புதிய பதிவுகள்

தொடர் குண்டுத் தாக்குதலுக்கு பொறுப்பானவர்களுக்கும் மரணதண்டனை: ஜனாதிபதி

2 days 10 hours ago
தொடர் குண்டுத் தாக்குதலுக்கு பொறுப்பானவர்களுக்கும் மரணதண்டனை: ஜனாதிபதி நாட்டில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் அனைவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பெலேத ரஜமகா விகாரையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி, இலங்கையின் பல தேவாலயங்களிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் சுமார் 250 பேர் உயிரிழந்ததுடன் 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக தெளிவான சாட்சியங்கள் உள்ளமையினால் அவர்களுக்கு மரணதண்டனையே வழங்கப்பட வேண்டும். அத்துடன் தாக்குதல்கள் குறித்து கண்டறிவதற்காக, நியமிக்கப்பட்டுள்ள குழுவின் ஊடாக தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். http://athavannews.com/தொடர்-குண்டுத்-தாக்குதலு/

இலங்கையில் தளம் அமைக்கிறது சீனாவின் இன்னுமொரு நிறுவனம்!

2 days 10 hours ago
இலங்கையில் தளம் அமைக்கிறது சீனாவின் இன்னுமொரு நிறுவனம்! சினோபெக் எனப்படும் சீனாவின் பெற்றோலிய மற்றும் இரசாயனவியல் நிறுவனம் இலங்கையில் எரிபொருள் நிறுவனமொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. குறித்த நிறுவனம் Fuel Oil Sri Lanka Co Ltd என்ற பெயரில் அம்பாந்தோட்டையில் செயற்படவுள்ளது. மேலும் இந்த நிறுவனத்தின் ஊடாக கப்பல்கள் மற்றும் மின்உற்பத்தி நிறுவனங்களுக்குத் தேவையான சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன் பிரதான கடல்வழிப் பாதையில் செல்லும் கப்பல்களுக்கு, எரிபொருள் விநியோகங்களை மேற்கொள்வதே எமது முக்கிய நோக்கமென சினோபெக் தெரிவித்துள்ளது. பிராந்திய நலன்களுக்காக இலங்கையை குறிவைத்து செயற்படுவதாதக விமர்சிக்கப்படும் மற்றொரு நாடான இந்தியாவின் ஐ.ஓ.சி. எனப்படும் இந்தியன் ஓயில் கோப்பிரேஷன் என்ற நிறுவனம் இலங்கையின் பல பாகங்களிலும் தங்களுடைய கிளைகளை அமைத்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் தற்போது சீனா நிறுவனமும் கால் பதிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/இலங்கையில்-புதிய-நிறுவனம/

நீட் விலக்கு சட்டமூலம் 2017-லேயே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது: நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சு

2 days 10 hours ago
நீட் விலக்கு சட்டமூலம் 2017-லேயே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது: நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சு நீட் விலக்கு சட்டமூலம் 2017-லேயே தமிழக சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது என்று உயர் நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சு பதிலளித்துள்ளது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில் மத்திய உளத்துரை செயலர் வைத்யா சார்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) பதில்மனு தாக்கல் செயயப்பட்டது. அதில், ‘ 2017 பிப்ரவரியில் அனுப்பப்பட்ட நீட் விலக்கு சட்டமூலம், செப்டம்பரில் நிராகரிக்கப்பட்டு தமிழக அரசுக்கு 2017 செப்டம்பர் 22ம் திகதியன்று திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு நீட் தேர்வு இருந்து விலக்கு கோரும் சட்டமூலமானது கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டபேரவை கூட்டத் தொடரில் இந்த விவகாரம் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள் சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது நீட் விலக்க சட்டமூலமானது நிராகரிக்கப்பட்டு தமிழக சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டது என்றும், அதை ஆளும் அ.தி.மு.க. அரசு மறைத்து விட்டது என்றும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். ஆனால் இதனை உறுதியாக மறுத்த அமைச்சர் சி.வி.சண்முகம் அந்த சட்டமூலம் நிறுத்தி மட்டுமே வைக்கப்பட்டுள்ளது நிராகரிக்கப்படவில்லை என்று பதிலளித்திருந்தார். இந்நிலையில் நீட் விலக்கு சட்டமூலம் 2017-லேயே தமிழக சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது என்று உயர் நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சு பதில் அளித்துள்ளது. இதன் காரணமாக சட்டப்பேரவையில் ஸ்டாலின் கூறிய தகவல் உண்மையென்றால் இராஜிநாமா செய்யத் தயார் என்று கூறிய அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது. http://athavannews.com/நீட்-விலக்கு-சட்டமூலம்-2017-ல/

சென்னையில் ஓரிரு வாரத்தில் மின்சார பேருந்து இயக்கப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர்

2 days 10 hours ago
சென்னையில் ஓரிரு வாரத்தில் மின்சார பேருந்து இயக்கப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் மின்சார பேருந்துகள் ஓரிரு வாரத்தில் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பேசிய அவர், முதல் கட்டமாக 100 பேருந்துகள் வாங்க இருப்பதாக கூறினார். சென்னையில் 80 பேருந்துகளும், மதுரை மற்றும் கோவையில் தலா 10 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார். மொத்தமாக 2 ஆயிரம் மின்சார பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே போக்குவரத்து துறை தொடர்பான கொள்கை விளக்க குறிப்பில், பேருந்து தடம் காட்டும் புதிய செயலி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/சென்னையில்-ஓரிரு-வாரத்தி/

கனடாவின் வடிவிலான நாணயத்தை, கனடா அரசு வெளியிடுகின்றது!

2 days 10 hours ago
கனடாவின் வடிவிலான நாணயத்தை, கனடா அரசு வெளியிடுகின்றது! கனடா தினத்தை கௌரவிக்கும் விதமாக ‘கனடா’ நாட்டின் வடிவிலான நாணயம் ஒன்றை வௌியிட ‘தி றோயல் கனேடியன்’ நாணய சபை தீர்மானித்துள்ளது. றோயல் கனேடியன் நாணய அச்சக சபையின் தயாரிப்பு முகாமையாளர் எரிகா மாகா இந்த தகவலை வௌியிட்டுள்ளார். வடிவமைப்பை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு புதுமையான வடிவத்தை உருவாக்க பொறியியல் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டுக் குழுக்கள் ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்தன. அந்த வகையில் கனடாவின் ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு விலங்கை அடையாளப்படுத்தும் வகையில் கலைஞரான அலிஷா கிரோக்ஸின் படைப்பில் உருவான வடிவத்தை இறுதி செய்வதற்கு அச்சக சபையின் அதிகாரிகள் தீர்மானித்தனர். http://athavannews.com/கனடாவின்-வடிவிலான-நாணயத்/

காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கு போதுமான காலமில்லை : மைக்கேல் கோவ்

2 days 10 hours ago
காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கு போதுமான காலமில்லை : மைக்கேல் கோவ் காலநிலை மாற்றத்தை உடனடியாகச் சமாளிக்கா விட்டால் வளமற்ற மண், பிளாஸ்டிக் நிறைந்த கடல்கள், அசுத்தமான நீர் மற்றும் கடுமையான வானிலை ஆகிய நிலைமைகளை எதிர்கொள்ள நேரிடுமென சுற்றுசூழல் அமைச்சர் மைக்கேல் கோவ் எச்சரித்துள்ளார். பூமிக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சேதத்தை சரிசெய்வதற்கான காலம் முடிவடைந்து வருவதாக எச்சரித்த கோவ் அடுத்த ஆண்டு பல்லுயிர் மற்றும் பெருங்கடல்கள் தொடர்பான சர்வதேச உச்சிமாநாடுகளில் பிரித்தானியா முக்கிய பங்கு வகிக்கும் என்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான சட்டத்தை இயற்றுவதாகவும் உறுதியளித்துள்ளார். தொடர்ந்து அவர் கூறுகையில்; பூமிக்கு எம்மால் இழைக்கப்பட்ட சேதத்தை சரிசெய்வதற்கான காலம் முடிவடைந்து கொண்டிருக்கிறது. இயற்கை பின்வாங்கிக் கொண்டிருக்கிறது. மனிதனின் செயல்களின் விளைவாக உலகம் முழுவதும் பல்லுயிர் இழப்பை நாம் கண்டிருக்கிறோம். 8000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியைச் சூழ்ந்திருந்த அசல் காடுகளில் 80 சதவிகிதம் அழிக்கப்பட்டுவிட்டது. இயற்கை விகிதத்தை விட 1000 முதல் 10,000 மடங்கு அதிகமாக உயிரினங்கள் அழிந்து வருவதாக விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். புவி விரைவாக வெப்பமாகிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் இயற்கையும் பின்வாங்கிக் கொண்டிருக்கிறது. காலநிலை மாற்றம் கடல் மட்டங்களை உயர்த்துவதற்கு வழிவகுத்தது என்பதை நாங்கள் அறிவோம். பூமியின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கான முக்கிய ஆண்டான 2020 ஆம் ஆண்டில் தொடர்ச்சியான சர்வதேச உச்சிமாநாடுகளில் தலைமைத்துவத்தையும் நமது உயர் மட்ட லட்சியத்தையும் பிரித்தானியா எடுத்துக்காட்டும் என உறுதியளித்துள்ளார். http://athavannews.com/காலநிலை-மாற்றத்தை-சமாளி-2/

சீனப் பொருளாதார வளர்ச்சி வேகத்தில் வீழ்ச்சி: 27 ஆண்டுகளில் மோசமான நிலை

2 days 10 hours ago
சீனப் பொருளாதாரம் மெதுவடைந்ததற்கும் வர்த்தக உடன்பாட்டுக்கும் தொடர்பில்லை – பீயிங் சீனப் பொருளாதாரம் மெதுவடைந்ததற்கும், அமெரிக்கா உடனான வர்த்தக உடன்பாட்டுக்கும் தொடர்பில்லை என்பதைப் பீயிங் தெளிவுபடுத்தியுள்ளது. சீனப் பொருளாதாரம் மெதுவடைந்திருப்பதால், அமெரிக்காவோடு அது வர்த்தக உடன்பாடு செய்துகொள்வது அவசியமாகிறது என்று, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று கூறியிருந்தார். சீன இறக்குமதிப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள தடை, பீயிங்கைக் கடுமையாகப் பாதித்துள்ளது என்றும், ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதை மறுத்த பீயிங், அமெரிக்க ஜனாதிபதியின் கூற்று முற்றிலும் தவறானது என்றது. வர்த்தக உடன்பாட்டை இரு நாடுகளுமே செய்துகொள்ள விரும்புகின்றன என, சீன வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் குறிப்பிட்டார். அது ஒருதரப்பு விருப்பம் மட்டுமல்ல என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். சீனப் பொருளாதாரம், கடந்த 27 ஆண்டுகளில் முதன்முறையாக ஆகக் குறைவான வளர்ச்சி கண்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது. அது, இந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டில் 6.2 விழுக்காடு மட்டுமே வளர்ச்சி கண்டதாகப் பீயிங் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/சீனப்-பொருளாதாரம்-மெதுவட/

தபால்துறை தேர்வை ரத்து செய்ய வைத்த, தமிழக எம்.பிக்கள்!

2 days 10 hours ago
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு... தபால்துறை தேர்வை ரத்து செய்ய வைத்த தமிழக எம்.பிக்கள்! ஒன்றாக சேர்ந்து குரல் கொடுத்தால் எதுவுமே சாத்தியம் என்பதை இந்தி- ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட தபால்துறை தேர்வை ரத்து செய்ய வைத்து இன்று தமிழக எம்.பி.க்கள் நிரூபித்திருக்கின்றனர். தபால்துறை அண்மையில் பல்வேறு பணி இடங்களுக்கு போட்டித் தேர்வை நடத்தியது. பொதுவாக இத்தேர்வு பிராந்திய மொழிகளில் நடத்தப்படும். இம்முறை திடீரென இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இது மிகப் பெரும் சர்ச்சையானது. இது தொடர்பாக வழக்குகளும் தொடரப்பட்டன. இத்தேர்வு முடிவை வெளியிட நீதிமன்றம் தடைவிதித்தது. இந்நிலையில் 989 தபால்துறை ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை துறைசார் தேர்வை நடத்தியது.இத்தேர்விலும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில்தான் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.தமிழக எம்.பி.க்களின் தொடர் எதிர்ப்பால் தற்போது இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்ட தபால்துறை தேர்வை ரத்து செயதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதேபோல் தமிழக நலன் சார்ந்த பிரச்சனைகளில் அனைத்து கட்சி எம்.பி.க்களும் ஒன்றாக குரல் கொடுத்தால் 'உண்டு வாழ்வு' என்பது நிரூபணமாகும்.Read more at: https://tamil.oneindia.com/news/chennai/tn-mps-forces-to-centre-to-cance-postal-exams-357161.html

இந்திய நாடாளுமன்றத்தில் மீண்டும் வைகோவின் குரல்

2 days 11 hours ago
சுப்பிரமணியசாமி... அமெரிக்காவில் வேலை செய்யும் போது, அது கிறிஸ்தவ நாடாக தெரியவில்லையா? எப்படிப் பட் ட அறிவாளிகள் எல்லாம், இந்திய அரசியலில் இருக்கின்றார்கள். 🤬

கன்னியா போராட்டத்திற்கு தடை

2 days 11 hours ago
இன்று கன்னியாவில் கூடி நிற்பவர்கள் சொல்லும் அரசியல் செய்தி இதுதான் பிராந்திய – புவிசார் அரசியலில் இந்து சமுத்திரத்தை மையப்படுத்திய ஒரு கேந்திர முக்கியத்துவத்தை ‘நந்திக்கடல்’ நகர்வுகளினூடாக தனதாக்கிக் கொண்டுள்ளது தமிழீழம். தொடரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் பின்னும் அது தனது பெறுமதியை இழக்கவில்லை. வலுச் சமநிலை /பேரம் பேசும் வல்லமை/ இறைமை போன்ற இராஜதந்திர சொல்லாடல்களை அதற்கேயுரிய அர்த்தங்களுடன் உள்வாங்கி தமிழ் அரசியல் தரப்பு காய்களை நகர்த்துமாயின் தமிழீழம் போதுமான அளவு உரிமைகளைத் தனதாக்கிக் கொள்ளலாம். குறைந்தது கட்டமைக்கப்பட்ட இன அழிப்பிலிருந்தாவது தன்னை தற்காத்துக் கொள்ளலாம்.. ஆனால் நக்கிப் பிழைக்கும், முதுகெலும்பில்லாத அரசியல்வாதிகளிடம் இதை எதிர்பார்ப்பது நமது முட்டாள்தனம். ஆனாலும் எத்தனை வீழ்ச்சியைச் சந்தித்தாலும் இத்தகைய சாதகமான அரசியல் வெளிகளும், அதைக் கையாளும் மக்கள் தலைமைத்துவமும் வரலாற்றில் இயல்பாகவே உருவாகும் என்று நந்திக்கடல் கணித்துக் கூறுகிறது. ஆனால் அதற்கு அது கூறும் முன் நிபந்தனை ஒன்றுதான், ‘வெற்றி தோல்விகளுக்கு அப்பால் அடுத்து வரும் தலைமுறைக்கு தெளிவான வரலாற்றை விட்டுச் செல்ல வேண்டும் – போதிக்க வேண்டும்’ என்கிறது. நாம் தொடர்ந்து அதைச் செய்வோம். மீதியை வரலாறு எழுதும். இன்று கன்னியாவில் கூடி நிற்பவர்கள் சொல்லும் அரசியல் செய்தி இதுதான். http://www.velichaveedu.com/hn8787/

தேரர்கள் தொடர்பில் மற்றொரு ஆதரம் வெளியீடு!!

2 days 11 hours ago
இராணுவத்தில் இருந்து தப்பி ஓடியவர்களும்... பிக்குகளாக மாறினால். ஒரு பயலும்... கை வைக்க முடியாது என்ற பாதுகாப்பில், காவி உடையில் இருப்பார்களாம். டிஸ்கி: அதாவது அரைவாசி பிக்குகள்... முன்னாள் இராணுவத்தினர்.

5 ஜி அலைக்கற்றை உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்குமா?

2 days 11 hours ago
இந்த 5ஜி தொழில்நுட்பத்தை ஐரோப்பிய ஒன்றியம் அனுமதித்து இருந்தால் அது பாதுகாப்பானதாக இருக்கும் என கருதலாம். வட அமெரிக்காவிலும் சீனாவிலும் அரசுகள் பெரிய நிறுவனங்களின் இசைக்கு ஏற்பவே ஆடும் .

ராசவன்னியருக்குத் திருமணம்! வாழ்த்துவோம்!!

2 days 11 hours ago
திரு, திருமதி ராஜவன்னியர் தம்பதியினருக்கு.... இதயம் கனிந்த.... 60´ம் கலியாண வாழ்த்துக்கள். இன்று போல்... என்றும் நீண்ட நாட்கள்... மகிழ்ச்சியோடும், ஆரோக்கியத்தோடும் வாழ வேண்டுகின்றேன். 🌝

முகநூல் அறிமுகம் செய்யவுள்ள 'லிப்ரா' இலத்திரனியல் பணம்

2 days 12 hours ago
“ஃபேஸ்புக் நம்பகத்தன்மையற்ற நிறுவனம்”- குற்றஞ்சாட்டும் அமெரிக்க அரசியல்வாதிகள் ஃபேஸ்புக் கிரிப்டோகரன்சி திட்டம் மீண்டும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. அமெரிக்க அரசியல்வாதிகள் ஃபேஸ்புக் நிறுவனத்தை உண்மை தன்மையற்ற, நம்பகத்தன்மையற்ற நிறுவனம் என விமர்சித்து உள்ளார்கள். ஃபேஸ்புக் லிப்ரா எனும் கிரிப்டோகரன்சியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க செனட் வங்கி குழு ஃபேஸ்புக் நிர்வாகியான டேவிட் மார்கஸை விசாரித்தது. "தவறுகளுக்கு மேல் தவறுகளை ஃபேஸ்புக் நிறுவனம் செய்துள்ளது. எங்கள் நம்பிக்கைக்கு ஏற்ற நிறுவனம் அல்ல ஃபேஸ்புக்" என்று செனட்டர் செரோட் ப்ரவுன் கூறி உள்ளார். முதலில் ஃபேஸ்புக் தங்கள் பிழைகளை சரி செய்துவிட்டு புதிய தொழிலில் இறங்கட்டும் என்று அவர்கள் கூறி உள்ளனர். https://www.bbc.com/tamil/global-49012511

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள்-ராணுவம் மோதல் : அப்பாவி மக்கள் 76 பேர் பலி

2 days 12 hours ago
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள்-ராணுவம் மோதல் : அப்பாவி மக்கள் 76 பேர் பலி அமெரிக்காவில் நியூயார்க் உலக வர்த்தக மையம், வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம் ஆகியவற்றின் மீது 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல்களை நடத்தியதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர். பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு தான் இந்த கொடூர தாக்குதலை அரங்கேற்றியது. அதனை தொடர்ந்து, அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு தஞ்சம் அளித்து வந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. இதில் அங்கு ஆட்சியில் இருந்த தலீபான்கள் விரட்டியடிக்கப்பட்டு, ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. ஆனாலும் தலீபான் பயங்கரவாதிகளை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. இன்றும் அங்கு தலீபான்களின் கை ஓங்கி நிற்கிறது. தலீபான் பயங்கரவாதிகளை ஒடுக்க ஆப்கானிஸ்தான் அரசு படைகளும், அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளும் போராடி வருகின்றன. அதே சமயம் ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அரசு இணைந்து தலீபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருகின்றன. பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் அதே வேளையில் தலீபான்களின் பயங்கரவாத தாக்குதல்களும், ராணுவத்தின் பதிலடி தாக்குதல்களும் தொடர்ந்து வருகின்றன. அரசு படைகளுக்கும், தலீபான்களுக்கும் இடையிலான இந்த மோதலில் அப்பாவி மக்களே அதிகம் கொல்லப்படுகிறார்கள். இந்த நிலையில் உருஸ்கான் மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து நள்ளிரவில் அரசுபடைகள் வான்தாக்குதல் நடத்தியபோது, பொதுமக்களின் குடியிருப்பு பகுதியில் குண்டுகள் விழுந்தன. இதில் பெண்கள் உள்பட அப்பாவி மக்கள் 35 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அதே போல் காந்தகார் மாகாணத்தில் உள்ள காக்ரெஸ் மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 4 பெண்கள் மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 11 பேர் உடல் சிதறி உயிர் இழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையே அதே மாகாணத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ் ஒன்று சாலையோரம் பயங்கரவாதிகள் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டில் சிக்கி, வெடித்து சிதறியதில் 30 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இப்படி அரசு படைகளின் வான்தாக்குதலிலும், பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் சிக்கியும் 24 மணி நேரத்தில் மட்டும் அப்பாவி மக்கள் 76 பேர் பலியாகி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெவ்வேறு சம்பவங்களில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ள அதிபர் அஷ்ரப் கனி, உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். https://www.dailythanthi.com/News/TopNews/2019/07/17045140/Talibanarmy-conflict-in-Afghanistan-76-innocent-people.vpf

பாகிஸ்தான் வான்வழியாக ஏர் இந்தியா விமானங்கள் டெல்லி வந்தடைந்தன

2 days 13 hours ago
பாகிஸ்தான் வான்வழியாக ஏர் இந்தியா விமானங்கள் டெல்லி வந்தடைந்தன காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாலக்கோட் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக தனது வான்வழியை இந்திய விமானங்கள் பயன்படுத்த பாகிஸ்தான் தடை விதித்தது. கிரிகிஸ்தானில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க சென்றபோது, பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த இயலாத காரணத்தால் மாற்று வழியைத் தேர்வு செய்ய நேர்ந்தது. இதற்கிடையே, கர்த்தார்பூர்-குருத்வாரா ஆகிய இடங்களுக்கு இடையே வான்வழியை திறந்து விடுவது தொடர்பாக நடந்த பேச்சு வார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டிருந்த சூழலில், தனது வான்வழியையும் இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் திறந்துவிட்டது. இந்நிலையில், சான்பிரான்சிஸ்கோவில் இருந்து பாகிஸ்தான் வான்வழியாக பறந்து தலைநகர் டெல்லியை 2 விமானங்கள் அடைந்துள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து பாகிஸ்தான் வழியாக விமானங்கள் வந்து செல்வதால் சுமார் 20 லட்சம் ரூபாய் மிச்சமாகும் என ஏர் இந்தியா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. https://www.maalaimalar.com/news/national/2019/07/16204208/1251355/AI-flights-AI-184-AI-174-from-San-Francisco-to-Delhi.vpf
Checked
Fri, 07/19/2019 - 14:35
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed