புதிய பதிவுகள்

ரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)

1 day 2 hours ago
கால்பந்தாட்ட வரலாற்றில்... இடம்பெற்ற விசித்திரமான பெனால்டி உதை. தாய்லாந்தில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டியில்.. விசித்திரமான முறையில் பெனால்டி உதையொன்று இடம்பெற்றுள்ளது. தாய்லாந்தில் நடைபெற்ற 18 வயதிற்குட்பட்டோருக்கான உள்ளூர் போட்டியொன்றில் உள்ளூர் அணிகளான பங்கொக் ஸ்போர்ட்ஸ் கழகம் மற்றும் சாத்திரி அங்தானாங் ஆகிய இரு அணிகள் மோதிக்கொண்ட போட்டியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Rise of Empires : Ottoman (Netflix)

1 day 3 hours ago
ஒவ்வொரு சாம்ராஜ்யத்தின் எழுச்சிக்கு பின்னும் இன்னொரு சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சி இருக்கும் .1453 ல் கொன்ஸ்தாந்திநேபிள் ஓட்டமன் துருக்கியரால் கைப்பற்றப்பட்டது என்பதை ஒரு வரியில் கடந்து சென்றிருப்போம் அதன் பின் உள்ள ரத்தகளரியான வீரம்செறிந்த வரலாற்றை சொல்வது தான் Rise of Empires : Ottoman (Netflix) (மெ(மு)ஹமட்-(II) VS கொன்ஸ்ரன்டைன் (XI)) மேற்கு வரலாற்றாசிரியர்களால் மெகமட் ன் இந்த வெற்றியும் அவனின் சிறப்புகளும் எந்தளவுக்கு வரலாற்றில் சிறப்பாக கூறப்படிருக்கிறதோ தெரியவில்லை துருக்கியர்களால் இயன்றவரை அவரின் சிறப்புகள் புத்தி கூர்மை வீரம் என எல்லாம் சிறப்பாக காட்டப்பட்டிருக்கிறது மெகமட் தாய் எந்த நாட்டவர் என இன்று வரை வரலாற்றாசிரியர்களால் தெளிவாக கூறமுடியவில்லை போலிருக்கிறது .சிறுவயதில் தாயைப்பிரிந்து தந்தையிடம் செல்லும் முகமட் அங்கு தனது தந்தையின் இரண்டாவது மனைவியினால்(சித்தி) வளர்க்கபடுகிறார் அவரின் அறிவுரைகள் மற்றும் வளர்ப்பு முறைகளே மிகச்சிறந்த ஒரு பேரரசனாக எதிர்காலத்தில் அவரை உருவாக்கியது.கிட்டத்தட்ட 12 மொழிகளை பேசக்கூடியதாக இருந்தார் .12 வயதில் தந்தையிடமிருந்து சிம்மாசனம் இவரின் கைக்கு மாறுகிறது தனது கைக்கு வந்தவுடன் அவரின் முதல் இலக்காக அவர் குறி வைத்தது தந்தையால் பலமுறை முயன்றும் வெற்றி பெறமுடியாமல் போனதும் 1300 ஆண்டுகளாக எதிரிகளால் வெல்லப்படமால் இருந்ததும் இரண்டு கடல்கள் சந்திக்கும் இடத்தில் அமைந்திருந்ததும் இரண்டுகண்டங்களின் சந்தியாக இருந்ததும் வெல்லமுடியாத கோட்டை சுவர்களை கொண்டிருந்ததுமான தங்க கொம்பு என்று அழைக்கப்படும் இயற்கை துறைமுகத்தை தன்னகத்தே கொண்டதுமான கொன்ஸ்தாந்திநேபிளை... தலைமை அமைச்சரிலிருந்து முழு அமைச்சரவையே அவரின் முடிவுக்கு எதிராக இருந்தது.இறுதியில் கொடுத்த அரசை தந்தை திரும்ப எடுத்து கொண்டு தனது பிரதிநிதியாக இருக்குமாறு தலைநகரிலிருந்து நீண்ட தொலைவில் உள்ள ஒரு பகுதிக்கு மஹ்மட்டை அனுப்புகிறார். தனது 21 ஆவது வயதில் தந்தையின் இறப்பின் பின் அரியணை ஏறும் மஹ்மட் தனது நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் நோக்கில் 70ஆயிரம் துருப்பினருடன் பயணமாகிறார் .. தனது தந்தையின் தோல்விகளிலிருந்து பாடம் கற்றிருந்த மஹ்மட் மிகப்பலம் வாய்ந்த உயரமான கோட்டை சுவர்களை தகர்ப்பதன் மூலம் மட்டுமே நகரத்தை கைப்பற்ற முடியும் என அதற்கான வழிகளை தேடுகிறார் ஹங்கேரிய நாட்டு டிசைனர் ஒருவர் 8மீ நீளம் மற்றும் 2மீட்டர்.அளவான விட்டம் கொண்ட பீரங்கி தயாரிப்பதற்கான மாதிரி வரைபடத்தை அவர்முன் காட்ட அதை உருவாக்கி அதையே தனது இரகசிய ஆயுதமாக கொண்டு முற்றுகையை ஆரம்பிக்கிறார் .. முற்றுகை குறிப்பிட்ட காலத்திற்குள் முறியடிக்கப்பட வேண்டும் இல்லாவிட்டால் ரோமிலிருந்த போப்பின் உதவி வந்துவிடும் . மஹ்மட் இரகசிய ஆயுதம் பீரங்கிகளாக இருக்க கிழக்கு ரோமானியர்களின் ஆயுதமாக இத்தாலிய கடல் கொள்ளை காரனும் மிகச்சிறந்த வாள் சண்டை வீரனும் கோட்டை களை பாதுகாப்பதில் வல்லவனுமான Giustiniani யையும் அவனின் படையையும் கோட்டையை பாதுகாக்கும் பொறுப்பில் விடுகின்றார் கொன்ஸ்டன்டைன்-11 இடைவிடாது முழங்கும் பீரங்கிகளால் கோட்டை சுவர்கள் விரிசல் விழுந்தாலும் துருக்கியர்களின் ஒவ்வொரு தாக்குதல்களையும் giustiniani யும் அவரின் படையும் முறியடிக்கிறது முற்றுகை நாள்கள் நீள தொடங்குகின்றன. இறுதியில் முற்றுகை தொடங்கி 8 வாரங்களின் பின் தொடர் முற்றுகைகளினாலும் முகமட் இன் சில தாக்குதல் உத்திகளினாலும் கொன்ஸ்தாந்திநேபிள் துருக்கியர் வசமானது . எப்படி என்பதை நெட் ப்ளிக்ஸ் ல் பார்த்து மகிழுங்கள் (1922 வரை அவர்கள் வசம் இருந்ததாக வரலாறு சொல்கிறது) கொன்ஸ்தாந்திநேபிள் துருக்கியர் வசமானதன் பின்னரே மேற்கு நாடுகள் வேறு வழிகளை தேடி தமது பயணங்களை ஆரம்பித்தனர் . 1497 ல் அப்படி வந்த ஒரு ஐரோப்பிய நாட்டவன் தன் குழுவினருடன் கள்ளிகோட்டை ( கேரளா) துறைமுகத்தையும் (1505ல் காலி- இலங்கை துறைமுகத்தையும் கண்டடைந்தததாக வரலாறு சொல்கிறது )

நாடளாவிய ரீதியில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் In இலங்கை February 1

1 day 3 hours ago
நாடளாவிய ரீதியில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள போலி வைத்தியர்களை இனங்கண்டு தண்டிக்க நடைமுறையில் சட்டங்களில் திருத்தங்களை கொண்டுவருமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாடுமுழுவதும் சுமார் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான போலி வைத்தியர்கள் மக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. அவ்வாறான போலி வைத்தியர்களில் சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமானோரை அடையாளம் கண்டுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித்த அளுத்கே தெரிவித்துள்ளார். எனவே, அவ்வாறான போலி வைத்தியர்களை இனங்கண்டு, அவர்களைத் தண்டிக்க நடைமுறையில் சட்டங்களில் திருத்தங்களை கொண்டுவருமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/நாடளாவிய-ரீதியில்-சுமார்/

தமிழர்களின் நீண்ட காலக் கோரிக்கை தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஞானசார தேரர்!

1 day 3 hours ago
தமிழர்களின் நீண்ட காலக் கோரிக்கை தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஞானசார தேரர்! சாய்ந்தமருதில் புதிய பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டதைப் போன்று, தமிழர்களின் நீண்ட காலக் கோரிக்கையாக இருக்கும் கல்முனையிலும் தனிப் பிரதேச செயலகத்தை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் “சாய்ந்தமருது தனி பிரதேச செயலக பிரிவாக பிரித்தமை உண்மையில் வரவேற்கத்தக்க ஒன்றாகும். இதுதொடர்பில் இன்று பலரும் அச்சமடைந்து, சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் எதிர்ப்பினை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால், அவ்வாறு அச்சமடையத் தேவையில்லை. இது மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடாகத்தான் நாம் கருதுகிறோம். அதேபோல், 30 வருடங்களாக கல்முனையில் தனிப் பிரதேச செயலகம் வேண்டும் என தமிழ் மக்கள் கோரிக் கொண்டிருக்கிறார்கள். இதுதொடர்பாக போராட்டங்களைக் கூட தமிழர்கள் மேற்கொண்டிருந்தார்கள். எனவே, சாய்ந்தமருது மக்களுக்கு செய்த சேவையைப் போல, இந்த தமிழ் மக்களுக்கான கோரிக்கைகையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்திடம் நாம் கேட்டுக் கொள்கிறோம். எனவே, கல்முனையில் தனியான பிரதேச சபை ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதுதான் எமது கோரிக்கையாக இருக்கிறது. சஹ்ரானின் சம்பவத்தை வைத்துக் கொண்டு இந்த விடயத்தில் சிலர் கருத்து வெளியிட்டாலும், அரசாங்கத்தின் தற்போதைய செய்றபாடு தொடர்பாக எவரும் குழப்பமடையத் தேவையில்லை” என அவர் கூறினார். http://athavannews.com/தமிழர்களின்-நீண்ட-காலக்/

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை உறுதி செய்ய அமெரிக்கா முயற்சி எடுக்கும் – கூட்டமைப்பிடம் அமெரிக்க காங்கிரஸ் உறுதி!

1 day 3 hours ago
வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை உறுதி செய்ய அமெரிக்கா முயற்சி எடுக்கும் – கூட்டமைப்பிடம் அமெரிக்க காங்கிரஸ் உறுதி! இலங்கை அரசாங்கமானது தமக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதனை உறுதிசெய்யும் வகையில் அமெரிக்கா அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார். அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினரும் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களின் வெளிவிவகார உபகுழுவின் தலைவருமான அமி பேரா இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து குழுவினரை தெளிவுபடுத்திய இரா.சம்பந்தன், தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியல் யாப்பு உ ருவாக்கம் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார். ஆனால் தற்போதைய அரசாங்கம் வேறுவிதமான நிலைப்பாட்டினை கொண்டுள்ளதாகவும் பெருன்பான்மை மக்கள் அதிகாரபரவலாக்கத்திற்கு அங்கீகாரம் அளிக்கவில்லை எனவும் அத்தகைய சந்தர்ப்பத்தில் மாற்று வழிகளை யோசிக்க வேண்டும் எனவும் உண்மைக்கு புறம்பாக அறிக்கைகள் வெளியிடுவதனையும் சுட்டிக்காட்டினார். தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் இந்த விடயம் தொடர்பில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர். அவை அனைத்தும் பதியப்பட்டவையாக உள்ளன எனவே இத்தகைய நிலையில் சர்வதேச சமூகம் ஐந்தே வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுவதனை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இந்த வாக்குறுதிகள் அனைத்தும் விடுதலைப்புலிகளின் காலத்தில் கொடுக்கப்பட்டவை எனவும் தற்போது விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள் என்கிற காரணத்தினால் வாக்குறுதிகளில் இருந்து இலங்கை அரசாங்கம் பின்வாங்க முடியாது என்பதனையும், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்க முடியாது என்பதனையும் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார். உலகின் பலவேறு பகுதிகளில் உள்ளவாறு ஒரு அதிகாரபரவலாக்கத்தின் மூலமான அரசியல் தீர்வொன்றினை நாம் எதிர்பார்க்கிறவம் என் வலியுறுத்திய இரா சம்பந்தன் அவர்கள், இலங்கை எனது நாடு இங்கே சம உரிமையுள்ள பிரஜையாக நான் மதிக்கப்படவேண்டும். அண்மையில் இலங்கை பிரதமருடனான ஊடக சந்திப்பில் இந்திய பிரமர் இலங்கை மக்கள் நீதியுடனும் சமத்துவத்துடனும் அமைதியுடனும் வாழ்வதற்கான சூழல் அமைய வேண்டும் என்பதனை வலியுறுத்தி இருந்தார் என்பதனையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சுட்டிக்காட்டினார். நியாயமுள்ள அரசியல் தீர்வொன்றினை அடைய முடியாதே போனால் அது பாரிய பின்விளைவுகளை கொண்டுவரும் என தெரிவித்த இரா.சம்பந்தன், தமிழ் தலைவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை சிங்கள தலைவர்கள் மதிக்காதன் விளைவே விடுதலைப்புலிகளின் உருவாக்கத்திற்கு காரணம் என்பதனையும் சுட்டிக்காட்டினார். இதன்போது கருது தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் அவர்கள் 2012ம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய இராஜ்ஜியம் மனித உரிமை பேரவையில் முன்வைத்த பிரேரணையின் அமுலாக்கத்தின் அவசியம் குறித்து தெளிவுபடுத்தினார். மேலும் நிலையான அரசியல் தீர்வு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றினை நிலைநாட்ட வேண்டுமெனில் பிரேரணையில் உள்ள விடயங்கள் அமுலாக்கப்படவேண்டும் எனவும் சுமந்திரன் வலியுறுத்தினார். இதற்கப்பால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலைமை தொடர்பில் உண்மைகள் கண்டறியப்படுவதன் அவசியத்தினை விளக்கிய திரு சுமந்திரன் அவர்கள் தம் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அறிந்துகொள்ளாமல் எந்தவொரு நஷ்ட ஈட்டிற்கும் எம்மக்கள் அணுமதிக்கப்போவதில்லை என தெரிவித்த சுமந்திரன், அரச படைகளிடம் கையளிக்கப்பட்டவர்கள் இருந்திருப்பின் அவர்கள் எவ்வாறு இறந்தார்கள் என்ற உண்மை வெளிக்கொணரப்படவேண்டும் எனவும் தெரிவித்தார். உண்மையை கண்டறிந்து நஷ்ட ஈடு வழங்குவதில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலம் மற்றும் நஷ்ட ஈட்டு அலுவலகம் என்பன சேர்ந்து இயங்க வேண்டும் என தாம் எதிர்பார்த்ததாகவும் அது தற்போது நிகழ்வதற்கான சாத்தியங்கள் குறைவு எனவும் தெரிவித்த இரா.சம்பந்தன், எம்மால் இயலுமான அனைத்தையும் நாம் செய்து விட்டோம் இனிமேல் இலங்கை அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவனத்தை சர்வதசேச சமூகம் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார். பொருளாதார முன்னேற்றம் தொடர்பில் கருத்து தெரிவித்த எம். ஏ. சுமந்திரன் அவர்கள் வேலைவாய்ப்பின்மையை குறைக்கும் முகமாக புதிய அபிவிருத்தி திட்டங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களிற்கு தேவை என்பதனை சுட்டி காட்டினார். மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களிற்கு ஒரு விசேட வேலைத்திட்டம் தேவை என்பதனையும் சுட்டிக்காட்டிய எம். ஏ சுமந்திரன் மீன்பிடித்துறை , விவசாயம், பண்ணனை வளர்ப்பு போன்ற துறைகள் நவீனமயப்படுத்தப்பட வேண்டியதன் அவைசியத்தினையும் சுட்டிக்காட்டினார். சர்வதேச சமூகத்தின் குரல் இலங்கை விடயம் தொடர்பில் பல்வேறு மட்டங்களில் கேட்ட வேண்டும் எனவும் தமிழ் மக்களிற்கான ஒரு அரசியல் தீர்வு எட்டப்படும் பணியில் சர்வதேசத்தின் பங்களிப்பு அத்தியாவசியமானது எனவும் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார். http://athavannews.com/வாக்குறுதிகளை-நிறைவேற்-2/

கோட்டாவிடம் மஹிந்த முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கை

1 day 3 hours ago
கோட்டாவிடம் மஹிந்த முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கை நாடாளுமன்றத்தை கலைத்து உடனடியாக பொதுத்தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னெடுக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். ஏனெனில், அரசியல் பழிவாங்கள், முரண்பாடான அரசியல் நிர்வாகம் ஆகியவற்றைக் கொண்டு நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பதுளையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த பிரதமர், “நாம் எதிர்க்கட்சியாக செயற்பட்ட கடந்த ஐந்து வருட காலத்தில் பதவியில் இருந்த அரசாங்கம் செயற்பட்ட விதம் தொடர்பாக மகிழ்ச்சியடைய முடியாது. பெருமளவான அரசமுறை கடன் சுமையை மிகுதி வைத்துவிட்டே அவர்கள் சென்றுள்ளார்கள். நாங்கள் அதிக கடன்களைப் பெற்றதாக அவர்கள் குற்றம் சுமத்தினாலும் நாம் பெற்ற கடன்கள் ஊடாக அதிவேக நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் போன்ற பல்வேறு செயற்திட்டங்களை கட்டியெழுப்பியுள்ளோம். தற்போது புதிய அரசாங்கமும் புதிய ஜனாதிபதி, பிரதமரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஆனாலும் நாடாளுமன்றத்தில் எங்களுக்கு பெரும்பான்மை பலம் இல்லை. கடன்களை மீள்செலுத்துவதற்கு நாம் சட்டமூலமொன்றை கொண்டுவர தயாராகி வருகின்றோம். எதிரணி விரும்பினால் அதனை தோற்கடிக்க முடியும். அவ்வாறு தோற்கடிக்கும் பட்சத்தில் நாட்டின் எதிர்கால அபிவிருத்தி பயணம் பாதிப்படையும். ஆனாலும் நாட்டின் அபிவிருத்திக்கு எதிர்தரப்பினரால் மிக சொற்ப காலத்திற்கே இடையூறு விளைவிக்க முடியும். ஏனெனில் எதிர்வரும் மார்ச் மாதத்தில் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான முதலாவது வாய்ப்பு கிடைக்கும். அந்த முதல் வாய்ப்பிலேயே நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்வதற்கு ஜனாதிபதியை கேட்டுக்கொள்கின்றோம்” என மேலும் தெரிவித்துள்ளார். http://athavannews.com/கோட்டாவிடம்-மஹிந்த-முன்வ/

143 புதிய அரசியல் கட்சிகள் பதிவு – தேர்தல்கள் ஆணைக்குழு

1 day 3 hours ago
143 புதிய அரசியல் கட்சிகள் பதிவு – தேர்தல்கள் ஆணைக்குழு பொதுத் தேர்தல் தொடர்பாக புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான 143 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்று (திங்கட்கிழமை) மாலை 4 மணியுடன் நிறைவடைந்ததாகவும் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இவ்வாறு கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணையகம் முன்னெடுக்கும் என ஆணையகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இதற்கிடையில், தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் இன்று அல்லது நாளை கூடி எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடவுள்ளனர். புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்ய விண்ணப்பிப்பதற்கான நடவடிக்கை கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி ஆரம்பமானது. அதற்கமைய கிடைத்துள்ள விண்ணப்பங்களை பரீசீலனை செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. அந்த பரிசீலனைகளின் பின்னர், புதிய கட்சிகளை பதிவு செய்வதற்காக தெரிவு செய்யப்படவுள்ள அரசியல் கட்சிகளின் பிரதநிதிகள் நேர்முகத் தேர்வுக்கு உட்படுத்தப்படுவதுடன், அதன் பின்னரே புதிய கட்சிகள் பதிவு செய்யப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை 70 அரசியல் கட்சிகளின் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக பதிவுச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/143-புதிய-அரசியல்-கட்சிகள்-ப/

சஜித் பிரேமதாசவை கூட்டமைப்பினர் பின்பற்ற வேண்டும்- பந்துல

1 day 3 hours ago
சஜித் பிரேமதாசவை கூட்டமைப்பினர் பின்பற்ற வேண்டும்- பந்துல சஜித் பிரேமதாச கொண்டுள்ள நாட்டுப்பற்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் கற்றுக்கொள்ள வேண்டுமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்கா செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக பந்துல குணவர்தன மேலும் கூறியுள்ளதாவது, “பிரிவினைவாதத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் குறியாக இருக்கின்றனர். இராணுவத் தளபதிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் அமெரிக்க அரசாங்கம் விதித்துள்ள தடையை, தமிழ்தேசிய கூட்டமைப்பினர் வரவேற்று ஆதரித்திருப்பது மிகுந்த கவலையளிக்கின்றது. இதேவேளை இராணுவத் தளபதிக்கு பக்கச்சார்பான அமெரிக்க அரசாங்கத்தின் தீர்மானத்தை சஜித் பிரேமதாச கண்டித்துள்ளதை நாம் வரவேற்கின்றோம். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் இவ்விடயத்தில் எதிர்க்கட்சித் தலைவரை முன்னுதாரணமாகக் கொண்டு செயற்பட வேண்டும். அதாவது சஜித் பிரேமதாசவிடம் காணப்படுகின்ற நாட்டுப்பற்றை கூட்டமைப்பினரும் கற்றுக்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/சஜித்-பிரேமதாசவை-கூட்டமை/

தமிழக அரசு தொடர்ந்த மூன்று அவதூறு வழக்குகள்: ஸ்டாலினுக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

1 day 3 hours ago
தமிழக அரசு தொடர்ந்த மூன்று அவதூறு வழக்குகள்: ஸ்டாலினுக்கு நீதிமன்றம் அழைப்பாணை! ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் இரண்டு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்த கருத்துகள் தொடர்பாக 3 ஆவது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் 3 வழக்குகளிலும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆஜராக முதன்மை அமர்வு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. இந்த மூன்று அவதூறு வழக்குகளும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் முன் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முதல் இரண்டு அவதூறு வழக்குகளில் மார்ச் 4 ஆம் திகதி அன்றும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பற்றி கருத்து தெரிவித்தது தொடர்பான 3 ஆவது அவதூறு வழக்கு பெப்ரவரி 24 ஆம் திகதியும் ஆஜராக வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பாணை விடுத்து நீதிபதி உத்தரவிட்டார். மத்திய அரசின் தரவரிசைப் பட்டியலின்படி மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதற்கான குறியீடுகளில் தமிழகம் முதல் மாநிலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அது குறித்து கருத்து தெரிவித்திருந்த ஸ்டாலினின் பேட்டி முரசொலி நாளிதழில் கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி வெளியானது. அதேபோன்று, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி திமுக தலைவர் ஸ்டாலின், தன்னுடைய முகநூல் பக்கத்தில் குடியுரிமைச் சட்டத் திருத்தம் தொடர்பாக தெரிவித்திருந்த கருத்து, டிசம்பர் 30 ஆம் திகதி முரசொலி நாளிதழில் வெளியானது. இந்த இரு சம்பவங்களிலும், முதல்வரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் ஸ்டாலின் அவதூறு கருத்துத் தெரிவித்துள்ளதாக தமிழக முதல்வர் சார்பில் நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். அந்த மனுவில், தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாகப் பேசியுள்ள ஸ்டாலினை, அவதூறு சட்டப் பிரிவுகளின் கீழ் தண்டிக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது. இதுதவிர உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து ஸ்டாலின் பேசிய கருத்துகள் தொடர்பாகவும் அரசு சார்பில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டது. http://athavannews.com/தமிழக-அரசு-தொடர்ந்த-மூன்/
Checked
Wed, 02/19/2020 - 08:25
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed