stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
அன்புமணிக்கு ராமதாஸ் ’இறுதி’ எச்சரிக்கை! பத்திரிகைகளில் ’பொது விளம்பரம்’ வெளியீடு!
அன்புமணிக்கு ராமதாஸ் ’இறுதி’ எச்சரிக்கை! பத்திரிகைகளில் ’பொது விளம்பரம்’ வெளியீடு! 26 Dec 2025, 8:11 AM பாட்டாளி மக்கள் கட்சி (பாமக PMK) பெயரை பயன்படுத்தக் கூடாது என அன்புமணிக்கு அவரது தந்தையும் பாமக நிறுவனருமான டாக்டர் ராமதாஸ், நாளிதழ்களில் ‘பொது விளம்பரம்’ மூலம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையேயான மோதலில் கட்சிக்கு இருவரும் உரிமை கொண்டாடி வருகின்றனர். அண்மையில் டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இருதரப்பும் தங்களுக்கு சாதகமாக முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் நாளிதழ்களில் இன்று, டாக்டர் ராமதாஸ் ‘பொது விளம்பரம்’ மூலம் அன்புமணிக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளதாவது; “இதன் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் கடைசியாகத் தெரிவிக்கப்படுவது என்னவென்றால், பாட்டாளி மக்கள் கட்சி தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் W.P.(C) No.18311/2025 வழக்கில், 04.12.2025 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம், மருத்துவர் அன்புமணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்ற உரிமையோ, கட்சியின் பெயர், கொடி, சின்னம் பயன்படுத்தும் உரிமையோ எதுவும் இல்லை என்பது சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், தேர்தல் ஆணையம் 09.09.2025 மற்றும் 27.11.2025 அன்று பிறப்பித்த உத்தரவுகள் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டவை என்றும், சட்ட அதிகாரமற்றவை என்றும் உயர்நீதிமன்றம் தெளிவாக அறிவித்துள்ளது. எனவே, எந்த அரசியல் கட்சியும், தனிநபரும், அமைப்பும், மருத்துவர் அன்புமணி மற்றும் வேறு எவருடனும் பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல், தேர்தல் அல்லது நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொண்டால், அது சட்டப்படி குற்றமாகும். மேற்கண்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பை மீறி தொடர்ந்து செயல்படுவோர் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உட்பட சட்டப்படி கடுமையான நடவடிக்கை தவறாமல் மேற்கொள்ளப்படும் என்பதும் இதன் மூலம் கடைசியாக எச்சரிக்கப்படுகிறது. மக்களே… ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள் நீதியின் முழக்கம் – உண்மை மறைக்க முடியாது இதன் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் உறுதியாகத் தெரிவிக்கப்படுவது என்னவென்றால், பாட்டாளி மக்கள் கட்சி தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் W.P.(C) No.18311/2025 என்ற வழக்கில், 04.12.2025 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பு, உண்மையை சட்டத்தின் முன் நிறுத்திய வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு ஆகும். போலிக்கு சட்டத்தில் இடமில்லை: போலி ஆவணங்களின் அடிப்படையில் கட்சித் தலைமை உரிமை கோரப்பட்ட முயற்சியும், அதனை அங்கீகரிக்க தேர்தல் ஆணையம் 09.09.2025 மற்றும் 27.11.2025 அன்று பிறப்பித்த உத்தரவுகளும், அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டவை என்றும், சட்ட அதிகாரமற்றவை என்றும் நீதிமன்றம் தெளிவாகத் தகர்த்தெறிந்துள்ளது. உண்மை இன்று சட்டமாகியது: இந்தத் தீர்ப்பின் மூலம், மருத்துவர் அன்புமணிக்கு, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்ற உரிமையோ, கட்சியின் பெயர், கொடி, சின்னம் பயன்படுத்தும் உரிமையோ எதுவும் இல்லை என்பது சட்டப்பூர்வமாகவும், நிரந்தரமாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மக்களை ஏமாற்றும் அரசியல் – இனி இல்லை: நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகும், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒருவர், பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரைப் பயன்படுத்தி கட்சி தன் கட்டுப்பாட்டில் இருப்பதுபோல் காட்டுவது, மக்களை ஏமாற்றும் சட்டவிரோத அரசியல் செயலாகும். இதனை மக்கள் அறிந்தே ஆக வேண்டும் என்பதற்காகவே, இந்த அறிவிப்பு மாவட்டம் தோறும் வெளியிடப்படுகிறது. இது ஒரு கட்சி அல்ல – இது ஒரு தியாக இயக்கம்: 1980 ஆம் ஆண்டு இயக்கம் தொடங்கி, மின்சாரம் இல்லாத காலம், சாலை இல்லாத கிராமங்கள், மேடு-பள்ளங்கள், வயல் வரப்புகள் வழியாக நடந்து, ராந்தல் விளக்கின் ஒளியில் மக்களின் துயரை கேட்டவன், 96,000-க்கும் மேற்பட்ட ஊர்களை காலால் அளந்தவன், தன்னலமின்றி உழைத்து ஒரு மக்கள் எழுச்சியை அரசியல் இயக்கமாக மாற்றியவன் – நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்கள். தியாகத்தின் சொத்து – விற்பனைக்கு அல்ல: அந்தத் தியாகத்தின் பயனாக உருவான பாட்டாளி மக்கள் கட்சி, இன்றும் என்றும் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்களிடமே உள்ளது. இந்த இயக்கம் பதவி பேராசைக்கோ, போலி ஆவணங்களுக்கோ ஒருபோதும் அடிமையல்ல. முடிவு எடுக்கும் அதிகாரம் யாரிடம்?: எனவே, பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரில் எடுக்கப்படும் எந்தவொரு தேர்தல் கூட்டணியும், அரசியல் முடிவும், நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்களிடமிருந்தே வர வேண்டும் என்பதே நீதிக்கும் நியாயத்திற்கும் ஒத்த உண்மை. இது எச்சரிக்கை – அலட்சியம் அல்ல: மருத்துவர் அன்புமணிக்கு, பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரில் எந்தவித அரசியல், தேர்தல் அல்லது நிர்வாக நடவடிக்கைகளையும் எடுக்க ஒரு துளி உரிமையும் இல்லை. அரசியல் கட்சிகள், தனிநபர்கள், அல்லது வேறு எந்த அமைப்பும், மருத்துவர் அன்புமணி மற்றும் வேறு எவருடனும் பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொண்டால், அது சட்டப்படி குற்றமாகும். நீதியை மீறினால் – விளைவுகள் கடுமையானவை: மேற்கண்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பை மீறி தொடர்ந்து செயல்படுவோர் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தவறாமல் தொடரப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://minnambalam.com/pmk-ramadoss-issues-final-warning-to-anbumani/
- Today
-
யுத்தத்தினால் பெண்கள் தாம் விரும்பாத பாத்திரங்களையும் ஏற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.- ஜி.எல்.பீரீஸ்
யுத்தத்தினால் பெண்கள் தாம் விரும்பாத பாத்திரங்களையும் ஏற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.- ஜி.எல்.பீரீஸ் வெள்ளி, 26 டிசம்பர் 2025 07:41 AM இலங்கை விவகாரத்தில் இந்தியா, நோர்வே உள்ளிட்ட நாடுகளின் செயற்பாடுகள் தொடர்பாக விமர்சனங்கள் அதிருப்திகள் காணப்பட்டாலும் அந்த விமர்சனங்களை செய்தவர்கள் கூட வௌிநாடுகளின் வகிபாகத்தை முழுமையாக நிராகரிக்கவில்லை என முன்னாள் அமைச்சரும் தகைசார் பேராசிரியரருமான ஜி.எல்.பீரீஸ் தெரிவித்துள்ளார். இலங்கை அரசியலின் சமாதானப் பேச்சுவார்த்தை காலகட்டத்தின் நிகழ்வுகளை ஆராய்ந்து ஜி.எல்.பீரீஸ் அண்மையில் எழுதி வெளியிட்ட "இலங்கை அமைதி செயல்முறை ஒரு உள்பார்வை" எனும் நூலிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நூலில், யுத்தம் பெருமளவில் பாதித்த தரப்பினராக பெண்களே உள்ளனர். மிகுந்த வேதனைக்கும் மன அழுத்தத்திற்கும் மத்தியில் அவர்களின் வாழ்க்கை வெகுவாக மாற்றமடைந்தது. ஆண்கள் மத்தியில் மரணங்கள் மற்றும் காணாமலாக்கப்படுதல்கள் அதிகரித்தமையானது, விதவைகள் தலைமையிலான குடும்பங்களின் எண்ணிக்கையை அதிகரித்து அடிப்படை வாழ்வில் மாற்றங்களை வலிந்து திணித்தது. பொருளாதார சுமை அதிகரித்து அடக்குமுறையானது. குடும்பங்களை வழிநடத்தும் கட்டாயத்துடன் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அங்கு அதிகரித்தன. பொருளாதார நெருக்கடி மட்டுமே தனித்த அல்லது ஆதிக்கம் செலுத்தும் காரணியாக அங்கு இருக்கவில்லை. முடிவற்ற பரவலான மற்றும் வாழ்க்கையை மாற்றும் தாக்கம் மற்றும் அழுத்தங்கள் ஊடுருவி, ஸ்தாபிக்கப்பட்டிருந்த சமூக நடத்தை முறைமைகளை அச்சுறுத்தும் காரணிகளாக அமைந்தன. தேவைகளே கண்டுபிடிப்புகளுக்கான தாயாகின்றன. தைரியம் மற்றும் மீண்டெழும் தன்மைக்குத் தங்களைத் தாங்களே தகுதியானவர்களாக வௌிப்படுத்திக் கொண்ட பெண்கள், துரதிஷ்டத்திலிருந்து வாய்ப்பினை அரிதாகவே பயன்படுத்திக் கொண்டனர். வடக்கு, கிழக்கு மாகாணங்களில், பாரம்பரிய உறவுகளின் ஆதரவின்றி பெண்கள் புதிய வாழ்க்கை முறையில் கடினமான சவால்களை எதிர்கொண்டனர். பொருளாதார வாழ்வாதாரத்திற்கும், கலாசார மற்றும் பண்பாடுகள் தொடர்பான ஆதரவிற்கும் புதிய வழிகளைத் தேட வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. இவை, பாரம்பரியத்தின் அடிப்படையில் உருவான சமூகக் கட்டமைப்பின் சுமையை குறைப்பதற்குப் பதிலாக, மேலும் அதிகரிக்கவே வழிவகுத்தன. வாழ்வாதாரப் போராட்டத்தில், பெண்கள் தாம் விரும்பாத பாத்திரங்களையும் ஏற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதனால் பாரம்பரிய மனப்பான்மையுள்ளவர்களுக்கும் இவர்களுக்கும் இடையிலான புரிதல் குறைந்ததால் புதிய சிந்தனையுடன் சமூகத்தை மறுசீரமைக்க வேண்டியேற்பட்டது. மறுகட்டமைப்பு மற்றும் அணுகுமுறைகளை மறுசீரமைக்கும் முழுமையான செயன்முறைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தியா ஒரு முக்கியமான காரணியாக இருந்தது. கடந்த நூற்றாண்டின் இறுதி இரண்டு தசாப்தங்களிலும் இலங்கை விவகாரங்களில் இந்தியாவின் கரிசனை அதிகரித்திருந்தது. 1987 ஆம் ஆண்டின் இந்தியா - இலங்கை உடன்படிக்கையில் இது தௌிவாக வெளிப்பட்டது.இது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு வழிகோலியது. உள்நாட்டின் சூழ்நிலைகள், இந்தியாவை சமாதானச் செயன்முறையில் முக்கிய வகிபாகத்தை முன்நகர்த்துவதில் தடுத்த போதிலும் இந்தியா அந்த விடயத்தில் நீடித்த கரிசனையை எப்போதும் காண்பித்தது. இந்திய அமைதிப்படை மற்றும் பிற நடவடிக்கைகள் குறித்த பரவலான அதிருப்தி காணப்பட்ட போதிலும், இலங்கையில் பெரும்பான்மையினரிடமும் , இந்தியாவின் உறுதியான பங்குபற்றலை வரவேற்க வேண்டும் என்ற கருத்து குறிப்பிடத்தக்களவில் இருந்தது. நோர்வே, மத்தியஸ்தம் வகித்து மேற்கொண்ட சில நடவடிக்கைகளை விமர்சித்தவர்களும், வௌிநாடுகளின் வகிபாகத்தை முழுமையாக நிராகரிக்கவில்லை. இலங்கையின் சூழலில் வெற்றிகரமான சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இதன் சில கூறுகள் அவசியம் என்பதை உண்மையில் உணர்ந்தமை மிகுந்த சுவாரஸ்யமானது என்றுள்ளது. இலங்கை அரசியலின் சமாதானப் பேச்சுவார்த்தை காலகட்டத்தின் நிகழ்வுகளை அலசி ஆராயும் முக்கிய நூலாக இவ் நூல் விளங்குவதுடன் சமாதான கால அரசியலையும் வரலாற்றையும் பேராசிரியர்,சிரேஷ்ட அரசியல் ஆளுமை,சட்டவியல் அறிஞர் என்னும் பன்முக ஆளுமை கொண்ட ஒருவரின் குறிப்பேட்டிலிருந்து அறிய விரும்பும் அரசியல் வரலாற்றுத் துறை கல்வியியலாளர்கள், இராஜதந்திரிகள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் என்னும் அனைவருக்கும் வரலாற்றின் முக்கிய அத்தியாயங்களை இந்த நூல் மீள் நினைவூட்டுகின்றது. ஆங்கிலமொழியிலான இந்த நூலின் ஆசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும் சட்டபீடத்தின் தகைசார் பேராசிரியருமாவார். ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், லண்டன் பல்கலைக்கழம் உள்ளிட்ட உலகின் பல புகழ்பூத்த பல்கலைக்கழகங்கள் அங்கீகரித்த இலங்கையின் புகழ்பூத்த கல்விமான்களில் இவர் ஒருவராக திகழ்கின்றார். வௌிவிவகாரம், நீதி, அரசியலமைப்பு விவகாரம், இன விவகாரம், தேசிய ஒருமைப்பாடு, ஏற்றுமதி அபிவிருத்தி, சர்வதேச வர்த்தகம் மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் நாட்டின் அமைச்சரவையில் பதவி வகித்த சிரேஷ்ட அரசியல் ஆளுமையாகவும் இவர் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://jaffnazone.com/news/53599
-
🕯️ சுனாமி நினைவு நாள்: நாளை 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகோள்! 🌊🇱🇰
21 ஆண்டுகள் கடந்தாலும் ஆறாத வடு - முல்லைத்தீவில் கண்ணீர் மல்க இடம்பெற்ற ஆழிப்பேரலை நினைவேந்தல் 26 December 2025 கடந்த 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு ஆழிப்பேரலை நினைவாலயத்தில் இன்று (26) உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. அந்தவகையில் உயிரிழந்தவர்களின் உறவுகள், தமது உயிரிழந்த உறவுகளுக்கு மலர் தூவி, தீபமேற்றி, உணவுப்பொருட்களைப் படையலிட்டு உணர்வுபூர்வமாக அஞ்சலிகளை மேற்கொண்டனர். அதேவேளை உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி மத வழிபாடுகளும் இடம்பெற்றிருந்தன. மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://hirunews.lk/tm/437718/a-scar-that-has-not-healed-even-after-21-years-a-tearful-remembrance-of-the-tsunami-that-occurred-in-mullaitivu
-
மலையகத்தை அழிக்கும் தமிழர்கள் | போரியல் ஆய்வாளர் அருஸ்
அண்மைய புயற்பேரழிவு மீட்சி மற்றும் சமகால அரசியல் தொடர்பான உரையாடற் காணொளியாதலால் இணைத்துள்ளேன் நன்றி - யுரூப் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
தையிட்டி திஸ்ஸ விகாரை போலியானது - வட இலங்கையின் சங்க நாயக்க தேரர்
புத்தன் அனைத்தையும் துறந்து பரிநிர்வாணம் அடைந்து போதித்தவற்றைக் குழிதோண்டிப் புதைத்த சிங்கள இனத்தில் இப்படியான நியாயக்குரல்கள் மிகஅரிதாகத் தோன்றி மறைவது தொடர்கதையானபோதும், அதனை சரியாகக் கையாளமுடியாத தரப்பாகப் பாதிக்கபபட்ட தமிழர் தரப்பு ஏமாந்தே நிற்கிறது.தேரருக்கு மாதந்தோறும் மக்கள் போராடுவதும் பிரச்சினையாக இருக்கிறது. அந்த மக்களின் போராட்டமே இவரைப் பேசவைத்திருக்கலாம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
தையிட்டியில் காணிகளை இழந்தவர்களுக்கு மாற்றுக்காணி அல்லது இழப்பீடு - அமைச்சர் சந்திரசேகரன்
ஆவணங்கள் இல்லாமற் போனதற்கும் மக்கள் சொந்த இடங்களை விட்டு குடிபெயர்ந்ததற்கும் யார் காரணம் என்பதையும் விளக்கலாம். அனுமதி பெறாமல் கட்டிய தனியார் கட்டிடங்களை இடிக்க மட்டும் உங்களுக்கு உரிமை சட்டம் உண்டா? யார் மோதல்களை உருவாக்குவது? தம்புள்ள நகரிலிருந்து முப்பது ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்திரகாளி அம்மன் ஆலயத்தை சட்டவிரோதமாக அமைக்கப்பட்டதாக பௌத்த பிக்குகள்செய்த முறைபாட்டுக்கமைய இரண்டாயிரத்து பதின்மூன்றாம் ஆண்டு ஒரே இரவில், முழுமையாக கோவிலை மூடுவதற்குமுன் செய்ய வேண்டிய மதச்சடங்குகளை செய்வதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கையையும் மறுத்து இடிக்கப்பட்டது ஏன்? எந்த கட்சிஆட்சியமைத்தாலும் , மதமானாலும் இனமானாலும் சட்டம் ஒன்றுதான், யாவருக்கும் சமந்தான். திருகோணமலையில் விட்ட தவறு இப்போ திஸ்ஸ விகாரையில் வந்து நிற்கிறது, இது தொடர்ந்து ஆட்சி கவிழ்ப்பில் முடியும். அவர்கள் சோதனையில் வென்று விட்டார்கள். அனுரா தோற்றுவிட்டார் இது ஒன்றே போதும் இவரின் தோற்றுப்போன அரசியலுக்கு. இந, மத விரோதிகளுக்கு அடிபணிந்து விட்டார். நீதிமன்றத்தையும் சட்டத்தையும் மதிக்கவில்லை, பின் மக்களுக்கு எப்படி முன்மாதிரி காட்டுவார்? முன்னைய அரசாங்கங்களை விமர்சிக்க, தண்டிக்க இவருக்கு தகுதியுண்டா?
-
கதை - 192 / "மெழுகுவர்த்தி கேள்வியை சந்தித்தபோது / When the Candle Met the Question"
எல்லோருக்கும் நன்றிகள்
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 72 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 72 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை எட்டாம் அத்தியாயம், பண்டு வாச தேவன் பட்டாபிஷேகத்தில், சிங்கபுரத்தில் [Sihapura or sinhapura] சிங்கபாகுவின் [Sihabahu or Sinhabahu] மரணத்துக்குப் பிறகு, அவனுடைய மகன் சுமித்த அரசன் ஆனன. மதுர நாட்டரசனுடைய மகளை அவன் மணந்து கொண்டான்.[Sumitta was king; he had three sons by the daughter of the Madda king./ -Madda = Skt. Madra, Means Madura, the capital city of the Pandyans] அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தனர்.அவர்களில் இளையகுமாரன் பண்டு வாச தேவன் [Pandu Vasudeva]. மேலும் விஜயனும் அவனது தோழர்களும் மணந்த பெண்கள், பாண்டிய தமிழ் மகளிர்கள். மகாவம்சத்தின் கெய்கரின் மொழி பெயர்ப்பிலும், முதலியார் விஜய சிங்கவின் மீளாய்விலும் ‘தெற்கேயுள்ள மதுரை’ என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாளி மொழியில் பாண்டியர் என்ற பெயர் பண்டு என வழங்கப்பட்டது. அதனால் தானோ என்னவோ பண்டு வாசதேவ, பண்டுகாபய முதலிய அரசபெயர்கள் காணப்படு கின்றன. விஜயன் 38 ஆண்டுகள் ஆட்சி செய்தார். மேலும் தனது, கடைசி காலத்தில், தனது சகோதரன் சுமித்தாவுக்கு [Sumitta] செய்தி அனுப்பினார், அவரை ஆட்சியை பொறுப்பேற்க வருமாறு அழைப்பு விடுத்தார்.விஜயனிடமிருந்து வந்த தூதர்கள் கடிதத்தை அரசனிடம் கொடுத்தனர். அந்தக் கடிதத்தை படிக்கக் கேட்டதும் அரசன் தன் மூன்று பிள்ளைகளையும் கூப்பிட்டு இவ்வாறு சொன்னான்: 'அன்புடையவர்களே! எனக்கோ வயதாகி விட்டது. எ ன து சகோதரனுக்கு உரியதான அழகிய இலங்கைத் தீவுக்கு உங்களில் ஒருவர் போக வேண்டும். அங்கே அவனுடைய மறைவுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்' என்றான். ஆனால் அந்த செய்தியை அனுப்பிய உடனேயே விஜயன் இறந்து விட்டார். மன்னன் சுமித்தாவிற்குப் பதிலாக, அவரது இளைய மகன் பண்டுவாசுதேவன், மன்னரின் அமைச்சர்களின் முப்பத்திரண்டு மகன்களுடன் பிச்சைக்காரத் துறவிகள் வேடத்தில் இலங்கைக்கு வந்தார். தீபாவம்சம் மன்னர் பண்டுவாசுதேவனை (கிமு 504-474) பண்டுவாச / Pandu Vasa என்று அழைக்கிறது. இது பாளி அல்லது பிராகிருத மொழியில் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர் என்று பொருள்படும். ஒருவேளை பாண்டிய அரசைச் சேர்ந்த அவரது தாயாரால் இருக்கலாம்?இருப்பினும், பண்டுவாச, விஜயனுடன் எவ்வாறு தொடர்புடையவர் என்பது தீபவம்சத்தில் கொடுக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்க. மகாவம்சத்தில் மட்டுமே அவர் விஜயனின் சகோதரரான சுமித்தாவின் இளைய மகன் என்று கூறுகிறது? . மன்னரின் அழைப்பின் பேரில் வந்த அவர்கள், ஏன் மாறுவேடத்தில் வர வேண்டும் என்று ஒருவர் யோசிக்கலாம்? ஆனால், எனோ, அப்படித்தான் வந்தார்கள். அதேநேரத்தில், மற்றொரு மன்னன் சக்க இளவரசர் பாண்டுவின் இளைய மகள் கச்சனா [Kaccana] அல்லது பத்தகச்சனா [Bhaddakaccana] என்ற இளவரசி, முப்பத்திரண்டு இளம் கன்னிப் பெண்களுடன் ஒரு கப்பலில் கடலில் மிதக்க விட்டிருந்தனர். முப்பத்திரண்டு மகன்களும் முப்பத்திரண்டு மகள்களும் ஒரே காலத்தில் நிகழ்வது, என்ன ஒரு தற்செயல் நிகழ்வு [What a coincidence]! அவர்களும் விஜயனைப் போல இலங்கையை அடைந்தனர்! பண்டுவாசுதேவ பத்தகச்சனை மணந்து இலங்கையின் அரசரானார். அதேபோல 32 மந்திரி மார்களின் மகன்களும், 32 பத்தகச்சனாவின் தோழிகளை மணந்தனர். சித்தார்த்தாவின் (கௌதம புத்தரின்) தந்தை சுத்தோதனனுக்கு (Suddhodana) நான்கு சகோதரர்கள் இருந்தனர். அவர்களில், அமிதோதனா [Amitodana] இளையவர் ஆவார். இவரின் மகன் தான் சக்க பாண்டு [Sakka Pandu]. எனவே புத்தரின் தம்பியின் பேத்தி தான் பத்தகச்சனா ஆகும். ஆகவே வலிந்து கட்டிக்கொண்டு புத்தருடனான உயிரியல் தொடர்பு இந்த அத்தியாயத்தில் ஏற்படுத்தப் பட்டுள்ளது. ஆனால், புத்தர் பிறந்த பூமியில், இதில் எதுவுமே அவர்களின் வரலாற்று நிகழ்வில் பதியவில்லை. மகாநாம தேரர் தனது மகாவம்சத்தின் மூலம் இலங்கையை 'தம்ம தீபமாக' [‘Dammadeepa’]’ சித்தரித்தார்; அதாவது, புத்தர் தர்மத்தைப் பாதுகாக்கவும் பிரச்சாரம் செய்யவும், தேர்ந்தெடுத்த நிலம் இது என்கிறார். அத்துடன் அவர், மகாநாம தேரர், (புத்தர் அல்ல), பௌத்தம் ஐயாயிரம் ஆண்டுகளாக மேலோங்கும் என்றும், சிங்களவர்கள் மட்டுமே அதைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கூறினார். தென்னிந்தியத் தமிழர்கள் மற்றும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் வாழ்ந்த தமிழர்கள் உட்பட இந்தியாவில் பௌத்தம் அதன் செல்வாக்கை இழக்கத் தொடங்கிய ஒரு நேரத்தில், மகாவிஹார துறவிகள், குறிப்பாக மகாநாம தேரர் பீதியடைந்திருக்கலாம், எனவே பௌத்தத்தைப் பாதுகாக்க, இலங்கையை ‘பௌத்த நாடாக’ மாற்ற முடிவு செய்திருக்கலாம். இவ்வாறு, சிங்கள-பௌத்த என்ற இந்த ஒரு ‘உச்ச’ இனத்தை உருவாக்க, பல்வேறு பழங்குடியினர் மற்றும் இனக்குழுக்களைச் சேர்ந்தவர்களை ஒன்றிணைத்து, சிங்கள இனத்தை அப்பொழுது தான் உருவாக்கினார்; எனவே, இந்த புது மொழியில் தேர்ச்சி பெறாத சராசரி பௌத்த பாமர மக்கள், திரிபிடகத்திற்கும் மகாவம்சத்திற்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொண்டிருக்க மாட்டார்கள். திரிபிடகம் என்பது மூன்று முக்கிய வகை நூல்களைக் கொண்டுள்ளது, அவை கூட்டாக பௌத்த நியதியை உருவாக்குகின்றன: சூத்திர பிடகம், வினய பிடகம் மற்றும் அபிதம்ம பிடகம் ஆகும். எனவே பௌத்த துறவிகள் மகாவம்சத்தைப் பிரசங்கித்தபோது, அந்தத் துறவிகள் கூறிய அனைத்தையும் புத்தரின் உண்மையான வார்த்தைகள் என்று பாமர மக்கள் ஏற்றுக்கொண்டனர். அன்று முதல் இந்நாட்டின் பௌத்த மதகுருமார்கள், பௌத்த தத்துவத்தை சிங்களவர்களின் ‘இன’மதமாக மாற்றி, மகாவம்சத்தின்படி அதனைப் பிரச்சாரம் செய்தனர். இவ்வாறாக, கடந்த 1400 முதல் 1500 வருடங்களாக, இந்த நாட்டில் பௌத்தர்கள், நமது பௌத்த மதகுருமார்களாலும், அவர்களின் 'பைபிள்' என்ற மகாவம்சத்தாலும் தவறாக வழிநடத்தப்பட்டு, வழிகாட்டப் பட்டு, பொய் சொல்லப்பட்டுள்ளனர்! Part: 72 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Chapter 8: This is about consecrating of Panduvasudeva. Vijaya ruled for 38 years, and sent a message to his brother Sumitta inviting him to come and take over the reign. Vijaya died soon after sending the message. Instead of Sumitta, his youngest son Panduvasudeva came to Lanka with thirty two sons of the ministers of the king in disguise of mendicant monks. One may wonder why they should come in disguise when they were on the invitation of the king! Coincidentally, Bahaddakaccana, the youngest daughter of another king Sakka Pandu was set to drift in sea on a ship along with thirty-two young maidens. What a coincidence to have thirty-two sons and thirty-two daughters! They too reached Ceylon, like Vijaya: what a coincidence! Panduvasudeva married Bahaddakaccana and became the ruler of Lanka. The Sakka Pandu was the son of Amitdodana who was the youngest brother of Suddhodana, the father of Gautama Buddha. Biological connection with Buddha is invented in this chapter. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 73 தொடரும் / Will follow துளி/DROP: 1955 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 72 https://www.facebook.com/groups/978753388866632/posts/33000992909549264/?
-
'தித்வா' சூறாவளி பேரனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 2.3 மில்லியன் மக்களில் 522,000 சிறுவர்களும் 263,000 முதியோர்களும் 21,200 கர்ப்பிணித்தாய்மார்களும் ஆவர்
'தித்வா' சூறாவளி பேரனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 2.3 மில்லியன் மக்களில் 522,000 சிறுவர்களும் 263,000 முதியோர்களும் 21,200 கர்ப்பிணித்தாய்மார்களும் ஆவர் Published By: Vishnu 26 Dec, 2025 | 05:17 AM (நா.தனுஜா) 'தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 2.3 மில்லியன் மக்களில் 522,000 சிறுவர்களும் 263,000 முதியோர்களும் 21,200 கர்ப்பிணித்தாய்மார்களும் ஆவர். அதுமாத்திரமன்றி இவ்வனர்த்தத்தினால் அதிக போசணை தேவைப்படும் நலிவுற்ற நிலையிலுள்ள ஐந்து வயதுக்குக் குறைந்த 281,830 சிறுவர்களும் 19,021 கர்ப்பணித்தாய்மாரும் 96,637 பாலூட்டும் தாய்மாரும் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கிப் பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பேரனர்த்தத்தினால் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் இலங்கை அனர்த்த முகாமைத்துவ ஆசிய, பசுபிக் கூட்டிணைவு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான முகவரகம், ஆசிய அனர்த்த முகாமைத்துவ தயார்நிலை நிலையம் ஆகிய 3 அமைப்புக்கள் இணைந்து மேற்கொண்ட மதிப்பீட்டில் கண்டறியப்பட்ட விடயங்கள் அடங்கிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் உள்வாங்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு: பாதிக்கப்பட்டோர் அவ்வறிக்கையிலுள்ள தரவுகளின் பிரகாரம் 'தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தமே கடந்த இரு தசாப்த காலங்களில் இலங்கையில் பதிவான மிகமோசமான மனிதாபிமான நெருக்கடியாகும். இவ்வனர்த்தம் காரணமாக நாட்டின் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 522,000 சிறுவர்கள், 263,000 முதியோர்கள் மற்றும் 21,200 கர்ப்பிணித்தாய்மார் உள்ளடங்கலாக சுமார் 2.3 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகள் அதேபோன்று இப்பேரனர்த்தத்தினால் மேல்மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களும் வடக்கு மாகாணத்தில் மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களும் மத்திய மலைநாட்டில் கண்டி, நுவரெலியா மாவட்டங்களும் மிகமோசமானப் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. உட்கட்டமைப்பு சேதம் அதேவேளை 16,000 கிலோமீற்றருக்கு மேற்பட்ட வீதிகள், 278 கிலோமீற்றருக்கு மேற்பட்ட புகையிரதப்பாதைகள் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் சேதமடைந்திருப்பதுடன், அதன்விளைவாக மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு கண்டி, கேகாலை, புத்தளம், கம்பஹா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையான வீடுகள் முழுமையாகவும், பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. வீடுகள் சேதமடைந்ததன் காரணமாக பெரும் எண்ணிக்கையானோர் இடம்பெயர்ந்து தற்காலிக பாதுகாப்பு நிலையங்களில் தங்கியுள்ளனர். அங்கும் தனியுரிமை, இருபாலாருக்கும் அவசியமான வசதிகள், சிறுவர்நேய சூழல் உள்ளிட்ட பாதுகாப்புசார் கரிசனைகள் நிலவுகின்ற அதேவேளை, மீண்டும் வீடுகளுக்குத் திரும்பியவர்கள், சேதமடைந்த வீடுகளை மீளப்புனரமைக்கவேண்டிய நெருக்கடிக்கு நிலைக்கு முகங்கொடுத்துள்ளனர். கல்வி 1339 பாடசாலைகளும், 2720 முன்பள்ளிகளும் சேதமடைந்திருப்பதன் விளைவாக நாடளாவிய ரீதியில் சுமார் 458,600 பாடசாலை மாணவர்கள் மற்றும் 68,000 முன்பள்ளி மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளன. உணவுப்பாதுகாப்பு பேரனர்த்தத்தினால் விவசாயம், மீன்பிடி மற்றும் ஏனைய வாழ்வாதாரத்துறைகள் சீர்குலைவடைந்திருக்கின்றன. அத்தோடு வாழ்வாதார தொழிலுக்கு அவசியமான உபகரணங்கள் சேதமடைந்தமை, தற்காலிக இடப்பெயர்வு மற்றும் சந்தை அடைவில் பாதிப்பு போன்ற காரணங்களால் 39 சதவீதமான குடும்பங்களுக்கு நாளாந்தம் போதியளவு உணவு கிடைக்கப்பெறவில்லை என மதிப்பிடப்பட்டுள்ளது. பயிர்ச்செய்கை நிலங்கள் சேதம் மற்றும் மீன்பிடித்துறை பாதிப்பு போன்ற காரணங்களால் பெருந்தொகை வருமான இழப்பு ஏற்பட்டிருப்பதுடன், அதனை முறையாகக் கையாள்வதற்கு உடனடி உணவு மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்படவேண்டும். போசணை மட்டம் அனர்த்தத்தின் விளைவாக ஐந்து வயதுக்குக் குறைந்த 281,830 சிறுவர்கள், 19,021 கர்ப்பணித்தாய்மார், 96,637 பாலூட்டும் தாய்மார் உள்ளடங்கலாக அதிக போசணை தேவைப்படும் நலிவுற்ற நிலையிலுள்ள தரப்பினர் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக புத்தளம், நுவரெலியா, கண்டி, கொழும்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இளம் சிறுவர்களின் எண்ணிக்கையும், அவர்கள் மந்தபோசணைக்கு முகங்கொடுக்கக்கூடிய வாய்ப்பும் உயர்வாகக் காணப்படுகின்றது. எனவே ஐந்து வயதுக்குக் குறைந்த சிறுவர்கள், கர்ப்பிணித்தாய்மார் மற்றும் பாலூட்டும் தாய்மாரை இலக்காகக்கொண்ட போசணைசார் உதவி வழங்கல் செயற்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும். https://www.virakesari.lk/article/234431
-
நைஜீரியாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதல் - ஐஎஸ் இலக்குகள் குறி வைக்கப்பட்டதாக டிரம்ப் அறிவிப்பு
நைஜீரியாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதல் - ஐஎஸ் இலக்குகள் குறி வைக்கப்பட்டதாக டிரம்ப் அறிவிப்பு பட மூலாதாரம்,US Department of Defense படக்குறிப்பு,அமெரிக்க பாதுகாப்புத் துறை வெளியிட்ட காணொளியில், ஒரு ராணுவக் கப்பலில் இருந்து ஏவுகணை ஏவப்படுவதை காண முடிகிறது. கட்டுரை தகவல் ஜாரோஸ்லாவ் லுகிவ் 26 டிசம்பர் 2025, 01:58 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வடமேற்கு நைஜீரியாவில் உள்ள இஸ்லாமிக் ஸ்டேட் (ஐஎஸ்) குழுவிற்கு எதிராக அமெரிக்கா 'சக்திவாய்ந்த தாக்குதலை' நடத்தியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட அவர், ஐஎஸ் குழுவை 'பயங்கரவாதக் கழிவுகள்' என்று விவரித்தார், 'முக்கியமாக அவர்கள் அப்பாவி கிறிஸ்தவர்களைக் குறிவைத்து கொடூரமாகக் கொல்வதாகவும்' குற்றம் சாட்டினார். அமெரிக்க ராணுவம் "பல கச்சிதமான தாக்குதல்களை நடத்தியதாக" டிரம்ப் கூறினார், ஆனால் கூடுதல் விவரங்கள் எதையும் அவர் வழங்கவில்லை. இதற்கிடையில், அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத், "நைஜீரிய அரசாங்கத்தின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்கு நன்றி. மெர்ரி கிறிஸ்மஸ்!" என்று கூறியுள்ளார். அதே சமயம், யூஎஸ்-ஆப்ரிக்கா கமாண்ட் (Africom), இந்தத் தாக்குதல் வியாழக்கிழமை (டிசம்பர் 25) அன்று சொகோட்டோ மாநிலத்தில் நைஜீரியாவுடன் இணைந்து நடத்தப்பட்டதாக அறிவித்தது. நைஜீரிய வெளியுறவு அமைச்சர் யூசுப் மைதாமா துகர் பிபிசியிடம், "இது பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கை" என்றும், "இதற்கு ஒரு குறிப்பிட்ட மதத்துடன் எந்த தொடர்பும் இல்லை" என்றும் கூறினார். பட மூலாதாரம்,AFP via Getty Images நைஜீரிய கிறிஸ்தவர்கள் குறிவைக்கப்படுகிறார்களா? டிரம்ப் வியாழக்கிழமை இரவு (டிசம்பர் 25) வெளியிட்ட தனது பதிவில், "எனது தலைமையிலான அமெரிக்கா, இஸ்லாமிய பயங்கரவாதம் செழிக்க அனுமதிக்காது" என்று கூறினார். நவம்பரில் விடுத்த எச்சரிக்கையில், எந்தக் கொலைகளைக் குறிப்பிடுகிறார் என்பதை டிரம்ப் கூறவில்லை. ஆனால் நைஜீரிய கிறிஸ்தவர்களுக்கு எதிராக இனப்படுகொலை நடப்பதாகச் சில அமெரிக்க வலதுசாரி வட்டாரங்களில் கடந்த சில மாதங்களாகத் தகவல்கள் பரவி வருகின்றன. வன்முறையைக் கண்காணிக்கும் குழுக்கள், நைஜீரியாவில் முஸ்லிம்களை விட கிறிஸ்தவர்கள் அதிகமாகக் கொல்லப்படுவதற்கான ஆதாரங்கள் இல்லை என்று கூறுகின்றன. நைஜீரியாவில் இந்த இரு மதங்களைப் பின்பற்றுபவர்களும் ஏறக்குறைய சமமான எண்ணிக்கையில் உள்ளனர். நைஜீரிய அதிபர் போலா டினுபுவின் ஆலோசகர் ஒருவர் அப்போது பிபிசியிடம் பேசுகையில், "ஜிஹாதி குழுக்களுக்கு எதிரான எந்தவொரு ராணுவ நடவடிக்கையும் கூட்டாக மேற்கொள்ளப்பட வேண்டும்" என்று கூறினார். "இஸ்லாமியவாத கிளர்ச்சியாளர்களைக் கையாள்வதில் அமெரிக்காவின் உதவியை நைஜீரியா வரவேற்கும்" என்று டேனியல் பவாலா கூறினார், அதேசமயம் "நைஜீரியா 'இறையாண்மை' கொண்ட ஒரு நாடு" என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் ஜிஹாதிகள் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் குறிவைக்கவில்லை என்றும், அவர்கள் அனைத்து மதங்களையும் அல்லது எந்த மதத்தையும் சாராத மக்களையும் கொன்றுள்ளதாகவும் அவர் கூறினார். நாட்டில் மத சகிப்புத்தன்மை இருப்பதாக அதிபர் டினுபு வலியுறுத்தியுள்ளார். "பாதுகாப்பு தொடர்பான சவால்கள் மதங்கள் மற்றும் பிராந்தியங்களைக் கடந்து மக்களைப் பாதிப்பதாக" அவர் கூறினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் முன்னதாக, "நைஜீரியாவில் கிறிஸ்தவ மக்களின் 'இருப்புக்கே ஆபத்து' இருப்பதாகக்" கூறிய டிரம்ப், நைஜீரியாவை 'சிறப்பு கவனம் அளிக்கப்பட வேண்டிய கவலைக்குரிய நாடு' என்று அறிவித்தார். எந்த ஆதாரமும் வழங்காமல், "ஆயிரக்கணக்கானோர் அங்கு கொல்லப்பட்டதாகவும்" அவர் கூறினார். இது அமெரிக்க வெளியுறவுத் துறையால் பயன்படுத்தப்படும் ஒரு வகைப்படுத்தல் முறை. 'மத சுதந்திரத்தை கடுமையாக மீறும்' நாடுகளுக்கு எதிராகத் தடைகளை விதிக்க இது வழிவகை செய்கிறது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அனைத்து மதச் சமூகங்களையும் பாதுகாக்க அமெரிக்கா மற்றும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயல்படத் தனது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக டினுபு கூறினார். நைஜீரியாவில் தொடரும் மோதல்கள் போகோ ஹராம் மற்றும் 'இஸ்லாமிக் ஸ்டேட் மேற்கு ஆப்பிரிக்க மாகாணம்' போன்ற குழுக்கள் வடகிழக்கு நைஜீரியாவில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அழிவை ஏற்படுத்தி, ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றுள்ளன - இருப்பினும் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் என்று உலகம் முழுவதும் நடைபெறும் அரசியல் வன்முறைகளை ஆய்வு செய்யும் குழுவான அக்லெட் (Acled) தெரிவிக்கிறது. மத்திய நைஜீரியாவில், நீர் மற்றும் மேய்ச்சல் நிலங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக முஸ்லிம் மேய்ப்பர்களுக்கும், பெரும்பாலும் கிறிஸ்தவர்களாக இருக்கும் விவசாயக் குழுக்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுகின்றன. பழிக்குப் பழி வாங்கும் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர் - ஆனால் இரு தரப்பினரும் குற்றங்களைச் செய்துள்ளனர். 'கிறிஸ்தவர்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை' என்று மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. கடந்த வாரம், சிரியாவில் ஐஎஸ் குழுவுக்கு எதிராக அமெரிக்கா 'பெரிய அளவிலான தாக்குதலை' நடத்தியதாகக் கூறியிருந்தது. அமெரிக்க மத்திய கட்டளையகம் (Centcom), "போர் விமானங்கள், தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் பீரங்கிகள் 'மத்திய சிரியா முழுவதும் பல இடங்களில் 70-க்கும் மேற்பட்ட இலக்குகளைத்' தாக்கின" என்று தெரிவித்தது. இதில் ஜோர்டானின் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpvdgjn98n7o
-
தையிட்டி திஸ்ஸ விகாரை போலியானது - வட இலங்கையின் சங்க நாயக்க தேரர்
தையிட்டி திஸ்ஸ விகாரை போலியானது - வட இலங்கையின் சங்க நாயக்க தேரர் Published By: Vishnu 26 Dec, 2025 | 01:18 AM ‘ராஜமகா விகாரை’ என பெயர்ப்பலகைகளை காட்சிப்படுத்தி, இராணுவத்தின் பங்களிப்புடன் காங்கேசன்துறை தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விகாரை போலியானது என வடக்கின் பிரதம சங்க நாயக்க தேரர் தெரிவித்துள்ளார். விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ள காணியின் உண்மையான உரிமையாளர்கள் அப்பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களே என்பதை ஏற்றுக்கொண்ட வட மாகாண பிரதம சங்கநாயக்க தேரர், அந்த உரிமையை உறுதிப்படுத்துவதற்கு ஜனாதிபதி தலையிடாவிட்டால், இனங்களுக்கு இடையில் மோதல்கள் வெடிக்கும் அபாயம் குறித்து எச்சரித்துள்ளார். தமிழ் மக்களுக்கு உறுதிப்பத்திரம் உள்ள காணிகளை யுத்தத்தின் மூலம் கையகப்படுத்தி நிர்மாணிக்கப்பட்டுள்ள விகாரை, உண்மையான திஸ்ஸ விகாரை அல்ல என நாகதீப புராண ரஜமகா விகாராதிபதியும் வட இலங்கையின் பிரதம சங்கநாயக்க தேரருமான நவதகல பதுமகித்தி திஸ்ஸ தேரர் கூறுகிறார். “உண்மையான திஸ்ஸ விகாரை தற்போது உள்ள போலியான திஸ்ஸ விகாரைக்கு அருகிலேயே அமைந்துள்ளது. அந்த திஸ்ஸ விகாரை நாகதீப விகாரைக்குச் சொந்தமானது. அதன் உரிமை நாகதீப விகாரையிடமே உள்ளது. ஆனால், இப்போது திஸ்ஸ விகாரை என அழைக்கப்படும் பகுதி காங்கேசன்துறை தையிட்டி பகுதியில் வசிக்கும் குடிமக்களுக்குச் சொந்தமானது. யுத்த காலத்தில் குடிமக்களின் காணிகளைக் கையகப்படுத்தி, சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்ட ஒரு இடத்தையே திஸ்ஸ விகாரை என்ற பெயரில் போலியான திஸ்ஸ விகாரையாக ஆரம்பித்துள்ளனர்.” ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வரும் தன்னைப்போன்று வேறு எந்த பௌத்தரும் இவ்விடயம் குறித்து அறிந்திருக்க மாட்டார்கள் என பதுமகித்தி திஸ்ஸ நாயக்க தேரர் ஒரு காணொளி உரையின் மூலம் தெரிவித்துள்ளார். இராணுவப் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம், காங்கேசன்துறை திஸ்ஸ ராஜமகா விகாரையின் விகாராதிபதி சத்தர்மகீர்த்தி சங்கைக்குரிய கிந்தோட்டை நந்தாராம தேரருக்கு, அமரபுர ஸ்ரீ கல்யாணவம்ச நிகாயவின் வட இலங்கையின் உப பிரதம சங்கநாயக்க பதவிக்கான ‘ஸ்ரீ சன்னஸ் பத்ர’ மற்றும் ‘விஜினி பத’ ஆகியவை புத்தசாசன, சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் தலைமையில் கொழும்பில் வழங்கி வைக்கப்பட்டதன் பின்னர், அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “53 வருடங்களாக நான் இந்த நாகதீப விகாரையில் இப்பிரதேசத்தின் தமிழ் மக்களுடனேயே வாழ்ந்து வருகிறேன். இந்தப் பிரதேசத்தில் உள்ள எமது சகோதர மக்கள் அனைவரும் நாகதீப விகாரையின் தேரர் யார் என்பதை அறிவார்கள். நாம் இதுவரை காலமும் ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் வாழ்ந்து வந்தோம்.” தற்போது வடபுலத்துக்கு வெளியே இருந்து வரும் தேரர்கள் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து விகாரைகளை நிர்மாணித்து வருவதை ஏற்றுக்கொண்ட வட இலங்கையின் பிரதம சங்கநாயக்க நவதகல பதுமகித்தி திஸ்ஸ நாயக்க தேரர், அந்த ‘செய்யத்தகாத வேலை’ தொடர்பில் பதற்றமடைய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். “தற்போது உண்மையில் தேரர்கள் வந்து தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து விகாரைகளை நிர்மாணித்து வருகின்றனர். எனவே, அதனை உண்மையில் செய்யத்தகாத ஒரு வேலையாகவே நாம் பார்க்கிறோம். அதனால் மக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம். இந்த இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் நிதானமாகச் செயற்பட வேண்டிய தேவை உள்ளது. எனவே, அரசாங்கம் இதில் தலையிட்டுச் செயற்பட்டால் நல்லது என்பதுதான் எனது கருத்தாகும்.” உண்மையைக் கண்டறிந்து, திஸ்ஸ விகாரையின் காணிப் பிரச்சினையை சுமூகமான முறையில் கலந்துரையாடல் மூலம் தீர்த்துக் கொள்வது தொடர்பாக இதுவரையில் எந்தவொரு தேரரோ அல்லது அரசாங்கமோ நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் நாகதீப புராண ராஜமகா விகாராதிபதி நவதகல பதுமகித்தி திஸ்ஸ நாயக்க தேரர் குறிப்பிட்டுள்ளார். “அதேபோன்றுதான், நாகதீப விகாரையின் தேரராகிய என்னுடன் இது தொடர்பாகக் கலந்துரையாடினால், ஒரு முடிவுக்கு வந்து இது ஒரு போலியான இடமா? அல்லது உண்மையான இடமா என்பதை எம்மால் நிரூபிக்க முடியும். அரசாங்கமோ அல்லது எமது தேரர்களோ ஒருபோதும் அவ்வாறு என்னுடன் தொடர்பு கொண்டு செயற்படவில்லை. எனவே, அனைவரும் ஒன்றிணைந்து இதற்கு ஒரு தீர்வை காண்பதே எனது அடிப்படை நோக்கமாக உள்ளது. அப்போதுதான் எமது மக்களுடனும், இங்கு வாழும் சகோதர தமிழ் மக்களுடனும் எம்மால் இலகுவாக வாழ முடியும்.” திஸ்ஸ விகாரையின் காணிப் பிரச்சினையை துரிதமாகத் தீர்க்காவிட்டால், அது அப்பிரதேசத்திலுள்ள ஏனைய பௌத்த விகாரைகளிலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் தேரர் எச்சரிக்கிறார். “இப்படியே போனால் இந்த விகாரையை முன்னிலைப்படுத்தி இப்பிரதேசத்தில் உள்ள ஏனைய தேரர்களுக்கும், அதேபோல் இப்பகுதியில் உள்ள விகாரைகளுக்கும் ஒருபோதும் நிம்மதியாக இருக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, இந்தப் பிரச்சினையை நாம் சுமூகமான முறையில் தீர்ப்பதற்கு அரசாங்கத் தரப்பினரையும்— எமது ஜனாதிபதி அவர்களிடம் நான் வேண்டிக்கொள்வது, ஜனாதிபதி அவர்கள் இதில் முன்னின்று நாகதீப விகாரையின் தேரரையும், அதேபோன்று தையிட்டி பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களையும், காணி உரிமையாளர்களையும் அவர்களது உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன் அழைத்து வரச் செய்ய வேண்டும். அவர்களால் அதனை நிரூபிக்க முடியும், எனக்கும் உண்மையான திஸ்ஸ விகாரை எங்குள்ளது என்பதை நிரூபிக்க முடியும்.” இந்தக் காணிப் பிரச்சினை எதிர்காலத்தில் ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுப்பதற்கு முன்னதாக பேச்சுவார்த்தை மூலம் இதனைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேரர் இதன்போது மீண்டும் மீண்டும் ஜனாதிபதிக்கு அறிவுரை வழங்கியிருந்தார். “குறிப்பாக நான் ஜனாதிபதியிடம் மீண்டும் வேண்டிக்கொள்வது என்னவென்றால், இது குறித்து கலந்துரையாடித் தீர்வு காணுங்கள். இல்லையென்றால் எதிர்காலத்தில் இதைவிடப் பெரிய பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.” திஸ்ஸ விகாரையில் தமிழ் மக்கள் உரிமை கோரும் காணியை அவர்களுக்கு விடுவித்துக் கொடுப்பதே விகாராதிபதிக்கு ஒரு உண்மையான கௌரவமாக அமையுமென, திஸ்ஸ விகாரையின் விகாராதிபதிக்கு அமரபுர ஸ்ரீ கல்யாணவம்ச நிகாயவின் வட இலங்கையின் உப பிரதம சங்கநாயக்க பதவிக்கான பட்டயப்பத்திரம் மற்றும் கைவிசிறி ஆகியவற்றை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட சங்கைக்குரிய பலபிட்டியே சிறி சீவலி தேரர் பௌத்த அலுவல்கள் அமைச்சரும் பங்கேற்ற அந்த நிகழ்வில் (2025 டிசம்பர் 21) உரையாற்றுகையில் வலியுறுத்தியுள்ளார். “மீண்டும் மாதத்துக்கொரு தடவை அதுபோன்ற காணொளிகள் வெளிவராத வகையில், திஸ்ஸ விகாரைப் பிரச்சினையை— எமது அமைச்சரும் இங்கே இருக்கிறார்— எம்மால் தீர்க்க முடிந்தால் மிகவும் நல்லது. எந்தவொரு பிரச்சினைக்கும் இரண்டு பக்கங்கள் உள்ளன. எனவே, எம்மால் அந்த இரு தரப்பினருடனும் பேசி, எமது விகாரைக்குத் தேவையான போதுமான காணியை வைத்துக்கொண்டு ஏனையவற்றை விட்டுக்கொடுக்கலாம். தானம் வழங்கல் என்பது எமது பௌத்த தத்துவத்தில் உள்ள ஒரு விடயமாகும். அவ்வாறு எம்மால் விட்டுக்கொடுக்கக்கூடிய பகுதி ஏதேனும் இருந்தால், அதைக் கோரும் அந்தத் தமிழ் மக்களுக்கு ஒப்படைத்துவிட்டு, இந்தப் பிரச்சினையை எம்மால் தீர்க்க முடிந்தால், தேரர் நாயக்க பதவியை ஏற்ற நாளில் அது ஒரு பெரிய கௌரவமாக அமையும்.” திஸ்ஸ ராஜமகா விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி 2023 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில் விகாரைக்கு அருகில் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் மக்கள், சுமார் 14 தமிழ் குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார் 100 பரப்பு (6.2 ஏக்கர்) நிலத்தை இராணுவம் பலவந்தமாகக் கையகப்படுத்தி திஸ்ஸ விகாரையை நிர்மாணித்துள்ளதாகக் குற்றம் சுமத்துகின்றனர். “கி.மு. 3 ஆம் நூற்றாண்டு வரையிலான வரலாற்றைக் கொண்ட இந்த விகாரை, தேவநம்பிய திஸ்ஸ மன்னனால் நிர்மாணிக்கப்பட்டதாக வரலாற்றுக் குறிப்பு உள்ளது” என இராணுவம் தெரிவிக்கிறது. “காங்கேசன்துறை வரலாற்றுச் சிறப்புமிக்க திஸ்ஸ விகாரையின் புனரமைக்கப்பட்ட விகாரையின் தூபியை வைக்கும் புண்ணிய உற்சவம்” 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி நடைபெற்றதாக, 2023 ஏப்ரல் 29 ஆம் திகதி இலங்கை இராணுவம் தனது உத்தியோகபூர்வ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/234424
-
ஆல்கஹால் இல்லாத பியர், வைன் போன்ற பானங்கள் உடலுக்கு நல்லதா?
ஆல்கஹால் இல்லாத பியர், வைன் போன்ற பானங்கள் உடலுக்கு நல்லதா? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் கேடி ஜோன்ஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் சமீப ஆண்டுகளில் மது அல்லாத பானங்கள் மிகவும் பிரபலமடைந்து வருகின்றன. வைன், ஸ்பிரிட்ஸ், பியர் மற்றும் சிடர் எனப் பல வகையான பானங்கள் சந்தையில் உள்ளன. யூகவ் நடத்திய ஆய்வில் பிரிட்டனில் மது அருந்துபவர்களில் 38% பேர் குறைவான மது அளவு அல்லது மது இல்லாத பானங்களை விரும்புவதாக தெரியவந்துள்ளது. 2022-இல் இது 29% ஆக இருந்தது. மது அல்லாத பானங்கள் பிரபலமடைவது பலருக்கும் அதன் சுவை மீதான ஆர்வத்தினால் தானே தவிர மது அருந்த வேண்டும் என்கிற ஆசையால் அல்ல. அதில் பலரும் மது பானங்களை விட மது அல்லாத பானங்கள் ஆரோக்கியமானது எனக் கருதுவதாலும் வாங்குகின்றனர். மின்டெல் மேற்கோண்ட ஆய்வில் மது நுகர்வோரில் 15 முதல் 20% பேர் மது அல்லாத பானங்களை வாங்குவதில் கூடுதல் சுகாதாரப் பலன்கள் இருப்பதாக கருதுகின்றனர். மது அல்லாத பானங்கள் அதிகாலை தலைவலியிலிருந்து உங்களை காப்பதோடு கூடுதல் சுகாதார நன்மைகளுடன் வருகிறதா என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது. மது அல்லாத பானங்கள் பிரபலமடைவதற்கான காரணம் என்ன? அல்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் உணவியல் துறையில் மூத்த விரிவுரையாளரான மருத்துவர் காம்ஹியான் லோக், மது இல்லாமல் இரவைக் கழிப்பது தொடர்பான அணுகுமுறையில் கலாச்சார மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக நம்புகிறார். "மதுபான நுகர்வு மற்றும் அதன் சாத்தியமான விளைவுகள் பற்றிய அதிக தகவல்கள் கிடைப்பதால் மக்கள் மது அல்லாத பானங்களை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டனர். இதனால் எழுந்துள்ள தேவைகளை மதுபான நிறுவனங்கள் மூலதனமாக்குகின்றன," என்றார். எப்போதுமே சமூகத்தில் பழக விரும்புபவர்களுக்கு ஆல்கஹால் இல்லாத பானத்திற்கான தேவை இருந்ததாகக் கூறுகிறார் உணவியல் நிபுணரும் பிரிட்டிஷ் டயடிக் அமைப்பின் செய்தித் தொடர்பாளருமான டுவெய்ன் மெல்லோர். "முன்னர் அத்தகைய பானங்கள் சிறப்பானதாக இல்லை என்பது தான் பிரச்னையாக இருந்தது. ஆனால் மதுவிற்கு பின்பற்றப்படும் அதே குறைவான அழுத்தம் கொண்ட தயாரிக்கும் முறைகளால் தற்போது சிறந்த பியர் அல்லது வைன் தயாரிக்க முடியும்." என்று கூறுகிறார் டுவெய்ன். மது அல்லாத பானங்கள் தொடர்பாக முன்வைக்கப்படும் ஆரோக்கியம் தொடர்பான தகவல்கள் பற்றிய கட்டுக்கதைகளுக்கு வல்லுநர்கள் விளக்கம் அளிக்கின்றனர். மது அல்லாத பானங்களில் முற்றிலும் மது இருக்காதா? பட மூலாதாரம்,Getty Images "ஆல்கஹால் அல்லாத பானங்கள் என விளம்பரப்படுத்தப்படும் பானங்கள் அனைத்திலும் ஆல்கஹால் இல்லை என நாம் அனுமானிக்கக்கூடாது. ஏனெனில் அரசாங்கத்தின் பரிந்துரைகள் அவற்றை அனுமதிக்கின்றன," எனக் குறிப்பிடுகிறார் லோக். 'ஆல்கஹால் அல்லாத' பானம் எனக் குறிப்பிடப்படும் பானங்களில் 0.5% வரை ஆல்கஹால் இருக்கலாம் என ட்ரிங்க்அவேர் தெரிவிக்கிறது. அதே வேளையில் குறைந்த அளவில் ஆல்கஹால் கொண்ட பானங்களில் 1.2% வரை ஆல்கஹால் இருக்கலாம். மது அல்லாத பானங்களில் கலோரிகள் குறைவாக உள்ளனவா? "ஆல்கஹாலில் கலோரிகள் உள்ளன, எனவே மதுபானத்தோடு ஒப்பிடுகையில் மது அல்லாத பானங்களில் குறைந்த அளவிலே கலோரிகள் உள்ளன," என்கிறார் பிரிட்டிஷ் நியூட்ரிஷன் ஃபவுண்டேஷனின் ஊட்டச்சத்து விஞ்ஞானியான ப்ரட்ஜெட் பெனலெம். "ஆல்கஹாலில் ஒவ்வொரு கிராமில் ஏழு கலோரிக்கள்" இருப்பதாக மெல்லோர் குறிப்பிடுகிறார். எனினும் மது அல்லாத பானங்களில் கலோரிக்கள் இல்லாமல் இல்லை என்பதை நினைவில் கொள்வது முக்கியம் என்கிறார் பெனலெம். "அவற்றில் கலோரிக்கள் உள்ளன, அவை எந்த வகை பானம் என்பதைப் பொருத்து சர்க்கரை நிறைந்ததாகவும் உள்ளன. அந்த பானங்களை இனிப்பானதாக ஆக்க தேவையான அளவு சக்கரை அதில் இருக்கும்," என விளக்கினார். மது அல்லாத பானங்கள் கல்லீரலுக்கு நல்லதா? பட மூலாதாரம்,Getty Images "நீண்ட கால நோக்கில் அதிக அளவில் மது எடுத்துக் கொள்வது கல்லீரலை பாதிக்கும்," எனக் குறிப்பிடுகிறார் லோக். "இதிலிருந்து மதுவை நீக்கினால் அந்த தாக்கம் இருக்காது." என்றும் தெரிவித்தார். அதே வேளையில் சர்க்கரையின் அதிகப்படியான நுகர்வு மீது கவனம் செலுத்துகிறார் லோக். இது உணவு அல்லது பானங்கள், சிரப்களில் சேர்க்கப்படும் கூடுதல் சர்க்கரை, தேன், பழச்சாறு, காய்கறி சாறு மற்றும் ஸ்மூத்திகளில் உள்ள சர்க்கரைகளை உள்ளடக்கும். மது அல்லாத பானங்கள் மூலம் கூடுதல் அளவிலான சர்க்கரை நுகரப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக அவர் தெரிவித்தார். "அவற்றை கூடுதலாக எடுத்துக் கொண்டால் கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படலாம்." என்றார். மது அல்லாத பானங்கள் நமது பொது ஆரோக்கியத்திற்கு நல்லதா? ரெட் வைன் போன்ற ஆல்கஹால் குறைக்கப்பட்ட பானங்கள் இதய நோய் ஆபத்து போன்ற பிரச்னைகளை உருவாக்குவதற்கான சாத்தியங்களையும் நாம் பார்க்க வேண்டும் என்கிறார் லோக். சில மது அல்லாத பியர்களில் பி வைட்டமின்கள் இருக்கலாம் எனக் பெனலெம் கூறுகிறார். "பியர் போன்ற தயாரிப்புகளில் கவனத்தை ஈர்க்கக்கூடிய சில உள்ளீடுகள் இருக்கலாம்," என மெல்லோர் குறிப்பிடுகிறார். எனினும் ஆல்கஹால் அல்லாத பானங்கள் ஊட்டச்சத்துக்களின் முதன்மை ஆதாரமாக கருதப்படாது என்கிறார் பெனலெம். "உணவில் ஊட்டச்சத்து என நாம் பார்க்கிறபோது அவை ஆரோக்கியமான மற்றும் சமநிலைப்படுத்தப்பட்ட உணவு வகைகளைத் தான் குறிக்கும்." என்று அவர் தெரிவித்தார். அதிகப்படியான திரவம், சர்க்கரை மற்றும் அசிடிக் பானங்களால் பல் எனாமல்களில் ஏற்படும் ஆபத்துகளையும் மெல்லோர் சுட்டிக்காட்டுகிறார். சொந்தமாக தயாரிக்க முடியுமா? பட மூலாதாரம்,Getty Images சந்தைகளில் கிடைக்கும் மது அல்லாத பானங்கள் உங்களை கவரவில்லை என்றால் நீங்கள் சொந்தமாகவே ஒன்றை தயாரிக்கலாம். "மது பானங்களில் காட்டும் அக்கறை மற்றும் கவனத்தை மது அல்லாத பானங்களின் மீதும் காட்ட வேண்டும்," என்கிறார் காக்டெய்ல் நிபுணரான ப்ரிதேஷ் மோடி. "ஆப்பிள் சாறு, எலுமிச்சை மற்றும் இஞ்சி பியர் ஒரு சுவையான பானம் ஆகும்" என்கிறார் ப்ரிதேஷ். மேலும் அவர் கொம்புசா மற்றும் விர்ஜின் எஸ்ப்ரெஸோ மார்டினியைக் குறிப்பிடுகிறார். சைடர் வினிகர், ஆப்பிள் சாறு மற்றும் சோடாவை ஒரு மாற்றாகப் பயன்படுத்தலாம் என்றும் அவர் பரிந்துரைக்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz685wqv821o
-
🕯️ சுனாமி நினைவு நாள்: நாளை 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகோள்! 🌊🇱🇰
சுனாமி ஆழிப்பேரலை நினைவுகூரல் இன்று நாடளாவிய ரீதியில் விசேட நிகழ்வுகளுக்கு ஏற்பாடு Published By: Vishnu 26 Dec, 2025 | 01:15 AM (இராஜதுரை ஹஷான்) சுனாமி பேரழிவு மற்றும் பிற பேரிடர்களில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில், காலை 9.25 மணி முதல் காலை 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட வேண்டும்.காலியில் உள்ள 'பேரலிய சுனாமி நினைவிடத்தில்' நடைபெறும். காலை 8.30 மணி முதல் காலை 10 மணி வரை இந்த நிகழ்வை 11 மணி வரை விசேட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவில், நாட்டில் 35,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 5000 க்கும் மேற்பட்டோர் காணாமல் போனார்கள்.பல பில்லியன் கணக்கான மதிப்புள்ள சொத்துக்களும் அழிவடைந்தன. 2005 முதல், டிசம்பர் 26 ஒவ்வொரு ஆண்டும் 'தேசிய பாதுகாப்பு தினம்' என்று அறிவிக்கப்பட்டு, அன்றிலிருந்து நாட்டில் சுனாமி பேரழிவிலும் பல்வேறு பேரழிவுகளிலும் இறந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில், தேசிய பாதுகாப்பு தின நினைவு நாள் பொதுமக்களின் பங்களிப்புடன் அனுஸ்டிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, 'தேசிய பாதுகாப்பு' தின நிகழ்ச்சிக்காக, தித்வா சூறாவளி காரணமாக நாட்டில் நிலவும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, மாவட்ட அளவில் அனைத்து மத நிகழ்ச்சிகளையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்று டிசம்பர் 26 'தேசிய பாதுகாப்பு தினத்தின்' முக்கிய நினைவு நாள் காலியில் உள்ள 'பேரலிய சுனாமி நினைவிடத்தில்' நடைபெறும். காலை 8.30 மணி முதல் காலை 10 மணி வரை இந்த நிகழ்வை 11 மணி வரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 'தேசிய பாதுகாப்பு தினத்தை' முன்னிட்டு, சுனாமி பேரழிவு மற்றும் பிற பேரிடர்களில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில், தீவு முழுவதும் காலை 9.25 மணி முதல் காலை 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட வேண்டும். எனவே, தேசிய பாதுகாப்பு தினமான 2025 டிசம்பர் 26 ஆம் தேதி காலை 9.25 மணி முதல் காலை 9.27 மணி வரை, தீவு முழுவதும் சுனாமி பேரழிவு மற்றும் பல்வேறு பேரிடர்களில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துவதன் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு உணர்த்துமாறும், அன்றைய தினம் நடைபெறும் முக்கிய நினைவு விழா மற்றும் மாவட்ட செயலகங்களால் நடத்தப்படும். https://www.virakesari.lk/article/234423
-
ஆழிப்பேரலையின் நினைவலைகள்: 2004 சுனாமி தாக்கத்தை உணர்த்தும் புகைப்படத் தொகுப்பு
ஆழிப்பேரலையின் நினைவலைகள்: 2004 சுனாமி தாக்கத்தை உணர்த்தும் புகைப்படத் தொகுப்பு பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சுனாமி காரணமாக மெரீனா கடற்கரையிலிருந்து பல மீட்டர் தூரத்திற்கு கடல்நீர் உட்புகுந்த காட்சி. ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 26 டிசம்பர் 2004 அன்று இந்தோனீசியாவின் சுமத்ரா தீவு அருகே ஆழ்கடலில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக எழுந்த பேரலைகள் தாய்லாந்து, இந்தோனீசியா, மலேசியா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தின. 'சுனாமி' - 2004ஆம் ஆண்டிற்கு முன்பு தமிழக மக்களிடம் இது பிரபலமான வார்த்தை இல்லை. ஆனால், 2004ஆம் ஆண்டிற்கு பிறகு சுனாமி என்ற வார்த்தை தெரியாமல் காதில்பட்டாலும்கூட உள்ளூர ஏதோ ஒரு அச்சத்தை ஏற்படுத்தும், குறிப்பாக கடலோர பகுதிகளில் வசித்தவர்களுக்கும் வசிப்பவர்களுக்கும். சுனாமி தாக்கி இன்றோடு 21 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. தமிழ்நாடு மற்றும் பிற பகுதிகளில் சுனாமி தாக்கிய போதும், அதற்குப் பின்னர் ஏற்பட்ட சேதங்களையும் விளக்குகிறது இந்த புகைப்படத் தொகுப்பு. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,26 டிசம்பர் 2004, தாய்லாந்தில் சுனாமி அலைகள் கரையை நோக்கி வருவதைக் கண்டு வெளியேறும் சுற்றுலாப் பயணிகள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,தமிழக கடலோர பகுதிகளில் மீன்பிடிக்க உதவும் சிறிய படகுகள் முதல் கப்பல்கள் வரை அனைத்தும் கடுமையாக சேதமடைந்திருந்தன. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,தமிழகத்தை பொறுத்தவரையில் சுனாமி காரணமாக நாகப்பட்டினம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பட மூலாதாரம்,MCT / Contributor படக்குறிப்பு,சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பெண்மணி பட மூலாதாரம்,PRAKASH SINGH / Stringer படக்குறிப்பு,2004 சுனாமியால் தங்கள் வீடுகளை இழந்து தவித்த அக்கரப்பட்டி மீனவர் குடியிருப்பைச் சேர்ந்த மக்கள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2004 சுனாமியால் பாதிக்கப்பட்ட இலங்கை பட மூலாதாரம்,Paula Bronstein / Staff படக்குறிப்பு,இலங்கையில் ஏற்பட்ட ஆழிப்பேரலையில் தனது மூன்று சகோதரர்களைப் பறிகொடுத்த 12 வயது பாத்திமா நுஸ்ரத் பட மூலாதாரம்,Paula Bronstein / Staff படக்குறிப்பு,26 டிசம்பர் 2004 இல் ஏற்பட்ட சுனாமியில் தனது வீட்டையும் குடும்பத்தையும் இழந்த இலங்கை பெண்மணி பட மூலாதாரம்,U.S. Navy / Handout படக்குறிப்பு,இந்தோனீசியாவில் சுனாமியில் சேதமடைந்த பகுதிகளை அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டரிலிருந்து பார்வையிட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் பட மூலாதாரம்,STR / Stringer படக்குறிப்பு,தங்கள் குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்ததால், வீட்டை விட்டு வெளியேறும் இந்தோனீசிய கிராம மக்கள். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஆண்டு தோறும் டிசம்பர் 26 ஆம் தேதி சுனாமியில் உயிரிழந்தோரை அவர்களுடைய உறவினர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjrjwlv2n4wo
-
தையிட்டியில் காணிகளை இழந்தவர்களுக்கு மாற்றுக்காணி அல்லது இழப்பீடு - அமைச்சர் சந்திரசேகரன்
தையிட்டியில் காணிகளை இழந்தவர்களுக்கு மாற்றுக்காணி அல்லது இழப்பீடு - அமைச்சர் சந்திரசேகரன் 26 Dec, 2025 | 10:41 AM தையிட்டி திஸ்ஸ விகாரையால் காணிகளை இழந்த பொது மக்களுக்கு மாற்றுக்காணிகளை பெற்றுக் கொடுப்பது அல்லது இழப்பீடுகளை பெற்றுக் கொடுப்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு என கடத்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். அவரை தொடர்புகொண்டு வினவியவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தையிட்டி திஸ்ஸ விகாரை தனியார் காணிகளில் அமைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் ஏற்கிறோம். ஆனால் குறித்த விகாரை எமது ஆட்சிக்காலத்தில் அமைக்கப்படவில்லை என்பதும் அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆனால் அரசாங்கம் என்ற வகையில் குறித்த பிரச்சினையை நீடிக்காமல் முடிறுத்தவே எதிர்பார்க்கின்ற நிலையில் விகாரைக்காக காணிகளை இழந்த மக்களுக்கு உரிய மாற்றுக்காணிகளை வழங்குவது அல்லது தற்போதைய சூழ்நிலைக் கேற்ற அவர்களுக்கான இழப்பீடுகளை பெற்றுக் கொடுப்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு. இழப்பீடு அல்லது மாற்றுக்காணிகளை வழங்குவதற்கு கூட எத்தனை பேரிடம் ஆவணங்கள் சரியாக இருக்கிறது என்பது ஒருபுறம் இருக்க குறித்த பிரச்சனையை அரசியல் ரீதியாக மாற்றிக்கொண்டு செல்கிறார்கள். நாட்டின் மூவினங்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எமது அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் மதம் மற்றும் இனங்களுக்கு இடையில் மோதல்களை உருவாக்க முயற்சிக்கக் கூடாது. ஆகவே அரசாங்கம் திடமான ஒரு நிலைப்பாட்டில் இருக்கிறது. தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக காணிகளை இழந்த மக்களுக்கு இழப்பீடு அல்லது மாற்றுக்காணியே என்றார். https://www.virakesari.lk/article/234447
- This is Nane Chozhan/ நன்னிச் சோழன்
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
இதில் இணையமெங்கும் உள்ளவற்றை எடுத்து என்னால் முடிந்தளவு ஒரு முன்னோட்ட ஆய்வாக செய்துள்ளேன். ஆயினும் யாழ் பல்கலைக்கழகம் அல்லது மட்டு. பல்கலைக்கழகம் நித்திரையிலிருந்து எழுந்து எமது தீவிலுள்ள தமிழரின் கடற்கலங்கள் தொடர்பில் சிரத்தை எடுத்து ஆவணப்படுத்த வேண்டும். சரியான பெயர்கள், கலங்களின் காலம், கலங்களின் படிமங்கள் மற்றும் பாவிக்கப்பட்ட இடங்கள் என்பன சரியாக ஆவணப்படுத்தப்பட வேண்டும். "வரலாறு எனது வழிகாட்டி" என்பது தேசியத் தலைவரின் கூற்றாகும். அதற்கு இணங்கு நாம் எமது வரலாற்றை பாதுகாக்க வேண்டும். வரலாற்றை சரியாக ஆவணப்படுத்த தவறின் வரலாற்றை இழந்துவிடுவோம். ஆயுதவழிப் போர் முடிந்து இத்தனை ஆண்டுகளிற்குப் பிறகும் எமது தீவிலிருந்து கடற்கலங்கள் தொடர்பில் சரியான ஆய்வு வரலாறு வெளிவராமை கண்டிக்கத்தக்கதாகும். "எங்களின் தாயவள் சிந்திடும் நீரெல்லாம் தீயென மூழுமடா - வரும் சந்ததி இங்கினி தலைகுனியாமலே சரித்திரம் எழுதுமடா" இஃது முடிவுரை அல்ல... மேலும் தகவல் கிடைக்கும் போது இது நீட்டிக்கப்படும். அதுவரையில் உங்களிடமிருந்து விடைபெறுவது நன்னிச் சோழன். இடிகள் முழங்க, வெடிகள் முழங்க வருவேன் வருவேன் நானும்....
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
வள்ளம் தலைநகர் திருகோணமலை, தமிழீழம் படிமக்காலம்: ஆங்கிலேயர் காலம் "கோணமலையாள வேண்டும். - அந்தக் கோட்டை கொடியேற வேண்டும்."
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
வள்ளம் தலைநகர் திருகோணமலை, தமிழீழம் படிமக்காலம்: ஆங்கிலேயர் காலம் "திருமலை பகலினில் ஓரழகு இரவினி லேயிது பேரழகு அலைதரும் நீரழகு - இது தமிழரின் விடுதலைத் தலைநகரு!"
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
ஆஞ்செல்கை அ சங்கடம் மன்னார் வளைகுடா
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
கட்டுத்தோணி ஈழத்தீவு
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
பிளாவு திருகோணமலையில் பாவிக்கப்பட்ட பிளாவின் ஒரு விருத்தாகும்.
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
பிளாவு இது யாழில் பாவிக்கப்பட்ட பிளாவின் விருத்தாகும் (version). இவை தோணியின் கால்களாக (தொடுவை வள்ளம்) பாவிக்கப்பட்டதாக ஜேம்ஸ் இஃகோர்னெல் குறித்துள்ளார்.
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
பிளாவு சிங்களவருக்கும் தமிழருக்கும் பொதுவான கடற்கலம் இதுவாகும். தமிழர் பகுதிகளில் இதைக் கூடுதலாக மட்டு-அம்பாறையில் பாவிப்பவர்.
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
பட்டை மாரவில, புத்தளம் இதை சிங்களத்தில் மா-தெல் பருவா என்பர். இது சிங்களவருக்கும் தமிழருக்கும் பொதுவான கடற்கலமென்றாலும் இதை அதிகம் பாவிப்பது சிங்களவரே. காலி பேருவளையில் கிடைத்த மற்றொரு படிமம். இதில் இருப்பது சோனகர்கள்/ சிங்களவராவர். .