புதிய பதிவுகள்

சதாம் ஹூசேனின் சித்திரவதை முகாமில் பணியாற்றிய மருத்துவருக்கு பிரித்தானியாவில் அடைக்கலம்

1 day 20 hours ago
சதாம் ஹூசேனின் சித்திரவதை முகாமில் பணியாற்றிய மருத்துவருக்கு பிரித்தானியாவில் அடைக்கலம் ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹூசேன் காலத்தில் சித்திரவதை முகாமில் பணியாற்றிய மருத்துவர் ஒருவருக்கு பிரித்தானியா அடைக்கலம் அளித்துள்ளது. 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சதாம் ஹூசைனின் சித்திரவதை முகாம் ஒன்றில், மருத்துவராக செயல்பட்ட 54 வயதான MAB என அறியப்படும் ஒருவருக்கே இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் மீது மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு துணை போனார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 1995 ஆம் ஆண்டு லிபியாவிற்கு குடிபெயர்ந்து அங்கிருந்து கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியேறினார். தொடர்ந்து கடந்த 2007 ஆம் ஆண்டு பிரித்தானியா அரசாங்கத்திடம் அடைக்கலம் கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால் முன்னாள் ஜனாதிபதி சதாமின் சித்திரவதை முகாமில் பணியாற்றியவர் என்ற ஒரே காரணத்தால் அவருக்கு அடைக்கலம் மறுக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்றம், அவர் மீதான குற்றச்சாட்டடு பற்றி எந்த ஆதாரமும் இல்லை என தீர்ப்பு வழங்கியது. இருந்த போதும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு துணை போனவர் என்ற ஒரே காரணத்தால் பிரித்தானியா அவருக்கு அடைக்கலம் வழங்குவதை தொடர்ந்து நிராகரிதது வந்துள்ளது. சதாமின் சித்திரவதை முகாம்களின் கடுமையாக நடத்தப்படும் நபர்களில் சிலருக்கு இவர் சிகிச்சை அளித்து வந்துள்ளார். அவர்களை அங்குள்ள அதிகாரிகள் மீண்டும் சித்திரவதைக்கு உட்படுத்தியும் உள்ளனர். இதனிடையே கடந்த 2015 ஆம் ஆண்டு குடிவரவு தீர்ப்பாயம் ஒன்றில் தனது நிலைமை குறித்து விளக்கமளித்த குறித்த மருத்துவர், கட்டாயத்தின் பேரிலேயே தன்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறி, அதில் வெற்றியும் பெற்றார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அப்போதைய உள்விவகாரத்துறை செயலாளர் தெரேசா மே, இந்த விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கவும், கட்டாயப்படுத்தியதாக கூறப்பட்ட கருத்தை ஏற்க மறுத்தது மற்றொரு தீர்ப்பாயம். ஆனால் தற்போது மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வானது ஈராக்கிய மருத்துவருக்கு சாதகமாக தீர்ப்பு அளித்துள்ளதுடன், அவருக்கு அடைக்கலம் வழங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. ஈராக்கிய அதிகாரிகளின் தகவலின் அடிப்படையில், 1980 முதல் 1990 வரையான பத்தாண்டு காலகட்டத்தில் சதாம் ஹூசைன் ஆட்சியின் கீழ் சுமார் 10 மில்லியன் மக்கள் காணாமல் போனதாக தெரியவந்துள்ளது. http://athavannews.com/சதாம்-ஹூசேனின்-சித்திரவத/

சைவ சமயத்துக்கு தலைமைப்பீடம் அவசியம்

1 day 22 hours ago
சைவசமயம் என்றால் என்ன? இது இந்துசமயத்துக்குள் இல்லையா? இந்து மதத்துக்கு ஏற்கனவே ஆர் ஸ் ஸ் வாரியர்கள் அவர் இவர் என்று பல தலைவர்கள் இருக்கிறார்கள் தானே? ஏன் இப்ப இவர்கள் தணிக்கவாடி ஆட நிற்கிறார்கள்?

விலங்குகள்: 40,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கரடி இனம் அழிய மனிதர்கள் காரணமா?

1 day 22 hours ago
நாற்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், ஐரோப்பாவில் முற்கால மனிதர்களின் வருகையும், குகைக் கரடிகளின் அழிவும் சம காலத்தில் நடைபெற்றுள்ளது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கரடியை வேட்டையாடிய மனிதர்கள், குகைளில் இருந்து அவற்றை விரட்டி, அந்த இனம் அழிந்துபோக வழிவகுத்த வகையில் திறந்தவெளியில் விட்டுவிட்டதை புதிய சான்றுகள் சுட்டுகின்றன. பனிக் காலத்தின் கடைசி பகுதியின் தொடக்கம், உணவு ஆதாரங்கள் குறைதல் போன்ற பிற காரணங்களாலும் இந்த உயிரினங்களின் வாழ்வு முடிவுக்கு வந்துள்ளது. 24 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், குகைக் கரடி இனம் படிப்படியாக அழிந்தது. "40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி, குகைக் கரடியின் எண்ணிக்கை அதிக அளவு குறைந்து வந்திருப்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். இது ஐரோப்பாவில் நவீன மனிதர்கள் தோன்றி காலமாகும்," என்று இந்த ஆய்வை வழிநடத்திய சூரிச் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் விரினா ஷுனேமன் கூறியுள்ளார். குகைக் கரடி இனம் அழிந்து போவதற்கு மனிதர்கள் முக்கிய பங்காற்றி இருக்கலாம் என்பதற்கு இது மிகவும் தெளிவான சான்றாக இருக்கலாம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். குகைக் கரடி என்பது என்ன? குகைக் கரடி என்பது ஆசியா மற்றும் ஐரோப்பாவில் வாழ்ந்த கரடி வகைகளில் ஒன்றாகும். நவீன கால பிரவுண் கரடியும், முற்கால குகை கரடியும் பொதுவான மூதாதையரை கொண்டிருந்தன. குகைக் கரடி மாமிசம் சாப்பிடாமல் காய்கறிகளை உண்டு வாழ்ந்தது. இந்த உயிரினத்தின் புதைபடிவங்கள் குகைகளில் பொதுவாக கண்டெடுக்கப்பட்டன. இதன் மூலம் தூக்கத்திற்கு மட்டுமல்லாமல் அதிக நேரம் இந்த விலங்குகள் குகைகளில் கழித்துள்ளது தெரியவருகிறது. இந்த ஆய்வில் கண்டறியப்பட்டவை? சுவிட்சர்லாந்து, போலந்து, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி இத்தாலி மற்றும் செர்பியாவில் இருந்து சேகரிக்கப்பட்ட குகைக் கரடிகளின் எலும்புகளில் இருந்து எடுக்கப்பட்ட சைட்டோபிளாஸில் ஒரு கோள அல்லது நீளமான உறுப்பின் (மைட்டோகாண்ட்ரியல்) டி.என்.ஏ-வை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இதன் காரணமாக, குகை கரடிகள் எங்கு வாழ்ந்தன, பூமியில் அதிக பாலூட்டிகள் வாழ்ந்தபோது அவற்றின் பன்முகத்தன்மை பற்றிய வரைவை அவர்களால் உருவாக்க முடிந்தது. முன்னர் நினைத்ததைவிட அதிக எண்ணிக்கையில் குகைக் கரடிகள் காணப்பட்டதாகவும், இரண்டு பனிக் காலங்களையும், பல குளிரான நிகழ்வுகளையும் சகித்து வாழ்ந்த இவற்றின் எண்ணிக்கை, சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை ஓரளவு நிலையான இருந்ததாகவும் தோன்றுகிறது. குகைக் கரடிகள் அழிவதற்கு மனித பாதிப்புகள் முக்கிய பங்காற்றின என்கிற கருத்துக்கு இந்த ஆய்வு முடிவுகள் வலுசேர்க்கின்றன. மனித தலையீடு, சுற்றுச்சூழல் மாற்றங்கள் அல்லது இவை இரண்டு கலந்த காரணங்கள் உள்பட இது பற்றிய விளக்கங்களோடு, குகைக் கரடியின் அழிவு என்பது பெரும் விவாதத்திற்குரிய விடயமாகும். ‘சையின்டிஃபிக் ரிப்போட்‘ சஞ்சிகையில் வெளியிடப்பட்ட சமீபத்திய இந்த ஆய்வு இது பற்றிய ஆழமான பார்வையை அளிக்கிறது. ஆனால், இந்த ஆய்வில் உள்ளபடி இதுதான் அந்தக் கரடி இனத்தின் அழிவுக்கு இறுதியான காரணம் என்பது மாறக்கூடும். https://www.bbc.com/tamil/science-49381909

உண்மையை கூறிவிட்டு கோட்டா தேர்தலில் நிற்கட்டும்

1 day 22 hours ago
Monday, August 19, 2019 - 6:00am இறுதி யுத்தத்தின் போது சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை பகிரங்கமாக தெரிவித்துவிட்டு கோட்டாபய தேர்தலில் போட்டியிடட்டும் என வன்னி எம்.பி. சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில்நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ஒரு கட்சியினர் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்துள்ளனர். ஒரு இனம் இன்னொரு இனத்தால் படுகொலை செய்யப்பட்ட நாள் மே 18. அத்தனை விடயங்களும் நடந்த போது இராணுவத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த ஒருவர் அதற்கான பொறுப்புக் கூறலை முதலில் தெரியப்படுத்த வேண்டும். அங்கு வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். குடும்ப உறுப்பினர்களுடன் பாலகுமாரன், யோகி மற்றும் கவிஞர் ஒருவரும் சரணடைந்திருக்கின்றார்கள். வெளிப்படையாக அவர்களின் குடும்பங்கள் முன்னிலையிலேயே அவர்கள் சரணடைந்துள்ளார்கள். நூற்றுக்கணக்கானோர் ஒரு கிறிஸ்தவ மதகுருவுடன் சேர்ந்து சரணடைந்தார்கள். எனவே அவ்வாறு சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்தி விட்டு கோட்டாபய வாக்குக் கேட்டு தேர்தலில் நிற்க வேண்டும் என்றார். https://www.thinakaran.lk/2019/08/19/உள்நாடு/38898/உண்மையை-கூறிவிட்டு-கோட்டா-தேர்தலில்-நிற்கட்டும்

97ஆவது தேசிய மெய்­வல்­லு­நரில் தங்கம் வென்ற சண்­மு­கேஸ்­வரன்: சாதனை பயணம் பற்றி கூறியதென்ன..?

2 days ago
தேசிய மெய்வல்லுநர் போட்டியில் நிமாலி தேசிய சாதனை (சுகததாச அரங்கிலிருந்து எம்.எம்.சில்ஸெ்டர்) 97 ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டியில் பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற நிமாலி லியனாராச்சி தேசிய சாதனையுடன் முதலிடம் வென்றார். இதுவே இதுவரை பதிவான ஒரேயொரு இலங்கை சாதனையாகும். ஐக்கிய அமெரிக்காவிலிருந்து இலங்கை வந்த மரதன் ஓட்ட வீராங்கனையான ஹிருனி விஜேரட்ண பெண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப்போட்டியில் 35 நிமிடங்கள் 30 செக்கன்களில் ஓடி முதலிடம் பிடித்தார். கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் கடந்த வெள்ளின்று ஆரம்பமான 97 ஆவது தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டி இன்றைய தினத்துடன் நிறைவடைகிறது. தேசிய சாதனை படைத்த நிமாலி பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் சிறப்பாக ஓடிய நிமாலி லியனாராச்சி புதிய தேசிய சாதனையுடன் முதலிடம் பிடித்தார். இவர் இப்போட்டித் தூரத்தை 4 நிமிடங்கள் 15.89 செக்கன்களில் நிறைவு செய்ததன் மூலம், 2012 ஆம் ஆண்டு சம்பிக்கா தில்ருக்சியால் ஏற்படுத்தப்பட்ட 4 நிமிடங்கள் 16.42 செக்கன்கள் என்ற தேசிய சாதனையை முறிடித்தார். இப்போட்டியில் இரண்டாம் இடத்தை கயன்திகா அபேரட்ணவும் (4 நிமி.22.24 செக்.), முன்றாம் இடத்தை கே.ஏ. குமாரியும் (4 நிமி.49.77 செக்.), பெற்றுக்கொண்டனர். முப்பாய்ச்சலில் சப்ரினுக்கு முதலிடம் போட்டியின் முதல் நாளான வெள்ளியன்று நடைபெற்ற ஆண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் சப்ரின் அஹமட் 16.33 மீற்றர் தூரம் பாய்ந்து முதலிடம் வென்றார். வெலிகமவைச் சேர்ந்த இவர் எதிர்வரும் டிசம்பர் மாதம் நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய போட்டியில் பங்கேற்பதற்கான தகுதியைப் பெற்றார். தெற்காசிய விளையாட்டு விழாவில் தனது திறமைகளை அனைத்தையும் வெளிப்படுத்தி தாய்நாட்டுக்கு பதக்மொன்றை பெற்றுக்கொடுப்பதே எனது பிரதான நோக்கமாகும். எனினும், பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவில் உள்ளதால் எனக்கான விளையாட்டு உபகரணங்கள், போஷாக்கான உணவு போன்றவற்றுக்கு பெருந்தொகையான பணம் செலவாகிறது. இதுபோன்று இன்னும் பல சவால்களை எதிர்கொண்டே இப்போட்டியில் நான் தொடர்ந்தும் பங்கேற்று வருகின்றேன் என சப்ரின் அஹமட் தெரிவித்தார். யாழ். வீர வீராங்கனைகள் பிரகாசிப்பு கோலூன்றிப் பாய்த்தல் மற்றும் உயரம் பாய்த்தல் போட்டிகளை மையப்படுத்தி இம்முறை தேசிய மெய்வல்லநர் சம்பியன்ஷிப்பில் பங்கேற்றிருந்தனர். இதில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தக்சிதா நேசராசா இரண்டாம் இடத்தையும், அனிதா ஜெகதீஸ்வரன் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். மேலும், ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் இறுதிக்கு அருந்தவராசா பவிதரன் முன்னேறினார். முதலிடத்தை தவறவிட்ட தக்சித்தா நேற்றைய இரண்டாம் நாளான்று நடைபெற்ற கோலூன்றிப் பாய்தலில் பங்கேற்ற சாவகச்சேரி இந்து கல்லூரி மாணவியான நேசராசா தக்சிதாவுக்கும், ஷஷினிக்கும் பலத்த போட்டி நிலவியது. இவ்விருவரும் 3.40 மீற்றர் உயரம் தாவியதுடன், 3.45 மீற்றர் உயரத்தை தாவ எடுத்துக்கொண்ட மூன்று முயற்சிகளிலும் இருவரும் தோல்வியடைந்தனர். 3.40 மீற்றர் உயரத்தை தனது முதல் முயற்சியில் தாவிய ஷஷினிக்கு முதல் இடம் வழங்கப்பட்டது. மேற்படி உயரத்தை தனது மூன்றாவது முயற்சியில் தாவியதால் தக்சிதாவுக்கு இரண்டாம் இடம் வழங்கப்பட்டது. அனிதாவுக்கு மூன்றாமிடம் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அனிதா ஜெகதீஸ்வரன் 3.33 மீற்றர் உயரம் தாவி மூன்றாம் இடம் பிடித்தார். 3.40 மீற்றர் உயரத்தை தாவ எடுத்துக்கொண்ட மூன்று முயற்சிகளிலும் அனித்தா தோல்வியடைந்தார்.இப்போட்டியில் பங்கேற்ற மற்றொரு யாழ் வீராங்கனையான ஹெரீனா 3.00 மீற்றர் உயரத்தை மாத்திரமே தாவியிருந்தார். இறுதிக்கு முன்னேறிய பவிதரன் போட்டியின் முதல் நாளன்று நடைபெற்ற ஆண்களுக்கான கோலூன்றி பாய்தல் போட்டியில் பங்கேற்ற யாழ் சாவகச்சேரி மாணவனும் புவிதரனின் சகோதரருமான அருந்தவராசா பவிதரன் 4.40 மீற்றர் உயரம் தாவிய பவிதரன் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். முதல் சுற்றின்போது தாடை மற்றும் முழங்கால் பகுதிகளில் காயமடைந்தபோதிலும், அவற்றை பொருட்படுத்தாமல் பங்கேற்ற பவிதரன் அனைவரது பாராட்டை பெற்றார். இவர் பங்கேற்கும் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்ற மஹாஜனா கல்லூரி மாணவன் சுரேஸ்குமார் சுகி கேதரன் 3.85 மீற்றர் உயரத்தை தாவியிருந்ததுடன், மானிப்பாய் இந்து கல்லூரி மாணவனான சிவகுமார் கபில்சன் 3.85 மீற்றர் உயரத்தை தாவ தவறினார். 100 மீற்றரில் ஹிமாஷ, சுகந்தி முதலிடம் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியை ஹிமாஷ ஏஷான், வினோஜ் சுரஞ்சய இருவரும் 10.49 செக்கன்கள் என்ற ஒரே நேரப் பெறுதியில் முடித்த போதிலும் சலன அசைவு புகைப்படத்தின்படி ஹிமாஷ ஏஷானுக்கு முதலிடமும், வினோஜ் சரஞ்சயவுக்கு இரண்டாமிடமும் வழங்கப்பட்டதுடன், முன்றாமிடத்தை பிரியதர்சன அபேகோன்(10.52 செக்கன்கள்) பெற்றார். பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் லக்சிக்கா சுகந்தி (12.08 செக்கன்கள்), அமாஷா டி சில்வா (12.20 செக்கன்கள்), சர்மிளா ஜேன் (12.24 செக்கன்கள்) ஆகியோர் முறையே முதல் முன்று இடங்களை பிடித்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ருமேஷிகா ரட்நாயக்க எல்லைக் கோட்டைடை அண்மித்திருந்தபோது, தசைப்பிடிப்பின் காரணமாக வெற்றியீட்ட முடியாமல் போனது. 400 மீற்றர் ஓட்டப்போட்டி ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் 46.76 செக்கன்களில் ஓடி முடித்த அருண தர்ஷன முதலிடம் பிடித்தார். பி.எல். குணரட்ண (47.18 செக்.) இரண்டாவது இடத்தையும் , ஆர்.என். ராஜகருண (47.49 செக்.) மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். பெண்களுக்கான 400 மீற்றரில் நதீஷா ராமநாயக்க (53.11செக்.) முதலிடம் வென்றதுடன், கே.மதுஷானி (54.30 செக்.) இரண்டாவது இடத்தையும், ஈ.வீ. ரத்னகுமாரி (54.59 செக்.) மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். அசத்திய ஹிருனி விஜேரட்ண அமெரிக்காவில் வசித்துவரும் ஹிருணி, இம்முறை தேசிய விளையாட்டு விழாவில் பங்கேற்பதற்காக சில தினங்களுக்கு முன்னர் இலங்கை வருகை தந்தார். நேற்றுக் காலை 7 மணிக்கு ஆரம்பமான பெண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப்போட்டி அனைவரையும் கவர்ந்த போட்டியாக அமைந்தது. இப்போட்டியில் பங்கேற்ற ஹிருணி விஜேரட்ண 35 நிமிடங்கள் 30 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடம் வென்று தெற்காசியப் போட்டிக்கு தகுதி பெற்றார். இவருக்கு சிறந்த போட்டியை அளித்த லங்கா ஆரியதாசா 35 நிமிடங்கள் 42 செக்கன்களில் ஓடி முடித்து இரண்டாவது இடத்தை பிடித்தார். இப்போட்டியின் மூன்றாவது இடத்தை எஸ். ஏ. லமாஹேவகே (36 நிமி.52.8 செக்கன்கள்) பெற்றார். https://www.virakesari.lk/article/62885

சைவ சமயத்துக்கு தலைமைப்பீடம் அவசியம்

2 days ago
தலைமைப்பீடம் என்று வரும் போது அரசியல் தலையீடுகள், நிர்வாக ஊழல்கள் என்று தேவையற்ற அவப்பெயர்கள் சைவத்திற்கு ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, ஏற்கனவே இயங்கும் உள்ளூர் சைவ அமைப்புகளூடாக மக்கள் நலத் தொண்டுகள், அறநெறி வகுப்புகள் போன்ற செயற்பாடுகளைத் தொடர்வதன் மூலம் சைவநெறியைத் தழைக்கச் செய்வதுடன், சமூகச் சீர்கேடுகளையும் குறைக்கலாம் என்பது எனது அபிப்பிராயம். சைவர்களின் நம்பிக்கையுள் அனாவசியமாக மூக்கை நுழைப்பவர்கள், போலி முற்போக்குவாதிகள் போன்றோறோரின் விஷமப்பிரச்சாரத்திலிருந்து சைவர்களை மீட்டெடுக்க இது உதவலாம். 😊 https://yarl.com/forum3/topic/231067-’அறநெறி-வகுப்புகளால்-குற்றச்செயல்கள்-தடுக்கப்படுகின்றன’/?tab=comments#comment-1393142

செயலி: கண் பார்வை குறைந்தவர்கள் / இல்லாதவர்கள்

2 days ago
தொழில்நுட்பம் வளர்ந்து வரும்பொழுது அது பெரும்பாலும் இலாபத்தை குறி வைத்தே எழுதப்படும் / முகாமைப்படுத்தப்படும். எனவே, சமுதாயத்தில் பணம் இல்லாதவர்கள் இல்லை பெரியளவில் பணம் சம்பாதிக்க முடியாத மக்கள் பகுதியில் இவ்வாறான புதிய தொழில்நுட்பங்கள் அதிகளவில் கால் பாதிப்பதில்லை. ஆனால், சில வேளைகளில் சில நல்ல பயனுள்ள செயலிகள் உருவாவதுண்டு. பெயர்: மைக்ரோசோப்ட் சவுண்ட்ஸ்கேப் விலை : இலவசம் தளம் : நிச்சயமாக ஆப்பிள் ஐ ஓஎஸ். ஆன்ட்ராய்ட்டில் இருக்கலாம் இது என்ன செய்யும்: ஜி. பி. எஸ், இனை கொண்டு இயங்கும், 3டி வடிவில் இடங்களை கூறி பாதுகாப்பாக நடக்க, வாக்கம் ஓட்ட உதவும் குறிப்பு : நீங்கள் வாழும் நாட்டில் இன்னும் இருக்காமல் இருக்கலாம். யாரெனுக்கும் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு பயன்படலாம் ( இவ்வானவை தமிழில் இருந்தால் .... )

என்னிடம் பல திட்டங்கள் உள்ளன ; கோட்டா

2 days ago
தாயக தமிழ் உறவுகள் இவ்வாறான ஒரு நிலையை கோத்தபாய விடயத்தில் எடுக்க கூடும், 2006 அமெரிக்க அதிபர் தேர்தலில், ஹிலாரியை விரும்பாதவர்கள் ட்ரம்பிற்கு வாக்களித்தார்கள் என்றும் அதனாலேயே அவர் வென்றார் எனவும் கூறுபவர்கள் உள்ளனர்.

’அறநெறி வகுப்புகளால் குற்றச்செயல்கள் தடுக்கப்படுகின்றன’

2 days ago
புலம்பெயர் மேற்கத்தைய நாடுகளில் பல வேறு வழிகள் இருந்தும் கூட, பதின்ம வயதினர் பல 'சிக்ககளுக்கு' உள்ளாகின்றனர். ஆனால், அவர்களுக்கு பல வேறு தெரிவுகள் உள்ளன : விருப்பமான ஒரு விளையாட்டை தெரிந்து அதில் ஈடுபடுதல் ; ' நெட்ப்ளிக்க்சில்' 'பிந்ச்' பார்த்தல் என தெரிவுகள் உள்ளன. தாயகத்தில் அவ்வாறான தெரிவுகள் குறைவு. அந்த மக்களுக்கு அறநெறி கல்வி என்பது இவ்வாறான தவறான தெரிவுகளை செய்வதை தடுக்க முடியும். அந்த வகையில் அறம் சார்ந்த கல்வி என்பது மதம் சார்ந்தும் இருக்கலாம். அதில் அவர்கள் கற்கும் சில ஆக்கம் விதிமுறைகள் அவர்கள் வளர்ந்து ஆளான பின்பு, தாமாக எது சரி / பிழை என்பது தமது பகுத்தறிவால் அறியும் காலம் வந்த பின்பு அதில் உள்ள காலத்திற்கு ஒவ்வாத படிப்பினைகளை நீக்குவார்கள். ஆக, இவ்வாறான கல்விகள் தமது பிள்ளை செல்வங்களுக்கு உகந்ததா இல்லையா என்பதை அவர்கள் முடிவு செய்யும் உரிமை பெற்றோர்களுக்கு உள்ளது.

பலாலி விமான நிலையத்திற்காக காணிகளை சுவீகரிப்பதை அனுமதிக்க முடியாது - மாவை

2 days 1 hour ago
தற்போது பலாலி பகுதியில் எந்தளவு நிலம் இராணுவ வசம் உள்ளது என்பதை காட்டும் வரைபடம் ஏதேனும் உள்ளதா?

என்னிடம் பல திட்டங்கள் உள்ளன ; கோட்டா

2 days 1 hour ago
திட்டம் 1 நாட்டில் வெள்ளை நிற வான்களுக்கான கேள்வியை அதிகரித்து, அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவது. இப்படி பல திட்டம் கைசவம் இருக்கு. #சொல்லாமலே

பேரம் பேசுவதற்கு இது பொன்னான சந்தர்ப்பம் ; செ.கஜேந்திரன்.

2 days 1 hour ago
சின்ன கஜே எப்படி பேரம் பேசுவாராம்? ஒருவேளை கேட்கிறத தராட்டி தெற்குக்கு 50ஆயிரம் சவப்பெட்டி அனுப்புவோம் என்று பேசுவாரோ😂.

’அறநெறி வகுப்புகளால் குற்றச்செயல்கள் தடுக்கப்படுகின்றன’

2 days 1 hour ago
கரைகள் ஓய்வை விரும்பினாலும் , அலைகள் விடுவதில்லை. கருத்தாளர் ஓய்வை விரும்பினாலும் அம்பனை விடுவதில்லை 😂. #இந்தமாதம், சமய மாதம்

வவுனியாவில் 1 இலட்சம் விதைகளை நடும் திட்டம் ஆரம்பம்

2 days 2 hours ago
2019 ஓகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 04:35 -க. அகரன் வவுனியா மாவட்டத்தில், 1 இலட்சம் பனை விதைகளை நடுவதற்கு, சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் முதல் கட்டமாக, வவுனியா – கூமாங்குளம், குளக்கரை, அதனை அண்டிய பகுதிகளில், நேற்று (17) 1,000 பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளன. 2018ஆம் ஆண்டு, வவுனியா சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பினரால். 10 ஆயிரம் பனை விதைகள், வவுனியா பிரதேசத்தில் விதைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/வன்னி/வவுனியாவில்-1-இலட்சம்-விதைகளை-நடும்-திட்டம்-ஆரம்பம்/72-236925 எழுத்தூர் குளத்தை ஆழப்படுத்த நடவடிக்கை 2019 ஓகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 04:30 எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார் நகர சபைக்குட்பட்ட எழுத்தூர் பகுதியில் காணப்படும் குளத்தை ஆழப்படுத்துவதற்கு மன்னார் நகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது. மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக, மாவட்டத்தில் உள்ள குளங்கள், நீர் நிலைகள் வற்றிய நிலையில் உள்ளன. இந்த நிலையில், மன்னார் நகர சபைக்குட்பட்ட மக்களின் பயன்பாட்டில் காணப்பட்ட குறித்த குளமும் முழுமையாக வற்றியுள்ளது. இந்த நிலையில், மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்டனி டேவிட்சனின் பணிப்புரைக்கு அமைவாக, குறித்த குளம் அகலப்படுத்தப்பட்டும் ஆழப்படுத்தப்பட்டும் வருகின்றது. இவ்வாறு ஆழப்படுத்தப்படும் போது, குறித்த குளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளப்படும் மண், மன்னார் நகர சபைக்குட்பட்ட சேதமடைந்த வீதிகளைப் புனரமைப்புப் பணிக்குப் பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/வன்னி/எழுத்தூர்-குளத்தை-ஆழப்படுத்த-நடவடிக்கை/72-236921

’அறநெறி வகுப்புகளால் குற்றச்செயல்கள் தடுக்கப்படுகின்றன’

2 days 2 hours ago
2019 ஓகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 04:19 -க. அகரன் வவுனியா மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் அறநெறி வகுப்புகளால், மாணவர்கள் பாரிய குற்றச் செயல்களில் இருந்து பாதுகாக்கப்படுவதாக, தரணிக்குளம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் தெரிவித்துள்ளது. தரணிக்குளம் கிராமத்தில், பாடசாலை விடுமுறைக் காலங்களில் தனிமையில் வீடுகளிலும் வெளி இடங்களிலும் உலாவும் சிறுவர்கள், தீய செயல்களுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் உள்ளாகி, சிறுவயதிலேயே பாரிய குற்றச்செயல்களில் ஈடுபடும் நிலை கடந்த காலங்களில் காணப்பட்டது. இந்நிலையில், கிராமப்புறங்களில் அறநெறி வகுப்புகள் நடைபெறுவதால், சிறுவர்கள் அறக் கல்விகளைப் பயிலும் அதேவேளை, தீய சமூகத்திலிருந்தும் பாதுகாக்கப்படுதவாக, தரணிக்குளம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர் http://www.tamilmirror.lk/வன்னி/அறநெறி-வகுப்புகளால்-குற்றச்செயல்கள்-தடுக்கப்படுகின்றன/72-236915
Checked
Wed, 08/21/2019 - 01:02
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed