stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
பல்கலைக்கழக வாயிலை நாம் அடைந்தபோது எம்மை அச்சம் பற்றிக்கொண்டது. வாயிலின் உள்ளே அமைந்திருந்த வீதியில் பொலீஸாரின் இரு வாகனங்கள் நின்றிருந்தன. அப்பகுதியெங்கும் சிங்கள மாணவர்களும், பல்கலைக்கழகத்தைச் சுற்றி அமைந்திருந்த குடியிருப்புக்களைச் சேர்ந்த சிங்கள மக்களும் சூழ்ந்திருந்தார்கள். குறைந்தது 200 அல்லது 300 பேராவது இருக்கலாம். எம்மைக் கண்டவுடன் அவர்கள் ஆத்திரப்பட்டார்கள். சிங்களத்தில் வைய்யத் தொடங்கினார்கள். "பறத் தமிழர்கள்", "புலிப் பயங்கரவாதிகள்" என்று சிங்கள தூசண அடைமொழிகளுடன் அவர்களின் சொற்கள் வந்து வீழ்ந்தன. அவர்களை நோக்கிப் பார்க்கும் திராணி எமக்கு இருக்கவில்லை. பார்த்தால் ஏதாவது செய்வார்கள் என்கிற அச்சம். ஆகவே எம்மை இழுத்துச் சென்ற சிங்கள மாணவர்களின் பின்னால், தலைகுனிந்தபடி அமைதியாக நடந்து சென்றுகொண்டிருந்தோம். எம்மை இழுத்துச் சென்றவர்கள் பல்கலைக்கழக வாயிலில் அமைந்திருந்த காவலாளர்களின் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்றார்கள். அறையினுள்ளே இன்னும் பல தமிழ் மாணவர்கள். பலர் வெறும் சறம் மாத்திரம் அணிந்திருந்தார்கள். தூக்கத்தில் இருந்தவர்களை எழுப்பி இழுத்து வந்திருக்கிறார்கள். இறுதியாண்டு, முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு என்று பல தரங்களில் படித்துக்கொண்டிருந்த வடக்குக் கிழக்கைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள். எல்லோரது முகத்திலும் "இனி என்ன நடக்கப்போகிறதோ" என்கிற அச்சம் குடிகொண்டிருந்தது. கட்டுப்பாட்டு அறையின் மத்தியில் மொறட்டுவைப் பொலீஸ் நிலையத்தின் பிரதான பொலீஸ் பொறுப்பதிகாரி (ஓ. ஐ.சி), பீரிஸ் கோபம் கொப்பளிக்க, சிவந்த கண்களுடன் நின்றுகொண்டு சிங்களத்தில் கத்திக்கொண்டிருந்தான். ஏற்கனவே அச்சத்தின் உறைந்துபோன எங்களுக்கு அவன் கூறுவதில் முழுவதையும் கிரகித்துப் புரிந்துகொள்ளும் பக்குவம் இருக்கவில்லை. எங்களை சிங்கள மாணவர்கள் உள்ளே இழுத்து வருவதைக் கண்டதும், அந்தச் சிங்கள மாணவர்களிடம், "முங் கெளத? (இவர்கள் யார்?)" என்று கேட்டான். "முங் தெமள, கம்பஸ்ஸெக்கே பிட்டிப்பஸ்ஸே இந்தலா அள்ளங் ஆவா (இவர்கள் தமிழர்கள், பல்கலைக்கழகத்தின் பின்னாலிருந்து பிடித்து வந்தோம்)" என்று அந்த மாணவன் பதிலளித்தான்.
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
நாம் மண்டப வாயிலை அடைந்தபோது, சத்தமாகக் கூக்குரலிட்டபடி வந்த கூட்டமும் அப்பகுதியினை அடைந்திருந்தது. சுமார் 40 அல்லது 50 பேர் அடங்கிய அந்தக் கூட்டத்தில் இருந்த முகங்களில் பெரும்பாலானவர்களை எனக்கு நன்கு தெரிந்திருந்தது. அவர்கள் என்னுடன் கூடவே கல்விகற்கும் இறுதியாண்டின் சிங்கள மாணவர்கள். அவர்கள் அனைவரது கைகளிலும் கட்டில்ச் சட்டங்கள், பொல்லுகள், கதிரைகளின் கால்கள் என்று ஏதாவதொரு ஆயுதம் காணப்பட்டது. முன்னால் வந்தவன் காலியைச் சேர்ந்தவன். மின்னியல்க் கற்கை நெறியில் பயின்றுவருபவன். பல்கலைக்கழகத்தில் நான் இருந்த நான்கரை ஆண்டுகளில் என்னுடன் பலமுறை பேசியிருக்கிறான். மிகவும் பரீட்சயமானவன். ஆகவே, என்னதான் நடக்கிறது என்று அறிய அவனுடன் பேச்சுக் கொடுத்தேன். "என்ன நடக்கிறது? ஏன் கைகளில் பொல்லுகளுடன் திரிகிறீர்கள்? யாரைத் தேடுகிறீர்கள்" என்று சிங்களத்தில் சகஜமாகக் கேட்டேன். அவனது முகம் கோபத்தில் அமிழ்ந்திருந்தது தெரிந்தது. எனது கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் மன நிலையில் அவன் இருக்கவில்லை. எனது கையை இறுகப் பிடித்துக்கொண்ட அவன், தன்னுடன் வந்திருப்பவர்களை நோக்கி "அப்பகுதியில் வேறு யாரும் தமிழ் மாணவர்கள் இருக்கிறார்களா என்று பார்" என்று சிங்களத்தில் கத்தினான். அப்போதுதான் அவனும் அவனது தோழர்களும் வந்திருப்பது எம்மைத் தேடித்தான் என்பது எனக்குப் புரிந்தது. ஆனாலும் "எதற்காக எனது கையைப் பிடித்திருக்கிறாய், எங்கே என்னை அழைத்துச் செல்கிறாய்?" என்று என்னை இழுத்துக்கொண்டு சென்ற அவனைப் பார்த்து மறுபடியும் கேட்டேன். "ஒன்றுமில்லை, பல்கலைக்கழகத்தின் முன்றலுக்கு எங்களுடன் வா, உன்னையும் உனது தமிழ் நண்பர்களையும் விசாரிக்க வேண்டும்" என்று ஒரு குற்றவாளியுடன் பேசுவது போலக் கூறினான். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. "மச்சான், என்னைத் தெரியவில்லையா உனக்கு?" என்று நான் அதிர்ச்சியுடன் கேடபோது, "தெரியாது" எனுமாப்போல் தலையை ஆட்டிவிட்டு என்னை தொடர்ந்தும் இழுத்துக்கொண்டு சென்ல்ல, அவனின் நண்பர்களில் சிலர் இன்னும் நான்கு அல்லது ஐந்து தமிழ் மாணவர்களை இழுத்து வந்துகொண்டிருந்தார்கள். இத்தனை ஆண்டுகள் அவர்களுடன் கூடவே படித்துவந்த எம்மை, ஏதோ குற்றவாளிகளைப் பிடித்து விட்டதுபோல் அவர்கள் நடந்துகொண்டது எமக்கு மிகுந்த அச்சத்தை உருவாக்கி விட்டது. என்னதான் ஒன்றாகப் படித்து, சிங்களத்தில் எவ்வளவுதான் பேசினாலும் இனவாதம் என்று வரும்போது எவருமே விதிவிலக்கல்ல என்பதும், தமிழர்கள் எல்லோருமே எதிரிகள்தான் என்று நடந்துகொள்வதும் அவர்களின் இயல்பு என்று எனக்குப் புரிந்தது. நான் பேசும் எதையும் அவன் செவிகொடுத்துக் கேட்கப்போவதில்லை. என்னை சக மனிதனாக நடத்தக்கூடிய மனநிலையிலும் அவனோ அவனுடன் கூடவிருந்தோரோ அன்று இருக்கவில்லை. புலிகளை உயிருடன் பிடித்துவிட்டோம் என்கிற பெருமிதத்தோடு பல்கலை வாயிலை நோக்கி எம்மை இழுத்துக்கொண்டு சென்றது எம்முடன் கூடவே படித்த சிங்கள மாணவர் கூட்டம்.
- Today
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
பாரபட்சமற்ற இனவாதம் நாடு : சிறிலங்கா காலம் : ஆனி, 2000 பல்கலைக்கழகத்தில் இறுதிப் பரீட்சைக்காக தயாராகிக்கொண்டிருந்த காலத்தில் ஒரு நாள். பல்கலைக்கழக விடுதியில் இருந்து சுமார் 5 நிமிடத்தில் நடந்து செல்லக்கூடிய, பல்கலைக்கழக குடிசார் (சிவில்) பீடத்தின் மண்டபங்களின் விறாந்தைகளில் தமிழ் மாணவர்கள் தனியாகவோ, குழுக்களாகவோ இருந்து படித்துக்கொண்டிருந்தோம். சிங்கள மாணவர்கள் அவ்வேளைகளில் அப்பகுதிக்கு வருவது மிகவும் குறைவு, காரணம் எமக்குத் தெரியாது. இரவு பத்து மணியை கடந்திருந்தது. அன்று மாலை சொய்சாபுர தொடர்மாடியில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் அப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினரும், சந்திரிக்கா அம்மையாரின் வலதுகரமாகச் செயற்பட்டு வந்தவரும், பிரபல இனவாதியுமான சி வி குணரத்ண கொல்லப்பட்டிருந்தது எமக்குத் தெரியும். வெள்ளவத்தைப் பகுதிக்கு இரவு உணவு வாங்கிவரச் சென்றிருந்த ஒரு சில தமிழ் மாணவர்கள் இரவு நெடுநேரமாகியும் விடுதி திரும்பாதது எமக்கு சற்றுக் கவலையைத் தந்திருந்தது. ஆகவே இவைபற்றிச் சிறிது நேரம் பேசிவிட்டு பழையபடி எமது பாடங்களுக்குள் தலையைப் புதைத்துக்கொண்டோம். மிகவும் நிசப்தமான அந்த இரவு வேளையின் அமைதியைக் கிழித்துக்கொண்டு சத்தம் கேட்கத் தொடங்கியது. அது பலர் ஒன்றாக ஆத்திரப்பட்டுக் கத்திப் பேசும் சத்தம். அச்சத்தம் நேரம் ஆக ஆக, நாமிருந்த மண்டப விறாந்தை நோக்கி நகர்ந்து வருவதை நாம் உணர்ந்துகொண்டோம். எம்மில் சிலருக்கு ஆச்சரியம், இன்னும் சிலருக்கு அச்சம். என்னதான் நடக்கிறது என்று பார்த்துவிட நாம் அமர்ந்திருந்த இருக்கைகளை விட்டெழுந்து மண்டப வாயிலை நோக்கிச் செல்லத் தொடங்கினோம்.
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
.
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
.
-
தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
இதற்கு இடையிடையே… அனுர நன்றகா செய்கிறார்… இன்னும் செய்வார்… இனவாதத்தை அப்படி உடனே களைய முடியாது…. இது போன்ற காவடி சிந்துகளையும் சந்திலே பாடி விட வேண்டும்…. மிக முக்கியமாக வேறு யாரேனும் தமிழர் வடக்குக்கு வந்து வாழ நினைத்தாலே அவர்கள் மீது வள் வள் என பாய்ந்து….beware of the dog but be more aware of the owner என்பதையும் நிலைநாட்ட வேண்டும்…. ஜெயவே வா…. புது சரணாய்…
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
மய்யழி, இந்தியா 1920-1950
-
தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
பெடிகள் ஒரு தொகுதி குடு பார்ட்டி. ஒரு தொகுதி வாளை தூக்கிகொண்டு ஆளை ஆள் வெட்ட கொலைவெறியுடன் ஓடுது. ஒரு தொகுதி சோசல்மீடியாவில் படுத்து கிடக்கிது. புலம்பெயர் ஆட்களுக்கு கொண்டாட்டம்தான். கொழும்பில் பெஸ்ட் கிளாஸில் புகையிரதம் எடுத்து காங்கேசன்துறையில் இறங்கலாம். ஒரு பழத்தட்டு ஊதுபத்தியுடன் தையிட்டி விகாரைக்கு போய் விகாராதிபதி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கையில் நூலும் கட்டிவிட்டு புத்தர் பெருமானுக்கு சல்யூட் அடித்து; அப்படியே பொடி நடையில் கடலுக்குள் குதித்து பின்னர் காங்கேசன்துறை உல்லாச விடுதிக்கு சென்று ஆட்டுக்கால் சூப்பு கோழிக்கறி ஒரு பிடி பிடித்து ஊத்தக்கூடியதுகளை உள்ளே ஊத்தியும்விட்டு; திரும்ப பெஸ்ட் கிளாசில் ஏறினால் சுகமாய் கொழும்பு வந்திடலாம். இதுவே போதுமே வேறென்ன வேறென்ன வேண்டும். குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா! Post-war reconciliation நல்லாய் போய்க்கொண்டு உள்ளது.
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
பல கடற்கலங்கள் ஒன்றாக நிற்கின்றன தர்மடம் அருகில் மய்யழி ஆறு, தெல்லிச்சேரி, 1936
-
ட்ரம்பின் முடிவுகளால் பிளவடைய போகும் இலங்கை - திணறும் இந்தியா!
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று(22.12.2025) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் இலங்கையிலிருந்து வெளியேறியவுடன் சீனாவினுடைய மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்க கூடிய ஜாவேவும் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். அவருடன் உயர்மட்ட குழுவொன்றும் வருகின்றது. இவ்வாறு அரசியல் தலைவர்கள் இலங்கைக்குள் வருவதை பூகோள அரசியல் ரீதியாக சாதாரணவிடயமாக பார்க்க முடியாது. கடந்த 11.12.2025 அன்று அமெரிக்க துணைச்செயலாளர் எலிசன் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். இலங்கைக்கான பேரிடர் பணியின் முதன்மை பங்கினை அமெரிக்கா வகிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். எனவே தற்போது இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் வருகைக்கும், சீனாவின் உயர் அதிகாரியின் வருகைக்கும் முக்கிய காரணமாக இருப்பது அமெரிக்க துணைச்செயலாளரின் வருகை எனலாம். TamilwinTamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Late...Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Busines
-
இலங்கை மீது எற்பட்டுள்ள திடீர் அச்சம்- அவசரமாக விரைந்துள்ள எஸ்.ஜெயசங்கர்
இலங்கையை டிட்வாபுயல் உலுக்கிய பின்னர் அழிவிலிருந்து மீள பல அண்டையநாடுகள் உதவிகரம் நீட்டின. அதில் இந்தியா மற்றும் அமெரிக்கா முன்னிலை வகித்தமை குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து இலங்கைக்கு அமெரிக்க துணைச்செயலாளர் எலிசன் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். இந்தநிலையில் நேற்றையதினம்(2025-12-22) இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று(22.12.2025) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கையை வருகைதந்துள்ளார். இன்றையதினம்(23) சீனாவினுடைய முக்கிய பிரதிநிதிகள் குழுவும் வருகை தரவுள்ளது. https://tamilwin.com/
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
பத்தமாரி மும்பாய், 1973
-
Different types of boats used by Tamils historically
This study examines the design and use of ancient Tamil boats across the wider Tamilakam region, including the Chera territories of present-day Kerala and Tamil Eelam, which were integral to ancient Tamil cultural and political geography. Although the post-1500 CE period lies beyond the classical era of Tamilakam, the maritime craft of Kerala during this time represent an evolved form of the earlier Tamil maritime traditions that had flourished under the Chera rulers. Therefore, they are included in this study to trace the continuity and transformation of Tamil maritime technology from antiquity into the early modern period. Images inside this were taken from various sources. Image credits to the respective owners. Document:
-
beypore.jpg
-
battelah beypore.jpg
-
stearn pattamar.jpg
-
pattamar.jpg
-
Pattamar, Bombay, 1973.jpg
-
Rowboat of the thoni MARY ISABEL, Calicut, 1973.jpg
-
Interior of thoni hold, Tuticorin, India, 1973.jpg
-
Thoni MARIA ANTORAJ 43, Bombay, 1973.jpg
-
mahe boats, 1920-1950.jpg
-
Kotiya.jpg
-
Masula.jpg
-
William Daniell, R.A. (1769-1837) A Patamar off Mahé, Malabar Coast titled 'A Patamar off Mahè April 12, 1793
-
batticaloa.jpg
-
Old form of the Paathai type boat in waters of the Batticaloa , 1865 | This image also shows more than 5 Pilavu type boats and at least one mast boat inside the lagoon
-
பண்டைத்_தமிழக_வரைவுக.jpg
-
Trincomalee Catchery, March 1824 | Capital of Tamil Eelam - Two unidentified boats are seen parked near the shore
-
Sinhala ඔරූව (Oruwa- Meaning:Boat) might have a root word in Tamil ஒரூஉ (Oru-u) | செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி - ஒ வரிசை 370,371
-
4 major types of traditional craft | by O Gulbrandsen - Naval Architect Consultant, Bay of Bengal Programme | Madras, November 1990
-
distribution of 'majority' native crafts in the Eelam | Small-Scale Fisherfolk Communities in the Bay of Bengal. Madras, India, November 1990
-
Distribution of different fishing craft in 1958 - Source. Fisheries Department | From THE ORU OF SRI LANKA: A single outrigger craft of the northern Indian Ocean - Lt. Cmdr. Somasiri Devendra, 1990
-
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
பத்தமாரி (Pattamar) வளபட்டணம், கண்ணூர், கேரளா 1936
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
தோணி ஒன்றிற்கான கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன தூத்துத்குடி படிமப்புரவு: The Vattai Fishing Boat and Related Frame-first Vessels of Tamil Nadu.. Lucy Blue, Eric Kentley & Sean McGrail.jpg
- Yesterday
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
மேரி இசபெல் 173 என்ற தோணியின் தொடுவை வள்ளம்
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
தோணியின் உட்புறம்
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
தூத்துக்குடியைச் சேர்ந்த தோணி MARIA ANTORAJ 43 மும்பாய் 1973 இது 2 பாய்மரங்களைக் கொண்டதாகும்
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
தூத்துக்குடியைச் சேர்ந்த தோணி 23 AVE MARIA 1973 இது மூன்று பாய்மரங்களைக் கொண்டதாகும். Hawkins, Clifford William (b.1914, d.2007)
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
கோட்டியா (Kotiya) பேப்பூர், கேரளா 1973
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
கோட்டியா (Kotiya) வளபட்டணம், கண்ணூர், கேரளா 1936
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
கோட்டியா (Kotiya) பேப்பூர், கேரளா 1973
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
பதலை (Battelah) வளபட்டணம், கண்ணூர், கேரளா 1936 பின்னால் கோட்டியா நிற்கிறது
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
பதலை (Battelah) வளபட்டணம், கண்ணூர், கேரளா 1936 (பண்டைய தமிழர்களின் நீட்சியை காட்டுவதற்காகவும் கேரளாவும் பண்டைய தமிழகத்தின் ஒரு பகுதியென்பதாலுமே அனைத்து கேரளப் படிமங்களும் இணைக்கப்பட்டுள்ளன)
-
பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
யாழ்ப்பாணம் பழைய பூங்கா பூங்காகவே இருக்கட்டும். உள்ளக விளையாட்டரங்கையாழ்நகரை அண்டிய பல அரச காணிகள் இருக்கின்றன. அவ்வாறான ஒரு இடத்தில் அமைக்கலாம். அதை விட கந்தையா வைத்தியநாதனின் பேத்தி தங்களுக்கு சொந்தமான காணியை விளையாட்டரங்கு அமைப்பதற்கு இலவசமாகத் தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்அங்கே கட்டலாம். பழைய பூங்காவுக்குள்தான் கட்ட வேண்டும் என்று அடம்பிடிப்பது ஏன்?மிகவும் பழைமையாக மரங்களை வெட்டி யாழ்நகரை பாலவனமாக்க விரும்புகிறார்களா?ஒருமரத்தை உருவாக்க எவ்வளவு கஸ்ரப்பட வேண்டும். அழிப்பது சுலபம் ஆக்குவது கடினம்.சுமத்திரன் கட்சிகளுக்குள் வழக்குப் போட்டுத் தடைகளை விதிக்கவைப்பதில்தான் கெட்டிக்காரர்.இப்படியான வழக்குகளில் கோட்டை விட்டுவிடுவார் போலிருக்கிறது.அல்லது வழக்குத் தோற்கவேண்டும் என்று வேண்டுமென்றே அவ்வாறான தவறை விட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.ஏனெ;னறால் சுமத்திரனின் வரலாறு அப்படித்தான் இருக்கிறது. இன்று கூட சுமத்தரனின் ஆதரவாளர்களால் தமிழ்த்தேசியக்கட்சிக்கு ஆட்சியமைக்க விடாமல் தமிழருக்கட்சியினர் என்பிபிக்கு வாக்களித்து சபையை என்பிபியிடம் தாரை வார்த்துள்ளனர்.