All Activity
- Past hour
-
'கேரளம்' ஆகும் கேரளா - பெயர் மாற்றத்தின் பின்னணி என்ன?
'கேரளம்' ஆகும் கேரளா - பெயர் மாற்றத்தின் பின்னணி என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம், கேரளம் எனப் பெயரை மாற்றுவதற்கான தீர்மானம் கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 26 பிப்ரவரி 2026, 16:38 GMT புதுப்பிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் கேரளா மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என மாற்றுவதற்கான அம்மாநில சட்டப்பேரவையின் தீர்மானத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம், கேரளம் எனப் பெயரை மாற்றுவதற்கான தீர்மானம் கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. "மலையாள மொழியில் நமது மாநிலத்தின் பெயர் 'கேரளம்'. 1956-ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று மாநிலங்கள் மொழி அடிப்படையில் உருவாக்கப்பட்டன. கேரளப் பிறவி தினமும் நவம்பர் 1-ஆம் தேதி வருகிறது. தேசிய விடுதலை போராட்ட காலம் தொட்டு மலையாளம் பேசும் மக்களுக்காக ஒன்றுபட்ட கேரளா உருவாக்கப்பட வேண்டும் என்கிற வலுவான கோரிக்கை இருந்து வந்தது. ஆனால் அரசியலமைப்பின் முதலாவது அட்டவணையில் நமது மாநிலத்தின் பெயர் 'கேரளா' எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பிரிவு 3-இன் படி 'கேரளம்' எனப் பெயரை மாற்றுவதற்கான அவசர நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசுக்கு இந்தச் சட்டப்பேரவை ஒருமனதாக கோரிக்கை வைக்கிறது," என அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பட மூலாதாரம்,X படக்குறிப்பு,காங்கிரஸ் எம்பி சசி தரூர் மற்றும் சிபிஎம் எம்பி ஜான் பிரிட்டாஸ் காங்கிரஸ் - சிபிஎம் கருத்து இது குறித்து பிப்ரவரி 24-ஆம் தேதி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திருவனந்தபுரம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் நகைச்சுவையாக சில கேள்விகளையும் முன்வைத்துள்ளார். "கேரள மக்களை கேரளைட் மற்றும் கேரளன் என அழைக்கும் பதங்கள் இனி என்னவாகும்? "கேரளமைட்" என்பது ஒரு நுண்ணுயிரி போலவும், "கேரளமியன்" என்பது ஒரு அரிய மண் கனிமம் போலவும் ஒலிக்கிறது." என தனது எக்ஸ் பதிவில் எழுதியுள்ளார். அதனை குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ், அடையாளம் என்பது ஒரு எழுத்துப் போட்டி அல்ல எனத் தெரிவித்துள்ளார். "எங்களுடைய நினைவுகளிலும், கவிதைகளிலும், போராட்டங்களிலும் எப்போதுமே எங்களுக்கு கேரளம் என்று தான் இருந்துள்ளது. அதிகாரப்பூர்வமாக இது கேரளா எனச் சுருக்கப்பட்டாலும் பலரும் அதனை மேலும் கேரள் என குறைத்துவிட்டார்கள். அதனால் தான் உங்களுடைய கட்சி சட்டப்பேரவையில் எங்களுடன் ஒன்றாக நின்று கேரளம் என்கிற பெயரை மீட்டெடுக்க ஒருமனதாக தீர்மானித்தது." என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,JBP More படக்குறிப்பு,பேராசிரியரும் எழுத்தாளருமான முனைவர் ஜேபி பிரசாந்த் மோரே. கேரளம் என்கிற பெயர் தென்னை என்பதிலிருந்தும் சேரளம் என்பதிலிருந்தும் வந்தது என இருவேறு கருத்துக்கள் இருப்பதாகக் கூறுகிறார் பேராசிரியரும் எழுத்தாளருமான முனைவர் ஜேபி பிரசாந்த் மோரே. இதே கருத்தை வெளிப்படுத்தும் கேரளாவைச் சேர்ந்த வரலாற்றாசிரியரான கே.என்.கணேஷ், கேரளம் என்கிற பெயருக்கு மேலும் பல்வேறு பொருள் வழங்கப்படுவதாகவும் கூறுகிறார். 2011-ஆம் ஆண்டு தனது புத்தகம் ஒன்றில் கேரளம் என்கிற பெயரை பயன்படுத்தியதற்கு ஆட்சேபனை எழுந்ததாகக் கூறும் எழுத்தாளர் பிரசாந்த் மோரே தற்போது தன்னுடைய முடிவு உறுதியானது என்கிறார். கேரள இஸ்லாமியர்கள் பற்றிய இவருடைய புத்தகத்திற்கு 'கேரளமின் முஸ்லிம்களின் தோற்றம் மற்றும் ஆதிகால வரலாறு (Origin and Early History of Muslims of Keralam' எனத் தலைப்பிட்டிருந்தார். பட மூலாதாரம்,Other books/JBP More படக்குறிப்பு,ஜேபி பிரசாந்த் மோரே எழுதிய புத்தகம் புதுச்சேரியில் பிறந்து வளர்ந்த இவர் தற்போது பிரான்சில் வசித்து வருகிறார். 'மதராஸின் தோற்றம் மற்றும் அடித்தளம் (Origin and Foundation of Madras)' என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். "கேரளா என்பது ஆங்கிலமயப்பட்ட பெயர், கேரளம் என்பது தான் மலையாள பெயர். நான் எனது புத்தகத்தில் கேரளம் என்பதைப் பயன்படுத்தியபோது ஒரு தரப்பினர் அதற்கு ஆட்சேபனை தெரிவித்தனர். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கேரளா என்பது பொதுவான பெயராக இருந்தது. ஆனால் அப்போதும் கேரளம் என்பது மலையான வழக்கில் பயன்பாட்டில் இருந்துள்ளது." என்றார். ஆனால் கேரளம் என்கிற பெயர் கோரிக்கைக்குப் பின்னால் ஒருங்கிணைந்த இயக்கம் இல்லை என்று குறிப்பிடும் அவர் தனது புத்தகத்திற்கு முதலில் கேரளம் என்பதைப் பயன்படுத்த முடிவு செய்த பின்னணியையும் விவரிக்கிறார். 18-ஆம் நூற்றாண்டு பிரெஞ்சுக் குறிப்பில் கேரளம் புதுச்சேரியில் 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியவியலாளரான மரிதாஸ் பவுல் தன்னுடைய கையெழுத்துப் பிரதிகளில் கேரளம் எனக் குறிப்பிட்டதாகக் கூறுகிறார் பிரசாந்த் மோரே. அவரின் கட்டுரைகளைத் தொகுத்து புத்தகமாக பிரசாந்த் மோரே வெளியிட்டுள்ளார். "பாரிஸில் உள்ள தேசிய பிரெஞ்சு நூலகத்தில் நான் அவருடைய கையெழுத்துப் பிரதிகளைக் கண்டெடுத்தேன். பிரெஞ்சு காலனியாக இருந்த புதுச்சேரியில் அவர் மொழிபெயர்ப்பாளராக இருந்துளார். அந்த குறிப்புகளில் கேரளத்தை ஆண்ட மன்னனுக்குப் பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கேரளன் என்பதும் ஒன்று, அதன் பொருள் 'கேரளம்' நாட்டு மக்களின் தலைவன். அதிலிருந்து தான் நான் கேரளம் என்பதை தேர்வு செய்தேன். பாண்டிச்சேரி-புதுச்சேரி, மதராஸ்-சென்னை, பம்பாய்-மும்பை என மாறியதைப் போலத் தான் இந்தப் பெயர் மாற்றத்தையும் ஒரு அடையாளம் சார்ந்ததாகவே பார்க்க முடிகிறது. இதில் அரசியல் கணக்குகள் இல்லாமல் இருக்காது," என்றார். பட மூலாதாரம்,JBP More படக்குறிப்பு,மரிதாஸ் பவுலின் கட்டுரைகளைத் தொகுத்து புத்தகமாக பிரசாந்த் மோரே வெளியிட்டுள்ளார். மலையாளமயப்படுத்தப்படும் ஆங்கிலப் பெயர்கள் கேரளாவில் கொச்சி உட்பட பல்வேறு ஊர்களின் பெயர்கள் ஆங்கிலமயப்படுத்தப்பட்டு பின்னர் மலையாள பயன்பாட்டிற்கு மாறியுள்ளன. அந்த வரிசையில் தற்போது மாநிலத்தின் பெயரும் மாற்றப்படுகிறது என்றார் கே.என் கணேஷ். அரசு திட்டங்கள் கூட ஆங்கிலத்தில் கேரளா என அழைக்கப்பட்டாலும் மலையாளத்தில் கேரளம் என்றே தொடர்ந்து அழைக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். "திருவனந்தபுரம், Trivandrum என்றும் கொச்சி, Kochin என்றும் கோழிக்கோடு, Calicut என அழைக்கப்பட்டது. இவை காலப்போக்கில் அதன் உண்மையான மலையாளப் பெயர்களைப் பெற்றன. அந்த வரிசையில் தற்போது கேரளம் என்பதும் வருகிறது." எனத் தெரிவித்தார். '' கேரளாவில் ஓர் எழுத்து மட்டுமே சேர்வதாகத் தெரிந்தாலும் கலாசார உணர்வு கொண்டவர்களுக்கு இது முக்கியமானதாக உள்ளது." என்று தெரிவிக்கிறார் அவர். பல்வேறு பொருள் கொண்ட 'கேரளம்' பட மூலாதாரம்,Getty Images "அசோக மன்னரின் கல்வெட்டில் கேரள புத்திரர் என்கிற குறிப்பு உள்ளது. கேரளம் என்பது சேர மகன், சேர மக்கள் என்கிற பொருள்படும் சமஸ்கிருத அர்த்தம் கொண்ட பெயர். 18-ஆம் நூற்றாண்டு மலையாள புத்தகங்களில் கேரளநாட்டார் என்கிற குறிப்பு உள்ளது. தென்னை என்பதற்கு மலையாளத்தில் கேரம் என்று பொருள், அதனால் தென்னை அதிகம் விளையும் நிலம் என்கிற பொருளும் உள்ளது .சேரல், சேரநாடு என இப்படி பல்வேறு அர்த்தங்களில் பல பெயர்கள் வழங்கப்பட்டாலும் காலப்போக்கில் கேரளம் என்கிற சமஸ்கிருதமயப்பட்ட பெயர் நிலைத்துவிட்டது," என்றார் கே.என் கணேஷ். "திருவிதாங்கூர், கொச்சி மற்றும் மலபார் சமஸ்தானங்களை இணைத்து ஒன்றுபட்ட மலையாள மொழி பேசும் பிரதேசத்துக்கான கோரிக்கை எழுந்தது. கேரளம் என்பது ஒட்டுமொத்த மலையாள மொழி பேசும் பிரதேசத்துக்கான அடையாளமாக மாறிப்போனது." என்றார் அவர். மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு, மசோதா நிறைவேறிய பிறகு குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறப்படும். பின்னர் கேரளாவின் பெயர் கேரளம் என மாறும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g2k02py2no
-
-
நாமலின் ஆளுமைக்கு முன்னால் நேருக்கு நேர் கேள்வி கேட்க முதுகெலும்பற்ற தமிழ் மாணவர் அமைப்புகள்! - சரத் வீரசேகர விளாசல்
நாமலின் ஆளுமைக்கு முன்னால் நேருக்கு நேர் கேள்வி கேட்க முதுகெலும்பற்ற தமிழ் மாணவர் அமைப்புகள்! - சரத் வீரசேகர விளாசல் 26 Feb, 2026 | 04:02 PM பிரித்தானியாவின் புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் (Oxford) மற்றும் கேம்பிரிட்ஜ் (Cambridge) பல்கலைக்கழக ஒன்றியங்களின் அழைப்பை ஏற்று அங்கு உரையாற்றச் சென்ற நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தமிழ் மாணவர் அமைப்புகள் முன்னெடுத்த எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் இன்றைய தினம் (26) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், நாமல் ராஜபக்ஷவின் ஆளுமைக்கு முன்னால் நேருக்கு நேர் நின்று கேள்வி கேட்கும் திராணியற்ற தமிழ் மாணவர் அமைப்புகளே இந்த எதிர்ப்புகளை முன்னெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார். ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்தின் தலைவியின் கூற்றுப்படி, நாமல் ராஜபக்ஷவுடன் விவாதிப்பதற்கும் கேள்விகளை எழுப்புவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோதிலும், தமது பாதுகாப்பைக் காரணம் காட்டி அவர் முன்னால் நேரடியாகக் கேள்வி கேட்க தமக்கு முடியாது என தமிழ் மாணவர் அமைப்புகள் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் நாமல் ராஜபக்ஷவின் ஆளுமைக்கு முன்னால் முதுகெலும்புடன் நின்று பேச இவர்களுக்கு முடியாது என்பது உறுதியாகியுள்ளதோடு, சுதந்திரமான பேச்சு மற்றும் விவாதங்களுக்குப் புகழ்பெற்ற இத்தகைய சர்வதேச பல்கலைக்கழகங்கள் பிரிவினைவாத தமிழ் மாணவர் அமைப்புகளின் அழுத்தங்களுக்குப் பணிந்து தமது கலாசாரத்தைக் காட்டிக் கொடுத்தமை வருத்தத்துக்குரியது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை குறித்து கருத்துத் தெரிவித்த சரத் வீரசேகர, இது கத்தோலிக்க திருச்சபையையும் ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களையும் ஏமாற்றுவதற்காக அரசாங்கம் ஆடிய ஒரு நாடகம் எனச் சாடினார். விவசாயிகளின் சாபம் மற்றும் நிலக்கரி மோசடிகளில் சிக்கியுள்ள அரசாங்கம், மக்களின் கவனத்தை திசைதிருப்பவே சலேயைக் கைது செய்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தினார். 2018இல் சலே சஹ்ரானைச் சந்தித்ததாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என்றும், அந்த காலப்பகுதியில் சலே மலேசியாவிலும் இந்தியாவிலும் பணியாற்றி வந்தமையால் அவர் இலங்கையிலேயே இருக்கவில்லை என்றும் அவர் விளக்கமளித்தார். அத்துடன், ரணில் விக்ரமசிங்க நியமித்த குழுவும் அசாத் மௌலானாவின் குற்றச்சாட்டு பொய் என்பதை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், சிறந்த புலனாய்வு அதிகாரியான சலேவைச் சிறையில் அடைத்துவிட்டு, தாக்குதலுக்கு நிதியுதவி செய்த இப்ராஹிம் போன்றவர்களை வெளியே நடமாடவிடுவது நியாயமற்றது என அவர் குறிப்பிட்டார். தற்போதைய அரசாங்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புகளை (Diaspora) திருப்திப்படுத்துவதற்காகவே செயற்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், டயஸ்போராவுக்கு நோகும் என்பதால் ஜனாதிபதி இன்று 'ரணவிருவா' என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை என்றும், சுதந்திர தினத்தில் இராணுவத் தளபாடங்களைக் காட்சிப்படுத்தாததற்கும் இதுவே காரணம் என்றும் தெரிவித்தார். சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சூழ்ச்சியாளர்களின் சொற்களைக் கேட்காமல் மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை வென்று ஈழக் கனவைத் தகர்த்த காரணத்தினாலேயே ராஜபக்ஷ குடும்பத்தின் மீது சர்வதேசமும் டயஸ்போராவும் இன்றும் வைரம் கொண்டுள்ளதாக அவர் கூறினார். இவ்வாறான பிரிவினைவாத சக்திகளின் அழுத்தங்களுக்குப் பணியாமல் ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் போன்ற நிறுவனங்கள் எதிர்காலத்தில் தமது கொள்கைகளை நிலைநாட்ட வேண்டும் என தான் எதிர்பார்ப்பதாகவும் சரத் வீரசேகர மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/239646
-
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 620 கிலோ உயர் ரக முந்திரிப் பருப்பு மூடைகள் இந்தியாவில் பறிமுதல்; ஒருவர் கைது
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 620 கிலோ உயர் ரக முந்திரிப் பருப்பு மூடைகள் இந்தியாவில் பறிமுதல் ; ஒருவர் கைது 26 Feb, 2026 | 03:42 PM இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபத்தை அடுத்துள்ள மரைக்காயர்பட்டிணம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக படகில் ஏற்றிக்கொண்டிருந்த 620 கிலோ உயர் ரக முந்திரிப் பருப்பு மூடைகளும் இன்று (26) குறித்த கடற்கரைப் பகுதியில் வைத்து அப்பிராந்திய பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகு, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுடன் மரைக்காயர் பட்டினத்தைச் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் பறிமுதல் செய்த முந்திரிப் பருப்பு மூடைகளின் பெறுமதி இந்திய மதிப்பில் 15 லட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் தனுஷ்கோடி கடல் வழியாக மண்டபம், வேதாளை, மரைக்காயர் பட்டினம், குந்துகால், களிமண்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக நாட்டுப்படகில் கஞ்சா பீடி இலை பண்டல்கள், முந்திரி பருப்பு, கடல் அட்டை, சமையல் மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மரைக்காயர் பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பைபர் படகில் பொருட்கள் கடத்தப்படவிருப்பதாக கியூ பிரிவு ஆய்வாளர் ஒருவருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை கியூ பிரிவு பொலிஸார் குறித்த கடற்கரையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோதே இந்த மூடைகள் சிக்கியுள்ளன. பொலிஸார் கைது நடவடிக்கையில் ஈடுபட்டபோது இருவரை மடக்கிப் பிடிக்க முயன்றதாகவும் அவர்கள் இருவரும் கடலில் குதித்து தப்பிய நிலையிலேயே, மற்றுமொரு நபரான மரைக்காயர் பட்டினத்தைச் சேர்ந்த நபரை கைதுசெய்து, அவரிடமிருந்த பொருட்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட 620 கிலோ எடை கொண்ட உயர் ரக முந்திரி பருப்புகளும் 20க்கும் மேற்பட்ட சாக்கு முடைகளில் பொதி செய்யப்பட்டிருந்தன. இதையடுத்து கைப்பற்றப்பட்ட முந்திரி பருப்பு அடங்கிய சாக்கு மூடைகள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனங்கள், 2 நான்கு சக்கர வாகனங்கள், படகு உள்ளிட்டவற்றை மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் கியூ பிரிவு பொலிஸார் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், கைது செய்யப்பட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதுடன் கடலில் குதித்துத் தப்பிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/239641
-
தேசிய மக்கள் சக்தியை, இன்றைய ஜேவிபியை தமிழ்த்தரப்பு புரிந்து கொள்ள வேண்டும் — கருணாகரன் —
பகிர்விற்கு நன்றி கிருபன் அண்ணா. நம்மட தலைவர்கள் கொஞ்சம் இதுபோன்ற கட்டுரைகளை பிரதி எடுத்து ஆறுதலாக திரும்ப திரும்ப வாசித்தாலே சின்ன சின்ன மாற்றங்கள் ஏற்படலாம்!
-
கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழாவுக்கான ஆரம்பகட்ட பணிகள்; இலங்கை கடற்படை உத்தியோகபூர்வ விஜயம்
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா 26 Feb, 2026 | 05:11 PM கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளரது ஒருங்கிணைப்பின் கீழ் ஆயர் இல்லம் யாழ்ப்பாணம், இலங்கை கடற்படை, இந்திய துணைத் தூதரகம் யாழ்ப்பாணம், பிரதேச செயலகம் நெடுந்தீவு, பிரதேச சபை நெடுந்தீவு மற்றும் சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களினது முழுமையான ஒத்துழைப்புடன் நாளை வெள்ளிக்கிழமை (27 ) மற்றும் நாளைமறுதினம் சனிக்கிழமை (28) ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் திருவிழா தொடர்பாக யாழ். மாவட்ட செயலகம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, நாளை காலை 4.00 மணி தொடக்கம் பி.ப 01.00 மணி வரை அரச பேரூந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து குறிகட்டுவான் இறங்குதுறை வரை சேவையில் ஈடுபடும். கச்சதீவுக்கான படகுச்சேவையானது குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து நாளையதினம் காலை 5.00 மணி முதல் பி.ப 02.00 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும். குறிகட்டுவானில் இருந்து பயணிக்கும் ஒரு நபருக்கான படகிற்குரிய ஒரு வழிப் பயணக் கட்டணம் ரூ.1200 ஆகும். கச்சதீவிற்கு குழுவாக / தனியாக படகில் வருகை தரும் பக்தர்கள் அவர்களது முழுப் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம், வயது, பால்நிலை மற்றும் அவர்கள் பயணிக்கும் படகு இலக்கம், படகின் வகை, படகோட்டியின் பெயர் தொலைபேசி இலக்கம் ஆகிய விபரங்களை இரு பிரதிகளில் கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். வெளி மாவட்டங்களிலிருந்து தமது சொந்தப்படகுகளில் திருவிழாவிற்கு செல்வோர் தமது வசிப்பிடங்களிற்கு அருகிலுள்ள கடற்படை முகாம்களில் தொடர்புகொண்டு உரிய கடற்பயணப் பாதுகாப்பு அனுமதியினை பெற்றுக்கொள்வதுடன் நாளை பி.ப 4.00 மணிக்கு முன்னதாக கச்சதீவை வந்தடைவதற்கேற்றவாறு தங்களது பயணங்களை ஆரம்பிக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். கச்சதீவு உற்சவத்தில் கலந்து கொள்ளும் இந்திய மற்றும் இலங்கை யாத்திரிகர்களுக்கு நாளை மறுதினம் சனிக்கிழமை (28) காலை உணவு மட்டும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாத்திரிகர்கள் தங்களது தேவைக்கான உணவினை கொண்டுவரமுடியும் என்பதுடன் அப்பிரதேசத்தில் உணவினை சமைப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயமானது யாத்திரிகர்களின் புனித தலமாகவுள்ளதால் மதுபானம் கொண்டு செல்லுதல், பாவித்தல் மற்றும் புகைப்பிடித்தல் என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/239638
- Today
-
மடு தேசிய பூங்காவை சரணாலயமாக பேண சத்தியலிங்கம் எம்.பி பிரேரணை
மடு தேசிய பூங்காவை சரணாலயமாக பேண சத்தியலிங்கம் எம்.பி பிரேரணை 26 Feb, 2026 | 01:57 PM மடு தேசிய பூங்காவை தொடர்ந்தும் சரணாலயமாக பேண அமைச்சரவையின் அனுமதியைப்பெற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் பிரேரணை ஒன்றினை முன்வைத்துள்ளார். மடு பிரதேச செயலாளர் பிரிவிற்கான அபிவிருத்திக்குழு கூட்டம் 25 ஆம் திகதி மடு பிரதேச செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக வனவளத்திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தால் விடுவிக்கப்படவேண்டிய காணிகள் தொடர்பாக நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது. இரணைஇலுப்பைக்குளம் கிராமசேவையாளர் பிரிவில் உள்ள பெரியபண்டிவிரிச்சான்- முள்ளிக்குளம் வீதியை மக்கள் பாவனைக்கு மேம்படுத்த பிரதேச செயலகத்தால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அபிவிருத்திக்குழுவின் பரிந்துரை கோரப்பட்டபோது வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர் மேலிடத்திடம் கோரிக்கை வைப்பதாக சபைக்கு அறிவித்தார். ஆனால் இவ்வீதியானது மாந்தை மேற்கு பிரதேச சபையால் வர்த்தமானியூடாக பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேச சபைக்கு சொந்தமான வீதி என பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் அறிவித்தார். அப்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்கள் விசேட வர்த்தமானி அறிவித்தலூடாக (Extraordinary No. 1920/3 on June 22, 2015) 2015ம் ஆண்டு மடு சரனாலயமாக இருந்த காடுகள் எந்தவித கலந்துரையாடலும் இன்றி 631 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பை உள்ளடக்கிய மடு- தேசிய பூங்காவாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இத்தேசிய பூங்காவினுள் மக்களின் வாழ்விடங்கள், வீதிகள், வணக்க நிலையங்கள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளடங்கியதாக உள்ளது. 28/06/1968 ம் ஆண்டு ஐம்பதிற்கும் குறைந்த சதுர கிலோமீற்றரிற்கும் குறைவான நிலப்பரப்புடன் பிரகடனப்படுத்தப்பட்ட சரனாலயம் எந்த கலந்துரையாடலும் இன்றி 631 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பை உள்ளடக்கிய தேசிய பூங்காக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் தற்போது அங்கு வாழும் மக்கள் எதிர்காலத்தில் பல பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள் என தெரிவித்தார். சரனாலயமாக உள்ளபோது அப்பிரதேசமூடாக மக்கள் பயன்படக்கூடிய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மக்கள் அந்த சரனாலயத்தினூடாக பயணித்த பாதைகள், வயல்கள் என எந்த பயன்பாட்டையும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொள்ளமுடியாத நிலைவரும் என எச்சரித்தார். எனவே 2015 ஆம் ஆண்டின் விசேட வர்த்தமானியை இரத்துச்செய்யுமாறும் தொடர்ந்தும் சரணாலயமாகவே இப்பிரதேசத்தை பேனுமாறும் முன்மொழிவை பிரேரித்து இப்பிரேரனையை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க அபிவிருத்தி குழுவின் தலைவரை கேட்டுக்கொண்டார். இப்பிரேரனையை பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்கள் வழிமொழிந்து சபையானது ஏற்றுக்கொண்டது. https://www.virakesari.lk/article/239626
-
இஸ்ரேலுக்கு பயணிக்கும் பிரதமர் மோதி - டிரோன்கள் குறித்த விவாதம் முக்கியத்துவம் பெறுவது ஏன்?
"இஸ்ரேல் உறவு, இந்து தேசியவாதம்" - பிரதமர் மோதியின் இஸ்ரேல் பயணம் குறித்து அரபு ஊடகங்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம்,Press Information Bureau (PIB)/Anadolu via Getty Images படக்குறிப்பு,அரபு ஊடகங்கள் பிரதமர் மோதியின் இந்தப் பயணத்தை வெறும் இந்தியா-இஸ்ரேல் உறவுகளின் அடிப்படையில் மட்டும் பார்க்காமல், பரந்த பிராந்திய சமன்பாடுகளின் அடிப்படையிலும் முன்வைக்கின்றன. 7 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் பிரதமர் நரேந்திர மோதியின் இஸ்ரேல் பயணம், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான அவரது நெருக்கம் மற்றும் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை போன்றவை குறித்து அரபு ஊடகங்களிலும் அதிகம் விவாதிக்கப்படுகின்றன. அரபு ஊடகங்கள் பிரதமர் மோதியின் இந்தப் பயணத்தை வெறும் இந்தியா-இஸ்ரேல் உறவுகளின் அடிப்படையில் மட்டும் பார்க்காமல், பரந்த பிராந்திய சமன்பாடுகளின் அடிப்படையிலான பார்வையையும் முன்வைக்கின்றன. இந்தியா வரலாற்று ரீதியாக இரு-நாடுகள் கொள்கையை ஆதரிப்பதோடு, பாலத்தீனப் பகுதியில் அமைதி ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவு அளித்து வந்தாலும், நரேந்திர மோதியின் தலைமையின் கீழ் அது இஸ்ரேலுடன் நெருக்கமடைந்துள்ளதாக பல அரபு ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இஸ்ரேல் மற்றும் பாலத்தீனர்கள் தொடர்பான இந்தியாவின் பாரம்பரிய நிலைப்பாட்டிலிருந்து தற்போதைய நிலைப்பாடு வேறு திசையில் நகர்ந்து வருவதையும் அரபு ஊடகங்கள் கவனத்தில் கொள்கின்றன. முன்பு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது இஸ்ரேல் மற்றும் பாலத்தீன லட்சியங்களிலிருந்து சமமான தூரத்தைப் பேணுவதில் கவனம் செலுத்தியது. ஆனால் இப்போது நலன் சார்ந்த உறவுகளே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் மையமாக உள்ளன. அரபு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின் படி, அண்டை நாடுகளுடனான இந்தியாவின் பதற்றமான உறவுகள் மற்றும் அதன் ராணுவத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, இந்தியா இப்போது இஸ்ரேலை நோக்கி நெருங்கி வருகிறது. அரபு ஊடகங்கள், பிரதமர் நரேந்திர மோதியின் வருகையைக் குறிப்பிடும்போது, காஸாவில் இஸ்ரேலுக்கு மீதான இனப்படுகொலை குற்றச்சாட்டுகளையும் சுட்டிக்காட்டியுள்ளன. மேலும், இஸ்ரேல் மீதான இந்தக் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் பிரதமரின் பயணத்தை எதிர்க்கும் இந்திய எதிர்க்கட்சித் தலைவர்களின் கருத்துக்களையும் அவை வெளியிட்டுள்ள செய்திகளில் இணைத்துள்ளன. 'பாகிஸ்தான், துருக்கி, சௌதி அரேபியா கூட்டணிக்கு சவால்' பட மூலாதாரம்,Press Information Bureau (PIB)/Anadolu via Getty Images படக்குறிப்பு,இஸ்ரேலில் உள்ள பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற வரவேற்பு விழாவில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்றார். அல் ஜசீரா அரபு தொலைக்காட்சியின் இஸ்ரேல்-பாலத்தீன விவகாரங்களுக்கான நிபுணர் அஸாம் அபு அல்-அட்ஸ் கூறுகையில், இந்தியப் பிரதமரின் இந்த வருகை ஒரு ஆழமான மூலோபாய மாற்றத்தைக் குறிக்கிறது என்றார். இந்தியா-இஸ்ரேல் கூட்டாண்மை இந்தப் பிராந்தியத்தில் ஒரு புதிய பிராந்திய துருவமுனைப்புக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார். வரும் காலங்களில், மத்திய கிழக்கு மற்றும் ஆசிய அரசியலில் இந்தியாவும் இஸ்ரேலும் முக்கியப் பங்கு வகிக்கும். மேலும்,இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை மட்டும் முன்னிலைப்படுத்துவது, இந்தப் பயணத்தின் உண்மையான நோக்கத்தை மறைப்பது போன்றது என்றும் அவர் தெரிவித்தார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் தனது உரையில் இந்தியாவுடனான ராணுவக் கூட்டாண்மை பற்றி குறிப்பிட்டார். இந்தப் பிராந்தியத்தில் பாகிஸ்தான், துருக்கி மற்றும் சௌதி அரேபியா ஆகிய நாடுகளின் சாத்தியமான கூட்டணியை எதிர்கொள்ள, இந்தியாவும் இஸ்ரேலும் நட்பு நாடுகளாக நெருங்கி வருகின்றன என்பது தெளிவாகிறது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு வெளியேயும் தன்னை ஒரு பெரிய சக்தியாகக் காட்டிக்கொள்ள இஸ்ரேல் விரும்புவதாக அஸாம் அபு அல்-அட்ஸ் கூறுகிறார். இத்தகைய சூழ்நிலையில், இந்தியாவைப் போன்ற ஒரு பெரிய மற்றும் அணுசக்தி கொண்ட நாட்டுடனான நட்பு அதற்கு மூலோபாய வலிமையை அளிக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலின் சக்திவாய்ந்த விமானப்படைத் திறன்களைப் பயன்படுத்திக்கொள்ள இந்தியா விரும்புகிறது. இஸ்ரேலின் ராணுவ ஒத்துழைப்பு இந்த பிராந்தியத்தில் அதன் வலிமையை அதிகரிக்கும் என்று இந்தியா நம்புகிறது. 'இந்து தேசியவாதம்' பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பிரதமர் மோதி இஸ்ரேலிய நாடாளுமன்றமான நெசெட்டிலும் உரையாற்றினார். பாகிஸ்தானுடனான தனது பிராந்திய மோதலின் ஒரு பகுதியாகவும், ஆசியாவில் தனது ராணுவ மற்றும் ராஜ்ஜீய நிலையை வலுப்படுத்தும் முயற்சியாகவும் இஸ்ரேலுடனான இந்தக் கூட்டணியை இந்தியா கருதுவதாக அஸாம் அபு அல்-அட்ஸ் கூறியதை அல் ஜசீரா அரபு ஊடகம் மேற்கோள் காட்டியுள்ளது. இந்தியாவில் தனது அரசியல் அதிகாரத்தை அதிகரிக்க, மோதி அரசாங்கம் இந்து தேசியவாதத்தின் உதவியைப் பெறுகிறது. இஸ்ரேலிய நாடாளுமன்றமான நெசட்டில் மோதி உரையாற்றிய போது, காஸாவில் இஸ்ரேல் மீதான இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், இந்தியா இஸ்ரேலுடன் ஒற்றுமையைக் காட்டியதாகவும், பிரதமர் நரேந்திர மோதி காஸாவில் இஸ்ரேலின் 'பேரழிவு ஏற்படுத்தும் போரை' ஆதரித்ததாகவும் இந்தியா இஸ்ரேலுடன் நிற்கிறது என்றும் அல் ஜசீரா குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முன்னணி ஊடகமான அல்-கலீஜ், இஸ்ரேலின் நெசெட் பிரதமர் நரேந்திர மோதி ஆற்றிய உரையை வெளியிட்டுள்ளது. அந்த உரையில், இந்தியா இஸ்ரேலுடன் உறுதியாக நிற்கிறது என்று மோதி தெரிவித்துள்ளார். அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர் மோதி, "உங்கள் வலியை நாங்கள் உணர்கிறோம், உங்கள் துயரத்தை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். காரணம் எதுவாக இருந்தாலும், பொதுமக்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்த முடியாது" என்றார். "நீடித்த அமைதி மற்றும் பிராந்திய நிலைத்தன்மையை நிலைநாட்ட பங்களிக்கும் அனைத்து முயற்சிகளையும்" இந்தியா ஆதரிக்கிறது" என்ற மோதியின் கூற்றையும் அல்-கலீஜ் குறிப்பிட்டுள்ளது. நரேந்திர மோதியின் தலைமையின் கீழ் இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே வளர்ந்து வரும் நட்புறவை அல்-கலீஜ் குறிப்பிட்டதோடு, பாதுகாப்பு, விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் சைபர் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மை வலுவடைந்து வருவதாகவும் கூறியுள்ளது. மாறிவரும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை பட மூலாதாரம்,EPA/Shutterstock படக்குறிப்பு,அரபு ஊடகங்கள் இந்த வருகையை இந்தியா-இஸ்ரேல் உறவுகளின் அடிப்படையில் மட்டுமல்லாமல், பெரிய பிராந்திய சமன்பாடுகளின் அடிப்படையிலும் முன்வைக்கின்றன. இதற்கிடையில், ஐக்கிய அரபு அமீரகத்தை தளமாகக் கொண்ட மற்றொரு ஊடகமான கல்ஃப் நியூஸ், பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது மனைவியும், நரேந்திர மோதியை வரவேற்ற விதம், இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான உறவுகள் எவ்வளவு ஆழமானவை என்பதைக் காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளது. கல்ஃப் நியூஸ் கருத்துப்படி, இது இந்தியாவின் முந்தைய வெளியுறவுக் கொள்கையிலிருந்து மாறுபட்ட அணுகுமுறையையும் காட்டுகிறது. இந்தியா வரலாற்று ரீதியாக பாலத்தீனர்களை ஆதரித்து வந்ததுடன், 1992 வரை இஸ்ரேலுடன் முழுமையான ராஜ்ஜீய உறவுகளைக் கூட கொண்டிருக்கவில்லை. ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் இரு நாடுகளும் நெருக்கமடைந்துள்ளன. அக்டோபர் 2023-இல் காஸா போர் தொடங்கிய பிறகு பல நாடுகளுடனான இஸ்ரேலின் உறவுகள் மோசமடைந்தன என்றும், பல ஐரோப்பிய நாடுகளும் காஸாவில் அதன் தாக்குதல்களை கடுமையாக விமர்சித்தன என்றும் கல்ஃப் நியூஸ் எழுதியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், மோதியின் இந்த வருகை இஸ்ரேலுக்கான சர்வதேச ஆதரவை அதிகரிப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்று பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். இருப்பினும், இந்தியா இஸ்ரேலுடன் மட்டுமின்றி, வளைகுடா நாடுகள் மற்றும் இரானுடனும் வலுவான உறவுகளைப் பேணி வருவதாக கல்ஃப் நியூஸ் குறிப்பிடுகிறது. இந்த சமநிலை அதன் வெளியுறவுக் கொள்கையில் பிரதிபலிக்கிறது. நரேந்திர மோதியின் வருகைக்கு எதிராக இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் நடத்திய போராட்டத்தையும் கல்ஃப் நியூஸ் வெளியிட்டுள்ளது. இதில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியின் கருத்தும் இடம் பெற்றுள்ளது. அதில் காஸாவில் இஸ்ரேல் செய்த இனப்படுகொலை குறித்து பிரதமர் மோதி இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் குறிப்பிடுவார் என்று நம்புவதாக அவர் கூறியிருந்தார். லண்டனைத் தளமாகக் கொண்ட 'த நியூ அரப்' இதழ், தீவிர இந்து தேசியவாதியான மோதி, அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலுடன் ஒற்றுமையை வெளிப்படுத்திய ஒரு சில உலகத் தலைவர்களில் ஒருவர் என்று எழுதியுள்ளது. ஆனால் மேற்குக் கரையைக் கட்டுப்படுத்தும் இஸ்ரேலின் முயற்சிகளையும், பாலத்தீன அதிகார சபையின் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களை பலவீனப்படுத்தும் அதன் முயற்சிகளையும் சமீபத்தில் கண்டித்த நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மேற்குக் கரையில் இஸ்ரேலின் விரிவாக்கத் திட்டங்களை இந்தியா உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகள் கண்டித்துள்ளதாக அரபு மொழி டிஜிட்டல் செய்தி இணையதளமான 'நியூஸ்ரூம்' தெரிவித்துள்ளது. இருப்பினும், இதற்கு முன்பு இந்த விவகாரத்தில் இஸ்ரேலை விமர்சிக்க இந்தியா தயக்கம் காட்டியிருந்தது. அக்டோபர் 7, 2023 தாக்குதலுக்குப் பிறகு, பல மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்துள்ளனர். ஆனால் குளோபல் சவுத் நாடுகளுடைய தலைவர்களின் வருகைகள் மிகவும் குறைவாகவே உள்ளன என்று நியூஸ்ரூம் பதிவு செய்துள்ளது. இந்தச் சூழலில் மோதியின் வருகை சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், இந்தியாவையும் மோதியையும் நெதன்யாகு பாராட்டியதையும், மோதியை உலகின் மிகவும் பிரபலமான தலைவர்களில் ஒருவர் என்று நெதன்யாகு விவரித்ததாகவும் நியூஸ்ரூம் குறிப்பிட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn4gwgzgn0lo
-
ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு இடையூறு செய்ய வேண்டாம்: அருட்தந்தை சிறில் காமினி பகிரங்க வேண்டுகோள்! 26 Feb, 2026 | 12:35 PM உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது இடையூறு விளைவிக்கவோ வேண்டாம் என அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார். இன்று வியாழக்கிழமை (26) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த பயங்கரவாத தாக்குதலில் 300க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகின. உயிரிழந்தவர்களில் அனைத்து மதத்தவர்களும், அனைத்து இனத்தவர்களும் அடங்குவர். இது ஒரு திட்டமிட்ட மனிதப்படுகொலை. இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையை கண்டறிவது என்பது, இந்த நாட்டில் சட்டம் சரியாகச் செயற்படுகின்றது என்பதை உறுதிப்படுத்தும் ஒரு விடயமாகும். அவ்வாறு உண்மை கண்டறியப்படாவிட்டால், குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியும் என்ற அச்சமற்ற நிலை உருவாகும். புலனாய்வுப் பிரிவு முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் கைது மற்றும் தற்போதைய விசாரணைகளுக்கு பல்வேறு தரப்பினர் தமக்குச் சாதகமான வியாக்கியானங்களை அளித்து வருகின்றனர். இவர்களின் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன என்பது தெளிவாகத் தெரிகிறது. இது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுக்கும் சுதந்திரமான விசாரணை. எனவே, இதனை அரசியல் மயமாக்காமல் விசாரணைகளை அதன் போக்கில் முன்னெடுக்க இடமளிக்க வேண்டும். விசாரணைகளைக் குழப்ப முயற்சிப்பதானது, இத்தாக்குதலில் உயிரிழந்த மற்றும் அங்கவீனமுற்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாகும். மக்கள் அனைவரும் பொறுமையுடன் காத்திருந்து உண்மைகள் வெளிவர ஒத்துழைக்க வேண்டும். இதன் பின்னணியில் அரசியல் சதி இருந்ததா? அவ்வாறு இருந்தால் அதற்குப் பொறுப்பானவர்கள் யார்? என்பது நிச்சயம் கண்டறியப்பட வேண்டும். யாராவது இதற்குத் தடையாக இருந்தால், அதனை பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராகச் செய்யப்படும் மற்றுமொரு குற்றமாகவே நாம் கருதுவோம். எனவே, புலனாய்வுப் பிரிவினர் தமது பணிகளைச் சுதந்திரமாக முன்னெடுக்க அனைவரும் இடமளிக்க வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/239620
-
இரான் உண்மையில் அணு ஆயுதத்தை தயாரிக்கிறதா?
இரான் உண்மையில் அணு ஆயுதத்தை தயாரிக்கிறதா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரானில் உள்ள ஒரு சுவரொட்டி, யுரேனியம் செறிவூட்டும் உபகரணங்களையும், ஜூன் 2025-ல் இஸ்ரேலியத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட இரானிய விஞ்ஞானிகளையும் சித்தரிக்கிறது. கட்டுரை தகவல் லூயிஸ் பார்ருச்சோ பிபிசி உலக சேவை 26 பிப்ரவரி 2026, 05:29 GMT வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் இரான் அதன் அணுசக்தி நடவடிக்கைகள் குறித்த ஒப்பந்தத்திற்கு உடன்படாவிட்டால், தாக்குதல் நடத்துவதற்குத் தயாராக இருக்கும் வகையில் அமெரிக்கா அப்பகுதியில் போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களைக் குவித்துள்ளது. பிப்ரவரி 19 அன்று அமெரிக்க அதிபர் டிரம்ப், ஒரு "அர்த்தமுள்ள ஒப்பந்தம்" எட்டப்படாவிட்டால் "மோசமான விஷயங்கள்" நடக்கும் என்று எச்சரித்தார். "அவர்களிடம் அணு ஆயுதம் இருக்க முடியாது, இது மிகவும் எளிமையானது... அவர்களிடம் அணு ஆயுதம் இருந்தால் மத்திய கிழக்கில் அமைதி நிலவ முடியாது" என்று தனது நிலைப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். அணு குண்டை உருவாக்க, தான் எப்போதும் முயன்றதில்லை என இரான் மறுக்கிறது, ஆனால் உலகின் பல்வேறு நாடுகளும், உலகளாவிய அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமையும் இக்கருத்தை நம்பவில்லை. இரானின் அணுசக்தி திட்டம் எந்த நிலையில் உள்ளது? கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் மற்றும் இரான் இடையே நடந்த 12 நாள் போரின் போது, முக்கிய அணுசக்தி தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, இரானின் அணுசக்தி திட்டத்தின் நிலை குறித்து முழுமையாகத் தெரியவில்லை. பிறகு இப்போரில் இணைந்த அமெரிக்கா, மூன்று அணுசக்தி தளங்களைத் தாக்கியது. அவை இஸ்ஃபஹானில் உள்ள இரானின் மிகப்பெரிய அணு ஆராய்ச்சி வளாகம் மற்றும் யுரேனியம் செறிவூட்டலுக்குப் பயன்படுத்தப்படும் நடான்ஸ் மற்றும் ஃபோர்டோ ஆகிய இடங்களில் உள்ள தளங்களாகும். செறிவூட்டல் என்பது குறிப்பிட்ட ஐசோடோப்புகளின் விகிதத்தை அதிகரிப்பதாகும், இதன் மூலம் அதை அணுசக்திக்கான எரிபொருளாகப் பயன்படுத்த முடியும். தாக்குதல்களுக்குப் பிறகு, அந்தத் தளங்கள் "அழிக்கப்பட்டுவிட்டன" என்று டிரம்ப் கூறினார். ஒரு வாரம் கழித்து, சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் குரோசி, தாக்குதல்கள் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும் அவை "முழுமையானவை அல்ல" என்று கூறினார். மேலும், சில மாதங்களுக்குள் செறிவூட்டல் பணிகளை மீண்டும் தொடங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஜூன் 13 அன்று இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியபோது, இரான் 60% தூய்மை வரை செறிவூட்டப்பட்ட 440 கிலோ யுரேனியம் கையிருப்பை வைத்திருந்ததாக சர்வதேச அணுசக்தி முகமை மதிப்பிடுகிறது. ஆயுதத் தரமான 90% செறிவூட்டல் நிலையை எட்டுவதற்கு மிகக் குறுகிய இடைவெளி உள்ளதாக இந்த அளவு கருதப்படுகிறது. இந்த அளவு யுரேனியம் மேலும் செறிவூட்டப்பட்டால், அது 10 அணு குண்டுகளுக்கு போதுமானதாக இருக்கும் என்று குரோசி அக்டோபர் மாதம் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தார். யுரேனியம் செறிவூட்டல் "இப்போது நிறுத்தப்பட்டுள்ளது" என்று நவம்பர் மாதம் இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தி எகனாமிஸ்ட்டிடம் கூறினார். கடந்த மாதம், அவர் ஃபாக்ஸ் நியூஸிடம் கூறுகையில், "ஆம், நீங்கள் தளங்களையும் இயந்திரங்களையும் அழித்துவிட்டீர்கள்... ஆனால் தொழில்நுட்பத்தை குண்டு வீசி அழிக்க முடியாது, உறுதியையும் குண்டு வீசி அழிக்க முடியாது" என்று குறிப்பிட்டார். ஜனவரி மாதம் ராய்ட்டர்ஸிடம் பேசிய குரோசி, சர்வதேச அணுசக்தி முகமையால் இரானில் குண்டுவீசப்படாத 13 அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய முடிந்தது, ஆனால் குண்டுவீச்சுக்கு உள்ளான மூன்று முக்கிய நிலையங்களை ஆய்வு செய்ய முடியவில்லை, சர்வதேச அணுசக்தி முகமை கடைசியாக இரானின் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் இருப்பை சரிபார்த்து ஏழு மாதங்கள் ஆகின்றன என்றார். முக்கியமான கேள்விகள் குறித்து, குறிப்பாக கையிருப்பின் இருப்பிடம் மற்றும் அதன் நிலை, மேலும் செறிவூட்டல் நிலையங்களின் தற்போதைய சூழ்நிலை குறித்து இன்னும் உறுதியற்ற நிலை தொடர்கிறது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரான் அணு ஆயுதம் வைத்திருக்க அனுமதிக்கப்படக்கூடாது என்று டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இந்தச் சூழல் உருவானது எப்படி? இரானிய அரசாங்கம் தனது அணுசக்தி நடவடிக்கைகள் முற்றிலும் பொதுமக்களின் பயன்பாடு நோக்கங்களுக்காக மட்டுமே என்று வலியுறுத்துகிறது. இரான் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மருத்துவம், விவசாயம் மற்றும் எரிசக்தி போன்ற சிவில் நோக்கங்களுக்காக அணுசக்தி தொழில்நுட்பத்தை அனுமதிக்கிறது, ஆனால் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதைத் தடை செய்கிறது. இருப்பினும்,சர்வதேச அணுசக்தி முகமை நடத்திய பத்தாண்டு கால விசாரணையில், 1980-களின் பிற்பகுதியிலிருந்து 2003 வரை "அணு வெடிப்பு சாதனத்தை உருவாக்குவதற்குத் தொடர்புடைய பல்வேறு நடவடிக்கைகளை" இரான் மேற்கொண்டது குறித்து கண்டறியப்பட்டது. ஆனால், 'புராஜெக்ட் அமத்' என்று அழைக்கப்படும் இந்தத் திட்டம் பின்னர் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என சர்வதேச அணுசக்தி முகமை கூறுகிறது. இருப்பினும், 2009-ல் மேற்கத்திய உளவு அமைப்புகள் ஃபோர்டோ தளத்தை அடையாளம் கண்டறிந்தன. 2015-ல் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், "2009-க்குப் பிறகு அணு வெடிப்பு சாதனத்தை உருவாக்குவதற்குத் தொடர்புடைய நடவடிக்கைகள் இரானில் நடந்ததற்கான நம்பகமான அறிகுறிகள் எதுவும் இல்லை" என்று சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்தது. மேலும், 2015 ஆம் ஆண்டு இரான் ஆறு உலக வல்லரசு நாடுகளுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன்படி, தடைகள் தளர்த்தப்படுவதற்கான பதிலாக, தனது அணுசக்தி செயல்பாடுகளுக்கு கடுமையான வரம்புகளை ஏற்க இரான் ஒப்புக்கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் படி, செறிவூட்டல் அளவு 3.67% ஆக மட்டுப்படுத்தப்பட்டது. இது அணுசக்தி உற்பத்திக்கு ஏற்ற அளவாகும். மேலும், கடுமையான கண்காணிப்பின் கீழ் ஃபோர்டோவில் நடைபெற்று வந்த செறிவூட்டல் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. ஆனால் 2018-ல், இந்த ஒப்பந்தம் இரான் அணு குண்டு தயாரிப்பதைத் தடுக்கத் தவறிவிட்டது என்று வாதிட்டு, அதிபர் டிரம்ப் அதிலிருந்து விலகி மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்தார். இதற்குப் பதிலாக, இரான் ஒப்பந்தத்தின் வரம்புகளை மீறத் தொடங்கி, யுரேனியத்தை 60% வரை செறிவூட்டியது, மேம்பட்ட மையவிலக்கு இயந்திரங்களைப் பயன்படுத்தியது மற்றும் ஃபோர்டோவில் மீண்டும் செறிவூட்டலைத் தொடங்கியது. ஜூன் 12, 2025 அன்று, சர்வதேச அணுசக்தி முகமையின் ஆளுநர்கள் குழு, இரான் தனது அணு ஆயுதப் பரவல் தடை கடமைகளை மீறியுள்ளதாக இரண்டு தசாப்தங்களில் முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதற்கு அடுத்த நாள், இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி தலைமையிலான இரான், பொருளாதாரத் தடைகளில் இருந்து விலக்கு பெறுவதற்கு ஈடாக, தனது அணுசக்தி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த 2015-ஆம் ஆண்டில் ஒப்புக்கொண்டது. இரானில் தற்போது நடைபெறும் கட்டுமானங்கள் சமீபத்திய மாதங்களில் நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய இரண்டு இடங்களிலும் பணிகள் நடைபெற்று வருவதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. இஸ்ஃபஹானில், அதன் சுரங்கப்பாதை வளாகத்தின் அனைத்து நுழைவாயில்களும் இப்போது மண்ணால் மூடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது, மேலும் ஒரு புதிய கூரை கட்டப்பட்டுள்ளது என்று அமெரிக்காவை தளமாகக் கொண்ட அறிவியல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிறுவனம் ஆய்வு செய்த செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்துகின்றன. மேலும், நடான்ஸ் தளத்திலும் ஒரு கூரை கட்டப்பட்டுள்ளதை புகைப்படங்கள் காட்டுகின்றன. அறிவியல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிறுவனத்தால் (ஐஎஸ்ஐஎஸ்) முதன்முதலில் ஆய்வு செய்யப்பட்ட சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள், இரான் ஒரு நிலத்தடி வளாகமான மவுண்ட் கோலாங் காஸ் லாவை பலப்படுத்தி வருவதையும் காட்டுகின்றன. பிகாக்ஸ் மலை என்றும் அழைக்கப்படும் இந்தத் தளம், இஸ்ரேல் அல்லது அமெரிக்காவால் தாக்கப்படவில்லை. இது நடான்ஸ் அணுசக்தி நிலையத்திற்கு தெற்கே சுமார் 2 கிமீ தொலைவில் உள்ளது. படக்குறிப்பு,இஸ்ஃபஹானில், அதன் சுரங்கப்பாதை வளாகத்தின் அனைத்து நுழைவாயில்களும் இப்போது மண்ணால் மூடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அணு ஆயுதத்தை உருவாக்க இரானுக்கு எவ்வளவு காலம் ஆகும்? ஆயுதத் தரத்திலான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைத் தயாரிப்பதும், ஏவக்கூடிய ஒரு அணு ஆயுதத்தை உருவாக்குவதும் ஒன்றல்ல. அதற்கு மேற்கொண்டு பல்வேறு தொழில்நுட்ப நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தாக்குதல்களுக்கு முன்னதாக, கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்க பாதுகாப்பு உளவு முகமை மேற்கொண்ட மதிப்பீட்டின்படி, அந்த நேரத்தில் இரான் தனது முதல் அணுசக்தி சாதனத்திற்குத் தேவையான போதிய அளவு ஆயுதத் தர யுரேனியத்தை "நேரடியாக ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்தில்" உற்பத்தி செய்ய முடியும் என்று தெரிவித்தது. இருப்பினும், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஆயுதமாக மாற்றுவதற்கான திறனை உருவாக்க இரான் முயன்று வருகிறதா என்பது குறித்த மதிப்பீடுகள் மாறுபடுகின்றன. "இரான் அநேகமாக அணு ஆயுதங்களைத் தயாரிக்கவில்லை, ஆனால் ஒருவேளை அது தயாரிக்க முடிவு செய்தால், அதற்கேற்ற சிறந்த நிலையில் தன்னை வைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை சமீபத்திய ஆண்டுகளில் மேற்கொண்டுள்ளது" என்றும் அமெரிக்க பாதுகாப்பு உளவு முகமையின் மதிப்பீடு கூறியது. இருப்பினும், "அணு ஆயுதத்துக்கு ஏற்ற ஆயுதக் கூறுகளைத் தயாரிப்பதற்கான இரான் அரசின் முயற்சிகளில் 'குறிப்பிடத்தக்க முன்னேற்றம்' ஏற்பட்டுள்ளதைக் காட்டும் உளவுத் தகவல்களைத் தாங்கள் சேகரித்துள்ளதாக" இஸ்ரேலிய ராணுவம் ஜூன் மாதம் தெரிவித்தது. "இரான் 2003-ஆம் ஆண்டு வரை போர்முனை (Warhead) வடிவமைப்பில் சில திறன்களை உருவாக்கியிருந்தது, அதன் பிறகு அந்தத் திட்டம் நிறுத்தப்பட்டதாகத் தெரிந்தது," என்று ஆயுதக் கட்டுப்பாட்டு நிபுணரான முனைவர் பாட்ரிசியா லூயிஸ் கூறுகிறார். இருப்பினும், "2015 அணுசக்தி ஒப்பந்தத்தின் முறிவு மற்றும் புதிய ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் தோல்விகளுக்குப் பிறகு, இரான் மீண்டும் ஒரு போர்முனைத் திறனை உருவாக்கத் தொடங்க முடிவு செய்திருக்க வாய்ப்புள்ளது" என்றும் அவர் கூறுகிறார். பிப்ரவரி 18 அன்று, இரான் தீவிரமாக ஆயுத மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான அறிகுறிகளை சர்வதேச அணுசக்தி முகமை கண்டுள்ளதா என்று கேட்டதற்கு, குரோசி பிரெஞ்சு ஊடகமான டிஎப்ஃ1-இடம் "இல்லை" என்று பதிலளித்தார். மேலும், அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய இரு தரப்பிலுமே "ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கான விருப்பம்" இருப்பதாக தான் கருதுவதாகவும் அவர் கூறினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சமீபத்திய மாதங்களில் இரானின் அதிக அளவு செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை சர்வதேச அணுசக்தி முகமையால் சரிபார்க்க முடியவில்லை என்று அதன் தலைவர் ரஃபேல் குரோசி கூறுகிறார். இரானின் அணு ஆயுதத் திட்டம் ஏன் முக்கியமானதாக கருதப்படுகிறது? இரானுக்கு அணு ஆயுதம் கிடைக்கக் கூடாது என்ற நம்பிக்கையை மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். இரான் அணு ஆயுதம் பெற்றால் "உலகமே அழிந்துவிடும்" என்று மே 2025-ல் டிரம்ப் கூறினார். 2024 தேர்தல் பிரச்சாரத்தின் போது, இது "முற்றிலும் மாறுபட்ட ஒரு உலகம்... முற்றிலும் மாறுபட்ட ஒரு பேச்சுவார்த்தை" என்று பொருள்படும் என்றும், இஸ்ரேல் "அழிந்துவிடும்" என்றும் அவர் கூறினார். பிரிட்டன் பிரதமர் சர் கியர் ஸ்டாமர், அணு ஆயுதம் ஏந்திய இரானை "பிராந்தியத்தின் நிலைத்தன்மைக்கு விடுக்கப்படும் மிகப்பெரிய அச்சுறுத்தல்" என்று விவரித்துள்ளார். "இது பிராந்திய பதற்றத்தை அதிகரிக்கும் மற்றும் நெருக்கடி மேலாண்மையைச் சிக்கலாக்கும், குறிப்பாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு இது சவாலாக அமையும்" என்று பிரிட்டனைச் சேர்ந்த ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட் என்ற சிந்தனைக்குழுவின் மத்திய கிழக்கு நிபுணர் முனைவர் எச். ஏ. ஹெல்லியர் கூறுகிறார். அணு ஆயுதம் பெறுவது இரானை பிராந்திய ரீதியாகத் வலிமையடையச் செய்யும், சீனா மற்றும் ரஷ்யாவுடனான அதன் வளர்ந்து வரும் உறவுகளை வலுப்படுத்தும் மற்றும் சவுதி அரேபியாவுடன் ஒரு ஆயுதப் போட்டியைத் தூண்டக்கூடும் என்றும் சில ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இஸ்ரேலும் அணு ஆயுதம் வைத்திருப்பதாக அறியப்படுகிறது. இருப்பினும் இஸ்ரேல் அக்கருத்தை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை. இரானுக்கு அணு ஆயுதம் கிடைத்தால் அதன் "சாத்தியமான விளைவு" உடனடி மோதல் அல்ல, மாறாக "பரஸ்பரத் தடுப்பாகத் தான் இருக்கும்" என்று ஹெல்லியர் குறிப்பிடுகிறார். மேலும், பெரும்பாலான பிராந்திய நாடுகள், "கற்பனையான இரானிய குண்டை விட, இஸ்ரேலிய அதிகாரத்தையே உடனடி மற்றும் சீர்குலைக்கும் பாதுகாப்பு கவலையாகப் பார்க்கின்றன" என்று கூறிய அவர், அணு ஆயுதம் ஏந்திய இரானால் ஏற்படும் ஒரு பெரிய ஆபத்து "மோதல் காலங்களில் ஏற்படும் தவறான கணக்கீடாக " இருக்கும் என்றும் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5yvlyz58zko
-
சிற்றுண்டிச்சாலையில் இனிப்பு பொருட்களை திருடிய சிறுமிகள் கைது!
களுத்துறை விளையாட்டரங்க சிற்றுண்டிச்சாலையில் இனிப்பு பொருட்களை திருடிய மூன்று சிறுமிகள் கைது! 26 Feb, 2026 | 11:58 AM களுத்துறை வர்ணத் பெர்னாண்டோ விளையாட்டரங்கில் அமைந்துள்ள சிற்றுண்டிச்சாலையை உடைத்து, அங்கிருந்த சுமார் 40,000 ரூபா பெறுமதியான டொபிகள் மற்றும் சொக்லேட்டுகளைத் திருடிய குற்றச்சாட்டில் மூன்று சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தினேஷ் சில்வா தலைமையிலான குழுவினர் முன்னெடுத்த விசாரணைகளின் போதே இந்தச் சிறுமிகள் அடையாளம் காணப்பட்டனர். அப்பகுதியில் உள்ள சிசிரிவி காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸார், குறித்த சிறுமிகள் தங்கியிருந்த சிறுவர் இல்லத்திலேயே மறைத்து வைக்கப்பட்டிருந்த டொபிகள், சொக்லேட்டுகள், லொலிபொப்கள் மற்றும் சுயிங்கம் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர். ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, குறித்த சிறுமிகள் தங்கியிருந்த சிறுவர் இல்லத்தின் சாவியைத் திருடிவிட்டு, அதிகாலை 1.30 மணியளவில் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். பின்னர் விளையாட்டரங்க சிற்றுண்டிச்சாலையின் முன் பக்க கண்ணாடியைத் தடியால் அடித்து உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அங்கிருந்த இனிப்பு வகைகளை பொலித்தீன் பைகளில் நிரப்பிக்கொண்டு மீண்டும் சிறுவர் இல்லத்திற்குச் சென்று அவற்றை மறைத்து வைத்துள்ளமை அம்பலமாகியுள்ளது. கைது செய்யப்பட்ட சிறுமிகள் 13, 14 மற்றும் 15 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர். சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமிகள் இவ்வாறான திட்டமிட்ட கொள்ளையில் ஈடுபட்டமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/239617
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 116 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 116 / பின் இணைப்பு - "புத்தரும் அவரது மகா பரிநிர்வாணமும்" வில்ஹெம் லுட்விக் கெய்கர் அல்லது வில்லெம் கெய்கர் மற்றும் ரோமிலா தாப்பர் [Wilhelm Geiger and Romila Thapar] உள்ளிட்ட பெரும்பாலான அறிஞர்கள், கி.மு 544 ஆம் ஆண்டை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று நிராகரிக்கின்றனர். வில்லெம் கெய்கர் 1912 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட மகாவம்சத்தின் முதல் பதிப்பில், புத்தர் இறந்த ஆண்டாக கி.மு 483 ஆம் ஆண்டைப் பயன்படுத்தினார். அதன் ஐந்தாவது அச்சு 2018 ஆம் ஆண்டில் இலங்கை புத்த கலாச்சார மையத்தால் [Buddhist Cultural Centre – Sri Lanka.] வெளியிடப்பட்டது. இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ள நகல் இதுவேயாகும். சுமார் 108 ஆண்டுகளுக்கு முன்பு முதல் அச்சில் இருந்ததைப் போலவே, இந்த ஐந்தாவது பதிப்பிலும் கி.மு 483 ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. புத்தர் இறந்த ஆண்டாக கி.மு 483 ஆம் ஆண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி டாக்டர் ஃப்ளீட்டின் [Dr. Fleet ] கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த விடயத்தில் டாக்டர் ஃப்ளீட்டின் பிற கட்டுரைகளும் உள்ளன, மேலும் பின்வரும் மூன்று கட்டுரைகள் கீழே மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. 1. புத்தர் இறந்த தேதி, அசோகரின் பதிவால் தீர்மானிக்கப்பட்டது.[The Date of Buddha's Death, as Determined by a Record of Asoka, By J.F. Fleet, The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland, 1904, pp 1-26] 2. புத்தர் இறந்த தேதி, By J. F. Fleet, The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland, (Jan 1912), pp 239 to 241 இதில் அடையாளப்படுத்தப் பட்டுள்ளது 3. புத்தர் இறந்த நாள், By J. F. Fleet, The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland, (Jan 1909), pp 1 to 34 இல் விளக்கப்பட்டுள்ளது. அதேபோல, 'Asoka and the Decline of the Mauryas - Romila Thapar, Third Edition '- - பக்கம் 20 இல், புத்தர் இறந்த இரண்டு நம்பகமான ஆண்டுகள் என கிமு 483 மற்றும் கிமு 486 ஐ கிட்டத்தட்ட சமமான தகுதியுடன் தருகிறது. லும்பினி தூண் கல்வெட்டு (Lumbini pillar inscription) படேரியா கல்வெட்டு [ Paderia inscription] என்றும் அழைக்கப்படும் இது பண்டைய பிராமி எழுத்து முறைகளில், காணப்படும் ஒரு கல்வெட்டாகும். இது 1896 டிசம்பர் இல் நவீன நேபாளத்தின் லும்பினியில் அசோகரின் தூண்களில் தொல்லியலாளர் அலோயிஸ் அன்டன் ஃபுரர் [Alois Anton Führer] என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிறிய தூண் கட்டளை, ரம்மிண்டே தூண் கல்வெட்டு [Rummindei Pillar Inscription] என்றும் அழைக்கப்படும். அசோகர் தனது ஆட்சியின் இருபதாம் ஆண்டுக்குப் பிறகு புத்தரின் பிறந்த இடத்திற்கு [லும்பினியில் புத்தர் பிறந்தார்] பயணம் செய்து நேரில் காணிக்கை செலுத்தியதாக லும்பினி தூண் கட்டளை பதிவு செய்துள்ளது. பின்னர் அவர் ஒரு கல் தூணை நிறுவினார், அந்தப் பகுதியில் வசிப்பவர்களின் வரிககள் குறைக்கப்பட்டன. அவர் அந்த யாத்திரைக்குச் செல்வதற்கு முன்பு ஒரு சூரிய கிரகணம் [solar eclipse] ஏற்பட்டது. 'Asoka and the Decline of the Mauryas - Romila Thapar, Third Edition' ['அசோகரும் மௌரியர்களின் வீழ்ச்சியும் - ரோமிலா தாபர், மூன்றாம் பதிப்பு'] என்ற குறிப்பின்படி. சூரிய கிரகணம் கிமு 249 இல் என்று கணக்கிடப்படுகிறது. அந்த கிரகணத்திற்குப் பிறகு, மன்னர் அசோகர் யாத்திரைக்குச் சென்ற ஆண்டுகளின் எண்ணிக்கை எங்களுக்குத் உறுதியாகத் தெரியவில்லை. சூரிய கிரகணம் நடந்த அதே ஆண்டில் அவர் புறப்பட்டிருந்தால், மன்னர் அசோகர் கி.மு 249 ஆம் ஆண்டு யாத்திரையைத் தொடங்கியிருக்க வேண்டும். எனவே, புத்தரின் பரிநிர்வாணம் கி.மு 487, 249+218+20 இல் நிகழ்ந்திருக்க வேண்டும். என்றாலும், கிரகணத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் புறப்பட்டிருந்தால், புத்தரின் பரிநிர்வாணம் கி.மு 485, 249-2+218+20 இல் நிகழ்ந்திருக்க வேண்டும். [Two hundred and eighteen years after the Parinibbāna of the Sambuddha Piyadassana was anointed king என்ற நாளாகமம்களின் செய்தியின் படி] இலங்கை நாளாகமம், தீபவம்சம் மற்றும் மகாவம்சம் ஆகியவற்றில் கொடுக்கப்பட்டுள்ளபடி, புத்தர் இறந்து இருநூற்று பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அசோகரின் முடிசூட்டு விழா நடந்திருந்தால் மட்டுமே இது சரியானதும் ஆகும். மேலும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள, லும்பினியில் உள்ள ரம்மிண்டே சிறிய தூண் கல்வெட்டு அரசாணையின் தொலைப்பிரதி அல்லது தொலைநகல் [Fax (short for facsimile)], வின்சென்ட் ஏ. ஸ்மித் எழுதிய 'Asoka the Buddhist Emperor of India, by Vincent A Smith, Third edition 1919' ['இந்தியாவின் புத்த பேரரசர் அசோகர், வின்சென்ட் ஏ ஸ்மித் எழுதியது, மூன்றாம் பதிப்பு 1919'] என்ற புத்தகத்தின் பக்கம் 222, கீழே கொடுக்கப்பட்டுள்ளது: "இருபதாம் ஆண்டு ஆட்சி நடைபெறும் போது, தேவனின் பிரியமானவன் என்ற பியதசி (அசோகர்) இந்த இடத்திற்கு சென்று தரிசனம் செய்து வணங்கினார். இதுவே சக்யமுனி [சாக்கியர்களின் முனிவரான] புத்தர் பிறந்த இடம் என்பதால், இங்கே குதிரையைத் தாங்கிய ஒரு கல் செய்யப்பட்டு, ஒரு கல் தூண் அமைக்கப்பட்டது. இறைவன் (புத்தர்) இங்கே பிறந்ததால், இந்த லும்பினி கிராமத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது; கிராமம் எட்டிலொரு பகுதி மட்டுமே வழங்க வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது." இந்த வினோதமான பதிவு, 1896 இல் கண்டுபிடிக்கப்பட்டு சரியாகப் பாதுகாக்கப்பட்டது / இந்தப் பதிவு அரச கட்டளையால் செதுக்கப்பட்டதாகக் கூறவில்லை என்பதைக் கவனிக்கலாம். அசோகரின் வருகையையும் அந்தச் சந்தர்ப்பத்தில் அவர் வழங்கிய உதவிகளையும் நினைவுகூரும் வகையில், உள்ளூர் அதிகாரியால் இது வரைவு செய்யப்பட்டு செதுக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.? Part: 116 / APPENDIX – "The Buddha and his Mahaparinirvana" Most scholars, including Wilhelm Geiger and Romila Thapar, discard the year 544 B.C. as untenable. Wilhelm Geiger used the year 483 B. C. as the year on which the Buddha’s death took place, in the first edition of his translation of the Mahavamsa which was published in the year 1912. The fifth print of the same was published in the year 2018 by the Buddhist Cultural Centre – Sri Lanka. This is the copy referenced in this study. The same year 483 B.C. is used in this fifth edition too, as it was in the first print about 108 years ago. The year 483 B.C. as the Buddha’s year of death was based on the articles by Dr. Fleet as given below. There are other articles also by Dr. Fleet on this subject, and the following three articles are cited below. 1. The Date of Buddha's Death, as Determined by a Record of Asoka, By J.F. Fleet, The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland, 1904, pp 1-26 2. Date of Death of Buddha, By J. F. Fleet, The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland, (Jan 1912), pp 239 to 241 3. The Day on Which Buddha Died, By J. F. Fleet, The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland, (Jan 1909), pp 1 to 34 Romila Thapar, Reference 'Asoka and the Decline of the Mauryas - Romila Thapar, Third Edition '- page 20, gives 483 B.C. and 486 B.C. as two credible years of Buddha’s death with almost equal merit. In Nepal, the Lumbini Pillar Edict is known as the Rummindei Pillar Inscription, one of his Minor Pillar Edicts. The Lumbini Pillar Edict recorded that Ashoka traveled to the birthplace of Buddha [Lumbini is where the Buddha was born] sometime after the twentieth year of his reign and made offerings personally. Then he got a stone pillar put up and the residents of that area lowered their taxes. There was a solar eclipse before he set out on that pilgrimage, as per Reference 'Asoka and the Decline of the Mauryas - Romila Thapar, Third Edition'. The eclipse of the sun is calculated to be on 249 B. C. We are not sure of the number of years after that eclipse the King Asoka set out on the pilgrimage. If he had set out on the same year as the solar eclipse, then King Asoka must have started on the pilgrimage on the year 249 B. C. Therefore, the Buddha’s Parinirvana must have had occurred on 487 B.C., 249+218+20. If he had set out two years after the eclipse then the Buddha’s Parinirvana must have occurred on 485 B. C.,249-2+218+20. This is correct only if the coronation of Asoka took place two hundred and eighteen years after the death of Buddha, as is given in the Chronicles of Ceylon, the Dipavamsa and the Mahavamsa. The facsimile of the above mentioned Minor Pillar Edict, Rummindei pillar inscription in Lumbini, as given by Vincent A. Smith, page 222 of Reference 'Asoka the Buddhist Emperor of India, by Vincent A Smith, Third edition 1919', is given below: " By His Sacred and Gracious Majesty the King when he had been consecrated twenty years, having come in person and reverence having been done inasmuch as ' : Here was born Buddha, the sage of the Sakyas" a stone bearing a horse was caused to be made and a stone pillar was erected. Inasmuch as " Here the Holy One was born," the village of Lummini was released from religious cesses and required to pay [only] one-eighth as land revenue." [This curious record, discovered in 1896 and perfectly pre- served / It will be observed that the record does not claim to have been incised by royal command. Presumably it was drafted and engraved by a local authority to commemorate Asoka's visit and the favours conferred by him on that occasion.] நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 117 தொடரும் / Will follow துளி/DROP: 2060 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 116 https://www.facebook.com/groups/978753388866632/posts/34016559807992564/?
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
வெஸ்ட் இண்டீஸை எளிதாக வீழ்த்திய தென்னாப்பிரிக்கா - இனி இந்தியாவுக்கு என்ன வாய்ப்பு? பட மூலாதாரம்,Getty Images 26 பிப்ரவரி 2026, 14:38 GMT புதுப்பிக்கப்பட்டது 52 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது. இதன் மூலம் அரையிறுதி வாய்ப்பை நெருங்கியிருக்கிறது அந்த அணி. இந்த உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் சந்திக்கும் முதல் தோல்வி இது. தென்னாப்பிரிக்க அணி தாங்கள் விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. இந்தத் தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி தென்னாப்பிரிக்காதான். தென்னாப்பிரிக்காவின் இந்த வெற்றி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் மீதான நெருக்கடியை அதிகரித்திருக்கிறது. சிறப்பாக செயல்பட்ட தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் ஆமதாபாத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது தென்னாப்பிரிக்கா. வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடியாக போட்டியைத் தொடங்கினாலும், மூன்றாவது ஓவரில் அந்த அணியின் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ககிஸோ ரபாடா. அடுத்த ஓவரில் லுங்கி எங்கிடி தன் பங்கிற்கு 2 விக்கெட்டுகள் வீழ்த்த, 4 ஓவர்கள் முடிவில் 43/4 என வெஸ்ட் இண்டீஸ் கடும் நெருக்கடிக்கு உள்ளானது. அதன்பிறகும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் பெரிய ஷாட்கள் ஆட நினைத்து தொடர்ச்சியாக தங்கள் விக்கெட்டுகளை இழந்துகொண்டே இருந்தனர். 10.2 ஓவர்களில் அந்த அணி 83/7 என்ற கட்டத்தை அடைந்தது. எட்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜேசன் ஹோல்டன், ரொமாரியோ ஷெபர்ட் இருவரும் விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்து ஓரளவு அதிரடியும் காட்டினார்கள். அதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தது. ரொமாரியோ ஷெபர்ட், 37 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹோல்டர் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி எட்டாவது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்தது. தென்னாப்பிரிக்க அணி தரப்பில் எங்கிடி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ரபாடா, கார்பின் பாஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். பட மூலாதாரம்,Getty Images தென்னாப்பிரிக்க பேட்டர்களின் ஆதிக்கம் தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்களைப் போல் அந்த அணியின் பேட்டர்களுமே இந்தப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தினார்கள். கேப்டன் எய்டன் மார்க்ரம் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடினார். குவின்டன் டி காக் அவருக்கு பக்க பலமாக ஆட, பவர்பிளேவில் அந்த அணி விக்கெட்டே இழக்காமல் 69 ரன்கள் எடுத்தது. 47 ரன் எடுத்த டி காக், ராஸ்டன் சேஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றிய ஒரே விக்கெட் அதுதான். அடுத்து வந்த ரயன் ரிக்கில்டனும் அந்த அதிரடியைத் தொடர்ந்தார். அவர் 45 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 27 பந்துகளில் அரைசதம் கடந்த மார்க்ரம், ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் எடுத்து அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தார். அவர் இந்த இன்னிங்ஸுக்காக ஆட்ட நாயகன் விருதும் வென்றார். பட மூலாதாரம்,Getty Images அரையிறுதிக்குள் நுழைய யாருக்கு வாய்ப்பு? இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க அணி அரையிறுதிக்குள் நுழைய நல்ல வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே தோல்வி அடைந்தால், அது தென்னப்பிரிக்கா அரையிறுதிக்குள் நுழைவதை உறுதி செய்யும். அதேசமயம் இந்திய அணி ஜிம்பாப்வேவை வீழ்த்துவதன் மூலம், இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் போட்டி ஒரு நாக் அவுட் ஆட்டமாக மாறிவிடும். அந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதி வாய்ப்பைப் பெறும். இந்தியா ரன்ரேட் பற்றியெல்லாம் கவலைப்படவேண்டியதாக இருக்காது. வெற்றி பெற்றாலே அரையிறுதிக்குள் சென்றுவிடலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3v7z4n7xqdo
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஓய்வெடுத்து திரும்பி வாருங்கள். இந்தக்களம் எங்கேயும் போகாது.
-
யாழ். பல்கலை புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி தெரிவு!
யாழ். பல்கலை புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி தெரிவு! Published By: Digital Desk 3 26 Feb, 2026 | 05:26 PM யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி ஜனாதிபதியால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வலிகாமம் கிழக்கு புத்தூரைச் சேர்ந்த இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக செயற்பட்டு வருகின்றார். தற்போதைய துணைவேந்தரின் பதவிக் காலம் எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் எதிர்வரும் 25.03.2026 தொடக்கம் பேராசிரியர் தி.வேல்நம்பி துணைவேந்தராக பதவியேற்கவுள்ளார். யாழ். பல்கலைக்கழகப் பதிவாளரால் கடந்த செப்ரெம்பர் முதல் வாரத்தில் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த நிலையில் துணைவேந்தருக்கான தேர்தலில் அதிக புள்ளிகளைப் பெற்று முதன்மை நிலையை வேல்நம்பி பெற்றிருந்தார். அத்துடன் கடந்த மூன்று தடவைகள் இடம்பெற்ற துணைவேந்தர் தேர்தலில் வேல்நம்பி முதல் மூன்று ஸ்தானங்களுள் தெரிவாகி இருந்தார். இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தெரிவு செய்வதற்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கையின் படி, பேரவையின் விசேட கூட்டத்தில் விண்ணப்பதாரிகள் பெறும் புள்ளி ஒழுங்கில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களின் விபரங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றினூடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்கப் பல்கலைக் கழகங்கள் சட்டத்தின் படி ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில், பேரவையினால் முன்மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரை ஜனாதிபதி தெரிவு செய்து துணைவேந்தராக நியமனம் செய்வார். இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/239667
-
இந்தியாவில் கைதான பொடி லெசி நாளை நாட்டுக்கு?
இந்தியாவில் கைதான பொடி லெசி நாளை நாட்டுக்கு? Feb 26, 2026 - 07:23 PM இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க நாளை (27) அதிகாலை இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ளார். நீதிமன்றில் பிணை வழங்கப்பட்டதன் பின்னர் தலைமறைவாகியிருந்த பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான ஜனித் மதுசங்க எனப்படும் பொடி லெசி, 2024 ஆம் ஆண்டு பிணையில் விடுவிக்கப்பட்டதும் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தார். பிணை வழங்கப்பட்டதை அடுத்து, அவர் சட்டத்தரணி ஒருவரின் காரிலேயே நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறியிருந்தார். இதனையடுத்து, அவர் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவின் மும்பையில் வைத்து கைது செய்யப்பட்டார். நேற்றைய தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகள் இந்தியாவுக்குச் சென்றுள்ளதுடன், அவர் நாளை (27) அதிகாலை நாட்டுக்குக் அழைத்துவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://adaderanatamil.lk/news/cmm3iwrx3000f356p7xm9exso
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
காச வாங்கிட்டாங்கள் என்று ஒருத்தரும் வரேலையா. அவர்கள் முதற் சுற்றில் நன்றாகச் செய்ததெல்லாம், இப்போ செய்யவில்லை. களத்தடுப்பு அவர்களின் பலம். அதிலேயே கோட்டை விட்டால். இப்பிடி அடிக்கிறாங்கள் என்ற விரக்தியோ தெரியா.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்திய பெரிய ஸ்கோர் அடித்து விட்டது 256💪 ஹா ஹா................... புள்ளிய அள்ளிட்டோம் ஹா ஹா.................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சிம்பாவேயும் இந்தியாவுக்கு உதவி செய்யுது. களத்தடுப்பு படு மோசம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஓய்வெடுத்து செமி பைனலுக்கு ரெடியாகி வரவும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
மே.இ 19 ஆறுகள் அடித்தவை. இந்தியா 12தான் அடிச்சிருக்கு. இன்னும் 7 அடிப்பினமா.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பையன் சார், எந்த நிலைமையிலும் நீங்கள் பாசிட்டிவாக இருப்பதும், எங்களுடன் இணைந்திருப்பதும் உங்களின் உறுதியைக் காட்டுகின்றது......................👍. சுகமாகி விடுவீர்கள்................🙏.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தெ.ஆ இன்று இந்தியாவுக்கு பெரிய உதவி செய்திருக்கு. மே.இ எதிர் இந்தியா போட்டியில் வெல்பவர் அரை இறுதிக்கு. காலிறுதி ஆட்டம் போல பாக்கலாம்.
-
உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி
இப்போதைய நிலையில்... காங்கிரஸ் தலைமை விஜய் கட்சியுடன் இணைந்து, பரீட்சார்த்த முயற்சியை மேற்கொள்ள துணிவு இருக்குமா என்பது சந்தேகமே. ஸ்டாலின்-சோனியா நட்புக்காகத் தன்னும்... சட்ட சபைத் தேர்தலில் மீண்டும் இணைந்து போட்டியிடுவார்கள் என்றே நினைக்கின்றேன்.
-
உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி
உண்மையில் காங்கிரசை தமிழ் நாட்டில் மீள நிறுத்த இது ஒரு அரிய சந்தர்ப்பம். திமுக 40 சீட் கொடுத்தாலும் அதில் 20 ல் வெல்லவே காங் திணறும். விஜை 80 சீட் வரை கொடுத்தால் கூட இதே 20 வெல்லலாம். கூடவே ஆட்சி அதிகாரம். நாடாளுமன்ற தேர்தலில் 15, 20 சீட் வரை கேக்கலாம். மாநிலத்தில் திமுகவுக்குத்தான் ஆட்சியை தக்க வைக்க வேண்டிய தேவை உண்டு. காங்குக்கு அல்ல. எனவே இந்த தேர்தலில் திமுக, தவெக இரெண்டும் தோற்று, அதிமுக+பிஜேபி ஆட்சி அமைத்தாலும், வரும் நாடளுமன்ற தேர்தலில் மீளவும் திமுகவிடன் சேரலாம். மத்தியிலும், மாநிலத்திலும் பிஜேபியை எதிர் கொண்டபடி, அப்போ காங்கிரசையும் ஒதுக்கும் தைரியம் திமுகவுக்கு இராது. தொங்கு சட்டசபை அமைந்தால், தவெக வை கழட்டி விட்டு விட்டு, திமுகவுடன் மீள சேரலாம். இப்படி பல வகைகளில் இப்போ தவெக விடம் கூட்டணி போவது காங்கிற்கு அனுகூலமான விடயம். திமுக கூட்டணியில் முரண்டு கொண்டு உடைக்காமல் - எமது தகுதிக்குரிய சீட் இல்லை எனவே போகிறோம் என ஒரு மென் பிரிப்பை செய்து வெளியேறி தவெகவுடம் கூட்டணி வைத்து கொண்டே தேர்தலுக்கு பின்னான ஆப்சன்சை ஓபன்னாக வைத்திருக்கலாம். இப்படி பல துருப்பு சீட்டுகள் காங் வசம். ஆனால்…. கட்சிக்கு எது நல்லதோ அதன் நேர் எதிர் முடிவை எடுப்பதில் ராகுல் பல்லவர். தவிர ஸ்டாலின்-சோனியா நட்பும் வலிமையானது. ஆகவே உள்ளாட்சியில் பங்கு, 41 சீட் என அடிமாட்டு விலைக்கு காங்கிரஸ் பணியும் என்றே நானும் நினைக்கிறேன்.
-
மிச்ச சொச்சம் - ஒரு நிமிடக் கதை
சுவியர் மன்னிக்க வேண்டும். நான் தான் 18+ என்ற பதத்தை பாவித்து தவறான அர்த்தம் கொடுத்து விட்டேனென நினைக்கிறேன். உங்கள் கதையில் விரசம் எதுவும் இல்லை. நான் பகிடியாகச் சொன்னது தான் 18+