புதிய பதிவுகள்2

இளம்தாய் உயிருடன் மீட்கப்பட்ட கிணற்றினுள் இருந்து அழுகிய சடலமொன்று கண்டுபிடிப்பு ; வயல் பகுதியில் இரண்டரை வயது குழந்தையும் மீட்பு

23 hours 31 minutes ago
20 Mar, 2026 | 05:46 PM தாந்தாமலை நெல்லிக்காடு வயல் பிரதேசத்தில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து இளம் தாய் ஒருவரும் வவுணதீவு கொத்தியாவலை பிரதேச வயலில் இருந்து தாயின் குழந்தையும் உயிருக்குப் போராடிய நிலையில் இன்று (20) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், கிணற்றிலிருந்து காப்பாற்றப்பட்ட தாய் பொலிஸாரிடம் கூறியதற்கிணங்க, சிறிது நேரத்தில் கிணற்றினுள்ளிருந்து சடலமொன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் கூறுகையில், வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கொத்தியாவலை பகுதியைச் சேர்ந்த இளம் தாய் (வயது 27) தனது இரண்டரை வயது குழந்தையுடன் வவுணதீவிலிருந்து மட்டக்களப்பு நகருக்கு நேற்று வியாழக்கிழமை (19) சென்ற நிலையில், காணாமல்போயுள்ளார். குழந்தைக்கு ஏற்பட்ட காய்ச்சலுக்கு மருந்து எடுப்பதற்காக நேற்று காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குப் புறப்பட்ட அந்தப் பெண் இரவாகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரை தேடியுள்ளனர். பின்னர், வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் உள்ள தாந்தாமலை நெல்லிக்காடு பகுதியில் மாட்டுப்பட்டியில் பால் எடுப்பதற்காக சிலர் சென்றுகொண்டிருந்தபோது அந்த பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. அதனையடுத்து அவர்கள் கிணற்றினுள் பார்த்தபோது பெண் ஒருவர் கழுத்தளவு நீரில் உயிருக்காக போராடிக்கொண்டிருப்பதை கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். பின்னர், பொலிஸார் உரிய இடத்துக்கு சென்றதையடுத்து, அந்தப் பெண் உயிருடன் மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட அந்த இளம் தாய், கிணற்றில் அழுகிய நிலையில் சடலங்கள் இருப்பதாக பொலிஸாருக்குக் கூற, பொலிஸார் நீதிமன்ற அனுமதியை பெற்று, தடயவியல் பிரிவு பொலிஸாருடன் இணைந்து கிணற்றில் இருந்த அழுகிய சடலத்தை கண்டெடுத்துள்ளனர். சுமார் 20 வயதுக்குட்பட்ட பெண் ஒருவரின் அந்த சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. முன்னதாக கிணற்றிலிருந்து காப்பாற்றப்பட்ட இளம்தாய் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதேவேளை அந்த இளம்தாயின் குழந்தை கொத்தியாவலையில் உள்ள அவரது வீட்டில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள வயல் பகுதியில் கைவிடப்பட்டு, அழுது கொண்டிருந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இளம்தாயிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் நடத்தி வருகின்றனர். இளம்தாய் உயிருடன் மீட்கப்பட்ட கிணற்றினுள் இருந்து அழுகிய சடலமொன்று கண்டுபிடிப்பு ; வயல் பகுதியில் இரண்டரை வயது குழந்தையும் மீட்பு | Virakesari.lk

நயினாதீவில் மினி சூறாவளி

23 hours 39 minutes ago
நயினாதீவில் மினி சூறாவளி adminMarch 20, 2026 நயினாதீவில் வீசிய மினி சூறாவளியால், இறங்குதுறை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தகரக் கொட்டகைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை நிலவுவதால், பல பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை காலை மழை பெய்தது. அதேநேரம், தீவகப் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால், தீவுகளுக்கான படகு சேவைகள் தாமதமடைந்துள்ளன. மேலும், நயினாதீவு பகுதியில் வீசிய பலத்த காற்றினால், இறங்குதுறை பகுதியில் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டிருந்த நிழற்கொட்டகைகள் சேதமடைந்துள்ளன.கடல் கொந்தளிப்பாகக் காணப்படுவதால், மீனவர்கள் மற்றும் படகுப் போக்குவரத்துகளில் ஈடுபடுவோர் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சேதமடைந்த பகுதிகளில் விழுந்து கிடக்கும் மின்சாரக் கம்பிகள் மற்றும் தகரக் கூரைகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். https://globaltamilnews.net/2026/230703/

அமெரிக்கா, ஈரான் கோரிக்கைகள் நிராகாித்த இலங்கை

23 hours 41 minutes ago
அமெரிக்கா, ஈரான் கோரிக்கைகள் நிராகாித்த இலங்கை adminMarch 20, 2026 அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் விடுத்த இராணுவ தொடர்பான கோரிக்கைகளை நிராகரிப்பதன் மூலம், இலங்கை தனது வெளியுறவுக் கொள்கையில் நடுநிலைமையைப் பேணிவருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (20) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இதுகுறித்து மேலும் விளக்கமளித்த அவர், “ஈரானுக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் நல்லெண்ண விஜயமாக இலங்கைக்கு வர அனுமதி கோரியிருந்தன. அதேவேளை, அமெரிக்கா தனது இரண்டு போர் விமானங்களை மத்தள விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரியது. சர்வதேச விவகாரங்களில் எவ்வித பக்கச்சார்புமின்றி நடுநிலைமையைப் பேணுவதற்காக, அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் கோரிக்கைகளையும் இலங்கை அரசு நிராகரித்துள்ளது. இதன் மூலம் எமது நடுநிலைத் தன்மையை பாதுகாத்துள்ளோம்,” என அவர் தெரிவித்தார். https://globaltamilnews.net/2026/230711/

உங்களுக்கு தெரியாத வட கொரியா

23 hours 49 minutes ago
சிறிமா சொல்லியது உண்மை, பாண் தட்டுப்பாடு (அமைச்சரவை) கூட்டத்தில். (வராற்றில் வேறு இடத்தில் முதலில் சொல்லப்பட்டு இருக்கலாம்) இப்போதாவது (சொந்த நாட்டில் நடந்ததை ) தெரிந்து கொள்ளவும்.

‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு

23 hours 55 minutes ago
- சாணி அடி வாங்கிய ட்ரம்பு - 😂 (சிற்றுவேஷன் வீடீயோ.) ஊர் உலகம் எல்லாம் பயந்து கிட்டிருந்த என்னை கொண்டாந்து, ஒரு சின்ன சந்துக்குள்ளை நிறுத்தி... பயந்துக்கிட்டு இருந்தவங்களை எல்லாம்... எறி எறி என்று எறிய வைச்சத்தும் இல்லாம, நாத்தம் அடிக்குது என்றா சொல்லுறாய். 🤣

"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!

1 day ago
அப்போ நீங்கள் இலங்கை, ஜேர்மனி தவிர வேறு எந்த நாட்டில் என்ன பிழை நடந்தாலும் அதை கேள்வியே கேட்க மாட்டீர்களா? அப்போ தமிழ் நாட்டு செய்திகள் என்ற பகுதியில் நீங்கள் ஏன் கருத்து எழுதுகிறீர்கள் ?

ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!

1 day ago
இது இப்படியானவர்களின் மனநிலை பற்றிய சரியான அலசலாகவே எனக்கும் படுகிறது. எம்ஜிஆர் படம், கம்பன் கழக ஜெயராஜ், திண்டுகல் லியோனி, சாலமன் பாப்பையா வகையில் இதையும் ரசிக குஞ்சு மனநிலையில், அணுகுகிறார்கள். கூடவே இப்போ ஏ ஐ கூட இருப்பதால் - காசுக்காக அடியான் தரவழிகள் பொய்யாக தெரிந்து கொண்டே வீடியோக்களை போட்டதும் இவர்கள் அதை அப்படியே கவ்வுகிறார்கள். இவர்கள் எவருக்கும் நான் யாழுக்கு வெளியே எந்த எதிர்வினையும் செய்வதில்லை. அடிக்கடி சிலர் என்னை அங்க வா, இங்க வா என கூப்பிடுவதும் உண்டு. நான் யாழை விட்டு அரங்குவதில்லை😂. ஏன் எண்டால் எலோன் மஸ்க் போன்றோருக்கும் அடியானுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. இருவரும் பொய்யை காசாக்கும் ஆட்கள்தான். அந்த சகதியில் போய் நாம் தரவு போராட்டம் நடத்தினால் கும்பலாக ஜோம்பிகள் போல வந்து கடித்து குதறி விடுவார்கள். இந்த ஜோம்பிகளை யூடிப்பில் கேள்வி கேட்கும் @ரஞ்சித் மிகவும் பொறுமை, தைரியசாலி. என்னால் முடியாது. ஆனால் அடியானுக்கு ரஞ்சித் சொன்னது உண்மை என தெரியும். ஆகவே அவரோடு வாதிக்காமல் கொமெண்டை நீக்கி விட்டார். கொமெண்டை வைத்திருந்தால் ஜோம்பிகள் விழித்து கொண்டால் அவர் சோத்தில் மண் விழும் என்ற பயம். இந்த அப்பட்டமான பேச்சுரிமை மீறல், பொய் உரைத்தலை யூடியூப் எதுவும் செய்யவில்லை. இதுவே யாழ்களத்தில் எண்டால் உறுப்பினரே தோய்த்து தொங்க விட்டிருப்பார்கள். நிர்வாகம் செய்ய வேண்டியதை செய்திருக்கும். யாழில் கூட பலர் இப்போ இந்த மாதிரி பொய்களை, அரை பொய்களை, பிரச்சாரத்தை இணைக்க முடியாது என்பதால் தாம் எழுதுவதில்லை என கூறுவதை கண்டுள்ளேன். அவர்களுக்கு ஒரு ஆங்கில சொல்லாடல்தான் என் பதில். Good riddance to bad rubbish ! உங்கள் குப்பையை மஸ்கின், மார்க்கின் குப்பை தொட்டிகளில் போய் போதுமானளவு கொட்டி கொள்ளுங்கள்.

"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!

1 day ago
இல்லை. சரி. இல்லை. இது. ஒரு. பகல். கொள்ளை. ஆனால். அவர். தன்னுடைய. நாட்டில். செய்வதை. நான். வெளிநாட்டவன். எப்படி. தடுக்கலாம். ? தமிழ் நாட்டு மக்கள் விரும்பி. கொடுத்தால். கொடுக்கதை. என்று. கூற. நான். யார். ? இல்ல. கொடுங்கள். என்றும். கூற. எனக்கு. உரிமையில்லை. ஆனால். இலங்கைத்தமிழனை. ஏமாற்றதை. நிதி. கோரதை. என்று. நான். கூறலாம். நிச்சயம்.

‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு

1 day ago
நான்தான் உலக வல்லரசு என கொக்கரித்த, மற்றைய நாடுகளை அச்சுறுத்திய அமெரிக்காவின் முகத்திரை கிழிந்தது. ட்ரம்ப் சொல்லுவார், தனது திட்டம் நிமிடத்துக்கு நிமிடம் மாறும் என்று, எவ்வளவு காலம் தான் உயிரோடு இருப்பேனோ தெரியாது என்றும் சொன்னார். இன்று இரானியர்களையும் அவர்களது போர்த்திறமைகளையும் போற்றுகிறார். நெதன்யாகுவோ, எங்களின் இலக்குகளை அடையும் வரை போர் செய்வோம் என்றவர், விழுந்தவன் மீசையில மண் ஒட்ட வில்லையாம். ஈரானின் அச்சுறுத்தலுக்குரிய காரணிகளை அழித்துவிட்டோம், போர் முடிந்தது வெளியேறுகிறோம் என்கிறார். நெதென்யாகுவும் ட்ரம்பும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுகின்றனர். ஈரானை அழிக்க ஒன்றுபட்டு புறப்பட்டவர்கள், வேறுபட்டு நிற்கிறார்கள். இந்தப்போரினால் ட்ரம்ப் உலக நாடுகளாலும் சொந்த மக்களாலும் கைவிடப்படுகிறார். நெதன்யாகுவின் பேராசை, பயம், அவரின் நாட்டுக்கும் அழிவை கொடுத்துள்ளது. ஈரான் இதை, சும்மா விடப்போவதில்லை. இனிமேற்தான் அது தனது பழிவாங்கலை தொடங்கும். அதை தாங்க ட்ரம்பும் நெதன்யாகுவும் தயாராக இருக்க வேண்டும். இனி அமெரிக்கா தலைக்கனம் காட்ட முடியாது. முட்டாள் ட்ரம்பால் அமெரிக்காவை எந்த நாடும் மதிக்காது, இனிமேல் நட்பு நாடுகளை நம்பி வலிச்சண்டைக்கு போகாது அமெரிக்கா. உண்மையிலேயே நட்பு நாடுகள் எடுத்த முடிவே சரியானது. நட்பு நாடுகள் எந்தச்சந்தர்ப்பத்தில் உதவி புரியும், சும்மா எதேச்சாதிகாரமாய் பிடிக்கும் சண்டைகளுக்கு எங்கள் வீரர்களை நாங்கள் இழக்க மாட்டோம் என்று கூறியிருக்கிறார்கள். இது கூட தெரியாத ட்ரம்ப், சர்வதேச சட்டத்திற்கு கட்டுப்படாதவர் உலக தலைவராம், அவர் எப்படி மற்றவர்களின் உதவியை மட்டும் எதிர்பார்க்கலாம்?

உங்களுக்கு தெரியாத வட கொரியா

1 day ago
இதை சொன்னது பிரெஞ் நாட்டில் ஒரு இளவரசி. Qu’ils mangent de la brioche ஜோன் ஜேக்ஸ் ருசோ வின் புத்தகம் ஒன்றில் இப்படி ஒரு இளவரசி சொன்னதாக சொல்லபட்டுள்ளது. அதை மேரி அண்டெர்னைட் சொன்னார் என பிற்காலத்தில் ஒரு கருத்து உருவாக்கப்பட்டது. ஆனால் ருசோ இதை எழுதிய சமயம் மேரிக்கு 9 வயது. ஆகவே அவர் சொல்லி இருக்க வாய்பில்லை. சொல்லி இருந்தாலும் அது சிறுபிள்ளையின் பேச்சு. கருத்தாளருக்கும் தரவுகளுக்கும் உள்ள இடைவெளி எனக்குத்தெரியும். வாசகர் நன்மைக்காக எழுதியுள்ளேன். 👆😂 அடிச்சுத்தான் விடுறம் கொஞ்சம் ரியாலிட்டியோடு ஒத்து போகும் வண்ணம் - இந்தியாப்ப இல்லாவிடில் கிரிபத் சாப்பிடுங்கள் என சிரிமா சொன்னார் எண்டாவது அடிச்சு விட்டிருக்கலாம்😂.

"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!

1 day ago
அப்படி என்றால் இது திமுக, அதிமுகவுக்கும் பொருந்தும். முடிவு: ஒன்றில் சகல கட்சிகளும் சாதி பார்த்து சீட் கொடுக்கிறன அல்லது எந்த கட்சியிம் சாதி பார்த்து சீட் கொடுப்பதில்லை. அப்போ தமிழ் நாட்டில் கட்சிக்கு என நிதி திரட்டி அதில் அவர் தனிப்பட்டு சொத்து சுகம் காண்பதை நீங்கள் சரி என்கிறீர்களா?

வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!

1 day ago
இவர்கள் உக்ரேனை வைத்து.... ரஷ்யாவுக்கு நொட்டினத்துக்கு, சீனனும், ரஷ்யனும்... ஈரானை வைத்து இஸ்ரேலுக்கும், அமெரிக்கனுக்கும் நொட்டிக் கொண்டு இருக்கிறார்கள். 😂 ஒன்று எடுத்தால்... இரண்டு இலவசம் என்ற மாதிரி, துபாய், கட்டார், சவூதி அரேபியாவுக்கு இலவச சாத்துப்படியும் கிடைக்குது. 🤣 போதாக் குறைக்கு 5000 அமெரிக்க ராணுவத்தினர் வரும் செய்தியை கசிய விட்டுள்ளார்கள். 😂 ஈரானும்... பின்னுக்கு உள்ள மறை கரங்களும் இப்பவே போட்டுத்தள்ள ரெடியாகி இருப்பார்கள். 🤣 இதெல்லாம் தேவையா கோபால்.

வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!

1 day 1 hour ago
சீனா 😎..... புதைகுழிக்குள் காலை வைத்துவிட்டார்கள், எப்படி எடுக்க போகின்றார்கள்☹️, கப்பலில் வரும் 5000 அமெரிக்க பாடை வீரர்களுக்கு முதலே 😭...

யாழ். பல்கலைக்கழகம் சிங்கள மயமாக்கப்பட்டு வருகிறது ; அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட கவிதரன்!

1 day 1 hour ago
யாழ். பல்கலைக்கழகம் சிங்கள மயமாக்கப்பட்டு வருகிறது ; அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட கவிதரன்! 20 Mar, 2026 | 03:47 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகமானது தற்போது சிங்களமயமாக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஊடக பேச்சாளர் கவிதரன் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகத்துக்கு முன்பாக நேற்று புதன்கிழமை (19) இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பல்வேறு துறைசார்ந்த விரிவுரைகள் எவ்வித எதிர்ப்பும் இன்றி ஆங்கில மொழிக்கு மாற்றப்பட்டு சிங்கள மாணவர்களை உள்ளடக்கி சிங்களமயமாக்கப்பட்டு வருகிறது. இது மிகவும் ஒரு பாரதூரமான விடயமாக காணப்படுகிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழகம் என்பது தமிழர்களுடைய ஒரு மரபுரிமை சின்னம். தமிழர்களின் போராட்டத்தின் ஒரு அடையாள சின்னம். தமிழர்களின் பண்பாட்டு ஒரு காவலரண். இப்படியான பல்கலைக்கழகத்தில் மேற்குறித்த மோசமான செயற்பாடுகளிடமிருந்து. மாற்றம் வேண்டும் என்று கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் மாணவர்கள் மீது காட்டுகின்ற மாற்றம் இதுதானா? முன்னைய அரசாங்கத்திற்கும் இந்த அரசாங்கத்திற்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது? என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/241475

‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு

1 day 1 hour ago
இச்செய்தியை யாழ்கள ஆய்வாளர்கள் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய விரைவில் ஆஜர் ஆகின்றார்கள், கவலைப்படவேண்டாம் சகோதரா😁😁

யாழ். வரும் ஐரோப்பிய பிரதிநிதிகள் செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ளதாக தகவல்!

1 day 1 hour ago
யாழ். வரும் ஐரோப்பிய பிரதிநிதிகள் செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ளதாக தகவல்! 20 Mar, 2026 | 03:16 PM எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு ஒன்று யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளது. குறித்த குழுவினர் செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் வருகை தரும் குறித்த குழுவில் நோர்வே, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ரொமேனியா போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளடங்குகின்றனர். இதேவேளை ஐ.நா பிரதி நிதிகள் குழு எதிர்வரும் 26ஆம் திகதி யாழ்பாணம் வருகை தருவதாகவும் யாழ்ப்பாணம் வருகை தரும் குழுவினர் யாழில் பல தமிழ்க் கட்சி களின் தலைவர் களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/241470

ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!

1 day 1 hour ago
அமெரிக்கா 7000 இலக்குகளை தாக்கிய பிறகும் இரான் தொடர்ந்து பதிலடி கொடுப்பது எப்படி? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப்படம் கட்டுரை தகவல் ,கிறிஸ் பார்ட்ரிட்ஜ் பிபிசி 20 மார்ச் 2026, 09:50 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் இரான் உடனான போரில் அமெரிக்கா "திட்டமிட்டபடியும்", "இலக்கின் மீதும்" சரியாக இருப்பதாக தெரிவித்த அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், இந்த மோதல் எப்போது முடிவுக்கு வரும் என்பதற்கு துல்லியமான கால வரம்பை வழங்கவில்லை. நேற்று செய்தியாளர்கள் வலியுறுத்திக் கேட்டபோது, "ஒரு குறிப்பிட்ட கால வரம்பை நிர்ணயிக்க நாங்கள் விரும்பவில்லை." எனத் தெரிவித்தார். அமெரிக்கா தற்போது 7,000 இரானிய இலக்குகளைத் தாக்கியதாகக் கூறும் அவர், "படைகளுக்கு தாங்கள் எதை தாக்குகிறோம், ஏன் தாக்குகிறோம் என்பது பற்றிய தெளிவான உணர்வு இருக்கிறது." என்றார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,குவைத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் எரிந்த கட்டடம் பூமிக்கு அடியில் இரானின் ஆயுதங்கள் பீட் ஹெக்செத் கூற்றுப்படி அமெரிக்கப் படைகளால் மட்டுமே 7,000 இரானிய இலக்குகள் தாக்கப்பட்ட போதிலும், இரானிய ஏவுகணைகளும் டிரோன்களும் இன்னும் அண்டை நாடுகளைத் தாக்கி வருகின்றன. குறிப்பிடத்தக்க விமானப்படை மற்றும் கடற்படை இல்லாத நிலையில், இந்த ஏவுகணைகளையும் டிரோன்களையும்தான் இரான் தன்னால் இயன்ற வழிகளில் பாதுகாக்க முயல்கிறது. இரானின் நிலப்பரப்பு மற்றும் பல தசாப்த கால திட்டமிடல் காரணமாக, இந்த ஆயுதங்களின் இருப்பு பூமிக்கு அடியில் ஆழமாக அல்லது உண்மையில் மலைகளின் பக்கவாட்டில் ஆழமாகப் புதைக்கப்பட்டுள்ளன. இந்த இலக்குகளுக்கு ஆயுதங்களைக் கொண்டு செல்வது கடினம், எனவேதான் இந்த வாரம் பயன்படுத்தப்பட்ட 5,000 பவுண்ட் (2,270 கிலோ) எடை கொண்ட ஜிபியு-72 மேம்பட்ட ஆழமாக ஊடுருவி செல்லும் குண்டு உட்பட பல்வேறு வகையான பங்கர்-பஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. பட மூலாதாரம்,USAF படக்குறிப்பு,ஜிபியு-72 வகை குண்டுகள் மிகப்பெரியதாக இருந்தாலும் எஃப்-15இ ஸ்டிரைக் ஈகிள் போர் விமானங்கள் மூலம் எடுத்துச் செல்ல முடியும் உற்பத்தி அழிக்கப்பட்டாலும் தொடரும் தாக்குதல் கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் கூறுகையில், "இரானின் முழு பாலிஸ்டிக் ஏவுகணை உற்பத்தித் திறன், அந்த ஏவுகணைகளின் ஒவ்வொரு பாகத்தையும் உருவாக்கும் ஒவ்வொரு நிறுவனமும், செயல்பாட்டு ரீதியாக வீழ்த்தப்பட்டு, அழிக்கப்பட்டுவிட்டன. இரான் முழுவதும் உள்ள கட்டடங்கள், வளாகங்கள் மற்றும் தொழிற்சாலை உற்பத்திக் கூடங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன," என்றார். இந்த ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் வழிமுறைகள் நிறுத்தப்பட்டாலும், எஞ்சியிருப்பவை இன்னும் ஏவப்படுவது தெளிவாகத் தெரிகிறது. பட மூலாதாரம்,USAF படக்குறிப்பு,பங்கர்-பஸ்டர் குண்டு எனவே அமெரிக்காவும் இஸ்ரேலும் உளவுத் தகவல்கள் மற்றும் விமானங்கள் மூலம், நடமாடும் ஏவுகணை ஏவுதளங்களை "தேடிக் கண்டுபிடித்து அழிப்பதிலும் கவனம் செலுத்தும். 1991-ஆம் ஆண்டு இராக்கிற்கு எதிரான வளைகுடா போரில், இஸ்ரேலை அச்சுறுத்திக் கொண்டிருந்த சதாம் உசைனின் ஸ்கட் ஏவுகணைகளை அழிக்கும் பணியில் அமெரிக்க விமானப்படையின் எஃப்-15இ ஸ்டிரைக் ஈகிள்ஸ் மற்றும் எஃப்-16 விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. இந்தப் பணிகள் 'ஸ்கட் ஹண்டிங்' என்று அழைக்கப்பட்டன. அதே உத்திகள் இன்றும் இரானில் பயன்படுத்தப்படுகின்றன. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட்ட தாக்குதல் 2021-இல் பரிசோதிக்கப்பட்ட குண்டு 2021-இல் முதல் முறையாக பரிசோதிக்கப்பட்ட ஜிபியு-72 குண்டு பெரிய கூட்டு நேரடி தாக்குதல் ஆயுதமாகும். இவை இலக்கை நோக்கி செயற்கைக்கோள் மற்றும் இனெர்ஷியல் (Inertial) நேவிகேஷன் அமைப்பால் வழிநடத்தப்படுகிறது. இந்த ஜிபியு-72 வகை குண்டு பரிசோதனை செய்யப்பட்டபோது, "கடினமாக ஆழத்தில் புதைக்கப்பட்ட இலக்குகள் சார்ந்த சவால்கள் மற்றும் ஃபைட்டர் மற்றும் பாம்பர் விமானங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது." என அமெரிக்க விமானப்படை தெரிவித்திருந்தது. ஜிபியு-72 வகை குண்டுகள் மிகப்பெரியதாக இருந்தாலும் எஃப்-15இ ஸ்டிரைக் ஈகிள் போர் விமானங்கள் மூலம் எடுத்துச் செல்ல முடியும். இது ராணுவ திட்டமிடுபவர்களுக்கு, பி1-பி வகை விமானங்களைச் சார்ந்திருக்காமல் பணியில் ஈடுபடுத்துவதில் பெரிய வசதியை வழங்குகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp86n3l35e1o

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பாராளுமன்றில் விசேட உரை - நேரலை

1 day 1 hour ago
ஈரான் கப்பலுக்கு அனுமதி வழங்காமைக்கான காரணம் - ஜனாதிபதி Mar 20, 2026 - 11:46 AM UPDATE - ஏப்ரலில் 4 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு மார்ச் 17ஆம் திகதி திறக்கப்பட்ட கேள்விக் கோரலின் அடிப்படையில், ஏப்ரல் 6 அல்லது 7ஆம் திகதிகளில் டீசல் கப்பலும், ஏப்ரல் 16 அல்லது 17ஆம் திகதிகளில் பெற்றோல் கப்பலும் நாட்டை வந்தடையும் என ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன் ஏப்ரல் 12 அல்லது 13ஆம் திகதிகளில் மசகு எண்ணெய் கப்பலும், ஏப்ரல் 10 அல்லது 11ஆம் திகதிகளில் விமானங்களுக்கான ஜெட் ஏ-1 (Jet A-1) எரிபொருள் கப்பலும் நாட்டை வந்தடையும் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார். ஈரான் கப்பலுக்கு அனுமதி வழங்காமை மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலால் உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ள பல்வேறு சூழ்நிலைகள் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது. இது குறித்து இலங்கை பாராளுமன்றத்தில் விவாதிப்பதற்கு இடமளிக்கும் வகையில் பிரேரணையை முன்வைத்தவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பிரச்சினை தொடர்பில் ஆரம்பத்திலிருந்தே எமது நிலைப்பாடு நடுநிலைமை என்பதாகும். எமது தாய்நாட்டின் கௌரவம், நீதிக்கான கேள்வி மற்றும் சர்வதேச அங்கீகாரம் ஆகியவற்றை எமது நடுநிலைமையைப் பேணுவதன் மூலமே எம்மால் பெற்றுக்கொள்ள முடியும். எனவே, எவ்வித அழுத்தங்கள் மத்தியிலும் இந்த நடுநிலைமை நழுவிப்போக இடமளிக்க மாட்டோம். ஆனால், சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சில கருத்துக்கள் முன்வைக்கப்படுவதை நான் அறிவேன். நாம் ஏதோ ஒரு தரப்பிற்கு சார்பாக இருக்கிறோம் என்றும், சில தீர்மானங்களை உரிய நேரத்தில் எடுக்கவில்லை என்பது போன்றும் கருத்துக்கள் நிலவுகின்றன. அவை முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்பதை உங்களுக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். ஈரானிய கப்பல்கள் குறித்த பிரச்சினை. குறிப்பாக, 2026 பிப்ரவரி 26 ஆம் திகதி எம்மிடம் ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டது. மார்ச் 09 மற்றும் 13 ஆம் திகதிகளில் இலங்கைக்கு ஒரு நல்லெண்ண விஜயத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும், ஒத்துழைப்பை மேம்படுத்தும் விஜயமாக இலங்கைக்கு வர விரும்புவதாகவும் எம்மிடம் கோரப்பட்டது. மார்ச் மாதத்தின் 9 மற்றும் 13 ஆம் திகதிகளில் அந்த அனுமதியை வழங்குவது குறித்து நாம் ஆராய்ந்து கொண்டிருந்தோம். அதே நாள் மாலை ஐக்கிய அமெரிக்கா ஒரு கோரிக்கையை முன்வைத்தது. தமது நாட்டிற்கு அருகில் உள்ள கடற்படைக்குச் சொந்தமான இரண்டு போர் விமானங்கள் இலங்கையின் மத்தள விமான நிலையத்திற்கு வருவதற்கு அனுமதி கோரினார்கள். எமது மேசை மீது இரண்டு ஆவணங்கள் இருந்தன. ஒன்று ஈரான் விடுத்த கோரிக்கை - மார்ச் 09 மற்றும் 13 ஆம் திகதிகளில் தமது கடற்படைக் கப்பல்கள் பிரவேசிப்பதற்கு அனுமதி கோரியிருந்தது. மறுபுறம் ஐக்கிய அமெரிக்கா விடுத்த கோரிக்கை - தமது கடற்படைக்குச் சொந்தமான இரண்டு போர் விமானங்கள் எமது மத்தள விமான நிலையத்திற்கு வருவதற்கு அனுமதி கோரியிருந்தது. நாம் எடுக்க வேண்டிய முடிவு என்ன? நாம் மிகத் தெளிவான ஒரு முடிவை எடுத்தோம். அந்த நேரத்தில் போர் குறித்த சமிக்ஞைகள் ஏற்கனவே தோன்றியிருந்தன. நாம் அந்த இரண்டு கோரிக்கைகளுக்கும் அனுமதி வழங்கவில்லை. அதுதான் நடுநிலைமை. நான் இங்கே கேட்கிறேன், ஏன் ஈரானிய கப்பல்களுக்கு அனுமதி வழங்கவில்லை என வினவப்பட்டது எனக்கு நினைவிருக்கிறது. ஒருவேளை அனுமதி வழங்கியிருந்தால் என்ன நடந்திருக்கும்? எமது ஒட்டுமொத்த நடுநிலைமையும் நழுவிப்போயிருக்கும். நாம் ஒரு தரப்பிற்குச் சார்பாகச் செயற்பட்டிருப்போம். இல்லையெனில் நாம் மற்றைய தரப்பிற்கும் இடமளிக்க வேண்டியிருந்திருக்கும். அவ்வாறு நடந்திருந்தால், எங்கோ தொலைதூரப் பிராந்தியத்தில் உள்ள அந்தப் போர் மோதலானது மத்தள விமான நிலையத்திற்கும் கொழும்புத் துறைமுகத்திற்கும் அருகில் வந்திருக்கும். நாம் அதனைச் செய்யவில்லை. அத்தகைய அழுத்தங்கள் மத்தியிலும் அந்த நடுநிலைமை கொள்கையை பாதுகாத்துள்ளோம். --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தற்சமயம் பாராளுமன்றத்திற்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்தி வருகின்றார். சற்றுமுன்னர் பாராளுமன்றுக்கு வருகைத் தந்த அவர், ஈரான் கப்பல் நாட்டிற்குள் உடனடியாக அனுமதிக்கப்படாமைக்கான காரணம் தொடர்பில் இதன்போது தௌிவுப்படுத்தியுள்ளார். அத்துடன் தற்போது நிலவி வரும் போர்ச்சூழலில் இலங்கை நடுநிலை வகிப்பது குறித்தும் அவர் தமது உரையில் குறிப்பிடுகின்றார். https://adaderanatamil.lk/news/cmmyi714o000c356pe2qqi7ed

ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது

1 day 2 hours ago
ஏவுகணைத் தாக்குதலில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் ஊடகப் பேச்சாளார் உயிரிழப்பு Published By: Digital Desk 3 20 Mar, 2026 | 02:59 PM ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் ஊடகப் பேச்சாளரான பிரிகேடியர் ஜெனரல் அலி முகமது நைனி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை தெஹ்ரான் மீது நடத்தப்பட்ட துல்லியமான வான்வழித் தாக்குதலின் போதே அவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/241466

மின்சார வரியை குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராகிறது

1 day 2 hours ago
மின்சார வரியை குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராகிறது Mar 20, 2026 - 06:40 AM ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மின்சாரத்திற்கான வரிகளைக் குறைக்கும் யோசனை ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழியும் என்று ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் தெரிவித்துள்ளதாவது, சில சந்தர்ப்பங்களில், எரிவாயுவை விட மின்சாரத்திற்கு 15 மடங்கு வரை அதிக வரி விதிக்கப்படுகிறது. இது இவ்வாறு இருக்க முடியாது. மின்சார வரி விகிதங்களைக் குறைக்கவும், எரிபொருட்களை விட மின்சாரத்திற்கு குறைந்த வரி விதிக்கப்படுவதை உறுதி செய்யவும் நாங்கள் முன்மொழிவோம். நிறுவனங்கள் நிலக்கீழ் எரிபொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, மாற்று வழி முறைகளை நோக்கி நகர்வதற்கு உதவும் முதலீடுகள் மூலம், தொழில்துறைக்கு நிதி உதவியை வழங்குமாறும் அவர் ஐரோப்பிய தலைவர்களிடம் முன்மொழிந்துள்ளதாகக் கூறினார். ஈரானில் மோதல் தொடங்குவதற்கு முன்னிருந்த நிலையை விட, தற்போது ஐரோப்பாவில் எரிவாயுவின் விலையானது இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmmy7a7ei0001356p6zcrngn1
Checked
Sat, 03/21/2026 - 10:50
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed