18 hours 7 minutes ago
வாழ்த்துக்கள்
18 hours 8 minutes ago
அதைக் காக்கத்தான் ..இந்த அய்யா போயிருக்கிறார் ...
18 hours 11 minutes ago
இதுக்கெல்லாம் ..ரோட்டுப் போடமுன்னம் ப்லகை நாட்டுற அடியார் கூட்டம் என்ன சொல்லப் போகினம் ...அம்மாச்சி ..திறக்கிறதோடை ..அபிவிருத்தி முடிஞ்சுவிடும்
18 hours 45 minutes ago
19 hours ago
உடப்பு கிராமம் 'குட்டி வல்வெட்டித்துறை' என்றும் சொல்லப்படுகின்றது. சில வருடங்களின் முன்னர் நான் அங்கே போயிருந்தேன். என் மனைவி அங்கேயுள்ள கோவிலில் ஏதோ நேர்த்தி வைத்ததாக கூட்டிப் போனார். அந்த மக்கள், அந்தக் கோவில், கோவிலின் அமைப்பு, உள்ளிருக்கும் வர்ண வேலைகள் என்று எல்லாமே எனக்கு மிகவும் பரிச்சயமான ஒன்றாகவே இருந்தன. ஆனாலும் நான் அதற்கு முன்னர் அங்கு போயிருக்கவில்லை. நான் கவனித்த இன்னொரு விடயம், இரண்டு கோவில்களிலும் பல புதிய உபயங்களை செய்ததாக சிங்கள மக்களின் பெயர்களே இருந்தன. உடப்பைச் சுற்றியிருக்கும் பல கிராமங்கள் சிங்கள மக்கள் மிகப் பெரும்பான்மையாக வாழும் இடங்களாக மாறிவிட்டன. அங்கிருந்து திரும்பும் போது உடப்பு எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்கும் என்ற யோசனையும் சேர்ந்திருந்தது.
19 hours 45 minutes ago
புலத்தில் தலைவருக்கு உதவியவர்களுக்கும் தலைவர் சயனற்றை தந்து உடன் கட்டை ஏற கேட்டிருக்க வேண்டும் என்பது தான் உங்கள் நெஞ்சில் இருக்கிறது. எனக்கும் உயிருடன் இருந்து வதை படாமல் ஒரு நொடியில் போய்ச்சேர்ந்திருக்கலாம் என்றே தோன்றுகின்றது 😡
19 hours 50 minutes ago
ஹொர்மூஸ் நீரிணையை திறக்க தம்பர் கைவசம் உள்ள தெரிவுகள் 👇
20 hours ago
அனுர சேர் ட… ஜெயவேவா !
20 hours 10 minutes ago
அலுங்குப்பிடி என்று சொல்வோமே........ அவர்தான் இவர் . ........! 😂
20 hours 38 minutes ago
20 hours 40 minutes ago
வாடிக்கை மறந்ததும் ஏனோ ........! 😍
20 hours 43 minutes ago
சிஎஸ்கேவில் நேதன் எல்லிஸ் விலகல் சென்னை: ஐபிஎல் தொடர் வரும் 28-ம் தேதி தொடங்குகிறது. இதில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே தனது முதல் ஆட்டத்தில் 30-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோத உள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான நேதன் எல்லிஸ், தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த சீசனில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி இன்னும் தேர்வு செய்யவில்லை. https://www.hindutamil.in/news/sports/nathan-ellis-leaves-csk
20 hours 43 minutes ago
வணக்கம் வாத்தியார் . ........! பெண் : தூதுவளை இலை அரைச்சி… தொண்டையிலதான் நனைச்சி… மாமன்கிட்ட பேச போறேன்… மணிக்கணக்கா… பெண் : தூண்டாமணி விளக்கை… தூண்டிவிட்டு எரியவச்சி… உன் முகத்தை பார்க்க போறேன்… நாள் கணக்கா… பெண் : அந்த இந்திரன் சந்திரனும்… மாமன் வந்தா எந்திரிச்சே நிக்கணும்… அந்த ரம்பையும் ஊர்வசியும்… மாமனுக்கு தொண்டுகள் செஞ்சிடணும்… நான் காத்தாகி ஊத்தாகி… மாமன தழுவி கட்டிக்கணும்… ஆண் : நாள் தோறும் காத்திருந்தேன்… நானே தவமிருந்தேன்… உனக்காகதான்… கண்ணே உனக்காகதான்… பெண்: நான் கூட மனசுக்குள்ள… ஆசை வளத்துகிட்டேன்… உன்னை பார்க்கத்தான்… மாமா உன்னை பார்க்கத்தான்… ஆண் : அட முத்துன கிறுக்கு மொத்தமும்… தெளிய முறையிடலமோ… பெண் : சுத்துற கண்ணுல சிக்குன… என்னை சிறையிடலாமோ… ஆண் : எத்தனை நாள்… இப்படி நான் ஏங்கிறது… பெண் : பொட்டு வைச்சு… பூ முடிக்கும் நாளிருக்கு… ஆண் : ஊர் தூங்கும் வேலையிலும்… நான் தூங்க போனதில்லை… உன்னாலதான்… கண்ணே உன்னாலதான்… பெண் : யார் பேச்சு கேட்டாலும்… என் காதில் கேட்பதெல்லாம்… உன் பேருதான்… நித்தம் உன் பேருதான்… ஆண் : இத்தனை நனப்பு என் மேலே… இருந்தும் எட்டி போகலாமோ… பெண் : கட்டுப்பாடு இருந்தும் கட்டிக்கும்… முன்னே முட்டிகொள்ளலாமோ… ஆண் : முத்தமிட்டால் மோசம் என்ன உண்டாகும்… பெண் : சத்தமிட்டால் உன் நிலமை என்னாகும்… பெண் : தூதுவளை இலை அரைச்சி… தொண்டையிலதான் நனைச்சி… மாமன் கிட்ட பேச போறேன்… மணிக்கணக்கா… ஆண் : தூண்டாமணி விளக்கை… தூண்டிவிட்டு எரியவச்சி… உன் முகத்தை பார்க்க போறேன்… நாள் கணக்கா… பெண் : அந்த இந்திரன் சந்திரனும்… மாமன் வந்தா எந்திரிச்சே நிக்கணும்… ஆண் : அந்த ரம்பையும் ஊர்வசியும் மயிலுக்கு தொண்டுகள் செஞ்சிடணும்… பெண் : நான் காத்தாகி ஊத்தாகி… மாமனே தழுவி கட்டிக்கணும்…....! --- தூதுவளை இலை அரைச்சி ---
20 hours 46 minutes ago
உலகப்புகழ் பெற்ற ஹொலிவுட் நடிகர் காலமானார் Mar 20, 2026 - 08:22 PM உலகெங்கிலும் உள்ள ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஹொலிவுட் திரைப்பட நடிகர் சக் நோரிஸ் (Chuck Norris) காலமானார். அவர் காலமான போது அவருக்கு 86 வயது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புகழ்பெற்ற தற்காப்புக் கலை நிபுணரான சக் நோரிஸ், ஒரு சிறந்த நடிகராகவும் திரைப்படத் தயாரிப்பாளராகவும் விளங்கியவர். 1940 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் திகதி அமெரிக்காவின் ஓக்லஹோமாவில் பிறந்த இவர், 1958 முதல் 1962 வரை அமெரிக்க விமானப்படையில் பணியாற்றியுள்ளார். அதன்பின்னர் விமானப்படையிலிருந்து விலகி நடிப்புத்துறையில் தடம் பதித்தார். குறிப்பாக, 1972 ஆம் ஆண்டு புரூஸ் லீயுடன் இணைந்து "Way of the Dragon" திரைப்படத்தில் அவர் நடித்த சண்டைக் காட்சி, அவர் உலகம் முழுவதும் பிரபலம் அடைய முக்கிய காரணமாக அமைந்தது. https://adaderanatamil.lk/news/cmmz0p8k10009356paeoe68tt
20 hours 49 minutes ago
2000 என்றார்கள். அதுவும் வராதா? கணக்கெல்லாம் திரும்ப போடணுமா?
20 hours 49 minutes ago
பிள்ளைகள் வெளிநாட்டில் இருந்தால் பெற்றவர்கள் என்ன பணக்காரர்களா? தனியார் மருத்துவமனைகள் முதல் கோவில்கள் மற்றும் பல இடங்களில் பணம் பறிக்கும் செயற்பாடுகள். https://www.facebook.com/reel/889326097465245
20 hours 49 minutes ago
ஒரு விசயம் எழுத நினைத்தேன்😂😂😂. யாழ் என்பதால் சுய தணிக்கை😂.
20 hours 55 minutes ago
கிரைமியா ரஸ்யாவினது என்பதை உக்ரேன் ஏற்பதும் இதன் அங்கமாக அமையலாம். இப்படி ஒரு டீல் வந்தால் எல்லோருக்கும் நல்லம் என்பது நான் எப்போதும் விரும்பியது. இதற்கு வாய்புண்டு. வருமானம் வந்தால்தானே வருமான வரி😂.
20 hours 55 minutes ago
மகாவலி தமிழர்களின் காணியை தனியாருக்கு வழங்கியமையால் வன்னியில் அமைதியின்மை! Published By: Vishnu 20 Mar, 2026 | 07:24 PM (இணையத்தள செய்திப் பிரிவு) போரினால் பாதிக்கப்பட்ட வன்னி தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகளை, உப்பளம் ஒன்றை அமைப்பதற்காக, தென்னிலங்கையின் தனியார் நிறுவனத்திற்கு மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஒப்படைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தால் தங்கள் காணிகளை இழந்துள்ள மக்களும், வட மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளதோடு போராட்டத்தையும் நடத்தியுள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில், தமிழ் மக்களின் பாரம்பரிய விவசாய காணிகளை, அவர்களின் அனுமதியின்றி, உப்பளம் ஒன்றை ஆரம்பிப்பதற்காக சுத்தப்படுத்துவதற்கான அனுமதியை, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை வழங்கியுள்ளதாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இந்த முறைப்பாட்டிற்கு அமைய, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரன், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு, 'மகாவலி அதிகார சபையினால் தனியார் காணிகளை உப்பளம் அமைப்பதற்காக வழங்கியமை தொடர்பான முறைப்பாடு' என்ற தலைப்பில் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். உப்பளம் அமைக்கப்பட்டு வரும் நிலத்தின் உரிமையை முறையாக விசாரணை செய்து உறுதிப்படுத்துவது அவசியமாகும் எனவும், எனவே, நிலத்தின் உரிமை திட்டவட்டமாக உறுதிப்படுத்தப்படும் வரை, இந்த நடவடிக்கைக்காக வழங்கப்பட்ட அனுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது பொருத்தமானதாக இருக்குமென, அவர் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். கொக்குத்தொடுவாய் பகுதியில் உப்பளத்தை அமைப்பதற்காக மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை அனுமதியின்றி 50 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியுள்ளதாக காணி உரிமையாளர்கள் அளித்த முறைப்பாட்டுடன் தொடர்பபுடைய , ஆவணங்களையும், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பியுள்ளார். உப்பளத்திற்காக ஒதுக்கப்பட்ட 50 ஏக்கர் நிலத்திற்குள் தனியார் காணிகளும் மேய்ச்சல் தரையும் உள்ளடங்குவதாக நில அளவைத் திணைக்களத்தின் ஆவணங்களை அடிப்படையாகக் கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தவிடம், சர்ச்சைக்குரிய வகையில் காணிகள் கைமாற்றப்பட்டமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விடயம் குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்கு அமைச்சர் அறிவுறுத்தியதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். இதேவேளை, வெலிஓயா பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உப்பளம் அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்டதாக, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், அந்தக் காணிகள் தனியார் காணிகள் என்பது தொடர்பில் தமக்கு முறைப்பாடுகள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை எனத் தெரிவித்த குறித்த அதிகாரி, அதுதொடர்பில் மகாவலி அதிகாரசபை அலுவலகத்திற்கு வந்து முறைப்பாடளிக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதுத் தொடர்பில் அரசாங்க அதிகாரிகளுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, தமது காணிகளை மீளப்பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, உப்பளம் அமைக்கப்படும் இடத்தைப் பார்வையிடச் சென்றிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனிடம் காணியை இழந்த மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். https://www.virakesari.lk/article/241514
20 hours 55 minutes ago
ட்ரம்ப் செய்கிற குறுக்காஸ் வேலைகளுக்கெல்லாம் முரட்டு முட்டுக் கொடுக்கும் ஒரு நண்பர்கள் குழு ஒன்று (அமெரிக்க இலங்கையர்கள், தமிழர்கள் தான் எல்லோரும்) இங்கே என் ஊரில் இருக்கிறது. மஸ்க் தாறு மாறாக மத்திய அரசின் வேலையாட்களை வீட்டுக்கனுப்பி குடும்பங்களை வறுமையில் தள்ளிய போது, இப்படி "ஒரு மூவாயிரம் டொலர் செக் எல்லோருக்கும் மஸ்க் அனுப்புவார்" என்று முட்டுக் கொடுத்தார்கள். தற்போது இந்த நண்பர்கள் கொடுக்கும் ஒரு முட்டு இருக்கிறது, என்ன தெரியுமா? "ட்ரம்ப் தான் ஆட்சியில் இருந்து போக முன்னர் சகல அமெரிக்கர்களுக்கும் வருமான வரியை இல்லாமலாக்கி விடுவார்" என்பது தான் அந்த முட்டு! வருமான வரி இல்லாத அமெரிக்கா😂! இதைக் கேட்டால் ட்ரம்பே அதிர்ச்சியில் போய் சேர்ந்து விடுவார்!
Checked
Sat, 03/21/2026 - 10:50
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed