stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
இம்ரான் கானின் வலது கண்ணில் 85 சதவீத பார்வையிழப்பு ; கண்டுகொள்ளாத சிறை நிர்வாகம் - பாக். உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
எவ்வளவு பெரிய பெயரோடும் புகழோடும் இருந்த மனுஷன் ........!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சகோதரி நிலாமதியின் மைண்ட் வொய்ஸ் .......! அவுஸ் = 69/4=10.3 --
-
🍎 தர்சானந்திற்கெதிராக யாழ். மாநகர சபை முன் போராட்டம்
யாழ்.மாநகர சபையில் கடும் அமளி - வெளியேறிய ஈ.பி.டிபி வெள்ளி, 13 பெப்ரவரி 2026 07:20 AM ஆசிரியர் - Editor II பழக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யாது அசமந்தமாக செயற்பட்ட யாழ் மாநகரின் முதல்வரது செயலைக் கண்டித்த பிரேரணையை கிழித்தெறித்த ஈ.பி.டி.பியியின் உறுப்பினர்கள் சபையின் அமர்விலிருந்தும். வெளிநடப்புச் செய்தனர். யாழ் மாநகரின் உறுப்பினர் தர்சானந்தின் பழக்கடைகளை அகற்றுவது தொடர்பில் கொண்டுவரப்பட்ட பிராரணையை எதிர்த்து யாழ் மத்திய பேருந்து நிலைய சூழலில் அமைந்துள்ள பழக்கடை வியாபாரிகள் மாநகர சபை முன்பாக போராட்டம் ஒன்றை இன்றையதினம் முன்னெடுத்திருந்தனர். இவ்விடயம் குறித்து இன்றைய சபை அமர்வில் கருத்தை முன்வைத்து, உரிய பொறிமுறையின்றி கொண்டுவரப்பட்ட பிரேரணையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு செயற்படுத்தும் சந்தர்ப்பத்தில் உரிய பொறிமுறை வேண்டும் என்றும் வலியுறுத்தியதுடன் அதற்கான தீர்வை உடன் வழங்க வேண்டும் என்றும் ஈ.பி.டி.பி யினர் வலியுறுத்தினர். ஆனால் முதல்வர் அவ்விடையத்தை அலட்சியப்போக்குடன் கையாண்டு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் சபையை முன்னெடுத்தமையால் ஈ.பி.டி.பி.யின் உறுப்பினர்கள் குறித்த பிரேரணையை கிழித்தெறிந்து சபையை விட்டு வெளியேறினர். https://jaffnazone.com/news/54947
-
இந்தியத் துணைத் தூதுவருடன் சிறீதரன் எம்.பி தலைமையிலான குழு சந்திப்பு.!
இந்தியத் துணைத் தூதுவருடன் சிறீதரன் எம்.பி தலைமையிலான குழு சந்திப்பு.! Vhg பிப்ரவரி 13, 2026 இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான குழுவினருக்கும், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளிக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில், இந்திய இழுவைமடிப் படகு கடற்றொழிலாளர்களால் நயினாதீவு கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்தும், அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் பற்றியும் இந்திய துணைத் தூதுவருக்குத் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்திய அரசின் நிதியுதவியுடன் நயினாதீவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சூரியகல மின் உற்பத்தித் திட்டம், அதனுடன் தொடர்புடைய வீதி அபிவிருத்தி, வங்களாவடி மற்றும் துறைமுக அபிவிருத்திகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதுவர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடன், வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார், உப தவிசாளர் கணபதிப்பிள்ளை வசந்தகுமாரன், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் செல்லப்பா பார்த்தீபன், மங்களேஸ்வரன் கார்த்தீபன், நயினாதீவு கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.battinatham.com/2026/02/blog-post_87.html
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
22 பேருக்கு முட்டைக் கோப்பியும் நிலாமதி அக்காவிற்கு 2 புள்ளியும் கிடைக்கப் போகிறதா?! Live 19th Match, Group B, Colombo (RPS), February 13, 2026, ICC Men's T20 World Cup Zimbabwe 169/2 Australia (8/20 ov, T:170) 51/4 Australia need 119 runs in 72 balls. Current RR: 6.37 • Required RR: 9.91 • Last 5 ov (RR): 27/2 (5.40) Win Probability AUS 25.46% ZIM 74.54%
-
இம்ரான் கானின் வலது கண்ணில் 85 சதவீத பார்வையிழப்பு ; கண்டுகொள்ளாத சிறை நிர்வாகம் - பாக். உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
இம்ரான் கானின் வலது கண்ணில் 85 சதவீத பார்வையிழப்பு ; கண்டுகொள்ளாத சிறை நிர்வாகம் - பாக். உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு 13 Feb, 2026 | 12:24 PM பாகிஸ்தான் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தனது வலது கண்ணில் 85 சதவீத பார்வையை இழந்துள்ளதாக பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணியொருவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இம்ரான் கானின் நிலை தொடர்பாக அறிவதற்காக உச்சநீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி சல்மான் சஃப்தார், கடந்த 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இம்ரான் கானை சிறையில் சந்தித்து இரண்டு மணிநேரம் பேசியதாகவும் இம்ரான் கானின் தடுப்புக்காவல் கள நிலைமையை ஆராய்ந்து, அது தொடர்பாக அறிக்கையினை மறுநாள் புதன்கிழமை (11) நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது. இம்ரான் கானுக்கு வலது கண்ணில் 15 சதவீத பார்வை மட்டுமே இருப்பதாகவும் அவரது வலது கண்ணில் நரம்பு அடைப்பு எற்பட்டிருப்பதாகவும் பெப்ரவரி 6 என திகதியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக சட்டத்தரணி நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை அவரது பார்வை சீராக இருந்ததாகவும் கடந்த சில மாதங்களாகவே பார்வை மங்கத் தொடங்கியதாகவும் அவரது பார்வைக் குறைபாட்டு பிரச்சினையை சிறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றும் அவர்கள் இம்ரான் கானுக்கு கண் தொடர்பான சிகிச்சை அளிக்காததே அவரது பார்வைக் குறைபாட்டுக்கு காரணம் என்றும் அந்த அறிக்கையில் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததன் காரணமாக உடலளவில் அவர் பெரிதளவு பாதிப்பை எதிர்கொண்டிருப்பதாகவும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யாஹ்யா அப்ரிதி தலைமையிலான அமர்வானது, சட்டத்தரணியின் அறிக்கையை ஆய்வு செய்ததையடுத்து, எதிர்வரும் 16ஆம் திகதிக்கு முன்னர் சிறப்பு மருத்துவக் குழுவை நியமித்து, இம்ரான் கானுக்கு முழுமையான மருத்துவ பரிசோதனைகளை நடத்தவும் அவர் தனது குடும்ப மருத்துவரை சந்தித்து மருத்துவ ஆலோசனைகளைப் பெறவும் அடியாலா சிறை நிர்வாகம் அனுமதிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/238553
-
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி விழா தடையின்றி நடத்த வேண்டும் ; ப.சத்தியலிங்கம் கோரிக்கை
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி விழா தடையின்றி நடத்த வேண்டும் ; ப.சத்தியலிங்கம் கோரிக்கை 13 Feb, 2026 | 11:50 AM வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இவ்வருடம் சிவராத்திரி விழா எவ்வித தடையுமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தின் போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்திருந்தார். அத்துடன் குறித்த ஆலயத்திற்கான காணி மற்றும் பாதை விடுவிப்பு தொடர்பில் தன்னால் வடக்கு மாகாண ஆளுனருக்கும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கும் கடிதம் மூலம் கோரிக்கை விடப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக ஆளுநரால் பிரதேச செயலாளரிடம் அறிக்கை கோரப்பட்டது. பல மாதங்கள் கடந்தும் அந்த அறிக்கை அனுப்பப்படவில்லை. ஏன் அது அனுப்பப்படவில்லை எனவும் கேள்வியெழுப்பியிருந்தார். விரைவில் அறிக்கையினை சமர்ப்பிப்பதாக பிரதேச செயலாளர் பதிலளித்திருந்தார். https://www.virakesari.lk/article/238548
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைக்கு அதுதானோ. 😜
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
நமிபியாவை ஓட்டங்களால் வென்றது இந்தியா; ஏ குழு புள்ளிகள் நிலையில் முதலிடம் Published By: Vishnu 12 Feb, 2026 | 11:28 PM (நெவில் அன்தனி) டெல்ஹி அருண் ஜெய்ட்லி விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (12) இரவு மின்னொளியில் நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண ஏ குழு போட்டியில் நமிபியாவை 93 ஓட்டங்களால் இந்தியா வெற்றிகொண்டது. இந்த வெற்றியுடன் 4 புள்ளிககளைப் பெற்றுள்ள இந்தியா, ஏ குழுவுக்கான அணிகள் நிலையில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 209 ஓட்டங்களைக் குவித்தது. இந்தியா சார்பாக துடுப்பாட்ட வரிசையில் முதல் 6 வீரர்களில் அணித் தலைவர் சூரியகுமார் யாதவ்வைத் தவிர மற்றைய ஐவரும் 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். ஆரம்ப விக்கெட்டில் பகிரப்பட்ட 25 ஓட்டங்களில் 22 ஓட்டங்களை சஞ்சு செம்சன் பெற்றதுடன் மற்றைய ஆரம்ப வீரர் இஷான் கிஷான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 24 பந்துகளில் 6 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 61 ஓட்டங்களைக் குவித்தார். இஷான் கிஷான் 2ஆவது விக்கெட்டில் திலக் வர்மாவுடன் 31 பந்துகளில் 79 ஓட்டங்களைப் பகிர்ந்தார். திலக் வர்மா 25 ஓட்டங்களைப் பெற்றதுடன் சூரியகுமார் யாதவ் 12 ஓட்டங்களுடன் வெளியேறினார். தொடர்ந்து ஹார்திக் பாண்டியா, ஷிவம் டுபே ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 39 பந்துகளில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 205 ஓட்டங்களாக உயர்த்தினர். ஹார்திக் பாண்டியா 28 பந்துகளில் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 52 ஓட்டங்களையும் ஷிவம் டுபே 23 ஓட்டங்களையும் பெற்றனர். ஆனால், அவர்கள் இருவர் உட்பட ஐவர் 5 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். பந்துவீச்சில் அணித் தலைவர் ஜேர்ஹாட் இரேஸ்மஸ் 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமிபியா 18.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 116 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஐவர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றபோதிலும் சர்வதேச அனுபவமற்ற அவர்களால் அவற்றை கணிசமான எண்ணிக்கைகளாக மாற்றமுடியாமல் போனது. லூரென் ஸ்டீன்கேம்ப் (29), ஜனர் ஃப்ரைலின்க் (22), ஜான் நிக்கோல் லொஃப்டி - ஈட்டன் (13), ஜேர்ஹாட் இரேஸ்மஸ் (18), ஸேன் க்றீன் (11) ஆகியோர் 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி 7 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அக்சார் பட்டேல் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹார்திக் பாண்டியா 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: ஹார்திக் பாண்டியா https://www.virakesari.lk/article/238521
-
வாழைச்சேனையில் காட்டு யானை அட்டகாசம்: ஒருவர் பலி; இருவர் படுகாயம்!
வாழைச்சேனையில் காட்டு யானை அட்டகாசம்: ஒருவர் பலி; இருவர் படுகாயம்! Published By: Digital Desk 1 13 Feb, 2026 | 10:14 AM மட்டக்களப்பு - வாழைச்சேனை நகரில், இன்று வியாழக்கிழமை (13) காலை இரண்டு காட்டு யானைகள் தாக்கியதில் இருவர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் 68 வயதுடையவர் எனவும், உணவு விற்பனை செய்து கொண்டிருந்தபோது காட்டு யானையால் தாக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தாக்குதலுக்குள்ளான மற்றையவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/238536
-
மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!
மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு! வடக்கு கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற கப் வாகனத்தை பொலிஸார் நிறுத்த முற்பட்டபோது, அதனை நிறுத்தாது தப்பிச் செல்ல முயன்றதால் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதன்போது, பொலிஸார் வாகனத்தை நோக்கி ஐந்து தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், சாரதி வாகனத்தை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://adaderanatamil.lk/news/cmlkh8qbg0004356nypr1i1a3
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
29-4 in 4.3 overs 😱😱 பிரேமதாஸ ஸ்ரேடியத்துக்கு பக்கத்தில் உள்ள மசூதியில் இருந்து வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை சத்தமாக இருக்கின்றது.
-
எகிப்து பிரமிட் கல்லறைகளில் 2,000 ஆண்டுகள் பழமையான தமிழ்-பிராமி கல்வெட்டுகள்!
எகிப்து மன்னர்களின் கல்லறைகளில் தமிழ் பெயர்கள்: யார் அந்த சிகை கொற்றன்? பட மூலாதாரம்,Ingo கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் எகிப்தில் உள்ள 'மன்னர்களின் பள்ளத்தாக்கு' பகுதியில் இருக்கும் கல்லறைகளில் தமிழ் பிராமி, சமஸ்கிருதம், பிராகிருத மொழிகளில் எழுதப்பட்ட சுமார் 30 எழுத்துப் பொறிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான எழுத்து பொறிப்புகள் தமிழ் - பிராமியில் எழுதப்பட்டவை என்கிறார்கள் ஆய்வார்கள். இந்தக் கல்லறைகளில் தமிழில் எழுதியது யார்? எகிப்தில் உள்ள மன்னர்களின் பள்ளத்தாக்கு (Valley of the Kings) பகுதியில் இருக்கும் கல்லறைகளில் இந்திய மொழிகளில் எழுதப்பட்ட சுமார் 30 எழுத்துப் பொறிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. மொத்தம் ஆறு கல்லறைகளில் இந்த 30 எழுத்துப் பொறிப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன. இவைகளில் பெரும்பாலான எழுத்து பொறிப்புகள் தமிழ் பிராமி எழுத்துகள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். சென்னையில் நடந்துவரும் தமிழ் கல்வெட்டியல் தொடர்பான பன்னாட்டுக் கருத்தரங்கில் லோசான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் இங்கோ ஸ்டராச்சும் தூர கிழக்கு ஆய்வுகளுக்கான பிரெஞ்சு நிறுவனத்தைச் (French Institute of Far Eastern Studies) சேர்ந்த பேராசிரியர் சார்லட் ஸ்மித்தும் "மன்னர்களின் பள்ளத்தாக்கிலிருந்து இந்தியா வரை: எகிப்தில் இந்திய எழுத்துப் பொறிப்புகள்" (From the Valley of the Kings to India: Indian Inscriptions in Egypt) என்ற தலைப்பில் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டனர். இங்கோ ஸ்ட்ராச், 2024ஆம் ஆண்டின் துவக்கத்தில் மன்னர்களின் பள்ளத்தாக்குப் பகுதிக்குச் சென்றார். அதற்குப் பிறகு அவருடன் பேராசிரியர் சார்லட் ஸ்மித்தும் இணைந்துகொண்டார். இவர்கள் இருவரும் சேர்ந்து அங்குள்ள ஆறு கல்லறைகளில் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 30 எழுத்துப் பொறிப்புகளைக் கண்டறிந்தனர். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பாக ஜூல் பெய்லி என்ற ஆய்வாளர் இங்குள்ள கல்லறைகள் அனைத்தையும் ஆராய்ந்து, அதில் உள்ள எழுத்துகளைத் தொகுத்திருக்கிறார். இருந்தபோதும் இந்தியாவைச் சேர்ந்த எழுத்துகளை அவரால் இனம்காண முடியவில்லை என்பதால், அவை இந்தியாவைச் சேர்ந்த எழுத்துகள் என்றே அறியப்படாமலேயே இத்தனை ஆண்டுகளாக இருந்தன. தற்போது இந்தக் கல்லறைகளில் அடையாளம் காணப்பட்டிருக்கும் எழுத்துகள், மூன்று இந்திய மொழிகளைச் சேர்ந்த எழுத்துகளில் எழுதப்பட்டிருந்தன. இந்த எழுத்துகளை எழுதியவர்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதி, மேற்குப் பகுதி, தென்னிந்தியப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்தப் பிரதேசங்களில் இதுபோல இந்தியாவைச் சார்ந்த எழுத்துகள் கிடைப்பது முதல் முறையல்ல என்பதையும் இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சகுத்தரா (Socotra) தீவுகளில் உள்ள ஹாக் குகைகள், செங்கடல் பிரதேசத்தில் உள்ள துறைமுகமான பெரெனிகே (Berenike) ஆகிய இடங்களில் இந்திய எழுத்துப் பொறிப்புகள் இதற்கு முன்பு கிடைத்துள்ளன. படக்குறிப்பு,ஆய்வை மேற்கொண்ட இங்கோ ஸ்டராச் மற்றும் சார்லட் ஸ்மித் மன்னர்களின் பள்ளத்தாக்குகளில் உள்ள கல்லறைகளில் தமிழ் எகிப்தின் தற்போதைய லக்ஸர் நகருக்கு அருகில், நைல் நதிக்கு மேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது மன்னர்களின் பள்ளத்தாக்குப் பகுதி. பழங்கால எகிப்தின் புதிய ராஜாங்கத்தைச் (New kingdom - கி.மு. 16ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 11ஆம் நூற்றாண்டுவரை) சேர்ந்த பாரோக்கள், அவர்களுடைய பிரபுக்களுக்காக உருவாக்கப்பட்ட 65 கல்லறைகள் இங்கே கண்டறியப்பட்டுள்ளன. ரோமானியர்களின் காலத்தில் பலர் இந்த இடத்தை பார்த்துச் சென்றிருக்கின்றனர். அப்படி இந்தப் பகுதிக்கு வந்தவர்கள் அந்தக் கல்லறைகளின் சுவர்களில் தங்களது பெயர்களை எழுதிச் சென்றிருக்கின்றனர். ஜூல் பெய்லி, இந்தக் கல்லறைகளை 1888-89 காலகட்டத்திலும் 1913–14 காலகட்டத்திலும் ஆய்வுசெய்து, அங்கிருந்த 2,000 கிறுக்கல்கள் அல்லது எழுத்துகளைத் தொகுத்து வெளியிட்டார். ஆனால், அவரால் இந்திய எழுத்துகளை அடையாளம் காண இயலவில்லை. அவற்றை அவர் Exotic, Asianic என்ற வார்த்தைகளில் குறிப்பிட்டாரே தவிர, அவை என்ன சொல்கின்றன என்பதை ஜூலை பெய்லியால் புரிந்துகொள்ள முடியவில்லை. தற்போது நடந்த ஆய்வில், 1, 2, 6, 8, 9, 14 என்ற இலக்கமிடப்பட்ட ஆறு கல்லறைகளில் இந்திய எழுத்துப் பொறிப்புகள் கிடைத்துள்ளன. தமிழ், பிராகிருதம், காந்தாரி (பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் இருந்த ஒரு பேச்சு வழக்கு), சமஸ்கிருதம் ஆகிய நான்கு மொழிகளில் இந்த எழுத்துப் பொறிப்புகள் கிடைத்தன. இந்த மொழிகளில் எழுத மூன்று விதமான எழுத்துகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. காந்தாரி மொழியை எழுத கரோஷ்டி என்ற எழுத்து வடிவமும் பிராகிருதத்தையும் சமஸ்கிருதத்தையும் எழுத பிராமி எழுத்துகளும் தமிழை எழுத தமிழ் - பிராமியும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கல்லறைகளில் கிடைத்த பெரும்பாலான எழுத்துப் பொறிப்புகள் தமிழைச் சார்ந்ததாகவே இருந்தன. பட மூலாதாரம்,Timothee Sassolas படக்குறிப்பு,தமிழ் எழுத்து பொறிப்புகள் உள்ள உயரத்தில் வேறு யாரும் எழுதவில்லை முதலாம் எண் கல்லறையில்தான் இருப்பதிலேயே அதிக இந்திய எழுத்துப் பொறிப்புகள் கிடைத்துள்ளன. இங்கு கிடைத்த 16 எழுத்துப் பொறிப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை தமிழில் இருந்தன. அதேபோல, காந்தாரியில் எழுதப்பட்ட ஒரே எழுத்துப் பொறிப்பும் இந்தக் கல்லறையில்தான் கிடைத்தது. இந்த மொழியில் எழுதியிருப்பவர் தன்னை க்ஷத்திரியனாக அடையாளப்படுத்திக் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதேபோல இந்தப் பள்ளத்தாக்குப் பகுதியில் கிடைத்த எழுத்துகளிலேயே மிக நீண்ட வரியும் இந்தக் கல்லறையில்தான் கிடைத்தது. இது சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருந்தது. க்ஷஹரத மன்னனின் தூதுவன் இங்கு வந்ததாக அந்த வரி குறிப்பிடுகிறது. இந்த க்ஷஹரத மன்னர்கள் இந்தியாவின் மேற்குப் பகுதியை கி.பி. ஒன்றாம் நூற்றாண்டு முதல் ஆட்சி செய்தவர்கள் என்பதால், இந்திய எழுத்துகளின் காலத்தைக் கணிக்க இது உதவுகிறது. இங்குள்ள பல கல்லறைகளில் கிடைக்கும் தமிழ் எழுத்துப் பொறிப்புகளில் Cikai Korran (சிகை கொற்றன்) என்ற வார்த்தை காணப்படுகிறது. இந்தப் பெயர் எட்டுக் கல்லறைகளில் காணப்படுகிறது. முதலாவது கல்லறையில் 'சிகைக் கொற்றன் வந்தான், பார்த்தான்' என மூன்று முறை எழுதப்பட்டிருக்கிறது. கல்லறையின் வாசலில் எதிரெதிராக இரண்டு இடங்களில் இந்த வார்த்தைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அடுத்ததாக, இரண்டாவது கல்லறையில் மொத்தம் ஐந்து எழுத்துப் பொறிப்புகள் கிடைத்தன. இவை யாவும் தமிழில் எழுதப்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றன. ஆனால், அந்த எழுத்துகள் சொல்ல வருவது என்ன என்பதில் தெளிவில்லை. இந்தக் கல்லறையிலும் 'சிகைக் கொற்றன்' தனது பெயரை எழுதி வைத்திருக்கிறார். ஆறாவது கல்லறையில் இரண்டு எழுத்துப் பொறிப்புகள் கிடைத்திருக்கின்றன. நுழைவாயிலுக்கு அருகில் இருக்கும் சுவற்றில், உயரத்தில் இவை எழுதப்பட்டிருக்கின்றன. இதிலும் ஒன்று 'சிகைக் கொற்றன்' எழுதியது. இந்தக் கல்லறையில் கிரேக்க எழுத்துகள் உள்ளே எழுதப்பட்டிருந்தாலும், அந்த உயரத்தில் வேறு யாரும் எழுத்துப் பொறிப்புகளைச் செய்யவில்லை. பட மூலாதாரம்,JULES BAILLET படக்குறிப்பு,ஜூல் பெய்லி 100 ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வு செய்த போதும் அவரால் இந்திய எழுத்துகளை அடையாளம் காண இயலவில்லை எட்டாவது கல்லறையில் ஆறு எழுத்துப் பொறிப்புகள் கிடைத்துள்ளன. அதில் நான்கு தமிழிலும் இரண்டு மத்திய இந்தோ - ஆரிய மொழியிலும் எழுதப்பட்டுள்ளன. இந்தக் கல்லறையிலும் முதலாவது கல்லறையில் எழுதியதைப் போலவே எதிரெதிராக இரண்டு இடங்களில் தனது பெயரை அவர் எழுதியிருக்கிறான் 'சிகை கொற்றன்'. ஒன்பதாவது கல்லறையைப் பொறுத்தவரை, இங்குதான் பெரிய அளவில் கிரேக்க எழுத்துப் பொறிப்புகள் கிடைத்திருக்கின்றன. இந்த கல்லறையின் வாயிலில் தமிழில் எழுத்துப் பொறிப்புகள் எழுதப்பட்டிருக்கின்றன. 14வது கல்லறையில் ஒரே ஒரு மொழியில்தான் எழுத்துப் பொறிப்புதான் கிடைத்துள்ளது. அது தமிழில் எழுதப்பட்டிருக்கிறது. அதை எழுதியவர் சிகைக் கொற்றன் தான். அதுவும் வாசலில் மட்டுமே எழுதப்பட்டிருப்பதால், அந்தக் காலகட்டத்தில் இந்தக் கல்லறைக்கு பெரிய அளவில் யாரும் வந்திருக்க மாட்டார்கள் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பட மூலாதாரம்,JULES BAILLET படக்குறிப்பு,பள்ளத்தாக்குப் பகுதிக்கு தான் வந்துபோனதை எல்லோருக்கும் சொல்ல விரும்பியவனாக சிகைக் கொற்றன் இருந்திருக்கிறான் என்கிறார்கள் ஆய்வாளர்கள் கல்லறைகளில் தமிழில் எழுதிவைத்த சிகைக் கொற்றன் யார்? சிகைக் கொற்றன் என்ற பெயர் 1, 2, 6, 8, 14 ஆகிய கல்லறைகளில் கிடைத்திருக்கிறது. தான் மன்னர்களின் பள்ளத்தாக்குப் பகுதிக்கு தான் வந்துபோனதை எல்லோருக்கும் சொல்ல விரும்பியவனாக சிகைக் கொற்றன் இருந்திருக்கிறான் என்கிறார்கள் ஆய்வாளர்கள். 14வது குகையில் ஒரு விசித்திரமான வரி இருக்கிறது. அதாவது, "சிகை கொற்றன் வரும்போது/வந்ததால்/வந்துவிட்டதால் பார்த்துவிட்டான்." என்கிறது அந்த வரி. சிகைக் கொற்றன் என்ற வார்த்தைகளில், சிகை என்பது சமஸ்கிருத வார்த்தை. இது கிரீடத்தையோ, குடுமியையோ குறிக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். கொற்றன் என்பது தமிழ்ப் பெயர். கொற்றவை, கொற்றவன், கொற்றம் ஆகியவற்றோடு தொடர்புடைய வார்த்தை. புறநானூற்றுப் பாடல் ஒன்றிலும் கொற்ற என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. புகளூரில் கிடைத்த சேர நாட்டுக் கல்வெட்டுகளிலும் இந்தப் பெயர் காணக் கிடைப்பதாக இந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது. "இந்தப் பகுதிக்கு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வர்த்தகர்களாகத்தான் இருக்கவேண்டும். ஆனால், சிகை கொற்றன் என்பது ஒரு வர்த்தகனின் பெயராக இருக்கும் வாய்ப்புகள் குறைவு. அவர் ஒரு வீரராக இருந்திருக்கலாம். அல்லது வர்த்தகர்களுடன் பாதுகாப்பிற்காக வந்தவர்களாக இருக்கலாம்" என பிபிசி தமிழிடம் தெரிவித்தார் பேராசிரியர் சார்லட் ஸ்மித். வேறு மொழிகளில் கிடைத்த 'க்ஷத்ரியர்' என்ற வார்த்தை, 'க்ஷஹரத அரசின் தூதர்' என ஒருவர் தன்னைப் பற்றி குறிப்பிட்டுக்கொண்டிருப்பது ஆகியவற்றைப் பார்க்கும்போது, அந்தச் சூழலோடு சிகை கொற்றனும் ஒரு படை வீரனாக இருந்திருக்கலாம் என்ற கருத்தே பொருந்திப் போகிறது என்கிறார் சார்லட். கிரேக்க மொழியில் எழுத்துப் பொறிப்புகளைச் செய்திருப்பவர்களும், 'வந்தேன், பார்த்தேன்' என்ற வகையில் எழுதியுருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள் ஆய்வாளர்கள். சிகை கொற்றனும் அதேபோல, 'வர, கண்ட' என்றே குறிப்பிட்டிருக்கிறார். ஆகவே, இந்தக் கல்லறைகளில் இருந்த மற்ற கிறுக்கல்களை, குறிப்பாக கிரேக்கக் கிறுக்கல்களை சிகை கொற்றன் கண்டிப்பாக பார்த்திருக்கவேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஏற்கனவே உள்ள கிரேக்க எழுத்துப் பொறிப்புகளுக்கு மேலே இருக்கும்வகையில் சிகை கொற்றன் தமிழ் எழுத்துப் பொறிப்புகளைச் செய்திருக்கிறார். இந்தக் கல்லறைகளில் சிகை கொற்றனின் எழுத்துகள் இருக்கும் இடத்தைப் பார்க்கும்போது, அவர் ஏற்கனவே இருந்த கிரேக்க எழுத்துகளை படித்திருக்க வேண்டும் அல்லது யாராவது அவருக்கு அதன் பொருளைச் சொல்லியிருக்க வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். சிகை கொற்றன் தவிர, வேறு சில பெயர்களும் இங்கே காணக் கிடைக்கின்றன. ஒன்றாம் கல்லறையில் கோபன் என்பவர் தனது பெயரை, சிகை கொற்றனைப் போலவே எழுதியிருக்கிறார். அதாவது 'கோபன் வரத கண்டன்' என எழுதியிருக்கிறார். சேலம் அம்மன் கோவில்பட்டி கல்வெட்டிலும் இதே பெயர் வருவதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். 8வது எண் கல்லறையில் 'சாத்தன்' என்பவரது பெயர் வருகிறது. 9வது கல்லறையில் 'கீரன்' என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. கீரன் என்ற பெயர் புகளூர் கல்வெட்டிலும் ஓமனில் கிடைத்த ஒரு பானை ஓட்டிலும்கூட காணக்கிடைத்தது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள் ஆய்வாளர்கள். ஒட்டுமொத்தமாக, இந்த எழுத்துகள் அடையாளம் காணப்பட்டது, ரோமானியர்களின் காலத்தில் நிலவிய இந்திய-எகிப்தியத் தொடர்புகளை சுட்டிக்காட்டும் அதே நேரத்தில், அந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் எந்தெந்தப் பகுதிகள் ரோமானியப் பேரரசுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தன என்பது குறித்த சிறு வெளிச்சத்தையும் பாய்ச்சியிருக்கின்றன. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz0gr47ezd7o
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
என்ன... 3 பேர் சத்தமில்லாம போட்டினம். அது நடந்திடுமோ.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Australia 26-3 in 3.4 overs😱
-
🍎 தர்சானந்திற்கெதிராக யாழ். மாநகர சபை முன் போராட்டம்
🍎 தர்சானந்திற்கெதிராக யாழ். மாநகர சபை முன் போராட்டம் adminFebruary 13, 2026 யாழ்ப்பாண நகரப்பகுதியில் அப்பிள் வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் இன்று (பெப்ரவரி 13, 2026, வெள்ளிக்கிழமை) யாழ். மாநகர சபை முன்பாகக் கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மாநகர சபையினால் தங்களுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள புதிய தீர்மானம் ஒன்றிற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ப. தர்சானந்தினால், நகரில் உள்ள அப்பிள் கடைகளின் ஒழுங்கமைப்பு அல்லது கட்டுப்பாடு தொடர்பாக முன்மொழியப்பட்ட ஒரு பிரேரணையே இந்தப் போராட்டத்திற்குக் காரணமாக அமைந்தது. உறுப்பினர் தர்சானந்தின் பிரேரணை தமது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள், மாநகர சபை உறுப்பினர்களைச் சந்தித்துத் தமது நியாயமான கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் அடங்கிய மகஜர் ஒன்றைக் கையளித்தனர். நகரின் அழகையும் போக்குவரத்தையும் பாதிக்காத வகையில் வியாபாரம் செய்யத் தாங்கள் தயார் என்றும், ஆனால் தங்களை முற்றாகப் பாதிக்கும் வகையிலான தீர்மானங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். யாழ்ப்பாண நகரின் முக்கிய வீதியோரங்களில் அமைந்துள்ள அப்பிள் கடைகள், போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதாகச் சில காலங்களாகப் புகார்கள் எழுந்து வந்தன. இது தொடர்பாகவே மாநகர சபை உறுப்பினர் தர்சானந் விசேட பிரேரணை ஒன்றைக் கொண்டுவரத் திட்டமிட்டிருந்தார். எனினும், முறையான மாற்று இட வசதி இன்றி எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் தங்களைப் பாதிக்கும் என வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். https://globaltamilnews.net/2026/228984/
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
நானா வந்திட்டார் பழையபடி புலிவாந்தியெடுக்க! நாய்வாலை நிமிர்த்த முடியாது!
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
ரி20 உலகக் கிண்ணத்தில் சகோதரர்கள் இணைப்பாட்ட சாதனை; நேபாளத்தை வீழ்த்தி முதலாவது வெற்றியை சுவைத்தது இத்தாலி Published By: Vishnu 12 Feb, 2026 | 10:29 PM (நெவில் அன்தனி) நேபாளத்துக்கு எதிராக மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (12) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சி குழு போட்டியில் மொஸ்கா சகோதரர்களின் சாதனைமிக்க பிரிக்கப்படாத ஆரம்ப விக்கெட் இணைப்பாட்ட உதவியுடன் இத்தாலி 10 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது. அறிமுக அணியாக இந்த வருடம் ரி20 உலகக் கிண்ணத்தில் பங்குபற்றும் இத்தாலி தனது இரண்டாவது போட்டியில் முதலாவது வெற்றியை சுவைத்தது. அப் போட்டியில் அன்தனி, ஜஸ்டின் சகோதரர்களின் அபார துடுப்பாட்டங்களும் இலங்கை வம்சாவளி வீரர் கிரிஷான் ஜோர்ஜ் ப்ரியன்த பெர்னான்டோ கலுகமகேயின் துல்லியமான பந்துவீச்சும் இத்தாலியின் வெற்றியில் பிரதான பங்காற்றின. இன்றைய போட்டியில் நேபாளத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 124 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இத்தாலி 12.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 124 ஓட்டங்களைப் பெற்று வெற்றீயீட்டியது. மொஸ்கா சகோதரர்களான ஜஸ்டின் - அன்தனி ஆகிய இருவரும் பகிர்ந்த இந்த இணைப்பாட்டமானது ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் சகோதர்கள் இருவர் பகிர்ந்த முதலாவது சத இணைப்பாட்டமாகும். அத்துடன் சகோதரர்கள் பகிர்ந்த அதிகூடிய இணைப்பாட்டமாகும். பாகிஸ்தானின் அக்மால் சகோதரர்களான உமர் - கம்ரன் ஆகியோர் 2014இல் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 3ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 93 ஓட்டங்களே இதற்கு முன்னர் சகோதரர்கள் இருவர் பகிர்ந்த அதிகூடிய இணைப்பாட்டமாக இருந்தது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாளம் 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 123 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஆரிப் ஷெய்க் (27), அணித் தலைவர் ரோஹித் பௌடெல் (23), ஆசிப் ஷெய்க் (20), கரன் கேசி (18), திப்பேந்த்ரா சிய் அய்ரி (17) ஆகிய ஐவர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் கிரிஷான் கலுகமகே 4 ஓவர்களில் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பென் மனென்டி 4 ஓவர்களில் 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/238520
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
கலாமோகன் கவிதைகள் விண் * எனக்கும் நிலா போகும் ஆசை வந்தது எலானிற்கு ஓர் மடல் எழுதினேன் பதில் விரைவாக வந்தது. “வா.’ நான் அமெரிக்கா சென்றேன். அவர் வெள்ளை. நான் கறுப்பு. “உங்களிற்கு மண் தெரியுமா?” “விண்தான் தெரியும்.” நானும் அவரும் பயணம் செய்தோம் நிலாவில் சில ஆடுகள் இருந்தன எனக்கு ஆச்சரியம் வந்தது “இவை விஞ்ஞான ஆடுகள்.” அவர் ஓர் ஆட்டை தொட்டார் அது அவரது தலையைத் தின்றுவிட்டது நான் வானிலிருந்து குதித்தேன் ௦ இறைவன் * இன்று இரவு எனது கதவு தட்டப்பட்டது திறந்தேன் “யார் நீங்கள்?” “இறைவன்.” என்றார் அவரது உடல் களைப்பில் “நீங்கள்தான் கடவுளா?” “ஆம், இப்போது எனக்கு வேலை இல்லை பசிக்கின்றது…” “கடவுள் வேலை செய்வாரா?” “யார் வேலை செய்யவில்லை?” உள்ளே நுழைந்தார். அனைத்து உணவுகளையும் எனது பூனைகள் உண்டு விட்டன பழைய பாண்தான் இருந்தது கொடுத்தேன் கடிக்க முடியாத பாண் என்னை அதனால் அடித்துவிட்டு இறைவன் தப்பித்தார் ௦ பூ * “இது பூவின் தினம்” எனது துணைவி சொன்னார் சரி பூக்களை வாங்குவோம் எனக் கிளம்பினேன் எனது வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள பூக்கடை பூட்டப்பட்டே இருந்தது வேறு கடையைத் தேடினேன் நடை… நடை காணவே முடியவில்லை கோப்பிக்கடை ஒன்றிற்குச் சென்று வைன் அருந்தினேன் ஓர் அழகிய பெண் பூக்களோடு இருந்தார் “அழகிய பூக்கள்” என்றேன் “நான் அழகி இல்லையா?” “தேவதை” என்றேன் அவளது வீட்டில் நாம் கட்டிலில் தனது பூக்களால் அடித்து என்னைக் கொலை செய்தாள் ௦ கொலைகள் * இன்றும் எமது உலகு மனிதக் கொலைகளின் உலகில்லையா? போர்களது கொடூரப் பற்களால் கடிக்கப்படவில்லையா? முதலாளித்துவம் எமது மனிதர்களைக் கடிக்கின்றது எப்போதும் இரத்த வெள்ளங்கள் வெள்ளிகள் வானில் இருந்து அழுகின்றன எமது பள்ளிகளும் சாகின்றன எமது நிலத்தில் அதிக சடலங்கள் எமது நிலம் எது? அது ஓர் சுடலை ௦ க. கலாமோகன் https://akazhonline.com/?p=9974
-
கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு அவசர அறிவிப்பு: சேவைகள் இடைநிறுத்தம்!
குடிவரவு, குடியகல்வு திணைக்கள தரவுக் கட்டமைப்பு வழமைக்கு Feb 13, 2026 - 10:06 AM குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தரவு கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த தொழிநுட்ப கோளாறு தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் பத்தரமுல்லையில் உள்ள பிரதான அலுவலகம் மற்றும் ஏனைய அலுவலகங்களில் உள்ள தரவுக் கட்டமைப்பு வழமைக்கு திரும்பியுள்ளதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. எனவே சாதாரண மற்றும் ஒருநாள் சேவையின் அடிப்படையிலான கடவுச்சீட்டு விநியோகம் மற்றும் விசா விநியோக சேவைகள் என்பன வழமைப் போல் இடம்பெறுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தரவு கட்டமைப்பில் நேற்று (13) காலை முதல் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டிருந்தது. இதன்காரணமாக கடவுச்சீட்டு விநியோகம் உள்ளிட்ட சேவைகள் தற்காலிகமாக தடைப்பட்டிருந்தன. குறித்த சேவைகளை பெறச் சென்றவர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmlkeaq990007356nwkdhkb7f
-
பாராளுமன்றத் தேர்தல்: பங்களாதேஷ் தேசியக் கட்சிக்கு அமோக வெற்றி
பாராளுமன்றத் தேர்தல்: பங்களாதேஷ் தேசியக் கட்சிக்கு அமோக வெற்றி Published By: Digital Desk 3 13 Feb, 2026 | 09:39 AM பங்களாதேஷில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பங்களாதேஷ் தேசியக் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளதாக இன்று வெள்ளிக்கிழமை (13) அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெற்காசிய நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கும் முக்கியமான தேர்தலாகக் கருதப்பட்ட இந்த வாக்கெடுப்பில், அந்தக் கட்சி பெரும் ஆதரவைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டு வெடித்த மக்கள் போராட்டங்களின் பின்னர், நீண்டகாலமாக பிரதமராக பதவி வகித்து வந்த ஷேக் ஹசீனாவின் அரசு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து பங்களாதேஷில் நடைபெற்ற முதல் தேசியத் தேர்தல் இதுவாகும். சுமார் 175 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட, முஸ்லிம் பெரும்பான்மை நாட்டான பங்களாதேஷில், பல மாதங்களாக ஹசீனா ஆட்சிக்கு எதிரான கடும் அமைதியின்மை நிலவி வந்தது. இதனால் அன்றாட வாழ்க்கை மட்டுமன்றி, உலகின் இரண்டாவது பெரிய ஆடை ஏற்றுமதியாளரான ஆடைத் துறை உள்ளிட்ட முக்கிய தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. இந்தச் சூழலில், அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கும் தீர்மானம் மிகவும் அவசியமானதாகக் கருதப்பட்டது. மேலும், 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தலைமையிலான அண்மைய போராட்டங்களுக்கு பின்னர் நடைபெற்ற முதல் தேசியத் தேர்தலும் இதுவாகும். தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் பங்களாதேஷ் தேசியக் கட்சி முன்னிலையில் இருந்த நிலையில், தற்போது அந்தக் கணிப்புகளை நனவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஊடகத் தகவல்களின்படி, அந்தக் கூட்டணி 300 உறுப்பினர்களைக் கொண்ட ஜாதியா சங்சத் (தேசிய சபை)யில் 209 இடங்களை வென்று, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கையில் பெரும்பான்மை உறுதியாகியதும், கட்சி தலைமையகம் மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன், நாட்டின் நலன் மற்றும் அமைதிக்காக வெள்ளிக்கிழமை சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/238534
- Today
-
வடக்கு தெற்கு பிரிவினைக்கு எக்காலத்திலும் இடமளியோம்; யாழில் மேலதிக படையினரை விலக்குவோம்
அதாவது பாப்பாக்கள் என்று சொல்லுறீயல்🤣
-
முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண காலமானார்
முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண காலமானார் Feb 13, 2026 - 08:56 AM இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார். சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர், இன்று (13) காலை கோட்டேயில் உள்ள அவரது இல்லத்தில் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர் தமது 91 வது வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. https://adaderanatamil.lk/news/cmlkbs1k30006356n0rxx4bvb
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
அமெரிக்காவில் ICE செய்வதை டிரம்ப் கோஷ்டி நியாயயப்படுத்துவதுபோல் இங்கும் பாடம் எடுக்கிறார்! போலீஸ் நிறுத்தும்படி சொல்ல, நிறுத்தாமல் செல்வது மரண தண்டனைக்குரிய குற்றமல்ல! வாகனத்தை நிறுத்த டயரை சுட்டாலே போதுமானது! ICE செய்வதுபோல் நெற்றியில் சுட வேண்டியதில்லை.
-
திருமலை, காங்கேசன்துறை துறைமுகங்களை இந்தியாவுக்கு தாரைவார்க்க அரசாங்கம் முயற்சி ; அனைவரும் அணிதிரள வேண்டும் - விமல் வீரவன்ச அழைப்பு
திருமலை, காங்கேசன்துறை துறைமுகங்களை இந்தியாவுக்கு தாரைவார்க்க அரசாங்கம் முயற்சி; அனைவரும் அணிதிரள வேண்டும் - விமல் வீரவன்ச அழைப்பு 13 Feb, 2026 | 09:33 AM (இராஜதுரை ஹஷான்) இலங்கையின் முழு கனிம வளங்களையும் ஆராய்தல், பகுப்பாய்தல், வெட்டியெடுத்தல் மற்றும் பிரித்தெடுத்தல் ஆகியவற்றை இந்திய மாநில நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக இரகசிய புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு வருகிறது. காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் திருகோணமலைத் துறைமுகம் ஆகிய துறைமுகங்களை இந்தியாவுக்கு தாரைவார்க்க அரசாங்கம் முயற்சிக்கிறது. அரசாங்கத்தின் இந்திய மயமாக்கலுக்கு எதிராக அனைவரும் அணி திரள வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அழைப்பு விடுத்தார். கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையின் மேற்பரப்பு மற்றும் கடல் தளத்திலுள்ள அரிய கனிம வளங்களை வரைபடமாக்குதல், அடையாளம் காணுதல் மற்றும் வெட்டியெடுப்பதை இந்திய நிறுவனங்களுக்கு ஒப்படைக்க இந்த ஒப்பந்தம் திட்டமிட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், இரு அரசாங்கங்களின் ஒப்பந்தத்துடன் இந்திய நிறுவனங்களுக்கு கனிமமயமாக்கப்பட்ட பகுதிகளை ஒதுக்கவும், இந்திய பொது மற்றும் தனியார் துறைகளின் முதலீடுகளை ஊக்குவிக்கவும் திட்டமிட்டுள்ளது. சிலோன் கிராஃபைட், நீல சபையர், புல்முடே கனிம மணல் (இல்மனைட்,ரூட்டைல், சிர்கான், மோனாசைட்), உயர் தர சிலிக்கா, ராக் பாஸ்பேட், டோலமைட் மற்றும் கடலுக்கு அடியில் உள்ள கோபால்ட் படிவுகள் போன்ற வளங்களை இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா கையகப்படுத்தும் அபாயம் உள்ளது. இந்த வளங்கள் தொழில்நுட்பத் தொழில்களுக்கு அவசியமானவை. இந்த முடிவு நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது. இந்தத் திட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் கட்சி ஈடுபட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வாவின் இந்திய விஜயம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் இந்திய விஜயம் இந்த ஒப்பந்தத்தை விரைவுபடுத்துவதில் தாக்கத்தை ஏற்படுத்தும். இலங்கையில் இந்திய மயமாக்கலுக்கு எதிராகப் போராடிய ஒரு கட்சியாக மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பத்தில் காணப்பட்டது. இந்த நடவடிக்கை துரோகமானது, மக்கள் ஒன்றுபட்டு அதற்கு எதிராகப் போராட வேண்டும். காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை துறைமுகங்களை இந்தியமயமாக்கும் முடிவுகள் மற்றும் மருந்து சந்தையை இந்திய மருந்துகளால் நிரப்ப ஏழு இரகசிய ஒப்பந்தங்கள் போன்ற இந்தியா தொடர்பான பிற திட்டங்களையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளுக்கு எதிராக நாட்டு மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/238529