புதிய பதிவுகள்

400 ம‌ணித்தியால வேலை 1200 இயுரோ ச‌ம்ப‌ள‌ம் ,

1 day 7 hours ago
காட் இல்லாதவர்கள் களவாக வேலை செய்தால் அவர்களை வருத்தி வேலை வாங்கி விட்டு குறைந்த சம்பளம் கொடுப்பது பல நாடுகளில் நடக்கிறது. உங்கள் நாட்டிலும் உள்ளதாமே. https://yarl.com/forum3/topic/147990-ஐரோப்பாவில்-தமிழர்-கடைகளில்-நடப்பது-என்ன-நோர்வேயில்-அம்பலம்/ ஆனாலும் மாதம் 400 மணித்தியாலங்கள் வேலை செய்வது என்பது அதிகம். இவ்வாறு வேலை செய்ய ஒப்புக்கொள்வோர் உள்ளவரை வேலை வாங்குபவர்களும் இருப்பார்கள்.

புதிய இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமனம்

1 day 8 hours ago
சர்வதேசத்தின் பங்களிப்புடன் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம் (நா.தனுஜா) சவேந்திர சில்வாவின் 58 ஆவது படையணியால் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிகோரி போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில், அவர் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் கட்டமைப்பு மறுசீரமைப்பு என்பன தொடர்பான அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நலிவடையச் செய்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் சர்வதேசத்தின் பங்களிப்புடன் உடனடியாக நீதி வழங்கலுக்கான தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அரசாங்கம் அதனைச் செய்யாதவிடத்து ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியிருக்கிறது. லெப்டினன் ஜெனரல் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமையை அடுத்து, மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடுந்தொனியில் வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஐக்கிய நாடுகள் ஆணையாளர் அலுவலகம், சவேந்திர சில்வாவினால் வழிநடத்தப்பட்ட 58 ஆவது படையணி இறுதி யுத்தத்தின் போது மேற்கொள்ள மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தியிருக்கிறது. சவேந்திர சில்வாவின் 58 ஆவது படையணியால் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிகோரி போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில், இந்த நியமனம் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் கட்டமைப்பு மறுசீரமைப்பு என்பன தொடர்பான அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நலிவடையச் செய்துள்ளது. இந்நிலையில் உடனடியாக சர்வதேசத்தின் பங்களிப்புடன் நீதித் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறல்லாத பட்சத்தில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு அதனைச் செய்ய வேண்டும். https://www.virakesari.lk/article/63114

‘வங்கியால் பாதிப்படைவதே அதிகம்’

1 day 8 hours ago
பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஓருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும்; சிவமோகன் அடக்குமுறையை திணிக்காத ஓரு ஆட்சியை நிலை நிறுத்தி பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஓருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும் என வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு இன்று பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அண்மையில் சரத்பொன்சேகா கோத்தாபயவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தமையை வரவேற்றுள்ளார். இதை ஓரு இராணுவ ரீதியான கண்ணோட்டமாகவே பார்க்கிறேன். அவர் ஓரு பாராளுமன்ற உறுப்பினராகவிருந்தும் இராணுவ கண்ணோட்டத்தில் பார்க்கிறார். அதன் பின்புலத்தை அவர் உணரவில்லை. நாட்டின் அபிவிருத்தி, பொருளாதாரம் பற்றி பேசவேண்டியவர்கள் அனைத்தையும் கைவிட்டு சோமாலியா, தென்சூடான் போன்ற நாடுகளைப் போல் இந்த நாட்டை மாற்ற முயல்கிறார்கள். இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கிறார்கள் என்று தான் எண்ணத் தோன்றுகின்றது. நாட்டின் பாதுகாப்பு என்ற வகையில் இவர்கள் மேற்கொள்ளும் செயற்பாடுகள் எதிர்காலத்தில் தமிழர் விரோத செயற்பாடுகளாகவே அமையும் என உணர முடிகிறது. தமிழர்கள் நிம்மதியாக வாழக் கூடிய ஒட்டுமொத்த இலங்கை மக்களும் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தும் வகையில் இன்னும் நகர தயாராகவில்லை. வறிய நாடான சிங்கப்பூர் இன்று பொருளாதார ரீதியாக வளர்ந்துள்ளது. அனைத்து இன மக்களுக்கும் சமத்துவம் வழங்கப்பட்டமையே அதற்கு காரணம். எனவே, இலங்கையிலும் அனைத்து இன, மத மக்களுக்கும் சமத்துவம் வழங்கி இன்னொரு அடக்குமுறையை திணிக்காத ஓரு ஆட்சியை நிலை நிறுத்தி பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஓருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும் எனத்தெரிவித்தார். https://www.virakesari.lk/article/63117

அஜித் ரசிகர்களால் சேதம்: ரூ.5.5 லட்சம் நஷ்டம்; பிரான்ஸ் திரையரங்கம் அதிரடி முடிவு

1 day 8 hours ago
இந்த அடாவடி ரசிகர்களின் அட்டகாசத்திற்கு ஒரு முடிவு கிடைத்ததில் மகிழ்ச்சி இங்கும் அதே நிலைதான் கடைசியாக எந்தப்படம் திரையரங்கில் பார்த்தது என்றே ஞாபகம் இல்லை

‘வங்கியால் பாதிப்படைவதே அதிகம்’

1 day 9 hours ago
2019 ஓகஸ்ட் 21 புதன்கிழமை, பி.ப. 02:36 -எஸ்.நிதர்ஷன் வங்கியால், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் பயனடைந்ததைவிட பாதிப்படைந்ததுதான் அதிகமெனத் தெரிவித்த தொழிலதிபர் வி.ஜெயேந்திரன், இதனை வங்கிகள் கவனத்தில் எடுக்க வேண்டுமென்றும் கூறினார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில், நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், வங்கிகளில் பெற்ற கடனைச் செலுத்த முடியாமல், பலர் தற்கொலை செய்து வருவதாகவும் மக்களுக்கு உதவி செய்ய வந்திருப்பதாகச் சொல்லி, மக்களுக்கு ஆசைவார்த்தைகளைக் கூறி, அவர்களுக்கு பணத்தை கொடுத்து அவர்களை கடனாளியாக்குவததாகவும் குற்றஞ்சாட்டினார். ஆகவே, வங்கிகள், மக்களுக்கு கடன்களை வழங்க முதல் மக்களின் நிலைமையைப் பார்க்க வேண்டுமெனவும், அவர் மேலும் கூறினார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/வங்கியால்-பாதிப்படைவதே-அதிகம்/71-237114

நல்லூரில் நடமாடும் பொலிஸ் சி.சி.ரி.வி கண்காணிப்பு வாகனம்!!

1 day 9 hours ago
Published by Daya on 2019-08-21 11:57:36 நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் மேலும் பாதுகாப்பினை அதிகரிப்பதற்காக பொலிஸ் நடமாடும் சி.சி.ரி.வி. கண்காணிப்புப் பிரிவு கொழும்பு பொலிஸ் தலைமையகத்தால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா கடந்த 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது. 25 திருவிழாக்களில் இன்று 16ஆம் திருவிழாவாகும். நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை 18ஆம் திருவிழா கார்த்திகை உற்சவம் நடைபெறுகின்றது. அன்றைய தினம் முதல் சிறப்பு உற்சவங்கள் இடம்பெறவுள்ளதால் அதிகளவு அடியவர்கள் நல்லூரில் திரள்வர். இந்நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை இலகுபடுத்த பொலிஸ் நடமாடும் சி.சி.ரி.வி. கண்காணிப்புப் பிரிவு கொழும்பு பொலிஸ் தலைமையகத்தால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிவின் இரண்டு வாகனங்கள் இன்று நல்லூர் ஆலய சூழலில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளுக்கு வருகை தந்துள்ளன. https://www.virakesari.lk/article/63080 நல்லூர் ஆலயத்திற்கு சென்ற முதியவருக்கு ஏற்பட்ட விபரீதம் Published by T Yuwaraj on 2019-08-21 13:15:05 நல்லூர் கந்தசுவாமி ஆலய வீதியில் மின்சாரம் தாக்கிய முதியவர் உயிரிழக்கவில்லை என்று தெரிவித்துள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம், அவர் சுகநலத்துடன் உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது. நல்லூர் ஆலய வீதியில் மின்சாரம் தாக்கியதாக அம்புலன்ஸ் வண்டியில் அழைத்துவரப்பட்ட செல்லத்துரை ஜெகநாதன் (வயது – 64) என்ற முதியவர் இன்று காலை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் சுகநலத்துடன் உள்ளார்” என்று வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நல்லூர் கந்தசாமி ஆலய வெளிவீதியில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமரா பொறிமுறையில் ஏற்பட்ட மின்கசிவில் சிக்கி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றது. ஆலய வீதியில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்புக் கெமரா தாங்கியில் மழை காரணமாக மின் கசிவு ஏற்பட்டுள்ளது. அதில் முதியவர் சிக்குண்டுள்ளார். இதையடுத்து குறித்த முதியவர் சுயநிலைவற்ற நிலையில் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அங்கு முதியவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட போதும் சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். எனினும் வைத்தியசாலை நிர்வாகம் அதனை மறுத்துள்ளது. https://www.virakesari.lk/article/63090

காஷ்மீர் விடயத்தில் இந்தியாவின் பிரகடனத்தை இலங்கை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் - சம்பிக

1 day 9 hours ago
Published by T Yuwaraj on 2019-08-21 15:41:12 (எம்.மனோசித்ரா) மொழியால் பிரிவினைவாதம் ஏற்பட்டதைப் போன்று மதத்தால் ஏற்பட்டுள்ள பிரிவினை வாதத்தால் மீண்டும் ஒரு யுத்தத்திற்குச் செல்ல முடியாது என்று தெரிவித்த பெருநகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க, காஷ்மீர் இந்தியாவின் ஒரு மாநிலமாக பிரகடனப்படுத்தப்பட்டு அந்த நாட்டின் சட்டம் நீதிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. இதனை நாமும் முன்னுதாரணமாக கொண்டு ஒரு நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாட்டிற்குள் வர வேண்டும் எனவும் குறிப்பிட்டார். பாணந்துரையில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ' தேசிய வழி ' மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் தெரிவித்ததாவது : காஷ்மீர் இந்தியாவின் ஒரு மாநிலமாக பிரகடனப்படுத்தப்பட்டு அந்த நாட்டின் சட்டம் நீதிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. அதனை நாமும் ஒரே நாடு; ஒரே நீதி என்ற அடிப்படையில் செயற்படுவதற்கான உதாரணமாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். தற்போது நாட்டில் சிங்கள , முஸ்லிம் மக்களிடையே பயமும் சந்தேகமும் காணப்படுகின்றது. இவர்களிடம் மாத்திரமல்ல. கிழக்கில் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தினால் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்கள் மீது அதிருப்தியடைந்துள்ளனர். மக்கள் மத்தியில் இன்றும் நம்பிக்கையின்மை காணப்படுகின்றமையே அதற்கான காரணமாகும். எனவே மனித நேயத்துடன் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு மண்டியிடாத, அதற்கு எதிராக போராடக் கூடிய மக்கள் சக்தி உருவாக்கப்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/63106

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை யாழில் திறக்கக்கூடாது ;வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவா்களின் அமைப்புக்கள்

1 day 9 hours ago
டக்ளஸ், வரதர் தரப்­புகள் கோத்­தா­வுடன் இணைந்து தமி­ழர்­களை மேலும் நசுக்க கங்­கணம் கட்­டு­கின்­றன ; முல்­லைத்­தீவு காணாமல் ஆக்­கப்­பட்டோர் சங்­கத்­த­லைவி Published by R. Kalaichelvan on 2019-08-21 12:34:35 கடந்த காலங்­களில் அர­சுடன் இணைந்து எமது பிள்­ளை­களை கடத்­திய டக்ளஸ் மற்றும் வர­த­ராஜப் பெருமாள் தரப்­புகள் மீண்டும் கோத்­தா­வுடன் இணைந்து தமி­ழர்­களை மேலும் நசுக்க கங்­கணம் கட்டிக் கொண்­டி­ருக்­கின்­றனர் என்று முல்­லைத்­தீவு மாவட்ட காணாமல் ஆக்­கப்­பட்டோர் சங்­கத்­த­லைவி மரி­ய­சுரேஷ் ஈஸ்­வரி தெரி­வித்தார். யாழ்ப்­பாணம் ஊடக மையத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­விய­லா ளர் சந்­திப்­பி­லேயே அவர் இதனை தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, உள்­நாட்டு போரில் போர்க்­குற்­றத்தில் ஈடு­பட்­ட­வர்­களில் முக்­கி­ய­மா­னவர் பாது­காப்பு அமைச்சின் முன்னாள் செய­லாளர் கோத்தாபய ராஜ­பக்ஷவே என்று எமது மக்­க­ளுக்கும் உல­குக்கும் தெரியும். எங்­களின் உற­வு­களை மறைத்து வைத்­தி­ருக்க பிர­தான சூத்­தி­ர­தாரி இவர்தான். தமிழ் மக்­களை பொறுத்­த­வ­ரையில் கோத்­த­பாய போர்க்­குற்­ற­வாளி தான். அந்த மன­நி­லையில் எவ்­வித மாற்­றமும் இல்லை. முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தாவை இந்த நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக வர தமிழ் மக்­க­ளா­கிய நாம் இட­ம­ளிக்க மாட்டோம். அவர் எம்மை மீறி ஜனா­தி­ப­தி­யாக வந்­தாலும் மிகு­தி­யாக இருக்­கின்ற எங்­களை கொன்­ற­ழிக்­கவே துடிப்பார். காணா­மல்­போன உற­வு­க­ளுடன் முக்­கி­ய­மாக அர­சியல் கைதி­களை தங்­களின் கட்­டுப்­பாட்­டி­லேயே இவர்கள் வைத்­தி­ருந்­தனர். ஆனால் அவர்­களில் பலர் எங்கே? சிறை­களில் தடுத்து வைத்­த­வர்­களை விடு­விக்­க­வில்லை. சிறையில் உள்­ளவர்க­ளை­யா­வது நாம் மீட்க வேண்டும் என பல போராட்­டங்களை நடத்­தினோம். ஆனால் இவர்­களும் தென்­னி­லங்கை அர­சி­யல்வா­தி­களும் கொஞ்சம் கூட இரங்­க­வில்லை. கடந்த காலங்­களில் அர­சுடன் இணைந்து எமது பிள்­ளை­களை கடத்­திய டக்ளஸ், வர­த­ரா­ஜப்­பெ­ருமாள் தரப்­புகள் மீண்டும் கோத்­த­பா­ய­வுடன் இணைந்து தமிழர்களை மேலும் நசுக்ககங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றன. அவர்களின் குணத்தை மாற்ற முடியாது. ஆனால் தேர்தலில் எமது தமிழ் தலைமை தவறுவிட்டால் நாம் தட் டிக் கேட்போம் என்றார். https://www.virakesari.lk/article/63084

தமிழக கார் நிறுவனங்களில் 10 லட்சம் பேர் வேலை பறிபோகும்?: அரசு நடவடிக்கை எடுக்க தொழிற்சங்கங்கள் கோரிக்கை

1 day 9 hours ago
பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு?! `அரசு இந்த விஷயத்தில் எங்களுக்குச் சாதகமாக முடிவெடுக்கவில்லை எனில், 8000 - 10,000 பணியாளர்களை நீக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம்’. இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளதார மந்தநிலை படிப்படியாக அனைத்து துறைகளையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. ஆட்டோமொபைல் துறையில் பெரும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. நிசான், டாடா, அசோக் லேலண்ட் போன்ற நிறுவனங்கள் ஆள் குறைப்பில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் மிகப் பெரிய பிஸ்கட் உற்பத்தி நிறுவனமான பார்லேவும் பொருளாதார மந்தநிலையால் பாதிப்படைந்துள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பார்லே நிறுவனத்தின் அதிகாரி மாயங்க் ஷா கூறுகையில், ''சேவை வரியைக் குறைக்க மத்திய அரசிடம் நாங்கள் கோரிக்கை வைத்திருக்கிறோம். அரசு இந்த விஷயத்தில் எங்களுக்கு சாதகமாக முடிவெடுக்கவில்லை எனில், 8000 - 10,000 பணியாளர்களை நீக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம்'' என்றார் வேதனையுடன். பார்லே நிறுவனம், மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது. பார்லே நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 10 பிளான்ட்டுகள் உள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். ஆண்டுக்கு ரூ.10,000 கோடிக்கு வர்த்தகம் நடக்கிறது. முன்னதாக, 100 கிலோ கிராம் பிஸ்கட் பாக்கெட்டுக்கு 12 சதவிகித சேவை வரி விதிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி அறிமுகம் செய்த பிறகு, 18 சதவிகிதமாக வரி வசூலிக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் பிரீமியம் ரக பிஸ்கட்டுகளுக்கு 12 சதவிகித வரியும் குறைந்த விலைகொண்ட பிஸ்கட்டுகளுக்கு 5 சதவிகித வரியும் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 18 சதவிகித வரி விதிக்கப்பட்டதால், வேறு வழியில்லாமல் 5 சதவிகிதம் விலையை உயர்த்தியது பார்லே நிறுவனம். விலை உயர்வும் பிஸ்கட் விற்பனை சரிவதற்குக் காரணமாக அமைந்துவிட்டது. பார்லே நிறுவனம், பார்லே ஜி மற்றும் மாரி ரக பிஸ்கட்டுகளை விற்பனைசெய்கிறது. பார்லே நிறுவனத்தைப் போல, மற்றொரு பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டானியாவும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் வருண் பெரி, '' இந்தியப் பொருளாதாரத்தில் ஏதோ சீரயஸாக எடுத்துக்கொள்ளக்கூடிய தொய்வு ஏற்பட்டுள்ளது. 5 ரூபாய் பிஸ்கட்டை வாங்கக்கூட வாடிக்கையாளர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கின்றனர்'' எனக் கவலை தெரிவித்திருக்கிறார். https://www.vikatan.com/business/investment/parle-company-could-lay-off-10000-workers

புதிய இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமனம்

1 day 9 hours ago
சவேந்திர சில்வாவின் கடைவாயில் தமிழர்களின் இரத்தம் இன்னும் வடிகிறது - ஸ்ரீதரன் எம்.பி. Published by R. Kalaichelvan on 2019-08-21 12:00:12 (ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்) இருபதாம் நூற்றாண்டில் கொலைகளுக்கு பெயர்போனவரை இராணுவத்தளபதியாக நியமித்துள்ளதன் மூலம் நாட்டில் இன்னொரு இனம் வாழ முடியாத சூழல் ஏற்படுத்தப்பட் டுள்ளது என தமிழ் தேசியக்கூட்டமைப்பு எம்.பி.எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற புலமைச் சொத்துக்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து தமிழ் மக்களின் வாக்குகளினால் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன, 20 ஆம் நூற்றாண்டில் கொலைகளுக்கு பெயர்போன சவேந்திர சில்வாவை இராணுவ தளபதியாக நியமித்துள்ளார். தமிழ் மக்களின் வாக்குகளைப்பெற்று நான் இந்த நாட்டில் மாற்றங்களைக்கொண்டு வருவேன் . மீண்டும் ஜனாதிபதியாக ஆசைப்பட மாட்டேன் என்றெல்லாம் உறுதியளித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன,தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை புரிந்த,பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றொழித்த , இன்றும் இறுமாப்புடன் இன்னும் கொல்லுவேன் என்று சொல்கின்றவரை இராணுவத்தளபதியாக நியமித்துள்ளதன் மூலம் நாட்டில் இன்னொரு இனம் வாழ முடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது . தமிழ் மக்களின் இரத்தம் குடித்த சவேந்திர சில்வாவின் கடைவாயிலிருந்து இன்னும் தமிழ் மக்களின் இரத்தம் வடிந்து கொண்டிருக்கின்றது. இவ்வாறான ஒரு கொலையாளி இந்த நாட்டின் இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை மிகவும் அபாயகரமானது. அத்துடன் நாட்டின் புலமைச்சொத்துக்களை பாதுகாப்பது தொடர்பாக சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் சிங்கள பாடல்களை மாத்திரம் பாதுகாக்கும்வகையிலே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அனைத்து இனங்களின் புலமைச்சொத்துக்களை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அப்போது நாங்களும் இந்த சட்ட மூலத்துக்கு ஆதரவளிப்போம். ஆனால் தமிழ் வீரப்பாடல்களை யாராவது பாடினால் அவரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படும் நிலையே இருந்து வருகின்றது என்றார். https://www.virakesari.lk/article/63081

வைத்தியர் சிவரூபன் கைது தமிழர்களை இந்த நாட்டிலே நிம்மதியாக வாழ விடமாட்டோம் என்பதனை சிங்கள அரசு மீண்டும் தனது கொள்கையை வலியுறுத்துகின்றது!

1 day 9 hours ago
படு­கொ­லை­க­ளுக்கு கண்­கண்ட சாட்­சி­யாக இருந்­த­மையே வைத்­தியர் கைதுக்கு காரணம் : சிறிதரன் எம்.பி. (ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்) இரா­ணு­வத்­தி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான படு­கொ­லை­க­ளுக்கு கண்கண்ட சாட்­சி­யாக இருந்த கார­ணத்­தி­னா­லேயே பச்­சி­லைப்­பள்ளி பிர­தான வைத்­தி­ய­சா­லையின் வைத்­திய அத்­தி­யட்சர் சின்­னையா சிவ­ரூபன் இரா­ணு­வத்­தி­னரால் திட்­ட­மிட்ட முறையில் கைது செய்­யப்­பட்­டுள்ளார் என தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பு எம்.பி. எஸ். ஸ்ரீதரன் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற புலமைச் சொத்­துக்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்­நுட்பம் தொடர்­பான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில், கிளி­நொச்சி மாவட்­டத்தின் பச்­சி­லைப்­பள்ளி பிர­தான வைத்­தி­ய­சா­லையின் வைத்­திய அத்­தி­யட்சர் சின்­னையா சிவ­ரூபன் கடந்த 18 ஆம் திகதி இரவு ஆனை­யி­றவு சோதனைச் சாவ­டியில் வைத்து இரா­ணு­வத்­தி­னரால் கைது செய்­யப்­பட்டு பயங்­க­ர­வாத குற்­றப்­பி­ரி­வி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ளார். 19 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு தான் இவர் கைது செய்­யப்­பட்­டமை தொடர்பில் இவரின் மனை­விக்கு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. காலை 11 மணிக்கே மனை­வியும் அவரின் இரு பிள்­ளை­களும் அவரை பார்­வை­யிட்­டுள்­ளனர். அமுலில் உள்ள பயங்­க­ர­வாத தடைச்சட்டம் மற்றும் அவ­ச­ர­கால சட்­டத்தின் பயங்­கர விளைவு இது. வைத்­திய அத்­தி­யட்சர் சின்­னையா சிவ­ரூபன் நீண்­ட­கா­ல­மாக யாழ். மாவட்­டத்தின் சட்ட வைத்­திய அதி­கா­ரி­யா­கப்­பணி புரிந்­தவர். தற்­போது கிளி­நொச்சி மாவட்ட பச்­சி­லைப்­பள்ளி பிர­தான வைத்­தி­ய­சா­லையின் வைத்­திய அத்­தி­யட்­ச­ராக இருக்­கின்றார். இவர் துணிச்சல்மிக்­கவர். மக்­க­ளுக்­கா­கப் ­ப­ணி­யாற்­று­பவர். இதனால் இரா­ணுவ, பொலிஸ் புல­னாய்­வா­ளர்கள் இவரை பின் தொடர்ந்தும் இவர் மீதான காழ்ப்­பு­ணர்ச்­சி­களும் இவரின் கைதுக்கு கார­ண­மாக இருக்­க­லா­மென நாம் கரு­து­கின்றோம். குறிப்­பாக 2009, 2010 யுத்தம் முடிந்த காலப்­ப­கு­தியில் யாழ். மாவட்­டத்தில் சுமார் 300க்கு மேற்­பட்டோர் படு­கொலை செய்­யப்­பட்­டனர். ஆனால் இரா­ணுவ,பொலிஸ் பயங்­க­ர­வாத புல­னாய்­வுப்­பி­ரி­வினர் இவர்கள் தற்­கொலை செய்து கொண்­ட­தாக, விபத்தில் இறந்­த­தாக தெரி­வித்து அந்த விதத்­தி­லேயே பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. அப்­போது சட்ட வைத்­திய அதி­கா­ரி­யாக இருந்த சிவ­ரூபன், பல மர­ணங்கள் அடித்­துக்­கொலை செய்­யப்­பட்­டுள்­ளன, சைலன்சர் துப்­பாக்­கியால் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டுள்­ளன, நவீன முறை­க­ளைப் ­ப­யன்­ப­டுத்­திக்­கொலை செய்­யப்­பட்­டுள்­ளன என்ற விட­யங்­களை வெளிக்­கொண்டு வந்­த­துடன் சர்­வ­தே­சத்­துக்கும் தெரி­யப்­ப­டுத்­தினார். அத்­துடன் இரு தட­வைகள் மனித உரி­மைகள் ஆணைக்­குழு முன்­பா­கவும் இவர் சாட்­சியம் வழங்­கினார். 2006ஆம் ஆண்டு அல்­லைப்­பிட்­டியில் ஒரு வீட்­டுக்குள் இருந்த மக்கள் இரா­ணு­வத்­தி­னரால் சுட்­டுக்­கொல்­ல­பட்­டனர். இதில் பலர் காய­ம­டைந்­தனர். அப்­போது அவர்­களை அங்­கி­ருந்து கொண்­டு­வ­ர­மு­டி­யாத சூழல் இருந்­தது. இத­னை­ய­டுத்து யாழ். மாவட்­டத்தின் நீதி­ய­ர­ச­ரா­க­வி­ருந்த ஸ்ரீநிதி நந்­த­சே­க­ர­னுடன் இணைந்து அப்­போது யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்தின் மருத்­து­வ­பீட மாண­வ­னாக இருந்த சிவ­ரூபன் அங்கு சென்று காயப்­ப­ட­ட­வர்­களை மீட்டு வந்து சிகிச்­சை­ய­ளித்த வர­லாறு அவ­ருக்­குண்டு. இதற்­காக அவரை அமெ­ரிக்கா அழைத்து விசேட விருது வழங்­கி­யது. இவ்­வா­றான துணிச்சல் மிக்க வைத்­தி­யரின் பணியை முடக்­கு­வ­தற்­கா­கவும் தமி­ழர்­களின் பல படு­கொ­லை­க­ளுக்கு கண்­கண்ட சாட்­சி­ய­மாக இருப்­ப­த­னாலும் இரா­ணு­வத்­தி­னரால் திட்­ட­மிட்டு சோடிக்­கப்­பட்ட குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்ளார். இவர் வீட்டில் வைத்து கைது செய்­யப்­ப­ட­வில்லை. மாறாக ஆனை­யி­றவு சோதனைச் சாவ­டியில் வைத்­துத்தான் கைது செய்­யப்­பட்­டுள்ளார். இதன் மூலம் நாங்கள் மீண்டும் மீண்டும் உங்­களைக் கொல்­வோம், அழிப்போம், நீங்கள் எங்கள் அடி­மைகள் என்ற பயங்கர செய்தியையே இந்த அரசு தமிழ் மக்களுக்கு கூறுகின்றது. இவரின் கைதால் பளை வைத்திய சாலையில் விடுதியில் இருந்து சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். சிகிச்சை மேற்கொள்ள போதுமான வைத்தியர்கள் இல்லை. நாட்டில் வைத்தியர்கள் இல்லாமல் வைத்தியசாலைகள் மூடப் படும் நிலையில் வைத்தியர்களை நடுவீதியிலிந்து கைது செய்யப் படுவார்களானால் இந்நாட்டின் ஜனநாயகத்தை என்னவென்று தெரிவிப்பதென்று புரியவில்லை என்றார். https://www.virakesari.lk/article/63085

சர்வதேச சமூகம் இனியும் பார்வையாளராக இருக்க முடியாது - அகாசியிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு

1 day 9 hours ago
Published by Priyatharshan on 2019-08-21 16:02:34 சர்வதேச சமூகம் இனிமேலும் வெறும் பார்வையாளர்களாக இருக்க முடியாது. சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கத்திற்கு நினைவூட்டி அவற்றினை நிறைவேற்ற செய்வது சர்வதேச சமூகத்தின் கடமையாகும் என இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜப்பானின் உயர் ராஜதந்திரியும் ஐக்கிய நாடுகள் சபையின் நிர்வாகிகளில் ஒருவருமான யசூசி அகாசி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை, நேற்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடிய போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்துள்ள போதும் அதற்கு காரணமாக அமைந்த தமிழ் மக்களின் கோரிக்கைகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்பதனை இரா. சம்பந்தன் வலியுறுத்தினார்கள். மேலும் யுத்தத்தினை முடிவிற்கு கொண்டுவருவதில் சர்வதேச சமூகம் பாரிய பங்காற்றியதனை சுட்டிக்காட்டிய இரா.சம்பந்தன், இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வினை எட்டுவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்த போதிலும் அவற்றில் எதுவும் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை எனவும் தெரிவித்தார். சர்வதேச சமூகம் இனிமேலும் வெறும் பார்வையாளர்களாக இருக்க முடியாது என்பதனை வலியுறுத்திய இரா.சம்பந்தன் சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கத்திற்கு நினைவூட்டி அவற்றினை நிறைவேற்ற செய்வது சர்வதேச சமூகத்தின் கடமையாகும் எனவும் வலியுறுத்தினார். இந்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற தவறுகின்ற பட்சத்தில் அது தமிழ் மக்களிற்கு மாத்திரமல்ல மாறாக முழு நாட்டிற்கும் கேடானதாக அமையும் என்பதனையும் வலியுறுத்தினார். இந்த சந்திப்பில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகிரா சுகியாம மற்றும் தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/63111

'கீழடி ஆய்வில் சங்க காலமும், திராவிட செழுமையும் தெரிகிறது!' -நெகிழும் ஆய்வாளர்

1 day 9 hours ago
அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள பீட்டா அனாலிட்டிக் நிறுவனத்தில் உயரதிகாரிகளாகப் பணிபுரிய எத்தனைபேரை இந்தியா அனுப்பிவைத்துள்ளது என்பதை ஆராய்ந்து அறிந்துகொள்வது உகந்தது. இல்லையேல் ஐ.நா சபையில் இந்தியர்களை பெரும் பதவியில் அமர்த்தி ஈழப்போராட்டத்தை அழிக்க உதவியதுபோல், கீழடி ஆய்வில் கண்ட தமிழரின் வரலாறுகளையும் அந்த இந்தியர்களைக் கொண்டு, திசைமாற்றி அழித்துவிடலாம். 😲

புதிய இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமனம்

1 day 10 hours ago
2009 வரைக்குமான அயுதமேந்திய போராட்டம் அதற்குமுன்பான தந்தை செல்வாவின் அகிம்சைவழிப்போராட்டம் 2009 க்குப்பின்னதான சர்வதேச ஒழுங்குமுறைகளுடனான போராட்டம் இவைகளில் நாம் பெற்றுக்கொண்டதுதான் என்ன? யாரிடம் போனாலும் இந்தியாவைத்தான் கைகாட்டுகிறார்கள் எனவே நாம் இந்தியாவை நம்புகிறோ எமக்கான தீர்வு அவர்கள்மூலமே கிடைக்கும் எனக் கூறிக்கொள்ளும் இந்தியா இதுவரை எமக்குச் செய்த நன்மைகள் எதையாவது பட்டியலிட முடியுமா? இல்லை சரி போர்க்குற்றவாளி என அடையாளம் காட்டப்பட்ட சவேந்திரசில்வா விடையத்திலாவது ஏதாவது நல்லதை இந்தியா செய்திருகிறதா? அவர்களால் முடியாது காரணம் தமிழர்மீதான போர்க்குற்றத்தை முன்னின்று நடாத்தியதே இந்தியாதானே ஆகவேதான் இனிமேல் இந்தியா ஈழத்தமிழர்விடையத்தில் தலையிடாமல் இருக்கவேண்டும் எனக்கூறும் காலம்வந்துவிட்டதாகக்கூறுகிறேன்.

400 ம‌ணித்தியால வேலை 1200 இயுரோ ச‌ம்ப‌ள‌ம் ,

1 day 10 hours ago
பையனின் அனுபவத்தை பார்த்தேன் இதுவும் கடந்து போகும் என்பதைத்தவிர வேறு எதுவும் சொல்லமுடியவில்லை நானும் இதைத்தாண்டித்தான் வந்தேன் (ஆனால் எம்மவர்களிடமில்லை) எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருப்பதாக சொல்வார்கள் இது இரு பகுதியும் தீர்மானிக்கும் விடயம். நான் முடிந்தவரை பிரெஞ்சு சட்டங்களுக்கமைய தொழில் செய்வதால் இதுவரை விசா இல்லாதவர்களை வேலைக்கு அமர்த்தியதில்லை வீட்டு வேலைக்கு வருபவர்கள் விசா இல்லாதவர்களை தம்முடன் அழைத்து வந்தால் இரட்டிப்பு சம்பளமும் சாப்பாடும் கொடுத்து தான் அனுப்புவேன் மன நிம்மதிக்காக...

UPDATE - ஸ்ரீதரன் எம்.பி.யின் வீட்டை அண்மித்த பகுதியில் படையினர் குவிப்பு!

1 day 11 hours ago
ஸ்ரீதரன் எம்.பி.யின் வீட்டை அண்மித்த பகுதியில் படையினர் குவிப்பு! கிளிநொச்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன. குறித்த காணியில் இன்று காலை முதல் இரண்டு இடங்களில் நிலம் அகழப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டருந்தன. எனினும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எவையும் மீட்கப்படவில்லையென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதனையடுத்து தேடுதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன. UPDATE -ஸ்ரீதரனின் சகோதரரின் காணியில் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பம்! நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் தற்போது நிலம் அகழப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். கிளிநொச்சியில் அமைந்துள்ள குறித்த காணிக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிபதி வந்ததையடுத்து, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. UPDATE – ஸ்ரீதரன் எம்.பி.யின் சகோதரரின் காணியில் விசேட தேடுதல்! கிளிநொச்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியிலேயே படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். அதற்கமைய குறித்த காணியில் நிலம் அகழப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். மேலும் குறித்த காணிக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிபதி வந்தவுடன் அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். ஸ்ரீதரன் எம்.பி.யின் வீட்டை அண்மித்த பகுதியில் படையினர் குவிப்பு! கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனின் வீட்டை அண்மித்த பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். கிளிநொச்சி – வட்டக்கச்சி பகுதியிலேயே இவ்வாறு இன்று (புதன்கிழமை) அதிகாலையிலிருந்து படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்வதற்காகவே இவ்வாறு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் குறித்த பகுதியில் தேடுதலை மேற்கொள்ள கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், எந்த இடத்தில் தேடுதல் நடைபெறப்போகின்றது என்பது தொடர்பாக இதுவரையில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை. இதேவேளை குறித்த பகுதிக்கு நோயாளர் காவு வண்டியும் வரவழைக்கப்பட்டுள்ளது. நல்லுார் வளாகத்தில் இருந்து இராணுவத்தினர் உடனடியாக வெளியேற வேண்டும் என்று நேற்று நாடாளுமன்றில் ஸ்ரீதரன் நா.உ. உரையாற்றியிருந்த நிலையில் அவரது வீடு அமைந்துள்ள பகுதியில் இன்று இராணும் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு ஆதவனுடன் இணைந்திருங்கள். http://athavannews.com/ஸ்ரீதரனின்-வீடு-அமைந்துள/
Checked
Thu, 08/22/2019 - 20:27
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed