Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. முஸ்லிம்களை வெளியேற்றியது இன சுத்திகரிப்பு என்றவரின் தற்போதைய அமைதி பற்றிதான் சுட்டிகாட்டபட்டது .
  3. பெருமாள்... ஒரு கருத்தில் நின்று பேசலாமே. வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களை தேசிய தலைவர் காலத்திலேயே அவர்களை மீள வந்து குடியிருக்கும் செயல்பாடுகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று அறிவித்தாயிற்றே. இனி புதிதாக ஒரு அறிக்கை விட நீங்களோ, நானோ யார்? அது தவிர ஓரளவுக்கு விருப்பமும், ஆர்வமும் கொண்ட முஸ்லீம் மக்கள் மீளவும் வடக்கில் வந்து தமது வாழ்வை ஆரம்பித்து விட்டார்கள் தானே? வினயமாக கேட்கிறேன், இது உண்மையில் சுமந்திரன் சொன்னார் என்பதற்காக இப்படி 6, 7 பக்கம் கடந்து இந்த திரி ஓடுகிறதா?
  4. டெல்லி இன்னும் கனவு கண்டு கொண்டு இருக்கிறது புலி மீளுருவாக்கம் நடைபெறும் என்றும் தனது அரசியல் பிழைக்காது எனவும் நம்பிக்கொண்டு உள்ளது .
  5. இந்தக் கொடுப்பனவு ஏற்கனவே பல்கலைக்கழங்களுக்கு போனவர்களுக்கும் கிடைக்குமா ஏராளன்.ஏன் எனில் உதவி திட்டங்களில் படிப்பவர்கள் இப்படியான கொடுப்பனவுகள் பற்றி சொல்ல மாட்டார்கள்.உதவி திட்டங்களை பெற்றுக் கொண்டு, கொடுப்பனவுகளையும் எடுத்து செலவு செய்து கொண்டு திரிவார்கள் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆகவே தான் கேட்கிறேன்.🖐
  6. இந்தியாவை இப்பொழுதும் நம்பவில்லை.புட்டின் இந்தியா போன அடுத்த நாளே அமெரிக்க அதன் மிகப்பெரிய விமானத்தை அதுவும் புயலால் பெரிதும் பாதிக்கப்படாத யாழ்ப்பாணத்தில் தரையிறக்குகிறது.யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியதூதரகம் அகற்றப்படவேண்டும் என போராட்டங்கள் நடக்கிறது.தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உடைந்து தமிழரசுக்கட்சியும் உடைந்து என்பிபி வடமாகாணத்தில் வலுவாக காலூன்ற அடித்தளம் போடுகிறது. தனக்குள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்து ஒற்றையாட்சிக்குள்ளே அரசியலைமப்பு மாற்றத்தை நிறைவேற்ற ஆயத்தமாகிறது. இது ஒரு ஆபத்தான நிலை தமிழர்களுக்கு அதே வேளை இந்தியாவுக்குப் பிடிக்காத சார்பு நிலைகளை அனுரஅரசு எடுக்கிறது.இந்தப் புறச்சூழலில் தான் அதுவும் தமிழகத்தில் தேர்தல் காய்ச்சல் அடிக்கும் நேரத்தில் இப்ப தும்முனாத்தான் அது தேர்தல் மேடைகளில் ஊறுகாயாக அவது பயன்படுத்தப்படலாம். மற்றும்படி தமிழக அரசியல் கட்சிகளில் நாம்தமிழர் பாமக தவிர யாரும் ஈழத்தமிழர் விகாரததைக் கையில் எடுக்கப் போவதில்லை. அன்பு மணி பாமக தலைமைப் பொறுப்பில் இருப்பதால் பாமகவும் இந்த விவகாரத்தை கவனத்தில் பெரிதாக எடுக்காது.சீமானை மட்டும் சந்திப்பது தமிழக மக்களை உதாசீனம் செய்வதாகும்.
  7. Today
  8. முஸ்லிம்களை வடகிழக்கை விட்டு புலிகள் அனுப்பியது இன சுத்திகரிப்பு என்று சொல்லியவர் தற்போது அவர்களை மீள் குடியேற அழைப்பு விடலாமே ? புயலால் அவர்களும் பாதிக்க பட்டு உள்ளார்கள் இங்கு முஸ்லிம்களுக்கு ஆதரவாய் கருத்து எழுதுபவர்கள் எங்கு போனார்கள் ? இங்கு இதய சுத்தியுடன் கருத்துக்கள் வருவதில்லை முஸ்லிம் ஆதரவாளர் போன்று நடிப்பவர்களுக்கு குழம்பிய குட்டையை மேலும் மேலும் குழப்புவதே நோக்கம் அன்றி வேறொன்றும் இல்லை . தற்போதைய நிலையில் பலபக்கமும் அடிவாங்கிய அரசியல்வாதி சுமத்திரன் முஸ்லிம்களுக்கு ஆதரவாய் இந்த நேரம் அறிக்கை விட்டு பார்க்கட்டுமே பார்க்கலாம் . தனது சுயநல அரசியலுக்காக சுமத்திரன் பிச்சைகாரனை விட கேவலமாய் நடந்து கொள்ள கூடியவர் நடந்து கொள்பவர் . பசிக்கு யாசகம் பெறுபவர்களை கூட அனுதாபம் காட்டலாம் சுமத்திரன் போன்றவர்கள் திருட்டு யாசகம் பெறுபவர்களில் ஒருத்தர் .
  9. தூத்துக்குடியில் ஓடிய ஓர் பாய் வத்தல் 1900கள் வத்தல்/ பாய் வத்தல் என்பது வத்தையை விடப் பெரியது ஆகும். நிறை அதிகமாகக் கொள்ளக்கூடியது
  10. கலியாண புரோக்கருக்கு கொடுக்கிற காசை விட, இந்த விளம்பரச் செலவு குறைவு. 😂
  11. முதலில் புரையோடி போன சிங்கள புத்த சிலைகளை வடகிழக்கில் வைப்பதை நிறுத்தனும் அதன் பின் ஆலய வழிபாடுகள் மேற்கொள்ளும் நடிப்பை தொடர்வது நல்லது .
  12. ஜனாதிபதி நிதியத்தினால் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு Published By: Vishnu 21 Dec, 2025 | 07:39 PM க.பொ.த உயர்தரப் பரீட்சையில் அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 274 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா வழங்கப்பட்டது. அனைத்து மாகாணங்களிலும் உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 3,000 மாணவர்களை கௌரவிக்கும், இந்த ஆண்டின் நிகழ்ச்சித்திட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது. ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட அளவில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் வட மாகாண நிகழ்ச்சித்திட்டம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (21) முற்பகல் கிளிநொச்சி நெலும் பியச வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்டங்களைச் சேர்ந்த க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயர் சித்தி பெற்ற 274 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டு தலா 100,000 ரூபா ஊக்கவிப்புக் கொடுப்பனவு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், இதற்காக ஜனாதிபதி நிதியம் 27.4 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளது. நாட்டில் மாகாண மட்டத்தில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சித் தொடரின் இறுதி நிகழ்ச்சி இதுவாகும். இதன் மூலம் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 3,000 மாணவர்களை ஜனாதிபதி நிதியம் கௌரவித்துள்ளது. நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளுக்கு இடையில் வேறுபாடு இன்றி, நாட்டின் ஒவ்வொரு பாடசாலையிலும் உள்ள பிள்ளைகள் தரமான கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றார். மக்களுக்கு உரிய ஜனாதிபதி நிதியம், மேலும் மக்களை நெருங்கச் செய்வதிலும், இந்நாட்டுப் பிள்ளைகளின் கல்விக்கு ஆதரவளிப்பதிலும் ஆற்றிய பங்களிப்பை பிரதமர் பாராட்டினார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சித் திட்டம் யாழ் மாவட்டத்தில் தொடங்கியது. இன்று, இந்த நிகழ்ச்சித்திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. எனவே, க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் இறுதி நிகழ்வு, யாழ் மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடைபெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். ஜனாதிபதி நிதியம் என்பது மக்களுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய நிதியமாகும். தற்போதைய அரசாங்கம் இந்த நிதியத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளது. யாழ் மாவட்டத்தை கல்வியின் மையமாக மாற்ற வேண்டும். வட மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், எமது மக்களும் எமது பிள்ளைகளுமே இருக்கின்றனர். ஒவ்வொரு பாடசாலையும் எமது பாடசாலை. தேசிய-மாகாண பிளவை மறந்துவிடுங்கள். அந்த அனைத்து பாடசாலைகளிலும் இருப்பது நமது பிள்ளைகள். அந்த பிள்ளைகள் அனைவரும் தரமான கல்வியைப் பெறும் உரிமையை நாம் உறுதி செய்ய வேண்டும். எனவே, ஆசிரியர்களை நியமிக்கும்போதும், அவர்களை இடமாற்றம் செய்யும்போதும், அதிகாரிகளை நியமிக்கும்போதும், யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்காதீர்கள். ஏனைய மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் பற்றி சிந்தித்து, அவ்வாறே இங்கும் செயல்படுங்கள். நீங்கள் உண்மையிலேயே திறமையானவர்கள். இங்குள்ள நீங்கள் பல்கலைக்கழகத்திற்குச் சென்று வடக்கு மாகாணத்திற்கு சேவை செய்ய மீண்டும் வருவீர்கள் என்று நான் நம்புகிறேன். மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில், வட மாகாணம் குறித்த முடிவுகளை எடுப்பவர்கள் நீங்கள்தான். அப்போதுதான், வட மாகாணத்தின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு நீங்கள் தலையிடுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ஒரு அரசாங்கமாக, அந்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்தத் தலையீட்டைச் செய்கிறோம் என்பதைக் கூற வேண்டும். சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் தங்கள் கருத்துக்களை இதன்போது தெரிவித்தனர். கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, பாராளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், வட மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், மாவட்ட செயலாளர்கள், வட மாகாண அரச அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/234041
  13. இரண்டு இன்னிங்ஸ்களிலும் லெதம், கொன்வே சதங்கள் குவித்து தனித்துவ சாதனை, மே. தீவுகளின் வெற்றிக்கு 419 ஓட்டங்கள் தேவை 21 Dec, 2025 | 02:39 PM (நெவில் அன்தனி) மவுன்ட் மௌங்கானுய் பே ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் நியூஸிலாந்துக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான 3ஆவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அணித் தலைவர் டொம் லெதம், டெவன் கொன்வே ஆகிய இருவரும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்து அசத்தினர். இதன் மூலம் சகல விதமான முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்த முதலாவது ஜோடி என்ற தனித்துவமான சாதனை ஒன்றை நிலைநாட்டினர். மேலும் முதல் இன்னிங்ஸில் இரட்டைச் சதமும் இரண்டாவது இன்னிங்ஸில் சதமும் குவித்த டெவன் கொன்வே நியூஸிலாந்து சார்பாக இந்த சாதனையை நிகழ்த்திய முதலாவது வீரரானார். இப் போட்டியில் மிகவும் கடினமான 462 ஓட்டங்ககளை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்தியத் தீவுகள் போட்டியின் நான்காம் நாளான இன்றைய ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. துடுப்பாட்டத்திற்கு சாதகமாக அமைந்த ஆடுகளத்தில் இரண்டு அணிகளும் முதல் இன்னிங்ஸில் 400க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்தன. நியூஸிலாந்து ஒரு படி மேல் சென்று 500 ஓட்டங்களுக்கு மேல் பெற்றது. நான்காம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 381 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த மேற்கிந்தியத் தீவுகள் சகல விக்கெட்களையும் இழந்து 420 ஓட்டங்களைப் பெற்றது. கவெம் ஹொஜ் மிகவும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி 123 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். முதல் இன்னிங்ஸ் நிறைவில் 155 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்த நியூஸிலாந்து, இரண்டாவது இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 306 ஓட்டங்களைப் பெற்று துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது. முதல் இன்னிங்ஸில் போன்றே இரண்டாவது இன்னிங்ஸில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய டொம் லெதம், டெவன் கொன்வே சதங்கள் குவித்து அசத்தினர். முதல் இன்னிங்ஸில் ஆரம்ப விக்கெட்டில் 323 ஓட்டங்களைப் பகிர்ந்த அவர்கள் இருவரும் இரண்டாவது இன்னிங்ஸில் 192 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டனர். அவர்கள் இருவரும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஆரம்ப விக்கெட்டில் மொத்தமாக 515 ஓட்டங்களைப் பகிர்ந்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக சாதனை ஒன்றை நிலைநாட்டினர். இதன் மூலம் ஒரே டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் முச்சத இணைப்பாட்டத்தையும் இரண்டாவது இன்னிங்ஸில் சத இணைப்பாட்டத்தையும் பகிர்ந்த முதலாவது ஜோடி என்ற சாதனையை டொம் லெதமும் டெவன் கொன்வேயும் நிலைநாட்டினர். இருவரும் இரண்டாவது இன்னிங்ஸில் சதங்கள் குவித்தவுடன் ஆட்டம் இழந்தனர். எண்ணிக்கை சுருக்கம் நியூஸிலாந்து 575 - 8 விக். டிக்ளயார்ட் (டெவன் கொன்வே 227, டொம் லெதம் 137, ரச்சின் ரவிந்த்ரா 72 ஆ.இ., கேன் வில்லியம்சன் 31. அஜாஸ் பட்டேல் 30, ஜஸ்டின் க்றீவ்ஸ் 83 - 2 விக்., ஜேடன் சீல்ஸ் 100 - 2 விக்., அண்டர்சன் பிலிப்ஸ் 154 - 2 விக்.) மேற்கிந்தியத் தீவுகள் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 420 (கவெம் ஹொஜ் 123 ஆ.இ., ப்றெண்டன் கிங் 63, ஜோன் கெம்பெல் 45, அலிக் அத்தானேஸ் 45, ஜஸ்டின் க்றீவ்ஸ் 43, உதிரிகள் 36, ஜேக்கப் டவி 86 - 4 விக்., அஜாஸ் பட்டேல் 113 - 3 விக்., மிச்செல் ரே 89 - 2 விக்.) நியூஸிலாந்து 2ஆவது இன்: 306 - 2 விக். டிக்ளயார்ட் (டொம் லெதம் 101, டெவன் கொன்வே 100, ரச்சின் ரவிந்த்ரா 46 ஆ.இ., கேன் வில்லியம்ஸ் 40 ஆ.இ., கவெம் ஹொஜ் 80 - 2 விக்.) மேற்கிந்தியத் தீவுகள் 2ஆவது இன்: வெற்றி இலக்கு 462 ஓட்டங்கள் - விக்கெட் இழப்பின்றி 43 ஓட்டங்கள் (ப்றெண்டன் கிங் 37 ஆ.இ. https://www.virakesari.lk/article/234014
  14. கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி! Published By: Vishnu 21 Dec, 2025 | 07:17 PM கிளிநொச்சி மாவட்டத்துக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்ட பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, மாவட்டத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (21) சென்று விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார். 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கிளிநொச்சியில் நடைபெற்ற பல்வேறு அபிவிருத்தி மற்றும் மக்கள் நலன் சார்ந்த நிகழ்வுகளில் கலந்துகொண்ட பிரதமர், அதன் ஒரு பகுதியாக வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வாலயத்துக்கும் வருகை தந்தார். ஆலயத்துக்கு வருகை தந்த பிரதமரை ஆலய நிர்வாகத்தினரும் பொதுமக்களும் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை வழிபாடுகளில் பிரதமர் பக்திபூர்வமாகப் பங்கேற்றார். வழிபாடுகளைத் தொடர்ந்து, மிகவும் பழமை வாய்ந்த இவ்வாலயத்தின் வரலாற்றுப் பின்னணி, ஐதீகங்கள் மற்றும் ஆலயத்தின் சிறப்புக்கள் குறித்து பிரதமர் மிகவும் ஆர்வத்துடன் கேட்டறிந்து கொண்டார். இந்நிகழ்வில் பிரதமருடன் இணைந்து, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன் ஆகியோரும் வழிபாடுகளில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/234040
  15. மருந்து தரப் பரிசோதனை ஆய்வகத்தை உடனடியாக உள்நாட்டில் நிறுவுங்கள் அரசாங்கத்திடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து 21 Dec, 2025 | 02:53 PM (எம்.மனோசித்ரா) இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சர்ச்சைக்குள்ளாகியுள்ள 'ஒன்டன்செட்ரான்" மருந்து தொடர்பில் கண்டி வைத்தியசாலை ஆய்வுகளைச் செய்து அறிவிக்கும் வரை சுகாதார அமைச்சோ அல்லது தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையோ ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இரத்தத்தில் நேரடியாக ஏற்றப்படும் இந்த மருந்துகள் கிருமித் தொற்றுடன் வழங்கப்பட்டது பாரிய குற்றமாகும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. உள்நாட்டிலேயே மருந்து தரப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் ஆய்வகத்தை உடனடியாக நிறுவ வேண்டும் என்றும், தரமற்ற மருந்துகளை நாட்டுக்குள் கொண்டுவர அனுமதித்த மற்றும் தமது கடமையைச் செய்யத் தவறிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்தைவலியுறுத்தியுள்ளது. கொழும்பிலுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அதன் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த டிசம்பர் 12 மற்றும் 15 ஆகிய திகதிகளில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை (NMRA) ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. இந்திய நிறுவனமான 'மான் பார்மாசூட்டிகல்ஸ்" (Maan Pharmaceuticals) உற்பத்தி செய்த "ஒன்டன்செட்ரான்" (Ondansetron) என்ற ஊசி மருந்து தரமற்றது என்பதால், அதன் பயன்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு அறிவிக்கப்பட்டது. பின்னர் அதே நிறுவனத்தின் மேலும் 10 மருந்து வகைகளின் பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கண்டி தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாகவே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. ஏழு நோயாளிகளுக்கு ஒரே மாதிரியான கிருமித் தொற்று ஏற்பட்டிருந்தது. இது குறித்து ஆய்வு செய்தபோது, அவர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்ட 'ஒன்டன்செட்ரான்' மருந்துக் குப்பிகளுக்குள் "ரைசோபியம்" (Rhizobium) என்ற பக்டீரியா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த மருந்தை பயன்படுத்திய பின்னர் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், டிசம்பர் முதல் வாரத்தில் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையிலும் இது போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கண்டி வைத்தியசாலை ஆய்வுகளைச் செய்து அறிவிக்கும் வரை சுகாதார அமைச்சோ அல்லது தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையோ ஏன் நடவடிக்கை எடுக்கவில்லைஎன்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கேள்வியெழுப்புகிறது. இந்த மருந்துகள் புற்றுநோய் சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள கவலைக்கிடமான நோயாளிகளுக்கு வழங்கப்படுபவை. இரத்தத்தில் நேரடியாக ஏற்றப்படும் இந்த மருந்துகள் கிருமித் தொற்றுடன் வழங்கப்பட்டது பாரிய குற்றமாகும். இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் தரத்தைப் பரிசோதிக்க சர்வதேச தரத்திலான ஆய்வகம் (Quality Assurance Lab) ஒன்று இன்னும் அமைக்கப்படவில்லை. இது குறித்து பல வருடங்களாக கோரிக்கை விடுக்கப்பட்டும், அரசாங்கம் அதற்குப் நிதி ஒதுக்காமல் வேறு தேவையற்ற விடயங்களுக்கு நிதி ஒதுக்குவதாக வீடியோவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தத் தரமற்ற மருந்துகளால் பாதிக்கப்பட்ட அல்லது உயிரிழந்த நோயாளிகளுக்கு அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனம் நட்டஈடு வழங்க வேண்டும். உள்நாட்டிலேயே மருந்து தரப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் ஆய்வகத்தை உடனடியாக நிறுவ வேண்டும். தரமற்ற மருந்துகளை நாட்டுக்குள் கொண்டுவர அனுமதித்த மற்றும் தமது கடமையைச் செய்யத் தவறிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த மருந்துகள் கடந்த செப்டம்பர் மாதம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. எத்தனை ஆயிரம் நோயாளிகளுக்கு இந்தத் தரமற்ற மருந்துகள் இதுவரை ஏற்றப்பட்டன என்பது குறித்த முறையான விசாரணை அவசியம் என நாம் வலியுறுத்துகின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/234015
  16. தையிட்டியில் அரங்கேறிய பொலிஸாரின் செயலுக்கு கண்டனம்! 21 Dec, 2025 | 03:10 PM இந்து மதத்தலைவர் தாக்கப்பட்டமை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாத இனவாத - மதவாத வெறிச்செயல். தையிட்டியில் அரங்கேறிய சம்பவத்திற்கு வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இன்றைய தாக்குதல்களும் கைதுகளும் அநுரகுமார தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி - தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இனவாதக் கோர முகத்தையே காட்டுகின்றது. எங்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியவர்களே ஒருகணம் சிந்தியுங்கள்! இன்று இந்து மதத்தலைவருக்கு நடந்தது நாளைக்கு உங்களுக்கு நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? நாங்கள் போராடுவது உங்களுக்கும் சேர்த்துத்தான் என்பதை மறவாதீர்கள். போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும்! இனத்துக்கான போராட்டம் தொடரும். இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை என குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/234019
  17. மலையக மக்களை வட, கிழக்கில் குடியேறுமாறு வற்புறுத்தவில்லை சுயவிருப்பின்பேரில் வருவோரை வரவேற்கத்தயார் என்றே கூறினோம்; எம்.ஏ.சுமந்திரன் விளக்கம் 21 Dec, 2025 | 02:40 PM (நா.தனுஜா) மலையக மக்கள் அவர்களது தாயகத்தை விட்டுவிட்டு, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வந்து குடியேறவேண்டும் என நாம் வற்புறுத்தவில்லை. மாறாக வட, கிழக்கு மாகாணங்களில் குடியேறுவதற்கான விருப்பத்துடன் இருக்கும் மக்களை அன்போடு வரவேற்பதற்கும், அவர்களுக்கு அவசியமான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கும் தயாராக இருப்பதாகவே நாம் குறிப்பிட்டோம் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட 'தித்வா" சூறாவளியை அடுத்து உருவான வெள்ளப்பெருக்கு, மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி 600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், நூற்றுக்கணக்கானோர் காணாமல்போயும், இலட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்தும், இன்னமும் முழுமையாக மதிப்பிடப்படாத பெருந்தொகை சொத்துக்கள் சேதமடைந்தும் நாடு பேரழிவுக்கு முகங்கொடுத்துள்ளது. குறிப்பாக மலையக மக்கள் கடும் எதிர்கொண்டிருக்கும் பின்னணியில், மலையகத் தமிழர், மலையக மண்ணில் தான் வாழவேண்டும் என நானும் விரும்புகிறேன். ஆனால் பாதுகாப்பான காணி உரிமையை வழங்குவதற்கு மறுத்தால், எமது மக்கள் மலை மண்சரிவில் சிக்குண்டு தொடர்ச்சியாகப் பலியாவதா? எனக் கேள்வி எழுப்பியிருந்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன், எனவே மாற்றுயோசனையாக வட, கிழக்கு மாகாணங்களில் புலம்பெயர்வினால் வெற்றிடங்களாகி காடாகிக்கொண்டிருக்கும் காணிகளை, அவற்றின் உரிமையாளர்கள் மனமுவந்து வழங்குவார்களாயின், அங்குசென்று குடியேறி உழைத்து வாழ விரும்புகிறீர்களா என நான் சந்தித்த மக்களிடம் கேட்டேன் எனத் தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், அண்மையில் கண்டிக்கும் கம்பளைக்கும் விஜயம் மேற்கொண்டபோது மலையகத்தில் இருந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வந்து குடியேறுமாறு எமது தமிழ் உறவுகளை அழைப்பதற்குத் தயாராகவே வந்தோம் எனவும், தற்போது மனோகணேசனும் மலையக மக்களும் அதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கும் நிலையில், அம்மக்களை மிகுந்த பாசத்துடன் மனதார வரவேற்பதற்குத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன், மலையகம் எமது தாயகமாகும். நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்குத் தயாரில்லை. அதனால் மலையக மக்களுக்கு 7 பேர்ச் காணியை வழங்கி, அந்த மக்கள் அங்கு வாழ்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும் என வலியுறுத்தியிருந்தார். அதற்குப் பதலளிக்கும் வகையில் கருத்துரைத்த இலங்கைத் சுமந்திரன், மலையக மக்கள் அவர்களது தாயகத்தை விட்டுவிட்டு, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வந்து குடியேறவேண்டும் என நாம் வற்புறுத்தவில்லை. மாறாக வட, கிழக்கு மாகாணங்களில் குடியேறுவதற்கான விருப்பத்துடன் இருக்கும் மக்களை அன்போடு வரவேற்பதற்கும், அவர்களுக்கு அவசியமான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கும் தயாராக இருப்பதாகவே நாம் குறிப்பிட்டோம் என விளக்கமளித்தார். அதேபோன்று புலம்பெயர் தமிழர்கள் சிலர் அவர்களது காணிகளை வழங்குவதற்கான விருப்பத்தை தம்மிடம் வெளிப்படுத்தியிருப்பதாக சுட்டிக்காட்டிய சுமந்திரன், எனவே சுயவிருப்பின்பேரில் வட, கிழக்கில் குடியேற விரும்பும் மலையக மக்களுக்கு அவசியமான காணிகளை வழங்குவதற்கும், அவர்களது விவசாயம், பயிர்ச்செய்கை உள்ளிட்ட அவர்களது வாழ்வாதாரத்துக்கு அவசியமான அரச காணகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் நாம் நடவடிக்கை எடுப்போம் என்றார். https://www.virakesari.lk/article/234000
  18. திட்வா புயல்: '200 ஆண்டு பின்னோக்கி' சென்ற மலையகத் தமிழர்களின் வாழ்க்கை கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் 200 ஆண்டுகளுக்கும் அதிகமான வரலாற்றை கொண்ட இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் வாழ்க்கையை, திட்வா புயல் முற்றாக மாற்றியமைத்துள்ளது. எந்தவித வசதிகளும் இல்லாத லைன் அறைகளில் (Line Rooms) வாழ்ந்து வந்த மலையக தமிழர்கள் கடந்த சில வருடங்களாகவே படிப்படியாக தனி வீடுகளுக்கு செல்ல ஆரம்பித்திருந்தனர். இலங்கை அரசாங்கத்தின் வீட்டுத் திட்டம் மற்றும் இந்திய அரசாங்கத்தின் வீட்டுத் திட்டம் என்ற அடிப்படையில் இவர்களின் வாழ்க்கை, சுமார் 200 ஆண்டுகளின் பின்னர் படிப்படியாக மாற ஆரம்பித்திருந்தது. பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் தனி வீடுகளுக்கு சென்ற மலையக தமிழர்களில் பலர் இன்று மீண்டும் லைன் அறைகளில் வாழ்க்கைக்கு திரும்பியுள்ளமை கவலையளிக்கின்றது. இலங்கை அரசாங்கத்தின் வீட்டுத் திட்டம் மற்றும் இந்திய அரசாங்கத்தின் வீட்டுத் திட்டம் ஆகியவற்றில் ஏற்பட்ட அபாயகர நிலைமையே இதற்கான பிரதான காரணமாக அமைந்துள்ளது. இந்த வீட்டுத் திட்டங்களை அமைப்பதற்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இரண்டு விதமான ஆய்வு அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தது. வீட்டுத் திட்டம் அமையப் பெறும் முழு காணிக்கான ஆய்வு அறிக்கை மற்றும் தனி வீடுகளை அமைக்கும் காணிகளுக்கான ஆய்வு அறிக்கை என இரண்டு விதமான அறிக்கைகளை சமர்ப்பித்ததன் பின்னரே இந்த வீட்டுத் திட்டங்கள் அமைக்கப்பட்டன. எனினும், அபாயகரமற்ற, அதிவுயர் பாதுகாப்பு பகுதிகளையும் திட்வா புயல் அபாயகரமான பகுதிகளாக இப்போது மாற்றியுள்ளது. லைன் அறைகளுக்கு மீண்டும் சென்ற மலையக மக்கள் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிய திட்வா மாத்தளை - ஹூன்னஸ்கிரிய பகுதியில் வாழ்ந்து வருபவர்கள் எலிஸ்டன் மற்றும் ஜூலியட் தம்பதியின் குடும்பம். மூன்று பிள்ளைகளின் பெற்றோராகிய இவர்கள் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வந்தமையினால், இந்த குடும்பத்திற்கு வீட்டுத் திட்டம் கிடைத்துள்ளது. தலைமுறையின் 200 வருட லைன் வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, தனி வீட்டு வாழ்க்கைக்கு சென்ற அவர்கள், தமது பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் பல்வேறு வகையிலும் சிந்தித்ததாக கூறுகின்றனர். தனது கையில் முறிவு ஏற்பட்டதை அடுத்து தோட்ட தொழிலுக்கு செல்வதை தான் தவிர்த்ததாக ஜூலியட் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, ஜூலியட்டின் கணவர் எலிஸ்டன், கூலித் தொழிலை செய்வதற்காக தோட்டத்திலிருந்து வெளியில் சென்றுள்ளார். எலிஸ்டனின் தொழில் முன்னேற்றம் காரணமாக வாழ்க்கை படிப்படியாக முன்னேறிய வந்த நிலையில், திட்வா புயல் தாக்கியது. பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் லைன் வீட்டிலிருந்து தனி வீட்டுக்கு சென்ற தம்மை, திட்வா புயல் மீண்டும் லைன் வாழ்க்கைக்கே திரும்பியனுப்பியதாக எலிஸ்டன், பிபிசி தமிழிடம் தெரிவித்தார். படக்குறிப்பு,200 வருட வாழ்க்கையை விட்டு போக வேண்டும் என்று சொல்லி தான் கொஞ்சம் முன்னோக்கி போனோம். கடைசியில் மீண்டும் கீழே வீழ்ந்து விட்டோம் என்கிறார் எலிஸ்டன் ''நாங்கள் சாப்பிட போகும் போது பின்நேரம் 4.30 (மாலை) இருக்கும். எங்களுடைய வீட்டின் பின்னால் இருந்த சுவர் இடிந்து வீழ்ந்து விட்டது. சாப்பாடு கூட சாப்பிடாமல் அப்படியே எல்லாவற்றையும் போட்டு விட்டு மாமா விட்டுக்கு வந்து விட்டோம். 200 வருட வாழ்க்கைக்கு திரும்பவும் வந்து விட்டோம். எங்களுடைய பிள்ளைகளுக்கு ஆசையை காட்டி மோசம் பண்ணி விட்டோம். திரும்புவும் அந்த வீட்டில் இருக்க முடியாது. திரும்பவும் ஒரு அனர்த்தம் வந்தால் எங்களுடைய பிள்ளைகளை நாங்களே குழியில் தள்ளுற மாதிரி தான். லைன் வாழ்க்கையை தொடரக்கூடாது என்பதே எமது ஆசை. இதையும் விட்டு வெளியில் போக வேண்டும். 200 வருட வாழ்க்கையை விட்டு போக வேண்டும் என்று சொல்லி தான் கொஞ்சம் முன்னோக்கி போனோம். கடைசியில் மீண்டும் கீழே வீழ்ந்து விட்டோம்.'' என எலிஸ்டன் குறிப்பிடுகின்றார். மீண்டும் லைன் வாழ்க்கைக்கு திரும்பியது தமக்கு கவலை அளிப்பதாக எலிஸ்டனின் மனைவியான ஜூலியட் தெரிவிக்கின்றார். ''கதைக்க இயலாது. சரியான கவலையாக இருக்கு. அப்பாவுடைய வீடு இருந்ததால் அங்கு வந்திருக்கிறோம். நான் தோட்டத்தில் வேலை செய்தேன். விழுந்து கையில் மூட்டு ஒன்று விலகியதனால் தோட்டத்தில் வேலை இல்லை. கணவர் மட்டும் தான் வேலை பார்க்கிறார். 3 பிள்ளைகள் படிக்கின்றார்கள். லைன் வீட்டை விட்டுவிட்டு தான் நாங்கள் அங்கே போனோம். பிள்ளைகள் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்றே நாங்கள் புதிய காணிக்கு போனோம். மறுபடியும் இந்த நிலைமைக்கு வந்தது கவலை தான்.'' என ஜூலியட் தெரிவிக்கின்றார். இந்த திட்வா புயல் எலிஸ்டன், ஜூலியட்டை மாத்திரம் 200 வருடங்களை நோக்கி பின்தள்ளவில்லை. அதே இடத்தில் வாழ்ந்த பலரையும் மீண்டும் லைன் வாழ்க்கைக்கு அனுப்பியுள்ளது. படக்குறிப்பு,மீண்டும் லைன் வாழ்க்கைக்கு திரும்பியது தமக்கு கவலை அளிப்பதாக எலிஸ்டனின் மனைவியான ஜூலியட் தெரிவிக்கின்றார். ஹூன்னஸ்கிரிய பகுதியைச் சேர்ந்த நடராஜாவும் இதே பாதிப்பை எதிர்நோக்கியுள்ளார். ''எங்களுக்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர் வீடு கட்டிக் கொடுத்தார்கள். நாங்கள் அந்த வீட்டிற்கு போய் இரண்டு வருடங்கள் இருக்கும். எங்களுடைய பிள்ளைகள் நல்லா வாழ வேண்டும் என்றே அந்த காணியை நாங்கள் வாங்கினோம். இப்போது அந்த காணிகளில் வாழ இயலாமல் இருக்கு. எங்களுடைய வீட்டிற்கு 20 அடி கீழே மண் சரிவு போயிருக்கு. அன்றைக்கே தோட்ட நிர்வாகம் சொல்லி விட்டார்கள். இங்கே இருக்க வேண்டாம். லயின் அறைக்கே போகுமாறு சொல்லிவிட்டார்கள். இந்த வீட்டில் இருக்க எங்களுடைய பிள்ளைகள் விருப்பம் இல்லை.'' என அவர் கூறுகின்றார். இலங்கை அரசாங்கத்தின் வீட்டுத் திட்டங்கள் மாத்திரமன்றி, இந்திய வீட்டுத் திட்டங்களிலும் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். படக்குறிப்பு,புதிய வீடுகளைச் சுற்றி சேதங்கள் இருப்பதால், அச்சமடைந்து மக்கள் வெளியேறியுள்ளனர் இந்தியாவிலிருந்து வருகைத் தந்த தமது முன்னோர், இலங்கையில் தமது வாழ்க்கையை ஆரம்பித்த அதே லைன் அறைகளில் மீண்டும் தற்போதைய தலைமுறையும் வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார். ஹூன்னஸ்கிரிய பகுதியிலுள்ள 16 வீடுகளை கொண்ட வீட்டுத் திட்டத்தின் ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு விதமான பாதிப்புக்களை சந்தித்துள்ளன. ஒரு சில வீடுகளின் மீது மண்மேடுகள் சரிந்துள்ளதுடன், சில வீடுகளுக்குள் வெள்ள நீர் பிரவேசித்துள்ளன. அத்துடன், பெரும்பாலான வீடுகளில் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இந்த வீடுகளுக்கு கீழ் சில இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளமையினால், தமது வீடுகள் பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாக அந்த பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். வீடுகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளமை, வீடுகள் தாழிறங்கியுள்ளமை, மண்மேடுகள் சரிந்து வீடுகளின் மீது வீழ்ந்துள்ளமை உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாக வைத்து, அதிகாரிகள் தம்மை மீண்டும் லைன் அறைகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியதாக அந்த பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர். படக்குறிப்பு,ஆபத்தற்றது என கருதப்பட்ட பகுதிகளும் திட்வா புயலுக்குப் பின் அபாயகரமானதாக மாறியுள்ளன எதிர்க்கட்சி அரசாங்கத்திடம் விடுக்கும் கோரிக்கை மலையக மக்களுக்கான வீட்டுத் திட்டத்துடன் நெருங்கி செயற்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் உபத் தலைவரும், பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் முன்னாள் தலைவருமான பாரத் அருள்சாமியிடம் பிபிசி தமிழ் இந்த விடயம் தொடர்பில் வினவியது. ''எந்த வீட்டுத் திட்டமாக இருந்தாலும், தனியான காணியை தேர்வு செய்து வீடுகளை கட்டுவதாக இருந்தாலும் அதற்கான சரியாக திட்டம், கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையோடு தான் இதை செய்வார்கள். இந்த நடைமுறை இந்திய வீட்டுத் திட்டத்திலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை இருந்தால் மாத்திரமே அந்த இடத்தில் வீடுகளை கட்ட முடியும். அது இல்லாமல் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையை முழுமையாக காணிகளுக்கும் பெற்று, அதே போன்று வீடுகளை நிர்மாணிக்கும் இடத்திற்கும் எடுத்திருந்தோம். ஏனென்றால், கட்டப்படும் பெரும்பாலான வீடுகள் மலைப்பாங்கான இடங்களில் இருப்பதனால், அந்த முறையை கொண்டு வந்தோம். இப்போது ஏற்பட்டிருக்கின்ற இயற்கை அனர்த்தம் யாருமே எதிர்பார்க்காத இடங்களிலும் ஏற்பட்டிருக்கின்றது. பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு ஏனைய மக்களைப் போன்றே உதவிகள் வழங்கப்பட வேண்டும். நாங்கள் இந்த நாட்டு பிரஜைகளே. ஏனைய பிரஜைகளுக்கு வழங்கப்படும் உரிமைகள், எமக்கும் உரித்தாகும். அந்த நிவாரண திட்டங்கள் எங்கள் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.'' என பாரத் அருள்சாமி கோரிக்கை விடுக்கின்றார். ''இவர்கள் இந்த இடத்திலிருந்து மீண்டும் லைன் அறைகளுக்குப் போவது என்பது மிகவும் கவலைக்குரிய விடயம். இவர்கள் தனிவீட்டிற்கு போய் விட்டார்கள். அப்படியென்றால் கிராம வாழ்க்கைக்கு போய்விட்டார்கள். அப்படியென்றால், அரசாங்கம் அறிவித்த அந்த நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.'' எனவும் பாரத் அருள்சாமி குறிப்பிடுகின்றார். படக்குறிப்பு,திட்வா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள் அரசாங்கத்தின் பதில் லைன் அறைகளிலிருந்து தனிவீட்டிற்கு சென்று திட்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட பின்னணியில், மீண்டும் லைன் வீடுகளுக்கு சென்றவர்கள் குறித்து பெருந்தோட்ட, உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீபனிடம் பிபிசி தமிழ் வினவியது. ''தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கைகளின் பிரகாரம், தனி வீட்டுத் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள மலையக மக்களுக்கு மீண்டும் அதே வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என பிபிசி தமிழிடம் அவர் உறுதியளித்தார். பெருந்தோட்ட பகுதிகளில் லைன் அறைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவிகளை வழங்க தாம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் இதன்போது குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cre3pgez439o
  19. இந்திய வெளிவிவகார அமைச்சர் உத்தியோக பூர்வமான விஜயம் - ஜனாதிபதி, பிரதமருடன் முக்கியமான சந்திப்பு! 21 Dec, 2025 | 11:43 AM (ஆர்.ராம்) இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நாளையதினம் இருநாள் உத்தியோக பூர்வமான விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயத்தின் போது முதலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரணி அமரசூரிய ஆகியோருடன் முக்கியமான சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார். அதனைத்தொடர்ந்து வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட அரசாங்கத்தின் சில முக்கிய அமைச்சர்களை சந்திக்கவுள்ளதோடு, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான எதிரணியையும் சந்திக்கவுள்ளார். அதேநேரம், மலையகத் தலைவர்களை தனியாகச் சந்திப்பதற்கு ஏற்பாடாகியுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, நாளை மறுதினம் தமிழ்த் தேசியக் கட்சிகளைச் சேர்ந்த ஆறு தலைவர்களைச் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைவிடவும், பொதுஜனபெரமுனவின் தலைவர்களையும் ஏனைய பெரும்பான்மைக்கட்சியின் சில தலைவர்களையும் சந்திக்கவுள்ளதோடு முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுடனும் சந்திப்புக்கள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவனது, இலங்கையில் தித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரனத்தங்களுக்கு சாகர்பந்து திட்டத்தின் கீழாக உடனடியாக மீட்புக்குழு, நிவாரணங்கள், பாதை மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை உடனடியாக முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் இலங்கையின் மீள் கட்டுமானங்களுக்கான மேலதிக உதவித்திட்டங்கள்உட்பட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இந்த விஜயத்தின்போது அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதேநேரம், திடீர் ஏற்பாட்டில் இலங்கைக்கு வருகை தரும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தன்னுடைய நெருக்கடியான சந்திப்பு நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைவாக போதுமான நேர ஒதுக்கீடு காணப்படும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், குறித்த களவிஜயம் தொடர்பில் இதுவரையில் எவ்விதமான உறுதிப்படுத்தல்களும் செய்யப்படவில்லை. இதேவேளை, பிரதமர் ஹரிணி அமரசூரிய டில்லிக்குச் சென்றிருந்த வேளையில் இறுதியாக வெளிவிகார அமைச்சர் ஜெய்சங்கர் உத்தியோக பூர்வ சந்திப்பை மேற்கொண்டிருக்கும் இல்லையில் இந்த ஆண்டில் அவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் இரண்டாவது விஜயம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/233994
  20. சவால்மிக்க தருணங்களில் இராணுவத்தின் பணிகள் மகத்தானவை - ஜனாதிபதி Dec 21, 2025 - 05:01 PM புயலினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டல் மற்றும் வசதிகளை வழங்கும் செயற்பாடுகளில் இராணுவம் செய்த சிறப்பான பணிக்காக நன்றி தெரிவிப்பதாகவும் ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதற்குப் பதிலாக, எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு, உறுதியுடனும், ஒரே நோக்கத்துடனும், நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றும் போதே ஒரு நாடாக நாம் முன்னோக்கி செல்ல முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாகவும் அரசாங்கமாகவும் நமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளையும், மதங்கள் என்ற வகையில் வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளையும், மக்கள் மற்றும் பாதுகாப்புப் படைகள் என்ற வகையில் நமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளையும் முறையாக நிறைவேற்றுவது அவசியமாகும். அதன் மூலம், வரலாற்றில் நமக்கு இருந்த பெருமை மற்றும் கெளரவத்துடன் தாய்நாட்டை மீண்டும் விரைவாக கட்டியெழுப்ப முடியும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என்று அழைப்பு விடுத்தார். இன்று (21) முற்பகல் தியதலாவ இலங்கை இராணுவ கல்வியியல் கல்லூரியின் கெடட் அதிகாரிகளின் அணிவகுப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டார். நமது நாடு ஒரு சிறந்த பாரம்பரியத்தையும் வெற்றிகளையும் பெற்றிருந்தாலும், கடந்த சில தசாப்தங்களாக நாடு அனைத்து வகையான வீழ்ச்சிகளுக்கும் உள்ளாகியுள்ளது. இன்று அனைவருக்கும் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பு, தாய்நாட்டை மீண்டும் உலகில் மதிப்புமிக்க மற்றும் பாராட்டப்படும் ஒரு நாடாக மாற்றுவதாகும் என்று தெரிவித்தார். ஒரு அரசாங்கமாகவும் ஜனாதிபதியாகவும் தமக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை, நாட்டின் வளர்ச்சிக்காக முழுமையாகப் பயன்படுத்துவேன் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும், அதற்கு தேவையான பொறிமுறைகளைத் தயாரிப்பதற்கும், சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதற்கும், அரசியலை மக்களின் செல்வத்தை குவிக்கும் தொழிலிலிருந்து, பொதுமக்களுக்கு சேவை செய்யும் சமூகப் பணியாக மாற்றுவதற்கும் அரசாங்கம் தனது பொறுப்பை நிறைவேற்றி வருவதாக இங்கு தெரவித்தார். இன்று முற்பகல் தியதலாவ, இராணுவ கல்வியியல் கல்லூரிக்கு வருகை தந்த முப்படைகளின் தளபதி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தேசத்திற்கும் இலங்கை இராணுவத்திற்கும் வீரமிக்க தலைவர்களை உருவாக்கிய இராணுவத்தின் சிறந்த பயிற்சி நிறுவனமான தியத்தலாவ இராணுவ கல்வியியல் கல்லூரியின் 100 ஆவது விடுகை அணிவகுப்பு நிகழ்வு இதுவாகும். வதிவிட கெடட் உத்தியோகத்தர் பாடநெறி எண் 93, 94B குறுகிய கால பாடநெறி எண்23, வதிவிட பாடநெறி எண்62 மற்றும் தன்னார்வ பெண் கெடட் உத்தியோகத்தர் பாடநெறி எண்19 ஆகியவற்றைச் சேர்ந்த 240 கெடட் உத்தியோகத்தர்கள் வெற்றிகரமான இராணுவப் பயிற்சிக்குப் பிறகு அதிகாரிகளாக இராணுவ சேவையில் இணைந்தனர். இவர்களில், வெளிநாடுகளைச் சேர்ந்த பல கெடட் உத்தியோகத்தர்களும் பயிற்றுவிக்கப்பட்டு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டமை விசேட அம்சமாகும். முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, கெடட் உத்தியோகத்தர்களின் விடுகை அணிவகுப்பை பார்வையிட்டதுடன், திறமை வாய்ந்த கெடட் அணிக்கு விருதினையும், கெடட் வீரர்களுக்கு கௌரவ சின்னங்களையும், ஒவ்வொரு பாடநெறியிலும் முதலிடம் பெற்ற அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருதுகளையும் வழங்கினார். நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஒவ்வொரு கடினமான சூழ்நிலையிலும் நாட்டிற்கும் மக்களுக்கும் இராணுவம் ஆற்றிய சேவை பாராட்டத்தக்கது என்றும், அண்மைய சூறாவளியின் போது மக்களை மீட்டெடுத்தல் மற்றும் அவர்களுக்கான வசதிகளை வழங்குவதில் ஆற்றிய சிறந்த பணிக்கு நன்றி தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கெடட் உத்தியோகத்தர்களாக தியத்தலாவ இராணுவ கல்வியியல் கல்லூரியில் சேர்ந்து சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியைப் பெற்ற நீங்கள், இன்று அதிகாரிகளாக மாறியுள்ளீர்கள். அரசாங்கத்திற்கும், ஜனாதிபதியாக எனக்கும், உங்கள் மீது பாரிய எதிர்பார்ப்பு உள்ளது. நமது நாடு பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. அந்த சவால்களை வெற்றிகொள்ள, இந்த தாய்நாட்டின் பாதுகாப்பு, அமைதி மற்றும் மக்களுக்காக தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த உங்கள் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளனர். நீங்களும் நானும் இன்று கால்களை வைத்திருப்பது, கடந்த காலங்களில், வீரச் செயல்கள் மூலம், நமது தாய்நாட்டை விடுவிப்பதற்கான போராட்டத்தில் உயிர்கள் தியாகம் செய்யப்பட்ட பூமியில் ஆகும். எனவே, கைவிட முடியாத ஒரு பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. இலங்கை இராணுவமாக, நமது தாய்நாட்டின் மற்றும் அதன் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அசைக்க முடியாத பொறுப்பு உங்களுக்கு உள்ளது. இந்த விடயத்தில் உங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் உள்ளது. சூறாவளியினால் நமது நாடு பேரழிவைச் சந்தித்தது. மக்களின் வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. சிலருக்கு உணவு வழங்குவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இன்னும் சிலரது உயிர்களைக் காப்பாற்றுவது ஒரு பெரிய சவாலாக அமைந்தது. அன்றிலிருந்து இன்று வரை, ஒவ்வொரு சவாலிலும் இலங்கை இராணுவம் பெரும் பங்காற்றியுள்ளது. அவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன். படையினர் மிகவும் கடினமான பணியில் ஈடுபட்டு மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க கடுமையாக உழைத்து வருகின்றனர். உங்களுக்கு இருப்பது தொழில் ரீதியான பொறுப்பு மாத்திரமல்ல. பல்வேறு வகையான தொழில்கள் உள்ளன. உங்கள் நண்பர்கள் வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு தொழிலுக்கும் அதற்கே உரிய பொறுப்பு மற்றும் மதிப்பு உள்ளது. நீங்கள் மிக உயர்ந்த மதிப்பைப் பெற்றுள்ளீர்கள் என்றும் அதே நேரம் ஒரு பாரிய பொறுப்பு உங்கள் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது என்றும் நான் நினைக்கிறேன். நமது தாய்நாட்டை நாம் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். நமது தாய்நாடு பல தரப்பிலிருந்தும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது. ஒருபுறம், நமது அரச பொறிமுறை பலவீனமாகவும் வீழ்ச்சி அடைந்தும் இருந்த ஒரு சகாப்தம் இருந்தது. நமது பொருளாதாரம் பெரும் சவாலுக்கு உள்ளாகி சரிவடைந்து கொண்டிருந்த ஒரு சகாப்தம் இருந்தது. நமது சமூகத்தின் நல்வாழ்வு முற்றிலுமாக தோழ்வி கண்ட ஒரு சகாப்தம் இருந்தது. மனித உறவுகள் பெறுமதியற்ற உறவுகளாக மாறிக்கொண்டிருந்தன. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவு உடையத் தொடங்கியது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவு உடையத் தொடங்கியது. மதஸ்தலங்களுக்கும் நிர்வாக சபைக்கும் இடையிலான உறவு உடையத் தொடங்கியது. நமது நாடு அனைத்து மனித உறவுகளும் உடைந்த ஒரு சகாப்தத்தில் நுழைந்து கொண்டிருந்தது. அதன்போது நமக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு என்ன? நாம் வரலாற்று பாரம்பரியத்தையும் வரலாற்று சாதனைகளையும் கொண்ட ஒரு நாடு. ஆனால் நமது நாடு எல்லா வகையான வீழ்ச்சிகளுக்கும் உள்ளானது. இப்போது நமக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு, இந்த தாய்நாட்டை உலகில் உயர்ந்த, மதிப்புமிக்க மற்றும் பாராட்டப்படும் ஒரு நாடாக மாற்றுவதாகும். ஒவ்வொருவருக்கும் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகள் உள்ளன. ஜனாதிபதியாகவும் அரசாங்கமாகவும், நமக்கு ஒரு பொறுப்பு உள்ளது. பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் தேவையான பொறிமுறையைத் தயாரிக்கவும், சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யவும், அரசியலை மக்களின் செல்வத்தை குவிக்கும் ஒரு தொழிலாக அன்றி, மாறாக மக்களுக்கு சேவை செய்யும் ஒரு சமூகப் பணியாக மாற்றும் பொறுப்பு நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கும் அதே போன்ற பொறுப்புகள் உள்ளன. இங்கு கூடியிருக்கும் பெற்றோருக்கும் நமது நாட்டிற்கான பொறுப்புகள் உள்ளன. நமது மதஸ்தலங்களுக்கும் பொறுப்புகள் உள்ளன. ஒருவருக்கொருவர் எதிராகச் செயல்படுவதன் மூலமோ அல்லது ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதன் மூலமோ இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது. நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை முறையாக நிறைவேற்றுவதற்கான உறுதியான தீர்மானத்துடன் நாம் அனைவரும் செயல்பட்டால் மாத்திரமே நாம் ஒரு நாடாக முன்னேற முடியும். ஒரு நாடாக நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பை இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பயன்படுத்துவோம் என்று நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். மேலும் உங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பணிகள் மற்றும் பொறுப்புகளை முறையாக நிறைவேற்றுமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை முறையாக நிறைவேற்றுமாறு பொதுமக்களையும் நான் அழைக்கிறேன். நாம் அனைவரும் ஒரே குறிக்கோளுடன் தைரியமாக தொடர்ந்தும் இணைந்து பணியாற்ற முடிந்தால், வரலாற்றில் நம் நாடு பெற்ற பெருமை மற்றும் கௌரவத்துடன் தாய்நாட்டை மிக விரைவில் மீண்டும் கட்டியெழுப்ப முடியும். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்று அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmjfnctey02z4o29nqk7ccx9z

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.