Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. காசாவில் போர் முடிவுக்கு வருகிறதா? : 251 பணயக்கைதிகளும் மீட்பு - இஸ்ரேல் அதிரடி அறிவிப்பு 27 January 2026 காசாவில், 843 நாட்களாக நீடிக்கும் போருக்கு மத்தியில், 251 பணயக் கைதிகளும் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இறுதியாக, இஸ்ரேலிய இராணுவ வீரர் ரான் கிவிலியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இதன் மூலம், காசாவில் இருந்த 251 பணயக் கைதிகளும், உயிருடனும் உடலங்களாகவும் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். இந்தநிலையில், அமெரிக்கா, எகிப்து, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் பங்களிப்புடன் சர்வதேச அமைதிகாக்கும் படை காசாவில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ட்ரம்பின் சர்வதேச அமைதி திட்டத்தின் மேற்பார்வையில் காசாவை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://hirunews.lk/tm/443029/is-the-war-in-gaza-coming-to-an-end-251-hostages-rescued-israel-announces-action
  3. யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு! இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் M. A. சுமந்திரன், முன்னாள் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான செலஸ்ரின் அவர்களின் வேண்டுகோளின் பேரில் நேற்று (26) யாழ்ப்பாணக் கோட்டையைப் பார்வையிட்டார். 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் கட்டிய இந்தக் கோட்டை, பின்னர் டச்சு மற்றும் பிரித்தானியர் காலனிய ஆட்சியில் விரிவுபடுத்தப்பட்டது. பல போர்களும், நீண்டகால அலட்சியமும் காரணமாக கோட்டை பெருமளவில் சேதமடைந்துள்ளது. கோட்டையின் உள்ளே அமைந்துள்ள Our Lady of Miracles (அற்புத மாதா) ஆலயம் காலப்போக்கில் ஏற்பட்ட சேதத்திலிருந்து இதுவரை சரியான முறையில் புதுப்பிக்கப்படவில்லை. ஆலயத்தின் சிதிலமடைந்த பகுதிகள் இன்றும் தெளிவாகக் காணப்படும் நிலையில் உள்ளது. புத்தசாசன அமைச்சின் கீழ் செயல்படும் தொல்லியல் துறை, கோட்டையின் உண்மையான எல்லைகளைத் தாண்டி பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள நிலங்களில் கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. யாழ்ப்பாண மாநகர சபைக்கு சொந்தமான முற்றவெளி விளையாட்டு மைதானம், முனீஸ்வரன் ஆலயம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், உள்ளூராட்சி அல்லது பொதுமக்களுடன் ஆலோசனை செய்யாது எல்லைச் சுவர்கள் அமைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளது. கோட்டையை வரலாற்று அடையாளத்துடன் மீளமைக்க அரசு, முன்னாள் காலனிய நாடுகள், யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் யாழ்ப்பாண மக்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், கோட்டை வடக்கு மாகாணத்தின் முக்கிய சுற்றுலா தளமாக மேம்படுத்தப்பட வேண்டும் சுமந்திரன் அவர்களிடம் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் செலஸ்டின் அவர்கள் வலியுறுத்தினார். கடந்த சில வாரங்களில் கோட்டையின் வரலாற்றுச் சுவர்களிலிருந்து தூரமாக அமைக்கப்பட்டிருந்த Concrete தூண்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். பல மத மற்றும் பல பண்பாட்டு மரபுகள் இணைந்துள்ள வரலாற்றுத் தளங்களை புத்தசாசன அமைச்சின் கீழ் உள்ள தொல்லியல் துறை நிர்வகிக்கக் கூடாது; சுயாதீனமாக செயல்பட வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. இக்கருத்துகளை சுமந்திரன் அவர்கள் பொறுமையாகக் கேட்டு, கோட்டையின் பராமரிப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடனும் கலந்துரையாடினார். https://adaderanatamil.lk/news/cmkw75asj04gto29n74r9shmn
  4. ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் போராட்டத்தால் பதற்றம் தமது சேவையை நிரந்தரமாக்குமாறு கோரி ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது, பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்று (27) காலை அவர்கள் "நீதியின் மரணம்" எனக் குறிப்பிட்டு சவப்பெட்டியொன்றை எரித்ததுடன், அதனை உடனடியாக அகற்றுமாறு பொலிஸார் அறிவித்தனர். அத்துடன், இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினால் நடைபாதை தடைப்படுவதாக பொலிஸார் தெரிவித்ததையடுத்து, போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டது. 7 வருடங்களாக பாடசாலைகளில் கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள தங்களை ஆசிரியர் சேவையில் நிரந்தரமாக்குமாறு வலியுறுத்தி, ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று நேற்று (26) காலை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தது. எவ்வாறாயினும், அதற்கு முறையான பதில் கிடைக்காத காரணத்தினால் போராட்டக் குழுவின் நான்கு உறுப்பினர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் போராட்டத்தால் பதற்றம்தமது சேவையை நிரந்தரமாக்குமாறு கோரி ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது, பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்
  5. Today
  6. 'கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்' தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம் மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து, முன்னேற்ற புதிய சட்டம் மற்றும் அதிகார சபை நிறுவப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். டித்வா சூறாவளியால் சேதமடைந்த மதத் தலங்களை புனரமைப்பதற்கான 'கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்' தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (27) முற்பகல் கம்பளை, தொரகல, பீகொக் ஹில் குடியிருப்பின் ஸ்ரீ போதிருக்காராம விஹாரையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். அனர்த்தத்தைத் தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத, கலாசார மற்றும் தொல்பொருள் தலங்கள் சேதமடைந்தன. அந்த இடங்களில் தேவையான புனரமைப்புப் பணிகளை உடனடியாகத் தொடங்கி அவற்றை முன்னர் இருந்த நிலைக்கு மீளக் கட்டியெழுப்புவதற்கான அனைத்து புனரமைப்புப் பணிகளையும், குறித்த இடங்களின் தொல்லியல் பெறுமதியைப் பாதுகாக்கும் வகையில் மகா சங்கத்தினர் உட்பட ஏனைய மதத் தலைவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து, முன்னேற்ற புதிய சட்டம் மற்றும் அதிகார சபை நிறுவப்படும் என்றும், கிராமப்புற வறுமையை ஒழிக்கவும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் அரசாங்கம் தற்போது அதிக பணிகளைச் செய்து வருவதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, முதலாம் தரத்திற்கான புதிய கல்வி மறுசீரமைப்புகள் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், வரலாற்றில் முதல்முறையாக, இந்த பெப்ரவரி மாதத்தில் தோட்டத் தொழிலாளர்கள் 1,750 ரூபா நாளாந்த சம்பளம் பெறுவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இவை அனைத்திற்கும் மத்தியில் சிறந்த மனித உறவுகளைக் கொண்ட ஒரு சமூகம் தேவை என்றும், அரச அதிகாரிக்கும் சேவைகளைப் பெற்றுக்கொள்ள வருகின்ற மக்களுக்கும் இடையிலான உறவு, மகா சங்கத்தினருக்கும் நிர்வாக சபைக்கும் இடையிலான உறவு, பாடசாலை ஆசிரியர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவு உட்பட இந்த அனைத்து உறவுகளும் இன்று வீழ்ச்சிக்கு உள்ளாகி விட்டன என்றும், நாட்டை சமூக ரீதியாகக் கட்டியெழுப்ப, இந்த உறவுகள் அனைத்தும் மீண்டும் சிறந்த முறையில் பேணப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியதுடன், மகா சங்கத்தினர் உட்பட மதத் தலைவர்களுக்கு இந்த விடயத்தில் பெரும் பங்கு உண்டு என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmkwc8s3m04hdo29nwrehsjm7
  7. பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஹெரோயினுடன் கைது. பதுளை பொலிஸ் பிரிவின் குற்றத் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் உத்தியோகத்தரிடமிருந்து 4 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அம்பகஸ்துவ பிரதேசத்தில் வைத்து அம்பகஸ்துவ பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர் சிக்கியுள்ளார். சம்பவம் தொடர்பில் அம்பகஸ்துவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2026/1461687
  8. யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களை சந்தித்த சர்வதேச இராஜதந்திரிகள்! பல்வேறு சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகளின் பங்களிப்புகாக யாழ் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாகப் பணியாற்றும் பெண் அரசியல் தலைவர்களை சர்வதேச இராஜதந்திரிகள் நேற்றையதின்பம் (26) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகர், மாலைதீவு உயர்ஸ்தானிகர் மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் UNDP துணை வதிவிடப் பிரதிநிதி ஆகியோரே குறித்த கலந்துரையாடலை முன்னெடுத்தனர். இதன்போது திறந்த மற்றும் சிந்தனைக்கான இடத்தை உருவாக்கல், பெண்களின் தலைமை பற்றிய உரையாடல், பொது அலுவலகங்களில் பெண்கள் நுழைவதற்கும் மற்றும் நிலைநிறுத்துவதற்கும் பெண்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் தடைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது பெண்களின் அரசியல் பங்கேற்பை முன்னேற்றுவதற்கு ஒத்துழைப்புக் கூட்டாண்மை மூலம் ஆதரவு அமைப்புகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவமும் உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1461683
  9. கத்தோலிக்க பாதிரியாரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஆறு பொலிஸ் அதிகாரிகளும் பணி நீக்கம்! கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, கம்பஹா பிராந்திய குற்ற விசாரணைப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் படைப்பிரிவைச் சேர்ந்த 6 பொலிஸ் அதிகாரிகளும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று (26) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். அத்துடன், 29 ஆம் திகதி அடையாள அணிவகுப்பு நடத்தவும் நீதவான் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையிலேயே குறித்த சந்தேகநபர்கள் 6 பேரும் இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கத்தோலிக்கப் பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள கொட்டதெனியாவவில் உள்ள ஒரு பண்ணையில் உதவி தோட்ட நிர்வாகியாகப் பணிபுரியும் அருட்தந்தை, திப்பிட்டிகொட தேவாலயத்தில் வழிபாட்டை நடத்திவிட்டுத் திரும்பும் போதே தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தின் போது குறித்த அருட்தந்தையை மோட்டார் சைக்கிள் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கடுமையாகத் தாக்கிய நிலையில் அவர் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2026/1461737
  10. சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டு பிரஜைகளிடம் வாகனங்களை கொடுப்பவர்களுக்கு சட்ட நடவடிக்கை. சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டு பிரஜைகளிடம் வாகனங்களை செலுத்த கொடுக்கும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மாஅதிபர் டபிள்யு. ஜி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். பொலிஸ் ஊடகப் பிரிவில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வீதி விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2026/1461768
  11. லட்டு கொடுத்து குழந்தையைக் கடத்திய நபர்! இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், தன் குழந்தையுடன் தன் தாய் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த பெண்ணொருவருக்கு மயக்க மருந்து கலந்த லட்டு கொடுத்து நபர் ஒருவர் அவரது குழந்தையைக் கடத்திச் சென்றுவிட்டதாக பொலிசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்திலுள்ள அலிஹார் என்னுமிடத்திலிருந்து தன் 10 மாதக் குழந்தையுடன் தன் தாய் வீடான ஜார்க்கண்டுக்கு புறப்பட்டுள்ளார் . இதனிடையே ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த ஒருவர் அவருக்கு லட்டு ஒன்றைக் கொடுத்துள்ளார். இது தன் தாய் தன் கைப்பட செய்தது என்று கூறிய அந்த நபர், உதவியாக அவரது குழந்தையையும் தன் கையில் வாங்கிவைத்துக்கொண்டுள்ளார். சிறிது நேரத்தில் சுயநினைவிழந்துவிட்ட பெண், பின்னர் நினைவு திரும்பும்போது அந்த நபரையும் அவரிடமிருந்த தன் குழந்தையையும் காணவில்லை என்பதை புரிந்துகொண்டுள்ளார். இந்நிலையில் தன் குழந்தையைக் கடத்திச் சென்றுவிட்டதாக, அப்பெண், பொலிசாரிடம் புகாரளித்துள்ள நிலையில், CCTV கமெராக்களை ஆய்வு செய்த பொலிசார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://athavannews.com/2026/1461761
  12. என்னுடைய கண்ணில், இந்த வீடியோ காட்சிகள் இன்னும் படவில்லை. 😂 சில வேளை... பொய் செய்தியாக இருக்குமோ. 🤣
  13. இந்தியா - ஐரோப்பிய ஒன்றியத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்! இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (Free Trade Deal) இறுதி செய்துள்ளன. இது இந்தியாவின் பரந்த சந்தையை ஐரோப்பிய ஒன்றியத்திற்குத் திறந்துவிடுவதுடன், உலகப் பொருளாதாரத்தில் சுமார் கால் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பிரம்மாண்டமான பொருளாதாரக் கூட்டமைப்பை உருவாக்குகிறது. பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதாகவும் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய வர்த்தகச் செயலாளர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய ஓன்றிய தலைவர் அன்டோனியோ லூயிஸ் சாண்டோஸ் டா கோஸ்டா ஆகியோர் டெல்லி வந்துள்ளதுடன், அங்கு இந்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவிலிருந்து வரும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் அழுத்தங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் உலகின் ஏனைய நாடுகளுடன் தங்களது மூலோபாய மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்த முனைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmkw9cw3d04h4o29n8adprqxz
  14. 2025 ஆம் ஆண்டின் சிறந்த பயணப் புகைப்படக் கலைஞர் போட்டிக்கான முடிவுகள் அறிவிப்பு! உலகின் பல்வேறு மூலைகளில் உள்ள கலாசாரம், இயற்கை மற்றும் வாழ்வாதாரப் போராட்டங்களை அழகியலோடு வெளிப்படுத்திய ‘ஆண்டின் சிறந்த பயணப் புகைப்படக் கலைஞர்’ போட்டிக்கான முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு விருது பெற்ற புகைப்படங்கள் வெறும் காட்சிகளாக மட்டுமன்றி, வலிமையான கதைகளைச் சொல்லும் சாட்சியங்களாக அமைந்துள்ளன. சுமார் 160 நாடுகளைச் சேர்ந்த அமெச்சூர் மற்றும் தொழில்முறை புகைப்படக் கலைஞர்களிடமிருந்து 20,000 க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. 23 ஆவது ஆண்டாக நடைபெறும் இந்தப் போட்டியில், அசல் தன்மைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட படங்களைத் தவிர்க்கும் பொருட்டு, வெற்றியாளர்கள் அனைவரும் தங்களது கெமராவின் அசல் கோப்புகளை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. 16 சர்வதேச நிபுணர்கள் அடங்கிய குழு, புகைப்படக் கலைஞரின் பெயர் தெரியாத வண்ணம் இந்தத் தேர்வை மிகவும் நேர்மையாக நடத்தியுள்ளனர். இந்த விருதுபெற்ற புகைப்படங்கள் விரைவில் லண்டனில் உள்ள கண்காட்சியில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன. https://athavannews.com/2026/1461615
  15. வெறுப்புணர்வின் வெளிப்பாடு லக்ஸ்மன் அனுராதபுரம் ஸ்ரீ மகா போதியைக் கடந்து வழிபாட்டிற்காக யாழ்ப்பாணத்திற்கு வருவது 'வெறுப்பு' காரணமாகவே, ஒவ்வொரு 'போயா' தினத்திலும் யாழ்ப்பாணத்தின் ஓரிடத்தில் கூடிக் காணி கேட்டுப் போராடுவதும் வெறுப்புணர்வினாலேயே, இவ்வாறு போராடுபவர்களுக்கு அந்த இடத்தில் உண்மையில் காணிகள் இருக்கிறதா என்று ஆராயுமாறு புலனாய்வுப் பிரிவினருக்குத் பணிப்புரை விடுத்துள்ளேன் என்று ஜனாதிபதி அனுர யாழ்ப்பாணத்தில் கூறியிருந்தார். இதிலுள்ள மூன்று விடயத்தையும் ஒன்றாகவும் பார்க்கலாம். வெவ்வேறாகவும் விளக்கத்துக்குட்படுத்தலாம். ஆனால் இது தையிட்டி விகாரையை மையப்படுத்தியதாக மட்டுமே நகர்த்தப்பட்டு வருகிறது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கொழும்பில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவைத் தவிர்த்து வடமாகாண பொங்கல் விழாவுக்காக யாழ்ப்பாணம் சென்றிருந்தமை பெரும் விமர்சனத்துக்குரியதாக இருந்தது. அங்கு நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய வெறுப்புணர்வு தொடர்பான விடயம் நாட்டில் களேபரமாக மாறி வருகிறது. பௌத்தமே முதன்மையான நாட்டில், விகாரைகளுக்கு வழிபாட்டிற்காக வருகை தரும் பௌத்தர்கள் மனதில் குரோத்துடன் வருகிறார்கள் என்ற கருத்துப்பட பேசியிருந்தார். அவர் இந்தக் கருத்தை வாபஸ் பெறுவாரா? இல்லையா? என்பது ஒருபுறம் இருக்க நாட்டின் முன்னாள் ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் உட்பட பல அரசியல் தலைவர்களும் ஜனாதிபதிக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் நிலை உருவாகி வருவதனை அவதானிக்க முடிகிறது. ஆனால்,ஒரு நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கிறது என்பது மாத்திரம் வெளிப்படை. அதேநேரத்தில், அவருடைய கருத்துக்கு ஆதரவான கருத்துக்களும் வெளிவராமலில்லை. அது அவர்களுடைய அரசியலாகவும் இருக்கலாம். ஆனால், பௌத்தம் என்பது மனித குலத்துக்கு, அதன் வாழ்வியலுக்குத் தேவையான பல்வேறு நல்ல விடயங்களைக் கற்பிக்கின்ற ஒருமார்க்கம் என்ற அடிப்படையில் ஜனாதிபதி தனது கருத்தை முன்வைத்திருக்கலாம் என்ற அளவீட்டில் கடந்து போய்விட யாரும் தயாரில்லாத நிலை காணப்படுகிறது. இது மிக மோசமானதே. இலங்கையின் கடந்த கால வரலாறு ஜே.வி.பியின் இரண்டு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளுக்கும். தமிழ் மக்களின் சுய நிர்ணயப் போராட்டத்துக்கும் உட்பட்டிருக்கிறது. ஜே.வி.பி. தமது போராட்டத்தில் தோற்று, மண்டியிட்டு தற்போது அரசியல் ரீதியாக நாட்டைக் கைப்பற்றியிருக்கிறது. அதே நேரத்தில், தமிழ் மக்களின் ஆயுத ரீதியான போராட்டம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையுடன் அரசியல் ரீதியான போராட்டம் தொடர்ந்த வண்ணமிருக்கிறது. இந்த நிலையில் ஜே.வி.பி. தலைமையில் நடைபெறுகின்ற தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் தலைவரான ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளியிடும் கருத்துக்கள் அரசாங்கத்தின் கருத்துக்களே என்ற வகையில் யாழ்ப்பாணத்தில் அவர் வெளியிட்ட கருத்தும் அரசின் கருத்தே என்பது மாத்திரம் உறுதியானது. அந்த வகையில்தான், ஜனாதிபதிக்கு எதிரான கருத்துக்கள் வெளியாவது, அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கும்படி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்வதும் நடைபெற்று வருகின்றன. நாட்டில் நடைபெற்ற 'அரகலய' போராட்டம் ஒரு ஜனாதிபதியைப் பதவியிலிருந்து தப்பியோட வைத்திருந்தது. அதன்பின்னர் இலங்கை வரலாற்றில் நடைபெறாத பாராளுமன்றத் தெரிவுமூலம் நாட்டுக்கு ஜனாதிபதி ஒருவர் தெரிவானார். பின்னர் யாரும் எதிர்பார்த்திராத வகையில் பெரும்பான்மை தேசியக் கட்சிகளை மேவியவகையில் ஜனாதிபதியாக ஜே.வி.பியின் தலைவரான அனுரகுமார திசாநாயக்க தெரிவானார். அவர் பெரும்பான்மையற்ற வகையில் தெரிவானார் என்பது வேறுகதை. அதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சியே பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்திருக்கிறது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்போம், புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம். ஊழலற்ற நாட்டை உருவாக்குவோம். போதையற்ற நாட்டை எதிர்கால சந்ததிகளிடம் கையளிப்போம் என பல கோசங்களுடன் ஆட்சியைப் பொறுப்பேற்ற தேசிய மக்கள் சக்தி ஒருவருடத்தைக் கடந்த ஆட்சியில் சற்றுத் தீவிரமாகச் செயற்படுவதாகவே மக்கள் உணரத் தொடங்கியிருக்கின்றனர். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அதிகாலையில் எழுந்து யாழ்ப்பாணத்தின் பிரதான வீதியில் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டார். சாதாரண மக்களுடன் உரையாடினார். இவையெல்லாம் சாதாரணமான செயற்பாடுகளாகப் போயின. அங்கு அவர் பேசிய பேச்சு விமர்சனத்துக்குள்ளானது. உண்மையில் ஜே.வி.பியின் செயற்பாடுகள் விமர்சிப்பதற்கும், ஆராய்வதற்கும் ஏற்ற வகையில் இருந்தாலும், சற்று வித்தியாசமுடனேயே இருக்கிறது என்று மக்கள் சிந்திக்கின்றனர். இருந்த போதிலும், ஏற்கெனவே அமைச்சுப் பொறுப்புக்களுடன் சிறிது காலம் இருந்த அனுபவம் உள்ளதாக ஜே.வி.பி. இருந்தாலும், தற்போதைய ஆட்சி சற்று வித்தியாசமானது என்பதனை அவர்கள் மறந்து விடுகிறார்களாக என்று எண்ணத் தோன்றுகிறது. அந்த ஒழுங்கில்தான், பௌத்தத்தை முதன்மைப்படுத்தியதான நாட்டில் ஜனாதிபதியும், அரசாங்கமும் அதனை அவமதிக்கிறது என்ற அரசியல் தரப்பினரது முன்வைப்புக்கள் தவறல்ல. ஆனால், இனவாதமற்ற, மத வாதமற்ற நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கம் கொண்ட இந்த அரசாங்கத்தின் செயற்பாட்டில் இந்த விமர்சனங்கள் பட்டை தீட்டலாக அமையக்கூடும். ஆனால், வங்குரோத்தாகியிருந்த நாட்டை, ஆட்சிக்கு வந்தவுடன் ஜனாதிபதி மீட்டெடுத்துவிட்டார் என்று கூறுமளவிற்கு நாடு மீட்சி பெறவில்லை என்பது மாத்திரம் உண்மை. காங்கேசன்துறை தையிட்டி திஸ்ஸ விஹாரைப் பிரச்சினை இன்னமும் முடிவுக்கு வரவில்லை. திருகோணமலையில் விகாரை அமைக்க முயன்ற பிக்குகள் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் தொல்பொருள் தரப்பினர் தமது அடையாளங்களை நிறுவி வருகின்றனர். அது பிரச்சினையாகிக் கொண்டும் இருக்கிறது. தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் இப்போது தொடங்கியதல்ல. இது கடந்த ஆட்சிக்காலத்திலேயே தொடங்கி விட்டது. தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிக்குள் அடாத்தாக அமைக்கப்பட்டதே அந்த விகாரை என்பது அம் மக்களது போராட்டம். அதேபோன்று, தொல்பொருள் சின்னங்கள் நிறுவுதலும் நாட்டின் அடிப்படைச் சட்டத்தின் அடிப்படையில் நடைபெறுகிறது. பல்வேறு இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டதும் கடந்த ஆட்சிக் காலங்களிலேயே ஆகும். இருந்தாலும் பிரச்சினைகள் இந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த இடத்தில்தான், வடக்கு கிழக்கில் பௌத்தத்தை நிலைநாட்டத் துடிக்கும் பிக்குகளினதும் பௌத்த மதவாதச் சிந்தனையும் தமிழ் மக்களது விடயத்துக்குள் உரசிக் கொள்கின்றன என்று கூறலாம். திஸ்ஸ விஹாரை என்பது கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலம் வரை செல்லும் நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு பௌத்த விகாரையாகும். தேவநாம்பியதிஸ்ஸ மன்னன் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்த விகாரை, கனிஷ்டதிஸ்ஸ, வோஹாரிகதிஸ்ஸ போன்ற மன்னர்களால் அபிவிருத்தி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொன்மை வாய்ந்த புனிதத்தலம் வடக்கின் யுத்த காலத்தில் பாழடைந்து போனது என்ற நிலைமையொன்று உருவாகிறது. இந்த விகாரை யுத்தக் காலத்திற்கு முன்னர் செயற்பாட்டில் இருந்ததா? என்ற கேள்வியும் இருக்கிறது. இருந்தாலும். இதற்கென ஒதுக்கப்பட்ட நிலம் ஒன்று இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் திஸ்ஸ விஹாரைக்குச் சொந்தமான காணி தொடர்பான ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாகவும் நாகதீப விகாரையின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய நவந்தகல பதுமகித்தி ஹிமி தெரிவித்திருக்கிறார். ஆனால், அவரே தற்போது வாகாரை அமைந்திருக்கும் இடம் அதற்குரிய இடமல்ல என்றும் கூறியிருக்கிறார். எவ்வாறானாலும், போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன திஸ்ஸ விகாரை விவகாரம் அரசாங்கத்தால் சுமுகமாகத் தீர்க்கப்பட்டேயாகவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றாலும், நாட்டில் பௌத்த மத்துக்கெதிராக ஜனாதிபதி கருத்து வெளியிட்டிருப்பதாக உருவாகியிருக்கும் பிரச்சினை திஸ்ஸ விகாரையால்தான் உருவானதென்று மட்டுப்படுத்திவிட முடியாது. இது காலங்காலமாக இருந்து வருவதேயாகும். அடிப்படையில் ஊட்டப்பட்டதாக இருக்கின்ற இந்த மனோநிலையை மாற்றியமைப்பதானது சிறு முயற்சியால் குறிப்பிட்ட காலத்தில் களைந்துவிடக்கூடியதல்ல என்பது உண்மையானதே. இருந்தாலும், வடக்கைப் பிரதானமாக மையப்படுத்தியதாகவே நகரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அரசியல் செயற்பாட்டில் வடக்கு மக்களின் மனங்களை வென்றால் தமிழ் மக்களின் மனங்களையும் வென்றுவிடலாம் என்பது ஒரு எடுகோளாகும். அந்தவகையில், நடைபெறும் ஒரு அரசியலாக ஜனாதிபதியின் இந்த பௌத்த்துக்கு எதிரான என்று சொல்கின்ற கருத்தையும் நாம் கடந்துவிட முயலவேண்டும். எவ்வாறானாலும், 2009இல் யுத்தம் முடிவடைந்த கையோடு இராணுவ முகாம் இருந்த காணியில் இராணுவத்தினரால் தையிட்டி திஸ்ஸ விஹாரை கட்டப்பட்டது. பௌத்த பிக்கு ஒருவரை அழைத்து வந்து அங்கே தங்க வைக்க இராணுவம் நடவடிக்கை எடுத்தது. இந்த நடவடிக்கை தேசிய ரீதியில் முக்கியமானது. திஸ்ஸ விஹாரையை மீண்டும் நிறுவுவது இராணுவத்தின் ஒரு தேசியப் பணியே தவிர, அது ஒரு வெறுப்புணர்வுச் செயலல்ல என்ற சிந்தனை பெரும்பான்மை மக்களிடம் இருக்கையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கருத்து அவருடைய அரசியலாலேயே முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும். இருந்தாலும் அந்தக் கருத்துக்கெதிராக உருவாகிவருகின்ற எதிர்ப்பலையானது வெறுப்புணர்வின் வெளிப்பாடென்றே முடிவுக்கு வரவும் வேண்டும். ஜனாதிபதி தனது கருத்தை வாபஸ் பெறுவாரா என்பதைப் பொறுத்தே அதற்கான முடிவும் கிடைக்கும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வெறுப்புணர்வின்-வெளிப்பாடு/91-371589
  16. மாணவனுடன் 3 ஆசிரியைகள் உல்லாசம்: வீடியோவால் சர்ச்சை கொழும்பில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலை மாணவ தலைவருக்கும், பாடசாலையில் கற்பிக்கும் மூன்று பெண் ஆசிரியர்களுக்கும் இடையிலான நெருங்கிய உறவு மற்றும் சமூக ஊடகங்களில் பரவும் உறவின் வீடியோ காட்சிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்விச் செயலாளர் நலகா கலுவேவா அப் பாடசாலையின் அதிபருக்கு பணித்துள்ளார். சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ காட்சிகள் குறித்து கல்வி அமைச்சு மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது என்றும் செயலாளர் கூறினார். சம்பவம் தொடர்பாக அதிபர் சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு, இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நலகா கலுவேவா கூறினார். அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை பெண் ஆசிரியர்களை இடைநீக்கம் செய்வதோ அல்லது வேறு எந்த ஒழுங்கு நடவடிக்கையோ எடுக்க முடியாது என்றும் செயலாளர் கூறினார். கொழும்பில் உள்ள அந்தக் கல்லூரியின் தலைமை மாணவர் என்று கூறிக்கொள்ளும் மாணவன், அவ்வப்போது அந்தக் கல்லூரியில் மூன்று பெண் ஆசிரியர்கள் மற்றும் மற்றொரு மாணவரின் தாயுடன் வீடியோ அழைப்புகளைச் செய்வதும், அவர்கள் நிர்வாணமாக பல்வேறு செயல்களில் ஈடுபடுவதும் போன்ற காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. https://www.tamilmirror.lk/செய்திகள்/மாணவனுடன்-3-ஆசிரியைகள்-உல்லாசம்-வீடியோவால்-சர்ச்சை/175-371627
  17. தடை செய்யப்பட்ட தொழிலை நிறுத்த கால அவகாசம் கோரி வடமராட்சி கிழக்கில் சில கடற்தொழிலாளிகள் போராட்டம்! adminJanuary 27, 2026 யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கடலில் உழவு இயந்திரத்தை பயன்படுத்தி கரை வலை தொழில் செய்ய தம்மை அனுமதிக்க வேண்டும் என கடற்தொழிலாளர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உழவு இயந்திரத்தில் இணைக்கப்பட்டுள்ள வீஞ்சு முறையிலான கரைவலைத் தொழிலை மேற்கொள்ள கடந்த காலத்தில் நீரியல்வளத் திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கத்தின் காலத்தில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனவும் , உழவு இயந்திரம் உள்ளிட்ட தொழில் உபகரணங்களை தாம் பல இலட்ச ரூபாய் செலவில் வாங்கியுள்ளமையால் , தமக்கு கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அதேவேளை , வடமராட்சி கடற்பகுதியில் , வெளிமாவட்டங்களை சேர்ந்த கடற்தொழிலாளர்கள் வாடி அமைத்து தங்கி நின்று, உழவு இயந்திரங்களை பயன்படுத்தி , கரை வலை தொழில் செய்வதனால் , வடமராட்சி கிழக்கு பூர்வீக கடற்தொழிலாளர்கள் பலர் கரைவலை இழுக்கும் தொழில் இழந்துள்ளனர் உழவு இயந்திரங்கள் ஊடாக கரை வலை தொழில் செய்யும் போது , அனுமதிக்கப்பட்ட தூரத்தினை விட அதிக தூரம் சென்று வலைகள் இடப்படுவதால் , அப்பகுதியில் தொழில் செய்யும் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதுடன் , இயந்திரம் மூலமான கரை வலை தொழிலால் , கடல் வளங்கள் அழிக்கப்படுவதுடன் , கடற்கரையில் உள்ள தாவரங்கள் கூட அழிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில் , இம்முறையே உழவு இயந்திரம் ஊடாக கரை வலை தொழில் செய்வதற்கு தடை விதித்து அதனை இறுக்கமாக கடற்தொழில் நீரியல் வளத்துறையினர் கண்காணித்து வருகின்றனர் இந்நிலையிலேயே உழவு இயந்திரம் ஊடாக கரை வலை தொழில் செய்வதனை நிறுத்த கால அவகாசம் கோரி சில கடற்தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2026/227571/
  18. பெரிய கண்டுபிடிப்பு. ஓய்வூதியம் கொடுக்கும் போது… ஊழல் செய்யாமலா இருக்கிறார்கள்.
  19. சுதந்திர தினத்தை “கரி நாள்” எனப் பிரகடனம் செய்து வடக்கு–கிழக்கில் போராட்டம்: பொதுமக்களை அணிதிரட்டும் யாழ். பல்கலை மாணவர்கள் Published By: Vishnu 27 Jan, 2026 | 03:56 AM இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ம் திகதியை கரி நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கில் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அதற்கு பொதுமக்களை அணி திரட்டி வலுச்சேர்க்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு இன்று சென்ற மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் அங்குள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கங்கள், பொது அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் எதிர்வரும் சில தினங்களுக்கு வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களுக்கும் சென்று போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் குறித்த கலந்துரையாடலை முன்னெடுக்கவுள்ளனர். தமிழர் தேசத்தின் மீது நூற்றாண்டு கடந்தும் சூழ்ந்துள்ள பேரினவாதத்தீயிலிருந்து தமிழர் தாயகத்தை காத்திடவும், தலைமுறைகள் தாண்டிய இனத்தின் இருப்பிற்காகவும் வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் குறித்த போராட்டம் நடைபெறவுள்ளது. https://www.virakesari.lk/article/237095
  20. ஓய்வூதிய கொடுப்பனவை இரத்து செய்தால் அரசியல்வாதிகள் ஊழல் மோசடியில் ஈடுபடுவார்கள் - உதய கம்மன்பில 26 Jan, 2026 | 06:20 PM (இராஜதுரை ஹஷான்) 1970ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் பாராளுமன்றத்துக்கு முன்பாக இருந்து ஐந்து ரூபா கடன் பெற்றார்கள். இதன் பின்னரே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்தால் அரசியல்வாதிகள் தமது எதிர்காலத்தை கருத்திற்கொண்டு ஊழல் மோசடியில் ஈடுபடுவார்கள் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சிக் காரியாலயத்தில் திங்கட்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, தவறான எடுத்துக்காட்டாகவே பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் பிரபல்யமான தீர்மானத்தை எடுத்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் தீர்மானம் ஏன் எடுக்கப்பட்டது? ஏனைய நாடுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கப்படுகிறதா? ஏன் என்பதை ஆராயாமல் ஊழலை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 1947 முதல் 1970 வரை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் 1970ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தார்கள். அதன் பின்னர் பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக இருந்து பாராளுமன்றத்துக்கு வருபவர்களிடம் ஐந்து ரூபா கடன் கேட்பார்கள். இதனை கண்டு தமது எதிர்கால நிலைமையின் அச்சுறுத்தல் மற்றும் ஊழல் ஆகியவற்றை கருத்திற்கொண்டு 1977ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதேபோல் சுதந்திர கல்வியின் தந்தையான கண்ணங்கர தான் வாழ்வதற்கு வழியில்லாமல் மாதாந்த கொடுப்பனவை வழங்குமாறு கோரி பிரதமர் டட்லி சேனாநாயக்கவுக்கு கடிதம் எழுதிய பிரபல்யமாக கதையும் உள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் அமைச்சரவை உறுப்பினராக இருந்த அமைச்சர் விமலா கண்ணங்கர வாழ்வில் இறுதி காலத்தில் வீட்டு வாடகை கூட செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். அவர் தமது சொந்த காணியை அரசாங்கத்துக்கு நன்கொடையாக வழங்கியிருந்தார். நாட்டுக்காக சேவையாற்றிய பலர் இன்றும் இந்த ஓய்வூதிய கொடுப்பனவில் தான் வாழ்கிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்தால் சேவையில் உள்ள போது அரசியல்வாதிகள் ஊழல் மோசடி செய்து எதிர்காலத்துக்கு தேவையான நிதியை சேகரித்துக் கொள்வார்கள். ஆகவே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்யும் தவறான தீர்மானத்தை எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/237078
  21. இந்தியா – இலங்கை உறவுகள் உலகளாவிய கூட்டுறவுக்கான முன்மாதிரி – குடியரசு தின உரையில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா 26 Jan, 2026 | 10:07 PM இந்தியா - இலங்கையின் நம்பகமான மற்றும் நெருங்கிய பங்காளி என்பதுடன் அபிவிருத்தி, ஒத்துழைப்பு, மின்சாரம், போக்குவரத்து, டிஜிட்டல் மயமாக்கல், பேரிடர் மீட்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் இந்தியாவின் தொடர்ந்த ஆதரவு எப்போதும் இருக்கும். இந்தியா – இலங்கை உறவுகள் இரு நாட்டு மக்களுக்கிடையிலான நட்பு, பொருளாதார மற்றும் பாதுகாப்பு கூட்டுறவுகளின் அடிப்படையில் மேலும் வலுப்பெறுகின்றன எனவும் இந்தியா–இலங்கை உறவுகள் உலகளாவிய கூட்டுறவுக்கான முன்மாதிரி எனவும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இன்று 26 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற 77வது இந்திய குடியரசு தின விழாவில், தலைமையேற்று உரையாற்றுகையிலேயே இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், வணக்கத்துக்குரிய மதகுருமார்களே, இன்றைய தினம் எமது நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருக்கும் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களே, பெருமதிப்புக்குரிய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளே, இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர்களே, ஆளுநர்களே, பாராளுமன்ற உறுப்பினர்களே மற்றும் நீதித்துறை சார்ந்த அதிகாரிகளே, இராஜதந்திர துறையினைச் சேர்ந்த சக அதிகாரிகளே, இலங்கை அரசாங்கத்தின் உயரதிகாரிகளே, வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களே, ஊடகவியலாளர்களே, இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் உட்பட இந்திய சமூகத்தை சேர்ந்த உறுப்பினர்களே, மதிப்புக்குரிய விருந்தினர்களே, சீமாட்டிகளே கனவான்களே, இனிய மாலை வணக்கம், நமஸ்கார், ஆயுபோவன், 77 ஆவது குடியரசு தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக இந்திய இல்லத்துக்கு வருகை தந்திருக்கும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றேன். இன்றைய தினம் எம்முடன் இணைந்து கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றி. உங்களது பிரசன்னம் மற்றும் உங்களது ஆதரவு ஆகியவையே எமது பலத்திற்கான மூலாதாரங்கள் ஆகும். ஓர் ஆழமான பங்குடமையை நோக்கி பணியாற்றுவதற்கு ஏனைய பிறகாரணிகளைக் காட்டிலும் இதுவே எமக்கு தைரியமூட்டுகின்றது. 1.4 பில்லியன் இந்தியர்கள் சார்பாக உங்களது நட்புறவுக்கும் பங்களிப்புக்கும் நான் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன். 76 வருடங்களுக்கு முன்னர் இன்றைய தினத்திலேயே இந்திய மக்கள் எமது அரசியலமைப்பை அங்கீகரித்திருந்தனர். அன்று முதல் நாம் பாரிய ஜனநாயக நாடாக வளர்ந்திருக்கும் அதேசமயம், உலக அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பாரிய பொருளாதாரமாகவும் உள்ளோம். இந்த வருடத்தின் குடியரசு தினத்தின் இரு தொனிப்பொருட்களாக வந்தே மாதரம் மற்றும் ஆத்ம நிர்பார் பாரத் ஆகியவை காணப்படுகின்றன. வந்தே மாதரம் சுதந்திரத்தின் சிந்தனைகளை கொண்டாடுகின்றது. ஆத்ம நிர்பார் பாரத் சுபிட்சத்துக்கான எங்களின் அபிலாசைகளை முன்கொண்டு செல்கின்றது. வந்தே மாதரம் இந்தியாவின் தேசிய பாடலாகும். இந்த பாடல் உருவாக்கப்பட்டமையின் 150 ஆண்டுகளை நாம் நினைவு கூறுகின்றோம். இந்தியாவின் சுதந்திர போராட்டத்தின் போதான சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஒருமித்த கோஷமாக அது அமைகின்றது. இந்திய தாய் பற்றிய எமது பெருமிதத்தின் வெளிப்பாடாகவும் இது காணப்படுவதுடன் இன்று கூட ஓர் உத்வேகத்தின் காரணியாகவும் உள்ளது. ஒரு தற்சார்பு இந்தியாவை கட்டி எழுப்புவதற்கான எங்களது எதிர்கால முயற்சிகளை குறிக்கும் ஒரு முன்னெடுப்பு ஆத்ம நிர்பார் பாரத் என்பதாகும். இது தனிமைப்படுத்தலை முக்கியத்துவப் படுத்தவில்லை பதிலாக துரிதமானதும் முழுமையான வளர்ச்சிக்கான ஓர் அபிலாசையாகும். உலகளாவிய ரீதியில் ஓர் நம்பத் தகுந்த பங்காளராவதற்கான திறன்களை உள்ளூரில் கட்டி எழுப்புவதையே இது குறித்து நிற்கின்றது. 2025 ஆம் ஆண்டில் இந்த இலக்கினை அடைவதற்காக, வரிகள் முதல் தொழில்துறை வரையிலும்; விண்வெளி முதல் பாதுகாப்பு மற்றும் அணு துறைகள் வரையிலும்; உட்கட்டமைப்பு முதல் உற்பத்தி துறை வரையிலும் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடு முதல் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் வரையிலும் நாங்கள் பல்வேறு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தோம். அது மட்டுமல்லாமல் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளில், இந்தியாவில் வர்த்தக நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்தல் மற்றும் அதற்குரிய தேவைகளை குறைத்தல் போன்ற தொடர்ச்சியான முயற்சிகளும் உள்ளடங்குகின்றன. ஸ்திரமான வளர்ச்சி, குறைவடைந்து வரும் வேலைவாய்ப்பின்மை மற்றும் குறைவடைந்து வரும் பண வீக்கம் ஆகியவற்றுடன் இந்தியா மிகச்சிறந்த தருணத்தில் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்நிலையில் 2025 ஆம் ஆண்டில் இந்தியா நான்காவது பொருளாதார நாடாக வருவதில் எந்தவிதமான அதிசயமும் இல்லை. அத்துடன் இந்த தசாப்தத்தின் நிறைவுக்கு முன்னதாக மூன்றாவது பாரிய பொருளாதார நாடாக வருவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். உலகளாவிய ரீதியில் நம்பகமான ஒரு பங்காளராக வருவதற்கான பொறுப்புணர்வின் மேம்பட்ட கடப்பாட்டுடன் இந்தியாவின் எழுச்சி இணைந்திருக்கின்றது. உலகளாவிய ரீதியில் ஒரு நம்பகமான பங்காளராக வருவதற்கான பொறுப்புணர்வின் மேம்பட்ட உணர்வினையும் கொண்டிணைந்ததாக இந்திய எழுச்சி காணப்படுகின்றது. விக்சித் பாரத் அல்லது வளர்ந்த இந்தியா என்ற இலக்கானது உலகுக்கான ஒரு நண்பன் அல்லது ஒரு விஸ்வ மித்ரா என்பவற்றுக்கான எங்களது நோக்குடன் ஒன்றிணைந்ததாகவே காணப்படுகின்றது. எங்கள் அயலுறவுக் கொள்கைகளை எடுத்துக் கொள்ளும் போது மகாசாகர் மற்றும் அயலுறவுக்கு முதலிடம் ஆகிய கொள்கைகளில் இந்த அணுகுமுறையானது பிரதிபலிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த வெளியுறவு கொள்கை நோக்கில் இலங்கைக்கு ஒரு விசேட இடம் உள்ளது. இந்த பிரிக்க முடியாத எங்களது பிணைப்பானது எங்களின் நாகரீக தொடர்புகள் மற்றும் புவியியல் ரீதியான அமைவிடம் ஆகியவற்றினால் மேலும் வலுவூட்டப்படுகின்றது. நாம் இன்று நம்பிக்கை நல்லெண்ணம் மற்றும் நட்புறவு ஆகியவற்றின் அபரிமிதமான மட்டங்களை அனுபவிக்கின்றோம். இது வெறுமனே எமது தலைவர்கள் இடையில் மட்டுமல்ல எங்களது மக்களிடையிலும் அவை அனுபவிக்கப்படுகின்றமையை காண முடிகின்றது. இந்தியா இலங்கை இடையிலான உறவுகள் அயலவர்கள் இடையிலான கூட்டுறவு பங்குடமைக்கான ஒரு உலகளாவிய மாதிரியாக வளர்ந்துள்ளது. 2025 ஏப்ரலில் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்கள் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயம் மற்றும் அதற்கு முன்னதாக 2024 டிசம்பரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயம் ஆகியவை இந்த பங்குடமைக்கான இலட்சிய வழித்தடத்தை உருவாக்கியிருந்தன. பௌதீக, டிஜிட்டல் மற்றும் சக்தி இணைப்புகள் எங்களது பங்குடமையின் முக்கிய காரணிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.அபிவிருத்திக்கான பகிரப்பட்ட அபிலாசைகள் மற்றும் பாதுகாப்புக்கான பொதுவான அர்ப்பணிப்பு ஆகியவை முக்கிய இலக்குகளாக வளர்ந்துள்ளன. இந்த பகிரப்பட்ட இலக்குகளை அடைவதற்காக கடந்த வருடம் நாம் மிகவும் கடுமையாக உழைத்துள்ளோம். மின் சக்தி வலையமைப்பு ஒருங்கிணைப்பு திட்டத்தில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சம்பூர் சூரிய மின்சக்தி திட்டத்தின் கட்டுமானம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல திருகோணமலையை ஒரு எரிசக்தி கேந்திர நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான பேச்சுகள் இந்தியா இலங்கை மற்றும் ஐக்கிய அரபு ராஜ்ஜியம் இடையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. பௌதிக உட்கட்டமைப்பினை நவீன மயப்படுத்துவதற்கு இந்தியா ஆதரவு வழங்கி வருகின்றது. மாஹோ - ஓமந்தை புகையிரத பாதையினை நவீன சமிக்ஞை முறைமையுடன் மேம்படுத்தும் திட்டம் தற்போது அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த தசாபத்தத்திலும் அதற்கு அப்பாலும் கவனத்தில் கொள்ளும்போது 500 கிலோமீட்டர் ரயில் பாதையினை மீளமைப்பதற்கு அல்லது புனரமைப்பதற்கு இந்தியா ஆதரவு வழங்கியுள்ளது. அத்துடன் 400 கிலோமீட்டர் ரயில் பாதைகளின் சமிக்கை தொகுதிகள் பொருத்தப்பட்டுள்ளன. காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்தும் திட்டம் வெகு விரைவில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. அதேவேளை காங்கேசன்துறை நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை தற்போது கிரமமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையிலான கப்பல் சேவையினை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை நாம் தற்போது மேற்கொண்டு வருகின்றோம். விமான சேவைகளை நோக்கும்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கிட்டத்தட்ட 180 வாராந்த விமான சேவைகள் நடைபெறுகின்றன. யாழ்ப்பாணம் மற்றும் சென்னை இடையிலான விமான சேவைகள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த வருடம் முதல் யாழ்ப்பாணத்துடனான இரண்டாவது பயண இடமாக திருச்சி இணைக்கப்பட்டது. எமது பங்குடமையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் பிரத்தியேக டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் அமுல்படுத்தலுடன் இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கல் பயணம் ஆரம்பமாக உள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு இலங்கையின் டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பின் ஒட்டுமொத்த செயற்பாடுகளை டிஜிட்டல் முறைமையூடாக ஆரம்பிக்க உதவும். நாட்டில் ரொக்கப்பணமற்ற கொடுக்கல் வாங்கல் முறைமைகளை கட்டி எழுப்புவதற்கான இலங்கையின் அபிலாசையானது இலங்கையில் UPI கொடுப்பனவு முறைமை அறிமுகம் செய்யப்பட்டதன் மூலம் ஆதரவளிக்கப்படுகின்றது. எதிர்காலத்துக்கு தயாரான ஒரு பங்குடமையை உருவாக்குவதற்காக நாங்கள் பணியாற்றுகின்றோம். செயற்கை நுண்ணறிவு உட்பட தொழில்நுட்பத்தின் புதிய வடிவங்களுக்கான வாய்ப்புகளை கடந்த வருடத்தில் நாம் உருவாக்கி இருக்கின்றோம். எங்களது புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் பெரு மூலதன நிறுவனங்கள் இலங்கையில் ஒரு நவீன புத்தாக்க கட்டமைப்பினை உருவாக்குவதற்கு ஆதரவு வழங்கி வருகின்றன. அது மட்டுமல்லாமல் எங்களது சிறந்த பொருளாதார ஒத்துழைப்பு தொடர்ந்து செழிப்படைந்து வருகின்றது. 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலா பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்திருக்கும் நிலையில் சுற்றுலா துறைக்கான பாரிய ஆதாரமாக தொடர்ந்து இந்தியா உள்ளது. அதேபோல கடந்த வருடம் இலங்கையின் ஏற்றுமதிக்கான இரண்டாவது பாரிய இடமாக இந்தியா பதிவாகியுள்ளது. இலங்கையின் பாரிய வர்த்தக பங்காளராகவும் நாம் தொடர்ந்து இருந்து வருகின்றோம். இந்திய முதலீடுகள் ஓர் அதிகரித்த செல்நெறியினை கொண்டிருக்கும் நிலையில் 2025 இல் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மொத்த முதலீடுகளில் கிட்டத்தட்ட ஐம்பது வீதம் இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்பட்டதாகும். அபிலாசைகளை கொண்டிருக்கும் சமூகங்களாக முழுமையானதும் சுபிட்சம் நிறைந்ததுமான ஓர் எதிர்காலத்தினை உருவாக்குவதில் ஏற்பட்டிருக்கும் எமது வெற்றியில் அபிவிருத்தி ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானதாகும். இலங்கைக்கான எமது அபிவிருத்தி ஒத்துழைப்பு 7.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படும் நிலையில் இதில் 850 மில்லியன் பெறுமதியானவை நன்கொடை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டவையாகும். எங்கள் அபிவிருத்தி ஒத்துழைப்பு இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களுக்கும் விரிவடைகிறது. தேவைப்படும் தரப்பினருக்கு நலன்களை பெற்றுக் கொள்ளும் நோக்குடன் மக்களை இலக்காகக் கொண்ட திட்டங்களிலேயே நாம் பணியாற்றி வருகின்றோம். கடந்த வருடத்திற்கு மேலாக பல்வேறு துறைகளையும் சேர்ந்த இலங்கையர்களுக்காக நாம் எமது பயிற்சி மற்றும் ஆளுமை விருத்தி திட்டங்களை விஸ்தரித்துள்ளோம். பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகள் வரையிலும் சிரேஷ்ட அதிகாரிகள் முதல் கணக்காய்வாளர்கள் மற்றும் நீதித்துறை சார்ந்த அதிகாரிகள் வரையிலும், ஊடகவியலாளர்கள் முதல் கைவினைஞர்கள் மற்றும் விவசாயிகள் வரையிலும் இவ்வாறான திட்டங்கள் விஸ்தரிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதன் மூலம் ஒவ்வொரு துறையையும் சேர்ந்த நிபுணர்கள் நன்மையடைந்து வருகின்றனர். இந்தியா, இலங்கையின் நம்பிக்கைக்குரியதும் நம்பகமானதுமான பங்காளி என நான் அடிக்கடி கூறி வருகின்றேன். டித்வா புயல் தாக்கிய போது மீண்டும் ஒருமுறை முதற்கண் உதவி வழங்கியவர்களாக நாம் இருந்துள்ளோம். இலங்கையை புயல் தாக்க ஆரம்பித்த அதே நாளில் நாம் சாகர் பந்து நடவடிக்கையை ஆரம்பித்திருந்தோம். கொழும்புக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஐ என் எஸ் விக்ராந்த் மற்றும் ஐ என் எஸ் உதயகிரி ஆகிய எங்களது கடற்படை கப்பல்கள் உடனடியாகவே நிவாரண உதவிகளை வழங்கியதுடன் மீட்பு நடவடிக்கைகளுக்கும் ஆதரவளித்திருந்தன. பின்னர் 1100 தொன்கள் அத்தியாவசிய நிவாரண பொருட்கள் எங்களால் விநியோகிக்கப்பட்டன. 14.5 தொன்கள் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உங்களால் வழங்கப்பட்டது. அத்துடன் 60 தொன்கள் சாதனங்களும் விநியோகிக்கப்பட்டன. போக்குவரத்து தொடர்புகளை மீளமைப்பதற்காக 228 தொன்கள் பெய்லி பாலங்கள் வான் மார்க்கமாக கொண்டுவரப்பட்டன. இந்திய விமான படையின் எம்ஐ 17 உலங்கு வானூர்திகள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை அணியினர் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். கண்டியருகில் இந்திய ராணுவத்தால் அமைக்கப்பட்ட களமருத்துவனை மூலமாக கிட்டத்தட்ட 8,000 பேர் அவசர சிகிச்சை வசதிகளை பெற்றுக் கொண்டிருந்தனர். வான்மார்க்கமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருந்த இரண்டு BHISHM அவசர மருத்துவ பராமரிப்பு அலகுகள் மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டிருந்த மாவட்டங்களில் பயன்படுத்தப்பட்டன. ஒட்டுமொத்தமாக நோக்கும் போது எமது பதிலானது துரிதமாகவும் உடனடியாகவும் பரந்தளவிலும் வழங்கப்பட்டிருந்தது. ஒரு பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அயலுறவின் உள்ளுணர்வு ஆகியவற்றின் வழிகாட்டலில் எந்தவித நிபந்தனைகளுமின்றி இவை முன்னெடுக்கப்பட்டன. டித்வா புயலின் பின்னர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் சு. ஜெய்சங்கர் அவர்கள் பிரதமர் அவர்களின் விசேட தூதுவராக இலங்கைக்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். எங்களின் கூட்டொருமைப்பாட்டினை வெளிப்படுத்துவதற்காகவும் 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி பொதியினை அறிவிப்பதற்காகவும் அந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது. டித்வா புயலுக்கு பின்னரான காலப்பகுதியில் இலங்கையின் மீள கட்டியெழுப்புதல் முயற்சிகளுக்கு ஆதரவினை வழங்கும் வகையில் இந்த பொதி அறிவிக்கப்பட்டது. இதன்கீழ் பின்வரும் ஐந்து பரந்த துறைகள் உள்ளடங்குகின்றன. · வீதிகள், ரயில் பாதைகள் மற்றும் பாலங்கள் ஆகியவற்றின் மீள் நிர்மாணம் மற்றும் புனரமைப்பு. · வீடுகள் நிர்மாணம் மற்றும் குடிநீர் விநியோகம் · சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளுக்கான ஆதரவு · விவசாயம் மற்றும் கால்நடைகள் துறைக்கான ஆதரவு; மற்றும் · சிறந்த பேரிடர் மீட்பு மற்றும் தயார் நிலையினை நோக்கி செயற்படுதல் இந்தப் பொதியின் பயன்பாடானது அதனை நிறைவேற்றுதல் மற்றும் அதன் தாக்கங்களில் தங்கி உள்ளது என்பதனை நாங்கள் நன்கறிவோம். இத்திட்டங்களை உரிய காலப் பகுதியில் அமல்படுத்துவதனை உறுதிப்படுத்துவதற்காக நாம் இலங்கை அரசாங்கத்துடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றி வருகின்றோம். இத்திட்டங்களின் அமுலாக்க பணிகள் ஏற்கனவே ஆரம்பித்திருப்பதனை நான் மகிழ்ச்சியுடன் அறிய தருகின்றேன். குறிப்பாக மிகவும் அவசர தேவைகளாக காணப்பட்ட பாலங்கள் மற்றும் புகையிரத மார்க்கங்களை மீளமைத்தல், வீடுகள் மற்றும் மருத்துவமனைகளை வேறு இடங்களில் அமைத்தல் ஆகியவை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட பணிகளாகும். எதிர்கால இயற்கை பேரிடர்களை தயார் நிலையுடன் எதிர்கொள்வதற்கான இலங்கையின் செயற்பாடுகளை மேம்படுத்தும் திட்டங்கள் குறித்த கலந்துரையாடல்கள் ஏற்கனவே நடைபெற்றுள்ளன. புவியியல் ரீதியாக மிகவும் நெருக்கமான அமைவிடத்தினை நாம் கொண்டிருக்கும் நிலையில் பாதுகாப்பு மற்றும் பாதுகாவல் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தினை நாம் மிகைப்படுத்த முடியாது. எங்கள் அயல்பிராந்தியங்களில் பல்தேசிய குற்றவாளி அமைப்புகள் மற்றும் சட்ட விரோதமான செயல்பாடுகளை மேற்கொள்பவர்கள் மீதான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது காணப்படும் ஒத்துழைப்புகளில் இது வெளிப்படையாக உள்ளது. அதேபோல கடல் ரீதியான பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் எங்களது கூட்டு நடவடிக்கைகளிலும் இது வெளிப்பட்டுள்ளது. டித்வா புயலின் போது நாம் எதிர்கொண்டிருந்த சவால்கள் சாட்சியங்களாக காணப்படும் நிலையில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட அல்லது இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும்போது அந்த தேவை அதிக அளவில் உணரப்பட்டது. இந்நிலையில் அவற்றுக்கான களங்கள், பயிற்சிகள் மற்றும் கூட்டு நடவடிக்கைகள் ஊடாக இலங்கையின் பாதுகாப்பினை வலுவாக்குவதிலும் இது மிக முக்கியமானதாகும். குறிப்பாக பேரிடர் தணிப்பு மற்றும் நிவாரணமும் புனர்வாழ்வும் ஆகியவற்றில் இலங்கையின் திறன்களை கட்டி எழுப்புதல் போன்றவையும் இதில் உள்ளடங்குகின்றன. எனது உரையை நான் நிறைவு செய்வதற்கு முன்னர் உங்களது இயல்பான மக்கள் மக்கள் தொடர்புகள் குறித்து நான் கட்டாயம் குறிப்பிட்டே ஆக வேண்டும். என்னை பொறுத்தவரையில் எங்களிடையிலான உறவுகளில் இது மிகவும் விசேடமான அம்சமாகும். எங்களின் வரலாறு, மொழி, கலாச்சாரம் மற்றும் நம்பிக்கைகள் ஆகியவற்றை போலவே, கிரிக்கெட் மற்றும் உணவுகள், யோகா மற்றும் ஆயுர்வேதம், நடனம் மற்றும் இசை போன்றவற்றுக்கான எமது ஆர்வமானது பகிரப்பட்ட ஒன்றாகும். இராமாயண சுவடாக இருந்தாலும் சரி, பௌத்த மத தடங்களாக இருந்தாலும் சரி, அது நவீன காலத்தில் ஆழமடைந்து வரும் நமது புராதன தொடர்பைப் பற்றிப் பேசுகின்றது. அடுத்த மாத ஆரம்பத்தில், கங்காராமை விகாரையில் புத்த பெருமானின் தேவ்னி மோரி சின்னங்கள் தரிசனத்துக்காக காட்சிப்படுத்தப்படும்போது, பல நூற்றாண்டுகளாகப் பரிமாற்றங்கள் மற்றும் தொடர்புகள் மூலம் கட்டமைக்கப்பட்ட நமது உறவின் இந்த தனித்துவமான தன்மையை அது மீள உறுதிப்படுத்தும். இது நமது உறவுகளை ஏனையவற்றைப் போலல்லாமல் பிரத்தியேகமான ஒன்றாக உருவாகின்றது. பொதுவான சுபீட்சம் மற்றும் நல்வாழ்வின் எதிர்காலத்தை உருவாக்க நமது வரலாற்றின் இந்த செல்நெறியுடன் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொள்வோம். இந்த கூட்டு முயற்சியில் உங்கள் ஆதரவையும் ஒத்துழைப்பையும் நான் எதிர்பார்க்கிறேன். ஜெய்ஹிந்த். ஜெய் இந்தியா இலங்கை மைத்ரி! நன்றி. பஹுத் பஹுத் தன்யாவத். நன்றி . போஹமஸ் துதி இவ்வாறு மேலும் உரையாற்றினார். https://www.virakesari.lk/article/237088
  22. டி20 உலகக்கோப்பையை புறக்கணித்தால் பாகிஸ்தான் நெருக்கடியில் தள்ளப்படுமா? பட மூலாதாரம்,AFP via Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அடுத்த மாதம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்பது தொடர்பான அனைத்து வாய்ப்புகளும் கைவசம் இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃபைச் சந்தித்த பிறகு பேசிய அவர், இந்த விவகாரத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமை அல்லது அடுத்த திங்கட்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். "பிரதமருடனான சந்திப்பு நல்லபடியாக இருந்தது. ஐசிசி விவகாரம் பற்றி அவரிடம் விளக்கினேன். அனைத்து வாய்ப்புகளையும் கைவசம் வைத்துக் கொண்டு இதனை தீர்க்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்," என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டி20 உலக கோப்பை தொடரிலிருந்து வங்கதேசம் நீக்கப்பட்டதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விமர்சித்திருந்தது. பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்க உள்ள உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் ஆடும் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடக்கின்றன. இந்தத் தொடரில் வங்கதேசம் சேர்க்கப்படுவதற்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்திருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் இந்தத் தொடரில் கலந்து கொள்ளுமா என்பது உறுதியற்ற நிலையில் இருக்கிறது. பாகிஸ்தான் அரசு அதுகுறித்து முடிவு எடுக்கும் என மொஹ்சின் நக்வி கூறியுள்ளார். பட மூலாதாரம்,X படக்குறிப்பு,பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃபை சந்தித்த புகைப்படத்தை மொஹ்சின் நக்வி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். டி20 உலகக்கோப்பையை பாகிஸ்தான் புறக்கணிக்குமா? மொஹ்சின் நக்வியின் கருத்தால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கோபமடைந்துள்ளதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்துள்ள செய்தியின்படி, இந்தத் தொடரில் விளையாட பாகிஸ்தான் மறுத்தால் ஐசிசி கடுமையான நடவடிக்கை எடுக்கலாம். வங்கதேசம் நியாயமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும், இந்தத் தொடரில் விளையாட அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் மொஹ்சின் நக்வி பேசியதாக பாகிஸ்தான் செய்தித்தாளான டான் தெரிவிக்கிறது. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது இந்திய தங்கத்தை விட துபை தங்கம் அதிக மஞ்சள் நிறத்தில் பளபளப்பாக தோன்றுவது ஏன்? இரண்டில் எது சிறந்தது? அபிஷேக் சர்மாவின் ஆட்டம் பார்த்து வியந்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கூறுவது என்ன? டி20 உலகக் கோப்பையில் வங்கதேசம் விலகல் - இந்தியாவை குறிப்பிட்டு பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பேசுவது என்ன? தன்னைத்தானே சுத்தப்படுத்தும் உடல் – நீங்கள் 5 எளிய உதவிகள் செய்தால் போதும் End of அதிகம் படிக்கப்பட்டது "ஐசிசி வாரிய கூட்டத்திலும் நான் இதையே தான் கூறினேன். ஒரு நாடு தனக்கு வேண்டுகிற முடிவை எடுப்பதோடு மற்ற நாடு என வருகிறபோது அதற்கு நேர்மாறாக செயல்படுவது என்கிற இரட்டை நிலைப்பாடு பின்பற்றப்படக்கூடாது. வங்கதேசம் ஒரு முக்கிய் பங்குதாரர். அவர்களுக்கு அநீதி இழைக்கப்படக்கூடாது," என அவர் தெரிவித்துள்ளார். டி20 உலக கோப்பையை பாகிஸ்தான் புறக்கணிக்குமா என்கிற கேள்விக்குப் பதிலளித்த நக்வி, "இந்த முடிவை பாகிஸ்தான் அரசு எடுக்கும். பிரதமர் திரும்பி வருவதற்காக காத்துக் கொண்டிருக்கிறோம். அதன் பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும்." என்றார். பாகிஸ்தானின் மாற்றுத் திட்டம் பற்றிய கேள்விக்கு, "முதலில் முடிவு வரட்டும். எங்களிடம் பிளான் ஏ,பி,சி மற்றும் டி உள்ளன." என்று பதிலளித்தார். எனினும் இந்தத் தொடரிலிருந்து பாகிஸ்தான் விலகினால் கணிசமான இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கும் கடுமையான பொருளாதார இழப்பு ஏற்படக்கூடும். பாகிஸ்தான் நிதி நெருக்கடியில் சிக்குமா? பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,பாகிஸ்தான் பங்கேற்பது தொடர்பான முடிவை அந்நாட்டு அரசு எடுக்கும் என மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் விளையாட மறுத்தால் ஐசிசி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கலாம் என கிரிக்கெட் வாரிய வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. "சர்வதேச அணிகளுடன் முத்தரப்பு போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படலாம். பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடுவதற்கு வெளிநாட்டு வீரர்களுக்கு தடையில்லா சான்று வழங்கப்பட மாட்டாது. ஆசிய கோப்பை தொடரிலிருந்தும் பாகிஸ்தான் வெளியேற்றப்படலாம்," என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசியிடம் இருந்து பாகிஸ்தானுக்கு வரும் ஆண்டு வருமானமும் இதனால் பாதிக்கப்படலாம். "பாகிஸ்தான் விளையாட மறுத்தால் ஐசிசியின் வருவாய் பகிர்வு நிறுத்தப்படலாம்," என வாரிய அலுவலர்கள் தெரிவிப்பதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டு, நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுக்கான வருவாய் பகிர்வு முடிவு செய்யப்பட்டபோது ஐசிசியின் ஒட்டுமொத்த வருமானம் 600 மில்லியன் டாலராக இருந்தது. 2024-2027 காலகட்டத்தில் பிசிசிஐ-க்கு 38.5% வருவாயும், இங்கிலாந்திற்கு 6.89% வருவாயும், ஆஸ்திரேலியாவிற்கு 6.25% வருவாயும் பகிர்ந்து கொடுக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது. 5.75% வருவாய் பகிர்வுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நான்காவது இடத்தில் இருக்கிறது. இதன் தோராயமான மதிப்பு 34.51 மில்லியன் டாலர். முந்தைய சுழற்சியில் பாகிஸ்தானின் பங்கு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஐசிசியின் வருவாய் பகிர்வு விதிமுறைகளில் தெளிவு இல்லை என பாகிஸ்தான் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதில் வெளிப்படைத்தன்மை இல்லை என பாகிஸ்தான் கூறுகிறது. தற்போது உலக கோப்பையிலிருந்து விலகிக் கொண்டால் ஐசிசியில் இருந்து வழங்கப்படும் வருவாய் நிறுத்தப்படலாம். இது மேலும் நிதி நெருக்கடியை உருவாக்கக்கூடும். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிதி நிலைமை நல்ல நிலையில் இல்லை என்கிறார் மூத்த விளையாட்டு செய்தியாளரும் எழுத்தாளருமான நீரு பாட்டியா. "ஐசிசி வருவாய் பாகிஸ்தானுக்கு மிகவும் அவசியமாகிறது. இந்தத் தொடரை பாகிஸ்தான் புறக்கணித்தால் இத்தகைய பெரிய அளவிலான தொகை கிடைக்காது. அது இல்லை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செயல்படுவது கடினமாகிவிடும்." என்றார். "இன்று பாகிஸ்தான் புறக்கணித்தால் எதிர்வர இருக்கும் ஐசிசி உலக கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இரண்டில் இருந்தும் விலகும் நிலை உருவாகும்," என்றும் அவர் குறிப்பிட்டார். பாகிஸ்தான் விளையாடாவிட்டால் ஐசிசிக்கு இழப்பு ஏற்படுமா? பட மூலாதாரம்,AFP via Getty Images இந்தத் தொடரில் பாகிஸ்தான் பங்கேற்க மறுத்தால் ஐசிசிக்கும் இழப்பு ஏற்படும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் 2027 வரை பாகிஸ்தானில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தை முறையே பிடிவி (பாகிஸ்தான் தொலைக்காட்சி) மற்றும் மைகோவிற்கு ஐசிசி வழங்கியது. ஆனால் இந்த ஒப்பந்தத்திற்கான தொகையை ஐசிசி வெளியிடவில்லை. எதிர்காலத்தில் இந்த ஒப்பந்தம் முறிக்கப்பட்டால் ஐசிசிக்கு இழப்பு ஏற்படும். ஆனால் அந்த தொகை எவ்வளவு என்பதை கணக்கிடுவது கடினம். குறிப்பாக உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் விளையாடவில்லை என்றால் அது ஐசிசி வருவாயை கடுமையாகப் பாதிக்கும். பாகிஸ்தான் விளையாடினால் நிச்சயம் இந்தியா உடன் ஒரு போட்டி இருக்கும். ஐசிசிக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் போட்டிகளில் அதுவும் ஒன்று. ஒளிபரப்பு நிறுவனங்களுக்கும் விளம்பரதாரர்களுக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி மிகவும் முக்கியமாகிறது. பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரான பசித் அலி தனது தி கேம் பிளான் என்கிற யூடியூப் சேனலில் பேசுகையில், "பாகிஸ்தான் விளையாடவில்லை என்றால் போட்டியை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனம் பெரும் சிக்கலைச் சந்திக்கும். பாகிஸ்தான் வெளியேறினால் எந்த அணி அதன் இடத்தை நிரப்பும். வேறு ஒரு அணியுடன் இந்திய அணி விளையாடினால் அந்தப் போட்டி இந்தியா-பாகிஸ்தான் அளவிற்கு பார்வையாளர்களை ஈர்க்குமா?" எனத் தெரிவித்திருந்தார். கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் ரூ.10,000 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக, இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைப்புகளில் கூட்டமைப்பின் (எஃப்ஐசிசிஐ) தரவுகள் தெரிவிக்கின்றன. ஐசிசிக்கு இழப்பு ஏற்படுவது யதார்த்தமானது எனக் கூறும் நீரு பாட்டியா, "இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன. தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரம் மற்றும் ஸ்பான்சர்ஷிப்பிலும் இழப்பு ஏற்படும்." எனத் தெரிவித்தார். பாகிஸ்தான் அந்த ஆபத்தான முடிவை எடுக்குமா? பட மூலாதாரம்,AFP via Getty Images இழப்புகளை கருத்தில் கொண்டு பார்க்கையில், இந்தத் தொடரிலிருந்து விலகும் ஆபத்தான முடிவை பாகிஸ்தான் எடுக்குமா என்கிற கேள்வி எழுகிறது. "வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு எங்களின் முழு அனுதாபங்களும் உள்ளன. ஐசிசியின் கடுமையான நடத்தையால் நாங்களும் ஏமாற்றம் அடைந்துள்ளோம். ஆனால் உலக கோப்பையில் விளையாடப் போவதில்லை என்கிற கேள்விக்கே இடமில்லை." என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிப்பதாக நேஷனல் ஹெரால்டு செய்தி வெளியிட்டுள்ளது. "ஐசிசி உறுப்பு நாடுகள் விளையாடும் ஒப்பந்தத்திற்கு நாங்கள் கட்டுப்பட்டுள்ளோம். கடந்த ஆண்டு பிசிசிஐ உடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். 2027 வரை அனைத்து ஐசிசி நிகழ்வுகளையும் கலப்பு முறையில் நடத்தும் முடிவுக்கு ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நேரத்தில் அதிலிருந்து விலகிச் செல்வதற்கு எந்தக் காரணமும் இல்லை," என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடரை புறக்கணிக்கும் யோசனைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான வாசிக் அக்ரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "வங்கதேசம் விளையாடவில்லை என்பதற்காக பாகிஸ்தான் உலக கோப்பையை ஏன் புறக்கணிக்க வேண்டும்? பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு வங்கதேசம் என்ன செய்துள்ளது? இதில் எந்த அர்த்தமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. பாகிஸ்தான் தன் மீது கவனம் செலுத்த வேண்டும். விளையாட்டில் கவனம் செலுத்தி உலக கோப்பை வெல்ல வேண்டும்," என்றார் வாசிம் அக்ரம். இந்த நேரத்தில் டி20 உலக கோப்பை தொடரிலிருந்து வெளியேறும் முடிவை பாகிஸ்தானால் சமாளிக்க முடியாது என்கிறார் நீரு பாட்டியா. "ஐசிசி தொடரில் கலந்து கொள்வதன் மூலம் பங்கேற்பாளர் கட்டணம் பெற முடியும். இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு மிகவும் முக்கியமானது. பாகிஸ்தானில் நடைபெறும் உள்நாட்டு போட்டிகளுக்கு நிறைய அணிகள் வருவதில்லை. அதனால் ஐசிசி தொடர் என்பது அவர்களுக்கு மிகப் பெரிய நிகழ்வு. பாகிஸ்தான் அந்த முடிவை எடுத்தாலும் ஐசிசியில் அதன் நிலை பலவீனப்பட்டு போகும். ஏனென்றால் பாகிஸ்தானிற்கு ஆதரவாக எந்த உறுப்பினரும் வர மாட்டார்கள்." எனத் தெரிவித்தார். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg1zdpnyvmo
  23. கடந்த காலத்தில் அரசியல் தலைமைத்துவங்களால் பிழையானவற்றைச் செய்வதற்கு தூண்டப்பட்டிருக்கலாம் ; ஆளுநர் வேதநாயகன் 26 Jan, 2026 | 05:18 PM (எம்.நியூட்டன்) கடந்த காலத்தில் அரசியல் தலைமைத்துவங்களால் பிழையானவற்றைச் செய்வதற்கு தூண்டப்பட்டிருக்கலாம். தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் அவ்வாறான எந்தவொரு விடயங்களும் நடைபெறப்போவதில்லை. என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேசிய விழிப்புணர்வுச் செயற்றிட்டத்தின் முதலாவது நிகழ்வு திங்கட்கிழமை (26) காலை கைதடியிலுள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது. 'நேர்மையான தேசத்தை நோக்கி' எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இச்செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்: மக்கள் நம்பிக்கை வைக்கும் அரச சேவையைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும். அரச சேவையில் வெளிப்படைத்தன்மை இருந்தால் மாத்திரமே மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முடியும். எங்கள் கரங்கள் எப்போதும் தூய்மையானவையாக இருக்க வேண்டும். எதையும் எதிர்பார்த்து எங்கள் சேவைகள் அமையக் கூடாது. நேர்மையின்றிய தொழிற்பாடு சேவையாகக் கருதப்படாது. மக்களின் அன்றாடச் செயற்பாடுகள் மற்றும் வியாபார நடவடிக்கைகளுடன் பின்னிப்பிணைந்த அரச நிர்வாகக் கட்டமைப்பு உள்ளூராட்சி மன்றங்களாகும். எனவே, இப்பிரதிநிதிகளுக்கு இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான தெளிவான அறிவு அவசியம். சில சந்தர்ப்பங்களில் 'அன்பளிப்பு' என்ற பெயரில் வழங்கப்படும் பொருட்கள் கூட இலஞ்சமாகவே கருதப்படும் என்பதைப் பிரதிநிதிகள் புரிந்து கொள்ள வேண்டும். கட்டட அனுமதி, வியாபார அனுமதி, சோலை வரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளை உடனடியாகச் செய்து கொடுக்க முடியும். ஆனால், சில இடங்களில் இவை வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படுகின்றன. இத்தகைய இழுத்தடிப்புக்கள் இலஞ்சம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் செய்யப்படுவதாகவே கருதப்படும். இவ்வாறான செயற்பாடுகளுக்குத் தற்போதைய நிர்வாகத்தில் இடமில்லை. கடந்த காலங்களில் அரசியல் தலைமைத்துவங்களால் பிழையானவற்றைச் செய்வதற்கு நீங்கள் தூண்டப்பட்டிருக்கலாம். ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் அவ்வாறான எந்தவொரு விடயங்களும் நடைபெறப்போவதில்லை. எனவே, உள்ளூராட்சி மன்றங்கள் சிறப்பான, நேர்மையான சேவையை வழங்க வேண்டும், என்றார். https://www.virakesari.lk/article/237067
  24. மேலுள்ள காணொளியில் கடைசி 5 நிமிடத்தில் முன்னோடி செயற்திட்டம் பற்றியும் அதற்கு முன் வட்டு.தெற்கு வட்டுக்கோட்டை மலசலகூடப் புனரமைப்பு பற்றியும் குறிப்பிடப்படுகிறது. @வாத்தியார் அண்ணை, @goshan_che அண்ணை, @குமாரசாமி அண்ணை, @Kavi arunasalam ஐயா, @யாயினி அக்கா, @ஈழப்பிரியன் அண்ணா மற்றும் கள உறவுகள் கவனத்திற்கு. மேலுள்ள காணொளியில் மஞ்சள் வேட்டி, தாடியோடு இருப்பவர் எனது தந்தையார்.
  25. இல்லை அண்ணா தைப்பூசத்திற்குள் வேலைகள் முடிந்து, வீடும் குடிபுக உள்ளார்கள் என்று T/O கூறினார். பணத்தை வங்கியில் இருந்து மீளப்பெற T/O கையொப்பம் இடவேண்டும். இன்று தான் பணம் எடுக்க வங்கி மீளெடுக்கும் சீட்டு பெற்று பணம் எடுக்க உள்ளார்கள். இன்றும் காரைநகர் திட்டமிடல் உத்தியோகத்தருடன் கதைத்தேன், T/O விடுமுறையாம். நாளை அளவுத்திட்டங்களை பெற்றுத்தருவதாக கூறினார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.