stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் முதல்வராக ஈழத்தமிழர்.
நன் தவிக்கவில்லை. இனவெறி தான் இன அழிப்பை உண்டாக்கும் முக்கிய காரணி என்பதை நன்கே அறிந்துள்ளேன். சிங்கள பெண்ணை கற்பழிப்பேன் என ஒரு இனவெறியன் பகீரங்கமாக பேசி ஈழத் தமிழர் போராட்டதையே ஒரு இனவெறி போராட்டமாக மாற்றி அதை வைத்து அரசியல் செய்து வருவதை தொடர்ந்து வருவதை வெள்ளை உள்ளம் கொண்ட நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள். தாம் இனவாதத்தல் பாதிக்கப்படாதாக கூறும் புலம்பெயர் ஈழத்தமிழ் அரசியலை நடத்துவதாக கூறும் சிலர் தாமே வந்தேறியாக மேற்கு நாடுகளில் வாழ்ந்து கொண்டு, தமிழ் நாட்டில் பல தலைமுறையாக வாழ்ந்து வரும் மக்களை வந்தேறி என்று திட்டுவதன் மூலம் தமது ஈழத்தமிழ் அரசியலானது ஒரு இனவெறி அரசியலே என்று நிரூபித்துக்கொண்டிருப்பதையும் நீங்கள் அறியவில்லைப் போலும்.
-
தலைவர் பிரபாகரனின் திருமண விவகாரம் - காக்கா அண்ணா சீற்றம்
தலைவர் பிரபாகரனின் திருமண விவகாரம் - காக்கா அண்ணா சீற்றம் சனி, 07 பெப்ரவரி 2026 11:26 AM தலைவர் பிரபாகரனின் திருமண வாழ்வு தொடர்பாக திருமாவளவன் கூறிய கருத்துக்கள் இதுவரை அவர் மீது எமது மக்கள் வைத்துள்ள மதிப்புகளை சுக்குநூறாக்கியுள்ளது என புலிகளின் மூத்த போராளி காக்கா அண்ணா என அழைக்கப்படும் மனோகரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் கூறுகையில் தலைவரின் திருமண வாழ்கை தொடர்பான விடயத்தில் 14 பேரை தான் சுட்டுக்கொன்றதாக தன்னிடம் தெரிவித்தார் என திருமாவளவன் கூறியமை எமது மக்கள் கூட்டத்தினரை பற்றி என்ன கருதுகிறார் என சினக்க வைக்கிறது. அவ்வாறயின் 14 பேரில் சடலங்களைக் கடந்தா தனது வாழ்வை தலைவர் கட்டியமைத்தார்? மேலும் நாட்டுப் பேச்சாளர் என்று ஒருவருக்கு மதிப்பளிக்கும் போது அவரது போராட்ட பங்களிப்பு சமூகத்துடனான உறவாடல் போன்ற விடயங்கள் மிக ஆழமாக பரிசீலித்த பின்னே அறிவிக்கப்படுகின்றது. மகள் ஒரு பட்டதாரி ஆவாள் என்ற கனவுடன் இருந்த மதிப்புக்குரிய ஏரம்பு ஐயாவுக்கு அது கலைந்து போனதில் ஆரம்பத்தில் ஏமாற்றமாக இருந்திருக்கலாம். ஆனால் பாலச்சந்திரன் என்ற தனது மகன் மாவீரர் என்ற நிலையை அடைந்த பின்பும் எந்தெந்த வழிகளில் எமது இனத்திற்கு உதவலாம் என மாவீரர் விடயங்களில் திருமண ஏற்பாடுகள் உட்பட எவ்வளவு அக்கறையுடன் செயல்பட்டார் என்பதை நான் நன்கு அறிவேன். தமிழக அரசியலில் எவ்வாறான நிலைப்பாடுகள் இருந்தாலும் எவரையும் பகைக்காத போக்கே பொதுவாக இருந்து வந்துள்ளது தன்னை எல்லோரையும் விட மேலாக கருதி சில அந்தரங்கங்களை பகிர்ந்து கொண்டார் தலைவர் என கற்பனையாகவோ தவறாக விளங்கியோ கூறுவது இதுவரை இவர் மீது நம்பிக்கை கொண்ட தமிழர்களை மனம் நோக வைத்துள்ளது. அந்தவகையில் இத்தகைய தவறான தமது கருத்துக்களை திருமாவளவன் மீளப் பெற வேண்டும். அதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்பது ஈழத் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://jaffnazone.com/news/54835
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஸ்கொட்லாந் முன்னனி வீரர்கள் அவுட் வெஸ்சின்டீச் வெற்றிய உறுதி செய்து விட்டது........................
-
யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்
அனுரா பாவம், பபா அவருக்கு இனவாதம் இல்லை, பொறுத்திருக்கிறார், காலம் கனிய செய்வார், இன்னும் பலவாறு கடைந்தெடுத்த இனவாதியான இலங்கையின் முப்படை பிரதானியை புகழ்ந்தேத்தும் உங்களுக்கு இதை சொல்லும் தார்மீக உரிமை இல்லை. இப்படி ஒரு 10% விம்பத்தை சிங்களவர் எழுப்பினால் அதை 100% ஆக்க பெருபித்து காட்டுபவர்கள் உங்களை, யுடியூப்பர்ஸ் போன்ற காவடிக்கூட்டம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நன்றி பையா சுடச்சுட பதில் தந்ததற்கு ........! 👍
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நான் கைபேசியில் ஒரு ஆப் மூலம் விளையாட்டை பார்க்கிறேன் இணையத்தில் பார்க்க முடியாது.............அதிக வியூருஸ் மற்றும் தேவை இல்லா வெப்சைட்டுக்கள் வரும்................ உங்கட கைபேசியில் இருந்து இந்த ஆப்பை டவுன்லூட் செய்யுங்கோ.......................
- Today
-
யாழ்.போதனாவில் “நாள் சத்திர சிகிச்சை நிலையம்” ஆரம்பிப்பு!
நற்செயல் .........அநேகமான சின்னஞ்சிறு வருத்தங்களுடன் வருபவர்களுக்கு உபயோகமாய் இருக்கும் ........!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பையா நீங்கள் யாரவது பார்க்கிற லிங்கை கொஞ்சம் அறியத்தாருங்கள் ....... அப்பத்தான் நானும் உங்களுடன் மல்லுக்கட்ட முடியும் . ........! 😊
-
தமிழரசில் சிறீதரனைத் தவிர மற்றைய 7 எம்.பிக்களுடன் சுமந்திரன் சந்திப்பு!; சிறீநேசனுடன் கருத்து மோதல்
தமிழரசில் சிறீதரனைத் தவிர மற்றைய 7 எம்.பிக்களுடன் சுமந்திரன் சந்திப்பு!; சிறீநேசனுடன் கருத்து மோதல் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கிய கூட்டமென்று நடைபெற்றது. கட்சியின் 8 எம்.பிக்களில் சிறீதரனைத் தவிர மற்ற ஏழு பேரும் கலந்துகொண்டனர். அவர்களுக்கும் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பே இடம்பெற்றது. தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் செயலாளர் என்ற முறையில் எஸ்.குகதாசன் இந்தக் கூட்டத்துக்கு ஒழுங்கு செய்திருந்தார் எனத் தெரிகின்றது. நாடாளுமன்றக் குழு இதற்கு முன்னர் இதேபோன்று தமது குழுவின் ஒரு சக உறுப்பினரான சிறீதரனுடன் இத்தகைய சந்திப்பு ஒன்றை சில தினங்களுக்கு முன்னர் நடத்தி இருந்தார் எனக் கூறப்படுகின்றது. அந்தச் சந்திப்பில் சாணக்கியன் எம்.பி. கலந்துகொள்ளவில்லை. அடுத்த கட்டக் கூட்டமே நேற்றுமுன்தினம் நடைபெற்றிருக்கின்றது. கட்சிக்குள் நிலவும் இழுபறி நிலைகள், குழப்பங்கள் குறித்து இரு தரப்புகளுடன் பேசி சுமுகநிலையை ஏற்படுத்தும் ஒரு திட்டம் என்ற பெயரிலேயே இந்த நடவடிக்கை நாடாளுமன்றக் குழுவால் முன்னெடுக்கப்பட்டது. முதலில் சிறீதரனுடனும், பின்னர் சுமந்திரனுடனும் கலந்தாலோசனை நடத்த நாடாளுமன்றக் குழு தீர்மானித்து இந்த நடவடிக்கையை எடுத்ததாகக் கூறப்படுகின்றது. கட்சிக்குள் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக கட்சியின் வழக்கு, சிக்கல்கள், அரசமைப்புக் கவுன்ஸிலில் சிறீதரனின் செயற்பாடு, சிறீதரனை நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கு அரசியல் குழு எடுத்த தீர்மானம் ஆகியவை பற்றி எல்லாம் இந்தச் சந்திப்பில் விலாவாரியாகப் பேசப்பட்டதாக அறியவந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேற்படி விடயங்களில் இடம்பெற்ற முழு சம்பவங்களையும் சுமந்திரன் விளங்கப்படுத்தினார் எனத் தெரியவந்தது. இந்தச் சந்திப்பின் போது இடையிடையே சிறீநேசனுடன் சுமந்திரன் முரண்பட்டுக் கருத்து மோதல் பட்டார் எனத் தெரிகின்றது. எனினும் கட்சியின் நிலைமை என்ன, சிறீதரன் ஆற்றிய செயற்பாடு யாது என்பவை பற்றி மிகத் தெளிவாகச் சுமந்திரன் விளக்கம் அளித்துள்ளார் எனக் கூட்டத்தில் பங்குபற்றிய எம்.பி. ஒருவர் தெரிவித்தார் என்று தமிழ்ப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. https://akkinikkunchu.com/358888/
-
மார்ச் மாதத்திற்குள் போர் நிறுத்தம்? - யுக்ரைன் விவகாரத்தில் வேகம் காட்டும் ட்ரம்ப்
மார்ச் மாதத்திற்குள் போர் நிறுத்தம்? - யுக்ரைன் விவகாரத்தில் வேகம் காட்டும் ட்ரம்ப் 07 February 2026 யுக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக மிகச் சிறந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். யுக்ரைன் விவகாரத்தில் தற்போது இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகள் மிகவும் சாதகமாக இருப்பதாகவும், இதன் மூலம் விரைவில் "ஏதாவது ஒரு நல்ல விடயம் நடக்கலாம்" என்றும் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அபுதாபியில் இடம்பெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தைகளின் விளைவாக, யுக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே 314 போர்க்கைதிகளை பரிமாறிக்கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன. எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு சமாதான ஒப்பந்தத்தை எட்டுவதை அமெரிக்கா இலக்காகக் கொண்டுள்ளது. எனினும், யுக்ரைனின் நிலப்பரப்பு தொடர்பான சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படாததால், இந்த காலக்கெடு நீட்டிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. எட்டப்படும் எந்தவொரு அமைதி ஒப்பந்தமும் யுக்ரைன் மக்களிடம் பொது வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும் என்றும், அதனுடன் இணைந்து அங்கு தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் அமெரிக்க மற்றும் யுக்ரைன் தரப்பு அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இந்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான உயர்மட்ட இராணுவத் தொடர்புகளை மீண்டும் ஆரம்பிக்க இரு நாடுகளும் இணங்கியுள்ளன. தமது இரண்டாவது பதவிக்காலத்தில் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்த ட்ரம்ப், தற்போது அதற்கான இராஜதந்திர நகர்வுகளைத் தீவிரப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://hirunews.lk/tm/445114/ceasefire-by-march-trump-shows-momentum-on-ukraine-issue
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வெஸ்சின்டீஸ் தொடக்க வீரர்கள் ஆமை வேகத்தில் விளையாடின படியால் பெரிய ஸ்கோர் அடிக்க முடிய வில்லை 182 நல்ல ஸ்கோர் வெஸ்சின்டீஸ் வீரர்களின் பந்து வீச்சில் தான் வெற்றி தோல்வி தெரியும்......................
-
தரம் 9 வரை கல்விச் சீர்திருத்தத் திட்டம்!
தரம் 9 வரை கல்விச் சீர்திருத்தத் திட்டம்! ஐந்து பிரதான தூண்களை அடிப்படையாகக் கொண்டு கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் ஏனைய தரங்களுக்கும் இச்சீர்திருத்தங்கள் விரிவுபடுத்தப்படும் என்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கல்விச் சீர்திருத்தத்திற்கான தேசிய இயக்கத்தின் இரத்தினபுரி மாவட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த ஆண்டில் 1 மற்றும் 6 ஆம் தரங்களுக்கான கல்விச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், அடுத்த ஆண்டில் 2 மற்றும் 7 ஆம் தரங்களுக்கான சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், 2028 ஆம் ஆண்டில் 3 மற்றும் 8 ஆம் தரங்களுக்கும், 2029 ஆம் ஆண்டில் 4 மற்றும் 9 ஆம் தரங்களுக்கும் கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன்படி, அடுத்த சில ஆண்டுகளில் தரம் 9 வரையிலான முழுமையான பாடத்திட்டங்கள் மறுசீரமைக்கப்படவுள்ளன. இந்தச் சீர்திருத்தங்களுக்குத் தேவையான பாடத்திட்டங்களை உருவாக்குவதில் கல்வி நிபுணர்கள் இணைந்துள்ளதாகவும், முதலாம் தரத்திற்கான சீர்திருத்தங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும், 6 ஆம் தரத்திற்கான பாடத்திட்ட மாற்றங்கள் மாத்திரம் அடுத்த ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். 21 ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய பிரஜைகளை உருவாக்குவதே இந்தச் சீர்திருத்தங்களின் பிரதான நோக்கமாகும் என்றும் அமைச்சர் ஜயதிஸ்ஸ வலியுறுத்தினார். https://adaderanatamil.lk/news/cmlbz0812000k356np5y299h9
-
எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்!
நாடாளுமன்ற ஓய்வூதியம் ரத்து – சட்டமூலம் குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது! adminFebruary 7, 2026 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்குவது தொடர்பான “நாடாளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்)” சட்டமூலம் குறித்து உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் நேற்று (வெள்ளிக்கிழமை, 06) நாடாளுமன்றத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார். அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் கீழ் இந்த சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. எனினும் இந்த சட்டமூலம் அல்லது அதன் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்புடன் முரண்படவில்லை என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில் அரசியலமைப்புக்கு முரணாக இல்லாத காரணத்தினால், இதனைப் நாடாளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மை (Simple Majority) மூலம் நிறைவேற்ற முடியும் என நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. உயர் நீதிமன்றத்தின் இந்த முழுமையான தீர்மானத்தை நேற்றைய நாடாளுமன்ற கூட்ட நடவடிக்கைகள் பற்றிய அதிகார அறிக்கையில் (Hansard) பதிவிடுமாறு சபாநாயகர் கட்டளையிட்டார். இந்த தீர்மானத்தின் மூலம் நாடாளுமன்ற ஓய்வூதிய நீக்கச் சட்டமூலத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான சட்ட ரீதியான தடைகள் நீங்கியுள்ளன. https://globaltamilnews.net/2026/228569/
-
யாழ்.போதனாவில் “நாள் சத்திர சிகிச்சை நிலையம்” ஆரம்பிப்பு!
யாழ்.போதனாவில் “நாள் சத்திர சிகிச்சை நிலையம்” ஆரம்பிப்பு! adminFebruary 7, 2026 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் “யாழ்ப்பாணம் – நாள் சத்திர சிகிச்சை நிலையம்” நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்த யாழ்ப்பாணம் நாள் சத்திரசிகிச்சை நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம், போதனா வைத்தியசாலை மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து சர்வதேச அமைப்புகளான IMHO, JMFOA மற்றும் புலம்பெயர் உறவுகளின் ஆதரவுடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப விழாவில் சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம், போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி, மருத்துவபீடப் பீடாதிபதி பேராசிரியர் இ.சுரேந்திரகுமாரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். பகல்நேர அறுவை சிகிச்சை (Day Surgery) என்பது ஒரு நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்துகொண்டு, அதே நாளில் ( 24மணித்தியாலங்களுக்குள் ) வீடு திரும்புவதைக் குறிக்கும். இதனைத் தமிழில் “நாள் சத்திரசிகிச்சை” அல்லது “அன்றே வீடு திரும்பும் அறுவை சிகிச்சை முறை” என்று அழைப்பார்கள். இதனால் நோயாளிகளுக்கு தங்குமிடம் தேவையில்லை நோயாளி இரவு முழுவதும் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. நோயாளி தனது வீட்டிலேயே தங்கி ஓய்வெடுப்பதால் மனதளவில் விரைவாகக் குணமடைய முடிகிறது. மருத்துவமனையில் தங்கும் கட்டணங்கள் இல்லாததால் இது சிக்கனமான முறையாகும். பொதுவாக நுண்துளை அறுவை சிகிச்சை (Laparoscopy) போன்ற நவீன முறைகள் மூலம் இது செய்யப்படுகிறது. மருத்துவமனையில் நீண்ட நேரம் தங்கியிருக்காததால், பிற நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. இது போன்ற நிலையங்கள் (JDSC போன்றவை) சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அறுவை சிகிச்சைகளை மிக வினைத்திறனாக மேற்கொள்ள உதவுகின்றன இது வெறும் ஆரம்பம் மட்டுமே! எதிர்காலத்தில் மருத்துவ சுற்றுலா (Medical Tourism) மற்றும் விரிவான சிகிச்சை முறைகளை நோக்கி எமது வடக்கு மாகாணத்தின் சுகாதாரத் துறை அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. https://globaltamilnews.net/2026/228569/
-
யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்
ம்... இதை நான் சொன்னால் ஏளனம். வெட்கமில்லையா என்று கேள்வி. புத்தன் சொன்னால் நொட்டை. குரு செய்தால் குற்றமில்லை, சிஷ்யன் செய்தால் குற்றம்.
-
யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்
மேலதிக விளக்கத்துக்கு நன்றி. தமிழ் கொண்டிராக்டர் நல்ல விசயம் என தெரிந்தும் இழுத்தடித்து, மேலும் பணமும் வாங்கி தான் தமிழன் என்பதை நிறுவி உள்ளார். இடையில் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன் படுத்தி, ஈரச்சாக்கை போத்தி ஹரினி தான் சிங்களவர் என்பதை நிறுவி உள்ளார்😂. இதை பார்க்கும் ஒரு 18 வயதுக்கு கீழான சுழிபுரத்து பிள்ளை மனதில் ஆமி பற்றிய விம்பம் எப்படி இருக்கும்? நாளை அது தையிட்டிக்கு போராட போகுமா? இப்படிதான் தமிழர் தோற்பதும் சிங்களவர் தொடர்ந்து வெல்வதும் நடக்கிறது. ஆனால் இராசையா குடும்பம் வேறு வழி இல்லாமல் ஆமி மூலம் கட்டி கொடுத்துள்ளது, அதை குறை சொல்ல முடியாது. தானம் கிடைக்கும் மாட்டை பல்லை தூக்கி பார்க்கும் இடத்தில் நாமும் இல்லை. இந்த மகன் எத்தனையாம் ஆண்டு ஏ எல் எடுத்தவர் என தெரியுமா? இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்:
-
யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்
இன்னும்…இன்னும்…மேலே…மேலே…. அடுத்த முறை காவடி தோளுக்கு ஏறும் போது அந்த திரியில் சந்திப்போம். முகம் காட்டும் கண்ணாடி… நிஜம் காட்டும் எப்போதும் 😂 நீங்களும், நானும். ஏற்கிறேன்.
-
உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?
எவருக்கும் வெள்ளை அடிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை. குறிப்பாக சிறுவர் துஸ்பிரயோகிகள் மீதும், அவர்களுக்கு கவர் எடுத்து எழுதுபவர் மீதும் யாழில் நான் எடுக்கும் அணுகுமுறை யாவரும் அறிந்ததே. ஆனால் அடிப்படை நியாயம் எண்டு ஒன்று உள்ளது. இன்னொரு சின்ன உதாரணம். நான் யாழ்கள உறவுகள் என ஒரு லிஸ்ட் போடுகிறேன் என வையுங்கள். யாருக்கும் நான் ஏன் அந்த லிஸ்டை போட்டே. என தெரியாது. அதில் குமாரசாமி, தமிழ் சிறி பெயர்கள் உள்ளன. உங்கள் வேலை, படிப்பு விபரம் உள்ளது. இப்படி ஒரு லிஸ்டை நான் போட்டது உங்களுக்கு தெரியுமா என்பது குஇட எவருக்கும் தெரியாது. பிண்னார் பொலிஸ் என்னை கள்ள மட்டை கள்ளன் என கைது செய்து தீர்ப்பும் ஆகிறது. நான் (தற்)கொலையான பின், ஒரு நாள் இந்த லிஸ்ட வெளி வருகிறது. இதை மட்டும் வைத்து குமாரசாமியும். தமிழ் சிறியும் கள்ள மட்டை கள்ளர் என யூடியூப் வீடியோ போட்டால் - அது நியாயமான செயல்தானா? பிகு இவர்கள் இருவரையும் நான் தனிப்பட்டு அறியேன். ராஜன் கூல் கொழும்பு டெலிகிராபில் எழுதிய ஆக்கங்கள், அவர் புலி, அரச தரப்பை சமனாக சாடும் ஒருவர் என என்ண வைத்தது. ஜீவன் அவரின் செயல்பாடுகள் மூலம் தான் ஒரு வெக்கங்கெட்ட சுயநல போக்க்கிரி என்பதை பலதடவை நிரூபித்துள்ளார். நானும் அதை யாழில் விமர்சித்துள்ளேன். மதம், சாதி, இனம் என தருணம் பார்த்து சுயநலனுக்கு பாவிக்கும் ஒரு கிருமிதான் ஜீவன் கூல். ஆனால் இந்த காரணங்களுக்காகத்தான் நீங்கள் இவர்களை போட்டு அடிக்கிறீர்கள் என்பது புரிகிறது. மேலே சொன்ன ஸ்டாமருக்கு விழும் அடிக்கும் இதுக்கும் வித்தியாசமில்லை. இதுதான் அரசியல். ஆனால் நான் அரசியல்வாதி அல்ல, என் மனதில் பட்டதை எழுதும் கருத்தாளர். இருவருமே இதை ஒரு பொருட்டாகவே எடுக்கவும் இல்லை, இதனால் அவர்கள் பதவி ஆட்டம் காணவும் இல்லை. நாம் எம்மை சமாதானப்படுத்த அப்படி நினைத்து, கார்டூன் வரைந்து மகிழ்ந்து கொள்ள மட்டுமே முடியும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கொல்கட்டா பிச்சில் மாற்றம் தெரியுது பகல் போட்டி என்பதால் ஜபிஎல்ல கே கே ஆர் வீரர்கள் உந்த மைதானத்தில் ரன்ஸ்ச வேகமாக கூட்டுவினம் ...................
-
யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்
ஹ்ஹஹ்ஹா.... உங்களின் இந்தக்கண்டுபிடிப்புபோற்தான் எல்லாமும். திருடன் நினைப்பு தன்னைப்போலத்தான் எல்லாரும் என்று. நான் கருத்து வைக்கத்தொடங்கிய காலத்திலிருந்து இப்போதுவரை ஒரே பெயரில்த்தான் எழுதிவருகிறேன், வேறொரு பெயரில் அல்லது இரு பெயரில் எழுத வேண்டிய தேவை எனக்கில்லை, இனியும் வராது. எதுவாக இருந்தாலும் நேரடியாக எழுதுவேன் அந்த துணிச்சல் எனக்குண்டு. இப்போது மடை மாற்றுவது யார்? மாவீரர் மீதான அபிமானம் எனக்கு எப்போதுமுண்டு. அனுரா ஆட்சிக்கு வந்த முதல், மாவீரர் நினைவு அமைதியாக நடந்தேறியது. நீதிமன்றம் அதற்கெதிராக தடையேதும் பிறப்பிக்கவில்லை, போலீசார் தடையுத்தரவு கோரி நீதிமன்றத்தை நாடவில்லை, எடுபிடியில்லை. நான் யாருக்கும் போட்டியாக எழுதவேண்டிய தேவையில்லை. என்னை வம்புக்கிழுப்பது நீங்கள் நான். தவறுகளை சுட்டிக்காட்டும்போது நீங்கள் நித்திரைக்கு போய்விடுவீர்கள், சாதகமாக எழுதினால் வரிஞ்சு கட்டிக்கொண்டு ஓடி வருவீர்கள். நான் ஒன்று எழுதினால் நீங்கள் அதற்கு புறம்பான வேறொன்றை எழுதி நான் மடைமாற்றுகிறேன் என்று கதறுவீர்கள். யார் மடை மாற்றுவது, யார் மற்றவர்களை சீண்டுவது என்பது வாசகருக்கு தெரியும். தன் குற்றத்தை மற்றவர் மேல் திணித்து அவர்களை குற்றவாளியாக்குவது சிலருக்கு கைவந்த கலை. ஹிஹி.....☝நான் யாருக்கும் போட்டியில்லை. எழுத வேண்டியதை வேண்டிய நேரத்தில் எழுதுகிறேன். எனக்குப் பிடித்தவர் என்பதற்காக அவர்கள் செய்யும் தவறை அடக்கி வாசிப்பதுமில்லை, பிடிக்காதவர் என்பதற்காக அவர்கள் செய்யும் நல்லதை கடிந்து கொள்வதுமில்லை. 👇 நான் உங்களுக்கு போட்டியாக எழுதவே வருகிறேனென நீங்கள் கற்பனை பண்ணினால் அது எனது தவறல்ல.
-
உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?
நிச்சயமாக…. ஆனால் நடப்பதென்ன? ஒரு சின்ன உதாரணம். பீட்டர் மண்டல்ஸன் ஒரு முன்னாள் அரசியல்வாதி. ஸ்டாமர் அரசியலுக்கு வர முன்னர் அமைச்சர். ஒரு காலத்தில் ஈயூ கொமிசனர். ஆனால் காசு, ஊழல் விசயத்தில் அப்படி, இப்படி. அமெரிகாவில் பெரும் புள்ளிகள், டிரம்ப் உள்வட்டத்துடன் நெருங்கியவர். டிரம்ப்பை தாஜா செய்ய இவர்தான் சரி என அவரை அமெரிக்காவுக்கான யூகே தூதுவராக்கினார் ஸ்டாமர். அவரும் கடமையை நன்றாகவே செய்தார். முக்கிய தகவல் இவர் ஒரு ஓரினசேர்க்கையாளர். நியமிக்கும் போது எப்ஸ்டீன் நட்பு பற்றி தான் கேட்டபோது “மேலோட்டமாக தெரியும்” என தனக்கு பொய் கூறினார் என்கிறார் ஸ்டாமர். முதல் முறை கோப்புகள் வெளிவந்த போது - இது பொய் என தெரிந்து கொண்டு அதிகாலை 1 மணிக்கு போன் போட்டு ஆளை வேலையில் இருந்து தூக்கினார் ஸ்டாமர். கடைசியாக வந்த கோப்புகள் இவரும் கணவரும் எப்ஸ்டீனிடம் பண உதவி பெற்றனர், அமைச்சராக இருந்தபோது நிதி தகவல்களை அவருக்கு கொடுத்தார் என்பதை காட்டுகிறன. ஆனால்…. அவர் கட்சிகாரர் உட்பட பலர் ஸ்டாமர் பதவி விலக வேண்டும் என அடம்பிடிக்கிறார்கள். அநேகமாக நடக்கும் போலவே தெரிகிறது. அப்படி நடப்பின்…. எப்ஸ்டீன் விடயத்தில் பதவி விலகிய ஒரே அரசியல்வாதி….எப்ஸ்டீனோடு ஒரு சம்பந்தமும் அறவே அற்ற, தான் அரச தலைமை வாதியாக இருந்த போது பல சிறார் கொடுமை வழக்குகளுக்கு தண்டனை பெற்று கொடுத்த ஸ்டாமராகவே இருக்கும். இது போல பல கூத்துக்கள் இந்த எப்ஸ்டீனை சுற்றி நடக்கிறன. குற்றவாளிகள் தண்டிக்கப பட வேண்டும் எனபதில் மாற்று கருத்து எவருக்கும் இருக்க முடியாது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஸ்கொட்லாந் வாங்கி கட்டப் போகினம்...............வெஸ்சின்டீஸ் வீரர்கள் கடந்த காலங்களில் அடிச்சு ஆடின மாதிரி மீண்டும் அடிச்சு ஆடத் தொடங்கிட்டினம் 200ரன்ஸ்ச கடப்பினம் இன்று💪...........................
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
எவரும் இங்கு காறி உமிழவில்லை. வேறு வழியின்றி முட்டுச்சந்தியில் மௌனித்தாக நீங்கள் கூறிய அந்த அரசியலை முன்மாதிரியாக கொள்ள நினைப்பவர்களிடம் கேள்விகள் தான் கேட்கிறோம். உரிய நேரத்தில் மௌனித்து மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வை கண்டிருந்தால் யாரும் இப்படி கேள்வி கேட்க மாட்டார்கள். மக்களை எதிரிக்கு பலி கொடுத்து தமிழர் அரசியலை ஒரு வக்கற்ற நிலைக்கு, முட்டுச்சந்திக்கு கொண்டுவந்த பின்னர் இனி வேறு வழியுன்றி மௌனித்ததாக கூறியதால் தான் இத்தனை கேள்விகள். அத்தோது அந்த தவறான அரசியலை நியாயப்படுத்தி அதே பாதையில் தானே தொடர்ந்து அடுத்த தலைமுறையையும் பயணிக்க வைக்க முயன்று அவர்களையும் நாசமாக்க ஆசைப்படுபவர்களிடம் மட்டும் தான் இந்த கேள்விகள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அரும் பொட்டுக்கை தப்பிட்டோம் இல்லையேன் 21 முட்டை குடிச்சு இருப்போம்😛....................
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
அ என்ற அறிவு, சம்பந்தப்பட்டவர்களை வழி நடத்தி இருந்தால் மக்களை கிளி நொச்சியில் இருந்து முள்ளிவாய்க்காலுக்கு பலவந்தமாக சாய்த்துக் கொண்டு போய்ப் பலி கொடுத்திருக்க மாட்டார்களே! செய்த தப்புகளை எல்லாம் கேள்வி கேட்காது ஆமாம் சாமி போட தெரிந்தவுடன் நிறுத்திய, அதாவது ஆவன்னாவுடன் நிறுத்திய சாமான்யனும், அதாவது நாங்களும் இதற்கு பொறுப்பு தான்