புதிய பதிவுகள்

வரலாற்றுப் பாடநூல்களில் பௌத்த சமயத்திணிப்பும் பல்கலைக்கழகத் தமிழ்ச் சமூகத்தின் கவனயீனமும் - அ.நிக்ஸன்

1 day 2 hours ago
இலங்கை ஒற்றையாட்சி அரசின் கீழான இலங்கைத் தேசியம் என்பதற்குள், ஈழத்தமிழர்களையும் இணைத்துவிட வேண்டுமென்ற நோக்கம் 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில், சிங்கள அரசியல் கட்சிகளிடையே மேலோங்கி வருகின்றது. இதன் உச்சத்தை 2015ஆம் ஆண்டு மைத்தரி- ரணில் அரசாங்கத்தில் காணமுடிந்தது. இலங்கைத் தேசியத்தை மையமாகக் கொண்டு தமிழ்த்தேசிய அரசியல் நீக்கத்துக்கான முதற்கட்ட ஏற்பாடாகவே ஜெனீவா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரனை வழங்கியிருந்தது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அதற்கு ஒத்துழைப்பும் கொடுத்திருந்தது. 2015ஆம் ஆண்டுக்கு முன்னரான மகிந்த ராஜபக்சவின் ஆட்சியிலும் அதற்கு முந்திய சந்திரிகா மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலும் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் காணி அபகரிப்புகள், சிங்களக் குடியேற்றங்கள் போன்றவற்றுக்கு இலங்கை இராணுவமே காரணமாக இருந்தது. -கொழும்பு ஆலோசனை கொழும்பின் ஆலோசனையோடு இலங்கை இராணுவமே இவற்றைச் செய்துமிருந்தது. ஆனால் மைத்திரி- ரணில் அரசாங்கமே இந்த விகாரங்களை கொழும்பை மையப்படுத்திய இலங்கை அரச திணைக்களங்கள் மூலமாகப் பிரயோகிக்கும் முறைமையை அறிமுகப்படுத்தியிருந்தது. குறிப்பாகக் காணி அபகரிப்பு என்றால். கொழும்பை மையமாகக் கொண்ட காணிப் பதிவு ஆணையாளர் அலுவலகம், சிங்களக் குடியேற்றம் மற்றும் மண் அகழ்வென்றால் வீடமைப்பு அதிகார சபை, அல்லது நகர அபிவிருத்தி அதிகார சபை, புத்தர் சிலை வைத்தல், தாதுகோபுரம் கட்டுதல் என்றால் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களம் ஆகிய அரச திணைக்களங்கள் மூலம் பொலிஸாரின் உதவிகளைப் பெற்று தாயகப் பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றன. 2019ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னரான நிலையிலும்கூட இவ்வாறு அரச திணைக்களங்களைப் பயன்படுத்தியே வடக்குக் கிழக்கில் தமிழர் மரபுரிமைகள் அழிக்கப்பட்டுச் சிங்கள மரபுரிமைகள் செயற்கையான முறையில் சேர்க்கப்படுகின்றன. சிங்கள அரசியல் தலைவர்கள் வெவ்வேறுபட்ட கட்சிகளாக இருந்தாலும், ஈழத்தமிழர் விவகாங்களில் அவர்களுடைய செயற்பாடுகள் நன்கு திட்டமிடப்பட்ட பொறிமுறை ஒன்றின் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை வரலாறு. ஜே.ஆர்.ஜவர்த்தானவின் ஆட்சியில் 1983ஆம் ஆண்டு திருகோணமலை அரச அதிபராகச் சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டது முதல், மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் வவுனியா, மன்னர் மாவட்டங்களில் சிங்களவர்கள் அரச அதிபார்களாக நியமிக்கப்பட்டமை உள்ளிட்ட பல உதாரணங்கள் உண்டு. அதேவேளை, கல்விச் செயற்பாடுகள் மூலமாகவும் இனவாதக் கருத்துகள், சிங்கள வரலாறுகள் தமிழ் மாணவர்கள் மத்தியில் திணிக்கப்பட்டுள்ளன. ஆண்டு ஆறில் இருந்து கல்விப் பொதுத்தராதரச் சாதாரண தரம் வரையான வரலாறுப் பாடநூல்களில் பௌத்த சமயத்துக்கான முக்கியத்துவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வரலாற்றுப் பாடநூலில் பௌத்த சமயநாகரீக வரலாறு எதற்கு என்ற கேள்விகள் தமிழ்க் கல்வியாளர்களினால் அவ்வப்போது எழுப்பப்பட்டுமிருக்கின்றன. -பௌத்த சமயக் கலைகள் ஆனாலும் சைவ சமயக் கலைகள் நாகரீகங்கள் அதுபற்றிய வரலாறுகள் மறைக்கப்பட்டு அல்லது பௌத்த சமயத்துக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டுப் பாடநூல்களில் சேர்க்கப்பட்டுள்ளன. ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் ஆட்சியில் இவ்வாறான இனவாதக் கல்வி முறை ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை தொடருகின்றது. இதற்கும் பல உதாரணங்கள் உண்டு. பொலன்னறுவை அனுராதபுரக்காலங்களில் நிர்மாணிக்கப்பட்ட திராவிடக் கட்டடக்கலை மரபுகளைச் சார்ந்த சைவ சமயம் கட்டடங்கள், (ஆலயங்கள்) வரலாற்றுப் பாடநூல்களில் பௌத்த சமயக் கட்டடங்களாகக் காண்பிக்கப்பட்டுள்ளன. உதாரணமாகத் தரம் எட்டு பாடநூலில் கண்டகச் சைத்தியம் எனக் காண்பிக்கப்பட்டிருக்கும் கட்டடம், திரவிடக் கட்டடக்லையைச் சார்ந்த கட்டடமாகும். வரலாற்றுப் பேராசிரியர் பத்மநாதன், இலங்கையின் இந்து சமயம் என்ற நூலில் இக் கட்டடம் திராவிடக் கட்டடக்கலையைச் சேர்ந்ததெனக் கூறியுள்ளார். ஆகவே சர்வதேச பாடநூல் நியமங்களின்படி, குறித்தவொரு மொழியில் எழுதப்படும் வரலாற்றுப் பாடநூல்கள் பிறிதொரு மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுக் கற்பிக்கப்படுதல் சர்வதேச நியமச் சட்டங்களுக்குப் பொருந்தாதது ஒன்று. இதற்கு எதிராக வழக்கும் தொடர முடியும். அவ்வாறு வழக்குத் தொடரப்பட்டால் ஈழத்தமிழ் மாணவர்கள் இந்த வரலாற்றுப் பாடநூல்களைப் படிக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் தமிழ்க் கல்வியார்கள் எவருமே சர்வதேச நியமங்களின் பிரகாரம் வழக்குத் தொடருவது பற்றிக் கவனம் செலுத்தவில்லை. அரசியல் விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காரணங்களில் தமிழ் மாணவர்கள் மீதான கல்வித்தரப்படுத்தலும் ஒன்று என்பது வெளிப்படை. ஆனால் இன்று வரலாற்றுப் பாடநூல் திரிபுபடுத்தல்களோடு, குறிப்பிட்ட சில தமிழ்க் கல்வியிலாளர்களும் ஓரம்கட்டப்படுகின்றனர். இராணுவத்துக்கு மரியாதை கொடுப்பதற்குரிய முறையிலும் இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்புச் சட்டங்கள் தேவைக்கு ஏற்றவாறு சட்டவியாக்கியாணம் செய்யப்படுகின்றன. அதற்குக் கல்வித்துறைச் சட்டங்கள் நிமயங்களும் விதிவிலக்கல்ல. யாழ் பல்கலைக்கழகச் சட்டத்துறை மூத்த விரிவுரையாளர் கலாநிதி குருபரன் குமாரவேல், நீதிமனற்ங்களில் வழக்கு விசாரணைகளுக்காக முன்னிலையாகக் கூடாதெனக் கொழும்பில் உள்ள பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை யாழ் பல்கலைக்கழகமும் ஏற்றுள்ளது. 1996ஆம் ஆண்டு யாழ் நாவற்குழியில் காணாமல்போன 24 இளைஞர்களில் மூன்று இளைஞர்களின் ஆட்கொணர்வு மனுத் தொடர்பான விசாரணையில் பாதிக்கப்பட்ட உறவினர்களின் சார்பில் கலாநிதி குருபரன் முன்னிலையாகின்றார். அதனைத் தடுக்கும் நோக்கிலேயே இவ்வாறன உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறதென்ற குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லாமலில்லை. இந்த வழக்கில் பிரதான எதிரியாக இலங்கைக் இராணுவத்தின் உயர் அதிகாரியான துமிந்த கெப்பிடிவலான என்பவர் மீதே சந்தேகம் தெரிவிக்கப்பட்டுக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், 2015ஆம் ஆண்டு நல்லாட்சியெனக் கூறிக் கொண்டு பதவிக்கு வந்த மைத்திரி- ரணில் அரசாங்கமே துமிந்த கெப்பிடிவலானவுக்கு இலங்கை இராணுவத்தின் காலால்படையின் பணிப்பாளர் பதவி உயர்வை வழங்கியிருந்தது. இனரீதியான கொலை வழக்கு ஒன்றில் குற்றம் சுமத்தப்பட்டதாகத் தெரிந்தும் இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டிருந்தது. பதவியுயர்வு வழங்கப்பட்டதொரு நிலையிலும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, கலாநிதி குருபரன் முன்னிலையாகியிருந்தார். இதனால் யாழ் பல்கலைக்கழகச் சட்டத்துறை விரிவுரையாளர் ஒருவர், எந்த அடிப்படையில் வழக்கு ஒன்றில் முன்னிலையாக முடியுமென இலங்கை இராணுவத் தரைப்படையின் சட்டப் பணிப்பாளர் ஈஎஸ்.ஜயசிங்கே கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி கொழும்பில் உள்ள பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு அனுப்பியிருந்த கடிதம் ஒன்றில் கேள்வி எழுப்பியிருந்தார். -மானிய ஆணை்க்குழுவின் கடிதம் அந்தக் கடிதத்தின் அடிப்படையிலேயே யாழ் பல்கலைக்கழக உப வேந்தரிடமும் விளக்கம் கோரப்பட்டுப் பின்னர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொகான் டி சில்வா கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். இந்தக் கடிதம் பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்கள், பல்கலைக்கழகப் பதிவாளர்கள், பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் உயர் கல்வி அமைச்சு உள்ளிட்ட தறைசார்ந்த 17அரச திணைக்கள், நிறுவனங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சட்டத்துறை விரிவுரையாளர்கள் நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் ஈடுபட அனுமதியில்லை என்பதே கடிதத்தின் உள்ளடக்கமாகும். நாவற்குழி வழக்கு விசாரணையின் பின்னணியிலேயே இவ்வாறான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டுமென்ற சந்தேகத்தை கலாநிதி குருபரன் ஏற்கனவே எழுப்பியிருந்தார். யுரொப்பியன் ஜேர்னல் ஒப் இன்ரர்நஷனல் லோ ( EuropeanJournal of International Law) என்ற கட்டுரை ஒன்றைத் தனது முகநூல் பதிவில் மேற்கோள்காட்டியுள்ள கலாநிதி குருபரன், சர்வதேச நீதிமன்றங்களில் முன்லையாகும் சட்டத்தரணிகளில் 60 வீதமானோர் சட்டத்துறைப் பேராசிரியர்கள் என்று அந்தக் கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்-ஆனால் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவும் யாழ் பல்கலைக்கழகமும் மாத்திரமே அவ்வாறு முன்னிலையாக முடியாதெனக் கூறுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். துறைசார்ந்தவர்கள் தமது தொழில்சார்ந்து வெளியில் பணியாற்ற முடியுமெனப் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு கூறுகின்றது. ஆனால் சட்டத்துறையில் இருப்போருக்கு மாத்திரம் நீதிமன்றங்களில் முன்னிலையாக முடியாதெனக் கூறுவது நியாயமற்றது என்ற கருத்துக்கள் தற்போது எழுந்துள்ளன. பல்கலைக்கழக மருத்துவப் பேராசிரியர்கள் பலர் அரச வைத்தியசலைகளிலும் தனியார் வைத்தியசாலைகளிலும் பணயாற்றுகின்றனர். அதற்கு எந்தவிதமான தடையும் இல்லை. 1997ஆம் ஆண்டு சந்திரிகாவின் ஆட்சியில் சுகாதார அமைச்சராக இருந்த ஏ.எச்.எம்.பௌசி. அரச மருத்துவர்கள், மருத்துவபீடப் பேராசிரியர்கள் கடமை நேரங்களில் தனியார் வைத்தியசாலையில் கடமைபுரிய முடியாதென்ற உத்தரவொன்றைப் பிறப்பித்திருந்தார். ஆனால் இலங்கை மருத்துவர் சங்கம் அதற்குக் கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தது. வேலை நிறுத்தப் போராட்டங்களும் நடத்தப்பட்டிருந்தன. சுமார் ஒரு மாதமாக நீடித்த இந்தப் பிரச்சினையில் அப்போது ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா தலையிட்டார். மருத்துவர்கள், மருத்துவப் பேராசிரியர்கள் கடமை நேரங்களிலும் தனியார் வைத்தியசாலைகளுக்கும் கடமைக்குச் செல்ல முடியுமென உத்தரவிட்டிருந்தார். இதனால் அமைச்சர் பௌசியின் உத்தரவும் வாபஸ் பெறப்பட்டது. ஆகவே சட்டத்துறை விரிவுரையாளர்கள், பேராசிரியர்களுக்கு மாத்திரம் ஏன் இப்படியொரு தடையுத்தரவு என்றவொரு கேள்வி எழாமலில்லை. கலாநிதி குருபரனின் விவகாரத்தில் இலங்கைச் சட்டத்திரணிகள் சங்கம் மௌனம் காக்கிறது. தனிப்பட்ட மருத்துவப் பேராசிரியர் ஒருவருக்கான அரசியல் பழிவாங்கல் நோக்குடனேயே அன்று அமைச்சர் பௌசி மருத்துவர்களுக்கான மேற்படி உத்தரவைப் பிறப்பித்திருந்தாக அன்றைய ஊடகங்கள் விமர்சித்திருந்தன. ஆனால் இலங்கை மருத்துவர் சங்கம் அரசியல் வேறுபாடுகள் இன்றி மருத்துவர்கள் என்ற அடிப்படையில் ஒற்றுமையாக வேலை நிறுத்தம் செய்ததால், அந்த உத்தரவை ஜனாதிபதியே வாபஸ் பெறும் நிலை ஏற்பட்டிருந்தது. ஆனால் இங்கே கலாநிதி குருபரன் தமிழர் என்பதாலும் தமிழ்த்தேசிய அரசியல்நோக்கு நிலையில் அவர் கருத்துக்களை வெளியிட்டுவதாலும் பழிவாங்கப்படுகிறார் என்பது கண்கூடு. -இராணுவ அதிகாரியின் கடிதம் ஏனெனில், இலங்கை இராணுவத் தரைப்படையின் சட்டப் பணிப்பாளரின் கேள்விக்குக் கொழும்பில் உள்ள பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு செவிசாய்த்திருக்கிறது. அதற்கு யாழ் பல்கலைக்கழக உப வேந்தரும் கட்டுப்பட்டேயாக வேண்டும் என்ற நிலையும் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் அந்தத் தீர்மானத்தை எதிர்த்து இதுவரை எந்தவொரு நடவடிக்கைகளையுமே எடுக்கவில்லை என்பதும் விமர்சனத்துக்குரியதே. 20 ஆண்டுகளுக்கு முன்னர் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டிருந்த இராணுவ அதிகாரிக்கு 2015ஆம் ஆண்டு பதவியுயர்வு வழங்கப்பட்டிருக்கிறதென்றால், அந்த இராணுவ அதிகாரிக்கு எதிரான கொலை வழக்கில் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரைரையாளர் ஒருவர் எவ்வாறு முன்னிலையாக முடியுமென்ற கேள்வியும் சந்தேகமும், யாழ் பல்கலைக்கழகச் சட்டத்துறைக் கல்வியின் நன்மைக்கானதல்ல. மாறாக அந்தக் கேள்வியும் சந்தேகமும். பௌத்ததேசியச் சிந்தனையில் இருந்து உதித்ததே. இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கொதிராகத் தமிழ்ச் சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகக் கூடாதென்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறதெனலாம். ஆகவே இலங்கை நீதித்துறை பௌத்ததேசிவாதச் சிந்தனையின் நோக்கில் செயற்படுகிறது. கல்வி உயர்கல்வி அமைச்சும் அவ்வாறுதான் செயற்படுகின்றதென ஏலவே நான் முன்னைய அரசியல் பத்தி எழுத்துக்களில் சுட்டிக்காட்டியிருக்கிறேன். இராணுவத்தின் தேவைக்கேற்ப பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவும் பல்வேறு சந்தர்ப்பங்களில் செயற்படுகின்றது. ஆனால் விரிவுரையாளர் ஒருவரைக் குறிப்பிட்ட பணியொன்றில் இருந்து நிறுத்த வேண்டுமென்ற தடையுத்தரவு, இது முதற்தடவையே. ஆனால் இது கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியில் தீர்மானிக்கப்பட்டதல்ல. மைத்திரி- ரணில் அரசாங்கம் பதிவியில் இருந்தபோதே எடுக்கப்பட்ட முடிவு. -பேராசிரியர் விக்னேஸ்வரன் அதேபோன்று யாழ் பல்கலைக்கழக உபவேந்தராகப் பதவி வகித்திருந்த பேராசிரியர் ரட்னம் விக்னேஸ்வரன். கடந்த ஆண்டு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தபோது திடீரென விலக்கப்பட்டிருந்தார். செயல்திறன் போதியதாக இல்லையென்ற குற்றச்சாட்டிலேயே அவரை விலக்குவதாக ஜனாதிபதி செயலகம் அப்போது கூறியிருந்தது. ஆனால் உபவேந்தர் ஒருவரை ஜனாதிபதி பதவி நீக்குவதாக இருந்தால். பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களுக்கு அறிவித்திருக்க வேண்டும். அல்லது அவர்களின் ஆலோசனை பெறப்பட்டிருக்க வேண்டும். ஆகவே உரிய விதிமுறைகள் பின்பற்றப்படாமலேயே சிலருடைய அழுத்தங்களினால் மைத்திரிபால சிறிசேன, பேராசிரியர் விக்னேஸ்வரனை விலக்கியிருக்கிறார். அன்று அவருக்கு இழைக்கப்பட்டது பெரும் அநீதியே. ஆகவே கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில், இலங்கை அரச கட்டமைப்பு என்பது ஈழத்தமிழர்களுக்கெதிராக இப்படித்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறதென்பதை வரலாற்று ரீதியாகக் காணமுடியும். -அமெரிக்கச் சட்டக் கல்லுாரி சட்டத்துறைப் பேராசிரியர்கள் சட்டக் கல்வியையும் கற்பித்துக் கொண்டு நீதிமன்றங்களிலும் முன்னிலையாக முடியுமென அமெரிக்கச் சட்டத்துறைப் பேராசிரியர் அலிஸ் பேக்கர் (AliceBaker) கூறுகிறார். அமெரிக்கச் சட்டத்துறைக் கல்லூரிகளில் இந்த நடைமுறை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார். சட்டத்துறைப் பேராசிரியர்கள் தமது கடமை நேரங்களில் சட்டத்தொழிலிலும் ஈடுபட முடியுமா என்ற என்ற தலைப்பில் அவர் தனது கட்டுரையில் விளக்கமளிக்கின்றார். 2001ஆம் ஆண்டில் இருந்து 2008ஆம் ஆண்டு வரை சட்டத்துறைப் பேராசிரியராகக் கடமையாற்றிய அலிஸ் பேக்கர், கற்பித்தலோடு சட்டத்தொழில்சார் நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டுமென வலியுறுத்துகின்றார். அப்போதுதான் தரமான நடைமுறைப் பயிற்சியுள்ள சட்டக் கல்வியை மாணவர்களுக்கு வழங்க முடியும் என்றும் அலிஸ் பேக்கர் தனது கட்டுரையில் கூறுகின்றார். வராமொன்றில் 168 மணித்தயாளங்கள் என்றும் அவற்றில் எவ்வாறு நேரத்தைப் பங்கிட்டுச் சட்ட விரிவுரைகளிலும் சட்டத் தொழிலிலும் ஈடுபட முடியும் என்ற தனது விளக்கத்தை அவர் பகுப்பாய்வு செய்கிறார். ஆகவே உலகத்தில் அதற்கு உதாரணங்கள் உண்டு. ஈழத்தமிழர்களுக்கு எதிரான கல்வித் தரப்படுத்தல் 1972இல் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியில் கொண்டுவரப்பட்டு இன்று வரை அந்தத் தரப்படுத்தல் பல்வேறு வடிவங்களில் தொடருகின்றன. உயர்கல்விக்கான பங்கடு இன விகிதாசாரத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதில்லை. மாறாக மாணவர்கள் பெறும் பெறுபேறுகளின் அடிப்படையிலேயே உயர்கல்விப் பங்கீட்டை இலங்கை அரசாங்கம் செய்கின்றது. ஆகவே குருபரன் விடயத்தில், ஏனைய சட்டத்துறைப் பேராசியர்கள், விரிவுரையாளர்கள்கூட அமைதிகாப்பது அல்லது அந்த விவகாரத்தை வெறுமனே கடந்து செல்வது என்பது இனரீதியான பார்வையே. இதுவே ஒரு சிங்களச் சட்டத்துறை விரிவுரையாளருக்கு நடந்திருந்தால், இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் வாய் திறந்திருக்கும். வேலைநிறுத்தப் போராட்டமே நடந்தருக்கும். நீதித்துறைச் செயற்பாடுகள் நின்றிருக்கும். அதேவேளை, இலங்கை இராணுவம் ஈழத்தமிழர்கள் தொடர்பான விடங்களில், இலங்கை அரச திணைக்களங்களில் எந்தவேளையிலும் தலையிடும் அல்லது இலங்கை இராணுவம் சொல்வதையே பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு உள்ளிட்ட அரச திணைக்களங்கள் கேட்க வேண்டும் என்ற செய்தியும் கலாநிதி குருபரன் விடயத்தின் மூலமாகக் உறுதிப்படுத்தப்படுகின்றது. -இராணுவத்து்கு மரியாதை அதுவும் 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான ஒரு தசாப்பத காலம் சென்றுவிட்ட நிலையிலும், போர்க்குற்றம் மனித உரிமை மீறல் தொடர்பாகச் சர்வதேச நீதி விசாரணையே அவசியம் என்று கூறப்பட்டுவரும் சூழலிலும், இலங்கை இராணுவத்தின் முக்கியத்துவத்தையும் மரியாதையையும் இலங்கை அரசாங்கம் உயர் கல்வித்துறை ஊடாகப் பறைசாற்றியுள்ளதெனலாம். ஜெனீவா மனித உரிமைச் சபை ஆணையாளரின் தீர்மானத்தில் சர்வதேச நீதியரசர்களையும் உள்ளடக்கிய கலப்புமுறை விசாரணைக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை இராணுவத்துக்கு இவ்வாறு வழங்கப்பட்டுள்ள மரியாதை, ஜெனீவாத் தீர்மானத்துக்கும் சவாலாகவே அமைந்துள்ளதெனலாம். அல்லது அந்தத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டு விட்டதென்ற முடிவுக்கும் வரலாம். தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று கூறிப் பெருமைப்படுகின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இந்த விடயம் தொடர்பாக மெளனமாக இருப்பது தொடர்பாகவும் கேள்விகள் எழாமலில்லை. இதனைத் தனியொரு குருபரனுக்கு எதிரான தீர்மானமாகவோ அல்லது பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் கல்வித்துறை மீதான அக்கறையில் எடுக்கப்பட்ட முடிவாகவுமோ கருதிவிடலாகாது. -தவறவிட்ட விடயங்கள் ஆகவே பல்கலைக்கழகச் சமூகம் கருத்திலெடுக்க வேண்டிய பிரதான விடயங்களில் கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. குறிப்பாக வரலாற்றுப் பாடநூல்களில் உள்ள பிழையான தகவல்கள் சுட்டிக்காட்டப்பட்டுச் சா்வதேச நியமங்களுக்கு ஏற்ப அமைய வேண்டுமென்ற கோரிக்கைகள் துறைசார்ந்த பேராசிரியர்களினால் உரிய முறையில் முன்வைக்கப்படவில்லை. மொழியாக்கம் செய்யப்பட்ட பின்னர் தமிழ் மொழிமூலப் பேராசிரியர்களும் அதில் கையொப்பமிடுகின்றனர். ஆனால் வரலாற்று்க்கு மாறான திணிப்புகள் பற்றிச் சுட்டிக்காட்டினார்களா என்பது கேள்வியே. குருபரன் விடயத்திலும் உரியமுறையில் நியாயங்கள், சா்வதேச விதிமுறைகள் தொடர்பாகச் சுட்டிக்காட்டப்பட்டு அழுத்தங்கள் கொடுக்கப்படவில்லை. பேராசிரியர் விக்னேஸ்வரன் விலக்கப்பட்டபோது. பல்கலைக்கழகப் பீடாதிபதிகள். பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் எவருமே அதற்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை. பல்கலைக்கழகத் தொழிற்சங்கம் கூட போராட்டம் நடத்தவில்லை. அவ்வாறு போராட்டம் நடத்தப்பட்டு எதிர் நடவடிக்கைகள் அன்று எடுக்கப்பட்டிருந்தால் இன்று குருபரன் மீது இவ்வாறான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் பல்கலைக்கழச் சமூகம் அந்தப் பாரிய பொறுப்பில் இருந்து தவறிவிட்டதெனக் கூறினால், அங்கு மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை. அதேவேளை, போரின் பின்னரான சூழலில், தமிழ்ச் சமூகத்தின் அரசியல், பொருளாதார மற்றும் கல்விச் செயற்பாடுகளில் யாழ் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகச் சமூகத்துக்குப் பாரிய பொறுப்பு இருந்தது. ஆனால் அது பற்றிய ஆய்வுகள் எதனையுமே பல்கலைக்கழகத் தமிழ்ச் சமூகம் மேற்கொள்ளவில்லை. அப்படி ஆயு்வுகளை மேற்கொள்ள முடியாதென்று எந்தவொரு தடையுமில்லை. ஆனால் பல்கலைக்கழகத் தமிழ்ச் சமூகம் வெறுமனே கலைத்திட்டத்திற்கு உள் நின்றவாறு கற்பித்தல் செயற்பாடுகளில் மாத்திரமே ஈடுபடுகின்றது. துனிஷியாவில் 2010ஆம் ஆண்டு புரட்சி ஏற்பட்டு ஆட்சிமாறியவுடன், அங்குள்ள பல்கலைக்கழகச் சமூகம் கடந்த 30 ஆண்டுகள் பின்னோக்கியிருந்த அரசியல், பொருளாதார மற்றும் கல்வித்துறைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு எதிர்காலத்துக்கான சீர்திருத்தங்களில் ஈடுபட்டிருந்தன. அவ்வாறே இந்தோனிஷியாவின் அச்சே மாநிலத்திலும் கல்விச் சமூகத்தினால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதனடிப்படையில், முன்னேற்றங்களுக்கான பொறிமுறைகள் வகுப்பட்டன. ஆனால் பல்கலைக்கழகத் தமிழ்ச் சமூகம் அந்தப் பொறுப்புகளை ஏற்கத் தயங்குகின்றது. அல்லது அரசியல் காரணங்களைக் கூறித் தப்பித்துக்கொள்கிறது என்றும் கூறலாம். -அ.நிக்ஸன் https://www.ibctamil.com/articles/80/145940

தமிழ் தேசியக் கூட்டமைப்பினைக் கண்டு சிலர் அஞ்சுகின்றனர் – சிறீதரன்

1 day 2 hours ago
இந்த, சிறீதரன் தான்... யாழ். மாவட்டத்தில்... மூன்று, அரச மது விற்பனை நிலையங்கள் உள்ளது, கிளிநொச்சியில்... ஒரு, மது விற்பனை நிலையம் இல்லை என்பதால்... அங்கு, ஒன்றை... திறக்கும் படி, பாராளுமன்றத்தில் பேசிய, ஆள்.

கோட்டாபய அரசில் பலமான அமைச்சுப் பதவியை இலக்கு வைக்கும் சுமந்திரன்..? கட்சிக்குள் மீண்டும் சலசலப்பு

1 day 3 hours ago
அபிவிருத்திக்காக நாங்கள் செயற்பட வேண்டு மென்பதற்கு முற்று முழுதாக நான் இணங்குகிறேன். அரசில் தீர்வொன்று எப்பொழுது வருமென சொல்ல முடியாது. ஜனநாயக சூழலில் காத்திருந்த பேச்சுவார்த்தை மூலம்தான் பெற முடியும். போர்ச்சூழல் என்றால் அடித்து பறிக்கலாம். இது அப்படியல்ல. அதற்கு எவ்வளவு காலம் எடுக்குமென சொல்ல முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், அரசாங்கத்துடன் இணைவதா இல்லையா என்ற தீர்மானம் பின்னர் எடுக்கப்படுவதாக இருந்தாலும், எற்கனவே சில தீர்மானங்களை எடுத்து நடைமுறைப்படுத்துகிறோம். வடக்கு கிழக்கிற்கான மாற்று பொருளாதார நிறுவனமொன்றை ஏற்படுத்தும் முன்னெடுப்புக்கள் செய்யப்பட்டுள்ளன. எப்படியான பாத்திரத்தை நாங்கள் வகிக்கப் போகிறோம் என்பது இப்பொழுது தெரியாவிட்டாலும், எங்களிற்கு தெரிந்த ஒன்று, நாங்கள் பலமான ஒரு அணியாக நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் அப்பொழுது அரசிடம் அமைச்சர்களை கூட எதிர்பார்க்கலாம் என குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த காலங்களில் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராஜா வேட்பாளர்களுக்கு, மக்கள் அதிருப்தி வெளியிடும் வகையில், எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான கருத்துக்களை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுத்திருந்தார். இந்த நிலையில் தற்போது சுமந்திரன் வெளியிட்டு வரும் இந்த கருத்துக்கள் மக்கள் மத்தியில் மாத்திரமின்றி கட்சிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய மக்கள் சந்திப்பில் அமைச்சுப் பதவி எதிர் காலத்தில் பெறுவது கட்டாயம் என்பதை மிகவும் லோஜிக்காக சுமந்திரன் கூறுவதற்கான காரணம் இவை தொடர்பில் ஏதாவது சர்ச்சைகள் ஏற்பட்டால் அதன் அர்த்தத்தை அப்படியே மற்றி கூறுவதற்கு ஏதுவாகவே தனது கருத்தை முன்வைத்துள்ளார். இது குறித்து கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவிக்கையில், வருகின்ற அரசுடன் பேச்சுவார்த்தைகள் மற்றும் தமிழர்களின் எதிர்கால நிரந்தரத்த தீர்வு குறித்த மாத்திரமே நாங்கள் பேச்சுவார்த்தைகளை கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மக்கள் மத்தியில் முரண்பாடை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுவது தொடர்பில் தாம் கண்காணிப்பதாகவும், மேலும் சுமந்திரன் தீர்வு வருவதற்கு இடையில் அபிவிருத்திக்காக அமைச்சுப் பதவிகளை பெறலாம் எனும் கருத்துப் பட கருத்துக்ககை வெளியிட்டுள்ளமைக்கு கண்டனங்களையும் தெரிவித்துள்ளார். https://www.tamilwin.com/srilanka/01/250691?ref=imp-news

மேஜர் கிண்ணி (அசோகன்)

1 day 3 hours ago
வீரம் விளைந்த வல்வை பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் மேஜர் கிண்ணி. எதுக்கும் பக்கத்து வீமன் முகாமில் போய் என்ன நடக்குது என்று கேட்டுக்கொண்டு வாறேன் ‘.! என்று சொன்னபடியே புறப்பட்டுப் போனான். எமது முகாம் கோட்டையில் இருந்து சற்றுத் தூரத்தில் ஒதுக்குப்புறமாக இருந்ததாலும் தொடர்புச் சாதனங்கள் இல்லாததாலும் என்ன நடைபெறுகின்றதென அறியமுடியாமல் இருந்தது. பின்னேரமாகியும் கிண்ணி முகாம் திரும்பவில்லை. கோட்டையில் அதிகரித்தவண்ணம் உள்ள சத்தங்கள் எனக்குக் கிண்ணியின் இடத்தை உணர்த்தின. குளிக்கும் இடத்தைப் போய்ப் பார்த்தேன். கின்னி குப்பியை விட்டுவிட்டுப் போயிருந்தது தெரியவந்தது. குப்பியை எடுத்துக்கொண்டு கோட்டையை நோக்கிப் போனேன் போகும் வழியெல்லாம் மக்கள் தத்தமது மூட்டை முடிச்சுக்களுடன் குடும்பம் குடும்பமாக யாழ். நகரத்தைவிட்டு அகன்றுகொண்டிருந்தனர். ‘அவ்ரோ’வும் உலங்குவானூர்தியும் மேலே சுற்றிக்கொண்டிருந்தன “கோட்டைக்கு ஆமி வந்துவிட்டான். ரவுணுக்கும் வரப்போகின்றான்” என்றெல்லாம் சனங்கள் பரபரப்பாகக் கதைத்தபடியே, அகன்று சென்றுகொண்டிருந்தார்கள். கோட்டை இராணுவ நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் முகாமான நீகன் முகாமுக்குப் போய் “கிண்ணி வந்ததோ’ என்று கேட்டேன் அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை . “முன்னுக்கு ஆள் நிற்குதோ இல்லையோ என்று கேட்டுச் சொல்லுங்கள்” என்று திரும்பவும் கேட்டேன். தொடர்பு எடுத்துக் கேட்டுவிட்டு “கிண்ணியண்ணை பொலிஸ் ஸ்ரேசடியில் நிற்கிறார்” என்று “வோக்கி வைத்திருந்த போராளி கூறினான். குப்பியை எப்படிக் கொண்டு போவது என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, “இந்த நேட்டோ ரவுண்சுகளையும் இன்ரமீடியம் ரவுண்சுகளையும் பொலிஸ் ஸ்ரேசனடியில் கொண்டுபோய்க் கொடுத்துவிடு” என்று, பொறுப்பாளர் போராளி ஒருவருக்குக் கூறுவது தெரிந்தது. இரண்டு பெரிய பொதிகள். ஒன்றை மட்டுந்தான் தூக்கலாம்; மற்றதைக் தூக்குவதற்கு இன்னொரு ஆள் தேவை” என்றுஅந்தப் போராளி பதிலளித்தான். “நான் கொண்டுவாறன்’ என்று கூறியபடியே பையொன்றைத் தோள்மீது அடித்துக் கொண்டு, இருவரும் புறப்பட்டோம். அசோகா ஹொட்டேலுக்குப் போய், அதன்கீழுள் ள சாக்கடைவழியே பொலிஸ் ஸ்ரேசனடிக்குப் போனபோது, அங்கு முன் காவல்நிலையில் படு ‘பிசி’யாகக் கிண்ணி நிற்பதைக் கன்டேன் என்ன சொல்லாமற் கொள்ளாமல் வந்துவிட்டீர்கள்’ என்று கேட்டேன். ஆமி இறங்கிட்டான் என்னென்று இனி நிற்கிறது, அதுதான் வந்திட்டன்’ என்றான் கிண்ணி. இதேபோலத்தான் இன்னுமொரு முறை. அப்போது ஒரு தவறிற்கான தண்டனை காரணமாக முகாம் ஒன்றினுள் கிண்ணி முடங்கி இருந்தான். பலாலியில், ஆனையிறவில், தீவுப்பகுதியிற் சண்டை . என்ற செய்தி அடிபட்டது. போகமுடியவில்லையே எனத் துடிதுடித்துப் போனான். தச்சன்காட்டுச் சந்திக் காவலரண்களை அன்று இரவு எமது போராளிகள் தாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சண்டையின் போக்கைப்பற்றி வோக்கியிலே கேட்டுக்கொண்டிருந்த கிண்ணி, எமது தரப்பில் இழப்புக்கள் அதிகமாக இருந்ததை அறிந்ததால் உடனே எம்16 இனைக் கட்டிக் கொண்டு, போர்க்களத்திற்குப் புறப்பட்டுவிட்டான். இவன் அங்குப் போனபோது வீரச்சாவடைந்த போராளிகளை முன்னுக்கு இருந்து பின்னுக்கு எடுத்துக்கொண்டிருந்தார்கள். ஓரிடத்திற் காயப்பட்ட நிறையப்பேர் கிடந்தனர். அவர்களை வைத்தியசாலைக்கு அனுப்ப வழியில்லாமல் இருந்தது. அம்புலன்ஸ் எங்கே? அம்புலன்ஸ் எங்கே? என்று எல்லோரும் தேடிக்கொண்டிருந்தார்கள் அம்புலன்ஸ் சாரதி அம்புலன்சைச் செலுத்திக்கொண்டு வந்தார். அவர் வெளிச்சத்தைப் போட்டுக் கொண்டுவந்ததால் அதைநோக்கி இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம்செய்து, எறிகணைகளையும் போட்டனர். இதனால் அச்சாரதி அம்புலன்சை இடைநடுவில் விட்டுவிட்டு ஓடிவிட்டார். அவர் ஒரு குடிமகன் . வாகனமோட்டுவதற்காக அழைக் கப்பட்டிருந்தார். காயமடைந்தவர்கள் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார்கள். கிண்ணி பார்த்தான் அந்த நேரத்தில் அதுதான் முக்கியம் என்று பட்டது. துப்பாக்கிச் சூடுகளுக்கு மத்தியிலேயே மெதுமெதுவாக அம்புலன்சைக் கொண்டுவந்து 4, 5 பேராகப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டுபோய் இறக்கினான். இவ்வாறாகக் காயமடைந்த முழுப்போராளிகளையும் பின்னாலுள்ள முதலுதவி இடத்திற்கும் பின்பு மருத்துவமனைக்குமாக இரவு முழுவதும் ஓடித்திரிந்தான் மறுநாட் பின்னேரம் நான் கிண்ணியின் இடத்திற்குப் போனேன். “நேற்று நான் சண்டைக்குப் போனனான் தெரியுமா” என்று கிண்ணி சொன்னான் நான் திடுக்கிட்டேன் . ஏனெனில், அந்த முகாமைவிட்டு கிண்ணியை அனுமதி இல்லாமல் வெளியேற வேண்டாம் என்ற உத்தரவு இருந்தது. நான் பேசாமல் இருப்பதைக் கண்டகிண்ைணி, சண்டைக்குப் போனதற்காக யாரும் தண்டனை தந்தால், நான் சந்தோசமாக ஏற்றுக் கொள்வேன்” என்று கூறியவன் சிரித்தான். பின்பு, அங்கே நான் போகேக்கை சண்டை முடிஞ்சுபோயிட்டுது. பார்த்தாற் காயப்பட்ட பொடியள் நிறையப்பேர் இருந்தார்கள். பிறகென் னை, அம்புலன்ஸ் எடுத்து ட்ரைவர் வேலை பார்த்தேன்” என்றான் மனநிறைவுடன். இதுதான் கிண்ணி, எங்குச் சண்டை நடக்கிறதோ அங்குப் போகத் துடிப்பவன். “அடிக்கவேண்டும், ஆயுதங்கள் எடுக்கவேண்டும்’ இதுதான் அவனது வெறி. அவன் எத்தனை தரம் போரிற் காயப்பட்டான் என்று எண்ணிக்ச்சொல்வது கடினம். இடது பக்கம் உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால்வரைக்கும் இவன் காயப்படாத இடமில்லை. கிண்ணி ‘சேட்”டைக் கழற்றினால், அவனது வீரத்தழும்புகளை எண்ணிமுடிக்க அரைநாள் தேவை. முதன்முதல் கிண்ணியை நான் சந்தித்தது இன்னும் எனக்குப் பசுமையாக நினைவில் நிற்கின்றது. இந்திய இரணுவச் சிறையில் 17 மாதங்களைக் கழித்துவிட்டு அப்போதுதான் விடுதலை யாகியிருந்தேன். ஒருவருடனும் கதைக்காது, முகாமின் ஒதுக்குப்புறத் தோட்ட மூலையொன்றில் அமர்ந்து யோசித்துக்கொண்டிருந்தேன் அண்ணை சுகமாயிருக்கிறியளோ’ என்று கேட்டவண்ணம் வந்தவரைப் பார்த்தேன். மெல்லிய, கறுத்து நெடுத்த உருவம். வலது கையிற் சிறிய பையொன்று இருந்தது. கண்கள் துறுதுறுவென்று என்னை ஆழம் பார்த்தன. உதட்டில் நட்புணர்வுடன் ஒரு சிரிப்பு, மேல் இழுத்த தலை. சாரமும்சேட்டும் அணிந்திருந்தவர் தோழமையுடன் எனக்குப் பக்கத்தில் வந்தமர்ந்தார். “என்னைத் தெரியல்லையோ ?” என்று கேட்க, நான் திரும்யவும் பார்த்துவிட்டு, “எங்கோ பார்த்தமுகம் மாதிரி இருக்கிறது, சளியாகத் தெரியவில்லை .” என்று இழுத்தேன். நான் ஈசுவின் தம்பி கிண்ணி” என்றான். “ஈசுவின் தம்பியோ “? நானும் ஈசு என்கின்ற கிண்ணியின் மூன்றாவது தமையனும் ஒன்றாகப் படித்தவர்கள். கிண்ணியின் வீட்டுக்கு இயக்கத்திற்கு வருவதற்கு முன்பு எத்தனையோ தடவைகள் நான் போயிருக்கிறேன். அப்போது கிண்ணி சிறிய பையனாக இருந்தவன். நான் சரியாகக் கவனிக்க வில்லை . ஆறு வருடங்களின் பின்பு பார்க்கும்போது, நிறைய வித்தியாசங்கள். “என்ன செய்யிறியள்’ என்று கேட்டேன். சும்மாதான் இருக்கிறேன்’ என்றான் கிண்ணி. கிண்ணி இயக்கத்தில் இருப்பது எனக்குத் தெரியாது. முல்லைத்தீவு நகரில் நடந்த சண்டையில் இந்திய இராணுவத்தின் 60 எம்எம் எறிகணையினாற் காயப்பட்டு, சாகும் தறுவாயில் வல்வெட்டித்துறைக்கு வந்ததோ, பொக்ரர் அன் கிண்ணியைக் காட்பாற்றி இந்தியாவுக்கு அழைத்துச்சென்று அவனுக்கு மறு உயிர் கொடுத்ததோ எனக்குத் தெரியாது.(வேர்கள் இணையம் வெளியீடு ) “ஏதாவது படிச்சுக்கொண்டிருக்கிறியளோ அல்லது தொழில் பார்க்கிறியளே’ என்று நான் விடாது கேட்டேன். “இடைக்கிடை இந்தியா பிஸ்னஸ் செய்கிறனான்’ என , யாரும் நம்பும்படியாகவே கிண்ணி கூறினான். இந்தியாவிற் கிண்ணி அறுவைச் சிகிச்சை முடித்துக்கொண்டு அப்போதுதான் நாடு திரும்பியதும் எனக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை . சில நாட்களின்பின் தீவகப் பகுதிக்கு அரசியல் வேலை செய்வதற்காக நான் அனுப்பப்பட்டேன். அப்போது ஜேம்ஸ் தீவகப் பொறுப்பாளராகப் பொறுப்பெடுப்பதற்காகச் சென்றார். அவருடன் நானும் வானில் போனபோது, அந்த வானை ஒட்டிக்கொண்டுபோனது கிண்ணிை. நான் கிண்ணியை ஆச்சரியமாகப் பார்த்தேன். கிண்ணி என்னைப் புரிந்துகொண்டவனாகச் சிரித்தான் . “ஜேம்ஸ் அண்ணை ! கஸ்ரோ அண்ணைக்கு நான் இயக்கம் என்று தெரியாது .” என்றான். ஜேம்சும் சிரித்துவிட்டு. கிண்ணிதான் தீவில் எனக்கடுத்த பொறுப்பாளர், அதாவது பிரதித் தளபதி” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார். அதற்குப் பிறகுதான் கிண்ணியின் வரலாற்றை அறிந்துகொண்டேன். சாதாரண போராளியாக ஆரம்பித்து, சண்டைகளில் தனது திறமையைக் காட்டி படிப்படியாக வளர்ந்தவன் இவன். இயல்பாகவே கிண்ணி ஓர் ஆவேசமான போராளி. மேஜர் பசிலனின் வளர்ப்பிற் சண்டையில் இவன் ஒரு பாயும் புலியாக மாறியதில் ஆச்சரியமில்லை . காட்டுக்குள் இருந்தபோது தலைவரின் பாசறையில் இவன் நிறையக் கற்றுக்கொண்டான். காடு இவனை அனுபவம் வாய்ந்த ஒரு போராளியாக்கியது. இவனது ஆரம்பச் செயற்பாடுகள் அரசியல் வேலையாகவே இருந்தன. மேஜர் ஜேம்ஸ் 83, 84 ஆண்டுக் காலப்பகுதிகளில் வடமராட்சிப் பகுதியில் அரசியல் வேலைத் திட்டங்களைச் செய்துகொண்டிருக்கின்றபோது அவனுக்குத் துணையாக நின்றவன் கிண்ணிை. கிண்ணியை இயக்க வேலைகளிற் படிட்டபடியாக ஈடுபடவைத்து, பின்பு முழுநேரப் போராளியாக்கிய பெருமை மேஜர் ஜேம்சுக்கே சேரும். வீரம் விளைந்த வல்வை மாநகர் பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் கிண்ணி. கந்தசாமித்துரைதம்பதிகளின் நான்காவது மகனாகப் பிறந்த இவன், சிறுவயதிலேயே கல்வியிற் கெட்டிக்காரனாக விளங்கினான். காட்லிக் கல்லூரியில் உயர் வகுப்பிற் கணிதம் படித்துத் தனது திறமையினை வெளிப்படுத்தினான். இவனது சிறுபிராயத்திலேயே தகப்பனார் இறந்த தால் வீட்டில் குடும்பநிலை கஸ்ரமாகியது. குடும்பநிலையை உணர்ந்து கிண்ணி செயற்பட்டான். தனது படிப்புக்கு மத்தியிலும் சிறுசிறு வேலைகள் செய்துவந்தான். கோழிகளை வளர்த்து அதன்மூலம் வீட்டைக் கவனிக்கும் பணியினையும் செய்தான். இவனது இரண்டாவது அண்ணன் 1983ம் ஆண்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்துகொண்டதைத் தொடர்ந்து குடும்பப்பாரம் இவனை அழுத்தியதால், ஆரம்பத்தில் வீட்டிலிருந்தவண்ணமே இயக்கவேலைகளில் ஈடுபட்டான். மேஜர் ஜேம்ஸ் பயிற்சிக்காகப் போனதைத் தொடர்ந்து, கிண்ணி வடமராட்சியில் இயங்கி வந்த எமது இயக்கச் சவர்க்காரத் தொழிற்சாலை யிற் பணியாற்றினான். அங்குச் சிறப்பாக செயற்பட்டதால் வன்னிப்பகுதியில் சவர்க்காரத் தொழிற்சாலையினை ஆரம்பிப்பதற்காகச் சிறிது காலம் வன்னியில் நின்றான். அதன்பின்பு கொமாண்டோ பயிற்சியினை முடித்துக்கொண்டு, சிறிதுகாலம் வல்வை இராணுவ முகாமினைச் சுற்றியுள்ள காவலரண்களில் காவல் புரிந்தான். இயக்க வேலைகளில் ஈடுபடும் இயந்திரப் படகுகளைக் கவனிப்பதற்காக வடமராட்சி கிழக்குப் பகுதியில் ஒப்பரேசன் லிபரேசன்’ வரையும் கடமையாற்றினான். தீவகத்திற்குக் கிண்ணி தளபதி தீவகத்தின் தளபதியாகக் கிண்ணி பொறுப்பெடுத்தவேளை, நான் அளவெட்டியில் முகாமொன்றில் இருந்தேன். ஆனால், அடிக்கடி கிண்ணியைப் போய்ப்பார்த்துவிட்டு வருவேன். பொறுப்பெடுத்ததிலிருந்து, ஏதாவது தாக்குதல் செய்யவேண்டும் என்று கிண்ணி துடித்துக்கொண்டிருந்தான். கிண்ணி வேவுபார்க்க அனுப்பிய இரு போராளிகளை ஒருநாள் இராணுவம் சுட்டுக்கொன்றது. எப்படியும் இதற்குப் பதிலடி கொடுக்கவேண்டுமென்று கிண்ணி ஆவேசமாக அலைந்து திரிந்தான். நான் ஒருமுறை போனபோது, “ஊர்காவற்றுறை வரைபடத்தை ஒழுங்கை ஒழுங்கையாகக் கீறித்தாருங்கள்” என்று கேட்டான். உங்களுக்கில்லாததோ. நாளைக்குக் கொண்டுவாறன் ” எனப் பதிலளித்தேன். மறுநாளே தாக்குதல் திட்டம் தயாராகிவிட்டது. பானு அண்ணை தனது குழுவினரை அனுப்பியிருந்ததோடு, தானும் நேரே வந்திருந்தார். கிண்ணி நானும் வாறன்’ என்று கூறினேன். “ஜேம்ஸ் அண்ணையும் வீரமரணமடைஞ்சிட்டார். நானும் நீங்களுந்தான் மிஞ்சியிருக்கிறம். நான் இறங்குகிறன். நீங்கள் வெளியில் நின்றுகொள்ளுங்கோ ‘ என்றான் “இப்படித்தான் முதலும் சொன்னீர்கள்” என்று சொல்லி ஒருமாதிரி கிண்ணியிடமும் பானு அண்ணையிடமும் அனுமதிபெற்றுச் சென்றேன், இராணுவத்தின் ரோந்துப் பிரிவொன்று முகாமை விட்டு முன்னுக்கு ஒரு கிலோ மீற்றர்வரையும் வந்து கிளியர் பண்னுவார்கள். இது தினமும் அதிகாலையில் நடப்பதால், இராணுவம் வரும் பாதைக்கு இரவே நாம் சென்று கிளைமோர்களை ஒழுங்குபடுத்தி வைத்து, இராணுவத்தை வரவேற்கத் தயாரானோம். ஒழுங்கையொன்று கடையொன்றிற்கு எதிராக இரண்டாகப் பிரிந்தது. அக்கடையினுட் கிண்ணியும் நானும் ஏனைய 6 போராளிகளும் இருந்தோம். கடைக்கு முன்பக்கத்தைத்தவிர வேறு வாசல்கள் எதுவுமில்லை. ஒழுங்கை கடைக்கு நேர் செங்குத்தாக வந்து, 3 அடி தூரத்தில் இரண்டாகப் பிரிந்து செல்கிறது. விடியப்போகின்றது. சகல தடயங்களையும் அழித்துவிட்டு, எட்டுப் பேரும் கடைக்குள் இருந்தோம், ஒழுங்கை பிரிந்த பின்னர் இருமருங்கிலும் வேறு குழுக்களும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தன. நாங்கள் இருந்த கடைக்குட் பெரும் இடநெருக்கடி. பழைய தட்டுமுட்டுச் சாமான்களை ஒருவாறு ஓரமாக ஒதுக்கிவிட்டு நெருங்கி இருந்தோம், மேலேநிமிர்ந்து பார்த்தால், பெரிய குளவிக்கூடு ஒன்று எப்போது விழும் என்று பயமுறுத்திக்கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான பெரிய குளவிகள் கொட்டுவோம் என்று பயமுறுத்தினை. “அண்ணை இதுகள் விஷக் குளவிகள், நான்கு ஐந்து ஒன்றாகக் கடித்ததென்றால் ஆளை முடித்துப்போடும்” என்று போராளியொருவன் எம்மைப் பயப்படுத்தினான். எல்லோரும் குளவிகளைப் பார்ப்பதும் விடியுதா எனப் பார்ப்பதுமாக இருந்தோம். “இப்படித்தான் நெடுங்கேணித் தாக்குதலையும் திட்டமிட்டு அடிச்சனான். இதுகும் சரிவரும் என்றான் கிண்ணி. எல்லோரும் ஆமியையும் குளவியையும் மாறிமாறிப் பார்த்து பதட்டத்துடன் இருந்ததைக்கண்ட கிண்ணி, நெடுங்கேணித் தாக்குதலைப்பற்றி விபரிக்கலானான் . “ஒரு கட்டத்தில் எமது போராளிகளில் ஒருவனை நோக்கி எல்.எம்.ஜி. க்காரன் சுட்டுக்கொண்டிருந்தான். அவனை உயிருடன்விட்டால் எல்லோரையும் முடித்துவிடுவான் என்று விளங்கிவிட்டது. இதனால் நான் பாய்ந்தேன்” என்று நிறுத்தினான் கிண்ணி, எல்லோரும் கதைகேட்கும் ஆவலில், “பிறகு என்ன நடந்தது சொல்லுங்கோ ‘ என்றார்கள். துப்பாக்கியைத் தோளிற் கொளுவிக்கொண்டு, குண்டின் கிளிப்பைக் கழட்டியபடியே கத்திக்கொண்டு எதிரியின் நிலைக்குட் பாய்ந்தேன். அடித்துக்கொண்டிருந்த எல்.எம்.ஜி. இன் பரலில்இறுக்கிப் பிடித்து அதனை என்பக்கம் திரும்பவிடாமல் தடுத்தேன்’ “கை சுட்டிருக்குமே” ஒரு போராளி இடையில் அவசரப்பட்டுப் புகுந்தான். “கை கொதிச்சுப்போச்சு. அப்படிச் செய்யாமல்விட்டால் என்னைச் சுட்டுப்போடுவான். அதனால் விடவேயில்லை. சண்டை முடிந்த பின்பு பார்த்தால் கையெல்லாம் கொப்பளம் போட்டிருந்தது’ என்றான் கின்னி . “பிறகு.?” ஆவலை அடக்கமுடியாமல் நான் கேட்டேன். “எல்லோரும் சீக்கியர். பெரிய தடியன்கள். காலுக்குள் இருந்த இரு சீக்கியர்களும் எல்.எம்.ஜி. வைத்திருந்த சீக்கியனும் நினைத்திருந்தால் என்னைச் சுலபமாக அடித்துவிழுத்தி யிருக்கலாம். ஆனால், கிளிப்பைக் கழற்றிய குண்டைக் கண்டும் நான் பலத்த குரலிற் கத்தி வெருட்டியதைக் கண்டும் பயந்துவிட்டார்கள்” என்ற கிண்ணி, “கொஞ்சம் பொறு’ என்றுசொல்லிக் கதவிடுக்கால் மெல்லப் பார்த்தான். “வாறாங்கள்’ எல்லோரும் அடங்கினோம். எனது நெஞ்சு துடிக்கிற சத்தம் பலமாகக் கேட்கின்றது . சில வினாடிகளின்பின் நான் மெதுவாக எட்டிப்பார்த்தபோது, நாங்கள் இருக்கின்ற இடத்தில் இருந்து 5 அடி தள்ளி, ஒழுங்கையால் ஒரு எல்.எம்.ஜி. க்காரன் திரும்பிச் சென்று கொண்டிருந்தான். 6 வீரன் எம்மைக் கடந்தவுடன் கிண்ணி கிளைமோரை வெடிக்கவைத்தான். வெடித்தவுடன் கிண்ணி பாய்ந்தான். குளவியின் பயத்தாலே நானும் கிண்ணியுடன் சேர்ந்து பாய்ந்தேன். நல்ல வேளை நாங்கள் இருவரும் முதலிற் பாய்ந்தது. வெடித்தவுடன் குளவிக் கூடு பிய்ந்து கொட்டுப்பட்டு எங்களுடன் இருந்த ஏனைய அறுவரையும் குளவிகள் கலைத்துக் கலைத்துக் கொட்டினை என்று பிறகுதான் எனக்குத் தெரியவந்தது. 5 நிமிடங்களிற் சண்டை முடிவடைந்துவிட்டது. கிண்ணி பாய்ந்துசென்று கொல்லப்பட்ட இரு இராணுவத்தினரை இழுத்துவந்தான். ஆயுதங்கள் எம்மாற் கைப்பற்றப்பட்டன. இராணுவத்தினர் நால்வர் கொல்லப்பட்டு 6பேர் காயமடைந்தனர். இரு ஆயுதங்களும் தொலைத்தொடர்புச் சாதனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டன. கிண்ணி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி சில நாட்களாகக் கிண்ணிையை எனது முகாம் பக்கம் காணவில்லை. யாழ்ப்பாணத்திற் குள் நின்றால் சுற்றிச்சுற்றி எப்படியும் என்னிடம் வருவான். நிச்சயம் ஏதாவது ஓர் இராணுவ முகாமின் காவலரண்களை மேளப்பமிட்டவாறு இருப்பான் என்பது எனக்குத் தெரியும். வன்னியில் இருந்து வந்த போராளிகள் சில கிண்ணி அங்கு நிற்பதாகக் கூறினர். மிக விரைவில் தாக்குதல் ஒன்றைப் பத்திரிகையிற் பார்க்கலாம் என்று எதிர்பார்த்தேன் . அதேபோல . தட்டுவன்கொட்டியில் 35 காவலரண்கள் அழிப்பு, 15 இராணுவம் பலி ” என்று ‘புலிகளின் குரல் ‘ தெரிவித்தது . சில நாட்களின்பின் கிண்ணி எனது முகாமிற்கு வந்தபோது , “நல்ல அடியொன்று அடிச்சிருக்கிறியள்” என்றேன். மெல்ல மறுத்து, “நான் அங்குப் போகேல்லை” என்றான் ஒரு சிரிப்புடன் . பிறகு ஒரு மாதிரி “நாங்கள் எதிர்பார்த்துப் போதுகூட, ஆனால், அவங்கள் ஓடிட்டாங்கள்’ என்றான். “போன வருசம் தட்டுவன்கொட்டியில் அடிபட்டனீங்கள் தானே! அந்த இடமோ இம்முறையும்” என்றுகேட்டேன் அதுக்குக் கிட்டத்தான் ” என்று பதிலளித்தான். சென்ற வருடமும் ஆனையிறவுச் சண்டைக்கு முன்பு தட்டுவன்கொட்டியில் அமைந்துள்ள எமது காவலரண்களைக் கைப்பற்றி பரந்தனுக்கு வர இராணுவம் முற்பட்டது. அது முக்கியத்துவம்வாய்ந்ததொருசண்டை. அந்த இடத்தில் தடுக்காதுவிட்டால் இராணுவம் பரந்தன் வரையும் வரும் ஆபத்து இருந்தது. அந்தச் சண்டையிற் கிண்ணி தனது முத்திரையைப் பதித்தான். அதிகாலையிலிருந்து இரவுவரை வெட்டவெளியில் இராணுவத்துடன் சமர்புரிந்து, அவர்களுக்குப் பலத்த இழப்புக்களை ஏற்படுத்தி,முகாமிற்கு அடித்துக் கலைத்தவன் இவன். எண்டாலும் காரைநகர் அடி மாதிரி வராது” என்றான் கிண்ணி. உண்மையில் அது ஓர் அற்புதமான அடி. காரைநகர்ப் பாலத்தில் தங்களுக்கு அடிவரும் என்று இராணுவம் கனவுகூடக் காணவில்லை . கிண்ணி ‘சாள்ஸில் அன்ரனி சிறப்புப் படைப்பிரிவின்’ விசேட தளபதியாகப் பொறுப்பெடுத்த சில வாரங்களிற்குள், அதனைச் செய்துகாட்டினான். எந்தத் தாக்குதல் என்றாலும் வேவு நடவடிக்கையில் இறுதிவரை ஈடுபட்டு, தனக்குத் திருப்தி ஏற்பட்ட பின்னரே தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவான். காரைநகரில் நடந்த சுவையான சம்பவம் ஒன்றைக் கிண்ணி கூறினான். திடீர் அதிரடித் தாக்குதல்மூலம் இராணுவத்தை உடைத்தெறிந்துவிட்டு எதிரியின் காவலரண்களைக்கைப்பற்றி ஆயுதங்களை எடுத்தபின், தனது போராளிகளைத் திருப்பி அனுப்பிக்கொண்டிருந்தான். ஒரு மூலையிற் சாக்கொன்று குவியலாகக் கிடந்தது. போகும் அவசரத்தில் அதனைக் காலால் உதைத்துத் தள்ளியினான். உள்ளுக்குள்ளிருந்த ஏதோ பொருளொன்று காலிற்பட்டு காலை வலிக்கச்செய்தது. திறந்து பார்த்தால் அதற்குள் 60எம்.எம். மோட்டாரும் எறிகணைகளும் காணப்பட்டன (அந்தக் காலகட்டத்தில் 60எம்.எம். மோட்டார் எமக்கொரு வரப்பிரசாதமான ஆயுதமாக இருக்கக்கூடியளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது) ஜூலை மாதம் 10ஆம் திகதி. தோழன் ஒருவன் பதறியபடியே வந்தான். முகமெல்லாம் இருண்டு, கறுத்து, சோகம் அப்பிக் காணப்பட்டது. என்னிடம் வந்தவன் எதுவும் பேசாது தள்ளாடியபடியே கதிரையில் அமர்ந்துகொண்டான். ஏதாவது கேட்டால் அழுதுவிடுவான்போல இருந்தது . என்னை ஒரு மாதிரி இருக்கிறியள் ” என, நிலவிய மெளனத்தை உடைத்தவாறே கேட்டேன். கிண்ணியெல்லே.” மேலே கூறமுடியாது முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொண்டான். உடனே எனக்கு விளங்கிவிட்டது. சில நிமிட நேரங்களிற்கு என்ன நடந்ததென்று ஜீரணிக்க முடியவில்லை . “மச்சான், மச்சான் என்று கூப்பிட்டு நெருக்கமாகவும் – அன்பாகவும் பழகிற தளபதி அவன் ‘ என்று சொல்லி, அந்தத் தோழன் கண்கலங்கினான் ஏன் டொக்டர் அன்ரியின் இடத்திற்குக் கொண்டுபோனால் அவனைக் காப்பாற்றியிருக்கலாமே? ஏதோ ஆற்றாமையினாற் கேட்டேன் இரண்டு நாளைக்கு முதல்தான் சிறுகாயப்பட்டு அன்ரியிடத்துக்குப் போனவன். அடுத்தமுறை உங்கட இடத்துக்கு வரமாட்டன் என்று அன்ரியிடம் சொன்னவனாம். சொன்னதுபோல. ” நான் காயப்பட்டு வீழ்ந்தபோது ஓடியோடி வந்து என்னைப் பார்த்தவன்; என்னைக் கவனிக்கத் தனது தாயையும் சகோதரனையும் அனுப்பியவன்; நான் யோசிக்கக்கூடாதென்று வீடியோ விளையாட்டுக் கருவியையும் றேடியோவையும் தந்தவன்; களச்செய்திகளை உடனுக்குடன் வந்து கலகலப்பாகச்செல்பவன் , இன்று இயக்கச்சிப் போர்முனையில். அவன் மெளனமாகிப் போனான் .மேஜர் ஜேம்சினைட்பற்றி நான் சிறு குறிப்பு ஒன்றை ‘ஈழநாதத்தில் எழுதியிருந்தேன். இதனைப்படித்த கிண்ணி எப்படியும் என்னைத் தேடிவருவான் என்பது எனக்குத் தெரியும். எதிர்பார்த்தபடியே அன்று இரவு கிண்ணி வந்தான். எனக்குத் தெரியும், நீங்கள்தான் இதை எழுதியிருப்பியவள்” என்றான். “உங்களை நம்பித்தான் நான் முன்னுக்குப் போறன் ‘ என்றான். “ஏன்” என்று விளங்காதவனாகக் கேட்டேன். “நான் செத்தால் நீங்கள்தான் என்னைப்பற்றி எழுதவேணும்’ என்றான் குழந்தைத்தனமாக போராட்ட வாழ்விற் சாவைப்பற்றி போராளிகள் சாதாரணமாகக் கதைப்பார்கள். சொனியும் கிண்ணியும் நானும் இறுதிக் காலகட்டத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். அப்போது மூவரும் இருந்து கதைக்கும்போது, சொனிதான் ஓரளவு காலம் உயிருடன் இருப்பான் என நாம் நம்பினோம். இதனால் எங்கள் புகைப்படங்கள் போன்றவற்றைச் சொனியிடம் கொடுத்து வைத்திருந்தோம். முதலில் கிண்ணியும் இரண்டாவதாக நானும் மாவீரர் பட்டியலில் சேருவோம் என்று நம்பியிருந்தோம். ஆனால், நடந்ததோ வேறு. சென்ற வருட சண்டையிற் சொனி இந்தமுறை கிண்ணி; இடைநடுவில் நான். “உங்களுக்குத்தானே என்னைப்பற்றித் தெரியும்’ என்றான் கிண்ணிை. இவ்வளவு விரைவாகக் கிண்ணியைப்பற்றி நான் எழுதவேண்டிவரும் என்று நினைக்கவில்லை. இப்படி நாங்கள் கதைத்த சில நாட்களின் பின்பு, “நான் செத்தபிறகு இதை உடைத்துப் பாருங்கோ” என்று, என்னிடம் கடித உறையொன்றைக் கொண்டுவந்து தந்தான். அக்கடித உறை உடைக்காதவாறு ‘செலோ ரேப்பால் சுற்றப் பட்டிருந்தது: அதற்கு மேல் பொலித்தீனாற் சீல் பண்ணைப்பட்டிருந்தது. தரும்போது அதைப்பற்றிப் பெரிதாக நான் எதுவும் நினைக்கவில்லை . கிண்ணி வீரமரணமடைந்தபின் அதனை உடைத்தபோது, அதில் ஒரு வரலாறு இருந்தது – இந்திய இராணுவம் இந்த மண்ணைவிட்டு அவசரமாக ஓடியதன் பின்னணிகளுள் ஒன்று இருந்தது – நன்றி வேர்கள் இணையம் விடுதலைப் புலிகளின் ஓர்மமும் துணிச்சலும் திட்டமிடும் தந்திரோபாயமும் வெளிப்பட்டது நெடுங்கேணிப் பாடசாலையில் இந்திய இராணுவத்திற்குக் கொடுத்த அடியைப்பற்றி, கிண்ணி அதில் எழுதியிருந்தான்; அவன் ஒரு சிறந்த சண்டைக்காரன் மாத்திரமல்ல, சிறந்த போக்காரன் என்பதையும் நிரூபித்திருந்தான் கிண்ணியின் தமையன் முரளி வன்னியிலிருந்து வரும்போதெல்லாம், பல போராளிகளை அழைத்துத் தனது வீட்டிற்கு அறிமுகப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். “நான் வராவிட்டாலும் எங்கட பெடியள் வீட்டுக்கு வருவாங்கள்; அவர்களையும் உன்ர பிள்ளைகளாய்ப் பார்” என்று முரளி தனது தாயாருக்கு அடிக்கடி கூறியிருந்தான். முரளி எப்படிக் கூறியிருந்தானோ அப்படியே கிண்ணியயும் தப்பாது கூறியிருந்தான். அந்தத் தாயும் போராளிகளில் தனது பிள்ளை, மாற்றான் பிள்ளை என்று வேறுபாடு பார்ப்பதில்லை. இந்திய இராணுவக் காலகட்டத்தின் போது, ஏராளமான போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துக் காப்பாற்றிய வீடு அது. உணவும் ஆதரவும் வழங்கிப் பராமரித்த வாசல் அது. இன்று அந்தத் தாயின் பிள்ளைகளிற் கிண்ணியும் முரளியும் திரும்பிவராத இடத்திற்குப் போய்விட்டார்கள்.மற்றப் பிள்ளைகள் வருமென்று அந்தத் தாய் காத்திருக்கிறாள். https://www.thaarakam.com/news/141260?fbclid=IwAR3H19-mte5EZ_Z4OdIbcLGEMlYIGVSHZ3zUtAov5jZmQK65bBc-TzSBS1E

தமிழ் தேசியக் கூட்டமைப்பினைக் கண்டு சிலர் அஞ்சுகின்றனர் – சிறீதரன்

1 day 3 hours ago
நல்லா ஜோக் அடிக்கிறார் சிறீதரன்! முடிஞ்சா வன்னியின் உட்பகுதிகளுக்கு போய் சிறீதரன் வாக்கு கேட்கட்டும் பாக்கலாம்.

ராஜன் குறை என்பவர் யார்? | ஜெயமோகன்

1 day 3 hours ago
ஜெயமோகனின் அரசியல் என்ன? – ராஜன் குறை July 6, 2020 - ராஜன் குறை · சமூகம் இந்தியா ஜெயமோகனின் “ராஜன் குறை என்பவர் யார்?” என்ற கட்டுரைக்கு மறுப்பு ஜெயமோகனின் அவர் வலைத்தளத்தில், ஜூலை 4 ஆம் தேதி “ராஜன் குறை என்பவர் யார்?” என்று ஒரு கட்டுரையை பிரசுரித்துள்ளார். அதனால் அவருடைய வாசகர்களுக்கு நான் யார் என்பதே தெரியாது, அதனால் அறிமுகம் செய்கிறார் என்ற பொருள் உருவாகிறது. ஆனால் மிகவும் பிழையாக அறிமுகம் செய்கிறார். அவருடைய வலைத்தளத்தில்தான் மறுப்பு எழுதவேண்டும். ஆனால் அவர் சொற்களை முழுமையாக மறுத்து, கண்டித்து எழுதும் கட்டுரையை அவர் பிரசுரிப்பார் என்று தோன்றாததால் நான் சமீபத்தில் அவர் கதை,கட்டுரைகள் குறித்த விமர்சனங்களை பிரசுரித்த உயிர்மை இணையதளத்திலேயே பிரசுரிக்கிறேன். அவருடைய வாசகர் எம்,ராஜேந்திரன் என்பவர் எழுப்பியுள்ள கேள்விக்கு பதிலாகத்தான் ஜெயமோகன் இந்த கட்டுரையை எழுதியுள்ளார். அந்த வாசகர் நான் ஒரு அப்செஷன் போல தொடர்ந்து ஜெயமோகனைப் பற்றி எழுதி வருவதாக குறிப்பிட்டுள்ளார். அவர் எந்த கட்டுரைகளை படித்தார் என்று தெரியவில்லை. வியப்பாக இருக்கிறது. நான் ஜெயமோகனின் குறிப்பிட்ட கட்டுரை, கூற்று அல்லது படைப்பு குறித்துதான் எழுதுவேனே தவிர ஜெயமோகனைப் பற்றி இதுவரை எதுவுமே எழுதியதில்லை. அவருடைய மாஸ்டர் கட்டுரை குறித்து எழுதியபோதுதான் அவருடைய புனைவெழுத்தாக நான் படித்த விஷ்ணுபுரம் மற்றும் சில கதைகளுக்கும் அவருடைய கட்டுரைகளில் வெளிப்படும் பல்வேறு பார்வைகளுக்கும் தொடர்பிருக்கிறது; அதற்கும் மாஸ்டர், விதி சமைப்பவர்கள், தேர்வு செய்யப்பட்டவர்கள் போன்ற கட்டுரைகளில் வெளிப்படும் பாசிச மனோவியலுக்கும் தொடர்பிருக்கிறது என்று எழுதினேன். இதுவும் கூட எழுத்துருவாக நான் அறிந்த ஜெயமோகன் மட்டுமே. அதனால் அவரைப்பற்றி நான் எதுவும் எழுதுவதில்லை என்பதே உண்மை. ஆனால் இந்த உயர்பண்பிற்கு நேரதிராக ஜெயமோகன் என் எழுத்துக்களை பற்றி, அவர் மீது நான் வைக்கும் விமர்சனங்கள் பற்றி எதுவுமே எழுதியதில்லை. எப்போதுமே என் ஜாதி அடையாளத்தையோ, வேறு மேலும் பல்வேறு சமூக அடையாளங்களையோ குறித்துதான் எழுதுவார். என்னை அறிமுகப்படுத்தும் இந்த கட்டுரையிலும் முழுவதும் என்னைக் குறித்த தனிப்பட்ட கிசுகிசு பாணியிலான புனைவுகளை மட்டுமே எழுதியுள்ளார். “ஆளை ஆளை பார்க்கிறார்; ஆட்டத்தை பார்த்திடாமல் ஆளை ஆளை பார்க்கிறார்” என்று ஒரு பாட்டு உண்டு. அதுபோல என் விமர்சனங்களில் நான் கூறியுள்ள கருத்துக்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல் ஒரு தனிநபர் தாக்குதலை மட்டுமே தொடுத்துள்ளார். அது மட்டுமல்ல. என்னுடைய பல கட்டுரைகளில் ஜெயமோகனுடன் நான் தத்துவார்த்தமாக, கருத்தியல் ரீதியாக எப்படி வேறுபடுகிறேன் என்பதை விளக்கியுள்ளேன். அவரை கருத்தியல் எதிரி என்றே குறிப்பிட்டு கெளரவித்து கண்டித்தும், விமர்சித்தும் வருகிறேன். இதெல்லாம் காலம் காலமாக பின்பற்றப்படும் அறிவுலக நடைமுறை என்பது என் கருத்து. மேலும் அது போல அவரை முன்வைத்து எழுதுவதன் மூலம் எதிர்நிலையில் என் கருத்துக்களை தொகுத்துக்கொள்ள முடிகிறது; வாசகர்களிடம் பகிர்ந்துகொள்ள முடிகிறது. என் கட்டுரைகளை படித்த பலரும் ஜெயமோகன் எழுத்திற்கான எதிர்வினை என்பதற்கு அப்பால் என் கட்டுரைகளில் பல சிந்தனைக்குரிய அம்சங்கள் அடங்கியுள்ளன என்பதைக் கூறியுள்ளார்கள். உதாரணமாக வேளச்சேரியில் வெளி மாநில தொழிலாளர்கள் ஒரு வங்கி கொள்ளை சம்பவத்தையொட்டி என்கெளண்டர் என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்பட்ட போது, ஜெயமோகன் காவல்துறைக்கும். அந்த நிகழ்வை கண்டிக்கும் மனித உரிமையாளர்களுக்கும் நடுநிலையில் நின்று காவலர் தரப்பில் உள்ள பிரச்சினைகளையும் கவனிக்கவேண்டும் என்று எழுதினார். நான் அத்தகைய நிலைபாடு எவ்வளவு தவறானது என்பதை விளக்கி மூன்றுவிதமான கட்டுரைகள் எழுதினேன். அவற்றில் அடங்கியிருந்த சிந்தனைகள் குறித்து பலர் என்னுடன் விவாதித்தார்கள். அதாவது ஜெயமோகனுக்கு மறுப்பு அல்லது கண்டனம் என்பதைக் கடந்து அதில் பல முக்கியமான கோட்பாடு சார்ந்த அம்சங்களை விவாதித்திருந்தேன் என்பதால் அந்த விவாதங்கள் நிகழ்ந்தன. எனவே ஜெயமோகன் எழுத்தை விமர்சிப்பது, கண்டிப்பது என்பது முகாந்திரமே தவிர என் எழுத்து என்றுமே என் சிந்தனைகளை தொகுத்து வெளிப்படுத்தும் முயற்சிகள்தான். என் கருத்தியல் நிலைகளுக்கு நேர் எதிராக அவர் எழுதும்போது அந்த எழுத்து என்னை எழுதத் தூண்டுகிறது. பெரும்பாலும் முகநூலில்தான் எழுதியுள்ளேன். சமீபகாலமாக உயிர்மை பத்திரிகை மற்றும் இணையதளத்தில் எழுதுகிறேன். அப்படி அவரை கருத்தியல் ரீதியாக ஏன் கணித்து மீண்டும் மீண்டும் அவர் எழுத்துக்களை விமர்சித்து எழுதுகிறேன் என்று கேட்பவர்களுக்கான விளக்கத்தை அவரே கட்டுரையின் துவக்கத்திலேயே தருகிறார். நான் அமெரிக்காவுக்கு ஆய்வு படிப்பிற்காக சென்றதைக் குறிப்பிடும் அவர் அதற்கான ஒரு வியத்தகு காரணத்தைத் தருகிறார்: “அதன்பின் அவர் அமெரிக்காவுக்கு ஆய்வுக்காகச் சென்றார். அமெரிக்காவின் பல்கலைக் கழகங்களில் ‘சமூகவியல்’ ‘மானுடவியல்’ ஆய்வுக்குச் செல்வதற்கான வழிமுறை என்பது இந்து- இந்திய எதிர்ப்பு அரசியல்.” அது என்ன “இந்து-இந்திய எதிர்ப்பு அரசியல்”? இந்துத்துவ எதிர்ப்பு அரசியலைத்தான் அப்படி குறிப்பிடுகிறார். இந்துத்துவவாதிகள் எப்போதுமே அவர்களை எதிர்ப்பதை இந்து மதத்தை, இந்தியாவை எதிர்ப்பதாகத்தான் கூறுவார்கள். உதாரணமாக ஜெயமோகனின் நண்பர் அரவிந்தன் நீலகண்டனும், ராஜீவ் மல்ஹோத்திராவும் இணைந்து “உடையும் இந்தியா” என்ற நூலை எழுதினார்கள். அதில் குறிப்பாக திராவிடம் என்ற கருத்தாக்கம் அந்நிய சதியால் நிதியால் உருவானது என்று எழுதியிருந்தார்கள். ஆசிரியர் வீரமணி அதற்கு மறுப்பாக ஒரு நூல் எழுதினார். அதன் தலைப்பு “உடையும் இந்தியாவா? உடையும் இந்துத்துவாவா?” என்பதுதான். இந்த அரசியல் மிகவும் தெளிவாகத்தான் இருக்கிறது. இன்றைய இந்துத்துவ அரசியலின் மிகப்பெரிய பிரச்சினையே ஆரியர்கள் மத்திய ஆசிய பகுதியிலிருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள் என்று கூறப்படுவதும், அதற்குமுன்னால் இங்கே இருந்தவர்களுள் திராவிடர்களும் உண்டு என்பதும், சிந்துவெளி சின்னங்களுக்கும், தமிழ் தொல்லியல் தடயங்களில் காணப்படுபவற்றிற்கும் உள்ள தொடர்புகள் குறித்து பேசப்படுவதும்தான். ஆரிய, வேத கலாசாரத்தை இந்தியாவின் ஒற்றை மூலமாகக் கட்டமைப்பது அவர்களுக்குத் தேவையாக இருப்பதால் திராவிடம் என்ற பார்ப்பனீய எதிர்ப்பு கோட்பாடு, அரசியல் இந்திய-இந்து விரோதமாகத்தான் இருக்கும். இதை நான் இங்கு விளக்குவதற்குக் காரணம் நான் சிந்தனையாளனாக, ஆய்வாளனாக மாறுவதற்குக் காரணமாக இருந்த ஒரு சம்பவம் 1993 ஆம் ஆண்டு நிகழ்ந்தது. அது “பெரியாரியம்: தத்துவத்தை வரையறுத்தலும், நடைபெறவேண்டிய விவாதமும்” என்ற கட்டுரையை நிறப்பிரிகை பத்திரிகையில் நான் எழுத நேர்ந்தது. அதுவரை இலக்கியம், திரைப்படச் சங்கங்கள், நவீன நாடகம் என பல்வேறு திசைகளில் கவனம் செலுத்திவந்த நான், ஆய்வாளனாகவும், எழுத்தாளனாகவும் மாற தீர்மானித்த தருணம். பெரியார் என்ற ஆகிருதி தோற்றுவித்த வியப்பும், அவரை வாசித்த அனுபவம் அளித்த உத்வேகமும்தான் என்னை துணிந்து ஆய்வுப்புலத்தை நோக்கி நகர்த்தியது. அதுவரை நான் ஏதோ சில வேர்மட்ட கலாசார நடவடிக்கைகளில்தான் என் வாழ்நாளை செலவழிக்க வேண்டும் என்றுதான் எண்ணிக்கொண்டிருந்தேன். ஜெயமோகன் புனைந்து கூறுவது போல என்னை “நக்சலைட் செயல்பாட்டாளரான பிராமணர்” என்று காட்டிக்கொண்டதில்லை. (அது எப்படி பிராமணணாகவும், நக்சலைட் செயல்பாட்டாளராகவும் ஒரே நேரத்தில் காட்டிக்கொள்வது? அத்துடன் குறை என்று பெயர் வைத்துக்கொண்டு பிறப்பை மறைக்கவேறு செய்யவேண்டும். ஏதோ ஸ்பை திரில்லர் படத்தில் நடித்தது போல இருக்கிறது). நான் பழகிய மார்க்ஸீய லெனினீய இயக்கத்தோழர்கள் இதைக் கேட்டால் சிரிப்பார்கள். எல்லா இடதுசாரி இயக்கங்களிலும் எனக்கு நண்பர்கள் இருந்தார்கள். எல்லோரிடமும் கோட்பாட்டு ரீதியாக விவாதித்திருக்கிறேன். மார்க்ஸிய லெனினீய இயக்கத் தோழர்கள் அதிக பட்சம் என்னை பெட்டி பூர்ஷ்வா சிந்தனையாளன், ஜனநாயக ஆதரவு சக்தி என்று வேண்டுமானால் கணித்திருப்பார்கள். நிறப்பிரிகை பத்திரிகையும், அ.மார்க்ஸ், ரவிகுமார், பொ.வேலுசாமி உள்ளிட்ட பல நண்பர்களின் தொடர்பும்தான் நான் எழுத முனைவதற்கான, தொடர்ந்து வாசிப்பதற்கான தூண்டுதல்களை தந்தது என்றால் மிகையாகாது. அதன் விளைவாகத்தான் பெரியாரியம் கட்டுரையை எழுத நேர்ந்தது. குறிப்பாக பெரியாரை விரிவாக வாசிப்பதற்கான தூண்டுதலை ஒரு ப்ரவொகேஷனாக தந்தது கோ.ராஜாராம். வாசிக்க உதவி செய்து பங்கேற்றது கிராமியன். கட்டுரையை என்னையே எழுதச்சொல்லி உற்சாகப் படுத்தியது அ.மார்க்ஸ். இப்படியாகத்தான் 1993 ஆம் ஆண்டு பெரியாரியம் கட்டுரை காரணமாக ஆய்வாளனாகவும், திராவிட இயக்க ஆதரவாளனாகவும் மாறினேன் என்று கூறவேண்டும். சிறுபத்திரிகை சூழலில் நண்பர்கள் எல்லோரும் அறிந்ததுதான் இது. அந்த சூழலில் புழங்கிக் கொண்டிருந்த ஜெயமோகனுக்கும் அவசியம் தெரிந்திருக்கும். மறந்தாரோ, மறைக்கிறாரோ, அவர் பிரச்சினை. ஆனால் “இந்து-இந்திய” எதிர்ப்பு என்று இந்துத்துவ எதிர்ப்பை சரியாகத்தான் சுட்டிக் காட்டுகிறார். எனக்கும், ஜெயமோகனுக்குமான தத்துவார்த்த, கருத்தியல் முரண்கள் துலக்கமடையும் புள்ளி பெரியார் என்றால் மிகையாகாது. என்னுடைய பெரியாரிய, திராவிட இயக்க ஆதரவான சிந்தனையுலக ஆய்வுலகச் செயல்பாட்டை பலவீனப்படுத்தும் ஆசையில்தான் ஜெயமோகன் என்னைக் குறித்து எழுதும்போதெல்லாம் என் ஜாதி அடையாளத்தை சுட்டிக்காட்டுவார். நான் அதுபோன்ற ஒரு செயலை யாருக்கும் செய்வதில்லை. என் பிறப்பு சார்ந்த அடையாளத்தை மறைப்பதும் இல்லை. பெரியார் கட்டுரை எழுதியபின் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள சென்னைக்கு குடிபெயர்ந்தேன். அந்த கட்டுரை எழுதியவன் என்ற அடையாளத்துடன் எம்.எஸ்.எஸ்.பாண்டியனை சந்தித்தேன். அவருடைய நட்பும், வழிகாட்டுதலும் தொடர்ந்து வாசிக்கவும், கல்விப்புலம் நோக்கிய நகர்விற்கும் உதவியாக இருந்தது. ஒரு குறுகிய கால பகுதி நேர ஆய்வில் அவருடன் ஈடுபட்டேன்; தமிழ் சினிமா குறித்த கருத்தரங்கத்திற்கான பூர்வாங்க தயாரிப்பிற்கான ஆய்வு அது. அதன் பின்னர் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் டெவலப்மண்ட் ஆல்டர்நேடிவ்ஸ் என்ற நிறுவனத்தில் ஆண்தன்மை (masculinity) குறித்த ஆய்வில் ஜெயரஞ்சன், ஆனந்தி ஆகியோருடன் இணைந்துகொண்டேன். பலபேர் இணைந்து செய்த நிறுவன ரீதியான ஆய்வு அது. அதற்குக் காரணம் என்னுடைய பல்வேறு கவனிக்குவிப்பு கோட்பாட்டு புலங்களில் பாலியல் கட்டுமானமும் ஒன்று என்பதும், அது குறித்து நான் கணிசமாக வாசித்து வந்தேன் என்பதும்தான். இந்த ஆய்வு நடந்ததும், கட்டுரை எழுதியதும் நான் பட்டமேற்படிப்புக்கு செல்வதற்கு முன்னால். ஜெயமோகன் தரும் எல்லா தகவல்களும் பிழை என்பதுடன், உள்நோக்கம் கொண்டு செய்யும் திரிபுகளாகவும் இருப்பது வியப்பளிக்கவில்லை. அவர் இதை பலருக்கும் தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கிறார். “Work, Caste, Competing Masculinities: Notes from a Tamil Village” என்ற கட்டுரை எஸ்.ஆனந்தி, ஜெ.ஜெயரஞ்சன், ராஜன் கிருஷ்ணன் என்ற பெயரில் நான் ஆகிய ஆகிய மூவரால் எழுதப்பட்டது, எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லியில் வெளியான ஆண்டு 2002. இந்த கட்டுரைக்கான கள ஆய்வு 1999-2001 ஆண்டுகளில் பலரால் மேற்கொள்ளப்பட்டது, நானும் ஒரு சில குழு விவாதங்களுக்கு சென்று அந்த ஊரில் உள்ள மக்களை சந்தித்தேன். கட்டுரை பல கட்டங்கள், பல வரைவுகளை தாண்டி நிறைவு செய்யப்பட்டது. எம்.எஸ்.எஸ்.பாண்டியன் இறுதி வடிவம் பெறுவதற்கு நிறைய ஆலோசனைகள் வழங்கினார். அவருடைய பங்கேற்பும் கணிசமாக இருந்தது. இந்த கட்டுரை வந்தபிறகு பேராசிரியர். லட்சுமணன் இதற்கு விரிவான மறுப்பு ஒன்றை அதே EPW பத்திரிகையில் எழுதினார். அவருடன் அதன்பின்னும் உரையாடலில்தான் இருக்கிறேன். கல்விப்புல ஆய்வுகளில் இதுபோன்ற மறுப்புகளும், மாற்றுக் கோணங்களும் முக்கியமானவை. என்னைப் பொறுத்தவரை ஆய்வுகளில் அறுதி உண்மைகளை காண்பது என்பது சாத்தியமல்ல. சில குறிப்பிட்ட அம்சங்கள் நம் பார்வைக்கு வரும்போது அவற்றைக் குறித்து நாம் எழுதுகிறோம். அது பிறருடைய சிந்தனைக்கும், தொடர்ந்த ஆய்விற்கும் பயன்பட வேண்டும் என்பதுதான் குறிக்கோள். இந்த கட்டுரை, அந்த கட்டுரைக்கு வந்த பேராசிரியர் லட்சுமணனின் மறுப்பு ஆகியவற்றை உள்ளடக்கி, அதன் பல அம்சங்களை ஏற்றுக்கொண்டு, நான் மேலும் சிந்தித்து வந்துள்ளேன். ரட்கர்ஸ் பல்கலைகழகத்து கருத்தரங்கம் ஒன்றில் “Touching Untouchability: Dalit Situations and Theoretical Horizons” என்ற ஒரு கட்டுரையை வாசித்தேன். அது 2006 ஆம் ஆண்டு ஒரு நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. இப்படியாக கல்விப்புல செயல்பாடு என்பது தொடர் செயல்பாடாகத்தான் இருக்கும். ஜெயமோகனின் துண்டு துண்டாக மேற்கோள்களைப் போட்டு விமர்சிக்கும் போக்கு தவறானது என்றாலும், கட்டுரையை குறித்து ஒரு சில வார்த்தைகள் கூறுவது தவறில்லை. நாங்கள் மாஸ்குலினிடி என்ற கோணத்தை முதன்மைப்படுத்தி, எப்படி ஒரு தலித் இளைஞர் குழு ஆண்தன்மையை கட்டமைத்துக் கொள்கிறது என்பதை எங்கள் ஆய்வில் கவனத்திற்கு வந்ததன் அடிப்படையில் எழுதினோம். அதை சமூக பொருளாதார மாற்றங்களின் பின்புலத்திலும், ஜாதி அதிகாரம் தகர்வதின் பின்புலத்திலும் வைத்து புரிந்துகொள்ள முயற்சி செய்தோம். பாலியல் ஆய்வுகளில் இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அடையாளங்கள் அதாவது ஆண்/தலித்/வர்க்கம், பெண்/ஜாதி/வர்க்கம் ஆகியவை பலவிதமாக வெட்டுத் தோற்றங்கள் கொள்வதை intersectionality என்று குறிக்கிறார்கள். ஆண்தன்மையை விமர்சித்தால் அது தலித் இளைஞர்களை விமர்சிப்பதாகத் தோன்றும். மேலும் ஒரு குறிப்பிட்ட குழுவினரிடம் காணப்பட்டஅம்சங்களை எழுதுவது ஏதோ ஒட்டுமொத்த சமூகத்தை குறித்தும் எழுதிவிட்டதுபோலும் வாசிக்கப்படுகிறது. கத்திமேல் நடப்பதுதான் இது. முழுவதும் மாஸ்குலினிடி, அதாவது ஆண் என்ற பாலியல் கட்டுமானம் குறித்த சிந்தனைகளின் பின்புலத்தில்தான் இந்த கட்டுரையின் பிரச்சினைப்பாட்டை புரிந்துகொள்ள முடியும். அதிகாரம் பெறுதலின் வடிவம் ஏன் ஆண்தன்மை கொள்கிறது என்ற கேள்வியாகவே இதை புரிந்துகொள்வது நலம்பயக்கும். உதாரணமாக சமீபத்தில் “Modi & a Beer” என்ற குறும்படம் ஒன்று ரஞ்சித்தின் நீலம் அமைப்பின் படமாக யூடியூபில் வெளியாகியிருந்தது. அதில் ஒரு பார்ப்பன பெண்ணும், பிற்படுத்தப்பட்ட சமூக ஆணும் காதலர்களாக ஒரு பாருக்கு செல்வார்கள். அவர்கள் திருமணத்தைக் குறித்து பேசுவார்கள். அந்தப் பெண் சங்கிகள் போல “தலித்துகளை நீங்கள்தான் வன்முறைக்கு ஆட்படுத்துகிறீர்கள்; நாங்கள் எந்த வன்முறைக்கும் போனதில்லை” என்று பார்ப்பனீய மீட்புவாதம் பேசுவார். விவாதத்தின் போக்கில் அந்த இளைஞன் ஆணாதிக்க மனோபாவத்தில் அந்த பெண்ணின் நடத்தையை விமர்சித்துப் பேசி விடுவான். அந்த பெண் உறவை முறித்துக்கொண்டு சென்றுவிடுவார். பல நுட்பமான குறியீடுகளைக் கொண்ட இந்த படம் நம் சமூக முரண்களின் பன்முகத்தன்மையை சுட்டிக்காட்டுவதாக உள்ளது. குறிப்பாக ஆண்தன்மை, ஆணாதிக்கம் என்று வந்துவிட்டால் எல்லா சமூக அடையாளங்களுமே பிரச்சினைக்குரிய அம்சங்களை கொண்டவைதான். ஒவ்வொரு சமூகத்திலும் ஆண்தன்மை கட்டமைப்பு பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாக நிகழ்கிறது. தொடர்ந்து விவாதிக்கப்பட வேண்டிய அம்சம் இது. தன் சுயத்தை உறுதிபட கட்டமைத்துக்கொள்வது என்ற ஆதிக்க எதிர்ப்பு நடைமுறையில் ஆண்தன்மை என்பதும் மையப்படத்தான் செய்கிறது. அதன் சில அம்சங்களை கள ஆய்வில் கண்ணுற்றதால் அவற்றை சுட்டிக்காட்டி எழுத நினைத்தோம். ஆனால் கட்டுரையை வாசித்த சிலர் நாங்கள் தலித் இளைஞர்களை பொதுமைப்படுத்தி குற்றம் சாட்டுவதாக நினைத்துவிட்டார்கள். அப்படி வாசிப்பது பயனற்றது, பிழையான முடிவுகளுக்கு இட்டுச்செல்வது. ஒரு குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட சூழலில், ஆண்தன்மை பெறும் வடிவம் குறித்து விவாதிப்பதுதான் எங்கள் நோக்கமே தவிர, தலித் இளைஞர்களை பொதுமைப்படுத்தி வன்முறையாளர்கள் என்று சித்தரிப்பதல்ல. ஜெயமோகன் masculinity என்ற வார்த்தையையே ஆண்திமிர் என்று மொழிபெயர்க்கிறார். மேலும் entice என்ற வார்த்தையை தவறான பொருளை குறிப்பதாகக் கூறுகிறார். கவர்வது, வசீகரிப்பது, மயக்குவது எல்லாம் காதலில் ஒரு அங்கம்தானே. அதெல்லாம் காதல் செய்வதன் வடிவங்களே தவிர நாடகக் காதல் அல்ல. உண்மையான சத்தியமான காதலிலும் இந்த அம்சங்கள் உண்டு. கண்ணோடு கண் நோக்குவதும், தோற்றமும், நடையுடை பாவனைகளும் காதலின் முக்கிய அம்சங்கள். காலம் காலமாக நிலவிய ஜாதீய ஒடுக்குமுறையை மறுத்து சுய உருவாக்கம் செய்யும்போது அதில் ஆண்தன்மையை ஆற்றல் மிக்கதாக கட்டமைப்பது எப்படி இடம் பெறுகிறது என்பதையே நாங்கள் பரிசீலிக்க விரும்பினோம். இதில் ஜாதி மறுப்புக் காதலர்களை இழிவு படுத்தும் நோக்கம் எதுவும் கிடையாது. காதல் கதைகள் எல்லாமே இனிமையானவை அல்ல; அது ஏற்படுத்தும் மன அழுத்தங்களும், விரும்பத்தகாத விளைவுகளும் எத்தனையோ. கட்டுரையை அதன் முழு வடிவில் படித்து விமர்சிப்பவர்களுடன் உரையாடுவதில் எனக்கு தயக்கம் எதுவும் இல்லை. ஆனால் அதை திரிபு வேலை செய்யும் ஜெயமோகனுக்காக செய்ய வேண்டியதில்லை. முழுமையாக கட்டுரையை படித்து விமர்சித்து எழுதும் யாருடனும் விவாதிக்கலாம். அதன் நிறை, குறைகளை பொறுமையாக விவாதிப்பதில் எந்த மனத்தடையும் எனக்கு இல்லை. விமர்சனங்களை ஏற்பதும், நம் எழுத்துக்களை சுய விமர்சனத்துடன் மீள் பரிசீலனை செய்வதும் இன்றியமையாத அறிவுலகப் பண்புகள். இன்றைய நிலையில் அந்த கட்டுரை எழுதப்பட்டால் அது மிகவும் மாறுப்பட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு. இனவரைவியல் ஆய்வின் அடிப்படையில் கட்டுரை எழுதுவதில் பல சிக்கல்கள் உள்ளன. அந்த முறையையில் தொடர்பான பிரச்சினைகளையும் சேர்த்துதான் சிந்திக்க வேண்டும். அது குறித்தும் வேறொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதுவேன். எம்.எஸ்.எஸ்.பாண்டியன், ஆனந்தி, ஜெயரஞ்சன், நான் ஆகிய யாருமே அந்த ஒரே ஒரு கட்டுரையை மட்டும் எழுதியவர்கள் அல்ல. அதற்கு முன்னும் பின்னும் அரசியல் குறித்தும், ஜாதீயக் கட்டுமானத்தின் பிரச்சினைகள் குறித்தும், தலித் ஒடுக்குமுறை குறித்தும் தொடர்ந்து எழுதி வந்துள்ளோம். பேசி வந்துள்ளோம். அவை பல அச்சில் வெளியாகியுள்ளன; பொதுக்களத்தில் இருக்கின்றன. நான் பொதுவாக நல்லவன் என்று நிரூபிக்க மெனக்கெடுவதில்லை. சமூகம் சீர்தூக்கிப் பார்த்து புரிந்துகொள்ளும் என்ற நம்பிக்கையில்தான் இயங்குவேன். உதாரணமாக இளவரசன் கொலையுண்டபோது முகநூலில் நிறைய பதிவுகளைச் செய்தேன். ஆங்கிலத்தில் “ILAVARASAN: AT A DEADLY NEW JUNCTION OF CASTE AND ELECTORAL POLITICS” என்ற கட்டுரையை எழுதினேன். இணையத்தில் வாசிக்கக் கிடைக்கிறது. இந்த தலைப்பை கூகுளில் கட் அண்ட் பேஸ்ட் செய்யவும். அப்போதும் ஒரு நண்பர் தலித்துகளுக்கும், இடைநிலை சாதியினருக்கும் மோதல் அதிகரிக்கும்போது பார்ப்பனர்கள் ஏன் மகிழ்கிறார்கள் என்று என்னை குத்திக்காட்டுவதுபோல முகநூலில் எழுதினார். நம் சமூகத்தின் முரண்கள் கடுமையானவை. தொடர்ந்து மற்றமையை மதித்து உரையாடும்போதுதான் மெள்ள மெள்ள நாம் புதிய சிந்தனை வெளியை, விமர்சன சிந்தனையை மீட்டெடுக்க முடியும். பார்ப்பனரல்லாத ஜாதிகளை, தலித்தல்லாத ஜாதிகளாக தலித் பார்வையிலிருந்து விமர்சிக்கும்போது பல புதிய கோணங்களும், பிரச்சினைகளும் எழுகின்றன. இவற்றைக் குறித்து நான் “பார்ப்பனரல்லாதோரும், தலித் அல்லாதோரும்: இரண்டு திரைப்படங்களும், ஒரு நூலும்” என்ற கட்டுரையை உயிர்மை இதழில் எழுதியுள்ளேன். என்னுடைய “எதிர்புரட்சியின் காலம்” என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. எதற்காக சொல்கிறேன் என்றால் தலித் ஒடுக்குமுறை குறித்து பல்வேறு கோணங்களில் தொடர்ந்து எழுதி வருவதையும் சுட்டிக்காட்டத்தான். இடைநிலை ஜாதிகளுக்கும், தலித் தொகுதிகளுக்கும் உள்ள முரணை, திராவிட அரசியலுக்கும் தலித் அரசியலுக்கும் உள்ள முரணாக சித்தரிக்க இந்துத்துவ சக்திகள் தொடர்ந்து முயல்வதையும், பார்ப்பனீய மீட்பு வாத சக்திகள் அதற்குத் துணைபோவதையும் விவாதிக்கத்தான் வேண்டும். சமூக அரசியல் பிரச்சினைகளை விவாதிப்பதில் ஆயாசம் கொள்ள முடியாது. எம்.எஸ்.எஸ்.பாண்டியன் இன்று நம்மிடையே இல்லாததால் அவர் குறித்து சில வார்த்தைகள் அவரை அறியாதோருக்காக கூற வேண்டி உள்ளது. பாமாவின் நாவல், ரவிகுமார், ராஜ்கெளதமன் விமர்சனங்கள் என தலித் எழுத்துக்களை சர்வதேச கவனத்திற்குக் கொண்டு சென்றவர் பாண்டியன். அவருடைய “Brahmin and Non Brahmin: Genealogies of Tamil Political Present” என்ற நூலின் இறுதிப்பகுதியில் எப்படி பார்ப்பனரல்லோதார் என்ற அடையாளம் தோன்றுவதற்கான வரலாற்று நியாயங்கள் இருந்ததோ, அதே போன்ற வரலாற்று நியாயம் தலித் என்ற அரசியல் அடையாளத்திற்கும் உண்டு என அழுத்தம் திருத்தமாக எழுதியவர். ஆனால் அதெல்லாம் நூலை முழுமையாகப் படித்தால்தான் புரியும். அவதூறு செய்வதற்கு எதையும் வாசிக்க வேண்டிய அவசியமில்லை. நாடக க் காதல் என்று ராமதாஸ் கூறியதற்கும், தலித்துகளுக்கு எதிரான வன்முறைக்கும், ஆணவக் கொலைகளுக்கும் எங்கள் EPW கட்டுரை காரணம், தூண்டுதல் என்பது வக்கிரமான, மிகையான சித்தரிப்பு என்பதை சமூக அரசியல் வரலாறு தெரிந்த யாரும் புரிந்துகொள்வார்கள். சமூக மாற்றம் என்பது பல்வேறு முரண்களைக் கொண்ட பிரம்மாண்டமான வரலாற்றுத் தொடர் நிகழ்வு. மானுடவியல் ஆய்வு முயற்சிகள் ஓடும் நீரில் ஒரு கை நீரென ஒரு தருணத்தில் காணக்கிடைப்பதை வைத்து சிந்திப்பது. ஜெயமோகன் ஒரு முறை நள்ளிரவில் என்னை ஒரு நெடுஞ்சாலை ஓர பேருந்து நிறுத்தத்தில் சந்தித்ததை நினைவுகூர்ந்துள்ளார். எனக்குமே எதிர்பாராத இனிமையான சந்திப்பாகத்தான் அது இருந்தது. என் நினைவில் தங்கியுள்ளபடி நட்பாகவே பேசிக்கொண்டோம். அந்த சந்திப்பு நிகழ்ந்த ஆண்டு 2010. அப்போதும் நான் தலித் மக்கள் தொகுதிகள் குறித்த கள ஆய்வில்தான் இருந்தேன். ஆனால் வேறு ஆய்வு. பொருளாதார முன்னேற்றத்தில் தலித் மக்கள் எப்படி விடுபட்டுப் போகிறார்கள் என்பதை பல்வேறு கோணங்களில் பலரும் ஆராயும் ஒரு ஆய்வுப் பணி அது. அதன் முடிவில் நான் எழுதிய கட்டுரையும் ஜெயமோகனுக்கு நிச்சயம் பிடிக்காது. தலித் கிறிஸ்துவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது தவறானது என்பதை விளக்கும் கட்டுரை அது. Caste and Religion in the Age of the Nation State: Certain Polemical Blinders and Dalit Situations என்பது அதன் தலைப்பு. இணையத்தில் யாரும் வாசிக்கக் கிடைக்கும். இந்த தலைப்பை கூகுளில் கட் அண்ட் பேஸ்ட் செய்யவும். அதிலும் பலருக்கு பல கருத்து மாறுபாடுகள் தோன்றலாம். நிச்சயம் அவற்றை செவிமடுக்கவும், அதிலிருந்து பயிலவும் தயாராக இருப்பேன். அந்த ஒரு EPW கட்டுரையை சுட்டிக்காட்டிவிட்டதால், அவர் எழுத்தைக் குறித்த என்னுடைய விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்துவிட்டதாக ஜெயமோகன் நினைக்கலாம். இது ஒரு திசைதிருப்பல் என்றுதான் நான் கருதுகிறேன். எந்த விவாதமும் என்னைப் பொறுத்தவரை தனிநபர்களுக்கு இடையில் நடப்பதல்ல. தத்துவ நோக்குகளுக்கும், கருத்தியல்களுக்கும் நடக்கும் விவாதம்தான் அது. ஜெயமோகன் அவர் எழுத்துக்களை குறித்த விமர்சனத்தையும் எதிர்கொள்ளப் பழகுவதுதான் ஆரோக்கியமானது. https://uyirmmai.com/news/அரசியல்/இந்தியா/rajan-kurais-reaction-to-jeyamohan/

https://m.facebook.com/story.php?story_fbid=3041704865925342&id=948887721873744&a

1 day 3 hours ago
https://m.facebook.com/story.php?story_fbid=3041704865925342&id=948887721873744&fs=1&focus_composer=0#!/eastfmtamil/photos/a.1029182173844298/3041704532592042/?type=3&source=57&refid=52&_ft_=qid.6847903046987085606%3Amf_story_key.-805184598926548596%3Atop_level_post_id.3041704865925342%3Acontent_owner_id_new.948887721873744%3Apage_id.948887721873744%3Asrc.22%3Aphoto_id.3041704532592042%3Astory_location.5%3Astory_attachment_style.photo%3Aview_time.1594401674%3Afilter.h_nor%3Atds_flgs.3%3Apage_insights.{"948887721873744"%3A{"page_id"%3A948887721873744%2C"page_id_type"%3A"page"%2C"actor_id"%3A948887721873744%2C"dm"%3A{"isShare"%3A0%2C"originalPostOwnerID"%3A0}%2C"psn"%3A"EntStatusCreationStory"%2C"post_context"%3A{"object_fbtype"%3A266%2C"publish_time"%3A1594385856%2C"story_name"%3A"EntStatusCreationStory"%2C"story_fbid"%3A[3041704865925342]}%2C"role"%3A1%2C"sl"%3A5%2C"targets"%3A[{"actor_id"%3A948887721873744%2C"page_id"%3A948887721873744%2C"post_id"%3A3041704865925342%2C"role"%3A1%2C"share_id"%3A0}]}}&__tn__=EH-R

யாழ். நவாலி தேவாலயம் மீது தவறுதலாகவே குண்டு வீசப்பட்டது! - சந்திரிகா

1 day 3 hours ago
உந்த சுத்துமாத்து அம்மா நல்லதொரு தீர்வுபொதி தமிழர்களுக்காக வைத்திருந்தவர் என்றும் புலிகள் தான் குழப்பி போட்டாங்கள் என்று சொல்கிறவர்கள் இருக்கும் வரை அவர் நிறைய புழுகு மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டிக்கொண்டே இருப்பார்.

சாதியை அடியோடு வெறுக்கும் யாழ்க‌ள‌ உற‌வுக‌ளின் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ ப‌டும்

1 day 4 hours ago
சாதிய நச்சு தமிழரின் நாடி நரம்பு என எல்லாவற்றிலும் ஊறிய பெரும் தலையிடி அதை முற்றாக ஒழிக்கணும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை ஆனால் அது உடன் சாத்தியமில்லை மாற்றுத்திருமணம் செய்தனர் என நீங்கள் குறிப்பிடுபவர்களே எவ்வளவு காலத்துக்கு இதற்கு முகம் கொடுத்தபடி வாழ்வார்கள் என்பதே கேள்விக்குறி தான் நக்கல் நளினம் வம்புக்கிழுத்தல் ஏன் பொடியனின் பக்கமும் கிளறி கிளறி பதம் பார்ப்பார்கள் முடிவு?????? நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு எனக்கிருக்கும் அதிகாரத்தை வைத்து கனக்க செய்திருக்கின்றேன் அதை நான் பகிரங்கப்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்களை வம்பிழுக்க எம் சமூகம் தேடுதலை தொடங்கிவிடும்😡

யாழ். நவாலி தேவாலயம் மீது தவறுதலாகவே குண்டு வீசப்பட்டது! - சந்திரிகா

1 day 5 hours ago
தவறு நடந்தவுடன் அதை மக்களுக்கு அறிவித்து தவறான போரை நிறுத்தியிருக்கணும் தற்பொழுது அதிகாரமற்ற நிலையில்??? இனி கிருசாந்திக்கும் ?????

சாதியை அடியோடு வெறுக்கும் யாழ்க‌ள‌ உற‌வுக‌ளின் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ ப‌டும்

1 day 6 hours ago
ஊரில் மேட்டுக்குடி திமிரில் இருந்தவர்கள்,கோட்டு சூட்டு அணிவதை மேன்மையாக நினைத்தவர்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு வந்து பட்ட அவலங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பணத்துக்காக எந்த வேலையும் செய்தார்கள். பணத்தின் முன் அவர்களின் ஊர் வரட்டுக் கௌரவங்கள் கரைந்து போயின.தினசரி துப்பவரவு தொழில் செய்கின்றனர்.உணவு விடுதிகளில் கோப்பை கழுவுகின்றனர்.வீதி துப்பரவாக்கும் தொழில்கூட செய்கின்றனர். இருந்தாலும் சாதி எனும் கையாலாக தனத்தை இன்னும் விடவேயில்லை. இவர்களுக்கு சாதி குறைந்தவர்கள் என கருதப்படும் வீடுகளில் வயிறு புடைக்க உண்டு விட்டு புறம் சொல்லும் திமிர்பழக்கமும் இன்றும் குறையவில்லை
Checked
Sat, 07/11/2020 - 21:00
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed