புதிய பதிவுகள்2

பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்

3 months 2 weeks ago
அரசியல் கற்றுக்குட்டியான ரஜீவை தமது வலைக்குள் வீழ்த்திய ஜெயவர்த்தனவும் லலித் அதுலத் முதலியும் ரஜீவ் காந்திக்கும் லலித் அதுலத் முதலிக்குமிடையிலான சந்திப்பு நடைபெறவிருந்த நாளான மாசி மாதம் 13 ஆம் திகதி புலிகள் நடத்திய கொக்கிளாய் இராணுவ முகாம் மீதான தாக்குதல் அவர்கள் எதிர்பார்த்தளவிற்கு வெற்றியளிக்கவில்லை. தாக்கிவிட்டு மறையும் உத்தியை அதுவரை காலமும் கடைப்பிடித்துவந்த போராளிகள், பலப்படுத்தப்பட்ட முகாம் ஒன்றினை நேரடியாகத் தாக்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள் என்பதை ஜெயார் உணர்ந்துகொண்டபோதிலும், இத்தாக்குதல் பிரபாகரன் திட்டமிட்ட வகையில் இடம்பெற்றிருக்கவில்லை. இத்தாக்குதலின் மூலம் அவர் அடைய எதிர்ப்பார்த்த இலக்கினை அவர்களால் அடைய முடியவில்லை. இத்தாக்குதலின் மூலம் கொக்கிளாய் முகாமினை முற்றாக அழித்துவிட பிரபாகரன் திட்டமிட்டிருந்தார். ஆகவே இத்தாக்குதலினால் ஏற்பட்ட சரிவைச் சரிசெய்ய அடுத்த தாக்குதல் வெற்றிகரமாக அமையவேண்டும் என்று அவர் உறுதிபூண்டார். அடுத்த தாக்குதலுக்கான திட்டத்தினை வகுத்த அவர், அதற்காக தனது போராளிகளை பயிற்றுவிக்க ஆரம்பித்தார். பிரபாகரனுடன் கிட்டு பண்டிதரின் மறைவிற்குப் பின்னர் கிட்டுவே டயாழ்ப்பாணத்தின் தளபதியாக பிரபாகரனால் நியமிக்கப்பட்டிருந்தார். கிட்டுவே யாழ்ப்பாணத் தாக்குதலை நடத்துவார் என்றும் பிரபாகரன் முடிவெடுத்தார். யாழ்ப்பாண மாவட்டத்தின் பொலீஸ் தலைமைக் காரியாலயமான யாழ்ப்பாண பொலீஸ் நிலையமே புலிகளின் இலக்காக இருந்தது. சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நாள் ஒன்றினையே யாழ் பொலீஸ் நிலையத் தாக்குதலுக்கும் பிரபாகரன் தேர்வுசெய்தார். சித்திரை 10 ஆம் திகதியான அன்றே இங்கிலாந்தின் பிரதமர் மாக்கிரெட் தட்சர் கொழும்பிற்கு விஜயம் செய்யவிருந்தார். இராணுவத்தினருடனும், பொலீஸாருடனும் நேரடியாக மோதும் நிலைக்குத் தமிழ்ப் போராளிகள் வந்துவிட்டார்கள் எனும் செய்தியை சர்வதேசத்திற்குச் சொல்ல இத்தாக்குதலைப் பயன்படுத்த பிரபாகரன் எண்ணினார். 70 களில் தாக்கிவிட்டு மறையும் கெரில்லாத் தாக்குதல்களில் ஈடுபட்ட போராளிகள், பின்னர் 1984 வரை, நின்று சண்டையிடும் கெரில்லாக்கள் எனும் நிலைக்கு உயர்ந்து, அதன் பின்னரான காலத்தில் இராணுவ முகாம்கள் மீதும் பொலீஸ் நிலையங்கள் மீதும் நேரடியான தாக்குதல்களை நடத்தும் அளவிற்கு முன்னேறியிருந்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பிரபாகரனின் திட்டங்கள் குறித்து எந்தவித தகவலும் அறிந்திராத லலித் அதுலத் முதலி, ரஜீவ் காந்தியை எவ்வாறு ஜெயாரின் வலைக்குள் வீழ்த்தலாம் என்பது குறித்துக் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். சிறந்த திட்டமிடலாளரும், ராணுவ விடயங்கள் குறித்து அறிந்து வைத்திருந்தவருமான ஜெயவர்த்தன, ஆரம்பம் முதலே தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டமும் இந்தியாவின் நலன்களும் ஒரே திசையில் பயணிக்கப்போவதில்லை என்பதை நன்கு அறிந்தே இருந்தார். இந்தியாவின் தேசிய நலன்கள் என்று வருகையில், தனது நலன்களை உறுதிப்படுத்திக்கொள்வதில், இலங்கை தன்னிடம் முற்றான சரணாகதியினை அடையவேண்டும் என்று இந்தியா எதிர்பார்த்தது. ஆகவேதான் தனது வெளியுறவுக் கொள்கையின் வழியே இலங்கையை வீழ்த்துவதற்கு தமிழ் மக்களை அழுத்தம் கொடுக்கும் கருவியாகப் பாவிக்க இந்தியா விரும்பியது. இதனால் இலங்கையிலிருந்து தமக்கான தனிநாட்டினை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு போரிட்ட தமிழ்ப் போராளி அமைப்புக்களின் அவாவும் இந்தியாவின் தேசிய நலன்களும் நேர் எதிரானவையாக மாறிப்போயின‌. தமது திட்டத்தின்படி, தாம் முன்வைக்கவிருக்கும் கோரிக்கைகளுக்கு ரஜீவ் காந்தியை இணங்கப்பண்ணுவதனூடாக தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தலாம் என்று லலித் திட்டமிட்டார். அவையாவன, 1. இலங்கையை இந்தியா ஒருபோதும் ஆக்கிரமிக்காது எனும் உத்தரவாதம். 2. சமரசப் பேச்சுவார்த்தைகளை மீள புதிதாக ஆரம்பிப்பது. 3. தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கான ஆயுத உதவிகளை இந்தியா நிறுத்திக்கொள்வது. 4. பார்த்தசாரதியைப் பேச்சுவார்த்தைகளிலிருந்து முற்றாக விலக்குவது. 5. தமிழ் நாட்டிலிருந்து மத்திய அரசாங்கத்தின் மேல் கொடுக்கப்படும் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் இருப்பது. 6. பாக்கு நீரிணையில் இந்திய ‍- இலங்கைக் கடற்படைகளின் கூட்டு ரோந்துகளை ஆரம்பிப்பது. சுமார் இரண்டு மணித்தியாலங்களாக தனது உதவியாளர் ஒருவர் உடனிருக்க, ரஜீவுடன் பேச்சுக்களில் ஈடுபட்ட லலித் அதுலத் முதலி, தனது கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றிற்கு ரஜீவின் சம்மதத்தைப் பெறுவதில் வெற்றி பெற்றார். தில்லியிலிருந்து ஜெயவத்தனவைத் தொடர்புகொண்ட லலித், "ரஜீவுடனான பேச்சுக்கள் சிநேகபூர்வமாகவும், மிகுந்த பலனளிப்பவையாகவும் இருந்தன" என்று அறிவித்தார். பேச்சுக்களை ஆரம்பிக்கும்போது ரஜீவ் "பாக்கிஸ்த்தான் உள்ளடங்கலாக, தென்னாசியாவின் அனைத்து நாடுகளுடனும் நட்பான தொடர்பாடல்களை ஆரம்பிக்க மிகுந்த விருப்பம் கொண்டுள்ளேன்" என்கிற தலைப்புடனேயே ஆரம்பித்தார். மேலும், "ஜெயவர்த்தனவின் தில்லி வருகையினை மிகுந்த ஆவலுடன் நான் எதிர்பார்த்திருக்கிறேன்" என்றும் லலித்திடம் அவர் கூறினார்.

கனடாவில் கார் களவு.

3 months 2 weeks ago
போன வருஷம் recreation center க்கு ஜிம் க்கு போயிருந்த பொழுது எனது உடைகள் கைப்பை பர்ஸ் உள்ளிட்டவற்றை ஒரு பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்துப் பூட்டிவிட்டுத்தான் ஜிம்முக்கு போனேன், இரவு 11 மணி அப்படி வந்து திறந்து பார்த்தபொழுது பர்சை காணவில்லை. உடனே வீட்டுக்கு ஓடி வந்து வங்கிக் கணக்கை திறந்து பார்த்தால் 200 டாலர்ஸ் வரை கிரெடிட் கார்டில் இருந்து போயிருந்தது, உடனே வங்கிக்கு அழைப்பை எடுத்து என்னுடைய வங்கி அட்டைகளை deactivate செய்துவிட்டு காவல்துறையிடம் புகார் அளித்திருந்தேன். இத்தனைக்கும் என்னுடைய அனைத்து அடையாள அட்டைகள், வாகன சாரதி பத்திரம், $300தாள் காசு, என எல்லாமே போய்விட்டன, அடுத்த நாள் வேலைக்கு போக முடியவில்லை. இழந்த பத்திரங்களைப் பெற பெற ஒரு பத்து நாள் ஆனது. ஒரு மாதம் கழித்து களவு செய்திருந்தவனை பிடித்திருந்தார்கள் போலீசார். களவு செய்தவன் ஒரு 15 வயது சோமாலியன். பெயர் முஹமட். சில மாதங்களுக்கு முன்னர் இளம் வயது குற்றவாளிகளை சீர்திருத்தம் அமைப்பொன்று மேற்படி நபர் தான் செய்த குற்றத்தை உணர்ந்து கொண்டதாகவும் அவரை என்னை வந்து சந்திக்கும்படியும் கேட்டுக் கொண்டார்கள். நான் கேட்டேன் வந்து சந்திப்பதற்கு எனக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தருவீர்கள் என்று? மறுபுறத்தில் என்னுடன் கதைத்துக் கொண்டிருந்த பெண்ணோ அந்த குற்றவாளி திருந்துவதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் எந்த பணமும் தர முடியாது என்றும் சொன்னார். இந்த விஷயத்தை வீட்டில் மனுஷியிடம் சொன்ன பொழுது என்னை கடிந்து கொண்டு என்னைப் போய் அவனை சந்திக்கும்படி சொல்லப்பட்டது. நான் போகவில்லை இரண்டு காரணங்கள் ஒன்று :சொந்த ஊர் சோமாலியா இரண்டாவது காரணம் :பெயரோ முகமட் இப்படிப்பட்டவர்கள் திருந்துவதற்கு ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா என்ன?

இந்திய படகுகளின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தக் கோரி கடற்றொழிலாளர்களால் 19 ஆம் திகதி உணவு தவிர்ப்புப் போராட்டம்

3 months 2 weeks ago
கையில் சாராயப் போத்தல், மடித்துவிடப்பட்ட காற்சட்டை, சேட் க்கு மேலால் ஒரு கோட் /பிளேசர் . இவர் நிச்சயமாக மீனவர் இல்லை.. அப்படியானால் இவர் யார்? 🥺

கனடாவில் கார் களவு.

3 months 2 weeks ago
இதைத் தான் நானும் நினைத்தேன்.வின் நம்பரை எல்லாம் எப்படி மாற்றுகிறார்கள். கனடாவில் அண்மையில் ஒரே காரை திரம்ப திரும்ப களவெடுத்து திரும்ப திரும்ப வின் நம்பருகளை மாற்றி விற்று கடைசியில் பிடிபட்டிருக்கிறார்கள். எப்படி அதற்கு ரெஜிஸ்ரேசன் செய்கிறார்கள் என்றால் கனடாவில் தனிப்பட்டவர்களுக்கு மோட்டர் வேகிள் திணைக்கள வேலைகளை பகிர்ந்தளிக்கிறார்கள். மேற்படி 3 தடவையும் இலங்கையைச் சேர்ந்தவர்களின் ஏஜென்சியில் பத்திரங்கள் மாற்றப்பட்டு அவர்களும் பிடிபட்டுள்ளனராம். வாகன காப்பீட்டு கம்பனிகள் எப்படியும் கொஞ்சம் கொஞ்சமாக பொதுமக்களிடம் சுரண்டிவிடுவார்கள்.

கனடாவில் கார் களவு.

3 months 2 weeks ago
அமெரிக்காவிலும் பதின்ம வயதுக் காரர்களை வைத்து குற்றக் கும்பல்கள் இப்படி இயங்கி வருகின்றன. துறைமுகங்கள் அதிகம் இருக்கும் கிழக்கு, தென் கிழக்கு, மேற்குக் கரைகளை ஒட்டிய நகரங்கள் தான் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கின்றன. உதாரணமாக, கிழக்குக் கரையின், நியூ ஜேர்சியில் திருடப் படும் வாகனங்கள் எலிசபெத் துறைமுகமூடாக (Sea Port) ஆபிரிக்க நாடுகளுக்குக் கடத்தப் படுவதாக சொல்கிறார்கள். சுங்கப் பரிசோதனை, பாதுகாப்பெல்லாம் இறுக்கமான ஒரு அமெரிக்க துறைமுகத்தினுள் இருப்போரின் ஒத்துழைப்பின்றி இதைச் செய்ய முடியுமென நான் நம்பவில்லை. கனடாவை விட அமெரிக்காவில் நிலைமை கொஞ்சம் பரவாயில்லாமல் இருக்க இங்கே துப்பாக்கி வைத்திருக்கும் ஆட்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது ஒரு காரணம். அண்மையில், வாசிங்ரன் டி.சி யின் புறநகரப் பகுதியில், அதிகாலை சத்தம் கேட்டு விழித்த ஒரு வீட்டுக் காரர், தனது கைத்துப்பாக்கியோடு வெளியே போய்ப் பார்த்த போது, அவரது காருக்கு அருகில் ஒருவரைக் கண்டிருக்கிறார். உடனே வெடி தான், காருக்கு அருகில் நின்றவர் மரணமானார். மரணித்தவர் 15 வயது சிறுவன். ஆதாரங்களைப் பரிசோதித்த காவல் துறை, சுட்ட வீட்டுக் காரரை கைது செய்யக் கூட இல்லை. அதிகாலை 3 மணிக்கு, தன் 15 வயது மகன் வீட்டில் இருக்கிறானா என்று தேடிப் பார்க்க துப்பில்லாத பெற்றோர், சுட்டவரைக் கைது செய்யும் படி ஆர்ப்பாட்டம் செய்தும் எதுவும் நடக்கவில்லை. இப்படியான சம்பவங்கள் ஓரளவுக்கு அமெரிக்காவில் கனடா போன்ற நிலை வராமல் வைத்திருக்கின்றன.

கனடாவில் கார் களவு.

3 months 2 weeks ago
நீங்கள் சொல்வது சரி. இது பரவலாக முழு அமெரிக்கா இங்கிலாந்து என்று நடக்கிறது. எல்லா கார்களிலும் அல்ல. 2010 க்க உள்பட்ட கார்களுக்கு ஏதோ சிறிய பிளாட்டினம் உள்ளே இருப்பதாக சொல்கிறார்கள். இங்கு கார்களவு ரயர் களவு என்பது நல்ல பணக்கார இடங்களில் அதிகாலை 2-4 க்கு அலுவல் நடக்குது.

கனடாவில் கார் களவு.

3 months 2 weeks ago
கூடுதலாக சிறுவர்களே இதில் ஈடுபடுவதாக சொன்னார்கள். நீங்கள் போட்ட புள்ளிகளை தொடுக்கும் போது தான் இதைப்பற்றிய முழு படமும் வருகிறது. முழுமையான தகவல்களுக்கு நன்றி.

கனடாவில் கார் களவு.

3 months 2 weeks ago
பிரச்சனை என்னவென்றால் வாகனக் காப்பீடு இப்பிடி கார் களவு போகும் இடங்களில் வாழ்பவர்களுக்கு வருடா வருடம் கூடிக்கொண்டு போகின்றது. மாசம் $10000 சம்பாதித்தாலும் வாழ்வு என்னவோ வறுமைக் கோட்டுக்கு சற்று மேல்.. அவ்வளவு தான் கனடா வாழ்வு!!😭😭😭

பிறந்த 4 மாதங்களே ஆன குழந்தை இந்தியாவின் புதிய கோடீஸ்வரராக உருவாகியிருக்கிறார்

3 months 2 weeks ago
இன்றைய இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணித்தியாலங்கள் வேலை செய்ய வேண்டும் என்று சில மாதங்களின் முன் இவர் சொல்லியிருந்தார். வாரத்திற்கு 40 மணித்தியால வேலையிலேயே நாங்கள் உக்கி மக்கிப் போகின்றோம் என்று பலர் எதிர்க் கருத்துகள் சொல்லியிருந்தனர். பேரப் பிள்ளைக்கு சும்மாவே 240 கோடிகளை கொடுத்து விட்டார் என்று இப்பொழுது இவரை வைத்து காமடிகள் வரப் போகின்றன.

பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்

3 months 2 weeks ago
உத்தேச பேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே தனது பக்க நிலைப்பாட்டினை இந்தியாவுக்கு தெரிவித்த ஜெயார் கோபாலசாமி பார்த்தசாரதி இந்தியாவின் கொள்கை மாற்றம் குறித்து பிரபாகரன் அனுமானித்திருந்தார் என்று எழுதும் பாலசிங்கம், அதனாலேயே பாரத்தசாரதி தன்னிடம் கூறிய விடயங்களை பிரபாகரனிடம் தான் விபரித்தபோது அவர் அதிர்ச்சியடையவில்லை என்று தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், யுத்தநிறுத்தம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டினை ஏற்றுக்கொள்ள மறுத்த பிரபாகரன், புதிய தாக்குதல்கள் குறித்துச் சிந்தித்து வந்தார். இவ்வாறு பிரபாகரனால் திட்டமிடப்பட்ட தாக்குதல்களில் முதலாவது கொக்கிளாய் இராணுவ முகாம் மீதான தாக்குதலாகும். இது குறித்து மேலே பார்த்தாயிற்று. அடுத்த தாக்குதல் யாழ்ப்பாணத்தின் பிரதான பொலீஸ் நிலையம் மீதானது. இது குறித்து இனிவரும் அத்தியாயங்களில் பார்க்கலாம். அமிர்தலிங்கத்துடனான தனது சந்திப்பு நிறைவடைந்து நான்கு நாட்களின் பின்னர், தை மாதம் 18 ஆம் திகதி (1985), இந்தியாவிற்கான இலங்கையின் தூதுவர் பேர்ணாட் திலகரத்னவை தனது அலுவலகத்திற்கு அழைத்த ராஜீவ் காந்தி, இலங்கையின் இனப்பிரச்சினையினைத் தீர்த்துவைக்க இந்தியா விருப்பம் கொண்டிருப்பதாகக் கூறினார். ஆகவே, ஜெயவர்த்தனவுடன் இதுகுறித்து பேசுவதற்கு சந்திப்பொன்றினை ஒழுங்குசெய்யுமாறு அவர் திலகரத்னவைக் கேட்டுக் கொண்டார். இச்சந்திப்புக் குறித்து ஜெயவர்த்தன அறிந்துகொண்டபோது அதனைத் தவிர்க்க முடிவுசெய்தார். ஆகவே, லலித் அதுலத் முதலியை இலங்கை அரசாங்கத்தின் விசேட தூதுவர் என்கிற பெயரில் இச்சந்திப்பில் கலந்துகொள்ள அனுப்புவதென்று முடிவெடுத்தார். இச்சந்திப்பு 1985 ஆம் ஆண்டு மாசி மாதம் 13 ஆம் திகதி தில்லியில் நடைபெற்றது. அந்த நாளினை இராணுவம் மீது பாரிய தாக்குதல் ஒன்றிற்கான நாளாக பிரபாகரன் குறித்துக்கொண்டார். ரஜீவுடன் சந்திப்பொன்றிற்கான கோரிக்கை விடுக்கப்பட்ட நாளான தை மாதம் 18 ஆம் திகதியிலிருந்து லலித்தை ரஜீவ் சந்தித்த நாளான மாசி மாதம் 13 ஆம் திகதி வரையான காலப்பகுதியை இந்தியாவின் சமாதானத் தூதுவர் பார்த்தசாரதியை விமர்சிக்கவும், மாகாணசபை முறைமையினைக் கோரிவந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை அரசியல் ரீதியாகப் பலமிழக்கப் பண்ணும் கைங்கரியங்களிலும் ஜெயவர்த்தன ஈடுபடலானார். பார்த்தசாரதி மீதான விமர்சனத்தை முன்வைத்த அரச ஊடகங்கள், அவர் ஒரு தமிழர் என்பதால், தமிழர்களுக்குச் சார்பாக நடக்கிறார் என்றும், அவரது மத்தியஸ்த்தத்தினை சிங்களவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் கூறத் தொடங்கின. மேலும், மாவட்ட சபைகளுக்கு மேலதிகமான எந்தத் தீர்வையும் தமிழர்களுக்கு வழங்கச் சிங்களவர்கள் தயாரில்லை என்று அவை எழுதிவந்தன. பிரதமர் பிரேமதாசா, "மாவட்ட சபைகளே, அதற்கு மேல் எதுவும் இல்லை" என்கிற பிரச்சாரத்தைத் தொடர்ச்சியாக நடத்தி வந்தார். நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தைகளில் தமது பக்க கோரிக்கையாகவும், தீர்வாகவும் இவற்றை இந்தியாவுக்கு மறைமுகமாகத் தெரிவிக்க இதனை இலங்கையரசு செய்திருந்தது.
Checked
Fri, 07/05/2024 - 14:33
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed