24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
https://www.karainagar.org/about-us முதலில் இரு ஊரோடு ஆரம்பிப்போம் அண்ணை. தெளிவாக இந்த திரியில் மட்டும் வேலைகளை ஒருங்கிணைப்போம். இப்போதைக்கு இந்த இரு ஊர்களிலும் மலசல கூடம் இல்லாத அத்தனை குடும்பத்துக்கும் கட்டி கொடுப்போம். ஊர்கள் காரை நகர் சுழிபுரம் வாத்தியார் அண்ணா மேலே உள்ள காரைநகர் அமைப்போடு ஆரம்ப தொடர்பை ஏற்படுத்தி தருவார் எனில், ஏராளன் தனது அமைப்பின் மூலம் இதையே சுழிபுரத்தில் செய்வாராயின் - நீங்கள் பணத்தை திரட்டி இந்த நம்பகமான அமைபுக்களிடம் கட்டம் கட்டமாக கையளித்து வேலையை முடிக்கலாம். தயவு செய்து வாத்தியார் அண்ணா, ஏராளனுக்கு @ போட்டு விடவும். அவர்கள் செய்ய வேண்டியது முதற்கட்டமாக தலா 5 குடும்பங்களை இனம் கண்டு, மலசல கூடம் கட்டி கொடுக்கும் பொறுப்பை ஏற்க இந்த அமைப்புகள் சம்ம்யிக்கிறனவா என்பதை கேட்டு சொல்வதே. வேறு யாரும் யாழ்கள உறவுகள் தமது ஊர் பாடசாலை சங்கம் மூலமும் இதை செய்ய முன்வந்தால் அதையும் செய்யலாம். உதாரணம் விசுகு அண்ணா, புலவர், நந்தன் போன்றோர் இப்படியான சங்காங்கலில் இருப்பார்கள் என நினைக்கிறேன். எனது உலக மகா சோம்பேறித்தனத்தை கொஞ்சம் ஒதுக்கி இதில் நான் ஒருங்கிணைப்பு பணியை மேற்கொள்ள சித்தமாய் உள்ளேன். பிகு சங்கங்கள் சம்பதிக்கும் போது, அதன் பொறுப்பானவர்களோடு இமெயில், போன் தொடர்புகளை பேணவும் நான் தயார். நேரடி சந்திப்புகள், பணம் (money handling) இவை மட்டும் என்னால் முடியாது.
-
இந்திய- தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப்படை செய்த நாசங்கள்
ஓம் ஆங்காங்கே மீள வந்த மாற்று இயக்கங்களால் புலிகள் சிலர் கொல்லப்பட்டது உண்மை. எனது நினைவு படி இது 10 க்குள் என நினைக்கிறேன். ஆனால் பொது சனங்கள் மீது எந்த தாக்குதலும் இல்லை.
- Today
-
400 ஆண்டுகளுக்குப் பிறகு டென்மார்க் அஞ்சல் சேவை கடிதங்களை விநியோகிப்பதை நிறுத்தவுள்ளது.
டேனிஷ் அஞ்சல் சேவை டிசம்பர் 30 அன்று தனது கடைசி கடிதத்தை விநியோகிக்கிறது, இதன் மூலம் 400 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு பாரம்பரியம் முடிவுக்கு வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கடித விநியோகத்தை நிறுத்துவது குறித்த முடிவை அறிவித்த, ஸ்வீடிஷ் மற்றும் டேனிஷ் அஞ்சல் சேவைகள் 2009-ல் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட போஸ்ட்நார்ட் நிறுவனம், டேனிஷ் சமூகத்தில் அதிகரித்து வரும் டிஜிட்டல்மயமாக்கலுக்கு மத்தியில் டென்மார்க்கில் 1,500 வேலைகளைக் குறைத்து, 1,500 சிவப்பு அஞ்சல் பெட்டிகளை அகற்றப்போவதாகக் கூறியது. டென்மார்க்கை "உலகின் மிகவும் டிஜிட்டல்மயமாக்கப்பட்ட நாடுகளில் ஒன்று" என்று விவரித்த அந்த நிறுவனம், ஆன்லைன் ஷாப்பிங் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடிதங்களுக்கான தேவை "கடுமையாகக் குறைந்துவிட்டது" என்றும், இதன் காரணமாக பார்சல்கள் மீது கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தது. ஏற்கனவே அகற்றப்பட்ட, தனித்துவமான வடிவமைப்பு கொண்ட 1,000 தபால் பெட்டிகள், இந்த மாத தொடக்கத்தில் விற்பனைக்கு வந்தபோது, வெறும் மூன்று மணி நேரத்திலேயே விற்றுத் தீர்ந்துவிட்டன. நல்ல நிலையில் உள்ள பெட்டிகளுக்கு ஒவ்வொன்றிற்கும் 2,000 டேனிஷ் குரோனர் (235 பவுண்டுகள்) என்றும், சற்றுப் பழுதடைந்தவற்றுக்கு 1,500 டேனிஷ் குரோனர் (176 பவுண்டுகள்) என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மேலும் 200 பெட்டிகள் ஜனவரி மாதம் ஏலம் விடப்பட உள்ளன. சுவீடனில் தொடர்ந்து கடிதங்களை விநியோகிக்கவிருக்கும் போஸ்ட்நார்ட் நிறுவனம், பயன்படுத்தப்படாத டேனிஷ் தபால் தலைகளுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பணத்தைத் திரும்ப வழங்கும் என்று தெரிவித்துள்ளது. https://www.theguardian.com/world/2025/dec/21/denmark-postnord-postal-delivery-letters-society
-
இலங்கையில் பிறந்த தமிழ் கல்வியாளருக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்!
துரை இது என்ன அர்ச்சனா இராமநாதன் போல் பேசுகின்றீர்கள். அவர்தான் ஓ எல் படிச்சனியா யூனிவசிட்டி போனியா என்று கேட்பார். யூரியூப் காணொளி பார்த்தேன். அதில் கிங்க் சார்ல்ஸ் பிரம்பால் தோளின் இரண்டு பக்கமும் தட்டி பார்த்துவிட்டு கழுத்தில் மாலை போட்டுவிடுகின்றார். கழுத்தில் மாட்டப்படும் மாலையின் பாரத்தை ஆள் தாங்குவாரோ என உறுதிப்படுத்த தோளில் தட்டி பார்க்கின்றார்கள் என நினைக்கின்றேன்.
-
இலங்கையில் பிறந்த தமிழ் கல்வியாளருக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்!
"சேர்" பட்டம் என்று தமிழில் சொல்வோமல்லவா? அது தான் பொதுவாக வழங்கப் படும் "நைற்" (Knight) பட்டம். பல வகையான நைற் பட்டங்கள் இருக்கின்றன. மேல் கல்வியாளருக்கு வழங்கப் பட்டது "சேர்" Sir என்று அவர் தன் பெயருக்கு முன்னாள் போட்டுக் கொள்ளக் கூடிய King's Bachelor என்ற நைற் பட்டம் என ஊகிக்கிறேன். பேராசிரியர் சேர் கனகராஜாவுக்கு வாழ்த்துக்கள். "King's Speech" என்ற திரைப் படத்தில் இந்த பிரிட்டிஷ் நைற் பட்டங்களைக் பற்றிய ஒரு உரையாடல் வருகிறது. பார்த்து ரசியுங்கள். காட்சியின் பின்னணி: ஆறாம் ஜோர்ஜ் மன்னருக்கு திக்குவாய்ப் பிரச்சினை (stuttering) இருந்ததால், ஒரு பேச்சுப் பயிற்சியாளரின் உதவியை நாடுகிறார். அவர்களது முதல் அறிமுகத்தின் போது நடக்கும் உரையாடலின் பகுதி இது: https://www.youtube.com/watch?v=arhkcfV6C28
-
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தைத் திரும்பப் பெறக் கோரி நீதி அமைச்சில் கோரிக்கை
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தைத் திரும்பப் பெறக் கோரி நீதி அமைச்சில் கோரிக்கை 30 Dec, 2025 | 04:45 PM இன்று நீதி அமைச்சில் ஒன்றுதிரண்ட இலங்கையின் சமூகச் செயல்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய "பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்" (PSTA) குறித்துத் தமது ஆழ்ந்த கவலையையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர். தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குவதற்குப் பதிலாக, அதனை மேலும் வலுப்படுத்தும் ஒரு அடக்குமுறை கருவியாகவே இந்தப் புதிய சட்டமூலம் அமைந்துள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தினர். இந்தச் சட்டமானது குடிமக்களின் அடிப்படை உரிமைகள், பேச்சுச் சுதந்திரம், தனிமனித உரிமை மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றைத் தீவிரமாகப் பாதிக்கும் அபாயத்தை உருவாக்குவதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். குறிப்பாக, இந்தப் புதிய சட்டமூலத்தின் மூலம் நிறைவேற்று அதிகாரத்திற்கு அதீத அதிகாரங்கள் வழங்கப்படுவதாகவும், சாதாரண கருத்து வெளிப்பாடுகள் கூட "பயங்கரவாதம்" எனக் குற்றம் சாட்டப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர். மேலும், அமைப்புகளைத் தடை செய்தல், ஊரடங்கு மற்றும் நடமாட்டக் கட்டுப்பாடுகள் போன்ற அதிகாரங்கள் இதன் மூலம் விரிவுபடுத்தப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். இந்தச் சூழலில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குவதாக வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், இந்தப் புதிய சட்டமூலத்தை நிபந்தனையின்றித் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். மேலும், இத்தகைய சட்டத்தின் அவசியம் குறித்துப் பொதுமக்களுடன் கலந்தாலோசித்து ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் எனவும், அதுவரை PTA சட்டத்தின் பயன்பாட்டை நிறுத்தி வைத்து தற்காலிகத் தடையை (Moratorium) நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் போது சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ராஜீவ் காந்த் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/234775
-
முதுகு வலி வராமல் தடுக்கவும் வந்தால் சமாளிக்கவும் நீங்கள் அறிய வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்
முதுகு வலி வராமல் தடுக்கவும் வந்தால் சமாளிக்கவும் நீங்கள் அறிய வேண்டிய 5 முக்கிய விஷயங்கள் பட மூலாதாரம்,Getty Images and BBC படக்குறிப்பு,பிபிசி வரைபடம் வெவ்வேறு நிலைகளில் உள்ள மூன்று பேரைக் காட்டுகிறது. ஒவ்வொருவரின் முதுகெலும்பும் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது 30 டிசம்பர் 2025, 01:52 GMT பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்வின் ஏதேனும் ஓர் சந்தர்ப்பத்தில் முதுகு வலியால் அவதிப்படுகிறார்கள். பொதுவாக, முதுகு வலி சில வாரங்களில் குறைந்துவிடும் - ஆனால் மீண்டும் மீண்டும் வலி ஏற்பட்டால், அது பாதிக்கப்பட்டவர்களை முடக்கி, அவர்களது அன்றாட வாழ்க்கையை மோசமானதாக மாற்றிவிடும். அதுமட்டுமல்ல, மனித முதுகெலும்பானது விலா எலும்புகள் மற்றும் இடுப்பு எலும்புகளுடன் மட்டுமல்லாமல், தசைநாண்கள், தசைநார்கள், குருத்தெலும்புகள், தசைகள் மற்றும் நரம்பு திசுக்களின் தொகுப்போடும் இணைக்கப்பட்டது. எனவே, இந்த பகுதிகளில் ஏதேனும் ஒன்றில் ஏற்படும் பிரச்னைகளும் முதுகு வலியை ஏற்படுத்தக்கூடும். முதுகு வலி ஏற்படுவது என்பது அனைத்து வயதினருக்கும் பொதுவானது. எனவே, முதுகு வலியைத் தடுக்கவும், முதுகு வலி இருந்தால், அதை சிறப்பாக கையாளவும் முக்கியமான ஐந்து உபாயங்களைத் தெரிந்துக் கொள்வோம். மேல் அல்லது கீழ்? அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் Institute for Health Metrics and Evaluation ஆராய்ச்சியாளர்கள் தயாரித்த 'குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ்' என்ற ஆய்வின் சமீபத்திய பதிப்பின்படி, நாள்பட்ட கீழ் முதுகு வலியுடன் வாழ்பவர்களின் எண்ணிக்கை 2050-ஆம் ஆண்டு வரையிலான 30 ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேல் அதிகரிக்க உள்ளது. அப்போதைய காலகட்டத்தில், உலக மக்கள்தொகையில் பத்தில் ஒருவர் முதுகு வலியால் பாதிக்கப்படுவார்கள். உலகளாவிய ஆரோக்கியத்தில் முதுகு வலியை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் நோய்கள் என்று குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ் ஆய்வு கூறுவதையும் தெரிந்துகொள்வோம். பக்கவாதம், இதயம் மற்றும் நுரையீரல் நோய்கள், நீரிழிவு மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளைப் பாதிக்கும் நோய்கள் ஆகியவையே அவை. முதுகுப் பகுதியின் கீழ் பகுதியே உடலின் அதிகளவிலான அசைவுகளுக்குத் துணைபுரிவதாலும், அதிக அழுத்தத்தை உள்வாங்கிக் கொள்வதாலும், அங்குதான் அடிக்கடி வலி ஏற்படுகிறது. இருப்பினும், உடலின் மேல் முதுகுப் பகுதி, குறிப்பாக கழுத்து மற்றும் தோள்பட்டை பகுதிகளும் கூட இத்தகைய வலியை உண்டாக்கலாம். படக்குறிப்பு,33 முள்ளெலும்புகளைக் கொண்ட மனித முதுகெலும்பானது பொதுவாக மண்டையோட்டின் அடிப்பகுதியில் இருந்து பிட்டத்தின் உச்சி வரை நீண்டுள்ளது, அதன் கீழ் உள்ள ஒன்பது முள்ளெலும்புகள் ஒன்றாக இணைந்திருக்கின்றன சிகிச்சைக்கு முன் நோயறிதல் சிகிச்சைக்கு முன் நோயறிதல் என்ற மருத்துவக் கொள்கை முதுகு வலிக்கு மிகவும் பொருத்தமானது. ஏனென்றால், முதுகு வலி ஏற்படுவதற்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும், முதுகு வலி ஏன் ஏற்பட்டது என்பதைக் கண்டறிய ஒரேயொரு குறிப்பிட்ட நோயறிதல் சோதனை என்று எதுவும் கிடையாது. பித்தப்பை அல்லது சிறுநீரக நோய் அல்லது சில வகை புற்றுநோய்கள் என உயிருக்கு ஆபத்தான நிலைகளை மருத்துவர்கள் பொதுவாக முதலில் நிராகரிக்க முயற்சிப்பார்கள். வழக்கமாக, நோயறிதல் என்பது உடல் பரிசோதனை மற்றும் நோயாளியின் மருத்துவ வரலாற்றைச் சரிபார்ப்பதையும் உள்ளடக்கியது. ரத்தப் பரிசோதனைகள் மூலம் புற்றுநோய் அல்லது குருத்தெலும்புகளை சேதப்படுத்தி மூட்டுவலியை உண்டாக்கும் வீக்கங்களைக் கண்டறிய முடியும். மேலதிக உறுதிப்படுத்தலுக்கு, மூட்டுகள், எலும்புகள், டிஸ்க்குகள், உறுப்புகள் அல்லது மென்மையான திசுக்களை ஆய்வு செய்ய எக்ஸ்-ரே, சிடி ஸ்கேன், அல்ட்ராசவுண்ட் அல்லது எம்ஆர்ஐ போன்ற இமேஜிங் சோதனைகள் தேவைப்படலாம். பெரும்பாலான முதுகுவலிகள் லேசான வலி மற்றும் உடல் இறுக்கமானது போன்ற உணர்வாகவே இருக்கும். ஆனால், தசை அல்லது தசைநார் கிழிந்துபோனால் திடீரென கடுமையான வலியை உண்டாக்கும். அதேபோல, பிட்டம் மற்றும் கால்களுக்கு பரவும் வலி, அந்தப் பகுதிகளில் ஊசி குத்துவது போன்ற உணர்வு அல்லது மரத்துப்போதல் போன்ற அறிகுறிகள் தோன்றுவது நரம்புப் பாதிப்பின் அறிகுறியாகவும் இருக்கலாம். தசைகளில் உள்ள மின் செயல்பாட்டை ஆய்வு செய்யும் 'எலக்ட்ரோடியாக்னோசிஸ்' முறை, தசை மற்றும் நரம்பு கோளாறுகளுக்கு இடையிலான வேறுபாட்டை கண்டறிய உதவும். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பிற எலும்புகளை விட முதுகெலும்பு வேகமாக நீளமாகும்போது, அது குழந்தைகளுக்கு வலியை ஏற்படுத்தலாம் இந்த நோயறிதல் அணுகுமுறையானது பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் பொருந்தும். இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் குழந்தை நல மருத்துவராகப் பணியாற்றியவரும், தற்போது ஜெர்மனியில் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிந்துவரும் மருத்துவர் அரினா டிசோசா, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வரும்போது தான் கூர்ந்து கவனிக்கும் விஷயங்கள் என்ன என்பதை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்: "குழந்தைகள் குதித்து விளையாடிக்கொண்டிருப்பார்கள், அப்போது நான் சில விஷயங்களைக் கூர்ந்து அவதானிப்பேன்: அந்தச் செயல்பாடுகளின் போது அவர்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டதா? மறைந்திருக்கும் தசைக்கூட்டு குறைபாடுகள் ஏதேனும் உள்ளனவா? பெற்றோர்களுக்கும் முதுகு வலி வரும் வாய்ப்பு உள்ளதா? அவர்கள் சமச்சீர் உணவை உண்கிறார்களா? முழங்கால்களிலும் கால்களிலும் ஏற்படும் வலி அதிகரித்து வருவதைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் சில சமயங்களில் இது முதுகிலும் ஏற்படலாம் - ஏனெனில் ஓர் குழந்தையின் முதுகெலும்பு முழுவதுமே, சில நேரங்களில் பிற எலும்புகளை விட மிகத் துரிதமாக நீளமாக வளரும். பட மூலாதாரம்,Getty Images ஆரோக்கியமான மனம், ஆரோக்கியமான உடல் முதுகு வலி மீண்டும் வந்துவிடுமோ என்ற அச்சமே சில நோயாளிகளின் குணமடையும் செயல்முறைக்கு தடையாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். "முதுகெலும்பு மற்றும் தசைப் பிரச்னைகள் ஏதும் இல்லாதபோதும், மீண்டும் வலி வந்துவிடுமோ என்ற கவலையே சிலர் தங்கள் முதுகைப் பயன்படுத்துவதில் அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது" என இங்கிலாந்தின் Down2U Health and Wellbeing இயக்குனர் ஆடம் சியு, பிபிசியிடம் தெரிவித்தார். மேலும், "இந்த பயம் அவர்களைச் சுறுசுறுப்பற்றவர்களாகவும், மந்தமானவர்களாகவும் மாற்றுகிறது. சிலர் தங்களுக்குப் பிடித்தமான செயல்களைச் செய்வதைக் கூட நிறுத்திவிடுகிறார்கள்," என்று அவர் கூறுகிறார். ஆஸ்திரேலியாவின் மக்வாரி பல்கலைக்கழகத்தின் பிசியோதெரபி பேராசிரியர் மார்க் ஹான்காக் முதுகு வலி பற்றிக் கூறுகையில்: "சில நோயாளிகள் தங்கள் முதுகுப் பகுதிக்கு சேதம் ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தால், சமூக வாழ்க்கையிலிருந்தே விலகிவிடுகிறார்கள். சமூக அழுத்தம், வலியைப் பற்றிய கவலை, எரிச்சலூட்டும் முதுகு வலி என அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பார்க்கும்போது, திடீரென்று இதுவொரு மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்கிறது" என்று கூறுகிறார். எனவே, முதுகு வலி என்பது ஆக்கப்பூர்வமான மற்றும் முழுமையான அணுகுமுறையின் அவசியத்திற்கான தேவையை ஏற்படுத்தியுள்ளது. "உலகெங்கிலும் உள்ள மருத்துவ வழிகாட்டுதல்களும் இப்போது உடல் ரீதியான, உளவியல் ரீதியான மற்றும் சமூகக் காரணிகளுக்குத் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தைப் பற்றி பேசுகின்றன," என்று பேராசிரியர் ஹான்காக் கூறுகிறார். "சி.எஃப்.டி (Cognitive Functional Therapy) எனப்படும் சிகிச்சை முறை, நோயாளிகள் சிகிச்சையாளர்களுடன் கலந்துரையாடி, வலிக்குக் காரணமான பல்வேறு விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள அனுமதிக்கிறது. அதன்பின், அவர்களுக்குப் பிடித்தமான செயல்களைப் படிப்படியாக மீண்டும் செய்வதற்குத் தகுந்த மாற்று வழிகளுடன் கூடிய திட்டம் ஒன்று வகுக்கப்படுகிறது. தேவைப்பட்டால், நோயாளிகளின் வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்த சிகிச்சையாளர்கள் அவர்களுடன் இணைந்து செயல்படுவார்கள்." முன்னேறிக் கொண்டே இரு பட மூலாதாரம்,Adam Siu படக்குறிப்பு,முகப்பு மூட்டு மாதிரியைப் பயன்படுத்தி, உட்காரும்போது அல்லது குனியும் போது முதுகெலும்புத் தட்டு எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்குகிறார் ஆடம் சியு மீண்டும் வலி ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தால், ஓய்வு எடுப்பது குணமடைய உதவும் என சில நோயாளிகள் நம்புகிறார்கள். ஆனால், அது தவறு எனக் கூறும் பிரிட்டிஷ் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் (BASS), முதுகு வலியைத் தவிர்ப்பதற்கு சுறுசுறுப்பாக இருப்பது முக்கியம் என்று கூறுகிறது. முதுகு வலிக்காக அதிக ஓய்வு எடுப்பது என்பது, வலி குணமாகும் காலத்தை மேலும் நீட்டிக்கும் என கடந்த பத்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஆராய்ச்சிகளும் கூறுகின்றன. "முதுகெலும்புத் தொடர், வெர்டிப்ரே எனப்படும் தனிப்பட்ட எலும்புகளால் ஆனது, இது இயற்கையாகவே வெவ்வேறு பிரிவுகளில் வளைந்திருக்கும்" என ஆடம் சியு கூறுகிறார். "உடலின் எடை மற்றும் அசைவுகளுக்கு முதுகெலும்பு துணைபுரிய முதுகெலும்புத் தொடரின் வளைவுகள் உதவுகின்றன. முதுகெலும்பின் மேல் பகுதியில் உள்ள 24 எலும்புகள் நெகிழ்வுத்தன்மை கொண்டவை; இவை ஒவ்வொன்றும் ஃபேசெட் மூட்டுகளால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொன்றுக்கும் இடையில் இன்டர்வெர்டெபிரல் டிஸ்க் எனும் மெத்தை போன்ற அமைப்பு உள்ளது. இந்த இயற்கையான அமைப்பு மற்றும் அந்த டிஸ்க்கின் அதிர்வுகளைத் தாங்கும் தன்மை பலவீனப்படாமல் இருக்க வேண்டுமெனில், அமர்வது, குனிவது அல்லது நீண்ட நேரம் நிற்பது என ஒரே நிலையில் இருப்பதைத் தவிர்ப்பது மிகவும் அவசியம்." ஆனால் நவீன வாழ்க்கை முறையில், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது, ஆன்லைனில் படிப்பது, கேம் விளையாடுவது, வீடியோக்களைப் பார்ப்பது என உடலுழைப்பு குறைந்துவிட்டது. அலுவலக ஊழியர்களில் சிலருக்கு மட்டுமே அவ்வப்போது ஓய்வு எடுப்பதற்கோ அல்லது நடப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்; ஆனால் பல வேலைகளில் இதற்கான வாய்ப்புகளும் இருக்காது. "வாகன ஓட்டுநராக இருந்தால், போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருக்கும் போது அமர்ந்த நிலையிலேயே சில பயிற்சிகளை செய்ய முயற்சிக்கலாம்," என்று ஆடம் சியு கூறுகிறார். "கனமான பொருட்களைத் தூக்கும் கட்டுமானத் தொழிலாளர்கள், வேலை செய்வதற்கான வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். குறிப்பிட்ட உடற்பயிற்சிகளைத் தெரிந்துகொள்ள பிசியோதெரபிஸ்ட்டுகளை அணுக வேண்டும்." கர்ப்பகால முதுகு வலி பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கர்ப்பமுற்ற பெண்கள், உடல் தோரணை, உடல் எடைப் பரவல் மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அனுபவிக்கின்றனர் கர்ப்ப காலமும் முதுகு வலியை உண்டாக்கக்கூடும் - அதுவும் கர்ப்பத்தின் ஆரம்ப கட்டங்களிலேயே இது ஏற்படலாம். கருத்தரித்த சில காலத்திலேயே பெண்ணின் உடலில் 'ரிலாக்ஸின்' என்ற ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கிறது. இது பிரசவத்திற்குத் தயாராகும் வகையில் பெண்ணின் இடுப்புப் பகுதியில் உள்ள தசைநார்களைத் தளர்த்தி, கருப்பை வாயை மென்மையாக்குகிறது. ஆனால், அதே வேளையில் இது முதுகெலும்பில் உள்ள இணைப்புத் திசுக்களையும் மூட்டுகளையும் தளர்த்துவதால், முதுகின் கீழ் பகுதியில் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. கரு வளரும்போது, கர்ப்பிணிகள் தங்களின் உடல் நிலை, உடல் எடை பரவல் மற்றும் மன அழுத்தத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உணர்கிறார்கள். கர்ப்ப காலத்தில் முதுகு வலியைத் தணிக்க சில குறிப்புகள்: உடலைத் திருப்பும் போது, முதுகெலும்பை முறுக்குவதைத் தவிர்க்க உங்கள் கால்களையும் சேர்த்துத் திருப்புங்கள். உங்கள் உடல் எடையைச் சீராகத் தாங்கக்கூடிய வசதியான காலணிகளை அணியுங்கள். மகப்பேறு கால சிறப்புத் தலையணைகள் மற்றும் நல்ல மெத்தையை பயன்படுத்துவது, போதுமான ஓய்வு பெற உதவும். வலி நிவாரண மாத்திரைகளை எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும்? "முதுகு வலியின் ஆரம்ப கட்டத்தில், மருந்துக் கடைகளில் சாதாரணமாக கிடைக்கக்கூடிய வீக்கத்தைக் குறைக்கும் (anti-inflammatory) மருந்துகளை எடுத்துக்கொள்வது தவறில்லை; இது நீங்கள் தொடர்ந்து இயங்குவதற்கு உதவும்" என்று சியு கூறுகிறார். "ஆனால், வலி தொடர்ச்சியாக இருந்தால் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து சரிசெய்யாமல், சில வாரங்களுக்கு மேலாகவோ அல்லது நீண்ட காலமோ இந்த மருந்துகளை மட்டுமே எடுத்துக்கொண்டால், அது பிரச்னையை மூடி மறைப்பதாகவே அமையும். துரதிருஷ்டவசமாக, பல ஆண்டுகளாக மருந்துகளை மட்டுமே பயன்படுத்தும் நபர்களை பார்க்கிறேன்." வலியை மரத்துப் போகச் செய்வது என்பது, அந்த வலிக்கான உண்மையான காரணத்தை மேலும் மோசமாக்கும் என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால், பிரிட்டிஷ் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் (BASS) இதை மறுக்கிறது. "இது முற்றிலும் உண்மையல்ல. நம் உடலில் மிகவும் வலிமையான பாதுகாப்பு அனிச்சைச் செயல்கள் உள்ளன. சாதாரண வலி நிவாரணிகளால் அவற்றை அகற்றிவிட முடியாது. அதாவது, வலி நிவாரணிகள் வலியை மட்டுமே குறைக்கும்; ஆபத்தான செயல்களில் இருந்து உங்களைத் தடுக்கும் உடலின் இயற்கையான பாதுகாப்பு உணர்வை அவை நீக்கிவிடாது. இதற்கு உதாரணமாக, சாதாரண வலி நிவாரணிகளை எடுத்துக்கொண்டவர், கொதிக்கும் நீரில் கையை வைத்தால் என்னவாகும்? உடலின் அனிச்சை செயல்கள் வலியை ஏற்படுத்தும். அதேபோலத்தான், எளிய வலி நிவாரண நடவடிக்கைகளை எடுத்துக்கொண்ட பிறகு நடமாடுவதால் ஒருவரின் முதுகுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடாது. இவ்வகையான மருந்துகளை எடுத்துக்கொள்வதில் உங்களுக்கு சந்தேகம் ஏதேனும் இருந்தால், ஒரு மருந்தாளரிடம் கலந்தாலோசிக்கவும்." மூல உரை: பிபிசி நியூஸ் வேர்ல்ட் சர்வீஸ், குளோபல் ஜர்னலிசம் க்யூரேஷன் கூடுதல் தகவல்கள்: பிபிசி நியூஸ் மராத்தியின் கணேஷ் போல் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c33m37mgy4po
-
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது Dec 30, 2025 - 12:40 PM முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோவின் மகன் ஜொஹான் பெர்னாண்டோ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சதொசவுக்கு சொந்தமான லொறி மற்றும் மேலும் சில வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். அதேநேரம் சம்பளம் மற்றும் கொடுப்பனவு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://adaderanatamil.lk/news/cmjs8znxs03a9o29ndhg8ar4l
-
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தேவாநந்தா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!
- பொலிசாரிடம் வேலன் சுவாமிகளின் ஆபத்தான திக்.. திக்.. நிமிடங்கள் - முதன் முறையாக அம்பலமாகும் உண்மைகள்!
பொலிசாரிடம் வேலன் சுவாமிகளின் ஆபத்தான திக்.. திக்.. நிமிடங்கள் - முதன் முறையாக அம்பலமாகும் உண்மைகள்! சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள தையிட்டி தொடர்பாக அதிலே பங்குபற்றித் தாக்குதலுக்குள்ளானவரால் பேசப்படும் கருத்துகளுக்காக இணைத்தள்ளேன். நன்றி - யூரூப் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி (லங்காசிறியின் தலைப்பு காணொளியோடு ஒத்துப்போகவில்லை என்பது வேறு)- உயர்தர மாணவிக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான நிலை
உயர்தர மாணவிக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான நிலை Dec 30, 2025 - 04:24 PM உயர்தரப் பரீட்சையை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்காகக் கடுமையாக உழைத்து வந்த பாடசாலை மாணவி ஒருவர், எதிர்பாராத விதமாகப் பாதிக்கப்பட்டுள்ள துரதிர்ஷ்டவசமான நிலைமை குறித்து மத்துகமவிலிருந்து செய்தி வெளியாகியுள்ளது. மத்துகம, பெலவத்தை பகுதியைச் சேர்ந்த இசுரி கௌசல்யா மீகஹபொல என்ற இந்த மாணவி, மத்துகம அதிகாரம் வித்தியாலயத்தில் கல்வி பயின்று வருகிறார். தனது வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்ற ஆயிரம் கனவுகளுடன் கல்வியில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்த இவருக்கு, தற்போது மிகப்பெரிய சவாலொன்று ஏற்பட்டுள்ளது. அவர் 'லுகேமியா' (Leukemia) எனப்படும் இரத்தப் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதே இதற்குக் காரணமாகும். 2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த போதிலும், இந்தத் திடீர் நோய் நிலைமை காரணமாக அவருக்கு அந்த வாய்ப்பு பறிபோயுள்ளது. இந்த மாணவியின் சிகிச்சைக்கு உதவ அல்லது அவருக்குத் தோள் கொடுக்க விரும்பும் எவரும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இலக்கங்கள் ஊடாகத் தொடர்புகொண்டு மேலதிக விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்: 072 8441 223 078 3953 506 https://adaderanatamil.lk/news/cmjsgzk5n03aro29nbnzw7dq4- தோட்டப் பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகளை அமைக்க தீர்மானம்
தோட்டப் பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகளை அமைக்க தீர்மானம் Dec 30, 2025 - 03:47 PM தோட்டப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட 14 பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மத்திய, ஊவா, சப்பரகமுவ, மேல், தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள தேயிலை மற்றும் இறப்பர் தோட்டப் பகுதிகளில் தற்போது 864 பாடசாலைகள் இயங்கி வருகின்றன. இப்பாடசாலைகளில் பெரும்பாலானவை நகரங்களிலிருந்து மிகத் தூரமான மற்றும் அசாத்தியமான பிரதேசங்களில் அமைந்துள்ளதால், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அங்கு சென்று கடமையாற்றுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். முறையான தங்குமிட வசதிகள் இல்லாமையால் இப்பாடசாலைகளில் குறிப்பாக இரண்டாம் நிலை வகுப்புகளில் பாரிய ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. இதன் காரணமாக க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் ஏனைய அரச பாடசாலைகளுடன் ஒப்பிடுகையில் இப்பகுதி மாணவர்களின் தேர்ச்சி மட்டம் மிகவும் குறைவாகக் காணப்படுகிறது. இவ்விளைவினால் தோட்டப்புற இளைஞர் தலைமுறையினர் திறனற்ற தொழிலாளர்களாக மாறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையைக் கருத்திற் கொண்டு, தோட்டப் பாடசாலைகளின் மனிதவளம் மற்றும் பௌதீக வளங்களை அதிகரிக்க வேண்டியது அவசியமெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, முதற்கட்டமாக 14 தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகளை நிர்மாணிப்பதற்கான திட்டத்தை அந்தந்த மாகாண சபைகள் ஊடாக நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmjsfo5dg03ano29n4ncre58i- இந்திய- தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப்படை செய்த நாசங்கள்
இந்தியப் படையுடனான போர் தொடங்குவதற்கு முன் ஆயுதமில்லாத புலிகள் 22 பேர்வரை இவர்களது கையாட்களால் கொல்லப்பட்டார்கள் என எண்ணுகிறேன். ( எண்ணிக்கை சரியாக தெரியவில்லை)- முல்லைத்தீவு ஓய்வு பெற்ற அதிபருக்கு எதிரான முறைப்பாடு - நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் செயலகம் பணிப்புரை!!
முல்லைத்தீவு ஓய்வு பெற்ற அதிபருக்கு எதிரான முறைப்பாடு - நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் செயலகம் பணிப்புரை!! 30 Dec, 2025 | 10:02 AM முல்லைத்தீவு வலயப் பாடசாலை ஒன்றின் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ள அதிபர் ஒருவரின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்குமாறு அவரின் முறைகேடான மற்றும் ஊழல் மிக்க செயற்பாடுகளை முன்னிலைப்படுத்தி பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்த முறைப்பாட்டை கல்வி அமைச்சிற்கு கையளித்து நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் செயலகம் பணிப்புரை வழங்கியுள்ளது. பிரதமர் செயலகத்தின் மூத்த உதவிச் செயலாளர் T. ஸ்ரீமன்ன மேற்கண்ட முறைப்பாட்டை 12.12.2025 ஆம் இலக்க கடிதம் மூலம் கல்வி அமைச்சுக்கு பாரப்படுத்தி உள்ளார். மேற்குறித்த அதிபர் அரச சட்டதிட்டங்களை மீறி சமூக ஊடகங்கள் வாயிலாக நிதி திரட்டியதும் மற்றும் பாடசாலையுடன் தொடர்பு இல்லாத பாடசாலையின் பெயரில் இயங்கும் நிதியம் ஒன்றிற்கு நிதி அனுசரணை வழங்குமாறு கோரிய கடிதம் போன்றன குற்றச்சாட்டுகளாக பிரதமர் அலுவலகத்தில் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/234717- யாழில் 4 கிலோ கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது!
ம்ம்ம்… ஒரு பிரதேச சபை உறுபினர்க்கு இப்படி மினக்கெடுவார்களா? பார்ப்போம்.- இந்திய- தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப்படை செய்த நாசங்கள்
வடிவேலு ஜோக் “ஜாமீன் கடல்லையே இல்லையாம்” தான் நினைவுக்கு வந்தது. புலிகள் ஏக பிரதிநிதிகள் என்பதை உடைக்க இந்தியா பல வேலைகளை செய்தது. தியாகதீபத்தின் கோரிக்கைகளை அநியாயமாக உதாசீனம் செய்தது. பன்னிருவேங்கைகள் கொழும்புக்கு மாற்றப்படுவதை வேடிக்கை பார்த்தது. ஆனால்…. இந்த காலத்தில் தமிழ் மக்கள் மீது இந்திய படையின் அராஜகம் எண்டால் - கிட்டதட்ட குச் நஹி. ஆனால் இக்காலத்தில் முஸ்லிம்கள் எதிர்காலம் பற்றி கொஞ்சம் பயத்துடனும்… வெலி ஓயா முதல் பானமை வரை சிங்கள குடியேற்றவாசிகள் அதீத கலக்கத்துடனும் இருந்தனர். #வரலாறு முக்கியம்- தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் சின்னம் விசிலா? மோதிரமா?
- மலையகப் பாதைகளில் குவியும் மண்சரிவு மண்: சமூக சிக்கலாக மாறும் அபாயம்
அண்ணே, மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களமோ?! https://np.gov.lk/information-officers-and-designated-officers-department-of-road-development/ https://rda.gov.lk/index.php?lang=ta- யாழில் 4 கிலோ கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது!
ஆளை மடக்க ஒரு கூட்டு முயற்சியாகவும் இருந்திருக்கலாம்.- இலங்கையில் பிறந்த தமிழ் கல்வியாளருக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்!
வாழ்த்துக்கள். அது என்ன நைட் பட்டம்? பல்கலைக்கழகம் போனவர்கள் மாத்திரம் பதிலளிக்கவும்.- யாழில் 4 கிலோ கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது!
பொறுத்திருந்து பார்ப்போம். சுமன் ஆதாரவாளர் எண்டால் இருக்கு கச்சேரி😂- யாழில் 4 கிலோ கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது!
யாருடைய ஆளாக இருந்தாலும் தமிழரசுக்கட்சி ஆள் என்றால் சுமந்திரனிடமிருந்து ஆளை வெளியே போடும் கடிதம் வந்திருக்கும். எனவே இது வேறுகட்சி ஆட்களாகவும் இருக்கலாம்.- 'சோமாலிலாந்துக்கு தனி நாடு அங்கீகாரம்' - இஸ்ரேல் வியூகமும் இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்பும்
ப்ரோ…. ஜோக் எண்டு நினைச்சு உண்மையை சொல்லி போட்டியள். ஈழ போராட்டத்தின் ஆரம்பத்தில் கம்யூனிசம், பலஸ்தீன ஆதரவு என்ற வெத்து வேலைகளில் நாம் இறங்கியதன் பலனை கடைசிவரை அனுபவித்தோம். இல்லாமல் அப்போதே ஒரு அதி வலதுசாரி போக்கை எடுத்து இருந்தால் - நமக்கு சில நண்பர்களாவது மிஞ்சி இருப்பார்கள்.- மலையகப் பாதைகளில் குவியும் மண்சரிவு மண்: சமூக சிக்கலாக மாறும் அபாயம்
வாட் ப்ரோ…. வெரி ராங் ப்ரோ- யாழில் 4 கிலோ கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது!
சுமன் குரூப்போ, சிறி குரூப்போ எண்டும் சொன்னால்தானே எந்த வகையில் கருத்து எழுத வேண்டும் என தீர்மானிக்க முடியும்😂. சுமன் குரூப் இல்லை எண்டால் - திரியை கடந்து போகும் எண்ணத்தில் உள்ளோர் எல்லாம் பாவம் எல்லோ😂. - பொலிசாரிடம் வேலன் சுவாமிகளின் ஆபத்தான திக்.. திக்.. நிமிடங்கள் - முதன் முறையாக அம்பலமாகும் உண்மைகள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.