Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. நாம் மண்டப வாயிலை அடைந்தபோது, சத்தமாகக் கூக்குரலிட்டபடி வந்த கூட்டமும் அப்பகுதியினை அடைந்திருந்தது. சுமார் 40 அல்லது 50 பேர் அடங்கிய அந்தக் கூட்டத்தில் இருந்த முகங்களில் பெரும்பாலானவர்களை எனக்கு நன்கு தெரிந்திருந்தது. அவர்கள் என்னுடன் கூடவே கல்விகற்கும் இறுதியாண்டின் சிங்கள மாணவர்கள். அவர்கள் அனைவரது கைகளிலும் கட்டில்ச் சட்டங்கள், பொல்லுகள், கதிரைகளின் கால்கள் என்று ஏதாவதொரு ஆயுதம் காணப்பட்டது. முன்னால் வந்தவன் காலியைச் சேர்ந்தவன். மின்னியல்க் கற்கை நெறியில் பயின்றுவருபவன். பல்கலைக்கழகத்தில் நான் இருந்த நான்கரை ஆண்டுகளில் என்னுடன் பலமுறை பேசியிருக்கிறான். மிகவும் பரீட்சயமானவன். ஆகவே, என்னதான் நடக்கிறது என்று அறிய அவனுடன் பேச்சுக் கொடுத்தேன். "என்ன நடக்கிறது? ஏன் கைகளில் பொல்லுகளுடன் திரிகிறீர்கள்? யாரைத் தேடுகிறீர்கள்" என்று சிங்களத்தில் சகஜமாகக் கேட்டேன். அவனது முகம் கோபத்தில் அமிழ்ந்திருந்தது தெரிந்தது. எனது கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் மன நிலையில் அவன் இருக்கவில்லை. எனது கையை இறுகப் பிடித்துக்கொண்ட அவன், தன்னுடன் வந்திருப்பவர்களை நோக்கி "அப்பகுதியில் வேறு யாரும் தமிழ் மாணவர்கள் இருக்கிறார்களா என்று பார்" என்று சிங்களத்தில் கத்தினான். அப்போதுதான் அவனும் அவனது தோழர்களும் வந்திருப்பது எம்மைத் தேடித்தான் என்பது எனக்குப் புரிந்தது. ஆனாலும் "எதற்காக எனது கையைப் பிடித்திருக்கிறாய், எங்கே என்னை அழைத்துச் செல்கிறாய்?" என்று என்னை இழுத்துக்கொண்டு சென்ற அவனைப் பார்த்து மறுபடியும் கேட்டேன். "ஒன்றுமில்லை, பல்கலைக்கழகத்தின் முன்றலுக்கு எங்களுடன் வா, உன்னையும் உனது தமிழ் நண்பர்களையும் விசாரிக்க வேண்டும்" என்று ஒரு குற்றவாளியுடன் பேசுவது போலக் கூறினான். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. "மச்சான், என்னைத் தெரியவில்லையா உனக்கு?" என்று நான் அதிர்ச்சியுடன் கேடபோது, "தெரியாது" எனுமாப்போல் தலையை ஆட்டிவிட்டு என்னை தொடர்ந்தும் இழுத்துக்கொண்டு சென்ல்ல, அவனின் நண்பர்களில் சிலர் இன்னும் நான்கு அல்லது ஐந்து தமிழ் மாணவர்களை இழுத்து வந்துகொண்டிருந்தார்கள். இத்தனை ஆண்டுகள் அவர்களுடன் கூடவே படித்துவந்த எம்மை, ஏதோ குற்றவாளிகளைப் பிடித்து விட்டதுபோல் அவர்கள் நடந்துகொண்டது எமக்கு மிகுந்த அச்சத்தை உருவாக்கி விட்டது. என்னதான் ஒன்றாகப் படித்து, சிங்களத்தில் எவ்வளவுதான் பேசினாலும் இனவாதம் என்று வரும்போது எவருமே விதிவிலக்கல்ல என்பதும், தமிழர்கள் எல்லோருமே எதிரிகள்தான் என்று நடந்துகொள்வதும் அவர்களின் இயல்பு என்று எனக்குப் புரிந்தது. நான் பேசும் எதையும் அவன் செவிகொடுத்துக் கேட்கப்போவதில்லை. என்னை சக மனிதனாக நடத்தக்கூடிய மனநிலையிலும் அவனோ அவனுடன் கூடவிருந்தோரோ அன்று இருக்கவில்லை. புலிகளை உயிருடன் பிடித்துவிட்டோம் என்கிற பெருமிதத்தோடு பல்கலை வாயிலை நோக்கி எம்மை இழுத்துக்கொண்டு சென்றது எம்முடன் கூடவே படித்த சிங்கள மாணவர் கூட்டம்.
  3. பாரபட்சமற்ற இனவாதம் நாடு : சிறிலங்கா காலம் : ஆனி, 2000 ப‌ல்கலைக்கழகத்தில் இறுதிப் பரீட்சைக்காக தயாராகிக்கொண்டிருந்த காலத்தில் ஒரு நாள். பல்கலைக்கழக விடுதியில் இருந்து சுமார் 5 நிமிடத்தில் நடந்து செல்லக்கூடிய, பல்கலைக்கழக குடிசார் (சிவில்) பீடத்தின் மண்டபங்களின் விறாந்தைகளில் தமிழ் மாணவர்கள் தனியாகவோ, குழுக்களாகவோ இருந்து படித்துக்கொண்டிருந்தோம். சிங்கள மாணவர்கள் அவ்வேளைகளில் அப்பகுதிக்கு வருவது மிகவும் குறைவு, காரணம் எமக்குத் தெரியாது. இரவு பத்து மணியை கடந்திருந்தது. அன்று மாலை சொய்சாபுர தொடர்மாடியில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் அப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினரும், சந்திரிக்கா அம்மையாரின் வலதுகரமாகச் செயற்பட்டு வந்தவ‌ரும், பிரபல இனவாதியுமான சி வி குணரத்ண கொல்லப்பட்டிருந்தது எமக்குத் தெரியும். வெள்ளவத்தைப் பகுதிக்கு இரவு உணவு வாங்கிவரச் சென்றிருந்த ஒரு சில தமிழ் மாணவர்கள் இரவு நெடுநேரமாகியும் விடுதி திரும்பாதது எமக்கு சற்றுக் கவலையைத் தந்திருந்தது. ஆகவே இவைபற்றிச் சிறிது நேரம் பேசிவிட்டு பழையபடி எமது பாடங்களுக்குள் தலையைப் புதைத்துக்கொண்டோம். மிகவும் நிசப்தமான அந்த இரவு வேளையின் அமைதியைக் கிழித்துக்கொண்டு சத்தம் கேட்கத் தொடங்கியது. அது பலர் ஒன்றாக ஆத்திரப்பட்டுக் கத்திப் பேசும் சத்தம். அச்சத்தம் நேரம் ஆக ஆக, நாமிருந்த மண்டப‌ விறாந்தை நோக்கி நகர்ந்து வருவதை நாம் உணர்ந்துகொண்டோம். எம்மில் சிலருக்கு ஆச்சரியம், இன்னும் சிலருக்கு அச்சம். என்னதான் நடக்கிறது என்று பார்த்துவிட நாம் அமர்ந்திருந்த இருக்கைகளை விட்டெழுந்து மண்டப வாயிலை நோக்கிச் செல்லத் தொடங்கினோம்.
  4. Today
  5. இதற்கு இடையிடையே… அனுர நன்றகா செய்கிறார்… இன்னும் செய்வார்… இனவாதத்தை அப்படி உடனே களைய முடியாது…. இது போன்ற காவடி சிந்துகளையும் சந்திலே பாடி விட வேண்டும்…. மிக முக்கியமாக வேறு யாரேனும் தமிழர் வடக்குக்கு வந்து வாழ நினைத்தாலே அவர்கள் மீது வள் வள் என பாய்ந்து….beware of the dog but be more aware of the owner என்பதையும் நிலைநாட்ட வேண்டும்…. ஜெயவே வா…. புது சரணாய்…
  6. பெடிகள் ஒரு தொகுதி குடு பார்ட்டி. ஒரு தொகுதி வாளை தூக்கிகொண்டு ஆளை ஆள் வெட்ட கொலைவெறியுடன் ஓடுது. ஒரு தொகுதி சோசல்மீடியாவில் படுத்து கிடக்கிது. புலம்பெயர் ஆட்களுக்கு கொண்டாட்டம்தான். கொழும்பில் பெஸ்ட் கிளாஸில் புகையிரதம் எடுத்து காங்கேசன்துறையில் இறங்கலாம். ஒரு பழத்தட்டு ஊதுபத்தியுடன் தையிட்டி விகாரைக்கு போய் விகாராதிபதி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கையில் நூலும் கட்டிவிட்டு புத்தர் பெருமானுக்கு சல்யூட் அடித்து; அப்படியே பொடி நடையில் கடலுக்குள் குதித்து பின்னர் காங்கேசன்துறை உல்லாச விடுதிக்கு சென்று ஆட்டுக்கால் சூப்பு கோழிக்கறி ஒரு பிடி பிடித்து ஊத்தக்கூடியதுகளை உள்ளே ஊத்தியும்விட்டு; திரும்ப பெஸ்ட் கிளாசில் ஏறினால் சுகமாய் கொழும்பு வந்திடலாம். இதுவே போதுமே வேறென்ன வேறென்ன வேண்டும். குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா! Post-war reconciliation நல்லாய் போய்க்கொண்டு உள்ளது.
  7. பல கடற்கலங்கள் ஒன்றாக நிற்கின்றன தர்மடம் அருகில் மய்யழி ஆறு, தெல்லிச்சேரி, 1936
  8. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று(22.12.2025) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் இலங்கையிலிருந்து வெளியேறியவுடன் சீனாவினுடைய மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்க கூடிய ஜாவேவும் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். அவருடன் உயர்மட்ட குழுவொன்றும் வருகின்றது. இவ்வாறு அரசியல் தலைவர்கள் இலங்கைக்குள் வருவதை பூகோள அரசியல் ரீதியாக சாதாரணவிடயமாக பார்க்க முடியாது. கடந்த 11.12.2025 அன்று அமெரிக்க துணைச்செயலாளர் எலிசன் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். இலங்கைக்கான பேரிடர் பணியின் முதன்மை பங்கினை அமெரிக்கா வகிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். எனவே தற்போது இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் வருகைக்கும், சீனாவின் உயர் அதிகாரியின் வருகைக்கும் முக்கிய காரணமாக இருப்பது அமெரிக்க துணைச்செயலாளரின் வருகை எனலாம். TamilwinTamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Late...Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Busines
  9. இலங்கையை டிட்வாபுயல் உலுக்கிய பின்னர் அழிவிலிருந்து மீள பல அண்டையநாடுகள் உதவிகரம் நீட்டின. அதில் இந்தியா மற்றும் அமெரிக்கா முன்னிலை வகித்தமை குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து இலங்கைக்கு அமெரிக்க துணைச்செயலாளர் எலிசன் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். இந்தநிலையில் நேற்றையதினம்(2025-12-22) இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று(22.12.2025) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கையை வருகைதந்துள்ளார். இன்றையதினம்(23) சீனாவினுடைய முக்கிய பிரதிநிதிகள் குழுவும் வருகை தரவுள்ளது. https://tamilwin.com/
  10. This study examines the design and use of ancient Tamil boats across the wider Tamilakam region, including the Chera territories of present-day Kerala and Tamil Eelam, which were integral to ancient Tamil cultural and political geography. Although the post-1500 CE period lies beyond the classical era of Tamilakam, the maritime craft of Kerala during this time represent an evolved form of the earlier Tamil maritime traditions that had flourished under the Chera rulers. Therefore, they are included in this study to trace the continuity and transformation of Tamil maritime technology from antiquity into the early modern period. Images inside this were taken from various sources. Image credits to the respective owners. Document:
  11. தோணி ஒன்றிற்கான கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன தூத்துத்குடி படிமப்புரவு: The Vattai Fishing Boat and Related Frame-first Vessels of Tamil Nadu.. Lucy Blue, Eric Kentley & Sean McGrail.jpg
  12. Yesterday
  13. தூத்துக்குடியைச் சேர்ந்த தோணி MARIA ANTORAJ 43 மும்பாய் 1973 இது 2 பாய்மரங்களைக் கொண்டதாகும்
  14. தூத்துக்குடியைச் சேர்ந்த தோணி 23 AVE MARIA 1973 இது மூன்று பாய்மரங்களைக் கொண்டதாகும். Hawkins, Clifford William (b.1914, d.2007)
  15. பதலை (Battelah) வளபட்டணம், கண்ணூர், கேரளா 1936 பின்னால் கோட்டியா நிற்கிறது
  16. பதலை (Battelah) வளபட்டணம், கண்ணூர், கேரளா 1936 (பண்டைய தமிழர்களின் நீட்சியை காட்டுவதற்காகவும் கேரளாவும் பண்டைய தமிழகத்தின் ஒரு பகுதியென்பதாலுமே அனைத்து கேரளப் படிமங்களும் இணைக்கப்பட்டுள்ளன)
  17. யாழ்ப்பாணம் பழைய பூங்கா பூங்காகவே இருக்கட்டும். உள்ளக விளையாட்டரங்கையாழ்நகரை அண்டிய பல அரச காணிகள் இருக்கின்றன. அவ்வாறான ஒரு இடத்தில் அமைக்கலாம். அதை விட கந்தையா வைத்தியநாதனின் பேத்தி தங்களுக்கு சொந்தமான காணியை விளையாட்டரங்கு அமைப்பதற்கு இலவசமாகத் தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்அங்கே கட்டலாம். பழைய பூங்காவுக்குள்தான் கட்ட வேண்டும் என்று அடம்பிடிப்பது ஏன்?மிகவும் பழைமையாக மரங்களை வெட்டி யாழ்நகரை பாலவனமாக்க விரும்புகிறார்களா?ஒருமரத்தை உருவாக்க எவ்வளவு கஸ்ரப்பட வேண்டும். அழிப்பது சுலபம் ஆக்குவது கடினம்.சுமத்திரன் கட்சிகளுக்குள் வழக்குப் போட்டுத் தடைகளை விதிக்கவைப்பதில்தான் கெட்டிக்காரர்.இப்படியான வழக்குகளில் கோட்டை விட்டுவிடுவார் போலிருக்கிறது.அல்லது வழக்குத் தோற்கவேண்டும் என்று வேண்டுமென்றே அவ்வாறான தவறை விட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.ஏனெ;னறால் சுமத்திரனின் வரலாறு அப்படித்தான் இருக்கிறது. இன்று கூட சுமத்தரனின் ஆதரவாளர்களால் தமிழ்த்தேசியக்கட்சிக்கு ஆட்சியமைக்க விடாமல் தமிழருக்கட்சியினர் என்பிபிக்கு வாக்களித்து சபையை என்பிபியிடம் தாரை வார்த்துள்ளனர்.
  18. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 70 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 70 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை மகாவம்சத்தின் ஆசிரியர், விஜயன் மற்றும் அவரது தோழர்கள் தம்பபன்னி [இலங்கை] என்ற பகுதியில் கிமு 543 இல் புத்தர் காலமான அதே தினத்தில் வருகை தந்ததாக, ஒரு மத முக்கியத்துவம் கொடுப்பதற்காக, செயற்கையாக நிர்ணயித்தார். அதற்காக, அதாவது இந்த சூழ்ச்சியால், விஜயனுக்குப் பிறகு அரியணை ஏறிய மன்னர்களின் ஆட்சிக் கால இடைவெளியை நிரப்புவதற்காக ஆட்சிக்காலத்தை சிலருக்கு நீட்டப்படுள்ளது. உதாரணமாக, அபயனின் மருமகன் பண்டுகாபயா [பண்டுகாபயன் / King Pandukhabaya, nephew of Abhayan] கிமு 377 முதல் கிமு 307 வரை, அதாவது 70 ஆண்டுகள் என நீடிக்கப் பட்டுள்ளது. பண்டுகாபயாவின் மகன் மூத்தசிவா 60 ஆண்டுகள் ஆட்சி செய்தார் (கி.மு. 307 - கி.மு. 247) இவ்வாறு தந்தையும் மகனும் 130 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்! மேலும் விஜயனின் வருகை பற்றிய கதை கிபி 6 ஆம் நூற்றாண்டில் நடந்த நிகழ்வுக்கு கிட்டத்தட்ட 1,000 ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டது என்பது நினைவிருக்கலாம். இதில் வேடிக்கை என்னவென்றால், விஜயன் ஒரு பௌத்தர் அல்ல. ஆனால் ஒரு இந்து, சிங்களவர் அல்ல, ஆனால் பெங்காலி - கலிங்க வம்சாவளி! மற்றது உலகில் சிங்களம் என்ற மொழியே இல்லை! புத்தர் இறந்த மாதத்தில், கட்டாயம் இலங்கை வந்து அடைய முடியாது என்பதை விபரமாக, காற்றின் படங்களுடன் ஏற்கனவே விவரிக்கப்பட்டுள்ளது. 7வது அத்தியாயம் விஜயனின் முடிசூட்டு விழாவைப் [பட்டாபிஷேகம்] பற்றியது. விஜயன் இலங்கையைச் சேர்ந்த குவேணி [Kuveni / Kuvanna / குவண்ணா] என்ற இயக்கர் பெண்ணை [யட்சினி / Yakshini] சந்திக்க நேர்ந்தது. அவன் அவளை மணந்து அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். அவளின் உதவியுடன் இயக்கர்களை (Yaksha) கொன்றான். என்றாலும் விஜயனுக்கு இலங்கையின் அரசனாவதற்கு ஒரு உன்னதமான பெண் தேவைப்பட்டது. அப்போது மதுரை மன்னனின் மகளும், விஜயனின் 700 தோழருக்கான மதுரை தமிழ் பெண்களும், பணியாட்கள் மற்றும் வணிகர்களுடன், தமிழ்நாட்டின் பாண்டிய அரசின் ஒரு பகுதியான மதுரையில் இருந்து, வரவழைக்கப் படடனர். எனவே இலங்கையில் உள்ள பெரும்பான்மையான மக்கள் அந்த நேரத்தில் தமிழர்களாக இருக்க வேண்டும். முதல் மனைவி குவண்ணாவை விஜயன் விரட்டியடிக்கும் பொழுது, அவனது சொந்தக் குழந்தைகள் இருவரும் தாயுடன் சென்றனர். குவண்ணாவின் சொந்த மக்கள் உடனடியாக அவளைப் பழிவாங்கும் வகையில் கொன்றனர். எனினும் குழந்தைகள் சுமனகுட்டா [Sumanakutta] வழியாக மலைநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டனர். அதனால், அவர்களின் சந்ததியினர் மலைநாட்டில் குடியேறினர் பெருக்கினார். விஜயன், பாண்டிய மன்னனுக்கு ஆண்டுக்கு இருமுறை நூறாயிரம் (பணத்துண்டுகள்) மதிப்புள்ள சிப்பி முத்துக்களை [shell pearl ] அனுப்புவது வழக்கம் ஆகியது. 'சிப்பி முத்து' என்பது சிப்பி ஓடுகளின் உட்புறப் புறணியிலிருந்து தயாரிக்கப்படுகின்றன, இது முத்தின் தாய் என்றும் அழைக்கப்படுகிறது. [Shell Pearls are made from the inner lining of oyster shells, also known as Mother of Pearl.] மேலும் விபரத்துக்கு 7 - 67 முதல் 74 வரை பார்க்கவும். மகாவம்சம், அத்தியாயம் 7, வசனங்கள் 67-74 / மலைகளுக்கு தப்பி ஓடுதல் மற்றும் முடிசூடல் [சுருக்கம்]: விஜயன் மற்றும் குவேனியின் இரு பிள்ளைகளான, சகோதரனும் சகோதரியும் பாதுகாப்புக்காக சுமனகூடத்திற்கு (ஆதாமின் சிகரம்) தப்பி ஓடினர். அவர்கள் வளர்ந்ததும், அவர்கள் தங்களைத் தாங்களே திருமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்றனர். அவர்கள் அங்கு உள்ள மன்னரின் அனுமதியுடன் மலாயா பகுதியில் (இலங்கையின் மலைப்பகுதியான மத்திய பகுதியில்) வாழ்ந்தனர். அவர்களின் சந்ததியினர் தான் புலிந்தர்கள் என்றும், "புலிந்தர்கள்" என்பது காட்டுமிராண்டித்தனமான (நாகரிகமற்ற) பழங் குடியினருக்குப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் என்றும் விவரிக்கப் பட்டுள்ளது. எனவே, இந்த சூழலில், "புலிந்தர்கள்" என்பது இலங்கையின் பூர்வீக மக்களான வேடர்களைக் குறிக்கிறது. அத்துடன் இந்த பகுதி, கொழும்பு, களுத்துறை, காலி மற்றும் மலைப்பகுதிகளுக்கு இடையே உள்ள உள்நாட்டின் பகுதி, இப்போது சபரகமுவ என்று அழைக்கப்படுகிறது. இன்றும் கூட, வேடர்கள் இலங்கையின் பூர்வீக குடிமக்களாகக் கருதப்படுகிறார்கள். மேலும் "புலிந்த" என்பது பண்டைய இந்திய மற்றும் இலங்கை வரலாற்றில் காட்டு அல்லது நாகரிகமற்ற மலைவாழ் பழங்குடியினருக்கான பொதுவான பெயராகும். விஜயனின் தூதுவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி, பாண்டிய தமிழ் மன்னன், தன் மகளுக்கு [மதுரை இளவரிசிக்கு] ஏராளமான ஆடையணிகளுடனும் பிரயாணத்துக்குத் தேவையான எல்லா பொருள்களுடன் அனுப்பி வைத்தான். தேர்ந்தெடுத்த இதர [700] பெண்களுக்கும் ஆடை அணிகளை வழங்கினான். அவர்களுடைய தகுதிக்கு ஏற்ற வகையில் யானைகள், குதிரைகள், வாகனங்கள் அனுப்பவும் ஏற்பாடும் செய்தான். கைத்தொழில் கலைஞர்களும் பதினெண்குடி மக்களின் ஆயிரம் குடும்பங்களும் அவர்களுடன் செல்வதற்கு ஏற்பாடாயிற்று. அவர்களிடம் வெற்றி வீரனான விஜயனுக்கு ஓர் செய்தியையும் அனுப்பினன். இந்தப் பெருவாரியான மக்கள் கப்பலில் புறப்பட்டு இலங்கைத்தீவில் மகாதிட்டு எனப்படும் இடத்தில் கரையேறினர். இந்தக் காரணத்ததாலேயே அவர்கள் இறங்கிய இடம் மகாதிட்டு [the ancient port of Mahatittha / now Mantota opposite the island Manaar.] எனப்படுகிறது. மாதோட்டம் என்பது, இலங்கைத் தீவில், மன்னார் பகுதியில், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சிறப்புடன் விளங்கிய துறைமுகப் பட்டினம் ஆகும். பாளி மொழியில் எழுதப்பட்ட இலங்கையின் பழைய வரலாற்று நூல்கள் இதனை மாதொட்ட அல்லது மகாதித்த என்று குறிப்பிடுகின்றன. தமிழ் மொழி மூலங்களிலிருந்து, இது தமிழில் மாந்தை என்றும் மாதோட்டம் என்றும் அழைக்கப்பட்டதாக அறியவருகின்றது. கி.பி 13 ஆம் நூற்றாண்டுக்கு முன், இலங்கைத் தீவின் முக்கிய துறைமுகமாக இது விளங்கியதுடன் உலகளாவிய வணிகத்திலும் சிறப்பிடம் பெற்றிருந்தது. பல்வேறு நூல் ஆதாரங்களும், தொல்பொருட்களும் இதற்குச் சான்றாக விளங்குகின்றன. பண்டைய உலகின் பல நாடுகளைச் சேர்ந்த நாணயங்களும், போசலின் [Porcelain] பாண்டங்களும், மற்றும் பல வணிகப் பொருட்களும் அகழ்வாய்வுகள் மூலம் இவ்விடத்தில் கண்டறியப்பட்டுள்ளன. இந்தச் சான்றுகள், இப்பகுதியில் பெருமளவில் மக்கள் வாழ்ந்து வந்ததையும், மாதோட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெருமளவில் வேளாண்மை முயற்சிகள் இடம்பெற்றதையும் காட்டுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அதன் பின், விஜயன் தமிழ் பாண்டிய இளவரசியை மணந்து மன்னனாக முடிசூடினான். அதேபோல மற்ற 700 பேரும் மதுரை தமிழ் பெண்களை மணந்தனர். அத்துடன் விஜயன் தனது அமைச்சர்களுக்கு செல்வத்தை வழங்கினார். அது மட்டும் அல்ல, ஒவ்வொரு ஆண்டும், தனது மனைவியின் தந்தைக்கு மதிப்புமிக்க முத்துக்களை அனுப்பினார். தனது கெட்ட வழிகளை மாற்றிய பிறகு, இலங்கையை தம்பபன்னி நகரில் (இன்றைய வடமேற்கு இலங்கையில் இருப்பதாக நம்பப்படுகிறது?) 38 ஆண்டுகள் அமைதியாகவும் நியாயமாகவும் ஆட்சி செய்தார் என்று இந்த பகுதி கூறுகிறது. Part: 70 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Chapter 7: This is about consecrating of Vijaya. Vijaya happened to meet with Kuvanna, a Yakkhini, native of Lanka. He married her and she bore two kids to him. He slew the Yakkhas with her help. Vijaya needed a noble woman to marry to become the king of Lanka. Then the daughter of the king of Mathura, along with ladies for the 700 companions and with attendants and trades people came from Mathura, part of the Pandya Kingdom in Tamil Nadu. The majority of the people in Lanka, therefore, should be Tamils by that time. Vijaya chased away the first wife Kuvanna, and his own children went with her. Kuvanna’s own peopled promptly killed her in revenge, and the kids fled to the hill country through Sumanakutta. Their offspring populated the hill country, Malaya. Vijaya used to send a shell pearl worth twice a hundred thousand (pieces of money) to the Pandya king annually, 7 - 73. Vijaya ruled 38 years. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 71 தொடரும் / Will follow துளி/DROP: 1950 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 70 https://www.facebook.com/groups/978753388866632/posts/32955016070813615/?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.