புதிய பதிவுகள்

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!

1 day 4 hours ago
படம் : வைரம் (1974) பாடியோர் : SPB & J ஜெயலலிதா வரிகள் : கண்ணதாசன் இசை : TR பாப்பா இரு மாங்கனி போல் இதழ் ஓரம் ஏங்குது மோகம் மணி மாளிகை போல் ஒரு தேகம் பாடுது ராகம் கண்மணி ராஜா பொங்குது நாளும் பார்த்தது போதும் ஒ ஒ காளைக்கு யோகம் மங்கள் மேளம் குங்குமக்கோலம் மணவறை மகிமை ஹஹ அதுவரை பொருமை . இரு மாங்கனி போல் இதழ் ஓரம் ஏங்குது மோகம் . திரை மூடும் மேடையிலே நாடகம் பார்த்தேன் அதில் ஓடும் ஜாடையிலே ஓடையையும் பார்த்தேன் சிரிப்பாள் என்னை மாணிக்கப்பதுமை அழைப்பதை கண்டேன் எதற்கோ உங்கள் கைகள் இரண்டும் துடிப்பதைக் கண்டேன் இன்றே நான் பார்க்கவா இல்லை நாள் பார்க்கவா ஓஓ அவசரம் என்ன . இரு மாங்கனி போல் இதழ் ஓரம் ஏங்குது மோகம் . இது காதல் பூஜை என்றால் ஆரத்தி எங்கே அதை காணும் வேண்டுமென்றால் அவளிடம் தந்தேன் கடைக்கண் பேசும் கனிமொழி யாவும் பாலாபிஷேகம் இடையெனும் பதுமை நடையெனும் தேரில் ஊர்வல கோலம் மாலை பொண்மாலையா இல்லை பூ மாலையா ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ கோவிலில் பார்த்தோம் . இரு மாங்கனி போல் இதழ் ஓரம் ஏங்குது மோகம் மணி மாளிகை போல் ஒரு தேகம் பாடுது ராகம் ஹொ ஹொ ஏங்குது மோகம் ஹா ஹா பாடுது ராகம் லா லா ஏங்குது மோகம் ம்ம் ம்ம் பாடுது ராகம்

யாழில் சைக்கிளை களவெடுத்துக்கொண்டு ஓடும் கள்வர்கள்!! cctv camera வில் சிக்கியும் நடவடிக்கை எடுக்காத பொலிசார்!! (காணொளி)

1 day 5 hours ago
சைக்கிள் களவெடுத்த கள்ளருடன் யாழ்ப்பாணப் பொலிசார் கூட்டுச் சேர்ந்துள்ளார்களா என சந்தேகம் தோன்றுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள். யாழ் பொஸ்போ பாடசாலைக்கு அருகில் இயங்கும் பொஸ்கோ முன் பள்ளியில் தனது பிள்ளையை ஏற்றுவதற்காக சென்ற குடும்பஸ்தர் தனது சைக்கிளை திருடர்களிடம் பறி கொடுத்துள்ளார். பூட்டி வைக்கப்பட்டிருந்த அந்த சைக்கிளை திருடர்கள் இலகுவாக திருடும் அந்தக் காட்சியே இங்கு காட்டப்பட்டுள்ளது. இச் சம்பவம் சில நாட்களுக்கு முன் நடந்துள்ளது. யாழ்ப்பாணப் பொலிசாருக்கு இது தொடர்பாக முறையிட்டும் குறித்த திருடர்கள் வந்த மோட்டார் சைக்கிள் தொடர்பான விபரங்களை இலக்கத்தகட்டு இலக்கத்துடன் தெரிவித்திருந்தும் பொலிசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரியவருகின்றது. திருடர்கள் பாவித்த குறித்த மோட்டர் சைக்களின் இலக்கத்துக்குரிய உரிமையாளர் Jeevanold regi rongadsan NO 7/2 CENTRAL EAST ROAD GURUNAGAR NP BHJ 5441 என பதிவுகளின் மூலம் தெரிந்துள்ளது. பொதுமக்கள் திருடனைப் பற்றிய விபரங்களை எடுத்திருந்தும் பொலிசார் இன்னும் இதற்கான நடவடிக்கையை எடுக்காதது ஏன் என பொதுமக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர். பல விடயங்களில் அதிரடி காட்டும் வடக்கு மாகாண ஆளுநர் இவ்வாறான திருடர்களுக்கு பொலிசார் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது தொடர்பாக ஆராய்வரா? http://ilakkiyainfo.com/சைக்கிளை-களவெடுத்துக்கொ/

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

1 day 5 hours ago
இது ஒரு விளையாட்டு போட்டி. இதில் ஏன் அரசியலை கலக்கிறீர்கள். இதில் யார் வெல்வார்கள் யார் தோற்பார்கள் என்ற அனுமானம் அந்த நாட்டின் ICC ODI தரவரிசை மற்றும் முன்னைய உலக கிண்ண போட்டிகளில் அவர்களின் performance கொண்டு மட்டுமே கணிக்கப்படவேண்டும். அதைவிடுத்து குருட்டுத்தனமா எல்லா ஸ்ரீலங்கன் மேட்சிலும் ஸ்ரீலங்காவே வெல்லுமென கணித்துவிட்டு அதுக்கு விளக்கம் வேறை!! மழையில்லாட்டி எப்பவோ சொறிலங்கா வீட்டை போயிருக்கும்?

‘அரசுக்கு மாமா வேலை செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்’: கூட்டமைப்பிடம் கோரிக்கை!

1 day 5 hours ago
அது மாமா வேலையல்ல; கல்முனையில் முஸ்லிம்கள் குழப்பம் செய்வதை கண்டித்துள்ளோம்: எம்.ஏ.சுமந்திரன்! அரசாங்கத்தின் வாக்குறுதிகளை எமது மக்கள் முன்னிலையில் சென்று கூறுவது மாமா வேலை அல்ல. விக்கினேஸ்வரனின் கீழ்த்தரமான வார்த்தை பிரயோகங்களுக்கு கூட்டமைப்பு செவிகொடுக்காது எனத் தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன். கல்முனை வடக்கு பிரதேசசபை விவாகரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு மாமா வேலை செய்கின்றது என வடக்கின் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பகிரங்கமாக விமர்சித்திருந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தமிழர்களின் உரிமை, அதை தடுக்க முஸ்லிம்களிற்கு எந்த உரிமையும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்போதுமே முன்னின்று செயற்பட்டு வருகின்றது. இன்றுவரை வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் பெற்றுக் கொண்டுள்ள தமது உரிமைகளுக்கு எமது தலையீடுகள் பிரதான காரணம் என்பதை மறந்துவிட கூடாது. விக்னேஸ்வரன் தனது அரசியல் சுயலாபங்களுக்காக எந்தளவு கீழ்மட்டத்தில் வீழ்ந்துள்ளார் என்பது நன்றாக வெளிப்பட்டுள்ளது. கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் முஸ்லிம் தலைமைகள் அனாவசியமாக தலையிட்டு குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாகவே நாம் கருதுகின்றோம். கல்முனை வடக்கு நிலத்தொடர்பு கொண்ட பிரதேசம். அதுமட்டும் அல்ல இது தமிழர்கள் வாழும் பகுதி. இதில் புதிதாக எல்லை நிர்ணயம் ஒன்றினை செய்ய வேண்டிய எந்தவித தேவையும் இல்லை. கல்முனை தெற்கு பிரதேச செயலகம் நிலத்தொடர்பு இல்லாததது. இதில் தான் எல்லை நிர்ணயங்கள் செய்தாக வேண்டும். இது அவர்களின் பிரச்சினை, இதனை தீர்க்க தெரிவுக்குழு அமைத்துக் கொள்வதும் நடவடிக்கை எடுப்பதும் அவர்களின் பிரச்சினை. ஆனால் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் அனாவசியமாக முஸ்லிம் பிரதிநிதிகள் தலையிட்டு தமிழர்களின் பிரச்சினைகளை குழப்புவது கண்டிக்கத்தக்கது. கல்முனை தெற்கு பிரதேச செயலகத்திற்கான உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு hமுஸ்லிம்கள் போராடுவதில் நியாயம் இருக்கிறது ஆனால் தமிழர்களுக்கு கொடுக்க வேண்டாம் என கூறுவதற்கு அவர்களு எந்த அதிகாரமும் இல்லை. இந்த விடயத்தில் முஸ்லிம் பிரதிநிதிகள் மத்தியில் நாம் கண்டிப்பாக தெரிவித்து வருகின்றோம். விரைவில் இந்த பிரச்சனையை தீர்க்க நடவடிக்கையெடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த வாரத்தில் இருந்து கணக்காய்வாளர் கல்முனை வடக்கு செயலகத்தில் தனது கடமைகளை ஆரம்பிப்பார்“ என்றார். ttp://www.pagetamil.com/61529/

ஈரானிய ஆயுத முறைமைகள் மீது அமெரிக்கா சைபர் தாக்குதல்

1 day 5 hours ago
கொஞ்ச காலத்துக்கு முன்புதான் stuxnet virus மூலம் ஈரானின் அணு உலை போன்றவற்றை சல்லடை போட்டவை அதே போல் தாக்குதல் மீண்டும் நடத்தபடாது என்று ஈரான் சும்மா இருந்து இருக்காது .

தமிழக அரசியல்..... "மீம்ஸ்" (பகிடிகள்)

1 day 7 hours ago
தம்பி... உங்க அப்பா கஸ்ரப்பட்டு சம்பாதித்த சொத்து எல்லாம். ஏலம் போகுது. முதல்ல... அதை போய் பார். இந்த கிறுக்கன் பேசுறத பார்த்தா... இன்னும் என்னல்லாம் ஏலத்துக்கு வரப்போகுதோ...

ஏர் கனடா செய்த வேலை.

1 day 7 hours ago
விமானத்தில் தூங்கிய பெண் – வெளியேறிய பணியாளர்கள்! விமானத்தில் தூங்கிய பெண் ஒருவரை தனியே விட்டு விட்டு விமான ஊழியர்கள் விமானத்திலிருந்து வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஃபானி ஆடம்ஸ் என்ற பெண்மணி கடந்த மாதம் ஏர் கனடா விமானத்தில் கியூபெக் சிட்டியில் இருந்து டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையம் வரை பயணம் செய்துள்ளார். வெறும் 90 நிமிடங்கள் கொண்ட இந்த பயணத்தினிடையே, டிஃபானி அயர்ந்து தூங்கியுள்ளார். அதன் பின்னர் அந்த விமானத்தில் நடந்த சம்பவமானது தமக்கு கவலை மற்றும் தூக்கமின்மையை தருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். டிஃபானியின் இந்த அதிரவைக்கும் அனுபவத்தை அவரது தோழி ஒருவர் ஏர் கனடாவின் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சம்பவத்தன்று அந்த விமானத்தில் பயணிகள் மிகவும் குறைவு என்பதால், பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே இருந்துள்ளன. இதனிடையே டிஃபானி ஆழ்ந்த தூக்கத்தில் விழுந்துள்ளார். திடீரென்று கண்விழித்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. குறித்த விமானத்தில் அப்போது அவர் மட்டுமே தனியாக இருந்துள்ளார். அங்கிருந்து வெளியேறும் நடவடிக்கைகளில் இறங்கிய அவர் விமானிகளின் இருக்கைக்கு சென்று ஒரு பிளாஷ் லைட் ஒன்றை எடுத்துள்ளார். அதன் வெளிச்சத்தில் முக்கிய கதவு வழியாக வெளியேற முயற்சித்துள்ளார். ஆனால் அங்கிருந்து தரையில் சென்று சேர படிகள் இல்லை. சுமார் 40 முதல் 50 அடி உயரத்தில் இருந்து குதிப்பது ஒன்றே வழி என கருதி இருந்த நிலையில், வேறு எவரேனும் உதவிக்கு வருவார்களா என அந்த பிளாஷ் லைட் வைத்து முயற்சித்துள்ளார். இவரது முயற்சி வீண்போகவில்லை. நிறுத்தப்பட்டிருந்த விமானத்தினுள் இருந்து வெளிச்சம் ஒன்று நடமாடுவதை தொலைவில் இருந்து பார்த்த ஊழியர் ஒருவர், டிஃபானியின் உதவிக்கு வந்துள்ளார். தொடர்ந்து ஏர் கனடா ஊழியர்களால் அவரது குடியிருப்புக்கு வாகனம் ஒன்றில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் டிஃபானி. மட்டுமின்றி, ஏர் கனடா நிர்வாகிகள் டிஃபானிக்கு தொலைபேசியில் அழைத்து மன்னிப்பும் கோரியுள்ளனர். மேலும், விமானத்தில் டிஃபானி மட்டும் தனியாக சிக்கியது எப்படி என்பது தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். http://athavannews.com/விமானத்தில்-தூங்கிய-பெண்/

தமிழ் அரசியல் கைதியொருவர் உயிரிழப்பு!

1 day 7 hours ago
தமிழ் அரசியல் கைதியொருவர் உயிரிழப்பு! கடந்த 14 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொழும்பு பொரளை, வனாத்துவில்லு சிறிசரஉயன வீட்டுத் தொகுதியை சேர்ந்த முத்தையா சகாதேவன் (62) என்ற தமிழ் அரசியல் கைதியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் கடந்த 2005ம் ஆண்டு குறித்த தமிழ் அரசியல் கைது செய்யப்பட்டிருந்தார். கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் இரண்டு வாரங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார். இந்தநிலையிலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/தமிழ்-அரசியல்-கைதியொருவர/

மட்டக்களப்பில் திடீர் தீ – நூற்றுக்கணக்கான பயன்தரு மரங்கள் எரிந்து நாசம்!

1 day 7 hours ago
மட்டக்களப்பில் திடீர் தீ – நூற்றுக்கணக்கான பயன்தரு மரங்கள் எரிந்து நாசம்! மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தென்னை மற்றும் பனைகள் கொண்ட தோப்பு ஒன்றில் ஏற்பட்ட தீயில் நூற்றுக்கணக்கான மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. குறித்த தீ மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் மேலும் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் பகுதியில் உள்ள தென்னை மற்றும் பனைகள் கொண்ட தோப்பு ஒன்றில் பாரிய தீ ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைக்கும் படையினர் அப்பகுதிக்கு விரைந்து தீயினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். இதன்போது 10 ஏக்கருக்கும் அதிகமான பகுதி தீயினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு பயன்தரு நிலையில் இருந்த 200இற்கும் மேற்பட்ட தென்னை மற்றும் பனை மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இது குறித்து மட்டக்களப்பு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தீ ஏற்பட்டமை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://athavannews.com/மட்டக்களப்பில்-திடீர்-தீ/

எத்தியோப்பியாவின் இராணுவத் தளபதி சுட்டுக்கொலை

1 day 7 hours ago
எத்தியோப்பியாவின் இராணுவத் தளபதி சுட்டுக்கொலை எத்தியோப்பியாவின் இராணுவத் தளபதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் அபி அஹமட் தெரிவித்துள்ளார். அத்தோடு அம்ஹாரா மாகாண ஆளுநரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அபிய் அஹமத் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் எத்தியோப்பிய பிரதமர், தலைமையிலான அரசுக்கு எதிராக நேற்று (சனிக்கிழமை) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பல வன்முறைச் சம்பவங்கள் பதிவாகின. இதைனையடுத்து சிலமணி நேரத்தில் எத்தியோப்பியா நாட்டின் இராணுவ தளபதி மேகொன்னேன், அவரது வீட்டில் மெய்காப்பாளரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அதேபோல அம்ஹாரா மாகாண ஆளுநரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை தொடர்ந்து அம்ஹாரா பகுதியில் இணையதள சேவை முற்றிலும் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு முன்னாள் இராணுவ தளபதியே காரணம் என ஆளும்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. எத்தியோப்பியா நாட்டின் பிரதமராக அபிய் அஹமத் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் பதவியேற்றார். இதனையடுத்து அங்குள்ள அம்ஹாரா உள்ளிட்ட சில பகுதிகளில் இன வன்முறை அதிகரித்தது. இதன் எதிரொலியாகவே நேற்றைய போராட்டம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/எத்தியோப்பியாவின்-இராணு/

‘அரசுக்கு மாமா வேலை செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்’: கூட்டமைப்பிடம் கோரிக்கை!

1 day 7 hours ago
விக்கினேஸ்வரனே... கூட்டமைப்பு மாமா வேலை பார்க்குது என்று சொல்லிய பின்... அதனை விட கேவலமான வார்த்தையை, தமிழ் அகராதியில் கண்டு பிடிக்க முடியவில்லை.

யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதி 

1 day 7 hours ago
எனது தாயார் தனது இறுதி மூச்சுக்களை சுவாசித்துக் கொண்டிருந்த நேரம் இந்த வீதியில் அமைந்திருந்த அவர் படுத்திருந்த கட்டிலிற்கு அடுத்ததாக அமைந்திருந்த ஆஸ்பத்திரியின் பகுதிகள் அரச படையினரால் குண்டு வைத்து தகர்க்கப் பட்டன. சில காலங்களுக்கு பின்னர் இவர்கள் இருந்திருந்தால் அந்த ஆஸ்பத்திரி தகர்ந்திருக்காது என நம்பியிருந்த வேறொரு நாட்டின் அரச படையினரின் கையாலாகாத் தனம் அந்த ஆஸ்பத்திரியின் மிகச் சிறந்த வைத்திய நிபுணர்களை மிகவும் கேவலமான முறையில் கொன்று போட்டது. இவையெல்லாம் வன்னியன் " மாடு , மரம் " எனும் வரையறைகளுக்குள் அடக்கக் கூடிய சமாச்சாரங்கள் அல்ல , மன்னிக்க வேண்டும்.
Checked
Tue, 06/25/2019 - 11:33
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed