புதிய பதிவுகள்

இலங்கை தமிழ் அகதிகள் விவகாரம் இந்திய அரசாங்கத்துடன் விரைவில் பேச்சுவார்த்தை : த.தே.கூ

6 hours 30 minutes ago
கோமாளிகள் வந்தால் அது நகைச்சுவைப்பகுதியும் , செய்தியும் ஆகும் இங்கு புடுங்க முடியல அங்குள்ள அகதிகளுக்கு புடுங்க போறாங்களாம் வெண்ணைகளா

பற்றி எரிகிறது அசாம்: துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி

7 hours 2 minutes ago
குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: யப்பான் பிரதமரின் இந்தியா வருகை திடீர் ரத்து.! வரும் 15-ம்தேதி கவுகாத்தி நகரில் பிரதமர் மோடியும், யப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும் சந்தித்து பேசுவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், குடியுரிமைத் திருத்த மசோதாவுக்கு எதிராக தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களில் கலவரமும், போராட்டமும் நடப்பதால், யப்பான் பிரதமர் தனது பயணத்தை ரத்து செய்துள்ளார் எனத் தெரிகிறது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ராவேஷ் குமார் கூறுகையில் “ வரும் 15 முதல் 17-ம் தேதிவரை கவுகாத்தியில் இந்தியா-யப்பான் பிரதமர்கள் இடையிலான சந்திப்பு நடக்குமா என உறுதியாகக்கூற முடியாது. அது குறித்து எந்த தகவலும் அரசிடம் இருந்து இல்லை, யப்பான் அரசும் பங்கேற்பது குறித்து தகவல் தெரிவிக்கவில்லை” எனத் தெரிவி்த்தார் கடந்த வாரம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 15 முதல் 17-ம் தேதிவரை யப்பான் பிரதமர் ஷின்சோ அபே இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மோடியும் யப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும் டன் கவுகாத்தியில் சந்தித்து பேச்சு நடத்த உள்ளனர் என அறிவித்தது. இப்போது யப்பான் பிரதமர் வருகை குறித்து ஏதும் தகவல் இல்லை எனத் தெரிவித்துள்ளது குடியுரிமைத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வலுத்து வருவதால், இந்த நேரத்தில் வெளிநாட்டு பிரதமருடன் சந்தி்ப்பு நடத்துவது உகந்ததாக இருக்காது என மத்திய அரசு கருதுகிறது. https://tamil.asianetnews.com/politics/japan-pm-india-visit-in-cancel-q2hfhf

தமிழ் மக்கள் காதில் பூ சுற்ற ஜனாதிபதி , பிரதமர் முயற்சி.!

7 hours 22 minutes ago
தமிழ் மக்களின் காதில் பூ சுத்துவதற்கு ஜனாதிபதி, பிரதமர் முயற்சி..! இத்துப்போன பழைய LLRC அறிக்கை குறித்து பேச்சு.! கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய்ந்து கொண்டிருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஐ.நா வதிவிடப்பிரதிநிதி ஹனாசிங்கருடனான சந்திப்பின்போது கூறியுள்ளார். ஐக்கியநாடுகளின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதியுடனான சந்திப்பின்போது கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது என பிரதமர் தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதியாக பதவிவகித்தவேளை மே 2010 மகிந்த ராஜபக்ச கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு நியமித்தார் 2002 பெப்ரவரி 27 ம் திகதி கைச்சாத்தான யுத்த நிறுத்த உடன்படிக்கை ஏன் தோல்வியில் முடிவடைந்தது என விசாரணை செய்யுமாறு அந்த ஆணைக்குழுவிற்கு ஆணை வழங்கப்பட்டிருந்து. மேலும் இதன் மூலம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்யுமாறும் இந்த ஆணைக்குழு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. இந்த ஆணைக்குழு 18 மாத விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் 2011 நவம்பரில் தனது பரிந்துரைகளைமுன்வைத்திருந்தது. https://jaffnazone.com/news/14897

ஊழல் ஐ.ஏ. எஸ் அதிகாரிகளுக்கு ஸ்ராலின் கடும் எச்சரிக்கை.!

7 hours 34 minutes ago
ஓய்வு பெற்றாலும் சிக்கல்தான்.. ஊழல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு ஸ்டாலின் கடும் எச்சரிக்கை..! அமைச்சர் வேலுமணியின் ஊழல்களுக்கு துணை போகும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஓய்வு பெற்றாலும், சட்டத்தின் பிடியிலிருந்து எந்த வழியிலும் தப்பி ஓடிவிட முடியாது என்று ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும், மூன்று ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் ஊழல் பற்றி லஞ்ச ஊழல் தடுப்புத் துறையின் சார்பில் நடத்தப்பட்ட திடீர் சோதனை எத்தனை? எத்தனை டெண்டர் ஊழல்கள் விசாரிக்கப்பட்டன? ஊழல்களை ரகசியமாக விசாரித்து வி.ஆர். எனப்படும் விஜிலென்ஸ் ரிப்போர்ட் போடும் வழக்கம் லஞ்ச ஊழல் தடுப்புத் துறையில் இப்போது இல்லையா? அமைச்சர்கள் மட்டத்தில் நடக்கும் டெண்டர் ஊழல்கள் குறித்து இதுவரை ஒரு விஜிலென்ஸ் ரிப்போர்ட்டாவது லஞ்ச ஊழல் தடுப்புத்துறை தானாக முன் வந்து விசாரித்துப் போட்டிருக்கிறதா? என்ற கேள்விகளும், சந்தேகங்களும் எழுகின்றன. உள்ளாட்சி நிர்வாகத்தை, ஊழல் நாறும் நிர்வாகமாக மாற்றியிருக்கும் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முதலமைச்சரின் வலது கரமாகவும், இடது கரமாகவும் திகழ்பவர் என்பது, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் முதல் காவல்துறை அதிகாரிகள் வரை அனைவரும் நன்கு அறிந்ததே! அதனால்தான் அவருக்கு எதிரான ஊழல் விசாரணைகளை, திட்டமிட்டுக் கிடப்பில் போடுவதோடு மட்டுமின்றி, அவர் விரும்பும் ஊழல்களுக்கு எல்லாம் உள்ளாட்சி நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளும் கைகட்டி நின்று கப்பம் வசூல் செய்யும் பணியை கச்சிதமாய்ச் செய்து வருகிறார்கள். இது கடும் கண்டனத்திற்குரியது. குறிப்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக இருக்கும் மாநகராட்சி ஆணையர்கள், அரசு செயலாளர்கள் எல்லாம் வேலுமணியின் ஊழலுக்கு, விரும்பியோ விரும்பாமலோ துணை போவது அதிர்ச்சியளிப்பது மட்டுமின்றி, தூய்மையான, நேர்மையான, ஒளிவு மறைவற்ற வெளிப்படையான அரசு நிர்வாகத்திற்கு அவர்கள் செய்யும் மன்னிக்க முடியாத துரோகம். உள்ளாட்சித் துறையை நாசம் செய்துள்ள இமாலய ஊழல்களுக்கு அமைச்சர் வேலுமணி மட்டுமல்ல; அத்துறையில் இதற்குத் துணை போகும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் நிச்சயம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயமும் காலமும் வந்தே தீரும். அது போன்ற ஊழல் அதிகாரிகள் ஓய்வு பெற்றாலும், சட்டத்தின் பிடியிலிருந்து எந்த வழியிலும் தப்பி ஓடிவிட முடியாது என்று எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார். https://tamil.thesubeditor.com/news/tamilnadu/17662-ias-officers-involving-admk-govt-scandals-will-not-be-let-off-says-mk-stalin.html டிஸ்கி :

நாம் தமிழர் அரசியல் - பாகம் 2

7 hours 53 minutes ago
'நாம் போட்டியிடாத இடங்களே இருக்க கூடாது'..! கட்சியினருக்கு அதிரடி கட்டளையிட்ட சீமான்..! வர இருக்கின்ற 27 மற்றும் 30 ஆகிய நாட்களில் தமிழகத்தில் ஊரக அமைப்புகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. அதில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுகின்றது. அக்கட்சிக்கு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: நடைபெறவிருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலில், கட்சி சார்பாக போட்டியிடக்கூடிய அனைத்து உள்ளாட்சி இடங்களுக்கும் வேட்பாளர்களை நிறுத்தவேண்டியது கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களின் முழுமுதற் கடமையாகும். அதனடிப்படையில் மாநில, மாவட்ட, தொகுதி, நகரம், பகுதி, ஒன்றியம், கிளை உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்களும் மாவட்டவாரியாக அமைக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் தேர்வு மற்றும் தேர்தல் பணிக்குழுவினருடன் இணைந்து பணியாற்ற வேண்டும். கட்சி சார்பாக போட்டியிடக்கூடிய அனைத்து உள்ளாட்சி இடங்களுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்வது மட்டுமின்றி தாங்களும் வாய்ப்புள்ள இடங்களில் தவறாமல் போட்டியிட்டு, நாம் தமிழர் கட்சி போட்டியிடாத உள்ளாட்சி இடங்களே இல்லை என்ற நிலையை உருவாக்கும் வகையில் களம் காண வேண்டும் எனவும், வேட்புமனு பதிவு செய்வதற்கு இன்னும் ஓரிரு நாட்களே மிஞ்சியுள்ள நிலையில் விரைந்து களப்பணியாற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார். https://tamil.asianetnews.com/politics/ntk-to-contest-in-all-places-in-local-body-election-q2hm9x

செவ்வாயில் தண்ணீர் - நாசா அதிகாரவபூர்வ தகவல்.!

8 hours 2 minutes ago
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறது என நாசா அதிகாரபூர்வமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளோ அல்லது மனிதர்கள் வாழ்வதற்கான அடிப்படை விஷயங்கள் இருக்கிறதா? என பல ஆண்டுகளாக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து செவ்வாய் கிரகத்தில் பூமியை போலவே மனிதர்கள் வாழ்வதற்கான பண்புகள் உள்ளன என அவ்வப்போது தகவல் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் பனி நீர் இருப்பதாக ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளது. மேலும் சில பகுதிகளில் பூமிக்கு 2.5 சென்டிமீட்டர் ஆழத்தில் பனி இருப்பதாகவும், இது பிற்காலத்தில் வெளியே தெரிய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. https://m-tamil.webdunia.com/article/world-news-in-tamil/nasa-says-water-ice-in-mars-119121300044_1.html

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

8 hours 17 minutes ago
இந்திய உயர்ஸ்தானிகர் ஆலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் அஷோக் ராவோ , பாதுகாப்பு செயலாளர் மேஜர்ஜெனரல்(ஓய்வு) கமல்குணரத்னவை இன்று சந்தித்தார். பாதுகாப்புஅமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் அவர்களிடையே சினேக பூர்வ கலந்துரையாடல் ஒன்றுஇடம்பெற்றது. மேலும் இந்நிகழ்வினை நினைவுகூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டமைகுறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/71025

இயற்கையின் ஆக்கமும் அழித்தலும் - எரிமலைகள்.!

8 hours 18 minutes ago
இயற்கையின் ஆக்கமும் , அழித்தலும் - எரிமலைகள்.! இயற்கையின் பல சக்திகள் இந்த பிரபஞ்சத்தில், அழிவையும், ஆனால் அதே சமயம் அதிசயிக்கும் வகையில் ஆக்கத்தையும் கொடுத்திருக்கின்றன. உதாரணத்திற்கு எரிமலைகளை எடுத்துக் கொள்வோம். ‘ எரிமலைகள் ஆக்க சக்தியா?’, என்று ஆச்சரியம் வரத்தான் செய்யும். எரிமலைகள் இந்த பூமியில் இல்லை என்றால் இந்த கட்டுரை எழுத நானும் இருந்திருக்க மாட்டேன், படிப்பதற்கு நீங்களும் இருந்திருக்க மாட்டீர்கள். இப்படிச் சொன்னால் நம்புவதற்கு மிகவும் கடினமாகத்தான் இருக்கும். புவியில் உயிர்கள் வாழ்வதற்கு எரிமலைகள் அந்தளவு பங்களித்திருக்கின்றன. எரிமலைகளின் அழிக்கும் சக்தியை முதலில் பார்ப்போம். எரிமலைகளை நமக்கு அருகிலயே, அமைதியாக இருக்கும். ஆனால், திடீரென்று ஒருநாள் தீவிரவாத தாக்குதல் போல வெடித்து சிதறும். சில எரிமலைகள் எங்கே ஒளிந்திருக்கின்றன என்பதே தெரியாது. கடலுக்கு அடியில் ஒளிந்திருக்கும் எரிமலை ஹவாய் தீவுகளில் அதிகம் காணப்படுகின்றன. அவை லாவா எனப்படும் நெருப்பு குழம்புகளை கடலில் கக்கும் போது, கடலுக்கு உள்ளேயே அந்த நெருப்பு பாறைகள் தீப்பற்றி எரிந்தபடியே விழுவது, கண் கொள்ளா காட்சி. சமீபத்தில், ஐஸ்லாந்தில் பனிக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் வெடித்து, பெரும் புகையைக் கக்கி, ஐரோப்பாவின் அந்தப் பகுதியில் விமானப்போக்குவரத்து பல நாட்கள் தடைபட்டது. பூமியின் வினோதத்தைப் பாருங்கள். எங்கு பார்த்தாலும் பனி படர்ந்த நிலம். ஆனால், அங்கே பூமிக்கு அடியில் தாண்டவமாடிக் கொண்டிருக்கும் எரிமலைக் குழம்புகள். அவை வெடித்து வானில் இருபதுகிலோ மீட்டர் வரை புகை கிளம்பியது. இந்த ஐஸ்லாந்திலும் பூமியின் வேறு பல பகுதிகளிலும் வெப்ப நீரூற்றுக்களும், வெப்பமான குட்டைகளும் காணப்படுகின்றன. குளிர் பிரதேசமான ஐஸ்லாந்து போன்ற பகுதிகளில் உள்ள வெப்பநீர்க் குட்டைகளில் மக்கள் ஆர்வத்துடன் குளிப்பார்கள். அவர்களுக்கு ஒரு உண்மை தெரியாது. தெரிந்தால் அந்தப் பக்கமே தலை வைத்து படுக்கமாட்டார்கள். என்னவென்றால் அந்த இடங்களிலெல்லாம் பூமிக்கு அடியில் மிக அருகில் 'மாக்மா' எனப்படும் உருகிய பாறைகள் பெருமளவில் இருப்பதுதான். அந்த உருகிய பாறைகளின் வெப்பதினால்தான் நீர் வெப்பமடைகிறது. அவை எப்போது வேண்டுமானாலும் எரிமலையாக வெளியே வந்து, ஆனந்தக் குளியலை அந்திமக் குளியலாக மாற்றிவிடலாம்! நாம் வாழும் நிலப்பரப்பிற்கு கீழே நடப்பது என்னவென்று தெரிந்தால் ஆச்சரியமாகவும், ஆர்வத்தை தூண்டுவதாகவும் இருக்கும். பேராபத்து ஏற்படுத்தும் நடனம் நாம் வாழ்வது, பூமியின் மேல் தட்டு (CRUST) என்ற பகுதியில். இந்த மேல் தட்டு, பூமியில் ' மேண்டில் ' ( mantle) என அழைக்கப்படும் பாகு நிலையிலுள்ள (உருகிய) பாறைகளின் மேல் அமர்ந்திருக்கின்றது. அதற்கு கீழே, புவியின் மத்திய பகுதி இருக்கின்றது. இவைகள்தான் புவியின் மூன்று முக்கிய பகுதிகள். புவியின் மத்திய பகுதி இரும்பு -நிக்கல் கலவையினால் ஆனது. இந்தப் பகுதியின் வெப்பம், சூரியனின் வெளிப்புற வெப்பமான சுமார் 5400௦௦ டிகிரி சென்டிக்ரேடுக்கு நிகராகும். பூமியின் மத்தியில் உள்ள வெப்பம், பூமி உருவானபோது உண்டான ஆரம்பகால வெப்பமும், கதிரியக்கத்தினால் உண்டாகும் வெப்பமும் சேர்ந்ததே ஆகும். பூமியின் மத்தியில் இருந்து அந்த வெப்பம் வெளியே வரும்போது 'மாண்டில்' எனப்படும் பகுதியிலுள்ள பாறைகளை உருக வைக்கின்றது. உருகிய பாறைகள் அடர்த்தி குறைவானதால் மேலே எழும்புகின்றன. மேலே உள்ள குளிர்ந்த பாறைகள் அடர்த்தி அதிகம் உள்ளதால் கீழே (பூமியின் மத்திய பகுதிக்கு) இறங்குகின்றன. வெப்பமடைந்த பாறைகள் கீழிருந்து மேலாகவும், மேலே உள்ள குளிர்ந்த பாறை மேலிருந்து கீழே நகர்வதுமான மிக மெதுவான ஒரு சுழற்சி மாண்டில் எனப்படும் பகுதியில் நடந்து கொண்டிருக்கின்றது. அதாவது, நாம் ஆனந்தமாக வாழும் பூமியின் மேல் தட்டுக்கு கீழே தான் இந்த உருகிய பாறைகளின் நடனம் நடந்து கொண்டிருக்கின்றது. மேண்டில் பகுதியில் நடக்கும் அந்த சுழற்சியினால், அதன் மேல் அமர்ந்திருக்கும் நாம் வாழும் மேல்தட்டு மெல்ல நகர்ந்துகொண்டே இருகின்றது. நம் நகம் வளரும் வேகத்தில்தான் தட்டுக்களும் கோடிக்கணக்கான வருடங்களாக (tectonic plate movements) நகர்ந்துகொண்டே இருக்கின்றன. இதனை நாம் உணர்வதில்லை. ஆபத்து என்னவென்றால், நாம் வாழும் பூமியின் மேல்தட்டு, ஆங்காங்கே பிளவு பட்டுள்ளது. பிளவுபட்டுள்ள தட்டுக்கள், அதற்கு கீழே உள்ள மேற்கூறிய உருகிய பாறைகளின் நகர்வினால், ஒன்றன் மீது ஒன்று மோதுவதும், பக்கவாட்டில் உரசிக்கொள்வதும், ஒன்றை விட்டு ஒன்று பிரிந்து செல்வதுமாக இருக்கின்றன. மேல் தட்டின் இந்த அசைவுகளால் அதன் கீழேயுள்ள உருகிய பாறைகள், மேல்தட்டின் பிளவுகளுக்கிடையேயும், மேல்தட்டை பிளந்துகொண்டும் பூமிக்கு வெளியாக லாவா எனப்படும் அக்கினி குழம்பாக வெளிவருகின்றது. அமைதிப்பூங்கா? ஒரு காலத்தில் எரிமலைகள் தொடர்ந்து நெருப்பை கக்கிக் கொண்டிருந்தன என்றும், ஆனால் இப்போது அவையெல்லாம் குளிர்ந்து இந்த பூமி, அமைதிப்பூங்காவாக மாறி விட்டது, என்று வழக்கம்போல தப்பு கணக்கு போட்டு கொண்டார்கள் மக்கள். அதனால் தான் உலகம் முழுவதும் பல கோடி மக்கள் அமைதியாக இருக்கும் எரிமலை அருகே வீடுகள் கட்டி வாழ்கின்றனர். அறிவியலாளர்கள் பூமியின் அமைப்பு பற்றியும், எரிமலைகள் எப்போது வேண்டுமென்றாலும் வெடிக்கலாம் என்று பல வருடங்கள் ஆராய்ந்து முடிவு செய்து கூறினாலும், அதை கேட்காமல் பெரிய நகரங்களை உருவாக்கி, பிறகு அதன் அழிவைக் கண்டு துயரப்படுகிறார்கள். கடவுளின் விரோதியான சாத்தான்களும், பேய்களும், பூமிக்குள் புதைக்கப் பட்டிருப்பதாகவும், அவைகள் அவ்வ‌ப்போது பூமியை விட்டு வெளியே வர எத்தனிப்பதனால் தான் எரிமலை வெடிப்புகளும், பூகம்பங்களும் தோன்றுவதாகவும், கடவுளை வேண்டிக்கொண்டால் இத்தகைய நிகழ்ச்சிகள் நடக்காது என்றும் வெகுகாலமாக மக்கள் நம்பிக் கொண்டிருந்தனர். அதனால் தான் எரிமலைக்கு அருகில் குடியமர்ந்தனர். உலகில் சுமார் 1500 உயிரோட்டமான எரிமலைகள் உள்ளன. பசிபிக் கடலைச் சுற்றி 'நெருப்பு வளையம்' எனப்படும் வளையத்தில்தான் பெரும்பாலான எரிமலைகள் இருக்கின்றன. மேலும் இத்தாலி, இந்தோனேசியா, அமெரிக்கா, சிலி, கொலம்பியா, மெக்ஸிகோ மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் எரிமலைகள் காணப்படுகின்றன. குறிப்பிடத்தக்க சில வெடிப்புக்கள் அமெரிக்காவில் செயின்ட் ஹெலென்ஸ் எனப்படும் ஒரு எரிமலை 120 ஆண்டுகளுக்கு முன் வெடித்தது. வெடிப்பின் சக்தி 30,000 அணு குண்டுகளுக்கு நிகராக இருந்தது என்றால் அதன் சக்தியை என்னவென்று சொல்வது! 1980 இல் இது மீண்டும் வெடித்து, மலையின் ஒரு பகுதியையே தூக்கி எரிந்தது. ஒரு எரிமலையின் வெடிப்பு சக்தியை அறிய, இணைய தளத்தில் இந்த வீடியோ காட்சி பதிவு செய்யப்படுள்ளதை பார்க்கலாம். 1991 ஜூன் மாதத்தில் பிலிப்பின்ஸ் நாட்டில் உள்ள பினாடுபோ என்ற எரிமலை வெடித்ததில் எழுநூறு பேர் பலியாகினர். எரிமலையில் இருந்து வந்த அக்கினிப் பாறை பொடிகள் நானூறு சதுர கிலோ மீட்டர் பரப்பளவு எறியப்பட்டன. 70,000 மக்களை ஊரை விட்டு அப்புறப்படுத்த வேண்டியிருந்தது. இந்தோனேசியாவில் உள்ள டம்போரா எரிமலை 1815 இல் வெடித்து, சுமார் ஒரு லட்சம் மனிதர்களைக் கொன்றது. வெடிப்பில் இருந்து வந்த புகையும் தூசும் பூமியின் வடக்கு பாகத்தையே சூரியனிடமிருந்து மறைத்து விட்டது. சூரிய ஒளி இல்லாமல் போனதால் அடுத்த ஆண்டு பயிர்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டது. அந்த பகுதி கடும் குளிரினால் பாதிக்கப்பட்டது. இந்தோனேசியாவில் 1883 இல் வெடித்த ஒரு எரிமலையின் ஒலி, 2,000 மைல்கள் தொலைவில் உள்ள ஆஸ்த்திரேலியாவில் கேட்டது. அதனால், உண்டான சுனாமி பல ஆயிரம் மைல்கள் தொலைவில் உள்ள தெற்கு அமெரிக்காவில் தாக்கி 36,000 உயிரை பலி வாங்கியது. ஒரு வருடத்தில் புதிதாக உண்டான எரிமலை 1943 இல் மெக்ஸிகோ நாட்டில் ஒரு வயலிலிருந்து சாம்பல் வெளியே வர ஆரம்பித்தது. அதுவே ஒரு வருடத்தில் 1200 அடி உயரமுள்ள ஒரு எரிமலை ஆனது. அருகிலுள்ள ஒரு நகரை நாசப்படுத்தியது. அங்கு ஒரு எரிமலை புதிதாக உருவானதைப் பார்க்க முடிந்தது. முதலில் சாம்பல் வெளியே வந்து, பிறகு ஒரு மலை தோன்றிய நிகழ்ச்சி நம் நாட்டில் நடந்திருக்குமேயானால், இங்கு பல கதைகள் புனையப்பட்டிருக்கும். (நமது நெல்லை மாவட்டத்தில் பூமிக்குள்ளிருந்து நெருப்புக் குழம்பு வெளியேறும் சம்பவங்கள், புவியோட்டின் அருகே மேக்மா இருப்பதைக் காட்டுகின்றன. தமிழகத்தின் தென்மாவட்டங்களில் எரிமலை உருவெடுத்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை) கொலம்பியா நாட்டில் 1985 இல் ஒரு எரிமலை வெடித்தது. அது ஒரு பெரிய வெடி இல்லையென்றாலும், வெடிப்பால் ஏற்பட்ட மண் சரிவால், ஐஸ் உருகி 23000 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். எரிமலை வெடிக்கும் சமயம் அவர்கள் உயரமான பகுதிக்கு சென்றிருப்பர்களேயானால் உயிர் பிழைத்திருப்பார். எரிமலைகள் வெடிக்கும்போது அருகிலுள்ள மக்களை பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்வதன் அவசியம் இந்த பெரும் உயிரிழப்பு சம்பவத்திற்குப் பிறகு ஒரு பாடமாக அமைந்தது. அறிவியலாளர்கள் பூமியின் உள்ளமைப்பையும், எரிமலைகளின் அடிப்படை உண்மைகளையும் கண்டறிந்து, எரிமலைகளின் வெடிப்பைத் துல்லியமாக கணக்கிட முடியாவிட்டாலும், அதனால் எப்போது ஆபத்து வரும் என்று ஓரளவு அனுமானித்து பல உயிர்களைக் காத்துள்ளனர். ஒரு எரிமலையின் அடுத்த வெடிப்பை கண்டுபிடித்து அருகிலுள்ள மக்களை காப்பாற்றும் முயற்சியில், கொலம்பியாவில் ஒன்பது அறிவியலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த எரிமலை மிகவும் உயிரோட்டமானதாக இருக்கின்றது என்று அவர்களுக்குத் தெரியும். இருந்தாலும் உயிரைப் பணயம் வைத்து, அடுத்த வெடிப்பை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, எரிமலை சற்றும் எதிர்பாராத வகையில் நெருப்பைக் கக்கியதில் அந்த ஒன்பது அறிவியலாளர்களும் நெருப்புக்கு இரையானார்கள். இதுபோல இன்னும் பல அழிவுகளை எரிமலைகள் ஏற்படுத்தியுள்ளன. சூப்பர் எரிமலைகள் இதுவரை நாம் பார்த்தது சாதாரண எரிமலைகள். ஆனால் சூப்பர் எரிமலை என்று பூமியில் ஆங்காங்கே இருக்கின்றன. அவை சாதாரண எரிமலைகளை விட ஆயிரம் மடங்கு அபாயகரமானவை. அவைகள் கக்கும் நெருப்புக் குழம்புகள் பெருத்த சேதத்தை ஏற்படுத்துவதுடன் அதனுடைய புகை பூமி முழுவதும் சுற்றி, சூரிய ஒளியை பல ஆண்டுகளுக்கு மறைத்து ஒரு சிறிய பனியுகத்தையே உண்டாக்கி, பூமியில் உயிர்வாழ்தலை கடினமாக்கிவிடும். பூமியை அழிக்கும் வல்லமையுள்ள இந்த எரிமலைகள் சில கடலுக்கு அடியிலும் மற்ற இடங்களிலும் ஒளிந்திருக்கின்றன. அவைகளை கண்டுபிடிக்க அறிவியலாளர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.எரிமலைகளின் அழிவு சக்தியைக் கண்டோம். அதன் ஆக்க சக்தியையும் காணலாமா? உயிர் உண்டாவதற்கு வேண்டிய அடிப்படைத் தேவைகள் பூமியில் உயிர்கள் உண்டாவதற்கு, புவியைத் தாக்கிய வால் நட்சத்திரங்களும், வின்வெளிப் பாறைகள் மட்டுமல்லாமல், இந்த எரிமலைகளும் காரணமாயிருந்திருக்கின்றன என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். ஓர் உயிர் உண்டாவதற்குத் தேவையான ரசாயன மூலக்கூறுகள், வெப்பம், மற்றும் நீர் போன்றவற்றை எரிமலைகள் கொடுத்தன. பூமிக்கு அடியில் உள்ள, உயிர் உருவாக தேவையான ரசாயனப் பொருட்கள், எரிமலையினால்தான் பூமியின் மேல் பரப்பிற்கு வந்தன. எரிமலைகள் தான் பூமிக்கு அடியில் உள்ள நீராவியையும் வெளியே கொண்டு வந்தன. இந்த நீராவி மழையாகப் பொழிந்து புவிக்கு தண்ணீர் கொடுத்தது. பூமியில் தண்ணீர் இருப்பதற்கு, பூமியின் மேல் மோதிய சில வால் நட்சச்திரங்களும், எரிமலைகள் வெளிக்கொணர்ந்த நீராவியும் தான் காரணம் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். (வால் நட்சத்திரங்கள் என்பது பனிக்கட்டியும், பாறைகளாலும் ஆனவைதான். சாதாரணமாக சூரியனை விட்டு வெகு தொலைவில் இருக்கும் இவைகள் பாதை மாறி, சூரியனை நெருங்கும் போது சூரியனின் வெப்பத்தினால் இந்த பனிக்கட்டிகள் உருகி நீராவியாகி, அந்த நீராவியும் தூசுக்களும் வால் போல நீண்டு காட்சி தரும்.) பனியுகம் பூமியை சில ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறை பனியுகம் ஆட்கொள்ளும். பூமியின் பெரும் பகுதி பனியினால் மூடி மறைக்கப்படும். இப்போது புவியின் வட துருவமும், தென் துருவமும் பனியினால் மூடப்பட்டிருப்பதுபோல, புவி முற்றிலும் பனி படர்ந்திருக்கும். இப்போது நம் காணும் வட-தென் துருவ பனி பிரதேசங்கள், கடந்த பனியுகத்தின் தொடர்ச்சியே. பனியுகத்தின் போது கடுங்குளிரினால் பயிர் வளர்ச்சி தடைப்படும். அதனால் உயிர்கள் வாழ்வதற்கும், பரிணாம வளர்ச்சி அடைவதற்கும் மிகப்பெரிய தடங்கல் ஏற்படும். இம்மாதிரியான ஒரு பனியுகத்தில் பூமி சிக்கி, உயிர்கள் எல்லாம் அழியும் நிலை வந்தபோது, எரிமலைகள் தான் அந்த சிக்கலை முடிவுக்கு கொண்டு வந்து பூமியை காப்பாற்றியிருக்கின்றன. எரிமலைகள் குமுறும்போது, கார்பன் டை ஆக்சைடு என்ற கரியமில வாயு வெளிவரும். இந்த வாயுவிற்கு சூரியனின் வெப்பத்தை பிடித்து வைக்கக் கூடிய குணம் உண்டு. புவி மீண்டும் வெப்பமடைவதற்கு, இந்த வாயுவே காரணம். எரிமலைகள் இந்த வாயுவை அதிகமாக வெளியிட்டதனால் புவி அந்த கடுமையான பனி யுகத்திலிருந்து மீண்டது. உயிர்கள் உண்ண உணவு கார்பன் டை ஆக்சைடு என்ற வாயுவிலிருந்துதான், கார்பன் என்ற தனிமத்தை எடுத்துக் கொண்டு, 'கார்போஹைட்ரேட்' என்ற மாவுச்சத்தை பயிர்கள் தயாரிக்கின்றன. அதைத் தின்றுதான் மிருகங்களும், மனிதர்களும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். கார்பன் டை ஆக்சைடு வாயுவை எடுத்துக்கொண்ட மரங்கள், அதிலிருந்து பிராணவாயுவை பிரித்தெடுத்து கொடுத்து, நாம் உயிர்வாழ்வதை உறுதி செய்கின்றன. பூமியின் மேற்பரப்புக்கு/ வளிமண்டலத்திற்கு கார்பன் டை ஆக்சைடை வழங்கியதில் எரிமலைகளின் பங்கு பெரியது. எரிமலைகளிலிருந்து வெளி வரும் லாவா எனப்படும் எரிமலைக் குழம்புகள் காலப்போக்கில் பயிர் நன்கு வளர்வதற்கு வேண்டிய எல்லா வளமும் கொண்ட செழிப்பான மண்ணை வழங்குகிறது. விவசாயிகள் நிலத்திற்கு உரம் இடுவது போல பயிர்கள் நன்கு வளர புதிதாக வளங்களை எரிமலைகள் கொடுத்து வந்திருக்கின்றன. வசிக்க இடம் ஹவாய் தீவுகள் ஒரு வளர்ந்து கொண்டிருக்கும் தீவுக்கூட்டம் என்று அறியப்படுகிறது. காரணம், அந்தத் தீவுகளில் உள்ள எரிமலைகள் இருந்து லாவா எனப்படும் எரிமலைக் குழம்புகள் தொடர்ந்து பல ஆண்டுகளாக பூமியின் உள்ளிருந்து வெளியே வந்து கடலில் வீழ்ந்து கொண்டே இருக்கின்றன. இவ்வாறு கடலில் விழும் குழம்புகள் குளிர்ந்து புதிய நிலப்பரப்பாகிறது. பூமியின் நிலப்பரப்பில் பெரும் பகுதி இவ்வாறு எரிமலைகளால் உண்டாக்கப்பட்டது என் அறிவியலாளர்கள் கூறுகின்றனர். எங்கே எரிமலை? இந்த புவியை மட்டும் நம்பிக்கொண்டிருந்தால் போதாது, இதற்கு ஆபத்து எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று மனித இனத்திற்கு வேறொரு இடத்தை தேடிக் கொண்டிருக்கும் அறிவியலாளர்கள், வேறொரு கோளை கண்டால் அதில் எரிமலைகள் இருக்கின்றனவா என்று முதலில் தேடுகின்றனர். எரிமலைகள் இல்லையென்றால் அந்தக் கோளை ஒரு இறந்துபோன கோளாகவே கருதுகின்றனர். செவ்வாயில் எரிமலைகளை முதலில் கண்டவுடன் மகிழ்ச்சியடைந்த அறிவியலாளர்கள், பின்னர் அது வெகு நாட்களாக செயல் இழந்திருப்பதைக் கண்டவுடன், அங்கு உயிர்கள் பரிணாம வளர்ச்சி அடைய வாய்புக்கள் குறைவு என்று முடிவுக்கு வந்தனர். உயிர்களின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் எரிமலைகள் எவ்வளவு இன்றியமையாதவை என்பதை இது காட்டுகிறது. எரிமலைகளை அழிவு சக்தியாய் இருந்த போதும், அது ஒரு பெரும் ஆக்க சக்தியாக இருந்திருக்கின்றது என்பதை மறுக்க முடியாது. அதே போன்று இயற்கையின் அழிவு சக்திகளான நட்சத்திரங்களின் வெடிப்பு, புவியின் மேல் வால் நட்சத்திரத் தாக்குதல், வின்வெளிப் பாறைகளின் தாக்குதல் போன்ற பல இயற்கை நிகழ்வுகள் அழிவைக் கொடுத்தாலும், புவிக்கு ஆக்கத்தையும் கொடுத்திருக்கின்றன. ஜாக்கிரதை நண்பர்களே.! எரிமலைகளை ஓர் அழிவுசக்தி மட்டும் தான் என்றால், 'எரிமலை எப்படி பொறுக்கும்.? ' - ஜெயச்சந்திரன் http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-75/24021-2013-05-31-07-20-56

உடல் நலத்தை காக்க வல்ல அற்புத மூலிகை - நீர் முள்ளி .!

8 hours 51 minutes ago
உடல்நலத்தை காக்கவல்ல அற்புத மருத்துவ மூலிகை நீர் முள்ளி...!! இரத்த சோகையால், உடல் இளைத்து, முகம் வற்றி, ஒடுங்கிய கண்களுடன் சோர்ந்து காணப்படும் சிறுமியர், பெண்கள் புதுப்பொலிவு பெற இந்த நீர்முள்ளி பயன்படுகிறது. சிறுநீரை பெருக்கும். வியர்வையை தூண்டும். உடலை ஊட்டம் பெறவைக்கும். நீர் முள்ளி விதையுடன் முருங்கை விதை, தாமரை விதை, வெங்காய விதை சம அளவு சேர்த்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி பெருக தாம்பத்யத்தில் முழு பலன் கிடைக்கும். இதன் விதையைத் தனியாக அரைத்துப் பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டாலும் பலன் கிடைக்கும். நீர்முள்ளிச்செடியின் விதைகள் உடல்நல பாதிப்புகளுக்கு, சிறந்த தீர்வு தருபவை. வறண்ட உடலுக்கு நீர்ச்சத்தை அளித்து, உடலில் தேங்கிய நச்சு நீரை, வெளியேற்றி, உடல்நலத்தைக் காக்கவல்லது, நீர்முள்ளி 100 கிராம் ஓரிதழ்தாமரை 200 கிராம் ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி 50 கிராம் அஸ்வஹந்தா 50 கிராம் பூனைக்காலி 50 கிராம் தண்ணீர் விட்டான் கிழங்கு 50 கிராம் முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அணுக்கள் குறைபாடு ஆண் குறி விறைப்பின்மை விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும். வயிற்றுப்போக்கு பாதிக்கப்பட்டவர்கள் அரை டீஸ்பூன் இதன் விதைப் பொடியை 200 மி.லி மோரில் கலந்து காலை, மாலை ஒரு வாரம் குடித்து வந்தால் நோய் குணமாகும். நீர் முள்ளி விதையுடன் சம அளவு மாதுளம் விதைப் பொடி சேர்த்து ஒரு ஸ்பூன்; வெண்ணெய் கலந்து சாப்பிட்டால் ஆண்மை பெருகி தாம்பத்யம் சிறக்க உதவும். நீர் முள்ளி உப்பு எடுக்க வேண்டும். 2-3 கிராம் உப்பை நீரில் கரைத்து காலை, மாலை கொடுக்க உடல் எடை குறையும். நீர்க் கோர்வை, மகோதரம், நீரடைப்பு குணமாகும். https://m-tamil.webdunia.com/article/naturopathy-remedies/neermulli-seeds-amazing-medicinal-herbs-for-health-119121200069_1.html

கடல்களற்ற பூமி படத்தை தயாரித்த நாசா விஞ்ஞானிகள்

9 hours 7 minutes ago
கடல்கள் இல்லாத பூமி என்ற அனிமேஷன் படத்தை நாசா விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். பூமியின் 70 விழுக்காடு பரப்பு கடல்களால் சூழப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே புயல், மழை, வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட பெரும்பாலான இயற்கை நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கடல்களே இல்லாமல் பூமி இருந்தால் எப்படி இருக்கும் என்ற விபரீத யோசனை நாசா விஞ்ஞானி ஒருவருக்கு தோன்றியது. ஜேம்ஸ் ஓ டோனோகு என்ற ஜப்பானிய விஞ்ஞானி இந்த அனிமேஷன் படத்தை டைம்லாப்ஸ் முறையில் தயாரித்துள்ளார். முதலில் 10 மீட்டருக்கு கீழே செல்லும் கடலின் நீர்மட்டம் அடுத்த சில நொடிகளில் 130 மீட்டர், 200 மீட்டர் என வேகம் கொள்கிறது. இறுதியில் 5000 மீட்டருக்கும் அப்பால் கடல் நீர் வற்றிப்போவதால் ஏற்படும் விளைவுகள் இந்தப் படத்தில் காட்டப்படுகின்றன. இறுதியாக தண்ணீர் முழுமையாக நீர் வற்றிப்போவதால் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்காவில் பாலை நிலப்பரப்பு அதிகமாவதைக் காட்டியுள்ளது. https://www.polimernews.com/dnews/92739/கடல்களற்ற-பூமி-படத்தைதயாரித்த-நாசா-விஞ்ஞானிகள்

வெள்ளை வேன் தொடர்பில் கருத்து தெரிவித்த இருவர் கைது!

9 hours 14 minutes ago
ஐ.தே.கவின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு வெள்ளை வேன் தொடர்பில் கருத்து தெரிவித்த இருவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் காலகட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவால் ஏற்பாடுசெய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வெள்ளை வேன் சாரதி என தன்னை அடையாளம் படுத்திக் கொண்டு ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்த இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/71023

‘எனது தொழிற்சாலைக்கு வரிவிலக்கு தாருங்கள்’: முதலாவது சந்திப்பிலேயே கோட்டாவிடம் சரணடைந்த தமிழ் அரசுக் கட்சி எம்.பி!

10 hours 8 minutes ago
சரவணபவனைத் தெரிந்திருந்தால் இது ஒரு பெரிய விடயமாகத்தெரிந்திருக்காது சப்ரா இப்படிச் செய்யாமல் இருத்தால்தான் நாங்கள் அதிர்ச்சி அடைய வேண்டும். ஒரே ஊரான் என்றவகையில் இவனையிட்டு வெக்கப்படுகிறேன்

மலையகத்தின் சிங்கபெண் சி. பவாணிஸ்ரீ

10 hours 13 minutes ago
மலையக விளையாட்டு வீரர்கள் தற்போது நாளுக்கு நாள் விளையாட்டுத்துறையில் சர்வதேச ரீதியில் வெற்றிவாகை சூடி இலங்கைக்கும் மலையகத்திற்கும் பெருமை சேர்த்து வருகின்றனர். தற்போது அனைவரும் மலையகத்தையும் விளையாட்டுத்துறையில் திரும்பி பார்க்கும் அளவிற்கு இந்த சாதனைகள் அமைந்து இருக்கின்றன. இந்த சாதனைகளை ஆண்கள் மாத்திரமே தனக்கென சொந்தம் கொண்டாடி கொண்டிருக்கும் இவ்வேளையில் மலையக பெண்களும் சலைத்தவர்கள் அல்ல என்று சொல்லும் அளவிற்கு புஸ்ஸல்லாவ கட்டுகித்துலை பெரட்டாசி தோட்டம் மேமொழி பிரிவை சேர்ந்த சின்னகருப்பன் பவாணிஸ்ரீ என்ற சிங்க பெண் தற்போது நேபாளத்தில் நடந்து முடிந்த 13 வது தெற்காசிய மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் கத்தி சண்டையில் பங்குபற்றி வெங்கல பதக்கத்தை வென்று வெற்றியை தனதாக்கி கொண்டார். இது இலங்கைக்கும் குறிப்பாக மலையகத்திற்கும் மலையக பெண்களுக்கும் பெருமையை தேடிக் கொடுத்து உள்ளது புஸ்ஸல்லாவ பெரட்டாசி தோட்டம் என்பது மலையகத்தில் காணப்படும் மிகவும் பின்தங்கிய பிரசேத்தில் இருந்து இந்த சாதனையை நிலை நாட்டியமை பெருமையிலும் பெருமை, சாதனையிலும் சாதனை என்று தான் சொல்ல முடியும். சின்னகருப்பன் பவாணிஸ்ரீ தனது ஆரம்ப கல்வியை பெரட்டாசி தோட்டம் மேமொழி தமிழ் வித்தியாலயத்திலும் தொடர்ந்து அயரி பிரிவில் அமைந்திருக்கும் அயரி தமிழ் மகா வித்தியாலயத்தில் சாதாரணதரம் வரை கல்வி பயின்று உள்ளார். தொடர்ந்து வறுமை காரணமாக கல்வியை நிறுத்திவிட்டு தொழிலுக்கு சென்றுள்ளார். தாய் ஏ.தனலெட்சுமி தந்தை எம். சின்னக்கருப்பன் இருவரும் தோட்ட தொழிலாளிகள் தற்போது ஓய்வு பெற்று வீட்டில் இருக்கின்றனர். சின்னகருப்பன் பவாணிஸ்ரீ தற்போது கண்டி பல்லேகலையில் அமைந்திருக்கும் லீனியா என்று அழைக்கப்படும் பிரபல ஆடைதொழிற்சாலையில் தொழில் புரிந்து வருகின்றார். இந்த ஆடைத் தொழிற்சாலையின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஆசிரி விஜேசிங்க தலைமையில் எல்.எப்.சீ (LFC) விளையாட்டு கழகம் ஒன்று நடைமுறைப்படுத்தபட்டு வருகின்றது. இந்த விளையாட்டு கழகம் மூலம் நேபாளத்தில் இம்முறை நடைபெற்ற 13 வது தெற்காசிய மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் இந்த பெண்மணியுடன் 23 பேர் கலந்துக் கொண்டனர். இதன் போதே சின்னகருப்பன் பவாணிஸ்ரீ கத்தி சண்டை போட்டியில் கலந்துக் கொண்டு வெங்கல பதக்கம் வென்றுள்ளார். இவருடன் சென்ற அனைவரும் பதக்கங்கள் வென்று நாடு திரும்பி உள்ள அதேவேளை மலையக பெருந்தோட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சின்னகருப்பன் பவாணிஸ்ரீ வெற்றி பெற்றமை சாதனைக்குறியதே. https://www.virakesari.lk/article/71006

5 முறை உலக சாம்பியன், 25 தங்கப் பதக்கம்,`சிறந்த ஒலிம்பிக் வீராங்கனை' - யார் இந்த சிமோன் பைல்ஸ்?

10 hours 30 minutes ago
ஆறு வயதிலேயே ஜிம்னாஸ்டிக்ஸ் உலகிற்கு வந்த சிமோன், அந்தத் துறையில் நிகழ்த்தாத சாதனைகளே இல்லை. சிமோன் பைல்ஸ்... எங்கேயோ கேட்ட பெயர் போல் உள்ளதா... 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில், ஆர்டிஸ்ட்டிக் ஜிம்னாஸ்டிக்ஸின் `வால்ட்' பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த வீராங்கனை தீபா கர்மாகர் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். தீபா, நூலிழையில் பதக்கத்தைத் தவறவிட்டபோது, வெள்ளி வென்ற மரியா பஸேகாவை விட 0.713 புள்ளிகள் அதிகம் பெற்று தங்கத்தை வென்றவரே சிமோன் பைல்ஸ். அதே ஒலிம்பிக் போட்டியில், தன்னுடைய 19 வயதிலேயே 4 தங்கம், 1 வெண்கலம் வென்ற இவருக்கு, நிறைவு விழாவின்போது அமெரிக்க நாட்டு கொடியை ஏந்தும் வாய்ப்பும் கிடைத்தது. அன்று அனைவரையும் அசத்திய அந்த இளம் வீராங்கனை, இன்று அமெரிக்காவின் அடையாளமாக நிற்கிறார். சிமோனுடன் சேர்த்து நான்கு குழந்தைகளைப் பெற்ற அவரது தாயால், அவர்களை முறையாக வளர்க்க முடியாமல் போய்விட்டது. அமெரிக்காவின் `ஃபாஸ்டர் கேர்' கட்டமைப்புக்குள் சிமோன் செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டது. சில ஆண்டுகள் கழித்து, சிமோனையும் அவரது தங்கையையும் ஒரு தாத்தாவும் பாட்டியும் தத்தெடுத்து வளர்த்தனர். ஆறு வயதிலேயே ஜிம்னாஸ்டிக்ஸ் உலகிற்கு வந்த சிமோன், அந்தத் துறையில் நிகழ்த்தாத சாதனைகளே இல்லை. 5 முறை உலக சாம்பியன் பட்டம், மொத்தமாக 25 தங்கப்பதக்கங்கள், 2015 மற்றும் 2019-ல் `அமெரிக்காவின் சிறந்த ஒலிம்பிக் வீராங்கனை' பட்டம் எனப் பல்வேறு சாதனைகளைப் படைத்த சிமோன், மீண்டும் மீண்டும் தன்னுடைய சாதனைகளையே முறியடித்துக்கொண்டிருக்கிறார் . பல நேரங்களில் ஜிம்னாஸ்டிக்ஸில் 0.1 மற்றும் 0.01 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி தீர்மானிக்கப்படும். அப்படிப்பட்ட விளையாட்டில், கடந்த மாதம் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பின் ஆல்ரவுண்ட் பிரிவில், 2.1 புள்ளிகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றார் சிமோன். ஜிம்னாஸ்டிக்ஸில் ஏற்கெனவே இருக்கும் வல்லமை பெற்றிருக்கும் வீரர்கள், தாங்களாகவே உருவாக்கிய திறன்களைப் போட்டிகளில் செய்து காட்டியபின், அதற்கான மதிப்பீடு புள்ளிகளைப் பெற, சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் களகத்துக்கு அனுப்பப்படுவர். அந்தத் திறன்களும் புதிதாக சேர்க்கப்பட்டு, அந்தந்த வீரர்களின் பெயரில் அழைக்கப்படும். அப்படி சிமோன் பைல்ஸ் தன் பெயரில், தரை பயிற்சியில் 2 திறன், (பைல்ஸ், பைல்ஸ் II ), வால்ட் பிரிவில் ஒரு திறன், பேலன்ஸ் பீமில் ஒரு திறன் எனப் பல்வேறு திறன்களை வைத்துள்ளார். இத்தனை திறன்களைத் தன் பெயரில் பொறித்து வைத்திருக்கும் சிமோன், ``என்னைப் பொறுத்தவரை என் பெயரில் வெற்றிகளைப் பெறுவதே எனக்கு உற்சாகம் அளிக்கிறது. களத்திற்குச் சென்று என்னால் புதிய திறன்களை எத்தகைய அழுத்தத்திலும் செய்துகாட்ட முடியும். இப்படி நிரூபித்துக் காட்டுவது எனக்குப் பெரும் உந்துதலாக உள்ளது" என்கிறார். 2018-ம் ஆண்டு, தோஹாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியின்போது, நுரையீரல் பிரச்னையால் அவதிப்பட்டபோதும் 4 தங்கம், 1 வெண்கலம் வென்றார் சிமோன். அவர் களத்தில் மட்டும் வீராங்கனையல்ல. தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையைத் தைரியமாக உலகிற்குச் சொல்லி மற்ற பெண்களையும் மனம்திறக்கவைத்தவர். லேரி நாஸர் என்ற விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவர், தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுப்பதாக வெளியுலகிற்குச் சொன்னார். இவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, 300-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் குற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைப் பற்றி பேசிய சிமோன், ``நாங்கள் அவர்களை (அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் கழகம்) எப்படி நம்ப முடியும்? எப்போதும் புது ஆள்களைக் கொண்டுவருகிறார்கள். பல வருடங்களாக எனக்குத் தெரிந்தவர்களே என்னை ஏமாற்றியதால், புது ஆள்களைக் கொண்டுவரும்போது என்னைச் சுற்றி சுவர்களை எழுப்பிக் கொள்கிறேன். எங்களால் செய்ய முடிந்தது, அவர்கள் எங்களை ஏமாற்ற மாட்டார்கள் என்று நம்புவது மட்டுமே. ஆனால், அந்த நம்பிக்கையும் ஒரு `டைம் பாம்'தான். காத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றார். 2016-ல் தன் வாழ்க்கை வரலாற்றை `கவரேஜ் டு சோர்' என்ற தலைப்பில் 'மிசேல் பர்ல்போர்ட்' என்ற பத்திரிகையாளருடன் சேர்ந்து எழுதினார். இந்தப் புத்தகம், அதிகம் விற்பனையானது. 2020 ஒலிம்பிக் தான் பங்கேற்கப் போகும் கடைசி போட்டி என்று அறிவித்துள்ளார் சிமோன். தங்க மங்கையாகவே ஓய்வுபெற வாழ்த்துகள்! https://sports.vikatan.com/sports-news/gymnast-simone-biles-ready-to-rock-in-2020-olympics
Checked
Sat, 12/14/2019 - 13:02
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed