Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. திருகோணமலை: கடற்கரையில் அமைக்கப்பட்ட சட்டவிரோத சிற்றுண்டிச்சாலை அகற்றம் February 20, 2026 திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக இயங்கி வந்த சிற்றுண்டிச்சாலையின் சட்டவிரோத கட்டுமானம் அகற்றப்பட்டு தற்காலிக அனுமதிக்கு ஏற்றவாறு கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரையினுடைய விகாராதிபதியின் கோரிக்கைக்கு அமைவாக 127 சதுர அடியில் தற்காலிக கடை ஒன்றை அமைப்பதற்கு மட்டுமே கரையோர பாதுகாப்பு திணைக்களம் அனுமதி வழங்கி இருந்தது இருப்பினும் குறித்த அனுமதியை பயன்படுத்தி 405 சதுர அடி பரப்பளவு கொண்ட நிரந்தரக் கட்டிடம் மற்றும் மூன்று கூடுதல் குடிசைகள், நிரந்தர வேலி ஆகியவை அனுமதி பெறாது அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், இவற்றை அகற்றுமாறு குறித்த திணைக்களத்தினால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வந்ததுடன் அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கையினையும் கடந்த வருடம் நவம்பர் மாதம் 04 ஆம் திகதி மேற்கொண்டிருந்த நிலையில் குறித்த விகாராதிபதி துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு சென்று அவர்கள் ஊடாக கரையோர பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒருவாரகால அவகாசம் கேட்டதுடன் அனுமதி இன்றி அமைக்கப்பட்டிருந்த மூன்று கூடுதல் குடிசைகளை அகற்றியிருந்தார்கள். இதன்பின்னர் 19.11.2025 அன்று குறித்த சட்டவிரோத கட்டடம் அகற்ற திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அப்பகுதியில் நவம்பர் மாதம் 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் விகாரைக்கான கட்டுமானங்கள் அமைக்கப்பட்டு புத்தர்சிலை வைத்து குறித்த விடயம் சர்ச்சையாகியிருந்ததுடன் குறித்த விடயம் திசைமாற்றப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, குறித்த சட்டவிரோத சிற்றுண்டிச்சாலை தொடர்பில் அன்றைய திருகோணமலை நகரசபையால் திருகோணமலை நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதன் பின்னர் கொழும்பு நீதிமன்றில் விகாராதிபதியால் கரையோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் அங்கு இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது. https://www.ilakku.org/trincomalee-illegal-restaurant-set-up-on-the-beach-removed/
  3. அதெல்லாம் கிடக்கட்டும் பையா இன்று விளையாட்டு இருக்கா இல்லையா ...... இருந்தால் யாரும் யாரும் ஆடுவார்கள் . .......என்ன நேரம் என்பதை சொல்லுங்கள் . ......! 🙃
  4. யாழ். மண்டைதீவு கிரிக்கெட் மைதான கட்டுமானத்தில் உடனடி தலையீடு தேவை – சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் வலியுறுத்தல் 20 Feb, 2026 | 10:21 AM யாழ்ப்பாணம் மண்டைதீவு தீவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கிரிக்கெட் மைதானத் திட்டம் தீவிரமான சுற்றுச்சூழல் மற்றும் சட்ட ரீதியான சிக்கல்களை உள்ளடக்கியதாகக் கூறி, மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை (CEA) இதில் உடனடியாக தலையீடு செய்ய வேண்டும் என சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் (CEJ) வலியுறுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தின் தலைவர் ஹேமந்த விதானகே, மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், குறித்த கட்டுமானப் பகுதி ஒரு தாழ்வான கடலோர சதுப்பு நிலமாக இருப்பதையும், அது யாழ்ப்பாணக் குடாநாட்டின் வெள்ளக் கட்டுப்பாடு, கடலோரப் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் வளப் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த பகுதி கண்டல் காடுகள் (Mangroves), உவர் சதுப்பு நிலங்கள், கடற்புல் படுக்கைகள் மற்றும் இயற்கை நீரோட்ட அமைப்புகளை கொண்டுள்ளதாக சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தெரிவித்துள்ளது. இவை கடல் மட்ட உயர்வு, சூறாவளி அலைகள் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளுக்கு எதிரான இயற்கை அரண்களாகச் செயல்படுகின்றன. பாரிய அளவிலான நில நிரப்புதல், தாவர அழிப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால், இந்த இயற்கை சூழலமைப்புகள் நிரந்தர சேதமடையக்கூடும் என்றும், யாழ்ப்பாணக் குடாநாட்டில் வெள்ள அபாயம் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கட்டுமானத் திட்டம் பல்லுயிர் வாழ்விட இழப்பை ஏற்படுத்தி, கடலோர சூழலியல் சமநிலையை பாதிக்கக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தனது கடிதத்தில், 1981 ஆம் ஆண்டின் 57 ஆம் இலக்க கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவச் சட்டம் மற்றும் 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழ் தேவையான அனுமதிகள் பெறப்பட்டுள்ளதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. மேலும், மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையால் Terms of Reference வழங்கப்பட்டிருந்த போதிலும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) செயல்முறை முழுமையாக நிறைவேறாமல் சுமார் 60 சதவீத கட்டுமானப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவல்களை சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் சுட்டிக்காட்டியுள்ளது. இது சட்டத்தின் ஆட்சி முறையை பாதிப்பதோடு, சுற்றுச்சூழல் ஆளுமை மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் சீர்குலைக்கக்கூடும் என சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தெரிவித்துள்ளது. முறையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு மதிப்பீடு மற்றும் பொதுமக்கள் ஆலோசனை இன்றி இத்தகைய பாரிய திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக உரிமைகளை புறக்கணிக்கும் ஆபத்தான முன்னுதாரணமாக அமையும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ‘சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் எதிர் அனுர சதரசிங்க’ என்ற மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டியுள்ள சுற்றுச்சூழல் நீதிக்கான மையம், அரச நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் முழுமையானவை அல்ல என்றும், அவை பொதுமக்களின் நலனுக்காக ஒப்படைக்கப்பட்ட நம்பிக்கைப் பொறுப்புகள் (Public Trust Doctrine) என்றும் நினைவூட்டியுள்ளது. எனவே, முழுமையான சட்ட இணக்கப்பாடுகள் உறுதி செய்யப்படும் வரை யாழ். மண்டைதீவு கிரிக்கெட் மைதான கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறும், சுற்றுச்சூழல் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய அவசர நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையிடம் சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரபூர்வ பதில் வெளியாகும் வரை, சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் நிதானமாக கண்காணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/239125
  5. பிடித்த போதைப் பொருட்களை… அழிக்காமல், அதனை காவல் துறையினரே மீண்டும் விற்பனைக்கு விடும் கேவலமும் நடக்கும் போது… இதனை முற்றாக அழிப்பது, அரசுக்கு பெரிய சவால். முதலில் காவல் துறையில் உள்ள கறுப்பு ஆடுகளை களைய வேண்டும்.
  6. “ஏ.ஐ. அறிவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவோம்” - பிரதமர் நரேந்திர மோடி செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் என்று டில்லியில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) உச்சி மாநாடு கடந்த 16 ஆம் திகதி தொடங்கியது. 4 ஆம் நாளான நேற்று ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டெர்ஸ், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, இலங்கை அநுரகுமார திஸாநாயக்க உட்பட 20 நாடுகளின் தலைவர்கள், 100 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகையில், வேளாண்மை, பாதுகாப்பு, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகள், பல்வேறு மொழிகளை அவரவர் விரும்பும் மொழியில் மொழிபெயர்க்கும் தொழில்நுட்பம் என பல்வேறு சவால்களுக்கு டில்லி ஏஐ உச்சி மாநாட்டில் மிகச் சிறந்த தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தில் உருவாக்கப்பட்ட ஏஐ தொழில்நுட்பங்கள் மற்றும் இந்தியாவின் புதுமை கண்டுபிடிப்புகள் மாநாட்டில் இடம்பெற்றுள்ளன. அணுசக்தியை ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்தலாம். அழிவுக்கும் பயன்படுத்தலாம். அதுபோலத்தான் ஏ.ஐ. தொழில்நுட்பமும். இதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தினால் பல பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு காண முடியும். அழிவுக்கு பயன்படுத்தினால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படும். மனிதகுலத்துக்கு பலன் அளிக்கும் வகையில் மட்டுமே ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். அனைவருக்கும் நன்மை, அனைவருக்கும் மகிழ்ச்சி என்ற கருத்தை முன்னிறுத்தியே இந்த மாநாடு நடத்தப்படுகிறது. சில நாடுகள் சுயநலனுடன் செயல்படுகின்றன. ஆனால் இந்தியாவின் அணுகுமுறை வேறுபட்டது. ஏ.ஐ. மூலம் ஒட்டுமொத்த உலகமும் பயன் பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் டீப் ஃபேக் காணொலி, ஒலிகள், புகைப்படங்கள் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து வருகின்றன. இதை தடுத்துநிறுத்த வேண்டும். உணவுப் பொருள் பாக்கெட்டில் என்னென்ன ஊட்டச்சத்துகள் உள்ளன என்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல டிஜிட்டல் உலகில் எது உண்மையான காணொலி, எது ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட காணொலி என்பது தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். ஏ.ஐ. காணொலி, புகைப்படங்களை ‘வாட்டர்மார்க்’ குறியீடு மூலம் அடையாளம் காட்ட வேண்டும். சிறார் நலன், பாதுகாப்பு ஏ.ஐ. தொழில்நுட்ப விவகாரத்தில் சிறாரின் நலன்கள், பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும். புதிய தொழில்நுட்பத்தால் சிறாரின் நலன்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது. டில்லி மாநாட்டில் 3 இந்திய நிறுவனங்கள் தங்களது ஏ.ஐ. தொழில்நுட்ப மாதிரிகள், செயலிகளை அறிமுகம் செய்துள்ளன. இவை இந்திய இளைஞர்களின் திறமையை வெளிப்படுத்துகின்றன. உலகம் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்கு இந்திய இளைஞர்கள் தீர்வுகளை வழங்குகின்றனர். சில நாடுகள் சுயநலனுடன் செயல்படுகின்றன. ஆனால் இந்தியாவின் அணுகுமுறை வேறுபட்டது. ஏ.ஐ. மூலம் ஒட்டுமொத்த உலகமும் பயன் பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் டீப் ஃபேக் காணொலி, ஒலிகள், புகைப்படங்கள் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து வருகின்றன. இதை தடுத்துநிறுத்த வேண்டும். உணவுப் பொருள் பாக்கெட்டில் என்னென்ன ஊட்டச்சத்துகள் உள்ளன என்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல டிஜிட்டல் உலகில் எது உண்மையான காணொலி, எது ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட காணொலி என்பது தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். ஏஐ வீடியோ, புகைப்படங்களை ‘வோட்டர்மார்க்’ குறியீடு மூலம் அடையாளம் காட்ட வேண்டும். சிறார் நலன், பாதுகாப்பு ஏ.ஐ. தொழில்நுட்ப விவகாரத்தில் சிறாரின் நலன்கள், பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும். புதிய தொழில்நுட்பத்தால் சிறாரின் நலன்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது. டில்லி மாநாட்டில் 3 இந்திய நிறுவனங்கள் தங்களது ஏ.ஐ. தொழில்நுட்ப மாதிரிகள், செயலிகளை அறிமுகம் செய்துள்ளன. இவை இந்திய இளைஞர்களின் திறமையை வெளிப்படுத்துகின்றன. உலகம் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்கு இந்திய இளைஞர்கள் தீர்வுகளை வழங்குகின்றனர் என்றார். (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/ஏ-ஐ-அறிவை-ஆக்கப்பூர்வமாக-பயன்படுத்துவோம்/175-372768
  7. மத்திய கிழக்கில் பதற்றம்; அமெரிக்க படைகள் குவிப்பு மத்திய கிழக்கில் மிகப் பெரிய அளவில் அமெரிக்கா படைகளை குவித்து வருவதாகவும், ஈரான் மீது போர் தொடுக்க ட்ரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. ஈரானின் பொருளாதார வீழ்ச்சி, மதக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டக்காரர்களை ஒடுக்க அரசு பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிட்டது. இதன் காரணமாக, இரு தரப்பிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. மக்களின் போராட்டத்தை ஒடுக்கும் ஈரான் அரசுக்கு ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதாகவும் கூறினார். இந்நிலையில், ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகவும், இதற்காக யுரேனியத்தை செறிவூட்டுவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது. யுரேனிய செறிவூட்டலை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தை இந்த வாரம் ஜெனீவாவில் நடைபெற்றது. இதில், ஈரான் மற்றும் அமெரிக்க உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தைகளில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் எனினும், சில பிரச்சினைகளில் சிக்கல் நீடிப்பதாகவும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்திருந்தார். இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் இருக்க, மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது படைகளை குவித்து வருகிறது. 2003 இல் ஈராக்குக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா இப்பகுதியில் படைகளை குவித்தது. அதன் பிறகு தற்போது தனது படைகளை அதிக அளவில் குவித்து வருகிறது. ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்பதையே இது காட்டுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆக்சியோஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானுக்கு எதிரான இந்த ராணுவ நடவடிக்கை வாரக்கணக்கில் விரிவடையும் என்றும் முழு அளவிலான போரைப் போன்று இருக்கும் என்றும் ஆக்சியோஸ் குறிப்பிட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கா மேற்கொள்ளும் மிகப் பெரிய தாக்குதலாக இது இருக்கப் போகிறது என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள செய்தியில், ‘மத்திய கிழக்கு நோக்கி தனது அதிநவீன F-35, F-22 ஜெட் போர் விமானங்களை அமெரிக்கா நகர்த்தி வருகிறது. USS ஆபிரகாம் லிங்கன் போர் கப்பல் ஏற்கனவே ஈரான் கடற்கரையின் எல்லைக்குள் செயல்பட்டு வரும் நிலையில், இரண்டாவது விமானம் தாங்கி கப்பலான USS ஜெரால்ட் ஆர். ஃபோர்டு இந்தப் பிராந்தியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளும் இங்கே நிலைநிறுத்தப்பட்டுள்ளன. ஈரான் மீது தாக்குதல் நடத்த ட்ரம்ப் உத்தரவிடுவாரா என்பது இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது. தாக்குதல் நடத்த அவர் முடிவு செய்தால், அது ஈரான் ஆட்சிக்கும் அதன் பிராந்திய பிரதிநிதிகளுக்கும் கடும் சேதத்தை ஏற்படுத்தும். ஈரானின் அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்களை குறிவைப்பதாக இந்த தாக்குதல் இருக்கும். ஈரானில் ஆட்சி மாற்றத்தை இது ஏற்படுத்தும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (a) https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/மத்திய-கிழக்கில்-பதற்றம்-அமெரிக்க-படைகள்-குவிப்பு/50-372767
  8. ⚓ காங்கேசன்துறை துறைமுகத்தில் கள ஆய்வு adminFebruary 20, 2026 யாழ்ப்பாணம் காங்கேசன்துறை (KKS) துறைமுகத்தை ஒரு பிராந்திய வர்த்தக மற்றும் போக்குவரத்து மையமாக (Regional Hub) மேம்படுத்தும் நோக்கில், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க மற்றும் பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு ஆகியோர் இன்று நேரடி கள ஆய்வை மேற்கொண்டனர். காங்கேசன்துறை துறைமுகமானது இந்தியாவின் தென் பகுதிக்கும் இலங்கைக்கும் இடையிலான மிக நெருக்கமான கடல்வழிப் பாதையாக இருப்பதால், இதனை நவீனமயமாக்குவது அரசின் 2026 ஆம் ஆண்டுக்கான பொருளாதார இலக்காகும்.பெரிய ரக சரக்குக் கப்பல்கள் மற்றும் பயணிகள் கப்பல்கள் (Ferries) இலகுவாக வந்து செல்வதற்கு ஏதுவாக துறைமுகத்தின் ஆழத்தை அதிகரிக்கும் பணிகள் குறித்து அமைச்சர்கள் ஆராய்ந்தனர். இந்திய அரசாங்கத்தின் சுமார் 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள உட்கட்டமைப்பு வசதிகள் (Breakwater construction and Pier expansion) குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தற்போது இந்தியா – இலங்கை இடையே இயங்கும் கப்பல் சேவைகளை (Sivagangai Ferry) மேலும் வலுப்படுத்தி, பயணிகளுக்கான நவீன முனையங்களை (Terminals) அமைப்பதற்கான இடங்கள் பார்வையிடப்பட்டன. வடமாகாணத்தின் விளைபொருட்களை நேரடியாக ஏற்றுமதி செய்வதற்கு ஏதுவாக துறைமுகத்தில் களஞ்சிய வசதிகளை (Warehouse facilities) உருவாக்குவது அமைச்சரின் பிரதான திட்டமாகும். அமைச்சர்கள் துறைமுக அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன், ஏற்கனவே அமுலில் உள்ள ‘சகல’ (Sagar) கடல்சார் திட்டங்கள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான விடயங்களையும் கேட்டறிந்தனர். தற்போது நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையே இயங்கி வரும் ‘சிவகங்கை’ (Sivagangai) பயணிகள் கப்பல் சேவையை, வானிலை சீராக இருக்கும் பட்சத்தில் வாரத்தில் அதிக நாட்கள் இயக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ராமேஸ்வரம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவையை மீள ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சர்கள் துறைமுக அதிகாரிகளுடன் கலந்துரையாடினர். இது ஆன்மீக மற்றும் வர்த்தக சுற்றுலாவை (Religious & Business Tourism) மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கப்பல் பயணக் கட்டணங்களைக் குறைப்பது மற்றும் பயணிகளுக்கான சுங்க வரி நடைமுறைகளை எளிதாக்குவது தொடர்பாக இந்தியத் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. அமைச்சர் அனுர கருணாதிலக்கவின் கூற்றுப்படி, இந்திய நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் பாரிய கட்டுமானப் பணிகள் 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முழுவீச்சில் ஆரம்பிக்கப்பட்டு, 2028 ஆம் ஆண்டளவில் காங்கேசன்துறை ஒரு முழுமையான வர்த்தகத் துறைமுகமாக மாற்றப்படும் என்பது நோக்கத்தக்கது https://globaltamilnews.net/2026/229419/
  9. சிம் மீள்பதிவு வர்த்தமானி: தொலைபேசி நிறுவனங்களுக்கு பாதுகாப்பா? - முஜிபுர் ரஹ்மான் Published By: Vishnu 20 Feb, 2026 | 05:24 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) 2019 காலப்பகுதியில் இடம்பெற்ற அதிகமான கொலைகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் தொலைபேசி அறிக்கை இல்லாமையாலே இடை நிறுத்தப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் 2019ஆகஸ்ட் 2ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட சிம் அட்டைகளை மீள பதிவு செய்ய வேண்டும் என ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பு, குறித்த தொலைபேசி நிறுவனங்களை பாதுகாக்கும் நடவடிக்கையாகும் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நஞ்சுகள் அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டில் இடம்பெற்ற லசந்த விக்ரமதுங்க, சிவராம், எக்னெலிகொட, போத்தல ஜயந்த மற்றும் தாஜுதீன் போன்றவர்களின் கொலைக்கு நீதியை பெற்றுத்தருவதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்திருந்தார். இந்நிலையில் கடந்த வாரம் ஜனாதிபதி வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார். அதில் 2019 ஆகஸ்ட் 2ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட சிம் அட்டைகளின் தகவல்கள் அந்த நிறுவனங்களில் இல்லாமை காரணமாக சட்ட நடவடிக்கைகளுக்கு அது பிரச்சினையாக இருப்பதால், 2019ஆகஸ்ட் 2ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட சிம் அட்டைகளை மீள பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொலைபேசி சிம் அட்டைகளை விநியோகிக்கும்போது, குறித்த நபரின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் தகவல்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என தொலை தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு குறித்த நிறுவனங்களுக்கு நிபந்தனையாக தெரிவித்தே, அந்த நிறுவனங்களுக்கு அதுதொடர்பான அனுமதியை வழங்கி இருக்கிறது. அதனால்தான் நாங்கள் சிம் அட்டை பெற்றுக்காெள்ளும்போது எமது தேசிய அடையாள அட்டையின் பிரதியை வழங்குகிறோம். அப்படியானால் யாரை பாதுகாக்க ஜனாதிபதி இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டார். அத்துடன் ஜனாதிபதி நீதியை நிலைநாட்டுவதாக தெரிவித்த பல கொலைகள் 2019லே இடம்பெற்றுள்ளன. குறிப்பாக லசந்த விக்ரமதுங்க, தாஜுதீன் போன்றவர்களின் வழக்கு விசாரணை, தொலைபேசி அறிக்கை இல்லாமையாலே இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தாஜுதீன் கொலை செய்யப்பட்ட தினம் அது தொடர்பில் 60க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் நாரஹேன்பிட்ட பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு சென்றுள்ளன. அதனை தேடிக்கொள்ள முடியாமல் இருக்கிறது. அப்போது டயலாேக் நிறுவனத்தின் செயற்பாட்டு அதிகாரியாக இருந்தவர்தான் ஹான்ஸ் விஜேசூரிய. அவர் தற்போது ஜனாதிபதியின் பொருளாதார ஆலாேசகர். அதேபோன்று தாஜுதீனின் கொலையை விபத்து என வழக்கின் பீ அறிக்கையை மாற்றிய பொலிஸ் குற்றப்பிரிவு எஸ்.பி. தற்போது பாெலிஸுக்கு பொறுப்பான அமைச்சின் ஆலோசகராக இருக்கிறார். இவ்வாறான நிலையில் தாஜுதீனின் கொலையாளியை கண்டுபிடிக்க முடியுமா? இந்த காலப்பகுதியில் இடம்பெற்ற அதிகமான கொலைகளுக்கு அரசியல் தொடர்பு காணப்படுகிறது. அதேபோன்று அது தொடர்பான வழக்கு விசாரணைகளுக்கு தொலைபேசி தகவல் பெறவேண்டியதாகும். ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்பின் பிரகாரம் இந்த கொலைகளுடன் தொடர்புபுடைய யாராவது, மீண்டும் அந்த சிம் அட்டையை பதிவு செய்வார்களா?இது இடம்பெறப்போவதில்லை. அப்படியானால், குறித்த தொலைபேசி நிறுவனங்கள் அந்தபொறுப்பில் இருந்து நீங்கிக்கொள்ள இந்த வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இடமளிக்கப்பட்டிருக்கிறது. சிம் அட்டை விநியாேகித்த நிறுவனத்திடம், சிம் அட்டை உரிமையாளரின் தகவல்கள் இல்லை என அந்த நிறுவனங்களுக்கு தெரிவிக்க முடியாது. அப்படியென்றால் அந்த நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் புதிதாக சிம் அட்டைகளை பதிவு செய்த பின்னர், வழக்கு விசாரணைகளின்போது குறித்த தொலைபேசி நிறுவனங்கள், தங்களிடம் அதுதொடர்பான தகவல்கள் இல்லை என தெரிவிக்கும், அப்போது அந்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடியாகும். அதனால் ஜனாதிபதி இந்த தொலைபேசி நிறுவனங்களை பாதுகாப்பதற்கா இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது என கேட்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/239111
  10. 🚨 யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் காவல்நிலையத்தில் முறைப்பாடு : adminFebruary 20, 2026 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி, தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகக் கூறி அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சியின் நிறுவனருக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வைத்தியசாலை வளாகத்திற்குள் விநியோகிக்கப்பட்ட அரசியல் துண்டுப் பிரசுரங்கள் இந்த சர்ச்சைக்குக் காரணமாக அமைந்துள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை, யாழ். போதனா வைத்தியசாலைக்குள் விநியோகிக்கப்பட்ட தினசரிப் பத்திரிகைகளுக்குள், அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சியின் பெயரிலான துண்டுப் பிரசுரங்களும் வைத்து விநியோகிக்கப்பட்டுள்ளன. குறித்த துண்டுப் பிரசுரத்தில் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு கருத்து, அவரது கௌரவத்திற்கும் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.இது குறித்து உரிய விசாரணை நடத்தி, தனது நற்பெயரைப் பாதுகாக்குமாறு அவர் காவல்துறையினரைக் கேட்டுக்கொண்டுள்ளார். அரசியல் ரீதியான பிரசாரங்கள் அல்லது தனிநபர் விமர்சனங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வைத்தியசாலை போன்ற பொது சேவை மையங்களுக்குள் விநியோகிக்கப்படுவதை நிர்வாகம் பொதுவாக அனுமதிப்பதில்லை. இந்தப் பின்னணியில், பத்திரிகை விநியோகஸ்தர்கள் ஊடாக இவை எவ்வாறு உள்ளே வந்தன என்பது குறித்தும் காவல்துறையினா் ஆராய்ந்து வருகின்றனர். வைத்தியசாலைக்குள் திட்டமிட்டு விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படும் துண்டுப் பிரசுரங்கள் இந்தப் பிரச்சினையின் மையப்புள்ளியாகும். அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சி யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு செயற்படும் ஒரு புதிய அரசியல் கட்சியாகும். இதன் நிறுவனராகவும், முக்கிய செயற்பாட்டாளராகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா (MP Ramanathan Archchuna) அறியப்படுகிறார். அண்மைக்காலமாக யாழ். போதனா வைத்தியசாலையின் நிர்வாகம் மற்றும் பணிப்பாளர் சத்தியமூர்த்தியின் செயற்பாடுகள் தொடர்பாக வைத்தியர் அர்ச்சுனா பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார். துண்டுப் பிரசுரத்தில் பணிப்பாளர் சத்தியமூர்த்தி அவர்களின் தனிப்பட்ட கௌரவம் மற்றும் வைத்தியசாலை நிர்வாகத்தை விமர்சிக்கும் வகையில் “ஆதாரமற்ற மற்றும் தரக்குறைவான” கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தினசரி பத்திரிகைகளின் உள்ளே வைத்து இவை விநியோகிக்கப்பட்டதன் மூலம், பொதுமக்களிடையே திட்டமிட்டு தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தண்டனைச் சட்டக்கோவையின் கீழ், ஒரு அரச அதிகாரியின் கடமைக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் அவதூறு பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினா் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வைத்தியர் சத்தியமூர்த்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ஆகியோருக்கு இடையிலான இந்த மோதல் கடந்த சில மாதங்களாகவே தீவிரமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது https://globaltamilnews.net/2026/229413/
  11. அதற்கெல்லாம் நேரம் செலவழிப்பதில்லை, நல்ல உடல் ஆரோக்கியமாகவே இருக்கிறேன் (வேலைக்கு இடைக்கிடை சுகயீனம் காரணம் காட்டி ஓய்வெடுப்பதுண்டு, இலங்கை சிம்பாவே போட்டியினை முழுமையாக பார்க்கவேண்டும் என்ற நோக்கமும் இருந்தது)
  12. அரசியல் கைதிகள் விவகாரம்: நீதியரசர் துரைராஜா தலைமையிலான குழு ஆய்வு - ஹர்ஷன நாணயக்கார Published By: Vishnu 20 Feb, 2026 | 04:13 AM (நா.தனுஜா) அரசியல் கைதிகள் உள்ளடங்கலாக நீண்டகாலம் தண்டனை அனுபவித்துவரும் சிறைக்கைதிகள் தொடர்பில் ஆராய்ந்து, அவர்களது தண்டனைக்காலத்தைக் குறைத்தல் மற்றும் விடுவித்தல் தொடர்பில் உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.துரைராஜா தலைமையிலான குழுவினால் ஆராயப்பட்டு வருவதாகவும், அக்குழுவின் முன்மொழிவுகளுக்கு அமைவாக கைதிகள் விடுவிக்கப்படுவர் எனவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவர் என தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த போதிலும், அவ்வாக்குறுதி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 'அரசியல் கைதிகள் என்ற பதத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினரால் வௌ;வேறு வரைவிலக்கணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் அதற்கு அப்பால், எமது நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனைக் கைதிகள் பலர் உள்ளனர். அவர்களது தண்டனைக்காலத்தை நினைத்தவாறு குறைக்கமுடியாது' என அவர் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.துரைராஜா தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவினர் அரசியல் கைதிகள் உள்ளடங்கலாக நீண்டகாலமாகத் தண்டனை அனுபவித்துவரும் சிறைக்கைதிகளின் தண்டனைக்காலத்தைக் குறைத்தல் மற்றும் விடுதலை செய்தல் என்பன தொடர்பில் எவ்வித இன, மத அடிப்படையிலான பாகுபாடுமின்றி நடுநிலையாக ஆராய்ந்து வருவதாகவும், அக்குழுவின் முன்மொழிவுகளுக்கு அமைவாக இவ்விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்புடும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/239105
  13. அதற்கு காரணம், அரசியால்வாதிகளின் ஆசீர்வாதத்தோடும் அவர்களே முன்னின்றும் போதைப்பொருள் கடத்தல் விநியோகம் நடந்தன, அதற்கெதிராக அனுர அரசு கடும் நடவடிக்கை எடுப்பதால் தங்களை காப்பாற்றிக்கொள்ள ஒருவரையொருவர் போட்டுத்தள்ளுகின்றனர். போதைக்கடத்தல்காரருக்கெதிராக நடவடிக்கை எடுக்கும்போது விமர்சிப்பவர்களைப்பாருங்கள் யாரென்று, பெரும்பாலும் அவர்களின் பாதுகாவலர், பிரதேசசபை உறுப்பினர், சாரதி, முன்னாள் இராணுவத்தினர் இப்படியே தொடர்கிறது. கொலை நடப்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லையே. நூறு கோடி சொத்து நாமலின் பெயரில் காட்டப்படுள்ளது, அது எப்படி வந்ததென்றால் சரியான பதில் இல்லை.
  14. அரையிறுதிப் போட்டிகள் கேள்விகளின் அடைப்படையில் நடாத்தப் படாவிட்டால் புள்ளிகள் பறிபோகாது. அரையிறுதியில் வெல்லும் அணிகளைச் சரியாகக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் கிடைக்கும். அது முதல் போட்டி அல்லது இரண்டாவது போட்டியாக இருந்தாலும் பிரச்சினை இல்லை! இரண்டுக்கும் சேர்த்து aggregate ஆகக் கொடுக்கப்படும். ஆனால் அவுஸ்திரேலியா வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு ஒரு புள்ளியும் கிடையாது😂
  15. இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை.🤣
  16. '10 ஆண்டு கழித்து' - தேமுதிக வருகையால் காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பா? பட மூலாதாரம்,PremallathaDmdk/X கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் செய்தியாளர், பிபிசி தமிழ் 19 பிப்ரவரி 2026 வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் "தி.மு.க உடன் எத்தனையோ முறை கூட்டணி பேசப்பட்டாலும் அது நிறைவேறவில்லை. 2016 ஆம் ஆண்டில் 'பழம் நழுவி பாலில் விழப் போகிறது' என கருணாநிதி கூறினார். பத்து ஆண்டுகள் கழித்து தேன் கலந்த பாலில் அது விழுந்துள்ளது" தி.மு.க உடன் கூட்டணி அமைத்தது குறித்து தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா செய்தியாளர் சந்திப்பின்போது இவ்வாறு கூறினார். சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.கவை காரணம் காட்டி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களை தி.மு.க குறைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக, அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால், 'கட்சிகளின் சுயமரியாதைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தலைமை முடிவெடுக்கும்' என தி.மு.க கூறுகிறது. தி.மு.க-தே.மு.தி.க கூட்டணியால் காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பு ஏற்படுமா? மூன்று நாட்களில் மாறிய காட்சிகள் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் கூட்டணியை இறுதி செய்யும் பணிகளில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.கவை கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடப்பதாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதியன்று கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற சிவராத்திரி நிகழ்வில் தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா கலந்து கொண்டார். இதே நிகழ்வில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் பங்கேற்றார். அவருடன் பிரேமலதா பேசியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின. இதன்மூலம், கூட்டணி உறுதிப்படுத்தப்படலாம் என ஊடகங்களில் பேசப்பட்டது. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது இந்தியா முதலிடத்தில் இருந்தாலும் சூப்பர்-8ல் கவலை தரும் 3 விஷயங்கள் எவை? வங்கதேசம்: தாரிக் ரஹ்மானிடம் தாராளம் காட்டும் இந்தியா, முகமது யூனுஸிடம் கசப்பாக நடந்துகொண்டது ஏன்? டி20 உலகக் கோப்பை: சாம்பியன் அணிகளை எதிர்கொள்ளும் ஜிம்பாப்வே - சூப்பர் 8 சுற்று எப்படி நடைபெறும்? மலேசியா வாசுதேவன் பாடிய 'மயங்க வைக்கும்' 10 பாடல்கள் End of அதிகம் படிக்கப்பட்டது பட மூலாதாரம்,PremallathaDmdk/X ஆனால், அடுத்த மூன்று நாட்களில் தி.மு.க கூட்டணியை தே.மு.தி.க தலைமை தேர்வு செய்துள்ளது. இப்படியொரு முடிவு எடுத்தது குறித்து செய்தியாளர் சந்திப்பில் தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விளக்கம் அளித்தார். அவர் பேசும்போது, "கட்சி நிர்வாகிகள் மத்தியில் வாக்குப்பெட்டி வைத்து அனைவரின் கருத்தையும் கேட்டோம். இந்தமுறை தி.மு.க கூட்டணியை அவர்கள் விரும்பினர்" எனக் கூறினார். "தொண்டர்களின் முடிவையே என்னுடைய முடிவாக ஏற்றுக் கொண்டு அறிவித்துள்ளோம்" என்கிறார் பிரேமலதா. கருணாநிதி - விஜயகாந்த் நட்பு அப்போது, கருணாநிதிக்கும் மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கும் இடையிலான நட்பு குறித்து பிரேமலதா விவரித்தார். "இருவரும் பல ஆண்டுகளாக நட்பில் இருந்தனர். எங்கள் திருமணத்தைக் கருணாநிதி தான் நடத்தி வைத்தார்" எனக் கூறினார். 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது தே.மு.தி.க உடன் கூட்டணி வைப்பதற்கு தி.மு.க தலைவர் கருணாநிதி பெரிதும் ஆர்வம் கட்டினார். இதுகுறித்து அவர் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, "பழம் நழுவி பாலில் விழப் போகிறது" எனப் பேசினார். இதனைக் குறிப்பிட்டுப் பேசிய பிரேமலதா, "எத்தனையோ முறை பேசப்பட்டாலும் கூட்டணி என வரும்போது நிறைவேறாமல் இருந்தது. பத்து ஆண்டுகள் கழித்து தேன் கலந்த பாலில் இது விழுந்துள்ளது" என்கிறார். அ.தி.மு.க கூட்டணியை தவிர்த்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "இந்தமுறை ஒட்டுமொத்த கட்சியின் விருப்பமாக தி.மு.க கூட்டணி இருந்தது" எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,PremallathaDmdk/X 'ராஜ்யசபாதான் இலக்கு' "மார்ச் 16-ஆம் தேதியன்று நடக்க உள்ள மாநிலங்களவை தேர்தலில் தி.மு.கவுக்கு நான்கு இடங்கள் கிடைக்க உள்ளன. அதில், ஓரிடத்தை தே.மு.தி.கவுக்கு கொடுப்பதற்கான வாக்குறுதியை வழங்கியிருக்கவே வாய்ப்புகள் அதிகம்" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் மாலன். அ.தி.மு.க கூட்டணியில் நீண்டகாலமாக மாநிலங்களவை இடத்தை தே.மு.தி.க கேட்டு வருவதையும் அவர் பிபிசி தமிழிடம் மேற்கோள் காட்டினார். 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.கவுக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டன. அப்போது, மாநிலங்களவை இடம் தொடர்பாக வாக்குறுதி வழங்கப்பட்டதாக செய்தியாளர் சந்திப்பின்போது பிரேமலதா தெரிவித்தார். பட மூலாதாரம்,PremallathaDmdk/X ஆனால், "அவ்வாறு எந்த வாக்குறுதிகளும் வழங்கப்படவில்லை" என அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறுத்திருந்தார். மேலும் அதிமுகவை சேர்ந்த இருவருக்கு மாநிலங்களவை இடங்களை அ.தி.மு.க தலைமை ஒதுக்கியது. இதனை எதிர்பார்க்காத பிரேமலதா, கடந்த ஆண்டு மே மாதம் செய்தியாளர் சந்திப்பில், "தி.மு.க கூறியபடி கமலுக்கு மாநிலங்களவை இடம் கொடுத்துள்ளனர். அரசியலில் நம்பிக்கை தான் முக்கியம். அப்போது தான் மக்கள் அவர்களை நம்புவார்கள்" என அவர் கூறினார். இதனைக் குறிப்பிட்டுப் பேசிய மூத்த பத்திரிகையாளர் மாலன், "மாநிலங்களவை இடத்தைக் கொடுக்க அ.தி.மு.க மறுத்துவிட்டது. இந்தமுறை சட்டமன்றத் தொகுதிகளை ஒற்றை இலக்கத்தில் கொடுத்தாலும் தே.மு.தி.க பெற்றுக் கொள்ளலாம். அவர்களுக்கு மாநிலங்களவை இடம் முக்கியமானதாக உள்ளது" என்கிறார். இதே கருத்தை முன்வைத்து பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "மாநிலங்களவை இடத்தை வைத்தே தே.மு.தி.க இந்த முடிவை எடுத்துள்ளது. அ.தி.மு.கவில் ஜெயக்குமார் உள்பட பல்வேறு மூத்த நிர்வாகிகள் மாநிலங்களவை இடத்தை எதிர்பார்த்துக் காத்துள்ளனர்" என்கிறார். ராஜ்யசபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாள் கூட்டணி முடிவாகியுள்ளதே? என செய்தியாளர்கள் பிரேமலதாவிடம் கேட்டபோது,'' ஒரு கட்சிக்கு என்ன தேவை உள்ளதோ அதையெல்லாம் பேசுவோம். கூட்டணிக்கு தலைமையில் உள்ள ஸ்டாலின் அறிவித்தால்தான் சரியாக இருக்கும்.'' என்றார். 'இப்படியொரு நகர்வை எதிர்பார்க்கவில்லை' பட மூலாதாரம்,Shyam Shanmugaam/Facebook படக்குறிப்பு,மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் "தி.மு.க வசம் நான்கு மாநிலங்களவை இடங்கள் உள்ளதால் அவர்களால் ஓரிடத்தைக் கொடுக்க முடியும். அ.தி.மு.க நிர்வாகிகளைத் தாண்டி வேறு கட்சிக்கு எடப்பாடி பழனிசாமி அந்த வாய்ப்பை கொடுத்தால் கட்சிக்குள் பிரச்னை ஏற்படும்" எனவும் ஷ்யாம் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய ஷ்யாம், "சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை நோக்கி தே.மு.தி.க நகரலாம் என எதிர்பார்த்த சூழலில் இப்படியொரு நகர்வை யாரும் எதிர்பார்க்கவில்லை" என்கிறார். படக்குறிப்பு,எடப்பாடி பழனிசாமி தே.மு.தி.க எடுத்த முடிவு சரியானதா? "தொடர் தோல்விகளை எதிர்கொண்டு வரும் தே.மு.தி.கவுக்கு இந்தக் கூட்டணி மிக முக்கியமானது" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை தனது கூட்டங்களில் த.வெ.க தலைவர் விஜய் முன்னிலைப்படுத்திப் பேசி வந்தார். "விஜயுடன் கூட்டணி சேருவதற்கும் தே.மு.தி.க தயாராக இல்லை என்பதையே பிரேமலதாவின் முடிவு காட்டுகிறது" எனக் கூறுகிறார் ஷ்யாம். "விஜயகாந்த்தின் ஒரு மகன் (விஜய பிரபாகரன்) விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். இன்னொரு மகன் (சண்முக பாண்டியன்) சினிமாவில் இருக்கிறார். அப்படியிருக்கும்போது இன்னொரு திரை நட்சத்திரம் பின்னால் அவர்கள் செல்வதற்கு வாய்ப்பில்லை" எனவும் அவர் குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சிக்கு என்ன பாதிப்பு? "தற்போது கூட்டணியில் தே.மு.தி.க வருவதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களை தி.மு.க குறைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன" எனக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் மாலன். "தே.மு.தி.கவை ஒரு காரணமாக தி.மு.க முன்வைக்கக் கூடும். அந்தவகையில், காங்கிரஸ் கட்சிக்கான முக்கியத்துவம் குறையலாம்" என அவர் தெரிவித்தார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. "இந்த முறை 25 தொகுதிகளுக்கும் மேல் தி.மு.க கொடுப்பதற்கும் வாய்ப்பில்லை" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். "சுமார் 170 தொகுதிகளுக்கும் மேல் போட்டியிடுவது என தி.மு.க முடிவெடுத்தால் காங்கிரஸ் கட்சிக்குக் கொடுக்கப்படும் தொகுதிகளில் மாற்றம் வரலாம்" எனவும் அவர் தெரிவித்தார். 'உரிய முடிவை முதலமைச்சர் எடுப்பார்' ஆனால், இந்தக் கூற்றை மறுத்துப் பேசுகிறார் தி.மு.க தலைமைக் கழக செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன். தேமுதிக வருகையை "காங்கிரஸ் கட்சிக்கு குறைவான இடங்களை ஒதுக்கலாம் என்ற ரீதியில் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை." எனக் கூறுகிறார். "இதுபோன்ற அனுமானங்களை நோக்கிச் செல்ல வேண்டியதில்லை" எனக் கூறும் கான்ஸ்டன்டைன், "அனைவரின் சுயமரியாதையும் அங்கீகாரத்தையும் காக்கும் வகையில் முதலமைச்சர் முடிவை எடுப்பார்" என்கிறார். பட மூலாதாரம்,X/AIADMKOfficial படக்குறிப்பு,தேமுதிக முன்பு அதிமுக கூட்டணியில் இருந்தது "எங்களுக்கான இடங்கள் குறையாது" தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் ஆ.கோபண்ணாவிடம் பிபிசி தமிழ் பேசியது. "கூட்டணிக்குள் தே.மு.தி.க வந்ததை வரவேற்கிறோம். இந்தநேரத்தில் தே.மு.தி.க இணைவதன் மூலம் தி.மு.க கூட்டணியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" எனக் கூறுகிறார். காங்கிரஸ் கட்சிக்கான இடங்கள் குறையும் எனக் கூறுவது தேவையற்ற அனுமானம் எனக் கூறும் கோபண்ணா, "அவர்கள் வருவதன் மூலம் எங்களுக்கான இடங்கள் குறையாது. அதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைமைகளுக்கு இடையில் சரியான புரிதல் உள்ளது. அவை பேசி தீர்க்கப்படும்" எனத் தெரிவித்தார் கூட்டணிகளை மாற்றுவதால் பாதிப்பா? "கூட்டணிகளை மாற்றுவது குறித்து தே.மு.தி.க கவலைப்படுவதில்லை. விஜயகாந்த் சந்தித்த கடைசி தேர்தலிலும் அக்கட்சி சரிவை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது" என்கிறார் மாலன். "விஜயகாந்த் மறைந்த பிறகு தே.மு.தி.கவுக்கு பெரிதாக செல்வாக்கு இல்லை" எனவும் அவர் குறிப்பிட்டார். ஆனால், "தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தே.மு.தி.க இல்லாதது பாதிப்பாக பார்க்கப்படலாம்" எனக் கூறுகிறார் ஷ்யாம். "இதனால் ஏற்படும் நஷ்டம் குறித்து கட்சிகள் ஆலோசிக்கும். அதற்கான மாற்று வழிகளை அவர்கள் ஆராய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன" எனக் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3ewv27z9x9o
  17. ஓட்டிசம் விழிப்புணர்வு: இலங்கையில் உலகின் மிக நீளமான உணர்வுசார் சுவர் ‘சென்சரி’ சுவர்நிர்மாணம் Published By: Vishnu 20 Feb, 2026 | 03:31 AM நாட்டில் ஓட்டிசம் எனப்படும் மதியிறுக்க நிலை குறித்த விழிப்புணர்வை அடிமட்ட மக்கள் மத்தியிலும் கொண்டு செல்லும் நோக்கில், ‘மரக் 2026’ எனும் பாரிய தேசிய விழிப்புணர்வு செயற்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக, எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி கண்டியில் உலகின் மிக நீளமான 'உணர்வுசார் சுவர்' ( சென்சரி வோல்) எனும் கட்டமைப்பை நிறுவி, கின்னஸ் உலக சாதனை படைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை( 18 ) கொழும்பு நைன் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இத் திட்டம் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டன. இந்த விழிப்புணர்வு நடவடிக்கைத் தொட்ர்பில் ‘ட்ரீஹவுஸ் சர்வதேச நிறுவனத்தின் பணிப்பாளரும், ஓட்டிசம் தொடர்பான சர்வதேச நிபுணருமான வைத்தியர் அந்தோனி ஜேம்ஸ் தெரிவிக்கையில், சர்வதேச தரவுகளின்படி , இன்று 31 குழந்தைகளில் ஒருவருக்கு ஓட்டிசம் பாதிப்பு உள்ளது. இது நாட்டில் ஒரு 'அமைதியான நெருக்கடியாக நிலவிவருகிறது. இலங்கையில் உள்ள 23 மில்லியன் மக்களில், ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராவது ஓட்டிசம் என்றால் என்ன என்பதை உண்மையாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே எமது இலக்கு. ஓட்டிசம் பாதிப்புடையவர்கள் உலகை உணரும் விதம் சாதாரண மக்களிடம் இருந்து மாறுபட்டது. அவர்களது மூளை புலன் தகவல்களைச் செயலாக்கும் விதம் வேறானது. இதனைப் பொதுமக்கள் இலகுவாகப் புரிந்துகொள்ளும் வகையிலேயே இந்த 'உணர்வுசார் சுவர்' உருவாக்கப்படுகிறது. தொட்டுணரக்கூடிய மற்றும் ஒளி, சத்தம் போன்ற பல்வேறு புலன்களைத் தூண்டக்கூடிய பாகங்கள் இச்சுவரில் பொருத்தப்பட்டிருக்கும். இலங்கையின் மரபுகளைப் பிரதிபலிக்கும் ஓவியங்கள் மற்றும் மீள்சுழற்சி செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு, பல்வேறு பாடசாலை மாணவர்கள், பல்கலைகழக மாணவர்கள் மற்றும் கலைஞர்களின் பங்களிப்புடன் இச்சுவர் வடிவமைக்கப்படவுள்ளது. செர்பிய மொழியில் இருந்து பெறப்பட்ட 'மரக்' என்ற சொல்லுக்கு, சிறு சிறு விடயங்களில் ஆழ்ந்த அர்த்தத்தையும் மகிழ்ச்சியையும் கண்டறிதல் என்று பொருள். ஓட்டிசம் கொண்ட ஒவ்வொரு தனிநபரும் தனித்துவமானவர்கள் என்பதையே இப்பெயர் குறிக்கின்றது என்றார். 2022 ஆம் ஆண்டு கனடாவிலிருந்து இலங்கை திரும்பிய டொக்டர் அந்தோனி ஜேம்ஸ், இலங்கையில் 'பயன்பாட்டு நடத்தை பகுப்பாய்வு எனும் சான்று அடிப்படையிலான சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தியுள்ளார். தற்போது வெளிநாடுகளில் இருந்தும் மாணவர்கள் இச்சிகிச்சைக்காக இலங்கையை நாடி வருவது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும். https://www.virakesari.lk/article/239102
  18. அரசியல்வாதிகள் பிக்குகளுக்கு அடங்கிபோகும்வரை அவர்களும் அடக்கியாள்வார்கள். அரசியல்வாதிகள் தயவில் பிக்குகளும், பிக்குகள் தயவில் அரசியல்வாதிகளும் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்கின்றனர். ஞானசார தேரரை அடைத்ததுபோல் அடைத்து, எதற்கும் அடிபணியாமல் சட்டம் தனது கடமையை செய்தால்; இவர்கள் தங்கள் போலிக்காவியை களைந்துவிட்டு சென்றுவிடுவார்கள். இனவாத அரசியல்வாதிகளை சிறைக்குள் தள்ளினால் இவர்கள் வீதிக்கு இறங்குவார்கள், இவர்களையும் பிடித்து போட்டுவிட்டால் தானே அடங்கிவிடுவார்கள். எப்போ இனவாதம் அழிகிறதோ அன்று பௌத்தமதமும் துகிலுரிக்கப்படும்.
  19. கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்போருக்கான முக்கிய அறிவிப்பு Feb 20, 2026 - 08:42 AM கச்சத்தீவு திருவிழாவுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பிரதீபன் விளக்கமளித்துள்ளார். இந்த திருவிழாவானது எதிர்வரும் 27 ஆம், 28 ஆம் திகதிகளில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், குறித்த திருவிழாவுக்கு செல்லும் யாத்திரிகர்களின் நன்மைக் கருதி 27 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி முதல் பி.ப 01.00 மணி வரை அரச மற்றும் தனியார் பேருந்துகள் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து குறிகட்டுவான் இறங்குதுறை வரை சேவையில் ஈடுபடும் என தெரிவித்துள்ளார். அத்துடன் கச்சத்தீவுக்கான படகுச் சேவையானது குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து 27 ஆம் திகதி காலை 5.00 மணி முதல் பி.ப 02.00 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிகட்டுவானில் இருந்து பயணிக்கும் ஒரு நபருக்கான படகிற்குரிய ஒரு வழிப் பயணக் கட்டணம் ரூ.1200 ஆகும். இதேவேளை கச்சத்தீவுக்கு குழுவாக / தனியாக படகில் வரும் யாத்திரிகர்கள் அவர்களது முழுப் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம், வயது, பால்நிலை மற்றும் அவர்கள் பயணிக்கும் படகு இலக்கம், படகின் வகை, படகோட்டியின் பெயர் தொலைபேசி இலக்கம் ஆகிய விபரங்களை இரு பிரதிகளில் கொண்டுவருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வெளி மாவட்டங்களிலிருந்து தமது சொந்தப்படகுகளில் திருவிழாவிற்கு செல்வோர் தமது வசிப்பிடங்களிற்கு அருகிலுள்ள கடற்படை முகாம்களை தொடர்புகொண்டு உரிய கடற்பயணப் பாதுகாப்பு அனுமதியினை பெற்றுக்கொள்வது அவசியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு படகு மூலம் பயணிப்போர் 2026.02.27 ஆந் திகதி பி.ப 4.00 மணிக்கு முன்னர் கச்சத்தீவை அடையும் வகையில் தங்களது பயணங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பிரதீபன் தெரிவித்தார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmlubb9lg0006356pqe03s6bu
  20. Today
  21. “மொட்டைகள்” நாட்டில் குழப்பம் விளைவிக்க ஆயத்தப் படுத்துகின்றார்கள்.
  22. ஏலியன்கள் பற்றிய ரகசிய ஆவணங்களை வெளியிடுமாறு ட்ரம்ப் அதிரடி உத்தரவு 20 Feb, 2026 | 11:26 AM ஏலியன்கள் என்கிற வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பான தகவல்கள், பறக்கும் தட்டுக்கள் முதலான அடையாளம் காணப்படாத பறக்கும் வான்வெளிப் பொருட்கள் (unidentified flying objects - UFOs), அடையாளம் காணப்படாத வான்வெளி நிகழ்வுகள் (Unidentified aerial phenomena - UAP) பற்றிய ரகசிய ஆவணங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுமாறு உரிய துறையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை (19) இந்த உத்தரவைப் பிறப்பித்த ட்ரம்ப், வேற்றுக்கிரகவாசிகளின் வாழ்க்கை, அடையாளம் காணப்படாத வான்வழி நிகழ்வுகள், பொருட்களைப பற்றிய சிக்கலான, ஆனால் மிகவும் சுவாரஸ்யமான தகவல்களை பொதுமக்கள் அறிய வெளியிடுமாறு உரிய அதிகாரிகளைப் பணித்துள்ளார். ட்ரம்ப் இவ்வாறு உத்தரவிட்ட பின்னர், வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட், ட்ரம்பின் அறிவிப்பை, “இந்த உலகத்துக்கு அப்பாற்பட்ட செய்திகள்” என எக்ஸ் தளத்தில் விபரித்துள்ளார். நீண்ட காலமாகவே அமெரிக்க பாதுகாப்புத்துறையும் நாசாவும் சேகரித்ததாக கூறப்படும் அடையாளம் தெரியாத வான்வெளிப் பொருட்கள் மற்றும் ஏலியன்கள் பற்றிய தகவல்களை ரகசியமாக வைத்திருப்பதாக சர்வதேச அளவில் பல்வேறு கருத்துக்கள் கிளம்பியிருந்தன. இந்நிலையில், சமீபத்தில் இது தொடர்பாக பேசிய ட்ரம்ப், “ஏலியன்கள் இருப்பது உண்மைதான்” என்று முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியிருந்ததை சுட்டிக்காட்டி, “ஒபாமா பெரிய தவறிழைத்துவிட்டார்” என்றும் விமர்சித்திருந்தார். அதனைத் தொடர்ந்தே, தற்போது, ட்ரம்ப், மனித அனுபவங்களுக்கு அப்பாற்பட்ட வான்வெளி பொருட்கள், ஏலியன்கள் பற்றி இதுவரை சேகரித்து வைக்கப்பட்டுள்ள தகவல்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். https://www.virakesari.lk/article/239136
  23. மகா சங்க மாநாடு இன்று! Feb 20, 2026 - 07:58 AM தற்காலத்தில் பௌத்த மதத்திற்கும் மகா சங்கத்தினருக்கும் எதிராக விடுக்கப்படும் அழுத்தங்கள் குறித்து நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில் 'மகா சங்க மாநாடு' இன்று (20) நடத்தப்படவுள்ளது. இந்த மாநாடு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனத் தலைமையகத்தில் ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சங்க மாநாடு எந்தவொரு அரசியல் நோக்கத்திற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டது அல்ல என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார். தற்போது பிக்குகளுக்கு எதிராக விடுக்கப்படும் பல்வேறு அழுத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதும், அது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே இந்த மாநாட்டின் பிரதான நோக்கம் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கிடையில், பிரிவினைவாதத்திற்கும் பிரிவினைவாத சக்திகளுக்கும் எதிராகச் செயற்படுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்து, மக்கள் மனு ஒன்றில் கையெழுத்திடும் வேலைத்திட்டம் நேற்று (19) ஆரம்பமானது. பெப்லியான சுனேத்ராதேவி மகா பிரிவெனா வளாகத்தில் இந்த மக்கள் மனுவில் கையெழுத்திடும் நடவடிக்கை ஆரம்பமானதாக 'அட தெரண' செய்தியாளர் தெரிவித்துள்ளார். பேராசிரியர்களான மேதகொட அபயதிஸ்ஸ தேரர், இந்துராகாரே தம்மரதன தேரர் மற்றும் மல்வானே சந்தரதன தேரர் ஆகியோரின் தலைமையில் இந்த வேலைத்திட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் குணதாச அமரசேகர மற்றும் கல்யாணந்த திராணகம உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட தேசிய அமைப்புகளின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இந்த மக்கள் மனுவை எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். https://adaderanatamil.lk/news/cmlu9ryae0004356p79ibzupu
  24. காபோனில் முகநூல், டிக்டொக் ஆகிய சமூக வலைத்தளங்களுக்கு தடை 20 Feb, 2026 | 10:14 AM மத்திய ஆபிரிக்க நாடான காபோனில் , சமூக ஒற்றுமையைக் சீர்குலைக்கும் வகையிலும் மோதல்களைத் தூண்டும் வகையிலும் தவறான செய்திகளை வெளியிடுவதாகக் கூறி, முகநூல் மற்றும் டிக்டொக் ஆகிய சமூக வலைத்தளங்கள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டின் ஊடக ஒழுங்குமுறை ஆணையமான தகவல்தொடர்புக்கான உயர் அதிகாரசபை இந்தத் தடையை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காபோனில் ஜனாதிபதி பிரைஸ் ஒலிகுய் என்கியூமா பதவியேற்று ஓராண்டு நிறைவடைவதற்குள், அங்கு கடும் சமூக அமைதியின்மை நிலவி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் முதல் சம்பளம் மற்றும் பணிச்சூழல் கோரி ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த எதிர்ப்புப் போராட்டங்கள் தற்போது சுகாதாரத் துறை, உயர்கல்வி மற்றும் ஒளிபரப்புத் துறை உள்ளிட்ட ஏனைய அரச துறைகளுக்கும் பரவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த இக்கட்டான சூழ்நிலையில், சமூக ஊடகங்கள் ஊடாக தேவையற்ற வதந்திகள் உருவாக்கப்படுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/239124
  25. கைதான பிரித்தானிய முன்னாள் இளவரசர் விடுவிப்பு! Feb 20, 2026 - 07:11 AM அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அண்ட்ரூ மவுண்ட்பேட்டன்- வின்சர், விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று (19) தேம்ஸ் வேலி பொலிஸார், நோர்போக்கில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும், பெர்க்சையர் மற்றும் நோர்போக்கில் உள்ள சில முகவரிகளில் சோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தது. அண்ட்ரூவின் கைது குறித்துப் பதிலளித்த மூன்றாம் சார்ள்ஸ் மன்னர், சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்றும், பொலிஸாருக்கு தனது முழுமையான மற்றும் இதயப்பூர்வமான ஆதரவும் ஒத்துழைப்பும் உண்டு என்றும் தெரிவித்தார். மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டினுடனான தொடர்பு மற்றும் ரகசியத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக அண்ட்ரூவிடம் விசாரணை நடத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக பொலிஸ் முன்னதாகத் தெரிவித்திருந்தது. அமெரிக்க அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஆவணங்களின் தொகுப்பில் இவர்கள் இருவருக்கும் இடையிலான தொடர்பாடல்கள் இடம்பெற்றிருந்தன. எவ்வாறாயினும், அந்த நபர் விசாரணையின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதை தேம்ஸ் வேலி பொலிஸார் உறுதிப்படுத்தியது. இந்நிலையில் பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறிய முன்னாள் இளவரசர், வாகனத்தின் பின் இருக்கையில் சாய்ந்தபடி அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. அண்ட்ரூ கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். அவர் எந்தவொரு தவறும் செய்யவில்லை என்பதைத் தொடர்ந்து உறுதியாகவும் கடுமையாகவும் மறுத்து வருகிறார். ஒரு முழுமையான மதிப்பீட்டைத் தொடர்ந்து, தற்போது முறையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தேம்ஸ் வேலி பொலிஸார் தெரிவித்தது. மேலும், 2010 ஆம் ஆண்டில் அண்ட்ரூவுடன் பாலியல் ரீதியான சந்திப்பிற்காக எப்ஸ்டினால் இரண்டாவது பெண் ஒருவர் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார் என்ற தனிப்பட்ட குற்றச்சாட்டு குறித்தும் தாம் ஆராய்ந்து வருவதாக பெப்ரவரி தொடக்கத்தில் பொலிஸ் தெரிவித்திருந்தது. பிரித்தானியர் அல்லாத அந்தப் பெண், அந்தச் சமயத்தில் 20 வயதுகளில் இருந்துள்ளார். அண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர் கைது செய்யப்படுவதற்கு முன்னர், உள்துறை அமைச்சுக்கு தேம்ஸ் வேலி பொலிஸ் முன்கூட்டியே தகவல் வழங்கியிருந்ததாக பிபிசி செய்தி சேவை தகவல் வௌியிட்டுள்ளது. எவ்வாறாயினும் இடம்பெற்ற இந்தக் கைது நடவடிக்கை, பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பானதல்ல என்பது குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmlu83jma0002356pg8ja8094
  26. சிக்கந்தர் ராஸாவின் அதிரடி உதவியுடன் இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாறு படைத்தது ஸிம்பாப்வே Published By: Vishnu 19 Feb, 2026 | 07:56 PM (ஆர்.பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி) கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண பி குழுவுக்கான கடைசி லீக் போட்டியில் அணித் தலைவர் சிக்கந்தர் ராஸாவின் அதிரடி ஆட்டம் இலங்கையை அதன் சொந்த மண்ணில் வெற்றிகொள்ள ஸிம்பாப்வேக்கு வழிவகுத்தது. இந்தப் போட்டியில் நிதானம், பொறுமை, சிறந்த வியூக அமைப்பு ஆகிய அனைத்தையும் செவ்வனே பிரயோகித்த ஸிம்பாப்வே 3 பந்துகள் மீதம் இருக்க 6 விக்கெட்களால் வெற்றிபெற்று தோல்வி அடையாத அணியாக சுப்பர் 8 சுற்றை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவுள்ளது. இதேவேளை, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சகலதுறைகளிலும் அபரிமிதமாக பிரகாசித்து வெற்றியீட்டிய இலங்கைக்கு ஸிம்பாப்வேயுடனான தோல்வி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டுள்ளது. ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் 2010இல் இலங்கையிடம் தோல்வி அடைந்த ஸிம்பாப்வே இப்போது 16 வருடங்கள் கழித்து ரி20 உலகக் கிண்ணத்தில் இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாறு படைத்தது. சொந்த மண்ணில் இலங்கை சாதிக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இப் போட்டியைக் கண்டுகளிக்க வருகை தந்திருந்த சுமார் 30000 ரசிகர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே கிடைத்தது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றது. பெத்தும் நிஸ்ஸன்க மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி ஆரம்ப விக்கெட்டில் 22 ஓட்டங்களைப் பெற்ற குசல் பெரேராவுடன் 54 ஓட்டங்களையும் இரண்டாவது விக்கெட்டில் 14 ஓட்டங்களைப் பெற்ற குசல் மெண்டிஸுடன் 46 ஓட்டங்களையும் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார். அத்துடன் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை சார்பாக அதிக ஓட்டங்களைப் பெற்றவர் என்ற சாதனையை பெத்தும் நிஸ்ஸன்க நிலைநாட்டினார். அவர் 88 போட்டிகளில் 2636 ஓட்டங்களைப் பெற்று குசல் மெண்டிஸ் 104 போட்டிகளில் பெற்ற 2607 ஓட்டங்கள் என்ற சாதனையை முறியடித்தார். பெத்தும் நிஸ்ஸன்க 8 பவுண்டறிகளுடன் 60 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். மத்திய வரிசையில் பவன் ரத்நாயக்க 44 ஓட்டங்களையும் துனித் வெல்லாலகே ஆட்டம் இழக்காமல் 15 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் க்றேம் க்ரேமர் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்ளெசிங் முஸராபனி 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்றட் இவான்ஸ் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைபற்றினர். 179 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 19.3 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது. ப்றயன் பெனெட், தடிவன்ஷே மாருமணி (34) ஆகிய இருவரும் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு ஸ்திரமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். மொத்த எண்ணிக்கை 98 ஓட்டங்களாக இருந்தபோது ரெயான் பேர்ல் (23) இரண்டாவதாக ஆட்டம் இழந்தார். ஆனால், ப்றையன் பெனெட், அணித் தலைவர் சிக்கந்தர் ராஸா ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் வேகமாக 69 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு வெற்றியை அண்மிக்கச் செய்தனர். 19ஆவது ஓவரில் துஷான் ஹேமன்தவின் பந்துவீச்சில் சிக்கந்தர் ராஸா (45), டஷிங்கா முசேக்கிவா (1) ஆகிய இருவரினது மிகவும் கடினமான பிடிகளை தசுன் ஷானக்க எடுத்து ஆட்டம் இழக்கச் செய்தார். ஆனால் அந்த விக்கெட்கள் இலங்கைக்கு காலம் கடந்தவையாக அமைந்தன. கடைசி ஓவரில் ஸிம்பாப்வேயின் வெற்றிக்கு 8 ஓட்டங்கள் தேவைப்பட்டது. தீக்ஷன வீசிய 20ஆவது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸ் ஒன்றை விளாசிய முனியொங்கா அடுத்த பந்தில் ஒற்றையை எடுத்து வெற்றி இலக்கை சமப்படுத்தினார். மூன்றாவது பந்தை ப்றயன் பெனட் பவுண்டறியாக்கி அணியின் வெற்றியை உறுதிசெய்தார். ப்றயன் பெனெட் 63 ஓட்டங்களுடனும் டோனி முன்யொங்கா 8 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் துஷான் ஹேமன்த 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆட்டநாயகன்: சிக்கந்தர் ராஸா https://www.virakesari.lk/article/239092
  27. மைத்ரி விக்ரமசிங்க இன்று CIDக்கு அழைப்பு Feb 20, 2026 - 06:29 AM முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவியான மைத்ரி விக்ரமசிங்க இன்று (20) குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதி குற்ற விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் அவரை நிதி குற்றப் விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, கடந்த 18ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக, வாக்குமூலம் ஒன்றினைப் பதிவு செய்து கொள்வதற்காகவே மைத்ரி விக்ரமசிங்கவுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmlu6k4jb0001356pdla0dnwx

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.