Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. போராடுபவர்களுக்கு அமெரிக்காவிலிருந்து உதவிகள் வந்து கொண்டிருப்பதாக ரம் அறிவித்துள்ளார்.
  3. இரண்டாம் தடவை எழுதும்போது இந்தியா என தவறுதலாக எழுத்துப்பிழையாக எழுதிவிட்டேன். 79 வயது மூதாட்டியை கிழவி என அழைப்பது வழமைதானே. இப்போது இலங்கையில் 50 வயது நபரையே முதியவர், தாத்தா என எல்லாம் அழைக்கின்றார்கள்.
  4. ஆசிரியர் தவிர வேறெந்த அரச வேலைகளின் வெற்றிடங்கள் நிரப்பப்பட உள்ளன? எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றிய விபரத்தை வழங்குங்கள் பார்க்கலாம்.
  5. 'கொன்றுகொண்டே இருந்தனர்' - இரான் ஒடுக்குமுறை குறித்து நேரடி சாட்சியங்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம்,Public domain படக்குறிப்பு,டெஹ்ரானின் வடமேற்கில் உள்ள கஜ் சதுக்கத்தில் ரெஸா பஹ்லவியின் புகைப்படத்தை ஏந்தியுள்ள போராட்டக்காரர் ஒருவர் கட்டுரை தகவல் ரோஜா அசாதி மற்றும் சாரா நம்ஜூ பிபிசி பாரசீக சேவை 7 மணி நேரங்களுக்கு முன்னர் "அவர்கள் போராட்டக்காரர்களை நோக்கி நேரடியாக சுட்டனர், போராட்டக்காரர்கள் எங்கு நின்று கொண்டிருந்தார்களோ அங்கேயே விழுந்தனர், இதை நான் என் கண்களால் பார்த்தேன்." தான் பேசும்போது தன்னை கண்காணிக்கலாம் என்ற அச்சம் காரணமாக ஓமிட்டின் குரல் நடுங்குகிறது. அதிகாரிகளின் பழிவாங்கல் நடவடிக்கை குறித்த அச்சத்திற்கு நடுவே, இரான் மற்றும் உலகின் பிற பகுதிகளுக்கு இடையேயான மௌனத்தை உடைப்பதற்கு மிகப்பெரும் தைரியம் தேவைப்படுகிறது. ஓமிட்டின் பெயர் அவரின் பாதுகாப்பு காரணமாக மாற்றப்பட்டுள்ளது. இரானில் மோசமாகிவரும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக அவர் கடந்த சில தினங்களாக தெற்கு இரானில் உள்ள சிறுநகரத்தில் தெருக்களில் இறங்கி போராடிவருகிறார். தன்னுடைய நகரத்தில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிகளை கொண்டு ஆயுதமற்ற போராட்டக்காரர்களை சுட்டதாக அவர் தெரிவித்தார். "மிருகத்தனமான அரசுக்கு எதிராக நாங்கள் வெறுங்கைகளுடன் சண்டையிடுகிறோம்," என அவர் தெரிவித்தார். ரெஸா பஹ்லவியின் அழைப்பு கடந்த வாரம் இரான் முழுதும் நடைபெற்ற பரவலான போராட்டங்களில் பாதுகாப்புப் படையினரால் இதேபோன்ற ஒடுக்குமுறைகள் நிகழ்ந்தது குறித்த தகவல்கள் பிபிசிக்கு கிடைத்துள்ளன. போராட்டம் ஆரம்பித்ததிலிருந்து இணைய வசதி அதிகாரிகளால் துண்டிக்கப்பட்டதால் இரானிலிருந்து செய்தி சேகரிப்பது முன்னெப்போதையும் விட மிகவும் கடினமாகியுள்ளது. இரானுக்குள் இருந்து செய்தி சேகரிக்க பிபிசி பாரசீக சேவைக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இரானில் மிகப்பெரிய தேசியளவிலான போராட்டங்களில் ஒன்று கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. போராட்டங்கள் ஆரம்பித்த 12-ஆம் நாள் இரவு அது. 1979-ஆம் ஆண்டு நிகழ்ந்த இஸ்லாமிய புரட்சியில் ஆட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஷா-வின் (மன்னருக்குரிய பட்டம்) நாடு கடத்தப்பட்ட மகனான ரெஸா பஹ்லவியின் அழைப்புக்குப் பிறகு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பலரும் போராட்டங்களில் இணைந்ததாக தோன்றுகிறது. அதற்கடுத்த நாள் இரானின் அதிஉயர் தலைவர் காமனெயி, "இஸ்லாமிய குடியரசு பின்வாங்காது" எனத் தெரிவித்தார். அதன்பின், அவரிடமிருந்து பாதுகாப்புப் படையினர் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை உத்தரவுகளை பெற்றதைத் தொடர்ந்து மோசமான படுகொலைகள் நிகழ்ந்ததாக தோன்றுகிறது. பட மூலாதாரம்,Reuters அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இப்பிரச்னையை தூண்டிவிடுவதாக தெரிவித்துள்ள இரானிய அதிகாரிகள், "பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு" கண்டனம் தெரிவித்துள்ளதாக, அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. "தீர்ப்பு நாள் போன்று இருந்தது" கடந்த வியாழக்கிழமை "தீர்ப்பு நாள்" போன்று இருந்ததாக டெஹ்ரானை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தெரிவித்தார். "நீங்கள் நம்பமுடியாத வகையிலான, டெஹ்ரானின் தொலைதூர பகுதிகளில் கூட போராட்டக்காரர்கள் திரண்டனர்," என அவர் தெரிவித்தார். "ஆனால் வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து கொன்று கொண்டே இருந்தனர். அதை என் கண்களால் பார்த்தபோது என்னுடைய மன உறுதி முற்றிலும் குலைந்துவிட்டது. அந்த வெள்ளிக்கிழமை ஒரு குருதி தோய்ந்த நாள்." வெள்ளிக்கிழமை நிகழ்ந்த கொலைகளுக்குப் பிறகு மக்கள் வெளியே செல்ல அஞ்சுவதாக தெரிவித்த அவர், தற்போது அவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள தெருக்கள் மற்றும் தங்கள் வீடுகளிலிருந்து முழக்கமிடுவதாக கூறினார். போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் தெருக்களை சூழ்ந்துகொண்டதால் டெஹ்ரான் அப்போது போராட்டக்களமாக இருந்ததாக அவர் தெரிவித்தார். ஆனால், "போரில் இரு தரப்பிலும் ஆயுதங்கள் இருக்கும். ஆனால் இங்கு முழக்கங்களை மட்டுமே இடும் மக்கள் கொல்லப்பட்டனர். இது ஒரு தரப்பில் மட்டும் நடக்கும் போர்." எனவும் அவர் கூறினார். பட மூலாதாரம்,AFP via Getty Images டெஹ்ரானுக்கு சற்று மேற்கே உள்ள ஃபர்டிஸ் எனும் நகரத்தைச் சேர்ந்த நேரடி சாட்சியங்கள் கூறுகையில், தெருக்களில் காவல்துறையினர் பல மணிநேரங்களாக இல்லாத நிலையிலும், இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் கீழ் செயல்படும் துணை ராணுவமான பசிஜ் படையினர் திடீரென போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தனர். நேரடி சாட்சியங்களின் கூற்றுப்படி, சீருடை அணிந்து மோட்டார் சைக்கிள்களில் வலம்வந்த படையினர், போராட்டக்காரர்களை நோக்கி சுட்டனர். குறுகிய தெருக்களுக்கு உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத கார்களில் வந்தவர்கள், போராட்டங்களில் ஈடுபடாத குடியிருப்புவாசிகளை நோக்கி சுட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். "ஒவ்வொரு குறுகிய தெருவிலும் இரண்டு அல்லது மூன்று நபர்கள் கொல்லப்பட்டனர்," என நேரடி சாட்சியமான ஒருவர் குற்றம் சாட்டினார். பிபிசி பாரசீக சேவையிடம் பேசியவர்கள் இரானுக்குள் நடப்பவை வெளியுலகம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு இருப்பதாகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து சர்வதேச ஊடகம் கூறும் எண்ணிக்கை தங்களின் சொந்த மதிப்பீடுகளின் ஒரு பகுதியையே பிரதிபலிப்பதாகவும் தெரிவித்தனர். பட மூலாதாரம்,Eyewitness image படக்குறிப்பு,வியாழக்கிழமை வெளியான காணொளியில் வடக்கு இரானில் உள்ள பபோலில் பெருவாரியான போராட்டக்காரர்கள் திரண்டிருப்பதை காட்டுகிறது. இறந்தவர்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை சர்வதேச செய்தி ஊடகங்கள் அந்நாட்டுக்கு உள்ளேயிருந்து சுதந்திரமாக இயங்க அனுமதிக்கப்படவில்லை, எனவே அவை நாட்டுக்கு வெளியே இருந்து இயங்கும் இரானிய மனித உரிமை குழுக்கள் தரும் தகவல்களையே பெரிதும் சார்ந்துள்ளன. கடந்த திங்கட்கிழமை நார்வேயை தளமாக கொண்டு செயல்பட்டு வரும் இரான் மனித உரிமைகள் அமைப்பு (IHRNGO) இரானில் குறைந்தது 648 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர்களுள் 9 பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரிவித்துள்ளது. சில உள்ளூர் வட்டாரங்கள் மற்றும் நேரடி சாட்சியங்கள் கூறும் தகவல்களின்படி, பல்வேறு நகரங்களில் அதிகளவிலான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதாக கூறுகின்றனர். அதன்படி, இந்த எண்ணிக்கை பல நூறு பேரிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வரை இருக்கலாம். இந்த எண்ணிக்கையை பிபிசியால் தற்போதைக்கு சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை. இதுவரை எத்தனை போராட்டக்காரர்கள் இறந்தார்கள் என்பது குறித்த அதிகாரபூர்வ அல்லது வெளிப்படையான புள்ளிவிவரங்களை இரானிய அதிகாரிகள் வெளியிடவில்லை. எனினும், இந்தப் போராட்டங்களில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 100 பேர் கொல்லப்பட்டதாக இரான் ஊடகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்புப் படை "கலவரக்காரர்கள்" என அழைக்கும் அந்த போராட்டக்காரர்கள் பல்வேறு நகரங்களில் உள்ள பல மசூதிகள் மற்றும் வங்கிகளுக்கு தீ வைத்ததாக தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,Eyewitness image படக்குறிப்பு,வியாழக்கிழமை வெளியான புகைப்படத்தில் மேற்கு இரானில் உள்ள கோராமாபாத்தில் போராட்டக்காரர் ஒருவர் 1979 இரானிய புரட்சிக்கு முன்பாக இருந்த கொடியை ஏந்தியுள்ளார் பிபிசி பாரசீக சேவையின் உண்மை சரிபார்ப்பு குழுவால் சரிபார்க்கப்பட்ட காணொளிகள், போராட்டங்களின்போது வெவ்வேறு பகுதிகளில் காவல்துறை வாகனங்கள் மற்றும் சில அரசு கட்டடங்களுக்கு தீ வைக்கப்படுவதைக் காட்டுகின்றன. பிபிசி பாரசீக சேவையிடம் பேசிய சாட்சியங்கள் மற்றும் காணொளிகள் ஆகியவை இரானின் பெரிய நகரங்களான டெஹ்ரான் மற்றும் அதற்கு அருகிலுள்ள கராஜ், வடக்கில் ரஷ்த், வடகிழக்கில் மஷத், தெற்கில் ஷிராஸ் ஆகிய நகரங்களைச் சேர்ந்தவை. இந்த நகரங்களுக்கு ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையத் தொடர்பு மூலம் அதற்கான வசதி கிடைத்துள்ளது. போராட்டங்களின் ஆரம்பத்தில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட சிறுநகரங்கள் குறித்த தகவல்கள், அப்பகுதிகளில் ஸ்டார்லிங்க் இணையவசதி மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளதால் அரிதாகவே கிடைக்கப் பெற்றுள்ளன. ஆனால், கிடைத்துள்ள சாட்சியங்களின் அளவு, நிலைத்தன்மை மற்றும் ஒத்துப்போதல் ஆகியவற்றின்படி பல்வேறு நகரங்களில் ஒடுக்குமுறை மற்றும் பரவலாக கொடிய வன்முறை கட்டவிழ்க்கப்பட்டதன் தீவிரத்தைக் காட்டுகின்றன. மருத்துவமனை பணியாளர்கள் கூறுவது என்ன? பிபிசியிடம் பேசிய செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள், தாங்கள் அதிகளவிலான சடலங்கள் மற்றும் காயமடைந்தவர்களை கண்டதாக தெரிவித்தனர். பல நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் காயம்பட்டவர்களால் நிரம்பி வழிவதாகவும், பலருக்கும் குறிப்பாக தலை மற்றும் கண்களில் படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை என்றும் தெரிவித்தனர். சடலங்கள் "ஒன்றின் மேல் ஒன்றாக குவிக்கப்பட்டதாக" கூறிய நேரடி சாட்சியங்கள், அவை குடும்பங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை எனத் தெரிவித்தனர். பட மூலாதாரம்,Eyewitness image / Reuters படக்குறிப்பு,வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட காணொளி ஒன்று, டெஹ்ரானில் கார்களுக்கு தீ வைக்கப்பட்டதை காட்டுகிறது. செயற்பாட்டாளர் ஒருவரால் நடத்தப்படும் டெலிகிராம் சேனலான வாஹித் ஆன்லனில் ஞாயிற்றுக்கிழமை வெளியான வன்முறை தொடர்பான காணொளிகளில் டெஹ்ரானின் காஹ்ரிஸாக் தடயவியல் மருத்துவ மையத்தில் அதிகளவிலான சடலங்கள் இருப்பதையும் பல குடும்பங்கள் துக்கத்துடனும் சடலங்களை அடையாளம் காண்பதிலும் ஈடுபட்டிருப்பதை பார்க்க முடிந்தது. காஹ்ரிஸாக்கிலிருந்து எடுக்கப்பட்டதாக தோன்றும் வீடியோக்களில் ஒன்றில், உறவினர்கள் அங்கு வைக்கப்பட்டுள்ள திரையில் காட்டப்படும் அடையாளம் தெரியாத உடல்களின் புகைப்படங்களை பார்ப்பதைக் காட்டுகின்றன. கருப்புப் பைகளில் பல சடலங்கள் அங்கு வைக்கப்பட்டிருப்பதையும் அதற்கு வெளியே உள்ள தெருவில் சடலம் இருப்பதையும் பார்க்க முடிந்தது, அவற்றில் சில சடலங்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒரு காணொளி சேமிப்பு அறை ஒன்றில் பல உடல்கள் இருப்பதையும் மற்றொரு காணொளி டிரக் ஒன்றிலிருந்து இறந்தவர்களின் உடல்களை சிலர் வெளியே எடுப்பதையும் காட்டுகின்றன. மஷத்தில் உள்ள கல்லறை ஒன்றில் பணிபுரியும் ஒருவர் கூறுகையில், வெள்ளிக்கிழமை காலை சூரிய உதயத்திற்கு முன்பாக 180 முதல் 200 வரையிலான உடல்கள் தலையில் தீவிரமான காயங்களுடன் கொண்டு வரப்பட்டு உடனடியாக அடக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்தார். ரஷ்த் பகுதியைச் சேர்ந்த ஒருவர் பிபிசி பாரசீக சேவையிடம் கூறுகையில், போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேரின் உடல்கள் வியாழக்கிழமை அந்நகரில் உள்ள மருத்துவமனையின் பிணவறைக்கு மாற்றப்பட்டதாக தெரிவித்தார். குடும்பங்களிடம் உடல்களை ஒப்படைப்பதற்கு முன்பாக "தோட்டாக்களுக்கான கட்டணத்தை" தருமாறு அவர்களிடம் பாதுகாப்புப் படையினர் கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், கிழக்கு டெஹ்ரானில் உள்ள மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவ பணியாளர் ஒருவர் பிபிசி பாரசீக சேவையிடம் கூறுகையில், கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் சுமார் 40 உடல்கள் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்தார். அந்த பணியாளரின் அடையாளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு மருத்துவமனையின் பெயர் வெளியிடப்படவில்லை. ஐநா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், "போராட்டக்காரர்களுக்கு எதிராக சமீப நாட்களாக உயிரிழப்புகள் மற்றும் காயங்களை ஏற்படுத்தும் வகையிலான வன்முறை மற்றும் அதிகப்படியான பலத்தைப் பயன்படுத்துதல் குறித்து வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன." என்றார். "உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைத் தாண்டி, பாதுகாப்புப் படையினர் கடுமையான பலத்தை பயன்படுத்தியது கவலைக்குரியது என நான் வலியுறுத்த விரும்புகிறேன்," என இரானில் மனித உரிமைகள் சார்ந்து தற்போது நிலவும் சூழல் குறித்து பிபிசி பாரசீக சேவையிடம் ஐநா சிறப்பு அறிக்கையாளர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c86v18q2l16o
  6. ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ணம்: குழு பி இல் பங்களாதேஷ், இந்தியா, நியூஸிலாந்து, ஐக்கிய அமெரிக்கா Published By: Vishnu 13 Jan, 2026 | 09:28 PM (நெவில் அன்தனி) 16ஆவது 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண அத்தியாயத்தில் மிகவும் வெற்றிகரமான அணியாகத் திகழும் இந்தியாவுடன் 2020 சம்பியன் பங்களாதேஷ், நியூஸிலாந்து, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் பி குழுவில் மோதவுள்ளன. 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்தில் ஐந்து தடவைகள் உலக சம்பியனான இந்தியா, இந்த வயதுப் பிரிவில் மிகவும் பலசாலியாக வருணிக்கப்படுகிறது. கடந்த ஐந்து அத்தியாயங்களில் தொடர்ச்சியாக இறுதிப் போட்டியில் விளையாடிய இந்தியா, 2024இல் அவுஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது. 2020 இறுதிப் போட்டியில் மோதிக்கொண்ட இந்தியாவும் பங்களாதேஷும் இந்த வருடம் ஜனவரி 17ஆம் திகதி பி குழுவுக்கான போட்டியில் சந்திக்கவுள்ளன. பி குழு போட்டிகள் யாவும் ஸிம்பாப்வேயில் நடைபெறும். பங்களாதேஷ் தனது பத்தாவது முயற்சியில் முதல் தடவையாக அரை இறுதிக்கு முன்னேறி இருந்த பங்களாதேஷ், 2016ஆம் ஆண்டு 3ஆம் இடத்தைப் பெற்றது. நான்கு வருடங்கள் கழித்து இலங்கையின் முன்னாள் வீரர் நவீட் நவாஸின் பயிற்றுவிப்பில் முதல் தடவையாக உலகக் கிண்ணத்தை பங்களாதேஷ் ஸ்பரிசித்தது. 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணிக்கு நவீட் நவாஸ் தொடர்ந்து பயிற்சி அளித்து வருகின்றார். சம்பியனான அந்த அணியில் இடம்பெற்ற மஹ்முதுல் ஹசன் ஜோய், ஷொரிபுல் இஸ்லாம், தௌஹித் ஹிர்தோய் உட்பட பல வீரர்கள் தற்போதைய பங்களாதேஷின் சிரேஷ்ட அணியில் இடம்பெறுகின்றனர். இந்த வருடம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் அரை இறுதிப் போடடிவரை முன்னேறிய பங்களாதேஷ் அணிக்கு அஸிஸ்உல் ஹக்கிம் தமிம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் துடுப்பாட்டத்தில் ஸவாத் அப்ராரும் பந்துவீச்சில் ஷாரியார் அஹ்மத்தும் திறமையாக செயல்பட்டிருந்தனர். இந்தியா 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட்டில் 6ஆவது தடவையாக உலக சம்பியன் பட்டத்தை சுவீகரிக்கும் கங்கணத்துடன் இந்திய இளையோர் அணி களம் இறங்கவுள்ளது. எதிர்கால உலக கிரிக்கெட் அரங்கில் உயரிய இடத்தை அடையக்கூடியவர் என இந்திய கிரிக்கெட் விமர்சகர்களால் வருணிக்கப்படும் இளம் துடுப்பாட்ட நட்சத்திரம் வைபவ் சூரியவன்ஷி முழு கிரிக்கெட் உலகினாலும் கவரப்படுவார் என்பதில் சந்தேகம் இல்லை. இங்கிலாந்துக்கு எதிரான இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் சூரியவன்ஷி 78 பந்துகளில் 143 ஓட்டங்களை விளாசி இருந்தார். ஐபிஎல் ரி20 கிரிக்கெட் போட்டிகளிலும் இளம் வயதில் அபரிமிதமாக பிரகாசித்து அனைவரையும் பிரமிக்க வைத்த சூரியவன்ஷி, இந்த உலகக் கிண்ணத்தில் அசத்துவார் என்பதில் சந்தேகம் இல்லை. அவர் 2028 உலகக் கிண்ணத்தில் விளையாடினாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை. ஏனெனில் அவர் இப்போதுதான் 15 வயதை நெருங்கிக்கொண்டிருக்கிறார். அவரைவிட விக்கெட் காப்பாளர் அபிக்யான் குண்டு, ஆரோன் ஜோர்ஜ், விஹான் மனோஜ் மல்ஹோத்ரா ஆகியோர் துடுப்பாட்டத்திலும் தமிழகத்தைச் செர்ந்த தீப்பேஷ் தேவேந்திரன், கௌஷிக் சௌஹான் ஆகியோர் பந்துவீச்சிலும் அசத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது. நியூஸிலாந்து 28 வதுடங்களுக்கு முன்னர் உப சம்பியனான நியூஸிலாந்து, ஒரு கட்டத்தில் 3 தொடர்ச்சியான தடவைகள் அரை இறுதிகளில் விளையாடி இருந்தது. கடைசியாக ஐந்து வருடங்களுக்கு முன்னரும் நியூஸிலாந்து அரை இறுதிவரை முன்னேறி இருந்தது. தென் ஆபிரிக்காவில் 2020 இல் நடைபெற்ற உலகக் கிண்ண அரை இறுதியில் பங்களாதேஷிடம் நியூஸிலாந்து தோல்வி அடைந்தது. அதற்கு முன்னர் இரண்டு தடவைகள் இந்தியாவிடம் தோல்வி அடைந்தது. நியூஸிலாந்தின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் அன்டன் டேவ்சிக் பயிற்றுவிக்கும் இளம் நியூஸிலாந்து அணியில் முதல் தர கிரிக்கெட் விளையாடிவரும் பல வீரர்கள் இடம்பெறுகின்றனர். ஒட்டாகோ அணிக்காக விளையாடிவரும் இளையோர் அணித் தலைவர் டொம் ஜோன்ஸ், தனது அறிமுக முதல்தர போட்டியில் சதம் குவித்திருந்தார். அவரை விட நொதர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணியில் பிரகாசித்தவரும் ஸ்னேஹித் ரெட்டி, ஆரியன் மான் ஆகிய இருவரும் நியூஸிலாந்து அணிக்கு முக்கிய பங்காற்றுவர் என நம்பப்படுகிறது. ஐக்கிய அமெரிக்கா 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட்டில் நான்காவது தடவையாக ஐக்கிய அமெரிக்கா பங்குபற்றுகின்றது. அமெரிக்காஸ் குவாலிபயர்ஸ் என்றழைக்கப்படும் அமெரிக்காக்களுக்கான தகுதிகாண் சுற்றில் வெற்றிபெற்றதன் மூலம் இந்த வருட உலகக் கிண்ணத்தில் அமெரிக்கா பங்குபற்ற தகுதிபெற்றது. தகுதிகாண் சுற்றில் 6 போட்டிகளிலும் இலகுவாக வெற்றியீட்டிய அமெரிக்கா சார்பாக பல வீரர்கள் திறமையை வெளிப்படுத்தினர். அம்ரிந்தர் கில் குவித்த சதத்தின் உதவியுடன் பேர்மூடாவை வெற்றிகொண்ட அமெரிக்கா, சஹிர் பாட்டியா பதிவுசெய்த 5 விக்கெட் குவியலின் உதவியுடன் ஆர்ஜன்டீனாவை 34 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தியது. ஐக்கிய அமெரிக்காவுக்கு இந்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இலகுவாக அமையாது. ஆனால், அமெரிக்காவின் இளம் வீரர்கள் தேவையான அனுபவங்களை இப் போட்டிகள் மூலம் பெறுவார்கள் என்பது நிச்சயம். ஐக்கிய அமெரிக்க அணிக்கு உத்கார்ஷ் ஸ்ரீவஸ்தாவா தலைவராக விளையாடவுள்ளார். போட்டி விபரங்கள் ஜனவரி 15: ஐக்கிய அமெரிக்கா எதிர் இந்தியா ஜனவரி: 17: இந்தியா எதிர் பங்களாதேஷ் ஜனவரி 18: நியூஸிலாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா ஜனவரி 20: பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து ஜனவரி 23: பங்களாதேஷ் எதிர் ஐக்கிய அமெரிக்கா ஜனவரி 24: இந்தியா எதிர் நியூஸிலாந்து (குறிப்பு பங்களாதேஷ் - ஐக்கிய அமெரிக்கா போட்டி மாத்திரம் ஹராரே டக்காஷிங்கா விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறும். மற்றைய போட்டிகள் யாவும் புலாவாயோ குவீன்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறும்) https://www.virakesari.lk/article/235963
  7. யாழ். வரும் ஜனாதிபதி ஊர்காவற்துறை கடற்கோட்டை விவகாரத்துக்கு தீர்வு தர வேண்டும் - அன்னாராசா வேண்டுகோள்! Published By: Vishnu 13 Jan, 2026 | 07:15 PM பொங்கல் பண்டிகைக்காக யாழ்ப்பாணம் வருகின்ற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, ஊர்காவல்துறையில் உள்ள சுற்றுலா மையமான கடற்கோட்டை விவகாரத்திற்கு தீர்வு தர வேண்டும் என ஊர்காவற்துறை பிரதேச சபையின் தவிசாளர் அ.அன்னராசா வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்றையதினம் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஊர்காவற்துறை கடற்கோட்டை என்பது ஒரு பாரம்பரிய, பிரபல சுற்றுலாத்தலமாக காணப்படுகின்றது. இது ஊர்காவல்துறை பிரதேச சபையின் ஆளுகைக்குள் காணப்படுகின்றது. இது கடற்படையினரின் கட்டுப்பட்டில் உள்ளது. இதனை தொல்லியல் திணைக்களத்தினர் மற்றும் கடற்படையினர் பயன்படுத்தி வருகின்றனர். கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இந்த கடற்கோட்டை இருப்பது எமக்கு ஆட்சேபனை அல்ல. அல்லது தொல்லியல் திணைக்களத்தின் பராமரிப்பில் கடற்கோட்டை இருப்பது எமக்கு பிரச்சனை இல்லை. இந்த கடற்கோட்டைக்கு ஊர்காவற்துறை துறைமுகத்தில் இருந்து 4 நிமிடங்களில் செல்லக்கூடிய நிலை காணப்படுகிறது. எனவே எமது ஆளுகைக்குள் உள்ள துறைமுகத்திலிருந்து, எமது ஆளுகைக்குள் உள்ள கடற்கோட்டையை சென்று பார்வையிடுவதற்கு ஜனாதிபதி ஆவன செய்ய வேண்டும். சுற்றுலா பயணிகள் எமது பாரம்பரிய துறைமுகங்களில் ஒன்றான ஊர்காவற்துறை துறைமுகத்தில் இருந்து கடற்கோட்டைக்கு சென்று வருவதன் ஊடாக பிரதேச சபையின் வருமானம் அதிகரிக்கும். அத்துடன் எமது பகுதிக்கு சுற்றுலாவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடிய சந்தர்ப்பமும் காணப்படுகின்றது. சுற்றுலா பயணிகள் எமது பிரதேசத்திற்கு வருவதன் ஊடாக எமது பிரதேசம் வலுப்பெறும், பிரதேசம் வலுப்பெறும்போது மக்களின் வாழ்வாதாரம் அதிகரிக்கும், மக்களின் வாழ்வாதாரம் அதிகரிக்கும் போது பிரதேச சபையின் வருமானம் அதிகரிக்கும். எமது பிரதேச சபையானது வருமானம் குறைந்த ஒரு சபையாக காணப்படுகின்றது. எனவே சுற்றுலா துறையின் ஊடாக வருமானம் அதிகரிக்க கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே ஊர்காவல்துறை துறைமுகத்திலிருந்து ஊர்காவற்துறை கடற்கோட்டைக்கு மக்கள் சென்று பார்வையிடுவதற்கு வழி வகுக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/235957
  8. சீனாவுடன் போர்: 120 இந்திய வீரர்கள் பின்வாங்க மறுத்தபோது நடந்தது என்ன? பட மூலாதாரம்,120 Bahadur team படக்குறிப்பு,மேஜர் ஷைத்தான் சிங்காக நடிகர் ஃபர்ஹான் அக்தர் கட்டுரை தகவல் கீதா பாண்டே பிபிசி செய்தியாளர் 13 ஜனவரி 2026, 05:42 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் சமீபத்திய பாலிவுட் திரைப்படம் ஒன்று, 1962-ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடந்த போரில் மறக்கப்பட்ட ஒரு போர்க்களத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சியுள்ளது. '120 பகதூர்' என்று இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்தி மொழியில் 'பகதூர்' என்றால் 'வீரர்கள்' என்று பொருள். லடாக்கின் கடும் குளிரான இமயமலைப் பகுதியில் உள்ள 'ரெசாங் லா' கணவாயைப் பாதுகாக்க தீரத்துடன் போராடிய இந்திய வீரர்களின் கதையை இத்திரைப்படம் சொல்கிறது. மேஜர் ஷைத்தான் சிங்காக ஃபர்ஹான் அக்தர் நடித்த இந்தத் திரைப்படம், வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும், இந்தியா தோற்ற ஒரு போரில் 'ஒரே ஒரு நம்பிக்கையாக' விவரிக்கப்படும் ஒரு போர்க்களத்தைப் பற்றிப் பேசியதில் வெற்றி பெற்றுள்ளது. "இக்கதையைச் சொல்வது மிகவும் முக்கியம் என்று நாங்கள் கருதினோம், நிஜ வாழ்வில் இந்தப் போராட்டத்தை எதிர்கொண்ட வீரர்களை நாங்கள் கௌரவிக்க விரும்பினோம்," என்று பிபிசியிடம் தெரிவித்த வசனகர்த்தா சுமித் அரோரா, "நாங்கள் சினிமா சார்ந்து சில சுதந்திரங்களை எடுத்துக்கொண்டாலும், எங்கள் திரைப்படம் வரலாற்று உண்மைக்கு மிகவும் நெருக்கமாகவே உள்ளது"என்று கூறினார். எல்லை பதற்றங்களால் இந்தியா மற்றும் சீனா இடையிலான உறவு மோசமாக மாறியாததாலும், தகராறுகளைத் தீர்ப்பதற்கான கூட்டங்கள் தோல்வியடைந்ததாலும் இந்தப் போர் மூண்டது. 1959-ல் திபெத்தில் இருந்து தப்பி வந்த தலாய் லாமாவுக்கு இந்தியா தஞ்சம் அளித்தது குறித்து சீனா அதிருப்தியில் இருந்தது. சீனா இந்தியா மீது தாக்குதல் நடத்தியதில் ஒரு மாத கால போர் தொடங்கியது. இது ஒரு "தற்காப்பு எதிர்-தாக்குதல்" என்று கூறிய சீனா, இந்தியா "சீன நிலப்பரப்பை ஆக்கிரமித்து, சீன வான்வெளிக்குள் அத்துமீறி நுழைவதாக" குற்றம் சாட்டியது. ஒரு மாதத்திற்குப் பிறகு சீனா ஒருதலைப்பட்சமாகப் போர்நிறுத்தத்தை அறிவித்து, படைகளைத் திரும்பப் பெற்று, போர்க் கைதிகளையும் விடுவித்தது. அப்போது, இந்தியா சுமார் 7,000 வீரர்களையும் 38,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பையும் இழந்திருந்தது. இரு நாடுகளும் பின்னர் ஆறுகள், ஏரிகள் மற்றும் பனிச்சிகரங்களால் குறிக்கப்பட்ட 3,440 கிமீ (2,100 மைல்) நீளமுள்ள தெளிவற்ற 'லைன் ஆப்ஃ கன்ட்ரோல் ' (LAC) மூலம் பிரிக்கப்பட்டன. மோதல் நடந்த பகுதிகளில் இருந்த அனைத்து இந்திய நிலைகளையும் தங்கள் படைகள் அழித்ததாகக் கூறுவதைத் தாண்டி, இந்தப் போர் குறித்து சீனா அதிகாரப்பூர்வமாக அதிகம் எதுவும் கூறவில்லை. அதேபோல், ரெசாங் லா போர் குறித்து ஒருபோதும் கருத்து தெரிவிக்கவில்லை. கடல் மட்டத்திலிருந்து 16,000 அடிக்கும் (4,900 மீ) அதிகமான உயரத்தில் நடந்த இந்தப் போர், சீனா வென்ற ஒரு பெரிய போரின் ஒரு பகுதியாகும். இருப்பினும், இந்தியாவில் இது ஒரு "காவியப் போர்" என்றும் "இறுதிவரைப் போராடிய மிகச்சிறந்த போர்களில் ஒன்று" என்றும் நினைவுகூரப்படுகிறது. இந்தப் போர் பல புத்தகங்கள் மற்றும் திரைப்படங்களுக்கும் உத்வேகமாக அமைந்துள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,1962 ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான இந்திய வீரர்கள் சீனாவுடனான போருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தப் போர் நவம்பர் 18-ஆம் தேதி அதிகாலை 3:30 மணி முதல் காலை 8:15 மணி வரை நடைபெற்றது. இந்தக் கணவாய் சுஷுல் விமானத் தளத்திற்கு மிக அருகில் இருந்தது. "அந்தப் பகுதியை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கும் சாலை வசதிகள் இல்லாத அக்காலத்தில், சுஷுல் விமானத் தளமே முதன்மையான மையப்புள்ளியாக விளங்கியது," என்கிறார் யாதவ். 120 வீரர்களில் ஐந்து பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். போரில் வீரமரணம் அடைந்த மேஜர் சிங், அவரது துணிச்சலுக்காகவும் தலைமைப் பண்புக்காகவும் இந்தியாவின் மிக உயரிய ராணுவ விருதான 'பரம வீர் சக்ரா' வழங்கி கௌரவிக்கப்பட்டார். 12 வீரர்களுக்கு வீரதீர விருதுகள் வழங்கப்பட்டன. ஆனால், உயிர் பிழைத்தவர்கள் தங்கள் மேலதிகாரிகளிடம் அந்தத் துணிச்சலான இறுதிப் போர் குறித்துக் கூறியபோது, "துரதிர்ஷ்டவசமாக, யாரும் அவர்களை நம்பவில்லை," என்கிறார் முன்னாள் கடற்படை அதிகாரியும், 2021-ல் வெளியான 'பேட்டில் ஆஃப் ரெசாங் லா' புத்தகத்தின் ஆசிரியருமான குல்பிரீத் யாதவ். "அப்போது மன உறுதி குலைந்திருந்தது, நாங்கள் போரில் மிக மோசமாகத் தோற்றிருந்தோம், ஒரு பிரிகேடியர் உட்பட ஆயிரக்கணக்கான வீரர்கள் சீனாவால் போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்தனர். எனவே, இவ்வளவு வீரமிக்க ஒரு இறுதிப் போராட்டம் சாத்தியம் தான் என்று யாரும் நம்பவில்லை," எனவும் அவர் கூறுகிறார். ரெசாங் லாவில் பணியமர்த்தப்பட்டிருந்த வீரர்கள் போர்க்களத்திலிருந்து ஓடிவிட்டார்கள் அல்லது போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருக்கலாம் என்றே பரவலாக நம்பப்பட்டது. "போர் முடிந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஒரு ஆடு மேய்ப்பவர் தற்செயலாக அங்குள்ள சிதைந்த பதுங்கு குழிகள், வெற்றுத் தோட்டாக்கள் மற்றும் பனியில் உறைந்திருந்த உடல்களைப் பார்த்தார். அதன் பிறகே, அந்தப் போர் குறித்த துல்லியமான தகவல்களை முதன்முதலாகத் திரட்ட முடிந்தது." 13 குமாவோன் பட்டாலியனின் சி கம்பெனியைச் சேர்ந்த அந்த வீரர்கள், மேஜர் சிங்கின் தலைமையில் அங்கு நிறுத்தப்பட்டிருந்தனர். வெடிமருந்துகள் தீர்ந்துவிட்டால் பின்வாங்குவது குறித்து ஆலோசிக்குமாறு அவரது மேலதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர். ஆனால், அவர் தனது வீரர்களுடன் இதுகுறித்துப் பேசியபோது, "நாங்கள் கடைசி மனிதன் இருக்கும் வரை, கடைசித் தோட்டா வரை போராடுவோம்" என்று அவர்கள் பதிலளித்ததாக யாதவ் கூறுகிறார். "சீன வீரர்கள் கணவாயைத் தாக்கியபோது, சி கம்பெனி வீரர்கள் போருக்குத் தயாராக இருந்தனர். ஆனால், விரைவில் இந்தியப் படை வீரர்கள் முறியடிக்கப்பட்டனர்." பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2007ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த விழாவில் ரெசாங் லாவில் இறந்த இந்திய வீரர்களின் மனைவிகள் . இது ஒரு சமமற்ற போராக இருந்தது. ஆயிரக்கணக்கான வீரர்களை 120 வீரர்கள் எதிர்கொண்டனர். சீனா 1962-ஆம் ஆண்டு போர் ஆவணங்களை வகைப்படுத்தவில்லை என்றாலும், சுமார் 3,000 சீன வீரர்கள் அந்தப் பகுதியில் தாக்குதல் நடத்தியதாக இந்திய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. "அவர்களிடம் நவீன ஆயுதங்கள் இருந்தன, அவர்கள் போருக்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் கொண்டிருந்தனர். ஆனால், இந்திய வீரர்களிடம் 'செமி-ஆட்டோமேட்டிக்' துப்பாக்கிகள் மட்டுமே இருந்தன. ஒவ்வொரு வீரரிடமும் வெறும் 600 தோட்டாக்கள் மட்டுமே இருந்தன," என்று அவர் கூறுகிறார். பத்திரிகையாளர் ரச்சனா பிஷ்ட், மேஜர் ஷைத்தான் சிங் குறித்து 2014-ல் எழுதிய தனது புத்தகத்தில், சமவெளிப் பகுதிகளிலிருந்து வந்த 'சி கம்பெனி' வீரர்கள் அதற்கு முன்பு பனியைப் பார்த்ததே இல்லை என்றும், அந்த மலைப்பகுதியின் தட்பவெப்ப நிலைக்குப் பழகுவதற்கு அவர்களுக்குப் போதிய அவகாசம் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். உயிர் பிழைத்தவர்களில் ஒருவரான சுபேதார் ராம் சந்தர் அந்தப் போர் குறித்து நினைவு கூறுகையில், "வானிலை மிகவும் மோசமாக இருந்தது. எங்களிடம் முறையான குளிர்கால உடைகளோ அல்லது காலணிகளோ இல்லை"என்கிறார். "எங்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஜெர்சிகள், பருத்தி கால்சட்டைகள் மற்றும் மெல்லிய கோட்டுகள் அந்த உறைய வைக்கும் காற்றில் எங்களை கதகதப்பாக வைத்திருக்கப் போதுமானதாக இல்லை. வீரர்களுக்குக் கடுமையான தலைவலி ஏற்படும், மருத்துவ உதவியாளர் ஒவ்வோர் இடமாக ஓடிச் சென்று மருந்துகளை வழங்குவார்," என்று அவர் அச்சூழலை விவரித்தார் . போர் நடந்த நாளிரவில், பனி பொழிந்துகொண்டிருந்ததுடன் வெப்பநிலையும் −24°C ஆக இருந்தது. இது குறித்து சுபேதார் ராம் சந்தர் முன்னர் பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், "நாங்கள் இவ்வளவு காலம் காத்திருந்த நாள் வந்துவிட்டது என்று எனது மேலதிகாரிகளிடம் சொன்னேன்," என்றார். 'சி கம்பெனி முதல் அலைத் தாக்குதலை முறியடித்த போதிலும், சீனாவின் மோர்டார் தாக்குதல், பதுங்கு குழிகளையும் கூடாரங்களையும் அழித்து, பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு நடந்த மிகக் கொடூரமான மூன்றாவது அலைத் தாக்குதலில் பெரும்பாலான வீரர்கள் கொல்லப்பட்டனர்' என பிஷ்ட் எழுதியுள்ளார். பட மூலாதாரம்,Kulpreet Yadav படக்குறிப்பு,போர் நடந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட குண்டு துளைத்த குடுவை பட மூலாதாரம்,Kulpreet Yadav படக்குறிப்பு,போர் நடந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட ஒரு தலைக்கவசம் மேஜர் சிங்கின் வீரம் குறித்து சுபேதார் ராம் சந்தர் பகிர்ந்த தகவல்கள் இதயத்தை நெகிழச் செய்பவை. "அவரது வயிற்றில் பல தோட்டாக்கள் பாய்ந்திருந்தன. ரத்தம் வழிந்தோட, கடும் வேதனையில் மயக்கத்திற்கும் தெளிவான மனநிலைக்கும் இடையே இருந்த நிலையிலும், போரை எவ்வாறு தொடர வேண்டும் என்று எனக்கு அவர் அறிவுறுத்தினார். பின்னர் என்னை பட்டாலியனுடன் இணையச் சொன்னார். உங்களை விட்டு என்னால் போக முடியாது என்று நான் சொன்னேன். அதற்கு அவர், 'நீ போய் தான் ஆக வேண்டும். இது எனது உத்தரவு' என்றார்" என சுபேதார் ராம் சந்தர் பகிர்ந்துகொண்டார். உடல்களும் பதுங்கு குழிகளும் கண்டறியப்பட்ட பிறகு, பிப்ரவரி 1963-ல் ஒரு மூத்த ராணுவ அதிகாரி, செஞ்சிலுவைச் சங்கத்தினர் மற்றும் ஊடகவியலாளர்களை ரெசாங் லா-வுக்கு அழைத்துச் சென்றார். அந்தப் போர்க்களம் "அன்று என்ன நடந்ததோ, அப்படியே பனியில் உறைந்த நிலையில்" இருந்தது. இந்தக் கண்டுபிடிப்பு குறித்து தனது புத்தகத்தில் எழுதியுள்ள பிஷ்ட், "அவர்கள் கண்டெடுத்த ஒவ்வொரு வீரரும் துப்பாக்கிச் சூடு, குண்டுவெடிப்பு அல்லது சிதறல்களால் ஏற்பட்ட பலத்த காயங்களுடன் உயிரிழந்திருந்தனர். சிலர் பதுங்கு குழிகளில் பாறைகளுக்கு அடியில் புதைந்து கிடந்தனர், மற்றவர்கள் சிதைந்த துப்பாக்கிகளின் பிடியை இன்னும் இறுக்கமாகப் பிடித்திருந்தனர் எனக் குறிப்பிடுகிறார். மேலும், "மருத்துவ உதவியாளர் கையில் ஊசியையும் கட்டுப்போடும் துணியையும் வைத்திருந்தார். மோர்டார் கருவியை இயக்கிய வீரர் ஒரு வெடிகுண்டை ஏந்தியிருந்தார். மேஜர் சிங் ஒரு பாறைக்கு அருகில் கிடந்தார், அவரது இடது கையில் ரத்தக்கறை படிந்த கட்டு இருந்தது, அவரது வயிறு இயந்திரத் துப்பாக்கிச் சூட்டினால் கிழிந்திருந்தது," என்று விவரித்துள்ளார். "பெரும்பாலும் அவமானத்துடன் நினைவுகூரப்படும்" ஒரு போரில், மேஜர் ஷைத்தான் சிங்கும் அவரது வீரர்களும் பெரும் புகழைப் பெற்றனர் என்று பிஷ்ட் பதிவு செய்துள்ளார். 'சி கம்பெனி' பின்னர் 'ரெசாங் லா கம்பெனி' என மறுபெயரிடப்பட்டது. அந்த வீரர்கள் வந்த ஊரான ரேவாரியில் ஒரு நினைவகம் கட்டப்பட்டது. போர் நிறுத்தத்திற்குப் பிறகு, அந்தக் கணவாய் மனித நடமாட்டமில்லாத பகுதியாகிவிட்டது. தற்போது இது சர்ச்சைக்குரிய நிலப்பகுதியின் ஒரு பகுதியாக உள்ளது. சி கம்பெனி இவ்வளவு தீரத்துடன் போராடாமல் இருந்திருந்தால், இந்தியாவின் வரைபடம் இன்று முற்றிலும் வேறாக இருந்திருக்கும் என்கிறார் யாதவ். தொடர்ந்து பேசிய அவர், "இந்த வீரர்கள் மட்டும் இல்லையென்றால், லடாக்கின் பாதியை இந்தியா இழந்திருக்கும் என நான் நினைக்கிறேன். சீனா அந்த விமானத் தளத்தையும் சுஷுல் பகுதியையும் கைப்பற்றியிருக்கும். "1962-ஆம் ஆண்டு போரில் இந்தியாவுக்கு கிடைத்த ஒரே நம்பிக்கை ஒளி இந்தப் போர் மட்டும் தான்" என்றும் அவர் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwygnp8l2p7o
  9. Today
  10. "நாட்டை திவாலாக்கியவர்கள் இன்று உண்ணாவிரதம் இருப்பது வேடிக்கையானது" – நிருக்ஷ குமார கடும் தாக்கு 13 Jan, 2026 | 05:14 PM முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் தற்போதைய அரசியல் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ள ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் நிருக்ஷ குமார, நாட்டைப் பொருளாதார ரீதியாகப் படுகுழியில் தள்ளியவர்களுக்கு மக்கள் குறித்துப் பேச எந்த உரிமையும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இந்த நாட்டு மக்கள் எரிபொருள், மின்சாரம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்காக நீண்ட வரிசைகளில் நின்று சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்தபோது, இந்த விமல் வீரவங்ச எங்கே மறைந்திருந்தார் என கேள்வி எழுப்பிய அவர், ராஜபக்சக்களுடன் இணைந்து நாட்டை திவாலாக்கியதில் இவர்களுக்கும் பெரும் பங்கு உண்டு எனக் குற்றம் சாட்டினார். மேலும், விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினர் கடந்த காலங்களில் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள இனவாதத்தைப் பயன்படுத்தியதாகச் சாடிய நிருக்ஷ குமார, ஒரு அப்பாவி வைத்தியர் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தியும், பெண்களுக்கு எதிரான பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்தும் சமூகத்தில் அச்சத்தையும் வெறுப்பையும் விதைத்தனர் எனக் குறிப்பிட்டார். தற்போது கல்வி மறுசீரமைப்பில் உள்ள பாலினக் கல்வி தொடர்பான விடயங்களைத் தவறாகச் சித்தரித்து, விமல் வீரவங்ச அரசியல் லாபம் தேட முயல்வதாகவும், எட்டு வகுப்பு கூடத் தேறாத அவருக்கு கல்வி மறுசீரமைப்பு பற்றிப் பேச தகுதி இல்லை என்றும் அவர் காரசாரமாகக் கேள்வி எழுப்பினார். அமைச்சராக இருந்தபோது அனுபவித்த சொகுசு வாழ்க்கை மற்றும் சலுகைகள் பறிபோன விரக்தியில் விமல் வீரவங்ச தற்போது வீதிக்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், உண்மையில் நாட்டு மக்கள் மீது அக்கறை இருந்தால், நாட்டைச் சூறையாடியவர்களுக்கு எதிராகத் தான் போராடியிருக்க வேண்டும் என்றார். இறுதியாக, இனங்களுக்கு இடையில் மோதலை உருவாக்கி குளிர் காய்ந்தவர்களின் இந்த நாடகம் இனி செல்லுபடியாகாது என்றும், முடிந்தால் உண்மையாகவே சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து காட்டுங்கள் என்றும் விமல் வீரவங்சவுக்கு நிருக்ஷ குமார சவால் விடுத்தார். https://www.virakesari.lk/article/235948
  11. ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ணம்; குழு ஏ இல் அவுஸ்திரேலியா, அயர்லாந்து, ஜப்பான், இலங்கை Published By: Vishnu 13 Jan, 2026 | 07:13 PM (நெவில் அன்தனி) பதினாறு நாடுகளைச் சேர்ந்த 240 எதிர்கால கிரிக்கெட் நட்சத்திரங்களின் ஆற்றல்களைப் பரீட்சிக்கும் 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ணத் தொடர், நமிபியாவிலும் ஸிம்பாப்வேயிலும் இன்னும் 2 தினங்களில் ஆரம்பமாகவுள்ளது. நான்கு குழுக்களாக வகுக்கப்பட்டு முதல் சுற்று கிரிக்கெட் போட்டிகள் இம் மாதம் 15ஆம் திகதியிலிருந்து 24ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இந்த வருடம் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண அத்தியாயத்தில் ஏ குழுவில் நடப்பு சம்பியனும் நான்கு தடவைகள் சம்பியனுமான அவுஸ்திரேலியா, 2000ஆம் ஆண்டு தனது சொந்த மண்ணில் உப சம்பியனான இலங்கை ஆகிய நாடுகளுடன் அயர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகள் மோதவுள்ளன. ஏ குழு போட்டிகள் யாவும் விண்ட்ஹோக் நமிபியா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அவுஸ்திரேலியா 1988இல் நடைபெற்ற அங்குரார்ப்பண அத்தியாயத்திலும் தென் ஆபிரிக்காவில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற 15ஆவது அத்தியாயத்திலும் உலக சம்பியனான அவுஸ்திரேலியா, சம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் குறிக்கோளுடன் இம்முறை களம் இறங்கவுள்ளது. ஒரே ஒரு அத்தியாயத்தைத் தவிர மற்றைய 14 அத்தியாயங்களிலும் விளையாடியுள்ள அவுஸ்திரேலியா, 2024இல் இந்தியாவை இறுதிப் போட்டியில் வெற்றிகொண்டு சம்பியனானது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் உலக சம்பியனான அவுஸ்திரேலிய அணியில் இடமபெற்ற வீரர்களில் ஒரே ஒருவர் இந்த வருடமும் விளையாடுகின்றார். இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு மாற்றுவீரராக அழைக்கப்பட்டு ஆட்டம் இழக்காமல் 46 ஓட்டங்களைப் பெற்ற ஒலிவர் பீக் மாத்திரமே இந்த வருடம் விளையாடுவதுடன் அவர்தான் அவுஸ்திரேலிய அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்துக்கான அவுஸ்திரேலிய குழாத்தில் இடம்பெறும் பெரும்பாலானவர்கள், 19 வயதுக்குட்பட்ட இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாடி இருந்தனர். அத் தொடரில் அவுஸ்திரேலியா வெற்றிபெறாததை அடுத்து, 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தேசிய சம்பியன்ஷிப்பில் பிரகாசித்த நிட்டேஷ் செமுவல், நேடன் குறே, வில்லியம் டெய்லர் ஆகியோர் உலகக் கிண்ண குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். அவர்களில் நிட்டேஷ் செமுவேல், நேடன் குறே ஆகிய இருவரும் இலங்கை வம்சாவளிகளாவர். அயர்லாந்து இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் போன்றே இந்த வருடமும் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவுடன் ஒரே குழுவில் அயர்லாந்து இடம்பெறுகின்றது. தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற 15ஆவது அத்தியாயத்தில் இந்தியாவுடனும் அயர்லாந்து விளையாடி இருந்தது. கடந்த அத்தியாயத்தில் சுப்பர் 6 சுற்றுக்கு முன்னேறிய அயர்லர்நது அங்கு நியூஸிலாந்தை வெற்றிகொண்டு வரலாறு படைத்திருந்தது. அப் போட்டியில் கெவின் ரூல்ஸ்டன் 82 ஓட்டங்களைப் பெற்றதுடன் ஒலிவர் ரைலி 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஒலிவர் ரைலி இம்முறை அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் ரூபன் வில்சன் உப தலைவராக பெயரிடப்பட்டுள்ளார். ரூபன் தனது 15ஆவது வயதில் 2022 உலகக் கிண்ண அத்தியாயத்தில் விளையாடி இருந்தார். அவர்கள் இருவர் மாத்திரமே 2024 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடிய வீரர்களாவர். எனினும் அயர்லாந்து அணியில் அனுபவத்துக்கு பஞ்சம் இல்லை. அடம் லெக்கி, செப் டிக்ஸ்ட்ரா, தோமஸ் ஃபோர்ட் ஆகிய மூவரும் அவுஸ்திரேலியாவில் விளையாடியுள்ளனர். கடந்த செப்டெம்பர் மாதத்திலிருந்து ஒன்றாக பயிற்சியில் ஈடுபட்டுவரும் அயர்லாந்து அணியினர் இந்த வருடம் திருப்பத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அயர்லாந்து இளையோர் அணியின் பயிற்சிகளுக்கு சர்வதேச வீரர்களான ஜோர்ஜ் டொக்ரெல், கரெத் டிலேனி, லோக்கன் டக்கர் ஆகியோர் ஆதரவு வழங்கி வருகின்றனர். 19 வயதுக்குட்பட்ட அயர்லாந்து அணிக்காக 2010, 2012 உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடிய டொக்ரெல் 15 விக்கெட்களைக் கைப்பற்றி இருந்தார். 2010இல் அயர்லாந்து 10ஆம் இடத்தைப் பெற்றது. அதுவே அதன் சிறந்த பெறுபேறாகும். ஜப்பான் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண வரலாற்றில் ஜப்பான் பங்குபற்றுவது இது இரண்டாவது தடவையாகும். நான்கு வருடங்களுக்கு முன்னர் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்தில் ஜப்பான் அறிமுகமாகி இருந்தது. 2020 இறுதிப் போட்டியில் விளையாடிய இந்தியா, நியூஸிலாந்து, இலங்கை அகிய அணிகளுடன் முதல் சுற்றில் குழுநிலைப்படுத்தப்பட்டிருந்த ஜப்பான், இரண்டு மோசமான தோல்விகளைத் தழுவியது. ஒரு போட்டி மழை காரணமாக விளையாடப்படவில்லை. தொடர்ந்து கோப்பை பிரிவில் இங்கிலாந்துக்கு எதிரான கால் இறுதிப் போட்டியில் ஜப்பான் அதிகூடிய 93 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர் கனடாவுடனான போட்டியில் அந்த மொத்த எண்ணிக்கையைக் கடந்த ஜப்பான் 118 ஓட்டங்களைப் பெற்றது. அந்த வருடம் நைஜீரியாவுடனான போட்டியில் தோல்வி அடைந்த ஜப்பான், இப்போது நான்கு வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடவுள்ளது. ஆசிய கிரிக்கெட் பெரவை பிறீமியர் கிண்ணப் போட்டியில் தலைவராக இருந்த கஸுமோ காட்டோ-ஸ்டஃபர்ட், உலகக் கிண்ணப் போட்டியில் தலைரவாக விளையாடவுள்ளார். ACC பிறீமியர் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கத்தாருக்கு எதிராக காய்செய் கொபாயாஷி-டொகெட் சதம் குவித்து அசத்தி இருந்தார். ஜப்பான் அணியிலும் இலங்கை வம்சாவளி விரர் ஒருவர் இடம்பெறுகின்றார். ஜப்பானில் நடைபெற்றுவரும் இளையோர் கிரிக்கெட் போட்டிகளிலும் சகலதுறைகளிலும் பிரகாசித்து வரும் சந்தேவ் ஆரியன் வடுகே என்பவரே இலங்கை வம்சாவளி வீரராவார். இது இவ்வாறிருக்க,ஜப்பான் அணியில் மூன்று ஹரா-ஹின்ஸே சகோதரர்கள் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும். சார்ள்ஸ், கேப்றியல், மொன்ட்கோமெரி ஆகியோரே மூன்று சகோதரர்களாவர். ஜப்பானின் சிரேஷ்ட அணி தலைவர் கெண்டெல் கடோவாக்கி-ஃப்ளெமிங் 2020இல் போன்றே உதவி பயிற்றுநராக செயற்படவுள்ளார். இலங்கை 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண வரலாற்றில் சகல அத்தியாயங்களிலும் விளையாடியுள்ள இலங்கை இம்முறை அதிசிறந்த பெறுபேறுகளை ஈட்டும் குறிக்கொளுடன் 16ஆவது தடவையாக களம் இறங்குகிறது. தனது சொந்த நாட்டில் 2000ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியிலேயே இலங்கை அதிசிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்திருந்தது. அந்த வருடம் இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வி அடைந்து உப சம்பியன் பட்டத்தை இலங்கை சூடியது. இறுதிப் போட்டியில் இலங்கை இளையோர் அணி 178 ஓட்டங்களைப் பெற்றதுடன் ஜெஹான் முபாரக் 58 ஓட்டங்ளைக் குவித்தார். மொஹம்மத் கய்வ் தலைமையிலான இந்திய அணி 40.4 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்து 6 விக்கெட்களால் வெற்றியீட்டி சம்பியனானது. அதன் பின்னர் இரண்டு தடவைகள் அரை இறுதிவரை முன்னேறிய இலங்கை, இரண்டு வருடங்களுக்கு முன்னர் சுப்பர் 6 சுற்றுவரை முன்னேறி இருந்தது. இலங்கை இளையோர் அணிக்கு 2024இல் சினேத் ஜயவர்தன தலைவராக விளையாடியதுடன் அவர் கல்வி பயின்ற றோயல் கல்லூரியைச் சேர்ந்த விமத் டின்சார இந்த வருடம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணியில் இம்முறை தமிழ் பேசக்கூடிய நால்வர் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும். குகதாஸ் மாதுளன் (யாழ். சென். ஜோன்ஸ்), விக்னேஸ்வரன் ஆகாஷ் (முன்ளாள் பருத்தித்துறை ஹாட்லி தற்போது மருதானை புனித சூசையப்பர்), ஸ்ரீராம் ஜீவகன் (வெஸ்லி), ஆதம் ஹில்மி (திரித்துவம்) ஆகிய நால்வரே தமிழ் பேசும் வீரர்களாவர். இலங்கை குழாம் விமத் தின்சார (அணித் தலைவர் - றோயல் கல்லூரி), கவிஜ கமகே (உதவித் தலைவர் - கிங்ஸ்வூட் கல்லூரி), திமன்த மஹாவித்தான, ஆதம் ஹில்மி, செத்மிக்க செனவிரட்ன (மூவரும் திரித்துவ கல்லூரி), விரான் சமுதித்த, சமரிந்து நெத்சார (இருவரும் மாத்தறை சென். செர்வேஷியஸ் கல்லூரி), துல்னித் சிகேரா, சாமிக்க ஹீனட்டிகல (இருவரும் மஹாநாம கல்லூரி), குகதாஸ் மாதுளன் (யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி), ரசித் நிம்சார (வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை), விக்னேஸ்வரன் ஆகாஷ், சேனுஜ வேக்குனாகொட (இருவரும் மருதானை புனித சூசையப்பர் கல்லூரி), ஸ்ரீராம் ஜீவகன் (வெஸ்லி கல்லூரி), மலின்த சில்வா (மொறட்டுவை புனித செபஸ்தியார் கல்லூரி) போட்டி விபரங்கள் ஜனவரி 16: அவுஸ்திரேலியா எதிர் அயர்லாந்து ஜனவரி 17: ஜப்பான் எதிர் இலங்கை ஜனவரி 19: அயர்லாந்து எதிர் இலங்கை ஜனவரி 20 அவுஸ்திரேலியா எதிர் ஜப்பான் ஜனவரி 22: அயர்லாந்து எதிர் ஜப்பான் ஜனவரி 23: அவுஸ்திரேலியா எதிர் இலங்கை https://www.virakesari.lk/article/235958
  12. கூகுளுடன் கைகோர்த்தது ஆப்பிள்: தொழில்நுட்ப உலகில் புதிய திருப்பம் Published By: Digital Desk 3 13 Jan, 2026 | 03:36 PM செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் நிலவும் கடும் போட்டியைச் சமாளிக்க, ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது நீண்டகாலப் போட்டியாளரான கூகுளுடன் (Google) ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. அதன்படி, ஆப்பிளின் 'சிறி' (Siri) குரல் உதவிச் செயலி மற்றும் எதிர்கால 'ஆப்பிள் இன்டலிஜென்ஸ்' (Apple Intelligence) அம்சங்கள் கூகுளின் ஜெமினி (Gemini) தொழில்நுட்பம் மற்றும் கிளவுட் வசதியைப் பயன்படுத்தி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மெகா கூட்டணிக்காக ஆப்பிள் நிறுவனம் கூகுளுக்கு ஆண்டுக்கு சுமார் 1 பில்லியன் டொலர் வரை செலுத்தக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேம்படுத்தப்பட்ட சிறி செயலி, 2026 ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் வெளியாகவுள்ள iOS 26.4 மென்பொருள் பதிப்பில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூகுளின் தொழில்நுட்ப உதவியுடன் சிறி இனி பயனர் சூழலை (Context) மிகச் சிறப்பாகப் புரிந்துகொள்வதுடன், செயலிகளுக்கு இடையிலான பணிகளை (In-app actions) எளிதாகச் செய்யும் திறன் பெறும். ஆப்பிள் தனது சொந்த AI மாதிரிகளை விட வலிமையான கூகுளின் 1.2 ட்ரில்லியன் அளவுருக்கள் (1.2 trillion parameters) கொண்ட மொடலைப் பயன்படுத்த முடிவெடுத்துள்ளது. இருப்பினும், பயனர்களின் தரவுப் பாதுகாப்பு (Privacy) மற்றும் தனியுரிமையை உறுதி செய்ய, இந்த AI அம்சங்கள் ஆப்பிளின் சொந்த 'பிரைவேட் கிளவுட் கம்ப்யூட்' (Private Cloud Compute) கட்டமைப்பில் மட்டுமே இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கூகுளின் தாய் நிறுவனமான அல்பபெட்டின் (Alphabet) சந்தை மதிப்பு முதல் முறையாக 4 ட்ரில்லியன் டொலரைக் கடந்தது. எக்ஸ் (X) மற்றும் xAI நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், இக்கூட்டணியைக் கடுமையாக விமர்சித்துள்ளார். கூகுள் ஏற்கனவே அண்ட்ரோய்ட் மற்றும் குரோம் மூலம் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், இது "அதிகாரக் குவிப்பு" (Unreasonable concentration of power) என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கூட்டணியானது ஓபன்ஏஐ (OpenAI) மற்றும் மைக்ரோசொப்ட் போன்ற நிறுவனங்களுக்குப் பெரிய சவாலாக அமையும் எனத் தொழில்நுட்ப நிபுணர்கள் கருதுகின்றனர். https://www.virakesari.lk/article/235935
  13. ரோஹிங்கியா இனப்படுகொலை வழக்கு: ஐநா சர்வதேச நீதிமன்றத்தில் மியன்மாருக்கு எதிராக காம்பியா கடும் வாதம் Published By: Digital Desk 3 13 Jan, 2026 | 11:18 AM மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட "இனப்படுகொலை கொள்கைகள்" மூலம் அந்த இனத்தையே அழிக்க மியன்மார் முயன்றதாக காம்பியா நாடு ஐநா சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) குற்றம் சாட்டியுள்ளது. மேற்கு ஆபிரிக்க நாடான காம்பியா, கடந்த 2019ஆம் ஆண்டு மியன்மாருக்கு எதிராகத் தொடர்ந்த இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கின் விசாரணைகள் திங்கட்கிழமை(12) நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் ஆரம்பமானது. மியன்மார் இராணுவம் திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை அழிக்க முயன்றதாக காம்பியாவின் வெளிவிகார அமைச்சர் டவ்டா ஜாலோ (Dawda Jallow) நீதிமன்றத்தில் தெரிவித்தார். 2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் மேற்கொண்ட ஒடுக்குமுறையின் போது ஆயிரக்கணக்கான ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 700,000-க்கும் அதிகமானோர் அண்டை நாடான பங்களாதேஷிற்கு அகதிகளாகத் தப்பிச் சென்றனர். பல தசாப்தங்களாக ரோஹிங்கியாக்கள் கொடூரமான துன்புறுத்தல்களுக்கும், மனிதநேயமற்ற அவதூறு பிரச்சாரங்களுக்கும் உள்ளாக்கப்பட்டதாக காம்பியா சுட்டிக்காட்டியுள்ளது. காம்பியாவின் இந்த முயற்சிக்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) 57 உறுப்பு நாடுகளும், பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் கனடா உள்ளிட்ட 11 நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. "மியன்மார் இழைத்த கொடூரமான குற்றங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என நாம் கோருகிறோம். இனப்படுகொலை செய்த மியன்மார் இராணுவத் தலைவர்களுக்கு எதிராக நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என நீதிமன்றத்திற்கு வெளியே இருந்த அகதிப் பெண் மொனைரா தெரிவித்துள்ளார். மியன்மார் இராணுவம் இந்த இனப்படுகொலை குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வருகிறது. பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராகவே தமது நடவடிக்கைகள் அமைந்ததாக மியன்மார் தரப்பு வாதிடுகிறது. இம்மாத இறுதி வரை நடைபெறவுள்ள இந்த விசாரணைகளில் மியன்மார் தனது பதில்களை வழங்க வாய்ப்பளிக்கப்படும். 1948ஆம் ஆண்டு ஐநா இனப்படுகொலை உடன்படிக்கையின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது இஸ்ரேலுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா தொடர்ந்துள்ள வழக்கு போன்ற ஏனைய சர்வதேச வழக்குகளுக்கும் ஒரு முன்மாதிரியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வங்காளதேசத்தின் காக்ஸ் பஜார் முகாம்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரோஹிங்கியாக்கள் மிக நெருக்கடியான நிலையில் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235903
  14. அரச சேவையில் புதிதாக 26,095 பேரை இணைத்துக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் Jan 13, 2026 - 03:22 PM அரசாங்க சேவைக்கு புதிதாக 26,095 பேரை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய, 23,344 ஆசிரியர்கள் உட்பட இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmkceyggz03vho29nj1a1c9km
  15. அத தெரண கருத்துப்படம்.
  16. தரம் 6 இற்கு விண்ணப்பங்களை இன்று முதல் இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்கலாம் Published By: Digital Desk 3 13 Jan, 2026 | 02:36 PM 05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், பாடசாலைகளில் 06 ஆம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, இன்று செவ்வாய்க்கிழமை 13 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் இணையத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் கல்வி அமைச்சின் www.moe.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தை அணுகுவதன் மூலம் மூன்று பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். http://g6application.moe.gov.lk/#/ என்ற பிரத்யேக இணையத்தளம் மூலமாகவும் விண்ணப்பங்களை நேரடியாக சமர்ப்பிக்கலாம் என்று அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/235923
  17. இது உப்பு சத்தியாக்கிரகம் ....உப்பில்லாத சாப்பாடு எவ்வளவும் சாப்பிடலாம் ....இவர் இங்கு இரவு தங்கி நின்றால் ...மனிசி வீட்டிலை ..மகனின் நண்பர்களுக்கு பார்ட்டி வைத்திடுவா என்ற பயத்தில்தான் ...வீட்டிற்கு அடிக்கடி போய்வருகிறார் ...தப்ப எடுக்காதையுங்கோ
  18. ராஜபக்ச குடும்பத்தை தவிக்க விட்டதற்கு பாவமன்னிப்பு கேட்க போயிருப்பாரோ?
  19. இவர் இப்போது பாராளுமன்றில் இல்லை. மக்களால் தூக்கி எறியப்பட்டுள்ளார். இது சுழற்சி முறையிலான நுhதனமான போராட்டம். எட்டுமணிநேர வேலை மாதிரி.
  20. Published By: Digital Desk 1 13 Jan, 2026 | 01:59 PM கிளிநொச்சியிலுள்ள தனியார் தொழிற்சாலையொன்றில் சுமார் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஆடைகளை ஒன்றரை வருடமாக மோசடியாக திருடி வந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் நேற்று திங்கட்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த திருட்டு சம்பவம் 18.03.2024 முதல் 29.05.2025 வரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர்கள் 27 மற்றும் 36 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் மாவனெல்ல மற்றும் கெடஹெத்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (13) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத்திணைக்களம் மேற்கொண்டு வருகி கிளிநொச்சியில் ஆடை தொழிற்சாலையில் ஒன்றரை வருடமாக நடந்த திருட்டு அம்பலம் - இருவர் கைது! | Virakesari.lk
  21. 13 Jan, 2026 | 04:21 PM இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி 16ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ள ஜூலி சாங் (Julie Chung), முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். இந்த சந்திப்பு மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (07) இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது, ஜூலி சாங்கின் சிறப்பான பணிகளுக்கு நன்றி தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ, அவரது எதிர்கால பணிகளுக்காக வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங்! | Virakesari.lk
  22. 13 Jan, 2026 | 05:43 PM இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமது பொருளாதாரத்தை மீளக்கட்டமைப்பதில் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் தமிழக அரசினால் ஈழத்தமிழருக்கு உதவமுடியும் என நம்புகிறேன். அதற்கமைய தமிழக வணிகர்கள் இலங்கையின் தமிழ் பிரதேசங்களில் முதலிடுவதற்கு தமிழ்நாட்டு அரசு ஊக்கமளிக்கவேண்டும் என கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஜுவனிதா நாதன் வலியுறுத்தியுள்ளார். உலகளாவிய ரீதியில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் வகையில் தமிழக அரசினால் திங்கட்கிழமை (12) சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அயலகத்தமிழர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக்கொண்ட கனேடிய பாராளுமன்ற உறுப்பினரான ஜுவனிதா நாதன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: உலகத் தமிழர்களை ஒன்றிணைத்து தமிழரின் கலாசாரம், பாரம்பரியம் மற்றும் ஒற்றுமையைக் கொண்டாடும் உலக அயலகத் தமிழர் தினம் 2026 க்கு என்னை அழைத்தமைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். புலம்பெயர் தேசத்தில் வாழும் தமிழராக கனேடிய மண்ணின் மக்கள் சார்பில் இந்த நிகழ்வில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சியையும் பெருமிதமும் அடைகிறேன். தமிழர்கள் உலகம் முழுவதும் பெரும் ஆளுமையாக வளர்ந்து வருகிறார்கள். அயலக தேசங்களில் தமிழ் மரபு, பண்பாடு மற்றும் மொழியைப் பாதுகாத்தும், வளர்த்தும் வருவதில் புலம்பெயர் தமிழர்களுக்கு முக்கிய பங்குண்டு. அதுமாத்திரமன்றி வர்த்தக மற்றும் பொருளாதாரத் துறைகளிலும் தமிழர்கள் உலகம் முழுவதும் பெருமளவுக்கு முன்னேறி வருகின்றனர். இவ்வாறு பல வழிகளிலும், பல்வேறு துறைகளிலும் புலம்பெயர் தேசங்களில் தமிழர் மரபையும், திறனையும், ஆளுமையையும் கட்டிக்காத்து வளர்ந்துவரும் தமிழர்களுக்கு அங்கீகாரத்தை வழங்கும் வகையில் இந்த நிகழ்வை ஒருங்கிணைந்து நடாத்தி வருவதற்காக தமிழ்நாடு அரசுக்கு எனது பாராட்டுக்களைக் கூறிக்கொள்கிறேன். கனடா மற்றும் இந்திய 75 ஆண்டுகளுக்கும் மேலாக வலுவான தூதரக உறவுகளைப் பேணிவருகின்றன. இந்த சந்தர்ப்பத்தில் கனடா - இந்தியா உறவு வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு என்பவற்றின் ஊடாக மேலும் வலுவடைந்து வருகிறது. இவ்விடயத்தில் கனேடிய அரசாங்கம் தொடர்ந்தும் இந்தியாவுடன் ஒத்துழைப்புடன் செயற்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் பொருளாதார உறவுகளில் தமிழ்நாடும் கனடாவில் வாழும் புலம்பெயர் தமிழ்ச்சமூகமும் முக்கிய பங்களிப்பை வழங்கமுடியும் என நான் நம்புகிறேன். கனடாவில் இலங்கையிலிருந்து குடியேறிய கணிசமான எண்ணிக்கையிலான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஈழத்தமிழர்களாக இருந்தபோதும் தமிழர்களாக இவர்கள் பல நூற்றாண்டுகளாக தமிழ்நாட்டு மக்களுடன் பிரிக்கமுடியாத உறவை மொழி சார்ந்தும், பண்பாடு சார்ந்தும் பகிர்ந்து வருகின்றனர். உலகம் முழுவதும் சுமார் 10 கோடி தமிழர்கள் வாழும் நிலையில், கனடா மிகப்பெரிய புலம்பெயர் தமிழ்ச்சமூகமாகக் காணப்படுகிறது. இந்நிலையில் கனேடிய தமிழர்களும் தமிழ்நாட்டு மக்களும் இணைந்து உலகத் தமிழ்ச்சமூகத்தின் பண்பாடு, மொழி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை வடிவமைப்பதில் அர்த்தமுள்ள பங்கை வகிக்க முடியும் என நான் நம்புகிறேன். அதேவேளை இதனூடாக நாம் வாழும் நாடுகளின் தேசிய அளவிலான பொருளாதார வளர்ச்சிக்கும் இதன்மூலம் பங்களிப்புச் செய்யமுடியும். அதேபோன்று ஈழத்தமிழ் அகதிகளுக்கு தமிழ்நாட்டு அரசாங்கம் வழங்கிவரும் உதவிகள் மிகமுக்கியமானவையாகும். ஈழத்தமிழராக கனேடிய மண்ணுக்குப் புலம்பெயர்ந்து, இன்று கனடாவின் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ள நான், தமிழ்நாடு அரசு ஈழத்தமிழ் அகதிகளுக்குச் செய்த ற்றும் செய்கின்ற சகல உதவிகளுக்கும் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன். மேலும் தமிழ்நாடு பொருளாதார செயற்பாடுகளில் முன்மாதிரியாகவும், சிறப்பாகவும் வளர்ந்து வருகிறது. அதனை சாத்தியமாக்கிக் கொண்டிருக்கும் அரசாங்கத்துக்கு எனது பாராட்டை வெளிப்படுத்துகிறேன். அதேவேளை மறுபுறம் இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமது பொருளாதாரத்தை மீளக்கட்டமைப்பதில் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் தமிழக அரசினால் ஈழத்தமிழருக்கு உதவமுடியும் என நம்புகிறேன். அதற்கமைய தமிழக வணிகர்கள் இலங்கையின் தமிழ் பிரதேசங்களில் முதலிடுவதற்கு தமிழ்நாட்டு அரசு ஊக்கமளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதன்மூலம் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் தமது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பமுடியும் என்பதுடன் அதனூடாக தமிழ்நாடும் நன்மையடைய முடியும். இதற்கான நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கு கனேடிய தமிழர்கள் உட்பட புலம்பெயர் தமிழ்ச்சமூகங்கள் அனைத்தும் இணைந்து செயற்பட முன்வரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்றார். தமிழக வணிகர்களை வட, கிழக்கு மாகாணங்களில் முதலிடுவதற்கு ஊக்குவியுங்கள் - தமிழக அரசிடம் கனேடிய எம்.பி. ஜுவனிதா நாதன் வலியுறுத்தல் | Virakesari.lk
  23. 2,000 பேர் பலி! ஈரான் போராட்டம் குறித்து வெளியான பகீர் தகவல் Jan 13, 2026 - 05:07 PM ஈரான் அரசாங்கத்திற்கு எதிராக கடந்த இரண்டு வாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான மக்கள் போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 2,000 என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போராட்டங்களை ஒடுக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட கடுமையான நடவடிக்கைகளே இந்த அதிகளவான உயிரிழப்புகளுக்குக் காரணம் என்பதை அந்நாட்டு அதிகாரிகள் முதன்முறையாக ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளில் உள்ள சில வைத்தியசாலைகள், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களால் நிரம்பி வழிவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வைத்தியசாலைகளுக்குக் கொண்டு வரப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் 20 முதல் 25 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் என டெஹ்ரானில் உள்ள வைத்தியசாலை வட்டாரங்கள் வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளன. அவர்களில் அநேகமானோர் தலை அல்லது நெஞ்சுப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmkcioycp03vqo29n43yaf44x
  24. தரம் 6 கல்வி சீர்திருத்தங்கள் 2027 வரை ஒத்திவைப்பு Jan 13, 2026 - 02:20 PM தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள 6 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை மீண்டும் மீளாய்வு செய்து, 2027 ஆம் ஆண்டில் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. எவ்வாறாயினும், 1 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்கள் இந்த ஆண்டு எவ்வித மாற்றமுமின்றி நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சர்ச்சைக்குரிய 6 ஆம் தர ஆங்கிலக் கற்றல் தொகுதி (Module) தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சு முன்னெடுத்த விசாரணை அறிக்கைகளின் முடிவுகளின் அடிப்படையில், அதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகளுக்கு எதிராக தேசிய கல்வி நிறுவனத்தின் நிருவாக சபை ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இங்கு குறிப்பிட்டார். அதற்கமைய, 01.மனிதவள மேம்பாடு 02.உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் 0.3மதிப்பீடு மற்றும் மதிப்பாய்வு நடவடிக்கைகள் 04.பாடத்திட்ட மேம்பாடு 05.பொதுமக்களுக்கான விழிப்புணர்வு மற்றும் ஊக்குவிப்பு ஆகிய 5 முக்கிய தூண்களின் அடிப்படையில் குறித்த கல்விச் சீர்திருத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmkccqg6t03v9o29nivx5lk3f
  25. பிஎஸ்எல்வி ராக்கெட்டின் இரு தோல்விகளும் இஸ்ரோவுக்கு எவ்வாறு ஒரு பின்னடைவாக மாறக்கூடும்? பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு,பிஎஸ்எல்வி-சி62 ராக்கெட் கவுன்ட்டவுண் முடிந்து புறப்படும் காட்சி கட்டுரை தகவல் சங்கரநாராயணன் சுடலை பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பிஎஸ்எல்வி-சி62 திட்டத்தின் மூலம் EOS-N1 செயற்கைக் கோள் உள்ளிட்ட 16 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் திட்டத்தை, ஜனவரி 12-ஆம் தேதி இஸ்ரோவின் வர்த்தக ரீதியான செயற்கைக் கோள்களை ஏவும் அமைப்பான NSIL (NewSpace India Limited) மேற்கொண்டது. ஆனால் இத்திட்டத்தின் போது ராக்கெட்டின் செயல்பாட்டில் ஒரு முரண் ஏற்பட்டதாக இஸ்ரோ கூறியுள்ளது. பயணப்பாதையில் 'ஒரு விலகல்' ஏற்பட்டதாக கூறியுள்ள இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் இது குறித்து விரைவில் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார். கடந்த மே மாதம் இஸ்ரோவின் பிஎஸ்எல்வி -சி61 திட்டம் முழுமையடையாத நிலையில், பிஎஸ்எல்வி ரக ராக்கெட்டுக்கு இது தொடர்ச்சியான இரண்டாவது தோல்வியாக நிபுணர்களால் பார்க்கப்படுகிறது. வர்த்தக ரீதியான செயற்கைக்கோள் ஏவும் பணிகளை முன்னெடுத்து வரும் நிலையில், இது இஸ்ரோவுக்கு என்ன மாதிரியான பின்னடைவுகளை ஏற்படுத்தலாம் என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு,EOS-N1 செயற்கைக்கோளின் புகைப்படம் பிஎஸ்எல்வி ராக்கெட் உலக சாதனை இஸ்ரோ பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் மூலம் 63 திட்டங்களை நிறைவு செய்துள்ளது. இஸ்ரோவின் பெருமை மிகு திட்டங்களான சந்திரயான் 1, செவ்வாய் சுற்றுவட்டப்பாதை திட்டம், சூரியனை ஆராயும் ஆதித்யா எல்1 போன்ற திட்டங்களுக்கான செயற்கைக் கோள்கள் பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் மூலமாகவே ஏவப்பட்டன. அத்தோடு 2017ம் ஆண்டில் ஒரே திட்டத்தில் 104 செயற்கைக் கோள்களை நிலை நிறுத்தி உலக சாதனை படைத்துள்ளது. இவ்வளவு மதிப்பு வாய்ந்ததாக இஸ்ரோ முன்னிறுத்தும் இந்த பிஎஸ்எல்வி ராக்கெட்தான் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துள்ளது. 2025ம் ஆண்டு மே மாதம் 18-ஆம் தேதி இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி61 திட்டம் முழுமையடையவில்லை. இது இஸ்ரோவின் மிகவும் அரிதான 'ராக்கெட் ஏவுதல்' தோல்வியாக குறிப்பிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சுமார் 8 மாத இடைவெளியில் ஜனவரி 12-ஆம் தேதி பிஎஸ்எல்வி ராக்கெட் மீண்டும் ஒரு பின்னடைவை சந்தித்திருக்கிறது. ஆனால் பிரச்னை இத்தோடு முடிந்துவிடவில்லை, சி61 திட்டத்தில் ராக்கெட்டின் தோல்விக்கான காரணம் என்ன என்பது பற்றி தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்று கூறுகிறார், மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியரான முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன். பிபிசி தமிழிடம் பேசிய அவர்,"எந்த ஒரு ராக்கெட் ஏவும் திட்டமாக இருந்தாலும், அது வெற்றியடைந்தாலும், தோல்வியடைந்தாலும் திட்டத்திற்குப் பின் அதன் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்படும்." என குறிப்பிடுகிறார். ஆனால் முந்தைய திட்டங்களின் தோல்வி மதிப்பீடு அறிக்கை (Failure Assessment Report) வெளிப்படையாக இருந்ததையும் வெங்கடேஸ்வரன் குறிப்பிடுகிறார். பிஎஸ்எல்வி-சி61 திட்டத்திற்கான தோல்வி மதிப்பீட்டு அறிக்கையும் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. ஆனால் இது பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்படவில்லை என்பதால், தோல்விக்கான காரணம் தெரியவில்லை என கூறுகிறார் த.வி.வெங்கடேஸ்வரன். உலக சந்தையை குறிவைக்கும் இஸ்ரோ இந்தியாவின் விண்வெளி ஒழுங்குமுறை நிறுவனமாக உருவாக்கப்பட்டுள்ள இன்-ஸ்பேஸ்(IN-SPACe), அதன் எதிர்வரும் தசாப்தம் மற்றும் கண்ணோட்டங்களுக்கான உத்தியில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது. "2033-ம் ஆண்டுக்குள் உலக விண்வெளி சந்தையில் 8 சதவிகிதத்தை இந்தியா கைப்பற்றும், இதன் மூலம் அதன் விண்வெளி பொருளாதாரம் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும்" 2023ம் ஆண்டு நிலவரப்படி உலக சந்தையில் இந்தியாவின் பங்களிப்பு 2 சதவிகிதமாகவும், பொருளாதார மதிப்பு 8.4 பில்லியன் டாலராகவும் இருக்கிறது என இன்-ஸ்பேஸ் குறிப்பிட்டிருந்தது. இந்த லட்சியப் பார்வை வலுவான அரசு ஆதரவு, தொடர்ச்சியான தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தனியார் விண்வெளித்துறையின் வளர்ச்சி ஆகியவற்றையே சார்ந்திருப்பதாக உலக பொருளாதார மன்றம் கூறுகிறது. சர்வதேச சந்தையை குறி வைத்து இயங்கி வரும் நிலையில், இஸ்ரோவால் பெருமைக்குரியதாக முன்னிறுத்தப்படும் பிஎஸ்எல்வி ராக்கெட் "இருமுறை தோல்வியடைந்திருப்பது இஸ்ரோவுக்கு கவலை தரக்கூடிய ஒன்று. ஏனெனில், சர்வதேச சந்தையில் பிஎஸ்எல்வி ராக்கெட் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படும்." என முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் குறிப்பிடுகிறார். ஆனால் பிஎஸ்எல்வியின் இந்த பின்னடைவு முன்னேற்றத்திற்கான பாடமாகவே இருக்கும் என்பது ஒரு தரப்பினரின் கருத்தாக உள்ளது. ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய விஞ்ஞானி சுவேந்து பட்நாயக், இதிலிருந்து கற்றுக்கொண்டு அடுத்த முன்னேற்றங்கள் நிகழும் என தெரிவித்தார். பிஎஸ்எல்வி சி-62 திட்டத்தில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு,இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் ஜனவரி 12-ஆம் தேதி காலை 10.18 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி - சி62 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இதிலிருந்து சுமார் அரை மணி நேரத்தில், ராக்கெட்டின் பயணப்பாதையில் 'விலகல்' இருந்ததை இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் உறுதி செய்தார். ராக்கெட்டின் நிலை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "4 நிலைகளைக் கொண்ட பிஎஸ்எல்வி ராக்கெட்டில், மூன்றாவது நிலையின் இறுதியில் இடையூறுகள் அதிகரித்தன. இதனைத் தொடர்ந்து ராக்கெட்டின் பாதை மாறியது உணரப்பட்டது." என்று கூறினார். தரவுகளை ஆராயந்து வருவதாகவும், விரைவில் முழுமையான விளக்கம் தரப்படும் எனவும் வி.நாராயணன் கூறினார். பிஎஸ்எல்வி ராக்கெட் எப்படி இயங்குகிறது? பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு,பிஎஸ்எல்வி ராக்கெட்டின் பயணத்தை விளக்கும் வரைபடம் பிஎஸ்எல்வி ராக்கெட் 4 நிலைகளைக் கொண்டது என்கிறார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன். அதாவது தொடர் வண்டியில் இருக்கும் ரயில் பெட்டிகள் போன்று "இது உண்மையில் 4 ராக்கெட்களின் இணைப்பு" என்று அவர் கூறினார். ராக்கெட் ஏவுதலுக்காக நிலைநிறுத்தப்படும் போது முதலில் கீழே இருப்பது பிஎஸ்1, இதற்கு அடுத்தபடியாக முறையே பிஎஸ்2, பிஎஸ்3 மற்றும் பிஎஸ்4 நிலைகள் உள்ளன. இவற்றில் பிஎஸ்1 மற்றும் பிஎஸ்3 திட எரிபொருளைக் கொண்டவை. பிஎஸ்2 மற்றும் பிஎஸ்4 திரவ எரிபொருளைக் கொண்டவை. பிஎஸ் 1 நிலையிலிருக்கும் திட எரிபொருள் ராக்கெட் பூமியிலிருந்து ஈர்ப்புவிசைக்கு எதிராக கிளம்புவதற்கான உந்துவிசையைக் கொடுக்கிறது. இயக்கமற்ற நிலையிலிருந்து, இயங்கும் நிலைக்கு மாறுவதற்கான விசையைத் தரும் முதல் நிலை, ராக்கெட்டை சில கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டுமே உயர்த்தும் என்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன். இதன் பின்னர் பிஎஸ் 2 திரவ எரிபொருளைக் கொண்டது, இது ராக்கெட்டின் திசை போன்ற விஷயங்களை தீர்மானிக்கிறது. எந்த சுற்றுப்பாதைக்கு ராக்கெட் செல்லவிருக்கிறது என்பதை இந்த நிலை முடிவு செய்யும். இதன் பின்னர், பிஎஸ்3 மீண்டும் திட எரிபொருளைக் கொண்டு ராக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு விண்வெளியில் உயர்த்தும். கடைசியாக, பிஎஸ்4 நிலையில் உள்ள ராக்கெட் திரவ எரிபொருளைக் கொண்டு, செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தும். மூன்றாவது நிலையில் ஏற்பட்ட சிக்கல் பிஎஸ்எல்வி-சி62 திட்டத்தில் இந்த மூன்றாவது நிலை வரைக்கும் எதிர்பார்த்தபடி ராக்கெட் சென்றது என்பதைக் குறிப்பிடும் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன், "மூன்றாவது நிலையின் செயல்பாட்டுக்கு இடையே பெரிய சிக்கல்" ஏற்பட்டது என்று குறிப்பிடுகிறார். Vapor Pressure போதிய அளவுக்கு இல்லாததே இதற்கு காரணம் என அறிவியலாளர்கள் கூறுவதாக குறிப்பிட்ட த.வி.வெங்கடேஸ்வரன், இதன் பின்னுள்ள அறிவியல் காரணத்தை எளிமையாக விளக்கினார். "காற்று ஊதப்பட்ட பலூனின் வாயைத் திறந்து விட்டால், அது எதிர்திசையில் வேகமாகச் செல்லும். இதுவே, பலூனின் வாயை பெரிதாக திறந்தால் காற்று வேகமாக வெளியேறி பலூனின் வேகத்தில் மாறுபாடு ஏற்படலாம். இதே போன்று தான் ராக்கெட் இயங்கும் போது, அதன் புகை வெளியேறக்கூடிய முனையில், (Nozzle) திட்டமிட்டிருந்த அழுத்தம் உருவாகவில்லை." என விளக்கினார். "இந்த அழுத்தம் சரியாக உருவாகாமல் இருந்ததற்கான காரணம் என்னவாக இருக்கலாம் என்பதில் தான் பிரச்னை உள்ளது. குறுகிய முனையின் (Nozzle) வாய்ப்பகுதி உடைந்திருக்கலாம். பிஎஸ்3 எரிபொருளில் பிரச்னை இருக்கலாம் அதாவது திட எரிபொருளை ராக்கெட்டில் நிரப்பும் போது சரியான விகிதத்தில் அது இல்லாமல் இருந்திருக்கலாம். இதில் சரியான காரணம் என்ன என்பதை இஸ்ரோ இன்னமும் அறிவிக்கவில்லை" என்பதை குறிப்பிடுகிறார் த.வி.வெங்கடேஸ்வரன். ஆனால், கடந்தமுறை 2025 , மே மாதம் செயல்படுத்தப்பட்டு முழுமையடையாத சி-61 திட்டத்திலும், இதே மூன்றாவது நிலையில், இதே போன்ற பிரச்னை தான் ஏற்பட்டது என்பது கவலைக்குரியது என குறிப்பிட்ட த.வி.வெங்கடேஸ்வரன், இது குறித்த அறிக்கை வெளிப்படையாக வெளியிடப்படவில்லை என்பதையும் கூறினார். எந்த ஒரு ராக்கெட் ஏவும் திட்டமாக இருந்தாலும், வெற்றிகரமாக நிறைவடைந்தாலும், தோல்வியடைந்தாலும் அது குறித்த அறிக்கை தயார் செய்யப்படும். இதிலிருந்து தான் இஸ்ரோவுக்கு உதிரிபாகங்கள் வழங்கியவர் தரமானதை வழங்கினாரா? இஸ்ரோவில் போதுமான பரிசோதனை செய்யாமல் அனுப்பினார்களா? யார் மீது தவறு? என்ன தவறு என்பதை தெரிந்துகொள்ள முடியும்." என த.வி.வெங்கடேஸ்வரன் கூறினார். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9dvqn6dv0po
  26. "முழு நாடுமே ஒன்றாக": நாடு தழுவிய சுற்றிவளைப்பில் 871 பேர் கைது! Published By: Digital Desk 1 13 Jan, 2026 | 11:25 AM ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுடன், இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன்படி, நேற்று திங்கட்கிழமை (12) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, 339 கிராம் ஹெரோயின், 447 கிராம் ஐஸ், 05 கிலோகிராம் 515 கிராம் கஞ்சா, 4,636 கஞ்சா செடிகள், 06 கிராம் குஷ்ரக போதைப்பொருள், 92 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 610 போதை மாத்திரைகள், 347 கிராம் 200 மில்லிகிராம் மதனமோதகம் மற்றும் 24 கிலோகிராம் 542 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அதேநேரம், குறித்த போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 871 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 08 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 888 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 09 பேர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/235905

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.