புதிய பதிவுகள்

மொட்டப்பனையும் முகமாலைக் காத்தும்! எழுத்தாளர் சர்மிலாவின் புதுப் படைப்பு

2 days 3 hours ago
ஈழத்தில் பிரபல எழுத்தாளர் சர்மிலா வினோதினியின் மொட்டப்பனையும் முகமாலைக் காத்தும் என்கின்ற சிறுகதைத் தொகுப்பு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் இன்றைய தினம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மன்னார் நகர சபை மண்டபத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த நூலை அறிமுகப்படுத்தியுள்ளார். இதன்போது, வவுனியா தேசிய கல்வியற் கல்லாரியின் நிதி நிர்வாக உப பீடாதிபதி பொ.சத்தியநாதன், யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் ஒய்வு நிலை கல்வியலாளர் க.தர்மராசா மற்றும் ஓய்வு நிலை அதிபர் மணலாறு விஜயன் உற்பட மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. https://www.tamilwin.com/community/01/220618

தமிழர் மீது கன்னியாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து போராட்டம்

2 days 3 hours ago
தமிழர் மீது கன்னியாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து வவுனியாவில் போராட்டம் கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் ஆலய வளாகத்தில் புத்த கோவில் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மக்கள் மீது சுடுநீர்த்தாக்குதல் உட்பட சிங்கள பௌத்த மேலாதிக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் இன்று (17) கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. வடக்கு கிழக்கில் கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தினால் நடத்தப்பட்ட இப்போராட்டத்தில் புத்த மதத்திற்கு முதன்மையான இடத்தை ஆதரித்த பின்னர் ஏன் சிவனேசன், சிறிதரன், யோகேஸ்வரன் கன்னியாவுக்கு சென்றார்கள் ?, அவர்கள் எம்.பி பதவியை இராஜினாமா செய்ய வேண்டும், ரணில் தமிழர் தாயகத்தில் விகாரை கட்டுவதை நிறுத்து, சிங்கள புத்த மத பயங்கரவாத்தினை நிறுத்த தமிழர்களுக்கு அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவி தேவை போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் ஏந்தியவாறும் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 879 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கபட்டோரின் உறவினர்கள் தாம் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கொட்டகைக்கு முன்பாகவே இப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/60605

கன்னியா போராட்டத்திற்கு தடை

2 days 3 hours ago
கன்னியா விகாரை நிர்மாணித்தல் விவகாரம் ; ஜனாதிபதி மனோவிடம் கூறியது என்ன ? கன்னியாவில், விகாரை நிர்மாணிக்குமாறு தொல்பொருளாராட்சி திணைக்களத்துக்கு கடிதம் எழுதும்படி தனது இணைப்பு செயலாளருக்கு தான் கூறவில்லை என ஜனாதிபதி தன்னிடம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மனோகணேசன் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இது பற்றி தான் விசாரிப்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்ததாகவும் தமிழ் எம்.பிகளின் தூதுக்குழுவை சந்திக்க தன்னிடம் அவர் உடன்பட்டார். இதற்கான திகதி விரைவில் தீர்மானிக்கப்படும் என்றும் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். இந் நிலையில் இவ்விவகாரம் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படும் வரை, எந்தவித விகாரை கட்டுமான பணிக்கும் கன்னியாவில் இடம் கொடுக்க வேண்டாம் என திருகோணமலை மாவட்ட செயலாளர் புஸ்பகுமாரவுடன் தொடர்பு கொண்டு தான் கூறியதாகவும் மனோகணேசன் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/60604

பாகிஸ்தானை மீண்டும் பிரிக்க முயலும் இந்தியா, அதை தடுக்கும் சீனா

2 days 3 hours ago
இன்று பாகிஸ்தான் பொருளாதார சிக்கலில் உள்ள ஒரு நாடு. அன்று இந்திரா காந்தி பாகிஸ்தானை பிரித்தார். இன்று, காசுமீரை பிரிக்க எண்ணும் பாகிஸ்தான். பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானை தனி நாடாக உருவாக்க மோடி அரசு முனைகின்றது. பாகிஸ்தான் ஊடாக ஐரோப்பாவிற்கான வியாபார பாதையை திறக்க முயலும் சீன அரசு.

நந்திக்கொடிகளை அறுத்தெறிந்து பிக்கு மீண்டும் அடாவடி

2 days 3 hours ago
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அடாத்தாக விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்குவால் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் கட்டப்பட்டிருந்த நந்திக்கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ளன. கடந்த (06.07. 2019) அன்று நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் 108 பானைகளில் பிரம்மாண்ட பொங்கல் நிகழ்வு இடம் பெற்றது. இந்த பொங்கல் நிகழ்வின் போது ஆலய சூழலை அலங்கரிப்பதற்காக ஆங்காங்கே வீதியின் ஓரமாக வீதியின் மேலாகவும் நந்தி கொடிகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் நேற்றைய தினம் குறித்த நந்திக்கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ளன. அத்தோடு அந்த நந்திக்கொடிகளை கட்டியிருந்த கம்பங்கள் பிடுங்கி ஓரிடத்தில் அடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரால் இன்று (17)முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர் தமது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாக செயலாளர் சி .ராஜா,நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் பௌத்த பிக்கு ஒருவர் அடாத்தாக குரு கந்த ரஜமகா விகாரை என்னும் பெயரில் விகாரை அமைத்து பிரம்மாண்ட புத்தர் சிலை ஒன்றையும் அமைத்துள்ளார். இந்த நிலையில் இந்த சர்ச்சைக்குரிய விவகாரம் தொடர்பாக கடந்த மாதங்களில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் இரண்டு தரப்பினரும் அமைதியான முறையில் தமது ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த தீர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவித்து வவுனியா மேல் நீதிமன்றத்தில் பௌத்த பிக்கு சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. அன்றைய தினம் மேல்நீதிமன்றின் வழக்கு விசாரணையின் போது குறித்த எமது பிள்ளையார் ஆலய பகுதியில் ஆலய நிர்வாகத்தினரோ பௌத்த பிக்குவோ எவ்வாறான அபிவிருத்தி வேலைகளையும் செய்ய முடியாது எனவும் ஏற்கனவே அங்கே இருக்கின்ற அமைப்புகள் அப்படியே இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் விதமாக பௌத்த பிக்கு எமது ஆலயத்தில் கட்டப்பட்டிருந்த அந்த நந்திக்கொடி களை மிகவும் கீழ்த்தரமான முறையில் அடாத்தாக அறுத்து வீதியோரத்தில் எறிந்திருக்கின்றார் அத்தோடு 24 மணித்தியாலமும் இந்த விகாரை அமைந்துள்ள பிரதேசத்தில் பொலிஸார் கடமையில் இருக்கின்றார்கள். ஆலயம் இருக்கின்ற இடத்திற்கு எதிர்ப்பக்கமாக மிகவும் குறுகிய தூரத்தில் இராணுவக் காவலரண் ஒன்றை அமைத்து 24 மணி நேரமும் இராணுவத்தினர் கடமையில் இருக்கின்றார்கள். இவ்வாறு இவர்கள் எல்லோரும் கடமையில் இருக்கின்ற போது இந்த இந்த நந்தி கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ளது. அடாத்தாக எமது ஆலய பகுதியில் வந்து தங்கியிருந்து விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்கு மேலும் மேலும் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டிருக்கின்றதை பொலிசாரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் செயற்பாடாகவே இந்த நந்திக்கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ள சம்பவத்தை நாம் பார்க்கின்றோம். என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/60612

புலி­கள் போல் உறு­முவதை, பௌத்த மக்­களை அச்­சு­றுத்­து­வ­தை தமி­ழர் நிறுத்த வேண்­டும்; ஞான­சா­ரர் எச்சரிக்கை!

2 days 3 hours ago
மதவாதம் + இனவாதம், +தேசியவாதம் + அரசபயங்கரவாதம் + பயங்கரவாதம் + இனவழிப்பு + மக்கள் போராட்டம் + சுய நிர்ணய போராட்டம் = இலங்கை துறவிகள் என்ற முகமூடிக்குள் ஒளிந்திருக்கும் இந்த கிருமிகள் தான் இந்த நாட்டின் தொடரும் வியாதிக்கு மூல காரணம்.

ஹஃபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது

2 days 3 hours ago
ஜமாத் உத் தவா தலைவர் ஹஃபீஸ் சயீத் பாகிஸ்தானில் இன்று காலை கைது செய்யப்பட்டார். பஞ்சாப் மாகாண பயங்கரவாத எதிர்ப்புத் துறை பதிந்த வழக்கு ஒன்றில் முன் ஜாமீன் பெறுவதற்காக குஜ்ரன்வாலா நோக்கி சென்றுகொண்டிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டார். தடை செய்யப்பட்ட ஜமாத் உத் தவா அமைப்பின் மேல்மட்டத் தலைவர்களான ஹஃபீஸ் சயீத், அப்துல் ரெஹ்மான் மக்கி உள்ளிட்டோர் மீது பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்தது, நிதி முறைகேடு உள்ளிட்ட சுமார் இரண்டு டஜன் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்குகள் 1997-ம் ஆண்டின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டன. https://www.bbc.com/tamil/global-49017111

கட்டுநாயக்கவில் மற்றொரு அமெரிக்க சரக்கு விமானம்

2 days 4 hours ago
உடன்பாட்டுக்கு வந்தால் தான் சோபாவில் கையெழுத்து – ரணில் இலங்கையின் கருத்துக்களுக்கு அமெரிக்கா ஒப்புக் கொண்டால் மட்டுமே, சோபா மற்றும் கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவைகள் (அக்சா) உடன்பாடுகளில் கையெழுத்திடப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று அனுரகுமார திசநாயக்க, பந்துல குணவர்த்தன ஆகியோர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ‘சிறிலங்காவின் இறைமையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் மீறுகின்ற எதையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது. ஊடகங்களில் கூறப்படுவதைப் போன்று தற்போது சோபா உடன்பாடு எதுவும் செய்து கொள்ளப்படவில்லை. 1995 ஆம் ஆண்டு வெளிவிவகார அமைச்சுக்கும், இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கும் இடையில் பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதங்களைத் தவிர,அமெரிக்காவுடன் எந்தவொரு சோபா உடன்பாட்டிலும் அரசாங்கம் கையெழுத்திடவில்லை. சில ஊடகங்கள் 2017இல் சோபா உடன்பாடு கையெழுத்திடப்பட்டதாக தவறாக வழிநடத்துகின்றன. அவ்வாறு 2017இல் சோபா உடன்பாடு கையெழுத்திடப்பட்டிருந்தால் அது சட்டவிரோதமானது. போலியானதாகும். அத்தகைய ஆவணம் இருந்தால், அதன் பிரதியை என்னிடம் ஒப்படைக்குமாறு ஊடகங்களை நான் கேட்டுக்கொள்கிறேன். இது குறித்து பொலிஸாரை விசாரிக்க நான் கோருவேன். அமெரிக்க அரசு பல முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளது, ஆனால் அவற்றுக்கு அரசாங்கம் இன்னும் ஒப்புக் கொள்ளவில்லை, அந்த முன்மொழிவுகள் பரிசீலிக்கப்பட உள்ளன. இலங்கையில் அமெரிக்கா இராணுவ முகாம்களை அமைப்பது குறித்து எந்த கேள்விக்கும் இடமில்லை. அமெரிக்காவிடம் உள்ள இராணுவ தளபாடங்களை கருத்தில் கொள்ளும்போது, இங்கு தளம் அமைப்பது சாத்தியமில்லை. விமானம் தாங்கி கப்பலான ‘றொனால்ட் றீகன்’ 90 விமானங்களை ஏற்றிச் செல்லக் கூடியது. அவ்வாறு 90 விமானங்களை கையாளக் கூடிய இடம் இலங்கையில் இல்லை. படைகள் நவீன கெலிக்கொப்டர்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றனர். கடந்த காலங்களில் போர்த்துகீசியர்கள் குழுக்களை கொண்டு வந்ததைப் போல அவர்கள் துருப்புக்களைக் கொண்டு வரவில்லை. ஜப்பான், தென்கொரியா மற்றும் டியேகோ கார்சியா ஆகிய இடங்களில் ஏற்கனவே தளங்களைக் கொண்டிருப்பதால், சிறிலங்காவில் தளம் அமைக்க வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு இல்லை. புதிதாக முன்மொழியப்பட்ட அக்சா உடன்பாட்டு வரைவில், அமெரிக்கா தொடர்பு புள்ளிகளை அதிகரித்துள்ளது. இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை தலைமையகங்கள் இதில் உள்ளடங்கியுள்ளன. இதுபற்றி நாங்கள் எதுவும் செய்ய முடியாது, இலங்கைக்கு முன்மொழியப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சுடன் தான் அமெரிக்கா இதுபற்றி இணங்க வேண்டும். அமெரிக்கா பல்வேறு நாடுகளுடன் கையெழுத்திட்டுள்ள சோபா உடன்பாடுகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை. 1995 இல் கையெழுத்திடப்பட்ட உடன்பாடு, பரஸ்பர பாதுகாப்பு உடன்பாடு அல்ல. ஆனால் அது, பொதுவாக அமெரிக்க இராணுவத்தினர், வெளிநாட்டு ஒன்றில் செயற்படும் கட்டமைப்பை நிறுவும் வகையிலானது. வெளிவிவகார அமைச்சர் அமெரிக்காவிற்குச் சென்றது அமெரிக்க அரசாங்கத்துடன் சோபா உடன்பாடு குறித்து பேசுவதற்காக அல்ல. இரு நாடுகளுக்கும் இடையிலான அனைத்து உடன்பாடுகள் குறித்தும் விவாதிக்கவே அவர் அங்கு சென்றிருந்தார். இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும், வழக்கமான செயல்முறையாகும். மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது, கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவை உடன்பாடு அமெரிக்காவுடன் கையெழுத்திடப்பட்டது. இந்த உடன்பாட்டின் கீழ், இலங்கையில் பணியாற்றும் அமெரிக்கப் படையினரும், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சின் சிவில் பணியாளர்களும் இராஜதந்திர சலுகைகளை அனுபவிக்கிறார்கள் . திருகோணமலை துறைமுகத்தை அல்லது வேறெந்த துறைமுகத்தையும், இந்தியாவுக்கு பாதகமான வகையில், இராணுவ பயன்பாட்டுக்காக எந்தவொரு நாட்டு இராணுவத்துக்கும் வழங்குவதில்லை என்று, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் செய்து கொண்ட உடன்பாட்டில் முன்னாள் அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தன உறுதியளித்துள்ளார். எனவே, அமெரிக்காவுக்கோ, சீனாவுக்கோ, பிரித்தானியாவுக்கோ அல்லது வேறெந்த நாட்டுக்கோ, துறைமுகங்கள் கிடையாது, ஆனால், அவர்கள் வந்து போகலாம்.’ என்றும் அவர் தெரிவித்தார். www.yaldv.com/உடன்பாட்டுக்கு-வந்தால்...
Checked
Fri, 07/19/2019 - 14:35
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed