All Activity
- Past hour
-
விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு
விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு adminFebruary 3, 2026 யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாயப் பண்ணைகளை விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் தொடர்பில் புதிய யாழ். மாவட்ட கட்டளை தளபதியுடன் வடமாகாண ஆளுநர் கலந்துரையாடியுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வா ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாகக் கடந்த 27ஆம் திகதி கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வா, வடக்கு மாகாண ஆளுநரை சம்பிரதாயபூர்வமாகச் சந்தித்துக் கலந்துரையாடினார். அதன் போது, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பொதுமக்களின் காணிகளை விடுவித்தல் தொடர்பாகவும், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட காணி விடுவிப்புக்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாயப் பண்ணைகளை விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் மற்றும் அதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது. பாதுகாப்புத் தரப்பினரால் நிர்வகிக்கப்படும் வர்த்தக நிலையங்கள் தொடர்பாகவும் ஆளுநரால் இச்சந்திப்பின் போது சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், பாதுகாப்புத் தரப்பினர் கடந்த காலங்களில் வழங்கிய ஒத்துழைப்புக்கள் குறித்தும் இதன்போது கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. அந்தவகையில் அச்சுவேலி மற்றும் பலாலிப் பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்களை ஒட்டியுள்ள சில விவசாய நிலங்கள் மற்றும் கால்நடைப் பண்ணைகள், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பாரிய நெல் மற்றும் மரக்கறிச் செய்கை பண்ணைகள் மற்றும் ஏ9 வீதி மற்றும் பிரதான வீதிகளில் இராணுவத்தினால் நடத்தப்படும் ‘ஹெல விரு’ (Hela Viru) போன்ற உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களின் நிர்வாகத்தை சிவில் அமைப்புகளிடம் ஒப்படைக்க ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். காணிகள் விடுவிக்கப்பட்ட பின்னர், அங்கு மீளக் குடியேறும் விவசாயிகளுக்கு அரசாங்கம் மற்றும் சர்வதேச அமைப்புகள் ஊடாக நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படாத நிலங்களைச் சீரமைக்கத் தேவையான டிராக்டர்கள், நீர் இறைக்கும் இயந்திரங்கள் மற்றும் விதைகளை வழங்க வடமாகாண விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட காணிகளில் வீடுகள் சேதமடைந்திருந்தால், புதிய வீடுகளை அமைப்பதற்கு தலா 2.5 மில்லியன் ரூபாய் வரையிலான அரசாங்க வீடமைப்பு மானியம் வழங்கப்பட வாய்ப்புள்ளதுடன் குறைந்த வட்டி விகிதத்தில் விவசாயக் கடன்களை வழங்கி, மீண்டும் பயிர்ச்செய்கையை ஆரம்பிக்க வங்கிகள் ஊடாக வசதிகள் செய்யப்படும். புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சில்வா, தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில், படிப்படியாக இந்தக் காணிகளை விடுவிக்கத் தனது இணக்கத்தைத் தெரிவித்துள்ளார். இது சிவில்-இராணுவ உறவை (Civil-Military Coordination) வலுப்படுத்தும் ஒரு முக்கிய நகர்வாகக் கருதப்படுகிறது. https://globaltamilnews.net/2026/228260/
- Today
-
சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் முதல்வராக ஈழத்தமிழர்.
சிறுபான்மையினரின் பாதுகாப்பினை 3 பெரிய அளவுகோலின் அடிப்படையில் கணிப்பதாக கூறப்படுகிறது. சட்ட அங்கீகாரம் அரசியல் அதிகார பகிர்வு சிறுபான்மை மீதான முரண்பாடுகளை கையாளும் முறை (Conflict management outcome) இதனடிப்படையில் தென்னாசியாவில் மிக மோசமாக சிறுபான்மையினரை நடத்தும் இலங்கையினை எவ்வாறு மேற்கு நாட்டுடன் ஒப்பிட முடியும்? தென்னாசியாவில் உள்ள மற்ற நாடுகளும் பெருமளவில் இதே நிலையில் இருந்தாலும் அவை ஒப்பீட்டளவில் மேலான நிலையில் இருகின்ற நிலையில், இலங்கை நிலை மோசமாக இருக்கின்றது. இலங்கையில் ஜனநாயக ஆட்சி முறைமை என கூறப்பட்டாலும் பல கட்சிகள் வந்தாலும் இந்த நிலமை மாறமுடியாத நிலை காணப்படுகிறது. இது எதனால்? மதங்களில் இருக்கும் பிற்போக்கான மூட நம்பிக்கை போன்ற நாட்டிற்கான கோட்பாட்டில் (State Doctrine) மகாவம்ச போன்ற கற்பனைக்கதைகளின் (சிங்கமே இல்லாத நாட்டில் சிங்கத்தின் வாரிசுகள் போன்ற கறபனை கதைகள்) பாதிப்பு காரணமாக இருக்குமோ என நினைக்கிறேன்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நீண்ட இடைவெளிக்குப் பின் திறக்கப்பட்டது ரஃபா எல்லை Published By: Digital Desk 3 02 Feb, 2026 | 04:54 PM இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, காசா மற்றும் எகிப்துக்கு இடையிலான ரஃபா (Rafah) எல்லை திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது. போரினால் சிதைந்துபோன காசாவிலிருந்து மக்கள் வெளியேறவும், வெளியேறியவர்கள் மீண்டும் தாயகம் திரும்பவும் இது ஒரு முக்கிய வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது. கடந்த மே 2024-இல் இஸ்ரேல் இராணுவம் ரஃபா எல்லையைக் கைப்பற்றியது முதல், இந்தப் பாதை பெரும்பாலும் மூடப்பட்டே இருந்தது. தற்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் அக்டோபர் மாதம் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு அங்கமாக இந்த எல்லை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் இந்த அமைதிப் பேச்சுவார்த்தையின் இரண்டாம் கட்டம் ஆரம்பித்த நிலையில், எல்லையைத் திறப்பது ஒரு முக்கிய நிபந்தனையாக இருந்தது. எல்லை திறக்கப்பட்டாலும், இதில் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன: எல்லையைக் கடக்கும் மக்கள் சுமார் 2.5 கி.மீ தூரம் நடைபாதையாகவே கடக்க வேண்டும். வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. முதல் நாளில் காசாவிற்குள் நுழைய 50 பேருக்கும், வெளியேற 50 பேருக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உள்ளே நுழையும் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் இராணுவத்தின் மிகத்தீவிரமான பாதுகாப்புச் சோதனைகளுக்குப் பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். யாருக்கு முன்னுரிமை? போரின் ஆரம்பக் கட்டங்களில் காசாவை விட்டு வெளியேறிய சுமார் 1 இலட்சம் பாலஸ்தீனியர்களில், முதற்கட்டமாக சிலருக்கு மீண்டும் தாயகம் திரும்ப அனுமதி கிடைத்துள்ளது. அதேபோல், வைத்திய சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நோயாளிகள் மற்றும் அவசரத் தேவையுள்ளவர்கள் வெளியேறவும் இது உதவும். எகிப்து எல்லையை ஒட்டிய பிலடெல்பி வழித்தட பகுதியில் இஸ்ரேல் இராணுவம் முள்வேலிகளுடன் கூடிய வலுவான கொங்கிறீட் சுவர்களை எழுப்பியுள்ளது. எல்லை திறக்கப்பட்ட போதிலும், திங்கட்கிழமை வடக்கு மற்றும் தெற்கு காசாவில் நடந்த இஸ்ரேலியத் தாக்குதல்களில் 3 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகப் பாலஸ்தீனத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/237634
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
நீங்கள் கூறிய இவர்களைப் பார்த்து தான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாட்டெழுதி இருப்பார் என நினைக்கிறேன். ஆளும் வளரணும், அறிவும் வளரணும், அதுதாண்டா வளர்ததி என அவர் எழுதியது சிறுவர்களுக்காக. ஆனால் முதியவர்கள் சிலருக்கும் இது பொருந்துகிறது.
-
-
அரசியலமைப்புச் சபை இன்று கூடுகிறது
அரசியலமைப்புச் சபை இன்று கூடுகிறது Feb 3, 2026 - 06:58 AM அரசியலமைப்புச் சபை இன்று (03) கூடவுள்ளது. அரசியலமைப்புச் சபையின் தலைவரான சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று நண்பகல் 12.00 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் இந்தக்கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் குறித்து இன்றைய தினம் அரசியலமைப்புச் சபை கவனம் செலுத்தவுள்ளது. அதன்படி, புதிய கணக்காய்வாளர் நாயகத்தைத் தெரிவு செய்யும் பணிகள் இன்றைய தினத்திற்குள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்கிரமரத்ன ஓய்வு பெற்றதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி முதல் கணக்காய்வாளர் நாயகம் பதவி வெற்றிடமாக உள்ளது. அந்தப் பதவிக்கான பதில் கடமைகளை மேற்கொள்வதற்காகக் கணக்காய்வாளர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியான தர்மபால கம்மன்பில நியமிக்கப்பட்டிருந்ததுடன், அவரது பதில் கடமைக் காலமும் கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. தற்போது கணக்காய்வாளர் நாயகம் பதவி வெற்றிடமாக உள்ளதுடன், ஜனாதிபதியினால் பல சந்தர்ப்பங்களில் அரசியலமைப்புச் சபைக்குப் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட போதிலும், அந்தப் பெயர்கள் அரசியலமைப்புச் சபையினால் நிராகரிக்கப்பட்டன. எவ்வாறாயினும், கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக ஜனாதிபதியினால் புதிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் அரசியலமைப்புச் சபை இறுதித் தீர்மானத்தை எடுக்கவுள்ளது. இதனிடையே, பெப்ரவரி மாதத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று நடைபெறுகிறது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், சுதந்திர தினம் காரணமாக நாளை (04) பாராளுமன்ற அமர்வு நடைபெறாது என பாராளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cml5x68lm04rjo29nvnvxw7aw
-
பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 5 வீராங்கனைகள்
பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 5 வீராங்கனைகள் 2 பிப்ரவரி 2026 பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதின் (Indian Sportswoman of the Year) 6-ஆவது பதிப்புக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 5 வீராங்கனைகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கிரிக்கெட் வீராங்கனைகள் ஹர்மன்ப்ரீத் கௌர் மற்றும் ஸ்மிருதி மந்தனா, சதுரங்க வீராங்கனை திவ்யா தேஷ்முக், துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை சுருச்சி சிங், தடகள வீராங்கனை ஜோதி யாராஜி ஆகியோர் இந்தப் பட்டியலில் உள்ளனர். 2025-ஆம் ஆண்டில் இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் பங்களிப்பை கௌரவிக்கும் விதமாகவும் விளையாட்டு துறையில் அனைத்து பெண்களின் சாதனைகளை கொண்டாடும் விதமாகவும் இந்த விருது வழங்கப்படுகிறது. பிபிசியால் தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவர் குழு, ஐந்து இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் இறுதிப் பட்டியலைத் தொகுத்தது. இந்த நடுவர் குழுவில் இந்தியா முழுவதிலுமிருந்து அனுபவமிக்க விளையாட்டுப் பத்திரிகையாளர்கள், நிபுணர்கள் மற்றும் எழுத்தாளர்கள் உள்ளனர். இம்முறை பிபிசி முதன்முறையாக வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்க தேர்வுக்குழுவை (Grand Jury) அறிமுகம் செய்துள்ளது. இந்த தேர்வுக்குழுவில் டென்னிஸ் வீரர் லியாண்டர் பேஸ், நீளம் தாண்டுதல் வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் மற்றும் பாரா தடகள வீராங்கனை தீபா மாலிக் ஆகியோர் உள்ளனர். பிப்ரவரி 16-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். மேலும் 3 பிரிவுகளின் கீழ் நடுவர் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட வீராங்கனைகளை பிபிசி கௌரவிக்கும். அதன்படி, மாற்றுத்திறனாளிகள் பிரிவில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளை முன்னிலைப்படுத்த பிபிசி மாற்றுத்திறனாளி வீராங்கனை, இளம் தடகள வீராங்கனைகளின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக பிபிசி வளரும் வீராங்கனை விருது மற்றும் மூத்த வீராங்கனை ஒருவரின் ஈடுஇணையற்ற பங்களிப்புகளை கொண்டாடும் விதமாக பிபிசி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும். பிபிசி நியூஸின் இடைக்கால உலகளாவிய இயக்குநர் (Interim Global Director) ஃபியோனா கிராக் கூறுகையில், "பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது (ISWOTY) இந்தியா முழுவதும் கடந்த ஓராண்டில் பெண்கள் செய்த சிறப்பான சாதனைகளை கொண்டாடுகிறது. அந்த சாதனைகளை வெளிக்கொணரவும் கொண்டாடவும் மற்ற எந்த ஊடக அமைப்பும் மேற்கொள்ளாத வகையில் பிபிசி உலக சேவை முக்கியமான பங்கை வகிக்கிறது. இந்த பெண்கள் கடின முயற்சியினால் அடைந்த சாதனைகளை இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் ஒலிக்கச் செய்ய ஒரு தளத்தை வழங்குவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்." என தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சி கலெக்டிவ் நியூஸ்ரூமால் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் தயாரிக்கப்படுகிறது. கலெக்டிவ் நியூஸ்ரூமின் முதன்மை ஆசிரியரும் இணை நிறுவனருமான ரூபா ஜா கூறுகையில், "திருமணம், வயது, உடல் ரீதியான விதிகள் அல்லது உடல் ரீதியான சவால்கள் காரணமாக விளையாட்டுகளில் பங்கேற்க பெண்களுக்கு பெரும்பாலும் ஊக்கம் தரப்படுவதில்லை. 'எல்லோரும் விளையாடலாம்' (Everybody Can Play) என்ற இந்தாண்டின் தலையங்க கருப்பொருள், விளையாட்டு எல்லோருக்குமானது என்ற எளிமையான யோசனைக்கு வலுவூட்டுகிறது. அதன் உண்மையான தாக்கம் அதனால் ஏற்படும் விளைவுகளால் அளவிடப்படாமல், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வாய்ப்புகளால் அளவிடப்படுகிறது. களத்தில் தைரியமாக இறங்கி தன்னுடைய இடத்தைக் கோரும் எந்தவொரு பெண்ணையும் ISWOTY 2026 கொண்டாடுகிறது." என்றார். பரிந்துரைக்கப்பட்ட வீராங்கனைகள் யார்? திவ்யா தேஷ்முக், சதுரங்கம் சதுரங்க விளையாட்டில் இளம் சாதனையாளரான 20 வயது திவ்யா தேஷ்முக், கடந்தாண்டு ஜூலை மாதம் சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு (FIDE) நடத்திய மகளிர் உலகக் கோப்பையை வென்ற முதல் இந்தியர் மற்றும் அந்த கோப்பையை கைப்பற்றிய இளம் சாம்பியன் என்ற புதிய வரலாற்றை படைத்தார். இதன்மூலம் திவ்யா தேஷ்முக் கிராண்ட் மாஸ்டரானார். இறுதிப்போட்டியில் திவ்யா இந்தியாவின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டரான கொனேரு ஹம்பியை தோற்கடித்தார். அந்த தருணம், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பொறுப்பை கையளிப்பது போன்றதாக இருந்தது. மேற்கு இந்திய நகரமான நாக்பூரில் 2005-ஆம் ஆண்டு பிறந்தவர் திவ்யா தேஷ்முக். இவர் தன்னுடைய ஐந்து வயதில் சதுரங்கம் விளையாட தொடங்கினார். இரண்டு ஆண்டுகளுக்குள் அவர் 7 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய சாம்பியன் பட்டம் வென்றார். 2017-ஆம் ஆண்டில் 12 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலக இளம் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றார். 2022-ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் திவ்யா முக்கிய பங்கு வகித்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தனிநபர் பிரிவில் தங்கம் வென்றார் அவர். அதுமட்டுமல்லாமல், தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார். ஹர்மன்ப்ரீத் கௌர், கிரிக்கெட் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனான ஹர்மன்ப்ரீத், நவம்பர் மாதத்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய மகளிர் அணி முதல் உலகக் கோப்பையை வெல்வதற்கு தன் அணியை வழிநடத்திச் சென்றார். சொந்த மண்ணில் விளையாடிய ஹர்மன்ப்ரீத், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 339 என்ற இமாலய இலக்கை துரத்துகையில் 88 பந்துகளில் 89 ரன்கள் அடித்து, அணியை முன்னின்று வெற்றிக்கு வழிநடத்தினார். 2017-ஆம் ஆண்டில் நடந்த மற்றொரு உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் அதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 171 ரன்கள் எடுத்தது, மகளிர் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த இன்னிங்ஸ்களுள் ஒன்றாக இன்றளவும் கருதப்படுகிறது. 1989-ஆம் ஆண்டு, பஞ்சாபில் விளையாட்டின் மீது ஆர்வம் கொண்ட பெற்றோருக்கு பிறந்தவர் ஹர்மன்ப்ரீத். அவருடைய தந்தை ஹர்மன்ப்ரீத்துக்கு "குட் பேட்டிங்" என எழுதப்பட்ட டி-ஷர்ட்டை வாங்கிக் கொடுத்தார். இந்திய அணியின் பேட்டிங் முகமாக மாறுவார் என்ற தீர்க்கதரிசனத்திற்கு ஏற்ப 2009-ஆம் ஆண்டு அறிமுகமானதில் இருந்தே அவர் திறம்பட விளையாடினார். ஹர்மன்ப்ரீத் 2023-ஆம் ஆண்டின் டைம் இதழின் வளர்ந்து வரும் 100 தலைவர்களின் பட்டியலில் இடம்பெற்றார். அதே ஆண்டில் பிபிசியின் மிகவும் செல்வாக்குமிக்க 100 பெண்கள் பட்டியலிலும் இடம்பெற்றார். 2017-ஆம் ஆண்டு இந்திய விளையாட்டுத் துறையில் இரண்டாவது உயரிய அங்கீகாரமான அர்ஜுனா விருது அவருக்கு வழங்கப்பட்டது. மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு விளையாட்டு துறையில் அவருடைய சிறந்த பங்களிப்புகளுக்காக 2026-ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மிருதி மந்தனா, கிரிக்கெட் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனான ஸ்மிருதி மந்தனா, எல்லா காலத்திலும் சிறந்த வீராங்கனைகள் பட்டியலில் ஒருவராக திகழ்கிறார். 29 வயதான இடது கை பேட்டரான ஸ்மிருதி மந்தனா, மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டாவது அதிக சதங்களையும், தற்போதைய வீராங்கனைகளில் மூன்றாவது அதிக ரன்கள் எடுத்த வீராங்கனையாக உள்ளார். மகாராஷ்டிராவின் சாங்லி நகரில் பிறந்த மந்தனா, மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடிய தனது தந்தை மற்றும் சகோதரரால் ஊக்கம் பெற்றார். 2013-ஆம் ஆண்டில், 19 வயதுக்குட்பட்டோருக்கான மண்டல அளவிலான போட்டியில் விளையாடிய போது, உள்ளூர் அளவிலான ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். கடந்த ஆண்டு செப்டம்பரில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 50 பந்துகளில் சதம் அடித்தார் . இது 50 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு இந்தியரின் அதிவேக சதமாகும். இதன் மூலம் விராட் கோலியின் சாதனையை ஸ்மிருதி மந்தனா முறியடித்தார். அவர் 2018 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார். 2019-ஆம் ஆண்டில் இந்திய அரசிடமிருந்து மதிப்புமிக்க அர்ஜுனா விருதை அவர் பெற்றார். சுருச்சி சிங், துப்பாக்கி சுடுதல் துப்பாக்கி சுடும் வீரர்களை உருவாக்குவதில் சிறப்பான வரலாற்றைக் கொண்ட ஹரியாணாவைச் சேர்ந்த சுருச்சி சிங், 2024-ஆம் ஆண்டில் தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் 7 தங்கப் பதக்கங்களை வென்று தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். 19 வயதான அவர் அடுத்த ஓராண்டிற்குள் சர்வதேச அளவில் சீனியர் பிரிவு போட்டிகளில் அறிமுகமாகி, விரைவிலேயே உலக அரங்கில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். 2025-ஆம் ஆண்டில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பின் (ஐஎஸ்எஸ்எஃப் - ISSF) உலகக் கோப்பைத் தொடரில் பியூனஸ் அயர்ஸ் (Buenos Aires), லிமா மற்றும் மியூனிக் ஆகிய இடங்களில் தலா ஒன்று என 3 தங்கப் பதக்கங்களை வென்றார். லிமாவில் ஆண், பெண் இணைந்த கலப்பு குழு போட்டியில் அவர் தங்கம் வென்றார். கஜகஸ்தானில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் -2025 தொடரில் மகளிர் குழு போட்டியில் மனு பாக்கர் மற்றும் பாலக் குலியாவுடன் இணைந்து வெண்கலம் வென்றார். கடந்தாண்டு செப்டம்பரில் ஐஎஸ்எஸ்எஃப்-யின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் முதலிடத்தைப் பிடித்தார் சுருச்சி சிங். ஜோதி யாராஜி, தடகளம் 2024-ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் 100 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் பங்கேற்க ஜோதி யாராஜி தகுதி பெற்றார். இதன் மூலம், தடகளம் மற்றும் களப் போட்டிகளில் சர்வதேச அளவிலான சாதனைகள் மிகக் குறைவாகவே இருக்கும் இந்தியாவில் இருந்து 'ஒலிம்பிக்கில் 100 மீ தடை தாண்டும் ஓட்டத்திற்கு தகுதி பெற்ற முதல் வீராங்கனை' என்ற பெருமையை பெற்றார். 26 வயதான ஜோதி யாராஜி ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் என்பதால், தடைகளைத் தாண்டுவது உண்மையில் ஒரு பிரச்னையாக இருந்ததில்லை. அவரது தந்தை ஒரு காவலாளியாகவும், தாய் வீட்டு வேலைகள் செய்பவராகவும் இருந்தனர். 2022-ஆம் ஆண்டில், 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 13.23 விநாடிகளில் இலக்கை எட்டி, புதிய தேசிய சாதனையை அவர் படைத்தார். அதன் பின்னர் அவர் தனது சொந்த சாதனையை பலமுறை முறியடித்துள்ளார். 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார். ஸ்பிரிண்ட் ( குறுகிய தூர ஓட்டப்பந்தயம்) மற்றும் தடை தாண்டும் ஓட்டப் போட்டிகளில் பல தங்கப் பதக்கங்களை வென்றார். உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலத்தையும் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளியையும் அவர் வென்றார். 2023-ஆம் ஆண்டில், ஜோதி ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப்பில் 60 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் தங்கத்தையும், ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளியையும் வென்றார். இதன்மூலம் அவர் ஆசியாவின் சிறந்த தடை தாண்டும் வீராங்கனையாக தனது பெயரை உறுதிப்படுத்தினார். 2025-ஆம் ஆண்டு குமியில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்திலும் அவர் தங்கப் பதக்கத்தை வென்றார். 2024-ஆம் ஆண்டு ஜோதி யாராஜிக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது இந்தியாவில் விளையாட்டு வீராங்கனைகளின் சாதனைகளை கௌரவிப்பதற்கும் கொண்டாடுவதற்கும் பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது(ISWOTY) 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்த விருதை பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து வெற்றியாளரானார். 2020-ஆம் ஆண்டுக்கான விருதை உலக சதுரங்க சாம்பியன் கொனேரு ஹம்பியும் 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுக்கான விருதுகளை பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு வென்றார். 2024-ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் இந்த விருதை வென்றார். தடகள வீராங்கனைகள் பி.டி. உஷா மற்றும் அஞ்சு பாபி ஜார்ஜ், பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி, ஹாக்கி வீராங்கனை பிரீதம் சிவாச் மற்றும் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் ஆகியோர் முந்தைய ஆண்டுகளில் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை பெற்றுள்ளனர். டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா படேல் மற்றும் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லேகரா ஆகியோர் பிபிசி இந்தியாவின் பாரா மகளிர் விளையாட்டு வீராங்கனை விருதுகளை வென்றுள்ளனர். கிரிக்கெட் வீராங்கனை ஷாஃபாலி வர்மா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் மற்றும் வில் வித்தை வீராங்கனை ஷீதல் தேவி ஆகியோர் பிபிசியின் வளர்ந்துவரும் வீராங்கனைகளுக்கான விருதுகளை வென்றுள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cg4e914y9l6o
-
இந்தியா மீதான வரி 18%-ஆக குறைப்பு: வர்த்தக ஒப்பந்தமும் எட்டப்பட்டுவிட்டதாக டிரம்ப் அறிவிப்பு
இந்தியா மீதான வரி 18%-ஆக குறைப்பு: வர்த்தக ஒப்பந்தமும் எட்டப்பட்டுவிட்டதாக டிரம்ப் அறிவிப்பு பட மூலாதாரம்,@USAmbIndia 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை 18% ஆக அமெரிக்கா குறைத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இந்திய பிரதமர் நரேந்திர மோதியும் சமூக ஊடகம் மூலம் இதனை அறிவித்துள்ளனர். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டு விட்டதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். எனினும் மோதியின் பதிவில் வர்த்தக ஒப்பந்தம் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டதாகவும் அதன் கீழ் இந்தியா மீதான பரஸ்பர வரியை 25 சதவிகிதத்திலிருந்து 18 சதிவிகிதமாக குறைப்பதாகவும் தனது ட்ரூத் சோசியல் பதிவில் தெரிவித்திருந்தார் டிரம்ப். "இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மீதான வரி 18% ஆக குறைக்கப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி," என பிரதமர் மோதி தெரிவித்திருந்தார். எனினும், இந்த அறிவிப்புக்குப் பிறகு "மோதி மீதான டிரம்பின் அழுத்தம் தெளிவாக தெரிகிறது," என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "நான் பல முறை கூறியதைப் போல, பிரதமர் மோதியை ஒரு சிறந்த நண்பராக டிரம்ப் கருதுகிறார். வர்த்தகம் ஒப்பந்தம் தொடர்பான அறிவிப்பால் நான் உற்சாகமாக இருக்கிறேன். அமெரிக்கா-இந்தியா உறவில் நிறைய திறன் உள்ளது." என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு இருநாடுகளுக்கும் இடையே உறவு பல ஏற்றஇறக்கங்களைச் சந்தித்த நிலையில் இந்த அறிவிப்பு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது 25% கூடுதல் விதிக்கப்பட்டு ஒட்டுமொத்த வரி 50% ஆனது. டொனால்ட் டிரம்ப் கூறியது என்ன? பட மூலாதாரம்,Getty Images வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட டிரம்ப் தனது பதிவில், "இந்தியப் பிரதமர் மோதியுடன் பேசியது எனக்குப் பெருமையாக இருந்தது. அவர் என்னுடைய சிறந்த நண்பர்களில் ஒருவர் மட்டுமல்ல அவரது நாட்டில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் மதிக்கப்படும் தலைவர். வர்த்தகம் மற்றும் ரஷ்யா-யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வருவது உட்பட பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினோம். ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்திவிட்டு அமெரிக்காவிலிருந்து, குறிப்பாக வெனிசுவேலாவில் இருந்தும் எண்ணெய் வாங்க அவர் ஒப்புக்கொண்டார்." எனத் தெரிவித்திருந்தார். ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படும் யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வர இது உதவும் எனக் கூறிய டிரம்ப், "பிரதமர் மோதி உடனான நட்பு மற்றும் அவர் மீதான மரியாதைக்காக அவரது கோரிக்கையின் பெயரில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே உடனடியாக அமலுக்கு வரும் வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். இதன் கீழ் பரஸ்பர வரியை 25 சதவிகிதத்தில் இருந்து 18% ஆக அமெரிக்கா குறைத்துள்ளது." என்றார். இந்த ஒப்பந்தம் தொடர்பான விவரங்களைக் குறிப்பிட்ட டிரம்ப் தன்னுடைய பதிவில், "இந்தியா தனது வரியை பூஜ்யமாக்குவதையும் அமெரிக்கா உடனான வரி அல்லாத தடைகளை அகற்றுவதையுயும் நோக்கி நகரும். அமெரிக்காவில் இருந்து கூடுதல் கொள்முதலை மேற்கொள்ள பிரதமர் தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார். இதில் 500 பில்லியன் டாலர் மதிப்புடைய அமெரிக்க எரிபொருள், தொழில்நுட்பம், வேளாண் பொருட்கள், நிலக்கரி மற்றும் இதர பொருட்கள் அடங்கும்." இனி வரும் காலங்களில் இந்தியாவுடனான எங்களின் அற்புதமான உறவு மேலும் வலுவாகும் எனக் கூறிய டிரம்ப், "மோதியும் டிரம்பும் வேலையை செய்து முடிக்கும் நபர்கள், பெரும்பாலான நபர்கள் அப்படிக் கிடையாது." என்றார். மோதி கூறியது என்ன? பட மூலாதாரம்,Getty Images இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோதி தனது எக்ஸ் பதிவில், "எனது அருமை நண்பரான அதிபர் டிரம்புடன் பேசியது பெரும் மகிழ்ச்சி. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மீதான வரி தற்போது 18% ஆக குறைக்கப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி. 140 கோடி இந்திய மக்களின் சார்பில் இந்த அறிவிப்புக்காக அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்." எனத் தெரிவித்திருந்தார். உலகின் மிகப்பெரிய பொருளாதாரமும் ஜனநாயகமும் கொண்ட இரு நாடுகள் இணைந்து பணியாற்றினால் அது நமது மக்களுக்கு நன்மை பயக்கும் என்றும் பரஸ்பர நன்மைக்கான எண்ணற்ற வாய்ப்புகளைத் திறக்கும் என்றும் மோதி தெரிவித்தார். "உலகளாவிய அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளத்திற்கு அதிபர் டிரம்பின் தலைமை முக்கியமானது. அமைதிக்கான அவரின் முயற்சிகளில் இந்தியா உறுதியாக அவருடன் நிற்கிறது. நம்முடைய கூட்டணியை எதிர்பாராத உயரங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு அவருடன் பணியாற்றுவதை எதிர்நோக்கி இருக்கிறேன்." என்றும் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார். காங்கிரஸ் விமர்சனம் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் எதிர்வினையாற்றி உள்ளார். "ஆபரேஷன் சிந்தூரை நிறுத்துவதாக அவர் (டிரம்ப்) வாஷிங்டனில் இருந்து அறிவித்தார். ரஷ்யா மற்றும் வெனிசுவேலாவில் இருந்து இந்தியாவின் எண்ணெய் கொள்முதல் பற்றிய தகவலையும் அவர் வாஷிங்டனில் இருந்து வழங்கினார். தற்போது இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான அறிவிப்பையும் அவர் வாஷிங்டனில் இருந்து அறிவித்திருக்கிறார். அதன் முழு விவரம் இன்னும் எதிர்பார்க்கப்படுகிறது." என தனது எக்ஸ் பதிவில் தெரிவித்திருந்தார் மேலும் அவர், "மோதி மீதான டிரம்பின் அழுத்தம் அல்லது செல்வாக்கு தெளிவாகத் தெரிகிறது. தற்போது டிரம்பிடமிருந்து ஒரு இடைவெளியை மோதி கடைபிடிப்பதாகத் தெரிகிறது. மோதி விட்டுக் கொடுத்துவிட்டார் எனத் தெரிகிறது. இது 'மிகப்பெரிய ஒப்பந்தம்' ஆக இருக்க முடியாது." எனக் குறிப்பிட்டிருந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgl8w9krwkno
-
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : தேரர்களின் ரிட் மனு மீதான தீர்ப்பு அடுத்த மாதம் வரை ஒத்திவைப்பு
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பான மனுக்கள் தள்ளுபடி Feb 3, 2026 - 10:45 AM திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலங்கொடை கஸ்ஸப தேரோ மற்றும் திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் ரொஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cml65a32e04rwo29n6rpbshb4
-
நாமல் ராஜபக்ஷ சி.ஐ.டியில் முன்னிலை!
நாமல் ராஜபக்ஷ சி.ஐ.டியில் முன்னிலை! 03 Feb, 2026 | 11:03 AM ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (3) காலை முன்னிலையாகியுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நாமல் ராஜபக்ஷ அத்திணைக்களத்தில் இன்று காலை 10.15 மணியளவில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/237678
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவுஸ்ரேலிய அணித்தெரிவு பற்றிய சர்ச்சைகள் உள்ளது, 2 இடது கை சுழல் பந்து வீச்சாளர்கள் உள்ளார்கள், கோனலி அனைத்துறை ஆட்டக்காரராக இருந்தாலும் அவரரது துடுப்பாட்டம் சிறப்பாக இல்லை ஏற்கனவே கூனமன் இடது கை சுழல் வீசுகின்ற நிலையில் இன்னொரு பந்து வீச்சாளர் அதுவும் பகுதி நேர பந்து வீச்சாளர் தேவையா? மக்ஸ்வல் கோனலி போலவே பி பி எல் தொடரில் மோசமான போர்மில் உள்ளார்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நியுசிலாந்து அணி இந்தியணியினை ஒருநாள் போட்டி தொடரினை வென்றதற்கு பின்னர் ரி 20 போட்டியில் நியுசிலாந்து அணியினை இந்தியணி துவம்சம் செய்திருந்தது, இந்த இந்தியணியினை பார்க்கும் போது நிச்சயமாக இந்தியாவிற்குத்தான் கோப்பை போல இருக்கின்றது, நான் வளமை போல இந்தியணியினை தெரிவு செய்யவில்லை அந்த அதிர்ஸ்டமும் இந்தியணிக்கு சாதகமாக உள்ளது.
-
சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் முதல்வராக ஈழத்தமிழர்.
உங்கள் விருப்பம் நியாயமானது . உங்களை ஜேர்மனியராக ஏற்றுக்கொண்ட ஜேர்மனிக்கும் முதலாம் தலைமுறையாக புலம் பெயர்ந்து வந்த பல ஆசிய ஆபிரிக்க மக்களை சீமான் வகையறா இனவெறி கக்கி பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளின் பிரச்சாரத்துக்கு எடுபடாமல் அந்த மக்களில் உள்ள திறமைகளை மட்டும் அங்கீகரித்து உயர் பதவிகளுக்கு அனுமதிக்க வாக்களிக்கும் மேற்குலக மக்களுக்கு நன்றி. இந்த முன்மாதிரியை விரும்பும் நீங்கள் உண்மையில் உயர்ந்தவர்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாபர் மிக மெதுவாக இந்த தொடர் முழுவதும் ஆடினார், குறித்த போட்டியில் பவர் சேர்ச் இன் முதலாவது பந்தினை தான் எதிர்கொள்வதற்காக சிமித் ஓட்டத்தினை மறுத்து விட்டார் அதனால் ஏற்பட்ட மனஸ்தாபம். சிமித் சிறப்பாக இந்த போட்டி தொடரில் விளையாடினார் ஏனோ அவுஸ்ரேலிய அணியில் இடம் பிடிக்கமுடியவில்லை. புதிய தலைமுறை ரி20 வீரர்கள் முதலாவது பந்திலேயே அடித்தாடுகிறார்கள் பாகிஸ்தான் அணியினர் சிலர் ஆடியிருந்தார்கள் பெரிதாக ஒருவரும் சோபிக்கவில்லை, ஸாகின் சா அப்ரிடி கூட ஆரம்பத்தில் பந்து வீச்சில் தடுமாறினார் பின்னர் சிறப்பாக செயற்பட்டார், சிறப்பாக செயற்படவேண்டும் என நினைத்து மேலதிக அழுத்தத்தினை தாமாக உருவாக்கினார்களா என தெரியவில்லை. அந்த போட்டியின் பின்னர் சிட்னி சிக்ஸர் அணித்தலைவர் கூறினார் தாம் கலாச்சார இடைவெளியினை புரிந்து கொண்டோம் எனவும், பாபரினை பற்றி நல்ல விதமாகவே கூறினார், அதனை போலவே சிமித்தும் கூறியிருந்தார், பாபரின் ஈகோவினை பாதித்திருக்க கூடும் அதற்கான எதிர் வினையினை இந்திய யுரிப்கள் மிகைப்படுத்தியிருந்தார்கள் என நினைக்கிறேன். பாகிஸ்தான் வீரர்கள் பாபர் உள்ளடங்கலாக களத்தடுப்பில் மிக உற்சாகமாக இருந்தார்கள்.
-
கிராமி விருதை வென்றார் தலாய் லாமா
பரவாயில்லை. இவரே ரம்புக்கு திரும்ப கொடுத்திடுவார்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஸ்டீவ் சிமித்தோட என்னமோ வாய்க்கால் தகராறு போல. இருவரும் ஒற்றுமையாக விளையாடவில்லை என்று நினைக்கிறேன். வீரர்கள் அறையிலும் ஏதோ உரசல் என்று கதை. பாபரின் விளையாட்டை பாதித்திருக்கக்கூடும். பாபரே, மீண்டு வா. உன் ஆட்டங்காண காத்திருக்கிறோம.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
பெரும்பான்மை பெளத்த சிங்களவர்கள் கூட இந்த தமிழ்தேசியம் தொடர்பான பீதியினாலேயே தமிழ் மக்களின் மீதான இன அடக்குமுறையாக சுமந்திரன் கூற முற்படுகிறார், இது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை, இலங்கையில் உள்ள அனைத்து சிறுபான்மை மக்களும் நேரடியான அடக்குமுறைக்குள்ளாக்கப்படுகின்றவர்களாகவே இருக்கின்றார்கள். அதிகார பரவலாக்கமோ அரசியல் சட்டமைப்பு சீர்திருத்தமோ நாட்டை பிரிக்கும் என நினைப்பது ஒரு முட்டாள்தனம் அதற்கான சூழலை இந்த அடக்குமுறைகளாலேயே உருவாக்குகிறார்கள். தமிழ் தேசியம் என்பது தவிர்க்க முடியாதது என்பது போலவே உணருகின்றேன், ரே டாலியோ இன் மாறுகின்ற உலக ஒழுங்கினை கையாள்வது எனும் புத்தகத்தில் கூறியுள்ள பண்புகளினடிப்படையில் தமிழ் தேசியத்தின் பண்புகள் பல இருக்கின்றது அதனால் எதிர்காலத்தில் அவ்வாறான ஒரு நிலை ஏற்படலாம். அது ஒரு வெறும் நிகழ்தகவு போன்ற விடயம்.
- Yesterday
-
கிராமி விருதை வென்றார் தலாய் லாமா
ட்ரம்புக்கு…. இந்த விசயம் தெரியுமா? தெரிந்தால்… தனக்கும், இந்த விருது வேணும் என்று அடம் பிடிப்பார். 😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஓம் இரண்டு பேரும் விக்வாஸ் தொடரில் விளையாடினவை..............இத்தாலி அணி இந்த முறை சில மாஜிக் காட்டக் கூடும்................... இங்லாந் வீரர் அவருக்கு இங்லாந் அணியில் வாய்ப்பு கொடுக்க வில்லை...............இப்போது இத்தாலிக்கு விளையாடுகிறார்...........நல்ல வீரர் இவரால் இத்தாலி அணிக்கு கூடுதல் பலம்..........................
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
தமிழ் தேசியம் தவிர்க்க முடியாத உண்மை, அந்த யதார்த்த புரிதல் எனக்கும் உள்ளது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இவரது சகோதரர் கரி கூட இத்தாலிக்காக விளையாடுகிறார். பாபர் பிபிஎல் தொடரில் சிட்னி சிக்ஸர் அணிக்காக விளையாடியிருந்தார், தொடர் முழுவதும் மோசமான போர்மில் இருந்தார்.
-
மேஜர் லீக் கிரிக்கெட் முதல் சுற்று நிறைவு; துடுப்பாட்டத்தில் ஷாருஜன் முதல் நிலை
இவரின் சிறுவயது காணொளி ஓன்று மிகப் பிரபலம். அவரின் லாகவமான துடுப்பாட்டத்துக்காக. இடதுகை ஆட்டக்காரர். சங்காவின் சாயல் ஒன்று இருந்தது. அதனால், சின்ன சங்கா என்று அப்போது அழைக்கப்பட்டார். சங்கக்காராவும் அதைப் பார்த்திருந்தார் என்று நினைக்கிறேன்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இதென்ன புதுசா. என்னிய வச்சு காமடி கீமடி பண்ணேல தானே. 😊 வாங்க சேர்ந்தே போவம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வியாஸ்காந்த் மட்டும்தான் இப்போ இருக்கிற ஒரே ஆள். ஆனால் அவரின் பெறுபேறுகள் அவ்வளவாய் இல்லை. அவர் இலங்கை அணிக்காக இரு போட்டிகளில் சமீபத்தில் விளையாடியிருந்தார். அவரை அணியில் சேர்க்காதது ஆச்சரியமில்லை. தற்போது நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணப் போட்டிகளில், மூன்று தமிழ் வீரர்கள் ஆடுகிறார்கள். அவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. பார்ப்போம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பையா ஏன் இவ்வளசவு சுணக்கம்? கொப்பியடிக்க ஆளில்லாமல் செம்பாட்டானை பிடிக்க வேண்டியாதாக இருக்கிறது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாபர்தான் உங்களை காக்க வேணும் 🤣