புதிய பதிவுகள்

கோத்தாவை போட்டியிட முடியாமல் தடுக்கும் முயற்சி தோல்வி – பீரிஸ்

19 hours 49 minutes ago
கோத்தாவை போட்டியிட முடியாமல் தடுக்கும் முயற்சி தோல்வி – பீரிஸ் Oct 23, 2019 | 2:17by கி.தவசீலன் in செய்திகள் கோத்தாபய ராஜபக்சவை அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாமல் தடுக்கின்ற முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக, பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜிஎல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில், கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக, அகிம்சா விக்ரமதுங்க தாக்கல் செய்ய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ‘இதே போன்று சிலர் இங்கும், கோத்தாபய ராஜபக்சவின் குடியுரிமையை கேள்விக்குட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.எனினும், நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து விட்டது. கோத்தாபய ராஜபக்சவிடம் சவால் விடுபவர்கள் அரசியல் ரீதியாக அவருடன் சவால் விட வேண்டும் ‘ என்றும் அவர் கூறினார். http://www.puthinappalakai.net/2019/10/23/news/40769

சிறிலங்காவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு கணிசமாக குறையும் – அமெரிக்கா

19 hours 50 minutes ago
சிறிலங்காவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு கணிசமாக குறையும் – அமெரிக்கா Oct 23, 2019 | 2:25by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் மோசமான மனித உரிமை மீறல் குற்றம்சாட்டுகளுக்கு உள்ளானவரை, இராணுவத் தளபதியாக நியமித்திருப்பது, சிறிலங்காவுடனான அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்பைக் கணிசமாகக் குறைக்கும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், மனித உரிமை விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியான றொபேர்ட் டெஸ்ரோ தெரிவித்துள்ளார். இராஜாங்கத் திணைக்களத்தின், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலரான றொபேர்ட் டெஸ்ரோ, அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழு முன்பாக நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். “நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையின் தேவை மிக முக்கியமாக இருக்கும் இந்த நேரத்தில், லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம், சிறிலங்காவின் அனைத்துலக நற்பெயரையும், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கான அதன் உறுதிப்பாட்டையும், குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அளிக்கப்பட்டுள்ள பதவி உயர்வு அமெரிக்க சட்டத்தின் கீழ், சிறிலங்கா இராணுவத்துடனான, இருதரப்பு ஒத்துழைப்பைக் கணிசமாகக் குறைக்கும் என்று, சிறிலங்கா அதிபரிடமும், ஏனைய மூத்த அதிகாரிகளிடமும் நாங்கள் தெளிவாக கூறியுள்ளோம். அதேவேளை, சவேந்திர சில்வா மற்றும் ஏனைய குற்றவாளிகளில் பொறுப்புக்கூறலானது, கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கும், பெரியளவிலான இராணுவ ஒத்துழைப்புக்கும் வழிவகுக்கும். சிறிலங்காவின் நீண்டகால அமைதி, செழிப்பு, மற்றும உறுதிப்பாட்டுக்கு, மனித உரிமை பதிவுகளில் தொடர்ச்சியான முன்னேற்றம் என்பது மிக முக்கியமானதாகும். சிறிலங்கா அடுத்த மாதம் அதிபர் தேர்தலை எதிர்நோக்கியிருக்கிறது. சிறிலங்காவின் அடுத்த அரசாங்கம் மனித உரிமைகள் மீதான தனது கவனத்தை அதிகரிக்கும் என்றும், வளர்ந்து வரும் நல்லிணக்க நிறுவனங்களை மேம்படுத்தும் என்றும், நிலைமாறு கால நீதிக்கான அனைத்து வழிமுறைகளையும் செயற்படுத்தும் என்றும் அமெரிக்கா நம்புகிறது. அத்துடன் ஊடகத்துறையின் சுதந்திரத்தையும் கௌரவத்தையும் உறுதி செய்ய வேண்டியது முக்கியமானது” என்றும் அவர் கூறியுள்ளார். https://yarl.com/forum3/forum/40-ஊர்ப்-புதினம்/?do=add

யாழில் மாபெரும் போராட்டம்

19 hours 53 minutes ago
-செல்வநாயகம் ரவிசாந், எஸ்.நிதர்ஷன் ஒக்டோபர் 13ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டு இந்தியாவில் சிறைவைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் மாவட்டக் கடற்தொழிலாளர்கள் 18 பேரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில், இன்று (23) மாபெரும் பேரணி இடம்பெற்றதுடன், கவனயீர்ப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்டக் கடற்றொழிலாளர் சம்மேளனமும் எழுவைதீவு புனித தோமையார் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த பேரணியும், கவனயீர்ப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. முன்னதாக, யாழ்ப்பாணம் மாவட்டக் கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத்துக்கு முன்னால், முற்பகல் 10.15 மணியளவில், கைது செய்யப்பட்ட மீனவர்களின் மனைவிமார், தாய்மார், சகோதரர்கள், உறவினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பேரணியாக சுண்டுக்குழியிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வரைச் சென்றனர். வடக்கு மாகாண ஆளநர் அலுவலகத்தை வந்தடைந்த போராட்டக்காரர்கள், அலுவலகத்துக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், வடக்கு மாகாண ஆளுநரின் உதவிச் செயலாளர் ஜே.செல்வநாயகத்தைச் சந்தித்து, கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றைக் கையளித்தனர். அதைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு பேரணியாகச் சென்றனர். அதைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தை முடக்கிப் போராட்டத்தில் ஈடுபடும் நோக்குடன் மேற்படி தூதரகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர். இதன்போது, துணைத்தூதரக அதிகாரிகள் குழுவை மேற்படி யாழ்ப்பாணம் மாவட்ட மீனவர் சங்கப் பிரதிதிகளும் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தவர்களும் இணைந்து சந்தித்துக் கலந்துரையாடினர். சந்திப்பின் நிறைவில், துணைத்தூதரக அதிகாரிகளிடம் மகஜரொன்றையும் கையளித்தனர். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/யழல-மபரம-பரடடம/71-240372

மீண்டும் மருத்துவமனையில் மகேஸ் சேனநாயக்க – மாரடைப்பா?

19 hours 53 minutes ago
மீண்டும் மருத்துவமனையில் மகேஸ் சேனநாயக்க – மாரடைப்பா? Oct 23, 2019 | 2:27by கார்வண்ணன் in செய்திகள் தேசிய மக்கள் இயக்கத்தின் அதிபர் வேட்பாளரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் மகேஸ் சேனநாயக்க மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று நாட்களாக வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நிலையில், பதுளை, பண்டாரவளை,ருவன்வெல்ல, பலாங்கொட, இரத்தினபுரி ஆகிய இடங்களில் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தீவிரமான பரப்புரைகளிலும், கூட்டங்களிலும் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முற்பகல் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து, பலாங்கொட மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சைகளுக்குப் பின்னர் அங்கிருந்து வெளியேறிய அவர், இரத்தினபுரியில் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று விட்டு கொழும்பு திரும்பினார். அதன் பின்னர் அவர் நாரஹேன்பிட்டியவில் உள்ள இராணுவ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறிய சுவாச தொற்று காரணமாகவே அவர் அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தகவல் வெளியிட்ட தேசிய மக்கள் இயக்கத்தின் உறுப்பினரான லசிலி டி சில்வா, ”ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக சிலர் வதந்திகளைப் பரப்பியுள்ளனர். ஆனால் இருமல் மற்றும் சளி காரணமாக அவருக்கு சிறியளவில், சங்கடமாக இருந்தது. அவர் முதலில் அனுமதிக்கப்பட்ட பலாங்கொட மருத்துவமனையின் மருத்துவர்கள், இது சோர்வு மற்றும் காலநிலை காரணமாக ஏற்பட்டதாக கூறினார்” என்றார். ஜெனரல் சேனநாயக்க, நாளை இலங்கை மன்றக் கல்லூரியில் தேசிய மக்கள் இயக்கத்தின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர், மீண்டும் தனது பரப்புரைகளை ஆரம்பிப்பார் என்றும் அவர் தெரிவித்தார். http://www.puthinappalakai.net/2019/10/23/news/40776

சிறிலங்காவின் புதிய அரசுக்கு மனித உரிமை அழுத்தங்கள் தொடரும் – அமெரிக்கா

19 hours 54 minutes ago
சிறிலங்காவின் புதிய அரசுக்கு மனித உரிமை அழுத்தங்கள் தொடரும் – அமெரிக்கா Oct 23, 2019 | 2:32by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துக்கு மனித உரிமைகள் விவகாரம் குறித்து தொடர்ந்து அழுத்தங்கள் கொடுக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் ஜி. வெல்ஸ், அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழுவின், ஆசியா-பசுபிக்கிற்கான துணைக்குழுவில் நேற்று உரையாற்றிய போது இவ்வாறு கூறினார். “லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டது தொடர்பாக, அமெரிக்கா ஏமாற்றமடைந்திருப்பது குறித்து பகிரங்கமாக குரல் கொடுத்துள்ளது. மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக அவருக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற அமைப்புகளால் ஆவணப்படுத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மோசமானவை மற்றும் நம்பகமானவையாகும். சிறிலங்கா ஒரு முக்கியமான கடல்சார் சக்தியாகவும், இந்தோ-பசுபிக் பங்காளராகவும் இருக்கிறது. அமெரிக்க சட்டத்தின் கீழ், பரஸ்பர நன்மை பயக்கும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பைக் குறைப்பதற்கு, இந்தப் பதவி உயர்வு எங்களை கட்டாயப்படுத்துகிறது என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம். காணாமல்போனோர் மற்றும் இழப்பீடுகளுக்கான செயலகங்களை நிறுவுதல், மற்றும் வடக்கு – கிழக்கில் நிலங்களை அவற்றின் உரிமையாளர்களுக்கு மீள ஒப்படைத்தல் போன்ற விடயங்களில் சிறிலங்கா அரசாங்கத்தின் முன்னேற்றங்களை அமெரிக்கா ஊக்குவிக்கிறது. எனினும், அரசியலமைப்பு சீர்திருத்தம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றுவது, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவுதல் மற்றும் கடந்தகால குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்ய நம்பகமான நீதித்துறை பொறிமுறையை உருவாக்குதல் உள்ளிட்ட சிறிலங்காவின சில வாக்குறுதிகளில் மெதுவான முன்னேற்றமே காணப்படுகிறது அல்லது முடங்கிப் போயுள்ளது. இவை மற்றும் ஏனைய விவகாரங்கள் தொடர்பாக சிறிலங்காவுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்ற எதிர்பார்க்கிறோம். அடுத்தமாதம் நடக்கவுள்ள தேர்தலில் எந்த வேட்பாளர் வெற்றி பெற்றாலும் எங்களின் மனித உரிமைகள் நிகழ்ச்சி நிரல் தீவிரமாக அழுத்தம் கொடுக்கும். இலங்கையர்கள் தங்கள் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்காக நொவம்பர் 16 ஆம் நாள் நடக்கவுள்ள தேர்தல், சுதந்திரமானதாக, நியாயமானதாக, வன்முறையற்றதாக இருக்கும் என்றும், ஆசியாவின் பழமையான ஜனநாயகத்திற்கு பொருத்தமான குணங்களை வெளிப்படுத்தும் என்றும் அமெரிக்கா எதிர்பார்க்கிறது. மேலும், முன்னேற்றத்தை ஆதரிப்பதற்காக, மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் நிலைமாறுகால நீதி ஆகியவற்றுக்கு ஆதரவு அளிப்பது உள்ளிட்ட விடயங்களில் சிறிலங்காவுடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுகிறோம். இராஜதந்திர ஈடுபாட்டிற்கு மேலதிகமாக, சிறிலங்காவின் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்தவும் சிவில் சமூக அமைப்புகளுக்கு ஆதரவளிக்கவும் நாங்கள் இணைந்து செயற்படுகிறோம். பொது நிதி நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும், ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கும், பொறுப்புணர்வை ஊக்குவிப்பதற்கும் சிறிலங்காவின் திறனை நாங்கள் உருவாக்கி வருகிறோம்” என்றும் அவர் கூறியுள்ளார். http://www.puthinappalakai.net/2019/10/23/news/40778

பிரக்சிட் ஒப்பந்தம் நிறைவேற்றத்தை ஜனவரி வரை ஒத்திவைக்க தீர்மானம்

19 hours 55 minutes ago
பிரிட்டன் எம்பிக்கள் நிராகரித்ததால் மீண்டும் முடங்கிய பிரெக்ஸிட் ஒப்பந்தம் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை மூன்று நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்ற பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் திட்டம் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்து விட்டதால் நிறைவேறவில்லை. நேற்று (செவ்வாய்கிழமை) இது தொடர்பான வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான ஒப்பந்தத்திற்கு முதலில் ஆதரவு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சற்று நேரத்திற்கு பின்னர் அதற்கு எதிரான வாக்களித்து விட்டதால் பிரெக்ஸிட்டை முன்னெடுத்து செல்வதில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் எம்பிக்கள் வாக்கெடுப்பு நடைபெற்ற பின்னர் பேசிய ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் டஸ்க், பிரெக்ஸிட் ஒப்பந்தத்திற்கு இருக்கும் அக்டோபர் 31ம் தேதி காலக்கெடுவை நீட்டிக்க ஒன்றிய தலைவர்களுக்கு பரிந்துரைப்பதாக தெரிவித்தார். ஆனால், இந்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டால், பிரதமர் போரிஸ் ஜாண்சன் தேர்தல் நடத்த முடிவெடுக்கக்கூடும் என்று பிரிட்டன் பிரதமர் அலுவலக வட்டாரம் கூறியுள்ளது. பிரெக்ஸிட்டுக்கு இன்னும் 3 மாத காலம் நீட்டிப்பு கோரி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடிதம் எழுதிய போரிஸ் ஜான்சன், பின்னர் அதில் கையெழுத்திடவில்லை. நாடாளுமன்றத்தின் பொது அவையில் பிரெக்ஸிட் ஒப்பந்தம் நிறைவேறாமல் போனவுடன், பிரெக்ஸிட் காலக்கெடு நீட்டிப்பை அரசு அல்ல, நாடாளுமன்றமே கேட்டுள்ளதாக போரிஸ் ஜான்சன் தெரிவித்துவிட்டார். அக்டோபர் 31ம் தேதியில், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதே தனது கொள்கை நிலைப்பாடு என்றும் அவர் கூறினார். காலக்கெடுவுக்கு முன்னால், தேவையான சட்டங்களை இயேற்றி, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் விலகுவது மிகவும் கடினம் என்று நாடாளுமன்ற பொது அவையின் தலைவர் ஜேக்கப் ரீஸ்-மோக் எம்பிக்களிடம் கூறியுள்ளார். https://www.bbc.com/tamil/global-50148624

39 சடலங்கள் லொறியொன்றில் மீட்பு- பிரித்தானியாவில் அதிர்ச்சி

19 hours 59 minutes ago
பிரித்தானியாவில் லொறியொன்றின் கொள்கலனிலிருந்து 39 சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். எசெக்சில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வோர்ட்டர் கிளேட் கைத்தொழில் பூங்காவில் நிறுத்தப்பட்டிருந்த லொறியொன்றின் கொள்கலனிலிருந்தே 39 சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். பல்கேரியாவிலிருந்து பிரித்தானியாவிற்குள் நுழைந்த லொறியிலிருந்தே சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். வட அயர்லாந்தை சேர்ந்த லொறிச்சாரதியை கைதுசெய்துள்ள பொலிஸார் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://yarl.com/forum3/forum/34-உலக-நடப்பு/?do=add

கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்யுமாறு கவனயீர்ப்புப் போராட்டம்.

20 hours 1 minute ago
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் வலி மிகப்பெரியது என்பதை இந்த நிகழ்வு காட்டுகின்றது. தமக்கு நாளை ஆபத்து வரலாம் என ஓதுங்கும் ஒரு சமுகத்தில், இவ்வாறான மக்களும் உள்ளார்கள்.

வணக்கம்

20 hours 38 minutes ago
வாருங்கள் Centralits 🙏 யாழ்களம் ஒரு பூந்தோட்டம். அதில் பூக்கும் கருத்துக்கள் பூப்போன்றவை. பூவைப் பறிப்பதுபோல் அவற்றைப் பறித்து மாலை கட்டி மகிழுங்கள்.

மதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’

20 hours 45 minutes ago
அப்போ ஏழ்மையால் அரிசி பருப்புக்கு போகேலை பண ஆசையால் போகுது சனம். வயிறு காஞ்சு புண்பட்டுப்போன சனங்களை மதம் மாத்திப்போடடானுகள் என்று ஒரு சிலர் ஒப்பாரி வைக்கினம். இதில் எது உண்மை என்று சம்பந்தப் பட்டவர்களை கேக்காமல் எங்கட கற்பனையில் வடிக்க வேண்டியதுதான்.

மதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’

21 hours 11 minutes ago
ஒரு குந்தகமும் இல்லை. காலம் காலமாக இது நடைபெற்று வருகிறது. விடுப்புப் பார்க்கும் உங்களுக்கு அவர்களின் பக்தி கோமாளித்தனமாகத் தெரியலாம். ஆனால், அவர்களுக்கும் உங்கள் சிந்தனை கோமாளித்னமாகத் தெரியலாம் ! 😃

ஏலத்தில் ரஷித்கானுக்கு கடும் போட்டி ; ஏலம் போகாத மலிங்க, கெய்ல்

21 hours 29 minutes ago
’100 பந்துகள்’ தொடருக்கான ஏலத்தில், ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானுக்கு கடும்போட்டி நிலவிய நிலையில் மிலிங்க மற்றும் கிறிஸ் கெய்லை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. ’100 பந்துகள்’ கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நடக்கவுள்ளது. இதற்காக இங்கிலாந்து நகரங்களின் பெயர்களில் 8 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான ஏலத்துக்கு, இங்கிலாந்தில் இருந்து 331 வீரர்கள், அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத்தீவுகள், தென்னாபிரிக்கா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் இலங்கையை சேர்ந்த 17 வீரர்கள் உட்பட 239 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இந்திய வீரர்கள் பதிவு செய்யவில்லை இந் நிலையில், இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் லண்டனில் நடந்தது. இதில் ஆப்கான் வீரர் ரஷித் கானை வாங்குவதற்கு கடும் போட்டி நிலவியது. இறுதியில் டிரென்ட் ராக்கெட்ஸ் அணி அவரை ஏலம் எடுத்தது. இதேவேளை மேற்கிந்தியத்தீவுகள் அணியின் ரஸல் மற்றும் சுனில் நரேன், அவுஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச், மெக்ஸ்வெல், ஆப்கானின் முஜீப்புர் ரஹ்மான், தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர் ஆகியோர் முதல் சுற்றிலேயே ஏலம் எடுக்கப்பட்டனர். ஆனால், அதிரடி வீரர் கிறிஸ் கெய்லை யாரும் ஏலம் எடுக்கவில்லை. தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா, யோர்க்கர் கிங்’ மலிங்கா ஆகியோரையும் யாரும் ஏலம் எடுக்கவில்லை. https://www.virakesari.lk/article/67416

உலக இராணுவ விளையாட்டுப் போட்டி; தங்கம் வென்ற தமிழக வீரர் !

21 hours 30 minutes ago
சீனாவில் நடைபெறும் உலக இராணுவ விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற மாற்றுத் திறனாளியான தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன், தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சீனாவின் வூஹான் நகரில் 7 ஆவது உலக இராணுவ விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மிகப் பெரிய விளையாட்டுப் போட்டியாக அமைந்துள்ள இதில், 140 நாடுகளைச் சேர்ந்த 9,308 இராணுவ வீரர்கள் கலந்துகொண்டு, 27 வெவ்வேறு போட்டிகளில் பங்கேற்கின்றனர். இதில், மாற்றுத் திறனாளிகளுக்கான 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் முதன் முறையாக கலந்துகொண்ட தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன், 12 நொடிகளில் இலக்கை அடைந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு, இந்தோனேஷியாவின் ஜகர்தா நகரில் நடந்த ஆசிய பாரா விளை யாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு, 400 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும், 200 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கல பதக்கமும் வென்றுள்ளார். கடந்த 2005ஆம் ஆண்டு இராணுவத்தில் சேர்ந்த ஆனந்தன் குணசேகரன், 2008ஆம் ஆண்டு காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது கண்ணிவெடி தாக்குதலில் சிக்கி இடது காலை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/67395

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

21 hours 32 minutes ago
வணக்கம் வாத்தியார்.....! பட்டிக்காட்டு முத்து நீயோ படிக்காத மேதை தொட்டு தொட்டு பேசத்தானே துடித்தாளே ராதை கள்ளம் கபடம் இல்லை நானோ அறியாத பேதை மக்கள் மணம்தானே எந்தன் வழுக்காத பாதை கொடுத்தாள நான் வந்தேன் எடுத்தாள வேண்டாமா அடுத்தாளு பாராமல் தடுத்தாள வேண்டாமா முடிகொண்டு உன் மார்பில் முகம் சாய்க்க வேண்டாமா முடிபோட்டு நம் சொந்தம் முடிவாக வேண்டாமா தடையேதும் இல்லாமல் தனித்தாள வேண்டாமா.....! ---தில்லானா தில்லானா----

ஹரி ஆனந்தசங்கரி 21,241 வாக்குகளால் அமோக வெற்றி

21 hours 45 minutes ago
கனடா தேர்தலில் வென்ற இலங்கை தமிழர்: யார் இந்த கெரி ஆனந்தசங்கரி? கனடா நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரான கெரி ஆனந்தசங்கரி 21,241 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக அந்நாட்டு எம்பியாகியுள்ளார் இலங்கை தமிழரான கெரி ஆனந்தசங்கரி. ஆளும் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட கெரி ஆனந்த சங்கரி, இந்த தேர்தலில் 62.3 சதவீத வாக்குகள் பெற்று வென்றுள்ளார். அவரை எதிர்த்து கன்சவேடிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட லெஸ்லின் லூயிஸ் மற்றும் கனேடிய தமிழரான என்.டி.பி கட்சி வேட்பாளர் காந்தரட்ணம் சாந்தகுமார் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கெரி ஆனந்தசங்கரி, 34.8 வீத வாக்குகளை பெற்று வெற்றியை தன்வசப்படுத்திக் கொண்டார். யார் இந்த கெரி ஆனந்தசங்கரி? இலங்கையின் மூத்த தமிழ் அரசியல்வாதியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரியின் இளைய புதல்வரே கெரி ஆனந்தசங்கரி. படத்தின் காப்புரிமைLENOVO TWITTER இலங்கையில் காணப்பட்ட யுத்த சூழ்நிலையை அடுத்து, தனது 13ஆவது வயதில் புலம்பெயர்ந்து அவர் கனடா சென்றார். கனடாவில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் வன்முறைகளை தீர்த்து வைக்கும் வகையில், கனடாவில் இளைஞர்கள் சேவை நிலையமொன்றை அவர் ஆரம்பித்துள்ளார். கனடாவில் வாழ்கின்ற தமிழ் இளைஞர்களிடம் காணப்படும் முரண்பாடுகளை தீர்ப்பதற்காக முன்னின்று செயற்படுபவராக கெரி ஆனந்தசங்கரி திகழ்கின்றார். கனடா தமிழ்ச் சங்கத்தின் செயற்பாடுகளிலும் அவர் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது, அத்துடன், கனேடிய தமிழ்க் காங்கிரஸ் அமைப்பின் வளர்ச்சிக்காகவும் அவர் முன்னின்று செயற்பட்டுள்ளார். கனடாவில் வழக்கறிஞராக செயற்பட்ட கெரி ஆனந்தசங்கரி, பின்னர் சிறந்த அரசியல்வாதியாகவும் பெயரெடுத்துள்ளார். படத்தின் காப்புரிமைTWITTER லிபரல் கட்சியின் வளர்ச்சிக்காக செயற்பட்டவர்களில் கெரி ஆனந்தசங்கரிக்கு பெரிய பங்களிப்பு உள்ளதாக கூறப்படுகின்றது. கனடாவில் இந்த முறை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி, நான்கு தமிழர்கள் போட்டியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் அரசியலில் தான்கொண்டுள்ள கொள்கையை தனது மகனும் கொண்டுள்ளதால் மகிழ்ச்சி அடைவதாக தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகமும், கெரி ஆனந்தசங்கரியின் தந்தையுமான வீரசிங்கம் ஆனந்தசங்கரியும் தெரிவித்தனர். பிபிசி தமிழுக்கு வழங்கிய செவ்வியிலேயே வீரசிங்கம் ஆனந்தசங்கரி இதனைக் குறிப்பிட்டார். தமிழ் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் கனேடிய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருப்பதால் பெருமிதம் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார். https://www.bbc.com/tamil/sri-lanka-50148789
Checked
Thu, 10/24/2019 - 05:48
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed