Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. முட்டாள் பயலுகளே… எந்த முகாமுக்கு அவங்களை கொண்டு போய் வைத்திருக்கிறீர்கள் என்று சொல்லாதீங்க. நிண்ட வெள்ளத்தை, வந்த வெள்ளம் கொண்டு போன மாதிரி… முழு முகாமையும் இஸ்ரேல்காரன் குண்டு போட்டு அழிக்கப் போறான். 😂
  3. யுத்தத்தில் காணாமல் போன உறவுகளின் நிலையை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார 08 Mar, 2026 | 11:29 AM (இராஜதுரை ஹஷான்) யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு. நாங்கள் இதனை மறுதழிக்கவில்லை. காணாமல் போனோர் பற்றிய விவகாரத்தில் சர்வதேச கட்டமைப்பு அல்லது பொறிமுறை ஊடாக நீதியை பெற்றுக்கொள்ள முடியாது.காணாமல் போனோர் பற்றிய அலுவகத்தின் ஊடாக மாத்திரமே தீர்வு காண முடியும்.காணாமல் போனோர் பற்றியவர்களின் உறவுகளில் பெரும்பாலானோர் இழப்பீடு கோரவில்லை. நீதியையும், தமது உறவுகளுக்கு நேர்ந்தது என்னவென்பதையுமே கேட்கிறார்கள்.இந்த விடயம் தனித்துவமானதுடன், உணர்வுபூர்வமானது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் விசாரணைக்குழு தலைவர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் முறைமைகள் குறித்து விளக்கமளிக்கும் இரண்டாவது தொகுதி பயிற்சியாளர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சி நேற்று முன்தினம் இராஜகிரியவில் உள்ள காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் கட்டமைப்பிற்குள் விசாரணைகளின் நோக்கங்களைப் புரிந்துகொள்வது விசாரணைக் குழுக்களின் பங்கு காணாமல் போனோர் அலுவலகத்தால் வழங்கப்படும் நிறுவன ஆதரவு விசாரணை செயல்பாட்டில் உள்ள படிநிலைகள் விசாரணை நடைமுறைகள் மற்றும் ஆரம்ப விசாரணை உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் குறித்து விசாரணைக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக சிரேஷ்ட அதிகாரிகள்இ ஆரம்ப விசாரணைக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்த நீதியமைச்சர், காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகியன நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் பிரதான அலுவலகங்களாக காணப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் காணாமல் போனோர் பற்றி தொடர்ச்சியாக பேசப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நாடுகள் இந்த விடயத்தில் உன்னிப்பாக அவதானம் செலுத்தின.இருப்பினும் முறையான நடவடிகைகள் தேசிய மட்டத்தில் துரிதமாக முன்னெடுக்கப்படவில்லை. காணாமல் போனோர் பற்றி விவகாரம் தனித்துவமானது. இதற்கு அரசியல் ஒத்துழைப்பு மற்றும் நிதி ஒத்துழைப்பு போதுமானதாக கிடைக்கப்பெற வேண்டும். யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இவ்விரு ஒத்துழைப்புக்களும் காணாமல் போனோர் அலுவலகத்துக்கு போதுமானதாக கிடைக்கப்பெறவில்லை. காணாமல் போனோர் தொடர்பில் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்தோம். காணாமல் போனோர் விவகாரம் வடக்கு,கிழக்கு, தெற்கு என சகல மாகாணங்களுக்கும் விரிவாக்கப்பட்டதொரு பிரச்சினையாகவே காணப்படுகிறது. எவருக்கும் நாங்கள் எவ்விடத்திலும் சிறப்பு சலுகை வழங்கவில்லை. உண்மையை வெளிக்கொண்டு வரவும், நீதியை நிலைநாட்டவும் சட்டத்தின் பிரகாரம் செயற்படுகிறோம். பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக இரத்துச் செய்யப்படும்.மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும். நாட்டில் இனவாதம் மற்றும் பிரிவினைவாதத்துக்கு இனியொரு போதும் கிடையாது. இதனால் தான் 30 வருடகால யுத்தம் தோற்றம் பெற்றது.அதன் தாக்கங்களும் இன்றளவில் தொடர்கின்றன. யுத்தம் அல்லது வேறேதும் காரணிகளால் ஒரு குடும்பத்தின் உறுப்பினர் காணாமலாக்கப்பட்டால் அந்த குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கி அவர்களை திருப்திப்படுத்த முடியாது. காணாமல் போனோரின் உறவுகளின் வலி மற்றும் உணர்வுகளை எம்மால் விளங்கிக் கொள்ள முடியும்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்குச் செல்கையில் எம்மால் இதனை உணர முடிகிறது. அவர்களுடன் உரையாடும் போது 'எமது உறவுகளுக்கு என்னவாயிற்று, எப்போது வருவார்கள்' என்று தான் கேட்கிறார்கள். கடந்த கால அரசியல் காரணிகளால் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் மீது நம்பிக்கையின்மை காணப்பட்டது. ஆனால் தற்போது அந்த நிலைமை மாற்றமடைந்துள்ளது.மக்களின் நம்பிக்கையுடன் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளது. நிலைமையும் மாற்றமடைந்துள்ளது.தற்போது கட்டம் கட்டமாக காணிகள் விடுவிக்கப்படுகின்றன. வலிந்து காணாமலாக்கபட்டவர்களின் உறவுகளில் பெரும்பாலானோர் இழப்பீடு கோரவில்லை. நீதியை கேட்கிறார்கள்.தமது தந்தை, தாய், சகோதரர்கள் மற்றும் பிள்ளைகளுக்கு நேர்ந்தது என்ன, நீதி என்ன என்றே கேட்கிறார்கள்.அது நியாயமானதே,மனித புதைகுழிகள் அகழ்வு மற்றும் அடுத்தக்கட்ட விசாரணைகளுக்கு தேவையான நிதி நீதிமன்றத்தின் உத்தரவு ஊடாக விடுவிக்கப்பட்டுள்ளன. உண்மை வெளிவர வேண்டும், நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற வெளிப்படையான நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது. காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாட்டையும், அதன் ஊழியர்களின் சேவையையும் உச்ச அளவில் எதிர்பார்க்கிறோம்.நடைமுறைக்கு சாத்தியமான வகையில் காணாமல் போனோர் பற்றிய அலுவலக உத்தியோகத்தர்களுக்கு பயிற்சியளிக்கிறார்கள். தள்ளாடும் வயதில் உள்ள பெற்றோர்களும் தமது பிள்ளைகளுக்காக எதிர்பார்த்துள்ளார்கள்.இதுவொரு தனித்துவமானதொரு விடயம் என்பதை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும்.காணாமல் போனோர் பற்றிய விவகாரம் உணர்வுபூர்வமானது என்பதை விளங்கிக் கொண்டு விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். காணாமல் போனோர் பற்றிய விவகாரத்தில் சர்வதேச கட்டமைப்பு அல்லது பொறிமுறை ஊடாக நீதியை பெற்றுக்கொள்ள முடியாது.காணாமல் போனோர் பற்றிய அலுவகத்தின் ஊடாக மாத்திரமே தீர்வு காண முடியும்.யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவன், பிள்ளைகள் மற்றும் உறவுகள் எங்கே என்று கேள்வி கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு.நாங்கள் இதனை மறுதழிக்கவில்லை. காணாமல் போனோர் பற்றி விவகாரத்தை உணர்வுபூர்வமாக பார்க்க வேண்டும். தேவையான வளங்களை நாங்கள் வழங்குகிறோம்.இந்த விடயத்தில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது என்றார். https://www.virakesari.lk/article/240431
  4. மத்திய கிழக்கு போர் பதற்றத்தால் தேயிலை தோட்ட உரிமையாளர்கள் நெருக்கடிகளை சந்திக்கும் நிலை 08 Mar, 2026 | 02:13 PM (க.சிவலிங்கமூர்த்தி) இலங்கையின் அந்நியச் செலாவணி ஈட்டும் பிரதான துறையான தேயிலை கைத்தொழில் தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. குறிப்பாக ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை மற்றும் கடல் வழிப் போக்குவரத்துத் தடைகள் என்பன இத்துறையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளாதாக இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லயனல் ஹேரத் மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் பிரசன்ன பெரேரா ஆகியோர் இக்கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லயனல் ஹேரத் கூறுகையில், இலங்கையின் கீழ் நாட்டு தேயிலை உற்பத்தியில் 150 மில்லியன் கிலோவுக்கும் அதிகமான அளவு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இதில் 10 முதல் 15 வீதமான உயர் ரக தேயிலை ஈரானுக்கு அனுப்பப்படுகின்றது. தற்போதைய போர்ச் சூழல் காரணமாக ஈரான் தேயிலை கொள்வனவை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடல் வழிப் போக்குவரத்துகளிலும் தடைகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலைமை தொடருமானால் வாராந்தம் முற்பணத்தைப் பெற்றுக்கொள்ளும் தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்க முடியாமல் போகும். இலங்கையில் சுமார் ஐந்து இலட்சம் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் உள்ளனர். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10 வீதமான சுமார் இரண்டு மில்லியன் மக்கள் இத்துறை மூலமே வாழ்வாதாரத்தைப் பெற்று வருகின்றனர். தேயிலை விற்பனை பாதிக்கப்படுவது இவர்களது வாழ்வாதாரத்தை ஒரு நெருக்கடிக்குள் தள்ளும் என்றார். மேலும் பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் பிரசன்ன பெரேரா குறிப்பிடுகையில் மத்திய கிழக்கு போர் பதற்றத்தால் வெளிநாடுகளில் பணிபுரிபவர்களிடமிருந்து கிடைக்கும் வருமானம் குறைவடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கு வான்பரப்பு வான்வழிப் பயணங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளதால் விமானப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டு சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடல் வழிப் போக்குவரத்துகளும் மிகவும் ஆபத்தான நிலையை எட்டியுள்ளதால் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடையும் அச்சுறுத்தல் எழுந்துள்ளது. உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்து வருவதுடன் எண்ணெய் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான உலகளாவிய நெருக்கடிகளில் இருந்து இலங்கை போன்ற சிறிய நாடுகள் தப்பிப்பது கடினம். இதனால் 2026 ஆம் ஆண்டுக்கான பொருளாதார சவால்களை முறியடிப்பது மிகவும் கடினமான ஒன்றாக மாறி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/240451
  5. வைக்கோல் வண்டி பாரம் .........!
  6. வணக்கம் வாத்தியார் . ....... பெண் : { காதல் வந்ததும் கன்னியின் உள் காதலை யாருக்கும் சொல்வதில்லை புத்தகம் மூடிய மயில் இறகாய் புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை } (2) நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு சென்றால் வரமாட்டாய் அது தானே பெரும்பாடு பெண் : தூங்காத காற்றே துணை தேடி ஓடி என் சார்பில் எந்தன் காதல் சொல்வாயா ஆண் : நில்லாத காற்று சொல்லாது தோழி நீயாக உந்தன் காதல் சொல்வாயா பெண் : உள்ளே எண்ணம் அரும்பானது உன்னால் இன்று ருதுவானது ஆண் : நான் அதை சோதிக்கும் நாள் வந்தது தன்னனனானன பெண் : நீ வந்து போனால் என் தோட்டம் எங்கும் உன் சுவாச வாசம் வீசும் பூவெல்லாம் ஆண் : நீ வந்து போனால் என் வீடு எங்கும் உன் கொலுசின் ஓசை கேட்கும் நாளெல்லாம் பெண் : கனா வந்தால் மெய் சொல்கிறாய் கண்ணில் வந்தால் பொய் சொல்கிறாய் ஆண் : போ என்னும் வார்த்தையால் வாவென்கிறாய்.........! --- காதல் வந்ததும் ---
  7. எமது அரசியல் பெண்களுக்காகவே - பிரதமர் இலங்கைப் பெண்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துத் துறைகளுக்காகவும் தானும் தனது குழுவினரும் அரசியலில் ஈடுபட்டு வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். வேறு ஒரு தலைமையையோ அல்லது வேறு ஒரு இயக்கத்தையோ முன்னிலைப்படுத்துவதற்காகத் தாம் அரசியலில் ஈடுபடவில்லை என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார். "இந்த நாட்டில் உள்ள அனைத்துப் பெண் பிள்ளைகளுக்கும், அனைத்துப் பெண்களுக்கும் முன்மாதிரியாகப் பெண்கள் எவ்வாறு அரசியல் செய்ய வேண்டும் என்பது குறித்து நாளுக்கு நாள் கட்டியெழுப்பப்படும் ஒரு இயக்கமே இது. அதையிட்டு நாம் பெருமையடைகிறோம். பெண்கள் அரசியலில் நாம் அனைவரையும் ஒன்றிணைத்துச் செல்வதுடன், இந்நாட்டின் பெண்கள் எந்தத் துறையில் எங்கே இருக்கிறார்களோ, அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவே நாம் அரசியல் செய்கிறோம். வேறு ஒரு தலைமையையோ அல்லது வேறு ஒரு இயக்கத்தையோ முன்னுக்குக் கொண்டு வருவதற்காக நாம் இங்கே எதனையும் செய்யவில்லை. எமது பெண்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், அவற்றை முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குமே நாம் இந்த அரசியலைச் செய்கிறோம்." https://adaderanatamil.lk/news/cmmhdu8tn000k356pk4n2bnxq
  8. குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு மாற்றம் தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 4ஆம் திகதி காலி துறைமுகத்தில் இருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரான் கடற்படைக்குச் சொந்தமான இக்கப்பலில் இருந்த 35 பேரை இலங்கை கடற்படையின் மீட்புக் குழுவினர் கரைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக காலியில் உள்ள கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் மேலும் 10 பேர் இன்னும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். IRIS Dena கப்பல் மீதான தாக்குதலில் உயிரிழந்த 84 ஈரான் மாலுமிகளின் உடல்கள் மீதான மரண பரிசோதனைகள் கடந்த சில நாட்களாக காலி தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டன. அதேவேளை, சிகிச்சை பெற்று வரும் மாலுமிகளில் 8 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 'மிலன் 2026' கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கச் சென்ற ஈரானின் மூன்று கப்பல்களில் ஒன்றான 'IRIS Bushehr' என்ற போர்க்கப்பல், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாணந்துறைக்கு அப்பால் உள்ள இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நுழைந்தது. அதற்கமைய, கடந்த மார்ச் 5ஆம் திகதி இரவு அந்தப் போர்க்கப்பலின் ஊழியர்கள் உட்பட 204 மாலுமிகளை இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர். இவர்களில் 53 அதிகாரிகள், 54 கடற்படை பயிலுநர்கள், 48 சிரேஷ்ட மாலுமிகள் மற்றும் 23 மாலுமிகள் அடங்குகின்றனர். இவர்கள் வெலிசர கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதேவேளை, ஈரானியக் கப்பல்கள் தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதில் இலங்கையின் இறைமையை வொஷிங்டன் மதிப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும், IRIS Bushehr கப்பல், அதன் ஊழியர்கள் மற்றும் மீட்கப்பட்ட மாலுமிகள் தொடர்பில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் இலங்கையின் உள்நாட்டுச் சட்டங்கள் மற்றும் சர்வதேச சட்டக் கடப்பாடுகளுக்கு அமைய இலங்கைக்கே உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmmhbem07000f356p4bcih8bt
  9. ஈரானுடனான போரில் பிரித்தானியாவின் உதவி அவசியமில்லை என ட்ரம்ப் தெரிவிப்பு! ஈரானுடனான போரில் வெற்றி பெற அமெரிக்காவிற்கு பிரித்தானியாவின் உதவி அவசியமில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதுடன், இங்கிலாந்துப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மிகவும் தாமதமாக மோதலில் இணைவதைப் பற்றி யோசித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இது குறித்து சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் பதிவிட்ட ட்ரம்ப், ஒரு காலத்தில் நமது சிறந்த நட்பு நாடாகவும், அனைத்திலும் சிறந்ததாகவும் இருந்த ஐக்கிய இராச்சியம் இறுதியாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களை அனுப்புவது குறித்து தீவிரமாக யோசித்து வருகிறது. எனினும், எமக்கு அத்தகைய உதவி இனி அவசியமில்லை பிரதமர் ஸ்டார்மர், நாம் ஏற்கனவே வெற்றி பெற்ற பின்னர் போர்களில் இணைபவர்கள் எங்களுக்குத் தேவையில்லை – என்று கூறினார். ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கை தொடர்பாக வாஷிங்டனுக்கும் லண்டனுக்கும் இடையிலான பதட்டங்களுக்கு மத்தியில் ட்ரம்பின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன. முன்னதாக, ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்களுக்கு இங்கிலாந்து தளங்களைப் பயன்படுத்துவதை பிரித்தானியா ஆரம்பத்தில் தடுத்ததை அடுத்து, ஸ்டார்மரை ட்ரம்ப் விமர்சித்தார். பின்னர் இங்கிலாந்து அரசாங்கம் அமெரிக்கப் படைகள் ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ஏவுதளங்களுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகளுக்கு பிரிட்டிஸ் தளங்களைப் பயன்படுத்த அனுமதித்தது. https://athavannews.com/2026/1467557
  10. டிக்கோயா விவகாரத்தில் அதிரடி திருப்பம்: 24 மணிநேரம் கெடு எஸ்.கிருஷ்ணா டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலை பிணவறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் உடலுக்கு நேர்ந்ததாகக் கூறப்படும் அவமதிப்பு மற்றும் துஷ்பிரயோக விவகாரம் மலையகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகரவிற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்.பி. தலைமையிலான குழுவினருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று ஞாயிற்றுக்கிழமை (08) அன்று இடம்பெற்றது. ஞாயிற்றுக்கிழமை (08) அன்று முன்னெடுக்கப்படவிருந்த அமைதிவழிப் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட இ.தொ.கா முக்கியஸ்தர்கள் நேரடியாக பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்குச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். "இந்தச் சம்பவம் தொடர்பாக இன்னும் 24 மணிநேரத்திற்குள் தெளிவான பதிலளிப்பதாக பொலிஸ் அத்தியட்சகர் உறுதியளித்துள்ளார். சுகாதார அமைச்சினால் முறையான விளக்கம் அளிக்கப்படாத பட்சத்தில், அவர்களுக்கு எதிராக நீதிமன்றினூடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது." "குற்றச்சாட்டுக்கு உள்ளான மூவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஒரு ஆளுந்தரப்பு எம்.பி. கூறுகிறார். இது எந்த வகையில் நியாயம்? அவர்கள் உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும்." "இவ்வாறான ஒரு கொடூரமான சம்பவம் நாட்டின் வேறு ஒரு பகுதியில் நடந்திருந்தால் அதன் தாக்கம் எப்படியிருந்திருக்கும்? ஜனாதிபதி இந்த விவகாரத்தில் நேரடியாகக் கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியைப் பெற்றுத்தர வேண்டும்." "இது தேர்தல் காலம் கிடையாது. அநீதிக்கு எதிராக உண்மைத்தன்மையை வெளிப்படுத்துமாறு கேட்பது எப்படித் தவறாகும்? அமைதிவழிப் போராட்டத்திற்குத் தடை விதித்தது ஏன்?" எனக் கேள்வி எழுப்பிய அவர், திங்கட்கிழமை (09) வரை பொறுத்திருப்பதாகத் தெரிவித்தார். https://www.tamilmirror.lk/மலையகம்/டிக்கோயா-விவகாரத்தில்-அதிரடி-திருப்பம்-24-மணிநேரம்-கெடு/76-373552
  11. யாழ்.பல்கலை ஊடககற்கைகள் மாணவர்களின் சஞ்சிகை வெளியீடும் – குறுந்திரைப்பட திரையிடலும்! adminMarch 7, 2026 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட சஞ்சிகை ‘கனலி’ – இதழ் 06 வெளியீடும், குறுந்திரைப்பட விழாவும் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. ஊடகக் கற்கைகள் துறையின் தலைவர் பூங்குழலி சிறிசங்கீர்த்தனன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர். சி.சிறிசற்குணராசாவும், சிறப்பு விருந்தினர்களாக கலைப்பீடத்தின் பதில் பீடாதிபதி கலாநிதி கி.சண்முகநாதனும் ஊடகத் துறைப் பேராசிரியர் சி.ரகுராமும் கலந்து சிறப்பித்தனர். கனலி சஞ்சிகை வெளியீட்டைத் தொடர்ந்து சஞ்சிகைக்கான கருத்துரையினை கல்வியியல் துறை விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா நிகழ்த்தினார். சஞ்சிகை வெளியீட்டினைத் தொடர்ந்து மாணவர்களால் இயக்கப்பட்ட குறும்படங்களின் திரையிடல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஊடக துறை சார்ந்தவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். https://globaltamilnews.net/2026/230162/
  12. காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் படகு சேவை மீண்டும் ஆரம்பம்! adminMarch 7, 2026 பருவகால மழை மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் படகு சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பருவகால மழை மற்றும் பராமரிப்பு பணிகளின் காரணமாக கடந்த ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த சேவை, சுமார் நான்கு மாதங்களின் பின்னர் நேற்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 77 பயணிகளுடன் புறப்பட்ட “சிவகங்கை” பயணிகள் படகு, யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தை வெற்றிகரமாக வந்தடைந்தது. அதன் பின்னர், 92 பயணிகளுடன் மீண்டும் நாகப்பட்டினம் நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையேயான மக்கள்-to-மக்கள் தொடர்பை வலுப்படுத்தும் முக்கியமான கடல் போக்குவரத்து இணைப்பாக இந்த சேவை கருதப்படுகிறது. சுற்றுலா மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கும் இது ஊக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணிகள் படகு சேவை வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்ந்த மற்ற 6 நாட்களிலும் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு வழி பயணத்திற்கான கட்டணம் 28,500 இலங்கை ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2026/230174/
  13. Today
  14. சுகமோ, சுகமில்லையோ வீட்டுக்கு வந்தாயிற்று.. விமான நிலையத்தில் காத்திருந்தது ஒரு வித்தியாசமான அனுபவம்😊
  15. இஸ்ரேலுக்கு 20,000 குண்டுகளை விற்க ட்ரம்ப் நிர்வாகம் அனுமதி Mar 8, 2026 - 09:44 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சுமார் 650 மில்லியன் டொலர் மதிப்பிலான 20,000-க்கும் மேற்பட்ட குண்டுகளை இஸ்ரேலுக்கு விற்பனை செய்வதற்கு அனுமதி அளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க காங்கிரஸைத் தவிர்த்து ட்ரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இதற்கமைய, இஸ்ரேலுக்கு உடனடியாக அவற்றை விற்பனை செய்ய வேண்டிய அவசர நிலை உள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தீர்மானித்துள்ளதாகவும், இதற்காக ஆயுத விற்பனை மீதான காங்கிரஸ் மதிப்பாய்வுத் தேவைகள் கைவிடப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த விற்பனையானது அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைக்கும் தேசிய பாதுகாப்பிற்கும் பங்களிக்கும் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளதுடன், இதன் பிரதான ஒப்பந்ததாரராக டெக்சாஸில் அமைந்துள்ள 'ரெப்கான்' நிறுவனம் செயற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, நேரடி வர்த்தகப் பரிவர்த்தனைகள் மூலம் மேலும் 298 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான போர் ஆயுதங்களை இஸ்ரேல் கொள்வனவு செய்யவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. இஸ்ரேலுக்கு 20,000 குண்டுகளை விற்க ட்ரம்ப் நிர்வாகம் அனுமதி
  16. இலங்கையின் இறைமையை மதிப்பதாக அமெரிக்கா அறிவிப்பு Mar 8, 2026 - 11:27 AM ஈரானியக் கப்பல்கள் தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதில் இலங்கையின் இறைமையை வொஷிங்டன் மதிப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அத்துடன், 'IRIS Bushehr' கப்பல், அதன் பணியாளர்கள் மற்றும் மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகள் குறித்து இறுதி முடிவெடுக்கும் அதிகாரம், இலங்கையின் உள்நாட்டுச் சட்டங்கள் மற்றும் சர்வதேச சட்டக் கடப்பாடுகளுக்கு இணங்க இலங்கைக்கே உள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் இறைமையை மதிப்பதாக அமெரிக்கா அறிவிப்பு
  17. சர்வதேச மகளிர் தினம் : சமத்துவமான உலகிற்காக எட்டு முக்கிய நடவடிக்கைகள் – ஐ.நா. பொதுச்செயலாளர் 06 Mar, 2026 | 05:25 PM சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்தை வலுப்படுத்துவதற்காக உலக நாடுகள் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார். மார்ச் 8ஆம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட கருத்துரையில், உலகம் கடந்த ஒரு தசாப்தமாக காலநிலை மாற்றம், வறுமை, ஆயுத மோதல்கள் மற்றும் குடியுரிமைச் சுருக்கம் போன்ற பல சவால்களை எதிர்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான சவால்களுக்கு தீர்வுகளை உருவாக்குவதில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருப்பதை பல அனுபவங்கள் நிரூபித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாலின சமத்துவம் என்பது இன்றைய உலகில் மிகப்பெரிய மனித உரிமைச் சவால்களில் ஒன்றாக இருப்பதுடன், சமத்துவத்தை முன்னேற்றுவது நிலையான அபிவிருத்தி மற்றும் உலக அமைதிக்கான முக்கிய சக்தியாகவும் விளங்குகிறது என அவர் வலியுறுத்தினார். சமத்துவமான உலகுக்கான 8 நடவடிக்கைகள் பொதுச்செயலாளர் தனது அனுபவங்களையும் உலகளாவிய சமூக இயக்கங்களின் முயற்சிகளையும் அடிப்படையாகக் கொண்டு பெண்களின் உரிமைகளை முன்னேற்றுவதற்கான எட்டு முக்கிய நடவடிக்கைகளை முன்வைத்துள்ளார். 1. அதிகார சமநிலையை ஏற்படுத்துதல் பாலின சமத்துவம் என்பது அதிகாரம் தொடர்பான ஒரு கேள்வியாகும். உலகின் பல முக்கிய நிறுவனங்கள் இன்னும் ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றன. அதிகாரத்தை பகிர்ந்துகொள்ளும் போது சமூக சுதந்திரமும் வளர்ச்சியும் விரிவடையும் என அவர் தெரிவித்துள்ளார். 2. சமமான பிரதிநிதித்துவத்தை முன்னுரிமையாக்குதல் உலக நாடுகளின் அரசியல் மற்றும் நிறுவனங்களின் தலைமை நிலைகளில் பெண்கள் இன்னும் குறைவாக பிரதிநிதித்துவம் பெறுகின்றனர். ஐக்கிய நாடுகள் அமைப்பில் உயர்மட்ட பதவிகளில் பாலின சமநிலையை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதனால் நிறுவனம் மேலும் வலுப்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 3. பெண்களுக்கான முதலீட்டை அதிகரித்தல் பெண்கள் மற்றும் சிறுமிகளின் கல்வி, தாய்மார் சுகாதாரம் மற்றும் குடும்ப திட்டமிடல் ஆகிய துறைகளில் முதலீடு செய்வது சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அதிக பயனளிக்கிறது. பெண்களுக்கான முதலீடு தேசிய வருமானத்தை கூட 20 சதவீதம் வரை உயர்த்தக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 4. அமைதி பேச்சுவார்த்தைகளில் பெண்களுக்கு இடமளித்தல் அமைதி உடன்படிக்கைகள் பெண்கள் பங்கேற்கும் போது நீடித்த பலன்களை அளிக்கும். எனினும், காசா, உக்ரைன் மற்றும் சூடான் போன்ற மோதல் பகுதிகளில் பெண்கள் இன்னும் புறக்கணிக்கப்படுகின்றனர். 5. சட்ட ரீதியான பாகுபாட்டை முடிவுக்கு கொண்டுவருதல் உலகளவில் பெண்கள் ஆண்கள் பெறும் சட்ட உரிமைகளில் சுமார் 64 சதவீதம் மட்டுமே பெற்றுள்ளனர். பல நாடுகளில் பெண்களுக்கு சொத்து உரிமை, வேலை வாய்ப்பு மற்றும் விவாகரத்து உரிமைகளில் கட்டுப்பாடுகள் உள்ளன. 6. பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு பூஜ்ய சகிப்புத்தன்மை பெண்களுக்கு எதிரான வன்முறை உலகளாவிய அவசரநிலையாகக் கருதப்படுகிறது. பாலின அடிப்படையிலான வன்முறைகளை முற்றிலும் ஒழிக்க உலக நாடுகள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். 7. தொழில்நுட்பத்துறையில் பாலின பாகுபாட்டை நீக்குதல் உலகளவில் தொழில்நுட்பத்துறையில் பணிபுரிபவர்களில் நான்கில் ஒருவரே பெண்கள். இதனால் டிஜிட்டல் அமைப்புகளில் பாலின பாகுபாடு உருவாகும் அபாயம் உள்ளது. எனவே, தொழில்நுட்ப கல்வியில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பங்கேற்பை அதிகரிக்கவேண்டியது அவசியம். 8. காலநிலை கொள்கைகளில் பாலின பார்வையை சேர்த்தல் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை பெண்கள் அதிகமாக எதிர்கொள்கிறார்கள். ஆனால் அதே நேரத்தில் காலநிலை மாற்றத்திற்கு எதிரான பல தீர்வுகளிலும் பெண்களே முன்னிலையில் உள்ளனர். எனவே காலநிலை கொள்கைகளில் பாலின சமத்துவம் பிரதிபலிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். உலகத்தை மாற்றும் சக்தி உலகின் பல பகுதிகளில் இந்த நடவடிக்கைகள் நடைமுறையில் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதை பார்த்துள்ளதாகவும், உலகத் தலைவர்கள் பாலின சமத்துவத்தை உண்மையாக முன்னுரிமையாக்கினால் உலகம் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் மட்டுமல்லாமல் அனைவருக்கும் சிறந்த இடமாக மாறும் என்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினம் : சமத்துவமான உலகிற்காக எட்டு முக்கிய நடவடிக்கைகள் – ஐ.நா. பொதுச்செயலாளர்
  18. வருண் சக்கரவர்த்தியின் தடுமாற்றம் By ஆர். அபிலாஷ் March 05, 2026 வருண் சக்கரவர்த்தியை எதிரணி மட்டையாளர்கள் அடித்துப் பிளப்பதைப் பார்த்தால் ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது. இந்த உலகக்கோப்பை ஆரம்பிப்பதற்கு முன்பு தென்னாப்பிரிக்கா நமக்கெதிராக டி20 தொடரை ஆடினார்கள். அப்போதே இதற்கான முயற்சியை தொடங்கினார்கள். ஆனாலும் அப்போது வருண் கொத்துக்கொத்தாக விக்கெட்டுகள் எடுத்ததால் அவர் அடிவாங்கியது பெரிதாகத் தெரியவில்லை. இந்த உலகக்கோப்பையிலோ வருணுக்கு விக்கெட்டுகளும் விழவில்லை. அவர் வந்ததுமே சிக்ஸர்களாக அடிக்கிறார்கள். அவர் முகமும் பார்க்க ஏதோ வகுப்புக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்ட அப்பாவி மாணவனைப் போல மாறிவிடுகிறது. அணித்தலைவர் சூரியகுமாரால் இந்த ஆட்டப்பகுதியைக் கட்டுப்படுத்தவும் முடிவதில்லை, விக்கெட் எடுப்பதும் அசாத்தியமாகிறது. பும்ரா, அர்ஷதீப்பை சீக்கிரமாகக் கொண்டு வந்தால் இறுதி ஓவர்கள் பாதிக்கப்படும். ஐந்து பந்து வீச்சாளர்களுடன் இந்தியா போவதால் இந்த ஒரு முக்கியமான கண்ணி அறுபட்டதும் தடுமாறுகிறோம். தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, மே.இ தீவுகள் ஆகிய அணிகள் எல்லாமே மத்திய ஓவர்களில் அதிக ரன் அடித்தது இதனால்தான். வருண் சக்கரவர்த்திக்கு என்னவாயிற்று? அவரது புதிர்மை முன்பு போல இல்லையா? அவரை சுலபத்தில் கணிக்கிறார்களா? இல்லை, வேறொரு அணுகுமுறையைக் கொண்டு வந்துள்ளார்கள். இது இப்போதைக்கு எதிரணி மத்திய வரிசை மட்டையாளர்களுக்கு கைகொடுக்கிறது. வருணிடம் ஏகப்பட்ட மாறுபட்ட பந்துகள் உண்டு. ஆனால் இவை குச்சிகளின் பரப்புக்குள் விழுவன. அதாவது மூன்று குச்சிகளையும் விட்டு அவர் வெளியே பந்தை அதிகம் திருப்புவதில்லை. அப்படிச் செய்தாலும் பந்து வெகுவாகத் திரும்புவதில்லை. அவரது வீச்சில் மட்டையாளர்கள் எக்ஸ்டிரா கவர், லாங் ஆபில் அதிகம் கேட்ச் கொடுப்பதை நீங்கள் பார்க்க முடியாது. அவரை முன்பு பெருக்கி (ஸ்வீப்) அடிக்கப் பார்த்தார்கள். ஆனால் அவர் முழுநீளத்தை விட சற்று குறைநீளத்தில் வேகமாக வீசுவதால் ஒன்று பவுல்ட் ஆனார்கள் அல்லது எல்.பி.டபிள்யு. அல்லது பந்து குச்சிகளுக்கு மேலாகப் போகும். மட்டையில் படாது. அவரது நீளத்துக்கும் வேகத்துக்கும் இறங்கி வருவதும் சுலபம் அல்ல. அவரை இவர்களால் வாசிக்க இயலவில்லை என்பதால் தடுத்தாடுவதும் சுலபம் அல்ல. இந்த நெருக்கடியில் இருந்து தப்பிக்கத்தான் தென்னாப்பிரிக்கர்கள் முதலில் அவரை நேராக அடிக்க முயன்றார்கள். அதாவது அவரை ஒரு உள்வரும் பந்து வீச்சாளராக ஆடினார்கள். குச்சிகளைக் காட்டிவிட்டு நின்று நேராகவோ மிட்விக்கெட் பகுதியிலோ தூக்கி அடித்தார்கள். பின்னங்காலுக்குப் போய் புல் ஷாட் ஆடினார்கள். அல்லது கட் அடித்தார்கள். வருண் பயந்து போய் பந்தை முழுநீளத்தில் வீச சிலர் ரிவர்ஸ் ஸ்வீப், லேப் அடித்தார்கள். அவர் பந்தை வெளியே கொஞ்சம் வீச அவர்கள் அங்கிருந்து வாரி எடுத்து லாங் ஆன் பகுதியில் சிக்ஸர் அடித்தார்கள். இந்த உலக்கோப்பை சூப்பர் எய்ட்ஸின் போது எதிரணி மட்டையாளர்கள் அடித்த இந்த குறிப்பிட்ட சில ஷாட்கள் சிக்ஸர்கள் போன போது வருண் கடும் அழுத்தத்திற்கு ஆளானார். அவர் மேலும் மேலும் குறைவான நீளத்தில் வீசுவதால் அவருக்கு விக்கெட்கள் விழுவதும் இல்லாமல் போனது. அவரது மாறுபட்ட பந்துகள் சுழல்வதை நிறுத்தின. அதாவது வருணை தடுத்தாட முடியாமல் எதிரணியினர் சிக்ஸர் உத்தியைக் கையில் எடுக்க அது வருணை நிலைகுலைய வைக்கிறது. வருண் இதைச் சரி செய்ய முதலில் சிக்ஸர்களைத் தடுத்து அவர்களை ஒற்றை, இரட்டை ஓட்டங்கள் எடுக்க வைக்க வேண்டும். வருணின் பந்துகள் ஒரு கால்சுழரைப் போல வெகுவாக வெளியே சுழல்வதில்லை. அவர் கிட்டத்தட்ட கும்பிளேயைப் போல வீசுபவர். முன்பு கும்பிளேயையும் இப்படித்தான் சில மட்டையாளர்கள் நின்ற வாக்கில் நேராக சிக்ஸர் அடித்தார்கள். பின்னுக்குப் போய் கட் அடித்தார்கள். கும்பிளே தன் கால்சுழல் பந்திலும் நீளத்திலும் கவனம் செலுத்தி சமாளித்தார். இப்போது அவர் வருணுக்குப் பரிந்துரைப்பதும் இந்த உத்தியைத்தான். எனக்கு அது எடுபடாது எனத் தோன்றுகிறது. வருண் தன் பந்து வீச்சின் முறைமையை மாற்றி மீண்டு வருவதற்கான கால அவகாசம் இல்லை. அதற்குப் பதிலாக அவர் கால் பக்கமாக மட்டையாளர்களை இலக்காக்க வேண்டும் என நினைக்கிறேன். அதாவது மிதவைப் பந்துகள், கால்சுழல் பந்துகளை நடு மற்றும் கால் குச்சிகளை நோக்கி வீசி அதற்கு ஏற்ப லாங் ஆன், டீப் மிட் விக்கெட், பைன் லெக், நேரான களத்தடுப்பாளர்களை வைத்து எதிர்மறையாக வீச வேண்டும். அப்போதும் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுவார்கள். ஆனால் அதைக் குறித்து அவர் அதிகம் கவலைப்படக் கூடாது. வேண்டுமென்றால் கவர் பகுதியில் இருந்து ஒருவரை எடுத்து ஸ்வீப்பில், பாயிண்டில் வைக்கலாம். அந்த ஷாட்டில் எப்படியும் ரிஸ்க் உள்ளது. பந்து கொஞ்சம் பவுன்ஸ் ஆனால், நின்று வந்தால் விக்கெட் கிடைக்கும். அடுத்த சில போட்டிகளில் வருண் எல்.பி.டபிள்யு, பவுல்டை மறந்துவிட வேண்டும். காலில் விழும் பந்துகளை நேராக அடிப்பது சிரமம். மட்டையை வீசுவதற்கான இடமும் கொடுக்காவிட்டால் மிட்விக்கெட், நேரான சிக்ஸர்கள் வருவதும் குறையும். பந்து அதிகமாகச் சுழலும்போது மட்டும் அவர் பழையபடி குச்சிகளுக்கு நேராக வீசலாம். ஒன்றிரண்டு சிக்ஸர்கள் போனாலும் விக்கெட் விழும். இந்த உத்தியைத் திறம்படக் கையாள்பவர் சுனில் நரைன். அவர் பந்தை வெளியே தூக்கி அடிப்பதற்கான இடத்தையே தர மாட்டார். எல்லா பந்துகளும் கால்பக்கமாகவே போகும். வருண் அவரது ஐ.பி.எல் பந்துவீச்சை கவனித்தாலே பெரிய திறப்பாக அது அமையும். இப்போதைக்கு சிக்ஸர் போனதும் வருண் வெளியே வைடாக, குறைநீளத்தில், முழுநீளத்தில் என என்னென்னவோ முயல்கிறார். இந்த முயற்சிகள் அவரைப் பலவீனப்படுத்த அதிகமாக அடிவாங்குகிறார். அவர் குழப்பத்தில் இருக்கிறார். அவர் செய்ய வேண்டியதெல்லாம் தன் திசையை மாற்றுவதுதான். செய்வாரா என இறுதிப் போட்டிவரை காத்திருந்து பார்க்கலாம். இப்போதைக்கு துணிச்சலான இந்த அணுகுமுறையைக் கொண்டு வருணின் ஆட்டத்தை நிர்மூலமாக்கிய எதிரணி மட்டையாளர்களை, அவர்களுடைய வியூக அமைப்பாளர்களை, பயிற்சியாளர்களை, பகுப்பாய்வாளர்களை, புள்ளியியலாளர்களைப் பாராட்ட வேண்டும். சபாஷ்! https://www.writerabilash.in/2026/03/blog-post_5.html
  19. டி20 உலகக்கோப்பை யாருக்கு? நியூசிலாந்தின் மிகப்பெரிய பலமும் இந்தியாவின் ஒரே பலவீனமும் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் (இடது), நியூசிலாந்து அணி கேப்டன் சான்ட்னர் கட்டுரை தகவல் வித்யுத் சிவராமகிருஷ்ணன் சிஎஸ்கே முன்னாள் வீரர் 8 மார்ச் 2026, 02:24 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள் உலக சாம்பியன் யார் என்பதைத் தீர்மானிக்கும் போகும் அந்த இறுதிப் போட்டிக்கு வந்துவிட்டோம். இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்று எதிர்பார்த்ததைப் போலவே இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டது. அரையிறுதி போன்ற ஒரு போட்டியில் 250 ரன்கள் அடிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. அதனால் பெரும் நம்பிக்கையோடு இறுதிப் போட்டிக்குள் இந்தியா நுழையும். அதேபோல் நியூசிலாந்து அணியும் அதுவரை தோற்காமல் இருந்த தென்னாப்பிரிக்காவை மிகவும் எளிதாக வீழ்த்தி ஆமதாபாத் சென்றிருக்கிறது. அந்தப் போட்டியில் அவர்கள் வென்ற விதம் நிச்சயம் அவர்கள் நம்பிக்கையை பல மடங்கு அதிகப்படுத்தியிருக்கும். முன்பெல்லாம் இப்படியொரு மிகப் பெரிய போட்டி நடக்கிறது என்றாலே வீரர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு இருக்கும். அதுவே சிலருக்கு சவாலாக அமைந்துவிடும். ஆனால், இந்தத் தலைமுறை வீரர்களெல்லாம் அப்படி இல்லை. அவர்கள் பெரிய போட்டிகளைப் பற்றி கவலை கொள்வதில்லை. சொல்லப்போனால் அந்த நெருக்கடியை அவர்கள் விரும்புகிறார்கள். அதை அரவணைத்துக் கொள்கிறார்கள். இன்னும் சிறப்பான செயல்பாட்டைக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால், இந்த இரு அணி வீரர்களுமே நிச்சயம் இறுதிப் போட்டியில் ஒரு மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்பிக்கையோடு சொல்லலாம். ஆதிக்கம் செலுத்தும் இந்தியா இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பு இந்தியாவைப் பற்றி எழுதிய போதே, இந்த இந்திய அணி ஸ்டீவ் வாஹ் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் வழிநடத்திய அந்த ஆஸ்திரேலியாவைப் போல் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தேன். அதை உணர்த்தும் விதத்தில் இந்த உலகக் கோப்பையில் இந்திய அணியின் செயல்பாடு இருந்திருக்கிறது. சொல்லப்போனால் கடந்த உலகக் கோப்பை செயல்பாட்டை விடவுமே இம்முறை சிறப்பாக இருந்திருக்கிறது. இந்திய வீரர்கள் முழுமையான அணியாக செயல்பட்டிருக்கிறார்கள். பேட்டிங், பௌலிங், பெரிய ஷாட்கள் அடிப்பது, ஃபிட்னஸ் என அனைத்துமே பிரகாசமாக இருந்திருக்கிறது. கொஞ்சம் பிரச்னையாக இருந்த ஃபீல்டிங்கும் கூட கடந்த அரையிறுதிப் போட்டியில் முன்னேற்றம் கண்டிருக்கிறது. பேட்டிங்கில் எல்லா வீரர்களுமே நல்ல பங்களிப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சின்னச் சின்ன இன்னிங்ஸ்களாக இருந்தாலும் அதன்மூலம் ஆட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். இதை நியூசிலாந்துக்கு எதிராகவும் இந்தியா தொடரும் என்று நம்பலாம். என்னதான் எல்லோரும் சோபித்தாலும், சஞ்சு சாம்சன் மீது அதிக கவனம் விழவே செய்கிறது. சமீபத்திய போட்டிகளில் அவர் ஆடிக் கொண்டிருக்கும் விதம் இந்தியாவுக்கு மிகப் பெரிய பலம். தன்னுடைய சிறந்த செயல்பாட்டை இத்தொடரின் முக்கியமான கட்டத்தில் கொடுத்துக் கொண்டிருக்கிறார். நிச்சயமாக இந்தப் போட்டியில் அவர் தன்னுடைய மூன்றாவது சிறந்த செயல்பாட்டைக் கொடுப்பார் என்று நம்புகிறேன். பெரிதும் சிரமப்படாமல், தன்னுடைய 'கிளாசிக்கான' பேட்டிங் மூலம் அவர் ரன் குவிக்கிறார். பவர்பிளேவிலும் சரி, பவர்பிளே முடிந்தும் சரி சரியாகக் கணக்கிட்டு ஆடுகிறார். பீல்டிங் இடைவெளிகளை சரியாகப் பயன்படுத்துகிறார். அதனால், எதிரணிகளுக்கு அவரை ஆட்டமிழக்கச் செய்வது அவ்வளவு எளிதானதாக இருக்காது. நியூசிலாந்து பௌலர்களுக்கு நிச்சயம் சாம்சன் தலைவலியாக இருக்கப்போகிறார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,தொடர்ந்து இரண்டு போட்டிகளில் ஆட்ட நாயகனாக ஜொலித்திருக்கிறார் சஞ்சு சாம்சன் ஆரம்பத்தில் அவர் அசத்தினால், மிடில் ஆர்டரில் ஷிவம் துபே, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா என அனைவருமே கலக்குகிறார்கள். துபே தன் அணுகுமுறையில் காட்டும் முதிர்ச்சி அருமையாக இருக்கிறது. ஆதில் ரஷீத் பந்துவீச்சில் சிக்ஸர்கள் விளாசினாலும், சரியான பந்து வரும் போது பேக் ஃபூட்டில் காத்திருந்து சிங்கிளும் எடுக்கிறார். அது அவர் மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது. அதேபோல், ஃபினிஷிங் ரோலில் திலக் வர்மா தற்போது ஆடும் விதம் சிறப்பாக இருக்கிறது. இந்தியாவுக்கு நல்லபடியாக ஆட்டத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்து ஆடுகிறார். இவர்களின் பங்களிப்பு இந்தியாவின் மிடில் ஆர்டரை நன்கு பலப்படுத்தியிருக்கிறது. அதேபோல், பந்துவீச்சைப் பொறுத்தவரை இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு சிறப்பாக இருந்திருக்கிறது. அர்ஷ்தீப் சிங் சற்று கூடுதலாக ரன் கொடுத்தாலும், முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். புதிய பந்தில் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்படுகிறார். அவருக்கு நன்கு ஸ்விங் கிடைக்கிறது. ஜஸ்ப்ரித் பும்ரா... என்ன சொல்வது. உலகின் தலைசிறந்த பௌலர் ஒவ்வொரு போட்டியிலும் முத்திரை பதிக்கிறார். அரையிறுதிப் போட்டியில் ஒவ்வொரு பௌலரும் ரன்கள் வாரி வழங்கும்போது இவர் ஆட்டத்தைத் தன் கட்டுக்குள் வைத்திருந்தார். அதேசமயம் இந்தியாவின் சுழற்பந்துவீச்சு சற்று கவலை தருவதாக இருக்கிறது. வருண் சக்கரவர்த்தியின் ஃபார்ம் சமீபத்திய போட்டிகளில் சிறப்பாக இல்லை. அது முன்னேற்றம் காண வேண்டும் என்று இந்தியா எதிர்பார்க்கும். அரையிறுதியில் அக்‌ஷர் பட்டேலின் ஃபீல்டிங் அபாரமாக இருந்தது. அதுதான் ஆட்டத்தையே மாற்றியது என்று சொல்லலாம். ஹேரி ப்ரூக் கேட்சை பின்னால் ஓடிச்சென்று பிடித்தது, வில் ஜேக்ஸ் கேட்சைப் பிடிக்க பவுண்டரி எல்லையில் அதிவேகமாக ஓடிவந்து பாய்ந்து பிடித்து துபேவிடம் வீசியது... அவருடைய வேகம், துல்லியம் மற்றும் சிந்திக்கும் திறன் அனைத்தையும் அந்த செயல்பாடுகளில் பார்க்க முடிந்தது. இந்த செயல்பாடு நிச்சயம் மற்ற வீரர்களுக்கும் உத்வேகம் கொடுக்கும் என்று நம்புகிறேன். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சூப்பர் 8 சுற்று போட்டிகளிலிருந்து வருண் சக்கரவர்த்தியால் பெரிதாக சோபிக்க முடியவில்லை 'இந்தியா ஆட விரும்பாத அணி நியூசிலாந்து' இந்த உலகக் கோப்பையில் நன்கு தயாராகியிருந்த அணி, புத்திசாலித்தனமான அணி என்றால் அது நியூசிலாந்து தான். இப்போது மட்டுமல்ல, அவர்கள் எப்போதுமே அப்படித்தான். ஒவ்வொரு பெரிய தொடர்களுக்கு முன்பும் பாருங்கள், பெரும்பாலான நிபுணர்களின் டாப் 4 கணிப்பில் நியூசிலாந்து இருக்காது. ஆனால், அவர்கள் எப்படியும் அந்த இடத்தை அடைந்துவிடுவார்கள். டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என எந்தத் தொடராக இருந்தாலும் அவர்கள் மிகச் சிறந்த செயல்பாட்டைக் கொடுத்து அரையிறுதிக்காவது எப்படியும் முன்னேறிவிடுவார்கள். அவர்களின் ஆட்டம் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் சீராக இருக்கிறது. இந்த அணியின் பெரும் பலம் தங்களைப் பற்றிய அவர்களின் புரிதல் தான். அவர்கள் அணியின் பலம் என்ன, பலவீனம் என்ன, எந்த வீரரால் என்ன செய்ய முடியும் என அனைத்தையும் அவர்கள் நன்கு அறிந்திருப்பார்கள். இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்வதை இந்திய அணி விரும்பி இருக்குமா என்றால் நிச்சயமாகக் கிடையாது. ஏனெனில், இந்தியாவிற்கு அவர்கள் எப்போதுமே தலைவலியாக இருந்திருக்கிறார்கள். நீண்ட காலம் கழித்து இந்தியாவை இந்தியாவில் டெஸ்ட் தொடரில் வைட் வாஷ் செய்தார்கள். அதேபோல், சமீபத்தில் நடந்த ஒருநாள் தொடரில் இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்தினார்கள். டி20 ஃபார்மட்டில் அவர்களால் சோபிக்க முடியவில்லை. ஆனால், நிச்சயம் இந்த இறுதிப் போட்டியில் அவர்கள் மறுபடியும் இந்தியாவுக்கு பிரச்னை தருவார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்களின் ஃபீல்டிங் வேறொரு தளத்தில் இருக்கும். அக்‌ஷர் படேல் எப்படி தன் ஃபீல்டிங்கால் அரையிறுதியை மாற்றினாரோ அதேபோல் நியூசிலாந்து வீரர்கள் ஒரு தருணத்தில் போட்டியை மாற்றிவிடுவார்கள். (2019 உலகக் கோப்பை அரையிறுதியில் தோனியின் ரன் அவுட் நினைவில் இருக்குமே!) அதிலும், கிளென் ஃபிலிப்ஸ் போன்ற வீரரெல்லாம் நொடியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிடுவார். இந்த அணியின் இன்னொரு பலம் அவர்களின் ஆல்ரவுண்டர்கள். கேப்டன் மிட்செல் சான்ட்னர், ஜேம்ஸ் நீஷம், கோல் மெக்கான்கீ, கிளென் ஃபிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் என பிளேயிங் லெவனிலேயே அவர்களால் 5 ஆல்ரவுண்டர்களை களமிறக்க முடியும். இது அவர்களின் மிகப் பெரிய பலம். இந்தத் தொடரில் ரச்சின் ரவீந்திரா தன் பந்துவீச்சின் மூலம் எப்படியான தாக்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதைப் பார்க்கிறோம். 10.63 என்ற அசாத்தியமான சராசரியில் இதுவரை 11 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். இதுதான் நியூசிலாந்து வீரர்களின், அந்த அணியின் பலம். எந்த வீரரும், எந்த ரூபத்திலும் போட்டியை மாற்றிவிடுவார். இந்தியாவைப் போலவே அவர்களும் முழுமையான ஒரு அணியாக இருக்கிறார்கள். அனைத்து துறையுமே அவர்களுக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. நியூசிலாந்து ஓப்பனர்கள் vs இந்திய பௌலர்கள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் நியூசிலாந்து ஓப்பனர்கள் ஃபின் ஆலன் மற்றும் டிம் செய்ஃபர்ட் இந்தப் போட்டியில் இந்தியாவுக்குப் பெரிய சவாலாக இருக்கப்போவது டிம் செய்ஃபர்ட், ஃபின் ஆலன் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப். இவர்கள் இருவரும் மிகச் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். முதல் பந்தில் இருந்தே அடிக்க வேண்டும் என்ற வேட்கை (intent)காட்டுகிறார்கள். அநாயசமாக பெரிய ஷாட்கள் ஆடுகிறார்கள். இந்தத் தொடர் முழுவதுமே அந்த அணிக்கு சீராக நல்ல தொடக்கம் கொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு இடையே ஒரு நல்ல புரிதல் இருக்கிறது. ஒருவர் அடித்து ஆடும்போது, இன்னொருவர் நிதானம் காட்டுகிறார். அதனால்தான், அவர்களால் நல்ல பார்ட்னர்ஷிப்களை அமைக்க முடிகிறது. உதாரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அந்த அரையிறுதிப் போட்டியில் கூட முதலில் செய்ஃபர்ட் தான் அதிரடி காட்டினார். பின்னர் தான் ஃபின் ஆலன் விஸ்வரூபம் எடுத்து அதிரடி சதத்தை பூர்த்தி செய்தார். இந்த இணக்கமான புரிதல் அவர்களுக்குப் பெரிய பலமாக இருக்கிறது. பவர்பிளேவில் அவர்கள் 75-80 ரன்கள் எடுத்துவிட்டால் இந்தியாவுக்குப் பெரிய தலைவலியாக அமைந்துவிடும். இவர்களை விரைவில் ஆட்டமிழக்கச் செய்தால் இந்திய அணிக்கு வெற்றி வசப்படுவதற்கான வாய்ப்பு அதிகம். அதற்கு என்ன மாதிரியான திட்டமிடுகிறார்கள் என்பதையும் பார்க்க ஆவலாக இருக்கிறேன். ஏனெனில், பும்ராவை பவர்பிளேவில் எத்தனை ஓவர்களுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்பது இவர்களின் செயல்பாட்டைப் பொறுத்தே அமையும். அதனால், இவர்களை வீழ்த்த சூர்ய்குமார் விரைவிலேயே பும்ராவை அழைத்து வருவாரா என்று பார்க்க வேண்டும். பவர்பிளேவுக்குள் நியூசிலாந்தை சுமார் 45, 50 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி ஓப்பனர்களை வெளியேற்றப் பார்க்கவேண்டும். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சனிக்கிழமையன்று பயிற்சியின்போது அக்‌ஷர் பட்டேல் உடன் ஜஸ்ப்ரித் பும்ரா இந்த இடத்தில் தான் வருண் போன்ற ஒரு பௌலர் வந்து கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்த முடியும். அதேசமயம் நியூசிலாந்தும் வருணை அவ்வளவு எளிதில் விட்டுவிடாது. இங்கிலாந்து எப்படி முதல் பந்தில் இருந்தே வருணின் பந்துவீச்சை அட்டாக் செய்ததோ, அதைபோலவே நியூசிலாந்து பேட்டர்களும் செய்ய நினைக்கலாம். அரையிறுதியில் வருண் வீசிய முதல் 3 பந்துகளிலுமே ஜேக்கப் பெ;jதெல் சிக்ஸர் விளாசினார். அதுதான் ஆட்டத்தில் அவர்கள் நீடித்து நிற்க அஸ்திவாரம் அமைத்தது. நியூசிலாந்தும் அதையே செய்ய நினைக்கலாம். வருண் சக்கரவர்த்தியை நியூசிலாந்து பேட்டர்கள் எப்படி எதிர்கொள்கிறார்களோ அதுவே இந்தப் போட்டியைத் தீர்மானிக்கும் என்று நான் நினைக்கிறேன். எப்படியும் பவர்பிளேவின் ஐந்தாவது அல்லது ஆறாவது ஓவரில் வருண் சக்கரவர்த்தி பந்துவீசக்கூடும். அந்த ஓவரில் 20 ரன்கள் செல்வதோ, இல்லை விக்கெட் விழுவதோ ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கும். அதேசமயம், மற்ற பேட்டர்களும் சாதாரணமானவர்கள் இல்லை. ரச்சின், ஃபிலிப்ஸ், மிட்செல், சேப்மேன் என தரமான பேட்டர்கள் இருக்கிறார்கள். ஒன்பதாவது வீரராகக் களமிறங்கும் மெக்கான்கீயே ஒரு ஆல்ரவுண்டர் தான். அவரால் என்ன செய்யமுடியும் என்பதை இலங்கைக்கு எதிரான சூப்பர் 8 ஆட்டத்தில் அவர் காட்டினார். அதனால், அவர்களின் பேட்டிங் மிக நீளமாகக் காட்சியளிக்கிறது. இந்திய ஓப்பனர்கள் vs நியூசிலாந்து பௌலர்கள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்த உலகக் கோப்பையில் அபிஷேக் ஷர்மா ஒரேயொரு அரைசதம் மட்டுமே அடித்திருக்கிறார் இந்திய பேட்டிங்கிலும் பவர்பிளேவில் இந்தியா எத்தனை ரன்கள் எடுக்கிறது என்பது ஆட்டத்தின் போக்கில் தாக்கம் ஏற்படுத்தும். அதற்கு இந்தியாவின் தொடக்கம் முக்கியம். இந்திய பேட்டிங்கில் தற்போது இருக்கும் ஒரு சிறிய ஓட்டையும் அங்குதான் இருக்கிறது. அபிஷேக் ஷர்மா இந்தத் தொடரில் சோபிக்கவில்லை என்றாலும், இறுதிப் போட்டியில் அவர் தன்னுடைய ஆட்டத்தை மாற்றிக்கொள்ளப் போவதில்லை. நிச்சயம் அவர் அதே அதிரடியைத் தான் காட்டுவார். பயிற்சியாளர் கௌதம் கம்பீரும் அதைத்தான் ஊக்குவிப்பார். அதனால், முதல் பந்தில் இருந்தே அவர் அதிரடி காட்டுவார் என்று நம்பலாம். நியூசிலாந்தின் மேட் ஹென்றி இந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் வீழ்த்துகிறார். உடன், லாக்கி ஃபெர்குசனுமே தற்போது நல்ல முன்னேற்றம் கண்டு ஒரு முழுமையான பௌலராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இவர்களுக்கு எதிராக இந்தியா நன்கு ரன் சேர்க்கவேண்டும். இந்தியாவுமே பவர்பிளேவில் 75, 80 ரன்களைக் குறிவைக்கும். அதனால், இவர்களுக்கு எதிராக அபிஷேக் ஷர்மா சிறப்பாக ரன்சேர்க்க வேண்டும். அதேசமயம், ஆஃப் ஸ்பின்னர் மெக்கான்கீ புதிய பந்தில் பந்துவீசினால் அது அபிஷேக் ஷர்மாவுக்கு சவால் கொடுக்கலாம். இடது கை பேட்டரான அபிஷேக் ஆஃப் ஸ்பின்னர்களுக்கு எதிராகத் தடுமாறுவதைப் பார்த்தோம். மெக்கான்கீ அரையிறுதிப் போட்டியில் இரண்டாவது ஓவரை வீசி குவின்டன் டி காக், ரயன் ரிக்கில்டன் என இரண்டு இடது கை பேட்டர்களை அடுத்தடுத்து அவுட்டாக்கியதையும் பார்த்தோம். அதனால், அபிஷேக் ஜாக்கிரதையாக பேட்டிங் செய்வது முக்கியம். மிட்செல் சான்ட்னர் - இந்தியாவுக்கு மிகப்பெரிய சவால் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பேட்டிங், பௌலிங், கேப்டன்சி என அனைத்து தளங்களிலும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார் நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் மிகச் சிறந்த ஸ்பின்னர். புத்திசாலித்தனமானவர். இந்தியாவுக்கு எப்போதுமே பிரச்னைகள் ஏற்படுத்தியிருக்கிறார். அதனால், மிடில் ஓவர்களில் இந்திய அணி அவரை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதும் முக்கியம். இந்திய அணியில் நிறைய இடது கை பேட்டர்கள் இருக்கிறார்கள். அபிஷேக், இஷான், திலக், துபே என்று பெரும் படையே இருக்கிறது. அவர்கள் சான்ட்னரின் இடது கை சுழலை அடித்து ஆடுவார்களா இல்லை சற்றே கவனத்துடன் எதிர்கொள்வார்களா என்று பார்க்க ஆவலாக இருக்கிறேன். ஏனெனில், அவர் தன் ஸ்பெல்லில் போட்டியை மாற்றிவிடக்கூடியவர். அவர் 2 விக்கெட்டுகள் எடுத்துவிட்டாலே, இந்தியாவுக்கு அதிலிருந்து மீள்வது எளிதாக இருக்காது. பௌலராக, பேட்டராக மட்டுமல்லாது கேப்டனாகவும் அவர் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். சத்தமே இல்லாமல் ஒரு இளம் அணியை சிறப்பாக வழிநடத்தியிருக்கிறார். இந்த இறுதிப் போட்டியிலும் அவர் தன் படையை சிறப்பாக வழிநடத்தி கோப்பையை வென்றுதர முனைப்போடு இருப்பார். வெற்றி பெறப் போவது யார்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இறுதிப் போட்டி நடக்கும் ஆடுகளத்தை சனிக்கிழமை பார்வையிடும் இந்திய கேப்டன் சூர்யகுமார் இதுபோன்ற போட்டியில் இவர்தான் வெற்றி பெறுவார் என்று அவ்வளவு எளிதாக சொல்லிவிட முடியாது. சொல்லப்போனால், ஒரு இன்னிங்ஸை ஆட்டத்தை மொத்தமாக மாற்றிவிடும். ஃபின் ஆலன் இன்னிங்ஸ் தென்னாப்பிரிக்காவை வெளியேற்றியது. சாம்சனின் இன்னிங்ஸ் இங்கிலாந்தை வெளியேற்றியது. அதுபோன்ற ஒரு செயல்பாடு இந்த இறுதிப் போட்டியையும் முடிவு செய்யலாம். அணியின் ஆட்ட முறை, வேட்கை (intent), வீரர்களின் திறன் அனைத்தையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது நியூசிலாந்தை விட இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு சற்று அதிகமாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. நான் முன்பே சொன்னதுபோல் அவர்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை யாரும் செய்யாததைப்போல் இந்த அணியால் தொடர்ந்து இரண்டு உலகக் கோப்பை வெல்ல முடியும். அதற்கான பிரகாசமான வாய்ப்பு இப்போது அவர்களிடத்தில் இருக்கிறது. நான் இந்தியாவைச் சேர்ந்தவன் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. அவர்கள் ஆடும் கிரிக்கெட் அப்படி அசாத்தியமானதாக இருக்கிறது. அதேசமயம் எப்போதுமே கொஞ்சம் கூட நியூசிலாந்து அணியை மட்டும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. (இந்தக் கட்டுரையை எழுதிய வித்யுத் சிவராமகிருஷ்ணன், தமிழ்நாடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடியிருக்கிறார். 2000-ல்19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். தற்போது வர்ணனையாளராக இருக்கிறார்.) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு டி20 உலகக்கோப்பை யாருக்கு? நியூசிலாந்தின் மிகப்பெரிய பலமும் இந்தியாவின் ஒரே பலவீனமும்
  20. குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு மாற்றம் Mar 8, 2026 - 11:02 AM தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 4ஆம் திகதி காலி துறைமுகத்தில் இருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரான் கடற்படைக்குச் சொந்தமான இக்கப்பலில் இருந்த 35 பேரை இலங்கை கடற்படையின் மீட்புக் குழுவினர் கரைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக காலியில் உள்ள கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் மேலும் 10 பேர் இன்னும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். IRIS Dena கப்பல் மீதான தாக்குதலில் உயிரிழந்த 84 ஈரான் மாலுமிகளின் உடல்கள் மீதான மரண பரிசோதனைகள் கடந்த சில நாட்களாக காலி தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டன. அதேவேளை, சிகிச்சை பெற்று வரும் மாலுமிகளில் 8 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 'மிலன் 2026' கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கச் சென்ற ஈரானின் மூன்று கப்பல்களில் ஒன்றான 'IRIS Bushehr' என்ற போர்க்கப்பல், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாணந்துறைக்கு அப்பால் உள்ள இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நுழைந்தது. அதற்கமைய, கடந்த மார்ச் 5ஆம் திகதி இரவு அந்தப் போர்க்கப்பலின் ஊழியர்கள் உட்பட 204 மாலுமிகளை இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர். இவர்களில் 53 அதிகாரிகள், 54 கடற்படை பயிலுநர்கள், 48 சிரேஷ்ட மாலுமிகள் மற்றும் 23 மாலுமிகள் அடங்குகின்றனர். இவர்கள் வெலிசர கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதேவேளை, ஈரானியக் கப்பல்கள் தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதில் இலங்கையின் இறைமையை வொஷிங்டன் மதிப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும், IRIS Bushehr கப்பல், அதன் ஊழியர்கள் மற்றும் மீட்கப்பட்ட மாலுமிகள் தொடர்பில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் இலங்கையின் உள்நாட்டுச் சட்டங்கள் மற்றும் சர்வதேச சட்டக் கடப்பாடுகளுக்கு அமைய இலங்கைக்கே உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு மாற்றம்
  21. இனி இப்படியான குண்டு வெடிப்புகள் உலகம் எங்கும் நடக்கும். என்று எதிர்பார்க்கலாம்.
  22. மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம் : பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு அறிக்கை 06 Mar, 2026 | 04:58 PM பெண்களின் சம உரிமைகள், நீதி மற்றும் கௌரவம் என்பவற்றுக்காகத் தொடரும் போராட்டத்தில் சர்வதேச மகளிர் தினம் என்பது பெரும் குறியீட்டுருவான முக்கியத்துவத்தினை வகிக்கின்றது. இந்த வருட சர்வதேச மகளிர் தினத்துக்கான ஐக்கிய நாடுகள் தொனிப்பொருள், ‘உரிமைகள், நீதி, நடவடிக்கை, சகல பெண்களுக்காகவும் சிறுமிகளுக்காகவும்’ என்பதாகும். பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான எமது கடப்பாட்டினைப் புதுப்பிக்கும் ஒரு நாளாகவே பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் உறுப்பினர்களாகிய நாம் இந்த நாளைக் கருதுகின்றோம். இலங்கையில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்துவதில் பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் வகிபாத்திரம் மற்றும் செயற்பாடுகள் பற்றிய சுருக்கமான விளக்கத்தினை வழங்குவதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் இந்த நாள் அமைந்துள்ளது. இலங்கையில் தாபிக்கப்பட்டுள்ள சுயாதீன ஆணைக்குழுக்களின் பட்டியலில் புதிதாகச் சேர்ந்துள்ள பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு, 2004ஆம் ஆண்டின் 37ஆம் இலக்க, பெண்களின் வலுவூட்டல் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ளது. இது இலங்கையில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டவாக்க மேம்பாட்டில் ஒரு முக்கியமான மைல்கல்லாகத் திகழ்கின்றது. அரசியலமைப்புப் பேரவையினதும் பாராளுமன்றப் பெண்கள் குழுவினதும் விதப்புரைகளின் அடிப்படையில் பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் 2025ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டனர். ஒரு சுயாதீனமான ஆணைக்குழு என்ற அடிப்படையில், பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான பரந்த அதிகாரங்கள் பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவிற்கு ஆணையாக வழங்கப்பட்டுள்ளன. பெண்களின் உரிமைகள் பற்றிய மீறுகையினை விசாரித்துப் புலனாய்வு செய்வதற்கான தத்துவம் முதற்கொண்டு, மத்தியஸ்தத்தின் மூலம் குறைகளை நிவர்த்தி செய்தல், பெண்களின் உரிமைகளுக்காக ஆதரித்து வாதாடுவதற்காகவும் பெண்களின் உரிமைகள் பற்றிய கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை அரச நிறுவனங்கள் மாத்திரமன்றி தனிநபர்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இயைந்தொழுகுவதைக் கண்காணித்து மதிப்பிடுவதற்காகவும் பெண்களின் மேம்பாடு மற்றும் வலுவூட்டல் பற்றிய ஒரு தேசியக் கொள்கையினை உருவாக்குதல் வரை இந்தத் தத்துவதங்கள் பரவிக் காணப்படுகின்றன. 2004ஆம் ஆண்டின் 37ஆம் இலக்க, பெண்களின் வலுவூட்டல் சட்டம் மற்றும் பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு ஆகியன நாடு முழுவதுமுள்ள பெண்கள் உரிமைகள் கூட்டுக்களதும் அமைப்புக்களதும் தசாப்த கால போராட்டங்களினதும் அயரா முயற்சியினதும் உச்சபட்ச விளைவே என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். 2025 செப்டெம்பரில் ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டதில் இருந்து, ஆணைக்குழுவுக்கென சுயாதீனமானஅலுவலக வளவுகள் இல்லாமை, பணியாளர்கள் இல்லாமை போன்ற பல சவால்களுக்குப் பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு முகங்கொடுக்க வேண்டியிருந்தது. ஆணைக்குழுவின் முதலாவது தவிசாளர் நியமிக்கப்பட்ட நான்கு மாதங்களிலேயே அவர் அண்மையில் அப்பதவியினை இராஜினாமா செய்தமையும் இச்சவால்களுள் உள்ளடங்குகின்றது. சம்பந்தப்பட்ட சகல பங்கீடு பாட்டாளர்களினதும் உதவியுடனும் ஒத்துழைப்புடனும் இச்சவால்கள் தீர்க்கப்படவேண்டியுள்ள நிலையில், கடந்த மாதங்களில் எமக்கு எண்ணற்ற வழிகளில் உதவிய அனைவரினதும் அந்த உதவிகளை நாம் ஆழமான மெச்சுதலுடன் ஏற்றுக்கொள்கின்றோம். இந்த நாட்டின் பெண்கள் பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றனர். இவற்றுள் பின்வருவன உள்ளடங்குகின்றன என்பதுடன் இச்சவால்கள் பின்வருவனவற்றுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டவை அல்ல. பெண்களைப் பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கும் பாலியல் துன்புறுத்தலுக்கும் உட்படுத்தல், பொருளாதார வலுவூட்டலின்மை, பாகுபாடு மிக்க சட்டக் கட்டமைப்புக்களாலும் நிறுவனக் கட்டமைப்புக்களாலும் ஏற்படும் முழுமையான அநீதிகளுக்குப் பெண்கள் உட்படல், அரசியல் பதவிகளிலும் தலைமைத்துவப் பதவிகளிலும் பெண்கள் போதியளவு இடம்பெறாமை, ஒரு பால்நிலையினருக்கு மாத்திரம் அதிக தாக்கம் ஏற்படும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் எண்ணற்ற பாதிப்புறுநிலைகள். எனவே, சமத்துவம், பாகுபாடின்மை மற்றும் நீதி என்பவற்றுக்கான பெண்களின் உரிமைகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு என்பவற்றினை உறுதிப்படுத்த பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவினால் இன்னும் பல விடயங்கள் நிறைவேற்றப்படவேண்டியுள்ளன.Politics இந்த பின்னணியை கருத்தில்கொண்டு, கடுமையான வளப் பற்றாக்குறைகளுக்கு மத்தியில், பணியாளர்களும் பொருத்தமான அலுவலக வளவுகளும் இல்லாதிருக்கையிலும் எம்மால் இனியும் மௌனம் காக்க முடியாது என நாம் உறுதியாக நம்புகின்றோம். எனவே, பெண்களின் உரிமைகளை மேம்படுத்திப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட பிரதான செயற்பாடுகளில் சிலவற்றினை பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு தொடங்கும். அவற்றுள் உள்ளடங்குபவை: ⦁ பெண்களின் உரிமைகள் தொடர்பான, 2024ஆம் ஆண்டின் பெண்கள் வலுவூட்டல் சட்டம் தொடர்பான பெண்களின் உரிமைகள் தொடர்பாகச் சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டங்கள், நியமங்கள் மற்றும் தராதரங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தகவல்களைப் பரப்பவும் நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துதல். ⦁ பெண்களின் உரிமைகளை மேம்படுத்திப் பாதுகாப்பதற்கு ஆதரவளிக்கும் ஆய்வினைப் பொறுப்பேற்று அறிவினைப் பரப்புதல். ⦁ பின்வருவன தொடர்பாக அரசாங்கத்திற்கும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருக்கும் விதப்புரைகளை வழங்குதல்:அ) உள்நாட்டுச் சட்டங்களும் கொள்கைகளும் நிர்வாக நடைமுறைகளும் பெண்களின் உரிமைகள் தொடர்பாகச் சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்கள் மற்றும் தராதரங்களுக்கு அமைவாக உள்ளன என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.ஆ) பெண்களின் உரிமைகளை மதிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் நிறைவேற்றுவதற்கும் தேவைப்படும் சட்டங்களையும் ஒழுங்குவிதிகளையும் நிர்வாகப் பணிப்புரைகளையும் நடைமுறைகளையும் உருவாக்கல். ⦁ பெண்களின் உரிமைகள் பற்றிய உத்தேசச் சட்டவாக்கங்கள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் என்பவற்றின் தாக்கத்தினை மதிப்பிட்டு, சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புக்களுக்கு விதப்புரைகளை வழங்குதல். ⦁ பெண்களின் உரிமைகளைப் பாதிக்கும் முக்கியமான விடயங்கள் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பாகப் பகிரங்கக் கூற்றுக்களை வெளியிடுதல். ⦁ பெண்களின் உரிமைகளை மேம்படுத்தும் பொதுவான கொள்கைகளையும் நடைமுறைகளையும் போஷிப்பதற்காக அரச நிறுவனங்களுடனும் அரச சார்பற்ற செயற்படுனர்களுடனும் சிவில் சமூகக் குழுக்களுடனும் இணைந்து செயற்படுதல். மேலும் ⦁ பெண்களின் மேம்பாடு மற்றும் வலுவூட்டல் தொடர்பாக ஒரு தேசியக் கொள்கையினை உருவாக்கல். பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் மட்டுப்படுத்தப்பட்ட ஆற்றல் காரணமாக பெண்களின் உரிமைகள் மீறுகை தொடர்பாக விசாரித்துப் புலனாய்வு செய்யும் முக்கியமானதும் இன்றியமையாததுமான செயற்பாட்டினைப் பொறுப்பேற்பதற்கு ஆணைக்குழுவுக்குத் தற்போது இயலாமலிருக்கின்றது. பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு, விசாரித்துப் புலனாய்வு செய்யும் அதன் செயற்பாடுகளின் அதீத முக்கியத்துவத்தினைப் புரிந்துகொள்வதுடன், நீண்ட காலம் செல்வதற்கு முன்னர் ஆணைக்குழுவினை இயங்கவைப்பதற்குத் தேவைப்படுத்தப்படும் நிலைமைகளை உருவாக்குவதற்காக முனைப்பாகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறது. முடிவாக, நீதியில் நிலவும் இடைவெளியினை நிரப்பவும், பெண்கள் எதிர்நோக்கும் வன்முறையினையும் பாகுபாட்டினையும் இல்லாதொழிப்பதற்கும் பெண்களின் பொருளாதார வலுவூட்டலை வலுப்படுத்தவும் எம்முடன் கூட்டாகப் பணியாற்ற நாம் சகல அரச நிறுவனங்களையும் அரச சார்பற்ற செயற்படுனர்களையும் சிவில் சமூகத்தினையும் பொதுமக்களையும் அழைக்கின்றோம். பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான ஒரு சுயாதீனமானதும் சட்ட ரீதியானதுமான நிறுவனப் பொறிமுறையினைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கையில் பெண்கள் உரிமை இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட தசாப்த காலப் போராட்டத்தினை நாம் கௌரவிக்கின்றோம். Beaches & Islands ஆணையாளர்கள் என்ற ரீதியில், இலங்கையிலுள்ள சகல பெண்களுக்காகவும் சமமான உரிமைகளையும் கௌவரத்தினையும் நீதியினையும் பற்றிப்பிடிக்கும் ஒரு சமூகத்தினை உருவாக்குவதற்கு பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு சாத்தியமான சகல முயற்சிகளையும் எடுக்கும் என்பதை உறுதிப்படுத்துவதற்கான எமது கடப்பாட்டினை நாம் மீளுறுதிப்படுத்துகின்றோம். மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம் : பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு அறிக்கை
  23. நோர்வேயில் அமெரிக்க தூதரகத்தில் குண்டுவெடிப்பு Published By: Digital Desk 3 08 Mar, 2026 | 09:49 AM நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் நுழைவாயிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) அதிகாலை சக்திவாய்ந்த குண்டு வெடிப்பொன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் தூதரகக் கட்டடத்திற்குச் சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என நோர்வே பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். மத்திய கிழக்கில் அமெரிக்கா முன்னெடுத்து வரும் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அந்நாட்டு நேரப்படி இன்றையதினம் அதிகாலை 1.00 மணியளவில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தூதரகத்தின் கொன்சியூலர் பிரிவு நுழைவாயிலையே இந்த வெடிப்புத் தாக்குதல் இலக்கு வைத்துள்ளது. கட்டடத்தின் ஒரு பகுதிக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது. எனினும், உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என பொலிஸ் கட்டளை அதிகாரி மைக்கேல் டெல்மர் தெரிவித்துள்ளார். சம்பவத்தைத் தொடர்ந்து ஸ்லோ பொலிஸார், மோப்ப நாய்கள், ட்ரோன்கள் மற்றும் ஹெலிகொப்டர்களின் உதவியுடன் பாரிய தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர். தானியங்கி ஆயுதங்கள் ஏந்திய பொலிஸார் தூதரகத்தைச் சூழப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஈரான் மீதான அமெரிக்காவின் இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு மற்றும் ஏனைய பிராந்தியங்களில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் ஏற்கனவே அதியுயர் பாதுகாப்பு எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளன. எனினும், ஒஸ்லோவில் இடம்பெற்ற இந்த வெடிப்புச் சம்பவத்திற்கும் மத்திய கிழக்கு போருக்கும் நேரடித் தொடர்பு உள்ளதா என்பது குறித்து இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என நோர்வே பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வே புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர். நோர்வேயில் அமெரிக்க தூதரகத்தில் குண்டுவெடிப்பு
  24. குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்! Mar 8, 2026 - 08:50 AM அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் இராணுவம் புதிய பதிலடித் தாக்குதல் தொடர் ஒன்றை ஆரம்பித்துள்ளது. இந்த புதிய தாக்குதலானது "உண்மை வாக்குறுதி" நடவடிக்கையின் 27 ஆவது அலை என ஈரான் இராணுவம் பெயரிட்டுள்ளது. குவைத்தில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ முகாமான 'அரிப்ஜான்' (Arifjan) தலைமையகத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மிகவும் துல்லியமாக இலக்குகளைத் தாக்கக்கூடிய ஏவுகணைகளைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக ஈரான் இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது. குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!
  25. புனித பத்திரிசியார் - யாழ்ப்பாணம் கல்லூரி மோதும் பொன் அணிகளின் சமருக்கு டயலொக் அனுசரணை Published By: Digital Desk 3 08 Mar, 2026 | 10:58 AM இலங்கையின் வட பகுதியில் பிரசித்திபெற்ற பாடாசலைகள் மாபெரும் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான யாழ். புனித பத்திரிசியார் அணிக்கும் வட்டுகோட்டை யாழ்ப்பாணம் கல்லூரிக்கும் இடையிலான 109ஆவது பொன் அணிகளின் சமர் இம் மாதம் 12, 13, 14ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இலங்கையின் முன்னணி இணைப்பு நிறுவனமான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இப் போட்டிக்கு பிரதான அனுசரணை வழங்குவதுடன் இந்த வருடம் வட்டக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி மைதானத்தில் பொன் அணிகளின் சமர் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட், டோக்கியோ சிமென்ட் நிறுவனம் ஆகியன இணை அனுசரணை வழங்குகின்றன. இந்தப் போட்டி தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பானது யாழ்ப்பாணம் கல்லூரியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஊடக சந்திப்பில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், பலவிதமான இடையூறுகளுக்கும் மத்தியில் இந்த போட்டியினை தொடர்ச்சியாக நடாத்தி வருவதாகவும் இந்த இரண்டு பாடசாலைகளும் நட்பில் பிணைந்திருப்பதாகவும் கூறினர். பொன் அணிகளின் மாபெரும் கிரிக்கெட் போட்டியைத் தொடர்ந்து இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான 50 ஓவர் கிரிக்கெட் போட்டியம் ரி20 கிரிக்கெட் போட்டியும் நடைபெறும். இந்த போட்டியை கண்டுகளிப்பதற்கு புலம்பெயர்ந்து வாழ்கின்ற இரண்டு பாடசாலைகளினதும் உறவுகளும் வருகைதந்து சிறப்பிக்கவுள்ளனர். எனவே அனைவரும் இந்த போட்டியில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்தனர். இது இவ்வாறிருக்க, வட பகுதியில் பொன் அணிகளின் சமருக்கு அனுசரணை வழங்குவதையிட்டு பெருமை அடைவதாக டயலொக் ஆசிஆட்டா பிரதிநிதி தெரிவித்தார். இந்த ஊடக சந்திப்பின்போது அணிகள் அறிமுகம், வீரர்கள் அறிமுகம் மற்றும் வீரர்களுக்கான சீருடைகள் வழங்கல் என்பன இடம்பெற்றன. புனித பத்திரிசியார் - யாழ்ப்பாணம் கல்லூரி மோதும் பொன் அணிகளின் சமருக்கு டயலொக் அனுசரணை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.