புதிய பதிவுகள்2

தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்

3 months 2 weeks ago
விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் விருப்பு மனு தாக்கல்! அதிமுக கூட்டணியில் விருதுநகர் தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அத்தொகுதியில் போட்டியிட மறைந்த விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் இன்று விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெறுள்ள தேமுதிகவுக்கு விருதுநகர் உள்பட 5 தொகுதிகள் ஒதுக்கப்படுள்ளது மேலும் விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு அக்கட்சியினருக்கு ஆதரவு வாக்கு அதிகம் கிடைக்கும் என்பதாலும், விஜயகாந்த்தின் சொந்த ஊரான அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமானுஜபுரம் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குள் வருவதாலும், விருதுநகர் தொகுதியை தேமுதிக தேர்ந்தெடுத்துள்ளதாகத் கூறப்படுகின்றது. https://athavannews.com/2024/1374105

மலையக பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க புதிய திட்டம் வகுக்கப்படும்! - வேலு குமார்

3 months 2 weeks ago
21 MAR, 2024 | 11:24 AM மலையக பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க, புதிய திட்டம் வகுக்கப்படவுள்ளதாக இலங்கை பாராளுமன்றத்தின் மலையக ஒன்றியத்தின் தலைவர், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார். இலங்கை பாராளுமன்றத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட மலையக ஒன்றியத்தின் முதலாவது கூட்டம், குழு அறை 8இல் நடைபெற்றது. அதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்கள் மனோ கணேசன், சுஜித் சஞ்சய் பெரேரா மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர். இக்கலந்துரையாடலுக்கு கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளும், கொழும்பு, கண்டி, பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள தமிழ் தேசிய பாடசாலைகளின் பிரதிநிதிகளும் வருகை தந்திருந்தனர். இம்மாவட்டங்களில் அமைந்துள்ள தமிழ் தேசிய பாடசாலைகளில் தற்போது நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பௌதீக வள குறைபாடுகள் பற்றி பேசப்பட்டது. இந்த பிரச்சினைகளுக்கான தீர்வினை கல்வி அமைச்சின் அதிகாரிகள் முன்வைத்தனர். இந்த கலந்துரையாடலின்போது பொதுவாக அனைத்து பாடசாலைகளிலும் உயர்தர வகுப்புக்கான ஆசிரியர் பற்றாக்குறை வெளிப்படுத்தப்பட்டது. குறிப்பாக, கணித, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் இந்த நிலைமை மிக மோசமாக உள்ளது; அதனை நிவர்த்தி செய்ய அவசியமான துறை சார்ந்த ஆசிரியர்கள் இல்லை என்பது தெரியவந்தது. இந்த சந்தர்ப்பத்தில் பிரச்சினைகளிலிருந்து இருந்து மீள்வதற்கு புதியதொரு திட்டத்தை வகுக்கவேண்டிய தேவையுள்ளது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. அதற்கமைய இந்திய அரசாங்கத்துக்கு ஆசிரியர் தேவை பற்றிய திட்டமொன்று தயார் செய்து முன்வைப்பதோடு அவர்களின் ஒத்துழைப்பை பெறுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், மலையக மக்கள் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும், குறைந்தது முழுமையான வசதிகளை கொண்ட ஒரு தேசிய பாடசாலையாவது அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பதையும், அதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டியது மட்டுமன்றி, மலையக மக்கள் அதிகம் வாழ்கின்ற நுவரெலியா மாவட்டத்தில் தேசிய பாடசாலையொன்று இல்லாமை பாரபட்சமானது என்பதையும் அவ்வேளை எடுத்துக்காட்டினார். https://www.virakesari.lk/article/179303

யாழ் இளைஞனை ஏமாற்றிய ஹிங்குராங்கொட பெண் கைது!

3 months 2 weeks ago
யாழ் இளைஞனை ஏமாற்றிய ஹிங்குராங்கொட பெண் கைது! கனடாவிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனிடம் 60 இலட்சம் ரூபாய் மோசடி செய்த ஹிங்குராங்கொட பகுதியை சேர்ந்த பெண்ணை யாழ் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பெண் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இளைஞனிடமிருந்து 60 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டுள்ள போதும் இதுவரையில் பயண ஏற்பாடுகள் எதனையும் அவர் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞன் இது குறித்து யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்தமையை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , குறித்த பெண்ணை கைது செய்து யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது குறித்த பெண் தான் பெற்றுக்கொண்ட பணத்தினை மீள இளைஞனிடம் கையளிக்க தயார் என கூறி முதல் கட்டமாக 4 இலட்ச ரூபாய் பணத்தினை அவரிடம் கையளித்துள்ளமையை அடுத்து அவரை 06 இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. https://athavannews.com/2024/1374202

தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்

3 months 2 weeks ago
நீங்கள் ரூ.50,000-க்கு மேல் எடுத்துச் சென்ற பணத்தை பறக்கும் படை பறிமுதல் செய்தால் மீட்பது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 20 மார்ச் 2024 மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. ரூ.50,000-க்கு மேல் ஆவணமின்றி எடுத்துச் சென்றால் அது தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படும். அப்படி நடந்தால் அதனைத் திரும்பப் பெறுவதற்கான விழிமுறைகள் என்ன? அதேவேளையில் மக்கள் கையில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட ரொக்கத்தை ரூ.50,000-இல் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்த வணிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர். இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுவது என்ன? என்னென்ன விதிகள் அமலில் உள்ளன? தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நன்நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 3 குழுக்கள் வீதம் 702 தேர்தல் பறக்கும் படை குழுக்கள் மற்றும் 702 நிலையான நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தக் குழுக்கள் எட்டு மணி நேரம் என்ற அடிப்படையில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்கணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி அரசு கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை அகற்றுவது, சுவொட்டிகள், சுவர் ஓவியங்களை வண்ணம் பூசி மறைப்பது, தலைவர்களின் சிலைகளை மறைப்பது போன்ற பணிகளை மாநிலத் தேர்தல் அதிகாரியின் உத்தரவின் பேரில் மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் அரசு அலுவலர்களை வைத்து செயல்படுத்தி வருகின்றனர். இதில், குறிப்பாக அரசியல் கட்சிகள் வாக்காளர்களின் வாக்குகளை விலைக்கு வாங்க பணம் கொடுப்பதை தடுப்பதற்காக சிறப்பு தேர்தல் பறக்கும் படை (Flying Squad Teams), நிலையான கண்காணிப்புக் குழுக்கள் (Static Surveillance Teams) அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் இந்தியத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கிய ரூ.50,000-த்தை விட அதிகமாக பணம், நகை அல்லது பொருட்களை ஆவணமின்றி எடுத்துச் சென்றால் அதனை பறிமுதல் செய்வார்கள். படக்குறிப்பு, இந்தியத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கிய ரூ.50,000-த்தை விட அதிகமாக பணம், நகை அல்லது பொருட்களை ஆவணமின்றி எடுத்துச் சென்றால் அதனை பறிமுதல் செய்யப்படும் 'தேர்தல் நடத்தை விதியால் சிறு, குறு தொழில் பாதிப்பு' இந்நிலையில் இந்தக் குழுக்கள் பெரும்பாலும் சிறு, குறு வியாபாரிகள் பொருட்கள் வாங்குவதற்காக எடுத்துச் செல்லும் பணத்தையே பறிமுதல் செய்கின்றனர் எனவும், இதனால் வியாபாரிகளின் தொழில் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழத் துவங்கி இருக்கின்றன. தேர்தல் நடத்தை விதியால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்படும் என்கிறார் வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ரத்னவேல். இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்திருப்பதால் காவல்துறையினர், தேர்தல் அதிகாரிகள் சரக்குகளை சோதனை செய்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டாலும் சிறு, குறு வியாபாரிகள் அவர்களது தொழிலுக்குத் தேவையான பொருட்களை வாங்க எடுத்துச் செல்லும் பணத்தை் தேர்தல் விதி மீறல், ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட பணம் எனச் சொல்லி பறிமுதல் செய்கின்றனர், என்றார். “பெரிய முதலாளிகள் மட்டுமே வங்கிக் கணக்கின் வழியாக பணப் பரிவர்த்தனைகள் செய்வார்கள். ஆனால், சிறு வணிகர்கள் நேரடியாக பணத்தை கொண்டு சென்றால்தான் பொருட்களை கொள்முதல் செய்ய முடியும். அதற்கு எப்படி அவர்கள் ஆவணத்தை காண்பிக்க முடியும்,” என அவர் கேள்வி எழுப்புகிறார். படக்குறிப்பு, வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ரத்னவேல் 'தெளிவான அறிவிப்பு இல்லாததால் குழப்பம்' தொடர்ந்து பேசிய அவர் “எது ஆவணமின்றி எடுத்துச் செல்லப்படும் பணம் என்பது குறித்த சரியான தகவல் தேர்தல் ஆணையத்திடமிருந்து அதிகாரிகளுக்குச் சென்று சேரவில்லை. அவர்கள் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பத்தை தடுக்கும் பணியை செய்யாமல் வியாபாரிகளின் பணத்தை பிடித்து வருகின்றனர்,” என்றார். மேலும், “நாங்கள் எங்களது லெட்டர் பேடில் இவ்வளவு தொகையை கொண்டுச் செல்கிறோம் என டைப் செய்து எடுத்துச் செல்கிறோம். அதனை சில தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக் கொள்கிறார்கள். சிலர் அனைத்து ஆவணமும் இருந்தாலும் பிடித்துச் சென்று பின்னர் ஆவணத்தை வந்து காண்பித்து பெற்றுச் செல்லச் சொல்கிறார்கள்,” என்றார். தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை மேலும் இது குறித்து பேசிய ரத்னவேல், “இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும், தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கும் எங்களது சங்கத்தின் சார்பில், வணிகர்கள் பொருட்களை வாங்குவதற்கான கூடுதல் பணத்தை எடுத்துச் செல்ல வழிமுறைகளை வகுக்க வேண்டும் எனவும், ஒரு லட்சம் ரூபாய் வரை ஆவணமின்றி ரொக்கத்தை கையில் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் கோரிக்கை முன் வைத்திருக்கிறோம்,” என்றார். “தமிழ்நாட்டில் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதியுடன் நிறைவடைவதால் அதற்குப் பிறகாவது தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்த வேண்டும். தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் எல்லைகளில் தேர்தலுக்கான நடத்தைகளை பின்பற்றலாம்,” என்றார். படக்குறிப்பு, மதுரை ஜூவல்லர்ஸ் மற்றும் புல்லியன் சங்கத்தின் செயலாளர் பி.கர்பூரம் ‘தேர்தல் சமயத்தில் தங்கம் வியாபாரம் 10% குறையும்’ இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மதுரை ஜூவல்லர்ஸ் மற்றும் புல்லியன் சங்கத்தின் செயலாளர் பி.கர்பூரம், தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி ரூ.50,000-க்கு மேல் ரொக்கமாக எடுத்து வர முடியாததால் தங்க வியாபாரம் பாதிப்பு அடையும். முன்பு 30% வியாபாரம் நடைபெற்றால் இனி தேர்தல் சமயத்தில் அது 10% குறைந்து விடும், என்றார். தங்க நகைக்கடை வியாபாரத்தில் ஒரு கடையில் இருந்து மற்றொரு கடைக்கு உரிய ஆவணங்களை வைத்துதான் நகைகளை எடுத்துச் செல்வார்கள். அப்படித்தான் மார்ச் 17-க்குள் கொரியர் வழியாக மதுரைக்கு தங்கம் வந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால், உரிய ஆவணம் இல்லை என அதிகாரிகள் கூறி பிடித்ததாக கூறுகின்றனர். தங்க நகை வைத்திருப்பவர்கள் அதற்கான அடையாள அட்டையை காண்பித்தால் அதிகாரிகள் ஆவணம் இருக்கும் பட்சத்தில் அதனை அனுப்பி வைக்க வேண்டும் என்றவர், இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார். “இதற்கு ஒரு முறையான வழிமுறையை தேர்தல் ஆணையம் கூற வேண்டும். இல்லையென்றால் மொத்தமாக தொழில் முடங்கும் சூழல் ஏற்படும்,” என்றார். படக்குறிப்பு, திருநெல்வேலி மாவட்டத் தேர்தல் அதிகாரியான கா.ப. கார்த்திகேயன் எந்தெந்த ஆவணங்களை காண்பித்து பணத்தை திரும்பப் பெறலாம்? தேர்தல் பறக்கும் படையினரால் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் அதனை எவ்வாறு மீட்கலாம் என்பது குறித்த கேள்வியை பிபிசி தமிழ் திருநெல்வேலி மாவட்டத் தேர்தல் அதிகாரியான கா.ப. கார்த்திகேயனிடம் முன்வைத்தது. அதற்கு பதிலளித்த அவர், பறிமுதல் செய்யப்பட்ட பணமோ பொருளோ ரூ.10 லட்சத்திற்குள் மதிப்பிடப்பட்டால் அவை மாவட்டக் கருவூலத்தில் வைக்கப்படும், என்றார். “அதற்கு மேல் மதிப்புள்ள பணம் அல்லது பொருட்கள் பிடிபட்டால் அதனை தேர்தல் அதிகாரிகள் வருமான வரிதுறையினரிடம் சமர்ப்பித்து விடுவார்கள்,” என்றார். “சம்பந்தப்பட்ட நபர் அல்லது நிறுவனம் அதற்கான உரிய ஆவணங்களை வருமான வரி துறையினரிடம் காண்பித்து தங்களுடைய பொருள்களை பெற்றுக் கொள்ளலாம்," என்றார். விவசாயிகள் வியாபாரிகள் என்ன செய்ய வேண்டும்? தொடர்ந்து பேசிய அவர் "ஒரு விவசாயி நெல் கொள்முதல் நிலையத்தில் தனது நெல் மூட்டைகளை விற்று ரொக்கமாக வைத்திருந்து பிடிபட்டால் அவரிடம் நெல் கொள்முதல் நிலையத்தில் கொடுத்ததற்கான ரசீது இருக்கும். அதனை காண்பிக்கலாம் காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்த பின்பு தொகை மீண்டும் வழங்கப்பட்டும்,” என்றார். “அதேபோல், மக்கள் ரூ.50,000-க்கு மேல் கொண்டு செல்லும் போது பிடிபட்டால் அவர்கள் தங்களுடைய வருமான வரி கணக்கினை காண்பித்து பணத்தினை பெற்றுக் கொள்ளலாம்,” என்றார். மேலும் பேசிய அவர், வியாபாரிகள் தேர்தல் சமயத்தில் கூடுமானவரை ரூ.50,000-க்கு குறைவான பணத்தை எடுத்துச் செல்லலாம், அல்லது வங்கிப் பண பரிவர்த்தனைகள் மூலமாக தங்களது தொழிலை மேற்கொள்வது நல்லது, என்றார். “தேர்தல் விதி என்பது அனைவருக்கும் பொதுவானது அதனை பின்பற்ற வேண்டும்," என்றார். https://www.bbc.com/tamil/articles/cd187gnnn7qo

தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்

3 months 2 weeks ago
அ.தி.மு.கவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிமுகம் – பிரசார மேடையில் ஏறும் எடப்பாடி! அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 16 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று அறிவித்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலையும் இன்று அறிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று முதல் ஆரம்பமானது. இந்த தேர்தலில் அ.தி.மு.க, தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ., புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றது. அதன்படி, தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகளும், எஸ்.டி.பி.ஐ. மற்றும் புதிய தமிழகம் கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 33 தொகுதிகளிலும் அதிமுக நேரடியாக தேர்தலை சந்திக்கவுள்ளது. இதற்கிடையே, அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, எடப்பாடி பழனிசாமி எதிர்வரும் 24 ஆம் திகதி மாபெரும் பிரசாரமொன்றை திருச்சியில் ஆரம்பிக்கவுள்ளார். இந்த பிரசார கூட்டத்தில் தமிழகம், புதுவையில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டொக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். அதன் தொடர்ச்சியாக 26 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1374196

அவுஸ்திரேலியா செல்லவுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு!

3 months 2 weeks ago
வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விதிமுறைகளை இந்த வாரம் முதல் கடுமையாக்க அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவிற்கு வந்துள்ள குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக சமீபத்திய தரவுகளின் பின்னணியில் அவர்கள் அந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர். குடியேற்றவாசிகளின் வருகை அதிகரிப்பால், நாட்டின் வாடகை வீட்டுச் சந்தையின் போட்டித்தன்மை எதிர்பாராத வகையில் வளர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. பட்டதாரி விசாக்கள் மற்றும் மாணவர் விசாக்களுக்கான ஆங்கில மொழித் தேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச மாணவர்களுக்கு உணவு வழங்கும் நிறுவனங்கள் தொடர்ந்து விதிகளை மீறினால் அவற்றை இடைநிறுத்துவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/296581

3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!

3 months 2 weeks ago
என்ன உங்களுக்கு செலெக்ட்டிவ் அம்னீசியாவா? ஏதோ கௌத்தி தீவிரவாதிகள் கப்பல்களை தாக்குவதால் மட்டும்தான் உலகில் பொருட்களின் விலைகள் கூடுகின்றன என்று அடித்துவிட்டீர்கள். ஈரான் பிரச்சனை, உக்ரைன் பிரச்சனை இதையெல்லாம் நடத்தியது யார்? இதனால் பொருட்களின் விலைகள் மேற்கில் கூடவில்லையா?

இந்திய படகுகளின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தக் கோரி கடற்றொழிலாளர்களால் 19 ஆம் திகதி உணவு தவிர்ப்புப் போராட்டம்

3 months 2 weeks ago
தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டம்; ஒருவர் நிலை கவலைக்கிடம் எழிலன் இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டைக் கண்டித்து யாழ். மாவட்ட மீனவர்கள் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது. யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனத்தினரும், யாழ். மாவட்ட கடற்றொழில் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத்தினரும் இணைந்து கடந்த 19 ஆம் திகதி காலை முதல் யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்துக்கு முன்பாக உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். செல்லத்துரை நற்குணம், அன்ரன் செபராசா, சின்னத்தம்பி சண்முகராஜா மற்றும் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் ஆகிய நான்கு மீனவர்களே உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் மூன்றாவது நாளாகவும் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஒரு மீனவரின் உடல் நிலை தற்போது கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மீனவர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்றையதினம் யாழ். தையிட்டி அன்னை வேளாங்கன்னி கடற்றொழில் சங்கத்தினர் கலந்து கொண்டுள்ளனர்.(க) https://newuthayan.com/article/தொடரும்_உணவு_தவிர்ப்பு_போராட்டம்;_ஒருவர்_நிலை_கவலைக்கிடம்

பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்

3 months 2 weeks ago
மாவட்டங்களை இணைத்து மாகாணங்களை உருவாக்குவதோ, மாவட்டங்களுக்கு சட்டம் ஒழுங்கு அதிகாரங்களை வழங்குவதோ தேவையற்றது ‍- ரஜீவ் காந்தி மிகுந்த விவாத் திறமை கொண்டவரான லலித் அதுலத் முதலி, ஜெயவர்த்தனவின் வாழ்த்துக்களுடன் ரஜீவைச் சந்தித்து, சர்வதேச அளவில் மிகப் பெரும் தலைவராக ரஜீவ் வருவார் என்று ஜெயார் வாழ்த்தியதாகவும் தெரிவித்திருந்தார். அவர் கூறியவாறே ரஜீவ் பாராளுமன்றத் தேர்தலில் பெருவெற்றி பெற்றிருந்தார். மேலும், நேருகுடும்பத்தின் நெருங்கிய நண்பன் என்கிற ரீதியில் ரஜீவிற்கு ஜெயவர்த்தன வழங்கிய ஆலோசனைகளைச் செவிமடுத்ததற்காகவும் அவருக்கு லலித் நன்றி கூறினார்.அடுத்ததாக‌, இதுவரை காலமும் இந்தியா இலங்கை தொடர்பாகக் கைக்கொண்ட நடைமுறை காரணமாக சிங்கள மக்களிடையே இந்தியா ஆக்கிரமிப்பில் இறங்கப்போகிறது என்கிற எண்ணம் வேரூன்றி பெரு விருட்சமாக வளர்ந்து விட்டிருப்பதாகவும் கூறினார். ஜெயாரும், லலித்தும் விரித்த வலையில் ரஜீவ் வீழ்ந்து போனார். இலங்கை மீது இந்தியா எக்காலத்திலும் ஆக்கிரமிப்பில் ஈடுபடாது என்று லலித்திடம் உத்தரவாதம் அளித்தார் ரஜீவ். இதன் மூலம் ஜெயவர்த்தனவைக் கட்டுக்குள் வைத்திருக்க அதுவரை தான் கொண்டிருந்த சாட்டையினை இந்தியா இழந்தது. அதன் பிறகு தனது இரண்டாவது கோரிக்கைகள் குறித்துப் பேச்சை ஆரம்பித்தார் லலித். பேச்சுவார்த்தைகளை புதிதாக ஆரம்பிப்பதும், பார்த்தசாரதியை பேச்சுக்களில் இருந்து முற்றாக அகற்றுவதும் தான் அவை. லலித் எதிர்பார்த்திருந்த சந்தர்ப்பத்தை ரஜீவே அவருக்கு வழங்கினார். சர்வகட்சி மாநாட்டினை ஜெயார் திடீரென்று கலைத்துப்போட்டது தொடர்பான இந்தியாவின் ஏமாற்றம் குறித்து ரஜீவ் பேசியபோது, சிங்கள மக்களின் பங்களிப்பும், ஆதரவுமின்றி சர்வகட்சி மாநாட்டினைத் தொடர்ந்து நடத்துவது இயலாத காரியம் என்று லலித் கூறினார். எதிர்க்கட்சித் தலைவியான சிறிமாவின் நடவடிக்கைகள் சர்வகட்சி மாநாட்டினை ஸ்த்தம்பித நிலைக்குக் கொண்டுவந்திருப்பதாக லலித் கூறினார். மேலும் சிங்கள மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத தீர்வினை பார்த்தசாரதி ஜெயார் மீது திணிப்பதாக லலித் குற்றஞ்சாட்டினார். சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வு ஒன்றுபற்றி கலந்தாலோசிக்க புதிதாக பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் பார்த்தசாரதி மிகவும் நெருங்கிச் செயற்பட்டு வருவதாக சிங்கள மக்கள் நம்புவதாகவும், ஆகவே புதிய பேச்சுவார்த்தைகளில் சிங்கள மக்கள் நம்பிக்கை கொள்ளவேண்டுமானால் பார்த்தசாரதி பேச்சுக்களில் கலந்துகொள்ளக் கூடாது என்றும் லலித் வாதிட்டார். ரஜீவினால் நியமிக்கப்பட்ட இந்தியாவின் புதிய வெளியுறவுச் செயலாளர் ரொமேஷ் பண்டாரி - ஐப்பசி 31, 1985 லலித் கேட்டுக்கொண்டபடியே பேச்சுவார்த்தைகளைப் புதிதாக ஆரம்பிக்க ஒத்துக்கொண்ட ரஜீவ், அவை நடுநிலையானவையாகவும், இலக்கை அடையும் நோக்கிலும் நடைபெறும் என்று உத்தரவாதம் அளித்தார். மேலும், தனது புதிய வெளியுறவுச் செயலாளரான ரொமேஷ் பண்டாரியே பேச்சுவார்த்தைகளுக்கு பொறுப்பாக இருப்பார் என்றும் கூறினார். ஜெயாருடன் தொடர்பாடுவது குறித்து பார்த்தசாரதி தன்னிடம் தெரிவித்த கருத்துக்களையும், எச்சரிக்கைகளையும் ரஜீவ் முற்றாக நிராகரித்ததுடன், அவரை அரசியல் விவகார குழுவிற்கு இடமாற்றம் செய்தார். ஜெயவர்த்தனவை சிறிதும் நம்பாத பார்த்தசாரதி, கிளட்டு நரியின் கபடத்தனம் குறித்து ரஜீவ் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று முன்னர் கூறியிருந்தார். ஆனால், ஜெயவர்த்தனவை மிகச் சிறந்த இராஜதந்திரியென்றும், உண்மையான பெளத்தன் என்றும் எடைபோட்ட ரஜீவ், பார்த்தசாரதியின் எச்சரிக்கையினை எள்ளளவும் கண்டுகொள்ளவில்லை. லலித்திடம் பேசிய ரஜீவ், ராணுவத்தினரின் பிரசன்னத்தை தமிழர் பகுதிகளில் குறைத்து, அவர்களால் மேற்கொள்ளப்படும் படுகொலைகளை நிறுத்தி, தமிழர்களுக்கு ஓரளவிற்கான தன்னாட்சி அதிகாரத்தை வழங்குவது இலங்கைக்கு நண்மை பயக்கும் என்று கூறினார். தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல்த் தீர்வுகுறித்து ரஜீவும் லலித்தும் நீண்டநேரம் பேசினார்கள் என்று கூறப்படுகிறது. ரஜீவுடன் பேசும்போது தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் கோரும் மாகாணசபைகளை வழங்கும் நிலையில் தமது அரசாங்கம் இல்லையென்று லலித் கூறினார். மாவட்ட சபைகளே அரசாங்கத்தல் வழங்கப்படக் கூடிய அதிகபட்ச அதிகார அலகு என்று கூறிய லலித், தேவையேற்படின் மாவட்ட சபைகளுக்கான அதிகாரங்களை மீள்பரிசீலினை செய்ய அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் கூறினார். லலித்தின் கூற்றுடன் ஒத்துப்போன ரஜீவ், மாவட்டங்கள் ஒன்றாகச் சேர்ந்து மாகாணங்களாக உருவாக்கவேண்டிய தேவை இல்லை என்று கூறியதுடன், சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் பொறுப்பினை அவற்றிற்குக் கொடுக்கவேண்டிய தேவையும் இல்லையென்று கூறினார். "லலித் அதுலத் முதலியைப் பொறுத்தவரை, மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பாக இந்திரா காந்தி கொண்டிருந்த அறிவைக் காட்டிலும், ரஜீவ் காந்தி பரந்துபட்ட அறிவைக் கொண்டிருந்தார்.மேலும், மாவட்ட சபைகள் ஒன்றிணைக்கப்பட்டு மாகாணங்களாகச் சேர்க்கப்படுதல் அவசியமில்லையென்கிற நிலைப்பாட்டையும் ரஜீவ் ஏற்றுக்கொண்டார். இதன்மூலம், இலங்கை அரசாங்கத்தின் தீர்வு தொடர்பான நிலைப்பாட்டுடன் ரஜீவ் ஒத்துப் போவதும், பார்த்தசாரதியின் நிலைப்பாட்டிலிருந்து அவர் விலகிச் செல்வதும் தெரிந்தது. மேலும், லலித்தும் ரஜீவும் மாவட்ட சபைகளுக்கான அதிகாரங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்தினைக் கொண்டிருந்தார்கள். மேலும், இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டைப் போன்றே மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் கொடுக்கப்படத் தேவையில்லை என்ற நிலைப்பாட்டினை ரஜீவும் கொண்டிருந்தமை லலித்திற்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தது. மேலும், பஞ்சாப் விவகாரத்தில் இந்தியா இதே தவறை இழைத்திருந்தது என்றும், ஆகவே இனிமேல் இவ்வாறான தவறுகள் ஏற்படாது என்று ரஜீவ் உறுதியளித்தார்" என்று ஜெயவர்த்தனவின் சுயசரிதையினை எழுதிய கே.எம்.டி.சில்வாவும், ஹவார்ட் ரிக்கின்ஸும் குறிப்பிட்டிருக்கிறார்கள். பொதுமக்கள் கொலைகள் குறித்து இலங்கை அரசாங்கத்தை தான் எச்சரித்ததாக ரஜீவ் காந்தி லொஸ் ஏஞ்ல்ஸ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். "நீங்கள் பயங்கரவாதிகளைக் கொல்லலாம், அது பரவாயில்லை, ஆனால், பயங்கரவாதிகள் அல்லாத பொதுமக்களைக் கொல்லும்போது இந்தியாவில் ஏற்படும் உணர்வுகள் குறித்து நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பொதுமக்கள் கொல்லப்படும் வேளை எம்மால் உதவுவது கடிணமாக இருக்கும் என்று லலித்திடம் நான் கூறினேன்" என்று ரஜீவ் மேலும் தெரிவித்தார்.

இந்திய படகுகளின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தக் கோரி கடற்றொழிலாளர்களால் 19 ஆம் திகதி உணவு தவிர்ப்புப் போராட்டம்

3 months 2 weeks ago
ஈழப்பிரியன், சரியான ஆளிடம்தான் கேள்வி போய் இருக்கிறது. ஈழத்தமிழர் மேல் கரிசரனை உள்ள ஒருவர். ஈழத்தமிழர் போராட்டத்தை முன்னிருத்தி அரசியல் செய்பவர். பிரபாகரனை தலைவராக ஏற்றுக் கொண்டவர். யேர்மனிக்கு வந்து மாவீரர் தினத்தை சிறப்பித்தவர்….. என்று பல விடயங்கள் இவரிடம் இருக்கின்றன.

இந்திய படகுகளின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தக் கோரி கடற்றொழிலாளர்களால் 19 ஆம் திகதி உணவு தவிர்ப்புப் போராட்டம்

3 months 2 weeks ago
சாதாரண ஒரு ‘குடி’மகன் தவறு. தண்ணீரில் பிழைக்க வந்தவர்கள் என்பதுதான் சரியாக இருக்கும், புத்தன். எம்ஜிஆர் படப் பாடல் ஒன்று இப்படி இருக்கிறது ”தரைமேல் பிறக்க வைத்தான் - எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்….”
Checked
Fri, 07/05/2024 - 14:33
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed