புதிய பதிவுகள்

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!

2 days 23 hours ago
படம் : அன்னை (1962) வரிகள்: கண்ணதாசன் இசை : R சுதர்சனம் பாடியவர்: பானுமதி பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று காய்க்காத மரத்தடியில் தேனாறு பாயுதடா கனிந்துவிட்ட சின்ன மரம் கண்ணீரில் வாடுதடா (பூவாகி) பெற்றெடுக்க மனம் இருந்தும் பிள்ளைக்கனி இல்லை பெற்றெடுத்த மரக்கிளைக்கு மற்ற சுகம் இல்லை சுற்றமென்னும் பறவையெல்லாம் குடியிருக்கும் வீட்டில் தொட்டில் கட்டி தாலாட்டும் பேறு மட்டும் இல்லை பேறு மட்டும் இல்லை (பூவாகி) ஊருக்கெல்லாம் நான் கொடுத்தேன் திருப்பிக் கேட்கவில்லை உறவையெல்லாம் வாழவைத்தேன் கடனைக் கேட்கவில்லை எனக்குத் தந்த செல்வத்தையே திருப்பிக் கேட்க வந்தார் இந்தச் செல்வம் திருப்பித் தரும் செல்வமில்லை கண்ணே (பூவாகி) வேண்டும் என்று கேட்பவர்க்கு இல்லை இல்லை என்பார் வெறுப்பவர்க்கும் மறுப்பவர்க்கும் அள்ளி அள்ளித் தருவார் ஆண்டவனார் திருவுளத்தை யாரறிந்தார் கண்ணே யார் வயிற்றில் யார் பிறப்பார் யார் அறிவார் கண்ணே யார் அறிவார் கண்ணே (பூவாகி)

எழுக தமிழை ஏன் ஆதரிக்க வேண்டும் ?

2 days 23 hours ago
பிரபாகரனை எதிர்க்கிறோம் என்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தையே எதிர்த்துவிட்டு, இன்று தமிழ்மண் பறிபோகிறதே என்று அனைத்துத் தமிழர்களும் புலம்புவதைப்போன்ற நிலைமையே, விக்கினேசுவரனை எதிர்க்கிறோம் என்று எழுக தமிழை எதிர்ப்பதாலும் ஏற்படலாம். பட்டறிவைக்கொண்டு தமிழ்மக்கள் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். 🤔

ஜே கிருஷ்ணமூர்த்தியுடன் ஒரு மாலைப்பொழுது

3 days ago
நல்ல பதிவு ஜே.கிருஷ்ணமூர்த்தி ஒரு அற்புதமான மனிதன் .நாம் யார் என்பது பற்றியும் எமது உள் மனங்களின் குடைந்து உருளும் அந்த நச்சு பாம்பு பற்றியும் மனித நேயம் மனித சிந்தனை உலக சமாதானம் இவை அனைத்தயும் அழகான மொழியில் மிகவும் தெளிவாக விழகிய பெரும் தத்துவமேதை என்று சொல்லலாம் .

தனித்து போட்டியிடுவதே சிறந்தது – சந்திரிக்கா

3 days ago
தம்பி தமிழ் சிறி! களண்டு என்றால் நெகிழ்தல் என்றும் தமிழ் அகராதி சொல்லுது. குமாரசாமித் தாத்தா தமிழில் பழம் தின்று கொட்டை போட்டவர். உங்கள் தவறுக்கு நீங்கள் வரும் வெள்ளிக்கிழமை மாலை குமாரசாமித் தாத்தா அவர்களை மனதில் நிறுத்தி 100 தோப்புக்கரணம் போடவேணும்.🤣

எழுக தமிழை ஏன் ஆதரிக்க வேண்டும் ?

3 days 1 hour ago
எழுக தமிழை ஆதரித்து பல்வேறு ஈழ ஆதரவு சக்திகளும் ஒன்றுபட்டுவருகின்றன. இருப்பினும் ஆங்காங்கே சில முரண்பட்ட செய்திகளும் தகவல்களும் வெளிவராமலில்லை. எழுக தமிழ் நிகழ்வுகளின் வெற்றியை எவ்வாறாயினும் குழப்ப வேண்டும் என்பதுதான் அவ்வாறான செய்திகளதும் தகவல்களினதும் உள்நோக்கமாகும். இது ஒரு கட்சிக்கு சார்பானது, இதனால் விக்கினேஸ்வரன் பலமடைவார் என்றவாறான பிரச்சாரங்கள் அனைத்தும் மேற்படி உள்நோக்கத்தின் விளைவே! ஒரு மக்கள் இயக்கமான தமிழ் மக்கள் பேரவை, அதனுடன் கொள்கை அடிப்படையில் உடன்படக் கூடிய அரசியல் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு, மக்களுக்காக போராடும் போது, குறித்த அரசியல் கட்சிகள் இதனால் பயனடையும் என்று வாதிடுவதானது, அடிப்படையிலேயே தவறானதொரு புரிதலாகும். இவ்வாறு வாதிடுபவர்கள் எவரும் விபரம் அறியாமல் வாதிடவில்லை. அவ்வாறு வாதிடுபவர்களும் தங்களின் கட்சி நலன்களை முன்னிறுத்தியே மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர். எழுக தமிழ் தோல்வியடையும் போது, அதில் தங்களின் பங்களிப்பு இல்லாமையால்தான் அது தோல்வியடைந்தது என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதே அவ்வாறானவர்களது உண்மையான நோக்கமாகும். இதன் காரணமாகவே எழுக தமிழின் நோக்கம் தொடர்பில் அவ்வப்போது சில பிழையான அபிப்பிராயங்கள் வெளிவருகின்றன. தேர்தல் வெற்றியை மட்டும் இலக்கு வைக்கும் கட்சிகள் இவ்வாறு தங்களுக்குள் முரண்படுவது சாதாரணமான ஒன்றே ஆனால் கட்சி நலனையும் மக்கள் நலனையும் ஒன்றாக்கும் போதே இவர்கள் தவறு செய்யவிளைகின்றனர். மக்களுக்கு எதிராக சிந்திக்கின்றனர். இதில் மக்களுக்கே அதிக பொறுப்புண்டு. ஒரு விடயத்தை ஆதரிப்பதற்கு முன்னர் அதனை ஏன் ஆதரிக்க வேண்டும் என்னும் தெளிவு மக்கள் மத்தியில் இருக்க வேண்டியது அவசியம். மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாத போதுதான் போலியான பிரச்சாரங்கள் மக்களை வசியப்படுத்திவிடுகின்றன. எனவே முதலில் எழுக தமிழை ஆதரிப்பதற்கு முன்னர் ஏன் அதனை ஆதரிக்க வேண்டும் என்று பார்க்க வேண்டிய கட்டாயமான ஒன்றாகும். இந்தக் கேள்விக்கான பதிலை தேடுவதற்கு முன்னர் – எவ்வாறானதொரு காலகட்டத்தில் பேரவை எழுக தமிழுக்கான அழைப்பை விடுத்திருக்கின்றது என்பதற்கான பதிலை காண்போம். மகிந்த ராஜபக்ச சர்வாதிகார ஆட்சியை நோக்கிச் செல்கின்றார் எனவே அந்த ஆட்சியை தோற்கடிக்க வேண்டும் என்னும் ஒரு புறச்சூழலில்தான், 2015இல் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. அந்த ஆட்சி மாற்றம் தொடர்பில் அளவுக்கதிகமான நம்பிக்கைகள் விதைக்கப்பட்டன. இடைக்கால அறிக்கை, புதிய அரசியல் யாப்பு, சமஸ்டித் தீர்வு அதற்குள் மறைந்திருக்கிறது என்றெல்லாம் பேசப்பட்டுவந்தது. இறுதியில் அவற்றுக்கு என்ன நடந்தது? மீண்டும் தமிழ் மக்கள் மிக மோசமாக ஏமாற்றப்பட்டனர். தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற கூட்டமைப்பு, கடந்த நான்கு வருடங்காளக சிறிலங்கா அரசாங்கத்திற்கு முண்டுகொடுத்து வந்த நிலையில், அரசாங்கம் தங்களை ஏமாற்றிவிட்டதாக புலம்புகிறது. ஆட்சி மாற்றத்திற்கு பின்னரான அனுபவங்கள் தமிழர்களுக்கு ஒரு தெளிவான செய்தியை சொல்லியிருக்கிறது. அதாவது, சிங்கள ஆட்சியாளர்கள் எந்தக் கட்சி நிறத்திலிருந்தாலும் கூட, அவர்களின் அடிப்படையான அரசியல் பண்பில் எந்தவொரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை. கடந்த நான்கு வருடகால அனுபவங்கள் இதனை தெட்டத்தெளிவாக நிரூபித்திருக்கின்றது. அதே வேளை வெறும் தேர்தல்வாத அரசியல் கட்சிகள் எவற்றாலும், தமிழர் தாயகப்பகுதியின் மீதான திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்களை எந்த வகையிலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆட்சி மாற்றம் எதையெல்லாம் தடுக்கும் என்று சொல்லப்பட்டதோ, அது எவற்றையுமே அது தடுக்கவில்லை. மாறாக, தமிழர் தாயகப்பகுதியான வட-கிழக்கில் பௌத்தமயமாக்கல் தொடர்ந்தது, திட்டமிட்ட குடியேற்றங்கள் மிகவும் நுட்பமாக தொடர்ந்தன. தொல்பொருளியல் ஆய்வு என்னும் அடிப்படையில் தமிழர்களின் பாரம்பாரியமான கலாசாரா – மத இடங்கள் கபளீகரம் செய்யப்பட்டது. இது எவற்றையும் அரசாங்கத்திற்கு முண்டுகொடுத்து வந்த, கூட்டமைப்பால் தடுத்து நிறுத்த முடியவில்லை. இது ஒரு தெளிவான செய்தியை சொல்லியது. அதாவது, தமிழ் மக்கள் வெறுமனே தேர்தலில் வாக்களித்து, தங்களின் பிரதிநிதிகளை சிறிலங்காவின் பாராளுமன்றத்திற்கு அனுப்புவதால் மட்டும் பிரச்சினைகளை தீர்க்க முடியாது. அது சாத்தியம் என்றால், கடந்த நான்கு வருடங்களில் கூட்டமைப்பால் பல்வேறு விடயங்களை சாதித்திருக்க முடியும் ஆனால் எதுவும் முடியவில்லை. எனவேதான் கட்சிகளை நம்பிக்கொண்டிருத்தல் என்பதற்கும் அப்பால் செயலாற்றவேண்டியிருக்கிறது. அதற்காக மக்கள் ஒரு இயக்கத்தின் கீழ் அணிதிரண்டு போராட வேண்டியிருக்கிறது. இவற்றின் மூலம்தான் தமிழ் மக்களின் தலையை நோக்கி வரும் ஆபத்தை ஆகக் குறைந்தது தோளோடாவது தடுத்து நிறுத்த முடியும். இவ்வாறானதொரு அரசியல் சூழலில்தான், தமிழ் மக்கள் பேரவை எழுக தமிழிற்கான அழைப்பை விடுத்திருக்கிறது. இப்போது இந்த எழுக தமிழை ஏன் ஆதரிக்க வேண்டும் என்பதற்கான பதிலை காண்பதில் சிரமமிருக்காது. இதற்கு மேலும் எழுக தமிழ் தொடர்பில் ஒருவருக்கு தடுமாற்றமும் சந்தேகமும் இருப்பின், பேரவை, விக்கினேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் இதனுடன் கைகோர்த்திருக்கும் ஏனைய கட்சிகள் அனைத்தையும் விட்டுவிட்டு, எழுக தமிழுக்காக முன்வைக்கப்பட்டிருக்கும் கோரிக்கைகளை மட்டுமே கருத்தில் கொள்ளலாம் – செயற்படலாம். ஏனெனில் 2009இற்கு பின்னர் – தமிழ் மக்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆதிரிக்கக் கூடிய எந்தவொரு அரசியல் கட்சியோ, மக்கள் இயக்கங்களோ வடக்கு கிழக்கில் இல்லை என்பது உண்மையே! அவ்வாறு மக்கள் ஆதரிக்கக் கூடியளவிற்கான அர்ப்பணிப்போடும் தியாகசிந்தையோடும் எந்தவொரு தலைமையும் இல்லை என்பதும் உண்மையே! இதுதான் யதார்த்தம் என்றாலும் கூட. நாம் எந்தவொரு நிகழ்வையும், அதற்கு தலைமை தாங்குவோரையும் குறிப்பிட்ட சூழலில் வைத்துத்தான், மதிப்பிட வேண்டும். அந்த வகையில் நோக்கினால் பேரவையின் எழுக தமிழுக்கு இன்றைய காலத்தில் ஒரு வரலாற்றுப் பாத்திரம் உண்டு. ஈழத் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி சிந்திக்கும் அனைவரும் கட்சி பேதங்களையும், கடந்தகால கசப்புக்களையும் மறந்து ஓரணியில் திரண்டு, எழுக தமிழை வெற்றிபெறச் செய்ய வேண்டிய ஒரு காலத்தேவையாகும். காலத்தை தவறவிட்;டால் பின்னர் கண்டவரெல்லாம் கதவைதட்டும் போது, தமிழ் மக்கள் வெறும் பார்வையாளராக மட்டுமே நிற்க நேரிடும். பேரவையின் எழுக தமிழுக்கான கோரிக்கைகள் முற்றிலும் சரியானவை – நியாயமானவை. அதாவது, சிங்கள, பௌத்த மயமாக்கலை உடனடியாக நிறுத்து, சர்வதேச போர்க்குற்ற விசாரணையை நடத்து, தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உடனடி விசாரணை நடத்து, வடக்கு – கிழக்கில் இராணுவ மயமாக்கலை நிறுத்து மற்றும் இடம்பெயர்ந்த அனைவரையும் அவர்களது பாரம்பரிய இடங்களில் மீளக்குடியமர்த்து – ஈழத் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி சிந்திக்கும் ஒருவரால் இந்தக் கோரிக்கைகளை எவ்வாறு நிராகரிக்க முடியும் – எவ்வாறு எழுக தமிழை எதிர்க்க முடியும்? -கரிகாலன் http://thamilkural.net/?p=2110

காஷ்மீரில் நிலம்; கர்நாடகா அரசு தீவிரம்

3 days 3 hours ago
ஜம்மு - காஷ்மீரில், கர்நாடக அரசு சார்பில் நிலம் வாங்க முடிவு செய்துள்ளதாக, அம்மாநில சுற்றுலா துறை அமைச்சர், சி.டி.ரவி, நேற்று தெரிவித்தார். ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க, மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், பிரபல வர்த்தக நிறுவனங்கள், தங்கள் கிளைகளை, ஜம்மு - காஷ்மீரில் துவக்குவோம் என அறிவித்துள்ளன. அதே போல, மஹாராஷ்டிரா உட்பட பா.ஜ., ஆளும் மாநில அரசுகளும், இம்மாநிலத்தில் தங்கள் சுற்றுலா துறையை மேம்படுத்த முடிவு செய்துள்ளன. இந்த வரிசையில், கர்நாடகாவும், ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலாவை மேம்படுத்த தீர்மானித்துள்ளது. இது பற்றி, கர்நாடக சுற்றுலா துறை அமைச்சர், சி.டி.ரவி அளித்த பேட்டி: கர்நாடக அரசு சார்பில், ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலாவை மேம்படுத்த முடிவு செய்துள்ளோம். இது குறித்து, அமைச்சரவையில் விவாதித்து ஒப்புதல் பெறப்படும். பின், ஜம்மு - காஷ்மீரில் முதலீடு செய்ய அனுமதி கொடுக்குமாறு, மத்திய அரசு மற்றும் ஜம்மு - காஷ்மீர் துணை நிலை ஆளுநருக்கு கடிதம் எழுதுவோம். இதற்காக, நாட்டின் எல்லை மாநிலமான காஷ்மீரில், நிலம் வாங்க முடிவு செய்துள்ளோம். அந்த இடத்தில், கர்நாடக சுற்றுலா மேம்பாட்டு வாரியம் அமைக்கும் யோசனை உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். https://www.dinamalar.com/news_detail.asp?id=2366548

பாக். ராணுவ அத்துமீறல்களைக் கண்டித்து போராட்டம்

3 days 3 hours ago
ஆக்ரமிப்பு காஷ்மீரில் உள்ள பலூசிஸ்தானில் உள்ள சிறுபான்மை இந்துக்கள், சிந்தி இனத்தவர் மற்றும் சீக்கியர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் அத்துமீறல்களைக் கண்டித்து,ஜெனிவா ஐ.நா மனித உரிமைகள் ஆணைய கட்டடம் அருகே பலூசிஸ்தான் இயக்கத்தவர் தர்ணா போராட்டம் நடத்தினர். சிந்திக்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற முழக்கத்தை அவர்கள் எழுப்பினர்.பலூசிஸ்தானில் சீனாவின் ஏகாதியபத்தியத்தையும் அவர்கள் கண்டனம் செய்து கோஷங்களை எழுப்பினர். பலூசிஸ்தானில் ஏராளமான கிராமங்கள் ராணுவ அதிகாரிகளால் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.ராணுவ நடவடிக்கையால் சுமார் 6 ஆயிரம் பேர் காணாமல் போய்விட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். https://www.polimernews.com/dnews/79942/பாக்.-ராணுவ-அத்துமீறல்களைக்கண்டித்து-தர்ணா-போராட்டம்

ஆணுக்குப் பெண் தாலி கட்டுதல்

3 days 5 hours ago
பெண் வாசனையே வேண்டாம் என்று சொன்ன ஒருவர் கலியாணம் கட்டி யாழுக்கு வருவதை குறைத்ததையும் நாங்கள் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறம்.... ஆள் ஆர் என்று மட்டும் சொல்ல மாட்டேன் 😁

சமூக வலைத்­த­ளங்­களில் அதி­க­மான நேரத்தை செல­விடும் இள­வ­ய­தி­ன­ருக்கு மன­நல பாதிப்பு

3 days 5 hours ago
சமூக வலைத்­ த­ளங்­களில் தின­சரி 3 மணித்­தி­யா­லங்­க­ளுக்கும் அதி­க­மான நேரத்தைச் செல­விடும் இள­வ­ய­தி­ன­ருக்கு மன­நலப் பிரச்­சி­னைகள் ஏற்­படும் அபாயம் அதி­க­மா­க­வுள்­ள­தாக புதிய ஆய்­வொன்று எச்­ச­ரிக்­கி­றது. பேஸ்புக், இன்ஸ்­டா­கிராம் மற்றும் டுவிட்டர் உள்­ள­டங்­க­லா­ன சமூக வலைத்­த­ளங்­களில் அதிக நேரத்தைச் செல­விடும் இள­வ­ய­தினர் மனப் பதற்றம், மன அழுத்தம் என்­ப­வற்­றுக்கு தாம் உள்­ளா­கி­யுள்­ள­தாகத் தெரி­வித்­துள்­ளனர். அமெ­ரிக்க மேரி­லான்ட்டில் பல்­ரி­மோ­ரி­லுள்ள ஜோன் ஹொப்கின்ஸ் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த குழு­வி­னரால் இந்த ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது. இதன்­போது சமூக வலைத்­த­ளங்­களில் அதிக நேரத்தைச் செல­விடும் இள ­வ­ய­தி­ன­ரி­டையே ஆக்­கி­ர­மிப்­பு­ணர்வு, மற்­ற­வர்­களைக் கொடு­மைப்­ப­டுத்தல் போன்ற உணர்­வுகள் அதி­க­மாகக் காணப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. https://www.virakesari.lk/article/64732

கனிமொழி இலங்கை பயணம்: தமிழக மீனவர்கள் மீதான கடற்படை தாக்குதல் குறித்த கேள்வியும், அமைச்சகத்தின் பதிலும்

3 days 5 hours ago
கூட்டு சரியில்லை. தமிழர்களை விற்று பிளைப்பு நடத்தும் கூட்டம்.

கனிமொழி இலங்கை பயணம்: தமிழக மீனவர்கள் மீதான கடற்படை தாக்குதல் குறித்த கேள்வியும், அமைச்சகத்தின் பதிலும்

3 days 8 hours ago
ஊழ‌ல் செய்து சிறைக்கு சென்று பிற‌க்கு வெளியில் வ‌ந்து இந்த‌ ஊட‌க‌ங்க‌ள் முன்னால் எப்ப‌டி தான் த‌ல‌ காட்ட‌ முடியுதோ , வெக்க‌ம் கெ.......ள்

ஆணுக்குப் பெண் தாலி கட்டுதல்

3 days 8 hours ago
இது ஆண் தோற்றத்தில் இருக்கும் பெண்ணாக இருக்கலாம்.. அது பெண் தோற்றத்தில் இருக்கும் ஆணாக இருக்கலாம். சும்மா விட்டுத்தள்ளுங்க. பொழுதுபோக்க ஏதாவது ஒன்று செய்தியாக வேண்டும். அதில் ஓசி விளம்பரம் வேறு. தாலியே கட்டமாட்டம் என்று விளம்பர.. வகுப்பெடுத்தவை எல்லாம் தங்கட கலியாணங்களில் கட்டிக்காட்டினவை. அப்படியாப்பட்ட சமூகத்தில்.. இதெல்லாம் சகஜமப்பா. 🤣
Checked
Tue, 09/17/2019 - 06:01
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed