப்பதியில் 42 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும். ஒவ்வொரு பணயக் கைதிக்கும் 20 முதல் 50 வரையான எண்ணிக்கையிலான பலஸ்தீன சிறைக்கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டெம்பர் 7 ஆம் திகதி, இஸ்ரேலின் தென் பகுpயிலிருந்து சுமார் 250 பேரை பணயக் கைதிகளாக காஸாவுக்குள் ஹமாஸ் இயக்கம் கொண்டு சென்றது. அவர்களில் சுமார் 130 பேர் காஸாவிலிருந்து விடுவிக்கப்படாதுள்ளனர் என இஸ்ரேல் நம்புகிறது. உயிரிழந்துவிட்டதாக கருதப்படும் 32 பேரும் இவர்களில் அடங்குவர். பெண்கள், சிறார்கள், வயோதிபர்கள், நோயாளிகள் முதலில் விடுவிக்கப்படுவர். ஆண் சிப்பாய்கள் மற்றும் இறந்தவர்களின் உடல்களை பின்னர் விடுவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. புனித ரமழான் நோன்புக்காலம் ஆரம்பமாகுவதற்கு முன்னர் 6 வாரகால போர் நிறுத்தத்தை அறிவிப்பதற்கு மத்தியஸ்தர்கள் முயற்சித்தனர். எனினும், 6 நிரந்தரமான போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படுவதுடன், காஸாவிலிருந்து இஸ்ரேலியப் படையினர் முழுமையாக வாபஸ்பெற்றால் மாத்திரமே பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவர் என ஹமாஸ் நிபந்தனை விதித்திருந்தது. புதிய திட்டத்தின்படி, காஸாவிலுள்ள அனைத்து நகரங்கள் மற்றும் மக்கள் நிறைந்த பகுதிகளிலிருந்து இஸ்ரேலிய படையினர் வெளியேற வேண்டும் என ஹமாஸ் வலியுறுத்தியுள்ளது. யுத்தத்துக்கு முந்தைய காலத்தில் போன்று தினமும் 500 மனிதாபிமான உதவிப் பொருட்கள் காஸாவுக்கு அனுப்பபட வேண்டும் எனவும் ஹமாஸ் கோரியுள்ளது. இதேவேளை, காஸாவிலிருந்து தனது படையினரை வாபஸ்பெறுவதற்கு இதுவரை இஸ்ரேல் மறுத்துவருகிறது. அது ஹமாஸுக்கு வெற்றியாக அமைந்துவிடும் என இஸ்ரேல் கூறுகிறது. போர் நிறுத்தத்துக்கான ஹமாஸின் யோசனைகள் யதார்த்தமற்றை எனவும், ஆனால், கட்டாரில் நடைபெறவுள்ள அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகளுக்கு தனது பிரதிநிதிகளை இஸ்ரேலிய அரசாங்கம் அனுப்பும் எனவும் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு தெரிவித்திருந்தார். அண்மையில் எகிப்தில் நடைபெற்ற பேச்சுவார்ததைளுக்கு இஸ்ரேலிய பிரதிநிதிகள் அனுப்பப்படவில்லை. செப்டெம்பர் 7 ஆம் திகதியிலிருந்து, இஸ்ரேலின் தாக்குதல்களால் காஸாவில் 31,726 பேர் உயிரிழந்துள்ளனர் என காஸா சுகாதார அமைச்சு இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179048

யாழில் பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு அபராதம்

3 months 2 weeks ago
கடந்த வாரம் வல்வையில் (வல்வெட்டித்துறை) ஒரு வெதுப்பகம் இதே போன்ற சுகாதார சீர்கெட்டுகளால் சுகாதார அதிகாரிகளால் மூடப்பட்டது என்று செய்திகளில் இருந்தது. இங்கு நான் இருக்கும் இடத்திற்கு அருகில் லிட்டில் இந்தியா என்று சொல்லப்படும் ஒரு இடம் இருக்கின்றது. இந்தியா உணவகங்களும், கடைத் தொகுதிகளும் நிறைந்த இடம். அடிக்கடி ஏதாவது ஒரு உணவகத்தை அதிகாரிகள் மூடி விடுவார்கள். ஆனால், வேறு ஒரு பெயரில் அது மீண்டும் திறக்கப்படும்........இப்படியே போய்க் கொண்டிருக்கின்றது.

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் திடீர் தாக்குதல் - தாலிபன் அரசுடன் என்ன பிரச்னை?

3 months 2 weeks ago
பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8 பேர் பலி Published By: SETHU 18 MAR, 2024 | 02:05 PM ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் இன்று நடத்திய வான்வழித் தாக்குதல்களால் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என தலிபான் அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கோஸ்ட் மற்றும் பக்திக்கா மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், உயிரிழந்தவர்கள் அனைவரும் பெண்கள் மற்றும் சிறார்கள் எனவும் ஸபிஹுல்லா முஜாஹித் கூறியுள்ளார். வீடுகளை இலக்குவைத்து விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக அவர் கூறியுள்ளார். தீவிரவாதிகளை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் வடக்கு வஸிரிஸ்தான் மாவட்டத்தில் பொலிஸ் நிலையமொன்றின் மீது நேற்றுமுன்தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் 7 படையினர் உயிரிழந்திருந்தனர். இத்தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஸிப் அலி ஸர்தாரி சூளுரைத்திருந்தார். https://www.virakesari.lk/article/179016

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் : பிரதமர் மோடியின் கருத்துக்கு ஸ்டாலின் கடும் விசனம்

3 months 2 weeks ago
18 MAR, 2024 | 04:19 PM (எம்.மனோசித்ரா) கச்சதீவு உரிமையை அடிப்படையாகக் கொண்டு மீனவர்களின் பிரச்சினைகள் உதாசீனப்படுத்தப்படவில்லை என இலங்கை அரசாங்கம் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகள் கச்சதீவு தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளன. கடந்த காலத்தில் தி.மு.க செய்த பாவத்தால்தான் இலங்கை அரசால் இன்று தமிழ்நாட்டு மீனவர்கள் இன்னலுக்கு ஆளாகிறார்கள் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ள கருத்துக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விசனம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், 'தி.மு.க. அரசின் கடும் எதிர்ப்பையும் மீறித்தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது என்ற உண்மை வரலாற்றை தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள். நாட்டின் ஒரு பகுதியை மாநில அரசால் மற்றொரு நாட்டுக்கு வழங்க முடியும் என நம்பும் அளவுக்குத்தான் பிரதமர் அப்பாவியாக இருக்கிறாரா? கச்சத்தீவை மீட்க கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய பா.ஜ.க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை அரசால் தொடர்ந்து சிறைப் பிடிக்கப்படுவதையும் சித்திரவதைக்கு ஆளாவதையும் தடுத்து நிறுத்தாதது ஏன்? அவர்கள் இந்தியர்கள் இல்லையா? அதானி நிறுவனத்தின் வர்த்தக நலன்களுக்காக இலங்கை அரசுக்கு அழுத்தம் தந்த ஒன்றிய பா.ஜ.க அரசு இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைக்காக வாய் திறக்காதது ஏன்? படகுகளைப் பறிமுதல் செய்து நாட்டுடைமை ஆக்கிவிட்டதாக அறிவிக்கிறது இலங்கை அரசு. இந்திய அரசு இதை அதிகாரபூர்வமாக, வெளிப்படையாகக் கண்டிக்காதது ஏன்? இரண்டாவது முறையாக கைது செய்யப்படும் மீனவர்களுக்குச் சிறைத்தண்டனை வழங்கும் நடைமுறை என்பதே, பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டதுதான். இதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? இதற்கெல்லாம் பதிலில்லை. தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டுக்குச் செய்து கொடுத்த சிறப்புத் திட்டங்கள் என்ன என்று பதில் கூறுங்கள் பிரதமரே என்று தமிழ்நாட்டு மக்கள் கேட்ட கேள்விக்கும் பதில் இல்லை. ஆனால், வழக்கமான பொய்களும் புலம்பல்களும் மட்டும் மேடையில் எதிரொலித்தன. விஷ்வகுரு என மார்தட்டிக்கொள்ளும் பிரதமர் மௌனகுருவாக இருப்பது ஏன்? தன் சொந்த இயலாமையை மறைக்கத் தி.மு.க மீது சேற்றை வாரி இறைக்கும் கபட நாடகத்தை எங்கள் மீனவர்கள் தோலுரிப்பார்கள். இது அரிதாரங்கள் கலைகிற காலம்!' எனக் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/179054

என்னோட சாதி..

3 months 2 weeks ago
சிலர் "கடந்து போ, பேசாமல் போ, மறையும்" என்கின்றனர் - இதெல்லாம் கடந்து போன காலங்கள் இருந்தன. இவர்களின் தியரி சரியானால் இப்போது சாதி ஒரு பொருட்டில்லாமல் போயிருக்க வேண்டும், அப்படியா போய் விட்டது? இல்லையல்லவா? ஜே.பி.சி மெசின் தேர் முதல் (2023 இல்) தீவகத்தின் அதிபர் பதவி வரை சாதி மீண்டும் மூர்க்கமாக எழும்பி நடமாடுகிறதல்லவா? பிறகேன் இந்த இத்துப் போன "வைக்கோல் போருக்குள் மறைச்சு விட்டால், எல்லாம் கிளீனாகி விடும்" என்ற வாதம் இன்னும் தொடர்கிறதெனத் தெரியவில்லை. எனவே, வெளிப்படையாகப் பேசும் துணிவில்லாதவர்கள், பேசத் துணிந்தவர்களையாவது நையாண்டி செய்யாமல் மௌனமாக இருங்கள் - உங்கள் மௌனம் சில நேரங்களில் சாதி வாதத்தை ஒழிக்க உதவலாம்!

நாட்டில் நிகழும் கொலைகளை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை

3 months 2 weeks ago
போதைப்பொருள், பாதாள உலக நடவடிக்கைகளை நாட்டிலிருந்து ஒழிக்கப் பாடுபடுவேன் - டிரான் அலஸ் 18 MAR, 2024 | 04:35 PM எந்த அழுத்தங்களுக்கும் அடிபணியாது, போதைப்பொருள் மற்றும் பாதாள உலக நடவடிக்கைகளை நாட்டிலிருந்து ஒழிக்கப் பாடுபடுவேன் என அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள 19 பொலிஸ் நிலையங்களுக்கு உட்பட்ட சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்றது. இதற்கு தலைமை தாங்கி உரையாற்றிய அமைச்சர் டிலான் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பிரசன்னமாகியிருந்தார். https://www.virakesari.lk/article/179053

யாழில் பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு அபராதம்

3 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 3 18 MAR, 2024 | 12:47 PM யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் உரிமையாளருக்கு யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றால் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் தண்டம் அறவிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி பகுதியில் உள்ள இரண்டு பல்பொருள் அங்காடிகளில் பொது சுகாதார பரிசோதகர்களினால் திடீர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் போது, காலாவதியான பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தியமை , வண்டுகள் மொய்த்த பழுதடைந்த பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தமை உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட பொருட்களை சான்று பொருட்களாக மன்றில் முற்படுத்திய சுகாதார பரிசோதகர் அங்காடி உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். குறித்த வழக்கு இன்று திங்கட்கிழமை மன்றில் அழைக்கப்பட்ட போது ஒருவர் மன்றில் முன்னிலையாகத நிலையில் , மன்றில் முன்னிலையான ஒரு அங்காடி உரிமையாளருக்கு எதிராக 18 குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன. தன் மீதான குற்றச்சாட்டுக்களை உரிமையாளர் ஏற்றுக்கொண்டதை அடுத்து, அவரை கடுமையாக எச்சரித்த மன்று , அவருக்கு ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது. https://www.virakesari.lk/article/179015

குற்றமே தண்டனை

3 months 2 weeks ago
நிச்சயமாக, கற்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால் சேகர் போன்றோரும் நல்லாகவே வந்திருப்பார்கள். சேகரை கிணற்றுகுள் தள்ளி விட்டது போல, நாங்கள் பலரும் வாழ்க்கையில் ஏதோ ஒரு தவறை நிதானம் இழந்து செய்து விட்டு, அந்தக் குற்ற உணர்வை வாழ்க்கை முழுவதும் உணர்ந்து, குறுகிக் கொண்டேயிருக்கின்றோம். எல்லாவற்றையும் விட பெரிய தண்டனை இது.

3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!

3 months 2 weeks ago
புரின் பெறுமதி தெரிந்த ஒரே அமைப்பு உலகில் நேட்டோ தான்!😎 70 ஆண்டுகளாக அயல் ஸ்கண்டினேவிய நாடுகளால் கூட இயலாமல் போன காரியத்தை செய்தவர் புரின் என்ற "ஸ்லீப்பர் ஏஜென்ற்": சுவீடனையும், பின்லாந்தையும் வெள்ளித் தட்டில் வைத்து நேட்டொவில் ஒப்படைத்தார்😂!

வெடுக்குநாறியில் கைதானவர்களை விடுவிக்கக் கோரி நல்லூரிலிருந்து வவுனியா நோக்கிய வாகனப் பேரணி ஆரம்பம்

3 months 2 weeks ago
வெடுக்குநாறி மலையில் கைதானவர்களை விடுவிக்கக் கோரி மூதூரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் Published By: DIGITAL DESK 3 18 MAR, 2024 | 07:27 PM வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், மத வழிபாட்டு உரிமையை உறுதி செய்யக் கோரியும் இன்று திங்கட்கிழமை (18) மூதூரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மூதூர் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக ஆரம்பித்த கவனயீர்ப்புப் போராட்டம் மூதூர் பிரதேச செயலகம் வரை இடம்பெற்றது. இப்போராட்டத்தின் இறுதியில் மகஜர் ஒன்றும் மூதூர் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தரிடம் கையளிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/179012

பங்களாதேஸ் - இலங்கை கிரிக்கெட் தொடர்

3 months 2 weeks ago
இலங்கையுடனான 3 ஆவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் வெற்றி; ஒருநாள் தொடரை கைப்பற்றியது Published By: VISHNU 18 MAR, 2024 | 05:21 PM இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான கடைசி ஒரு நாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்படி 03 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி கைப்பற்றியது. இன்றைய (18) போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியால் 50 ஓவர்கள் நிறைவில் 235 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக ஜனித் லியனகே ஆட்டமிழக்காமல் 101 ரன்கள் எடுத்தார். அணித்தலைவர் குசல் மெண்டிஸ் 29 ஓட்டங்களையும் சரித் நசங்க 37 ஓட்டங்களையும் பெற்றனர். பங்களாதேஷ் பந்துவீச்சில் தஸ்கின் அஹமட் 03 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி வீரர்கள் 40.2 ஓவர்களில் வெற்றி பெற்றது. அங்கு தன்சித் ஹசன் 84 ஓட்டங்களையும், முஸ்பிகுர் ரஹிம் ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களையும் பெற்றனர். ரிஷாத் ஹொசைன் 18 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக லஹிரு குமார 04 விக்கெட்டுகளை கைப்பற்றினார். https://www.virakesari.lk/article/179059

குற்றமே தண்டனை

3 months 2 weeks ago
அறியாத வயதில் தவறாக விளங்கிச் செய்த செயல். சேகர் கற்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தால் அவருடைய வாழ்க்கையும் மாறியிருக்க வாய்ப்புள்ளது.

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் திடீர் தாக்குதல் - தாலிபன் அரசுடன் என்ன பிரச்னை?

3 months 2 weeks ago
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பாகிஸ்தானிலிருந்து கரோலின் டேவிஸ் & லண்டனிலிருந்து ஃப்ளோரா ட்ரூரி பதவி, பிபிசி 18 மார்ச் 2024, 12:10 GMT புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் ஒரே இரவில் 2 இடங்களில் பாகிஸ்தான் நடத்திய திடீர் வான்வழித் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் எட்டு பேர் கொல்லப்பட்டதாக தாலிபன்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திங்கள்கிழமை (மார்ச் 18) உள்ளூர் நேரப்படி 03:00 மணியளவில் நடந்த இந்த "பொறுப்பற்ற" தாக்குதல்களில், பாகிஸ்தானுடனான எல்லைக்கு அருகிலுள்ள வீடுகள் தாக்கப்பட்டதாக, தாலிபன் அரசின் செய்தித் தொடர்பாளர் ஸைபுல்லா முஜாஹித் தெரிவித்தார். பாகிஸ்தான் இதுகுறித்து இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால், கடந்த சனிக்கிழமை பாகிஸ்தான் துருப்புகள் 7 பேரை அடையாளம் தெரியாத ஆயுதக்குழுவினர் கொன்றதற்காக, “வலுவான பதிலடியை கொடுப்போம்” என, அந்நாட்டு குடியரசு தலைவர் ஆசிஃப் அலி சர்தாரி உறுதியளித்ததைத் தொடர்ந்து இத்தாக்குதல் நடந்துள்ளது. உயிரிழந்த பாகிஸ்தான் படையினர் இருவரின் இறுதிச்சடங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆசிஃப் அலி சர்தாரி, இதற்கு காரணமானவர்கள் “யாராக இருந்தாலும், எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பதிலடி கொடுக்கப்படும்” என தெரிவித்தார். வடக்கு வசீரிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் பாகிஸ்தான் ராணுவ தளத்தின் மீது சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. ஆப்கானிஸ்தானிலிருந்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறுகிறது. பாகிஸ்தான் அரசாங்கத்தின்படி, இத்தகைய தாக்குதல்களின் எண்ணிக்கை சமீப மாதங்களாக அதிகரித்து வருகின்றன. பாகிஸ்தான் துருப்புகள் மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலடியாகவே இன்று ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மற்றும் பாக்டிகா மாகாணங்களில் தாக்குதல் நடைபெற்றதாக, பெயர் தெரிவிக்க விரும்பாத உள்ளூர் அரசு அதிகாரியை மேற்கோள் காட்டி ஏ.எஃப்.பி முகமை செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு தாலிபன் பதிலடி தலிபான் நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் ஒரு அறிக்கையில், "ஆப்கானிஸ்தான் பிரதேசத்தின் பாதுகாப்பில் சமரசம் செய்ய யாரையும் அனுமதிக்காது. இந்த தாக்குதல்களில் கிழக்கு எல்லையான கோஸ்ட் மற்றும் பக்திகா மாகாணங்களில் ஐந்து பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டனர்", என்று குறிப்பிட்டுள்ளார். தலிபான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடியாக எல்லையில் பாகிஸ்தான் துருப்புகளை அதன் பாதுகாப்புப் படைகள் குறிவைத்ததாகக் கூறியுள்ளது. பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே மோதல்கள் நடந்ததாக அல்ஜசீரா மற்றும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே உச்சக்கட்ட பதற்றம் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, உயிரிழந்த பாகிஸ்தான் படையினரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட ஆசிஃப் அலி சர்தாரி ஆனால், தாலிபன் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஸைபுல்லா முஜாஹித் சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், "கட்டுப்பாடு இல்லாதது மற்றும் தங்கள் பிரதேசத்தில் உள்ள பிரச்னைகளுக்கு ஆப்கானிஸ்தானை குறை கூற வேண்டாம்" என்று பாகிஸ்தானை எச்சரித்தார். ”இதுபோன்ற சம்பவங்கள், பாகிஸ்தானால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்,” என்றும் அவர் கூறினார். இந்த தாக்குதல்களில் "மக்கள் குடியிருந்த வீடுகள்" தாக்கப்பட்டதாகவும் இதில் ஐந்து பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார். 2021-ம் ஆண்டில் தாலிபன்கள் நாட்டை மீண்டும் கைப்பற்றியதில் இருந்து ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் பிற்பகுதியில், பாகிஸ்தான் பல்லாயிரக்கணக்கான ஆப்கானியர்களை பாகிஸ்தானை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தியது. பாகிஸ்தானில் தங்குவதற்கு அவர்களிடம் சரியான ஆவணங்கள் இல்லை என அந்நாடு கூறியது. பல அகதிகள் மற்றும் புகலிடம் கோரி வந்தவர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதாக மனித உரிமைக் குழுக்கள் விமர்சித்தன. பாதுகாப்புக் காரணங்களுக்காக இதைச் செய்ததாக அந்த நேரத்தில் பாகிஸ்தான் காபந்து அரசாங்கத்தின் அமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர். ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் மீண்டும் கைப்பற்றிய பிறகு, அதனை ஆயுதக் குழுக்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாக சில ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், ஆயுதக் குழுக்களை ஆதரிக்கவில்லை என தாலிபன்கள் மறுத்துள்ளதாக, ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவித்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/cx9zxqy4er5o
Checked
Wed, 07/03/2024 - 04:46
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed