Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. ஈரான் தாக்குதலில் மூன்று அமெரிக்கப் படையினர் பலி Mar 1, 2026 - 09:17 PM ஈரானை இலக்கு வைத்து ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது மூன்று அமெரிக்கப் படைவீரர்கள் உயிரிழந்துள்ளதை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அமெரிக்கத் தரப்பில் பதிவான முதலாவது உயிரிழப்புகள் இவை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கையின் போது மேலும் ஐந்து படைவீரர்கள் பலத்த காயமடைந்துள்ளதாக அந்நாட்டு இராணுவ அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. உயிரிழந்த வீரர்களின் விபரங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. அமெரிக்க இராணுவ மரபுகளின்படி, உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டு 24 மணி நேரம் கழிந்த பின்னரே பெயர்கள் பகிரங்கப்படுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிரான இந்த இராணுவ நடவடிக்கையை அறிவித்திருந்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னதாகவே எச்சரிக்கை விடுத்திருந்தார். "அமெரிக்க வீரர்களின் உயிர்கள் பறிபோகலாம், போரின் போது இத்தகைய உயிரிழப்புகள் சாதாரணமானவை" என அவர் தெரிவித்திருந்தார். இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், அமெரிக்கா ஈரானுக்கு எதிரான தனது தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரான் தாக்குதலில் மூன்று அமெரிக்கப் படையினர் பலி
  3. தமிழக இழுவைப்படகுகளுக்கு இலங்கை கடற்பரப்பில் ஒருபோதும் அனுமதியில்லை: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் 01 Mar, 2026 | 11:37 AM (கச்சத்தீவிலிருந்து இராஜதுரை ஹஷான்) இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக முன்னெடுத்துள்ளோம். இதன் ஒரு கட்டமாக எதிர்வரும் மே மாதம் இந்தியாவின் தமிழ் நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளேன். இந்திய மீனவர்களின் இழுவை படகு மீன்பிடிக்கு இலங்கை கடற்பரப்பில் ஒருபோதும் அனுமதி வழங்கப்படமாட்டாது என கடற்றொழில் மற்றும் நீர்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். புனித கச்சத்தீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நேற்று சனிக்கிழமை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. திருவிழாவில் கலந்துக் கொண்ட இந்திய நாட்டுப்படகு மீனவர் சங்கம் மற்றும் தமிழக கடல்சார் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர். அத்துடன் மஹஜர் ஒன்றையும் அமைச்சரிடம் கையளித்தனர். இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் சந்திரசேகர், இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வுக் காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட போது இரு தரப்பு மீனவர் பிரச்சினை குறித்து கலந்துரையாடியுள்ளார்கள். மீனவர் பிரச்சினைக்கு கட்டம் கட்டமாக தீர்வு காணப்படும். எதிர்வரும் மே மாதத்துக்கு பின்னர் இந்தியா தமிழகத்துக்கு செல்லவுள்ளேன். இதன்போது இந்த பிரச்சினையுடன் தொடர்புடைய சகல தரப்பினருடனும் கலந்துரையாடவுள்ளோம். தேவையாயின் இந்திய மத்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராகவுள்ளோம். கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பது தொடர்பில் நீதிமன்றமே தீர்மானிக்கும். நீதிமன்ற விடயத்தில் எம்மால் தலையிட முடியாது. சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களுக்கு அதிகபட்ச தண்டப்பணம் அறவிடப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. தண்டப்பணம் குறித்து அமைச்சு மட்டத்தில் கவனம் செலுத்தப்படும். இந்திய மீனவர்களின் இழுவை படகு பயன்பாட்டால் இலங்கையின் மீன் மற்றும் கடல்வாழ் வளங்களுக்கு பாரிய அச்சுறுத்தல் காணப்படுகிறது. கடல்வளங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. ஆகவே இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் இழுவை படகை பயன்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார். தமிழக இழுவைப் படகுகளுக்கு இலங்கை கடற்பரப்பில் ஒருபோதும் அனுமதியில்லை: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
  4. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈரான் பாரிய தாக்குதல்: மூவர் பலி! Mar 1, 2026 - 08:31 PM ஈரான் நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சு இன்று (01) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் மேலும் 58 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிந்த பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மூவராவர். அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகளை மீறி வந்த ஈரானிய ட்ரோன்கள் தரையில் விழுந்து வெடித்ததாலேயே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஈரான் ஐக்கிய அரபு அமீரகத்தை நோக்கி 165 பலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதுடன், அவற்றில் 152 ஏவுகணைகளைப் பாதுகாப்புத் தரப்பினர் வானிலேயே அழித்து வெற்றி கண்டுள்ளனர். எஞ்சிய 13 ஏவுகணைகள் கடலில் விழுந்துள்ளன. இதற்கு மேலதிகமாக, இரண்டு குரூஸ் ஏவுகணைகளும் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் ஒட்டுமொத்தமாக 541 ட்ரோன்களைத் தாக்குதலுக்குப் பயன்படுத்தியுள்ளதுடன், அவற்றில் 506 ட்ரோன்கள் இடைநடுவிலேயே வீழ்த்தப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், 35 ட்ரோன்கள் அமீரகத்தின் நிலப்பரப்பிற்குள் விழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் இந்தப் போர்ச் சூழலுக்கு மத்தியில், ஐக்கிய அரபு அமீரகம் தனது வான் பாதுகாப்பு அமைப்புகளை உச்சக்கட்ட நிலையில் செயற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈரான் பாரிய தாக்குதல்: மூவர் பலி!
  5. ஓம் நமோ பகவதே காளி சாமுண்டி தேவி பைரவி தேவி ஓங்கார நீலி சத்தி மம வசமாயிக்க சுவாஹா சஞ்சு சாம்ஸன்சை அவுட் ஆக்கி விடுதாயே! உந்த ரேட்ல இன்னும் இரெண்டு ஓவர் போதும் இந்தியா வெல்ல.
  6. அய்யய்யோ..... பையா ...பையா பையப்பைய நடந்துவா இந்தியா கஸ்டப்படுகுது கண்டிப்பா வரவேணும் கையிலை தேசிக்காய் வேப்பிலையுடன்.. கையோடை ஜக்கம்மவையும் கூட்டிவா காம்பீரு முகம் தொங்கிட்டிடுது... சூரியாவும் சுவிங்கத்தை துப்பிட்டான் ..தாமதம் வேண்டாம் பையா ஜக்கம்மா வந்து கட்டறுத்து.. வெற்றி தர வேணும் வெல்லும் புள்ளி நான் இரண்டெடுக்க வேணும்.. பையா பையா ஓடிவா..
  7. பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குக: இலங்கை அரசாங்கத்திற்கு ஐநா உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் கடும் வலியுறுத்து! 01 Mar, 2026 | 10:04 AM (நா.தனுஜா) பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குமாறும், புதிதாக உருவாக்கப்படும் சட்டம் மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்புடையவாறு அமைவதை உறுதிப்படுத்துவதற்கு சிவில் சமூகங்களுடன் இணைந்து பணியாற்றுமாறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (23) ஆரம்பமாகி, எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரின்போது ,இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல், எனும் தீர்மானத்தை மேலும் இரு வருடகாலத்துக்கு காலநீடிப்பு செய்து நடைமுறைப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. அதன்பிரகாரம் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரம் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் எழுத்துமூல அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் 63 ஆவது கூட்டத்தொடரிலும், விரிவான அறிக்கை அடுத்த ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் 66 ஆவது கூட்டத்தொடரிலும் சமர்ப்பிக்கப்படும். இந்நிலையில் கூட்டத்தொடரில் கடந்த புதன்கிழமை (25) நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இலங்கை சார்பில் உரையாற்றிய ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி சுமித் தஸநாயக்க, இன்னமும் தீர்வுகாணப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் உள்ளகக்கட்டமைப்புக்கள் பலப்படுத்தப்பட்டிருப்பதுடன், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பது குறித்து ஆராயப்பட்டுவருவதாகக் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (27) உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கினால் உலகளாவிய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான அறிக்கை பேரவையில் முன்வைக்கப்பட்டது. அவ்வறிக்கையில் இலங்கை குறித்து பிரஸ்தாபித்த உயர்ஸ்தானிகர், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதுடன் புதிதாக உருவாக்கப்படும் சட்டம் மனித உரிமைகள் சட்டத்துக்கு ஏற்புடையவாறு அமைவதை உறுதிப்படுத்துவதற்கு சிவில் சமூகத்துடன் இணைந்து பணியாற்றுமாறும் வலியுறுத்துகிறேன் எனக் தெரிவித்தார். அத்தோடு கடந்த ஆண்டு மனித உரிமைகளை மேம்படுத்துவதை முன்னிறுத்தி இலங்கை, பங்களாதேஷ், கொலம்பியா, சிலி உள்ளடங்கலாக 35 க்கும் மேற்பட்ட நாடுகளின்அரசாங்கங்களுடன் தனது அலுவலகம் பணியாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குக: இலங்கை அரசாங்கத்திற்கு ஐநா உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் கடும் வலியுறுத்து!
  8. 10% இனால் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை! Mar 1, 2026 - 09:30 PM ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டுள்ள தாக்குதல்களைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் மூண்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி, பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை சுமார் 10% இனால் அதிகரித்து, ஒரு பீப்பாயின் விலை 80 அமெரிக்க டொலர்கள் வரை உயர்ந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், இந்தப் போர் பதற்றம் தொடரும் பட்சத்தில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலர்களை எட்டக்கூடும் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 10% இனால் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை!
  9. சாம்சனை வீட்டுக்கு அனுப்ப மலையாள மாந்திரீகம்தான் சரி.
  10. முறையற்ற வகையில் எரிபொருளைக் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை Mar 1, 2026 - 07:10 PM மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு, பொதுமக்கள் எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தி வைப்பதாக அவதானிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டுக்குள் தேவையான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும், இது தொடர்பில் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு இருந்தபோதிலும், சில தரப்பினர் திட்டமிட்ட வகையில் கலன்கள் அல்லது வேறு கொள்கலன்களில் எரிபொருளைச் சேகரித்து வருவதால், அத்தகைய செயற்பாடுகளைத் தடுக்கும் நோக்கில் மீள் அறிவித்தல் விடுக்கப்படும் வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, மீன்பிடிப் படகுகள், தொழிற்சாலைகள், வேலைத்தளங்கள், விவசாய நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசிய வீட்டுத் தேவைகளுக்காகத் தவிர, வேறு எந்தத் தேவைகளுக்கும் கலன்கள், போத்தல்கள் அல்லது ஏனைய கொள்கலன்களுக்கு எரிபொருள் வழங்குவதைத் தவிர்க்குமாறு எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்களுடன் கலந்தாலோசித்துத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வாறு தேவையற்ற முறையில் எரிபொருளைச் சேகரித்து, களஞ்சியப்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்யும் மோசடிகளில் ஈடுபடுவோருக்கு எதிராகவும், எரிபொருள் தொடர்பில் சமூக வலைத்தளங்கள் ஊடாகப் பல்வேறு போலிப் பிரசாரங்களை வெளியிடும் நபர்கள் அல்லது குழுக்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை பொலிஸார் செயற்படுவார்கள் எனவும் குறித்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. முறையற்ற வகையில் எரிபொருளைக் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை
  11. நல்ல கண்ணுகளும் -தமிழ் கூறும் நல்லுலகும்! நிலாந்தன். தமிழ்நாட்டின் மூத்த கொம்யூனிஸ்ட் தலைவராகிய நல்லகண்ணு அண்மையில் இயற்கை எய்தினார்.தன் பெயருக்கு ஏற்ப நல்ல கண்ணுவாக வாழ்ந்தவர் அவர். உண்மையான கொம்யூனிஸ்ட் ஒரு சன்னியாசியைப்போல இருப்பார். நல்ல கண்ணு அப்படித்தான் வாழ்ந்தார். அவர் சொத்துச் சேர்க்கவில்லை.புகழுக்கோ பதவிக்கோ போகங்களுக்கோ ஆசைப்படவில்லை.எளிமையாக வாழ்ந்தார். அவருடைய எளிமையை,சந்நியாசத்தை தமிழ்நாட்டில் யாரும் கேள்விக்கு உட்படுத்தியதில்லை. அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின், அஞ்சலி செலுத்திய பின் அவரை “வாழ்நாள் போராளிக்கு வீர வணக்கம்” என்று கூறி முழக்கமிட்டார். இந்தஇடத்தில் ஒரு முக்கிய கேள்வி எழுகிறது.தமிழ்நாட்டின் முதலமைச்சரால் வாழ்நாள் போராளி என்று அழைக்கப்பட்ட ஒருவர்,தன் வாழ்நாளில் என்றைக்குமே தமிழ்மக்களால் தமது பிரதிநிதியாக தெரிவு செய்யப்படவில்லை. ஏன் ? மேற்கு வங்கத்தில்,திரிபுராவில் மகத்தான கொம்யூனிஸ்ட் தலைவர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.திரிபுராவில் அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட மிக எளிமையான,ஒரு சன்னியாசி போல வாழ்ந்த முன்னாள் முதலமைச்சர் ஒருவரைப் பற்றி சமூகவலைத்தளங்களில் வாசிக்கலாம். அவர் எவ்வளவு எளிமையாக வாழ்ந்தார்?தனக்கென்று சொத்துக்களை சேர்த்துக் கொள்ளவில்லை,அவருடைய மனைவி முச்சக்கர வண்டியில்தான் அலுவலகத்துக்கு போவார்…என்றெல்லாம் போற்றப்படுகிறது. இந்தியாவில் மகத்தான கொம்யூனிஸ்ட் தலைவர்கள் இருந்தார்கள்; இருக்கிறார்கள்.அவர்களில் ஒருவர்தான் நல்லகண்ணு.அவர் நூற்றியொரு வயதுவரை வாழ்ந்தார்.ஆனால் போட்டியிட்ட தேர்தல்களில் அவர் வெற்றி பெறவேயில்லை.தமிழ்நாட்டு மக்கள் அவரை தமது பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கவில்லை? ஏன் ? வாழ்நாள் போராளிகளாக வாழ்ந்த,வாழ்கின்ற நல்லகண்ணுக்கள் ஏன் தமிழ் மக்களின் கண்களுக்கு தெரிவதில்லை? கெட்ட கண்ணுகள்தானே அதிகமாகத் தெரிகிறார்கள்? தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளில் எத்தனை பேர் நல்லகண்ணுகள்? எத்தனை பேர் கெட்ட கண்ணுகள் ? தமிழ் வாக்காளர்கள் ஏன் பெரிய அளவுக்கு நல்லகண்ணுகளை தமது தலைவர்களாகத் தெரிந்தெடுப்பதில்லை? திரை நட்சத்திரங்களுக்காகக் தீக்குளிக்கும் மக்கள்.திரை நட்சத்திரங்களுக்காக தலையை மழிக்கும் பெண்கள்.திரை நட்சத்திரங்களுக்காக மீசையை மளிக்கின்ற ஆண்கள்.நாக்கை,விரலை வெட்டுகின்ற,விரதம் இருக்கின்ற,படித்த,படிக்காத ரசிகர்களைக் கொண்ட ஒரு சமூகம், நல்லகண்ணுகளை ஏன் தேர்ந்தெடுக்காமல் விடுகிறது? ரணா படத்தில் வரும் சீக்கிய போலீஸ் அதிகாரி கூறுவது போல தமிழ் மக்களில் அதிகமானவர்கள் “சென்ரிமென்ரல் இடியட்களா”?நல்லகண்ணுகளை தேர்ந்தெடுக்க அவர்களால் முடியாதா? அல்லது நல்லகண்ணுகளால் வெற்றிகரமாக தேர்தல் அரசியலை முன்னெடுக்க முடியவில்லையா? ஏன் முடியவில்லை? ஈழத் தமிழ் அரசியலில் நான் திரும்பத் திரும்பக் கூறும் ஓர் உதாரணம் உண்டு. நல்ல தங்கத்தை வைத்து ஆபரணங்களை,நகையைச் செய்ய முடியாது. அதை வேண்டுமென்றால் அயர்ன் சேவில் பாதுகாக்கலாம்.தங்கத்தை அதன் பிரயோக நிலைக்கு கொண்டு வருவது என்றால் அதாவது ஆபரணங்கள் செய்வதென்றால் அங்கே ஏதோ ஒரு விகிதம் செப்பைக் கலக்க வேண்டும்.அதாவது தூய தங்கத்தை வைத்து ஆபரணங்களைச் செய்யமுடியாது.அதன் தூய்மையைக் கெடுக்கும் செப்பைக் கலப்பதன் மூலம்தான் அதனை மக்கள் மயப்படுத்தலாம். இது தங்கத்துக்கு மட்டுமல்ல,நல்லகண்ணுகளுக்கும் பொருந்தும்.நூறு விகிதம் நல்லகண்ணுகளாக இருந்தால் தேர்தல் அரசியலில் இறங்க முடியாது. இறங்கினாலும் வெல்ல முடியாது.தேர்தல் அரசியலில் வெல்வதற்கு சாதி வேண்டும்; சமயம் வேண்டும்; ஊர் வாதம் வேண்டும்; பிரதேச வாதம் வேண்டும்; அல்லது இதுபோல ஏதோ ஒரு குருட்டு சென்ரிமென்ரல் வாதம் வேண்டும். ஆனால் நல்லகண்ணுகள் அப்படிப்பட்ட தீய தேர்தல் உபாயங்களை நோக்கிச் செல்ல மாட்டார்கள்.மக்களுக்கு விழிப்பூட்ட வேண்டும்;மக்கள் மத்தியில் கருத்தாக்கம் செய்ய வேண்டும்;அதன்மூலம் “கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் அது சக்தியாக உருவெடுக்கும்” என்று அவர்கள் நம்புவார்கள்; உழைப்பார்கள். ஆனால் துயரம் என்னவென்றால்,ஆசிய,ஆபிரிக்க,லத்தீன் அமெரிக்க நாடுகளில் மட்டுமல்ல,உயர்ந்த ஜனநாயகங்கள் என்று போற்றப்படும் மேற்கு நாடுகளிலும்கூட கருத்து மக்களைப் பற்றிக்கொள்வதை விடவும்,அறிவு மக்களைப் பற்றிக் கொள்வதை விடவும், உணர்ச்சிகரமான நிறம்,இனம்,மதம், மொழி… போன்ற குருட்டு விசுவாசங்கள்தான் எளிதாகப் பற்றிக் கொள்கின்றன. ஜனநாயகப் பரப்பில் அறிஞர்களும் நல்லகண்ணுகளும் அரிதாகவே தெரிவு செய்யப்படுகிறார்கள்.அவர்களுக்கு நடிக்கத் தெரியாது.அவர்களுக்குப் பொய் சொல்லத் தெரியாது.அவர்களுக்கு வேஷம் போடத் தெரியாது.அதாவது அவர்கள் மக்களை ஏமாற்ற விரும்பவில்லை.இங்கே பிரச்சினை அவர்களுடைய நேர்மைதான்; அவர்களுடைய ஒழுக்கம்தான்;அவர்களுடைய பற்றின்மைதான். நடிகர்கள் திரையிலும் நடிக்கிறார்கள்; அரசியலிலும் நடிக்கிறார்கள். ஆனால் அறிஞர்களோ,நல்லக்கண்ணுகளோ மக்களை ஏமாற்ற விரும்புவதில்லை. அதனால் தேர்தல் அரசியலில் அவர்கள் பெரும்பாலும் தோற்கிறார்கள். அதுமட்டுமல்ல, அதைவிட முக்கியமாக தேர்தல் அரசியல் ஒரு தொழிலாக வளர்ந்து விட்டது. அதற்குரிய தொழில் திறன்களை கொண்டிருப்பவர்கள்தான் அதில் வெல்லலாம்.எல்லா நல்லகண்ணுகளுக்கும் அந்தத் தொழில் திறன் இருப்பதில்லை. இது தமிழகத்துக்கு மட்டுமல்ல,தமிழகத்திலிருந்து சிறிய பாக்கு நீரிணையால் பிரிக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்கள் மத்தியிலும் நிலைமை அதுதான். அரசியலை அறிவியல் ஒழுக்கமாகப் பயில்பவர்கள்,மக்களைக் கருத்தாக்கம் செய்ய வேண்டும்,விழிப்பூட்ட வேண்டும் என்று உழைப்பவர்கள்,தேர்தல் அரசியலுக்கு வரத் தயங்குகிறார்கள்.தேர்தல் அரசியலுக்குள் வந்தால் தங்களுடைய தூய தங்கத் தன்மை கெட்டுவிடும் என்றும் பயப்படுகிறார்கள். சொம்பு கலந்த ஒரு வாழ்க்கையை அவர்கள் விரும்பவில்லை.செம்பு கலந்த அரசியலுக்கும் அவர்கள் தயாரில்லை. இந்தத் தூய்மைவாதம்-அப்படித்தான் அதை கூறவேண்டும்- காரணமாகத்தான் ஒப்பீட்டளவில் நல்ல கண்ணுகளாக இருப்பவர்கள் தேர்தல்களில் வெல்ல முடியாமல் இருக்கிறார்கள்.கெட்ட கண்ணுக்கள்தான் பெரும்பான்மை தமிழ் மக்களின் கண்களுக்குத் தெரிகிறார்கள்.கெட்ட கண்ணுகள்தான் தமிழ் மக்களுக்குக் கவர்ச்சியாகத் தெரிகிறார்கள். அல்லது ஓரளவுக்கு தங்களை தேர்தல் அரசியலில் சுதாகரித்துக் கொள்ளத் தயாராக காணப்படும் நல்லகண்ணுகள் மக்கள் பிரதிநிதிகளாக வருகிறார்கள். இலங்கைத் தீவில் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த மக்கள் எழுச்சிகளை பின்னின்ற இயக்கியது முன்னிலை சோசலிசக் கட்சியும் குறிப்பிட்ட சில மக்கள் அமைப்புகளும் ஆகும். ஆனால் இந்த அமைப்புகள் ஒன்றிணைந்து உருவாக்கிய குடைச்சின்னத்தின் கீழ் போட்டியிடும் கூட்டமைப்பானது தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.அது அவமானகரமான ஒரு தோல்வி என்பதை விடவும் ஆபத்தான தோல்வி. அந்தக் கூட்டமைப்பு இன்றுவரை தேர்தல் அரசியலில் வெற்றிபெற முடியவில்லை.ஆனால் அந்த மக்கள் எழுச்சிகளின் கனிகளை தேர்தல் மேடைகளில் பொருத்தமாக மொழிபெயர்க்கத் தெரிந்த அனுர ஜனாதிபதியாக வந்து விட்டார்;தேசிய மக்கள் சக்தி ஆளுங்கட்சியாக வந்துவிட்டது. அப்படித்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போர்க்களத்தில் நின்று அவயவங்களை இழந்த முன்னாள் இயக்கத்தவர்கள் தேர்தல் கேட்டார்கள். அவர்களுக்காகப் பிரச்சாரம் செய்த முன்னால் இயக்கத்தவர் ஒருவர் சொன்னார், குறைந்தது 15,000 வீடுகளுக்கு நாங்கள் ஏறியிறங்கி இருப்போம் என்று. ஆனால் அந்த வேட்பாளர்களுக்கு கிடைத்த வாக்குகளோ கிட்டத்தட்ட 2000தான். தங்களுக்காகப் போராடப் போய்,தங்களுக்காக உறுப்புகளை இழந்தவர்களுக்கு தமிழ்மக்கள் கொடுத்த வாக்குகள் அவை. நல்லகண்ணுகள் தூய நல்லகண்ணுகளாக இருக்கும்வரை அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது.அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவது என்பது 100% தூய்மையான ஒரு நடவடிக்கையும் அல்ல. அது ஒரு வகைச் சூழ்ச்சி; ஒரு வகைச் சதி; ஒரு வகை தந்திரம்; ஒரு வகை வியாபாரம்;ஒரு வகை தொழில் தேர்ச்சி. நல்லகண்ணுகள் அதைக் கற்றுத்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் பெரும்பாலான நல்லகண்ணுகள் அதைக் கற்றுக்கொள்ளத் தயாரில்லை.தங்களைத் தூய தங்கங்களாக வைத்துக் கொண்டிருக்கவே அவர்கள் விரும்புகிறார்கள். நல்லகண்ணுவின் மறைவு தமிழகத்தில் அதிர்வுகளை ஏற்படுத்திய அதே காலப்பகுதியில் நடிகர் விஜேயினுடைய மனைவி விவாகரத்துக் கேட்டு நீதிமன்றத்துக்குச் சென்ற செய்தி வெளியே வந்தது. அந்தச் செய்தி நல்ல கண்ணுவின் மறைவுச் செய்தியை விடவும் அதிகம் “வைரல்” ஆகியது.தமிழ்ப் பொதுப் புத்திக்கு விழிப்பூட்டாத நடிகர்களைப் பற்றிய செய்திகள் எளிதாக வைரல் ஆகின்றன.ஆனால் தமிழ்ப் பொதுப்புத்திக்கு விழிப்பூட்ட வேண்டும், தமிழ்ப் பொதுப்புத்தியை கருத்தாக்கம் செய்ய வேண்டும் என்று கனவுகாணும் நல்லகண்ணுகளை தமிழ்ப்பொதுப் புத்தி எப்பொழுது போற்றும்; கொண்டாடும்? https://athavannews.com/2026/1466813
  12. ஜக்கம்மா இந்தியாவை தோற்கவை தாயே😂 அத்தோட ஒரு பிளேன் டீயிம் கோல்ட் லீபும் 😂
  13. காமனெயி மட்டுமல்ல இரானில் கொல்லப்பட்ட மற்ற தலைவர்கள் யார்? முழு விவரம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,புரட்சிகர காவல் படையின் தளபதி முகமது பக்போர் (இடது), ஆயதுல்லா அலி காமனெயி, பாதுகாப்பு அமைச்சர் அஸிஸ் நசிர்ஸதே (வலது) கட்டுரை தகவல் ஹஃப்சா கலீல் மற்றும் டேவிட் கிரிட்டன் பிபிசி நியூஸ் 1 மார்ச் 2026, 07:19 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 9 நிமிடங்கள் இரான் நாட்டின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி மரணமடைந்துவிட்டதாக, அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் காமனெயி மரணம் குறித்து பதிவிட்டிருந்தார். சனிக்கிழமை அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது நடத்திய மிகப்பெரிய அளவிலான தாக்குதலைத் தொடர்ந்து காமனெயி மரணச் செய்தி வெளியாகியுள்ளது. "டெஹ்ரானில் உள்ள காமனெயி இல்லம் ஒரு தீவிரமான திடீர் தாக்குதலில் அழிக்கப்பட்டது. 86 வயதான அந்த மதத் தலைவர் உயிரிழந்ததற்கான பல அறிகுறிகள் உள்ளன," என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ராணுவ தளங்கள் அமைந்துள்ள நான்கு வளைகுடா அரபு நாடுகளான - பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் - ஆகியவற்றின் மீது இரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவித் தாக்கியது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஆயதுல்லா அலி காமனெயி (கோப்புப் படம்) இரான் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் அறிக்கையின்படி, ஆயதுல்லா அலி காமனெயி சனிக்கிழமை அதிகாலை தனது அலுவலகத்தில் "பணிகளில் தீவிரமாக இருந்தபோது" உயிரிழந்தார் என அரசு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் கண்ணீருடன் அறிக்கைகளை வாசித்தார். இதற்கிடையில், டெஹ்ரானில் உள்ள காமனெயி அலுவலகமான 'லீடர்ஷிப் ஹவுஸ்' வளாகத்தின் பல பகுதிகள் பலத்த சேதமடைந்துள்ளதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் பிபிசி வெரிஃபை (BBC Verify) உறுதிப்படுத்தியுள்ளது. இரான் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் (IRGC) தொடர்புடைய தஸ்னிம் செய்தி நிறுவனம், காமனெயி தனது அலுவலகத்திலேயே உயிரிழந்தது, அவர் எங்கோ ஒளிந்துகொண்டிருப்பதாக பரவிய செய்திகள் "எதிரிகளின் உளவியல் போர்" என்பதற்கான ஆதாரம் என்று கூறியுள்ளது. இரான் ராணுவத்தின் தலைமை தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் வான் தாக்குதலில் உயிரிழப்பு பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அப்துல்ரஹிம் மௌசவி (கோப்புப் படம்) இரானிய ராணுவத்தின் தலைமை தளபதி அப்துல்ரஹிம் மௌசவி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அஸிஸ் நசிர்ஸதே ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் மேலும் பல மூத்த ராணுவ அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர். பிபிசி பாரசீக மொழி சேவையின்படி, மௌசவியின் மரணத்தை 'நினைவுச் சின்னங்களைப் பாதுகாத்தல் மற்றும் புனித பாதுகாப்பு விழுமியங்களைப் பரப்புவதற்கான அறக்கட்டளை' என்கிற இரானிய அமைப்பு உறுதி செய்துள்ளது. "சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் மௌசவி மற்றும் அஸிஸ் நசிர்ஸதே உடன் புரட்சிகர காவல் படையின் தளபதி முகமது பக்போர் மற்றும் உச்ச பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் அலி ஷம்கானி ஆகியோர் கொல்லப்பட்டனர்," என அந்த இரானிய அமைப்பு தெரிவித்துள்ளது. "அவர்கள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின்போது கொல்லப்பட்டனர், பாதிக்கப்பட்ட மற்றவர்களின் பெயர்கள் பின்னர் வெளியிடப்படும்," எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரானில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு பிந்தைய காட்சி சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 09:30 மணியளவில், தலைநகர் டெஹ்ரானில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக இரான் ஊடகங்கள் தெரிவித்தன. நகரின் ஜம்ஹூரி சதுக்கம் மற்றும் ஹசன் அபாத் சதுக்கத்துக்கு மேல் புகை மூட்டம் காணப்பட்டது. டெஹ்ரானுக்கு அருகிலுள்ள கரஜ், நாட்டின் மையப்பகுதியில் உள்ள இஸ்ஃபஹான் மற்றும் கோம், மற்றும் மேற்கில் உள்ள கெர்மான்ஷா ஆகிய நகரங்களிலும் வெடிச்சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிபிசி உறுதிப்படுத்திய காணொளிகளில், டெஹ்ரானில் உள்ள காமனெயி இல்லமான லீடர்ஷிப் ஹவுஸ் வளாகத்தின் ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் வெடிப்புகள் நிகழ்ந்ததைக் காண முடிந்தது. செயற்கைக்கோள் படங்களும் அந்த வளாகத்தில் கட்டடங்கள் கருப்பாக மாறியிருப்பது, இடிபாடுகள் மற்றும் புகை மண்டலத்தைக் காட்டின. தாக்குதல் நடந்த சமயத்தில் ஆயதுல்லா அலி காமனெயி அங்கு இருந்தாரா, இல்லையா என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்ல சனிக்கிழமை மதியம் அதிஉயர் தலைவரின் உடல்நிலை குறித்துக் கேட்கப்பட்டபோது, இரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய், 'எதையும் உறுதிப்படுத்தும் நிலையில் தான் இல்லை' என்று பிபிசியிடம் தெரிவித்தார். ஆனால், சனிக்கிழமை மாலை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு தொலைக்காட்சி உரையில், 'டெஹ்ரானின் மையப்பகுதியில் இருந்த சர்வாதிகாரி காமனெயியின் வளாகத்தை நாங்கள் அழித்துவிட்டோம். அந்தச் சர்வாதிகாரி இப்போது உயிருடன் இல்லை என்பதற்கான பல அறிகுறிகள் உள்ளன' என்று கூறினார். இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில், 'வரலாற்றின் மிக மோசமான மனிதர்களில் ஒருவரான காமனெயி இறந்துவிட்டார்' என்று எழுதினார். டிரம்ப் மேலும் கூறுகையில், 'இஸ்ரேலுடன் இணைந்து பணியாற்றிய எங்களது உளவுத்துறை மற்றும் அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை. அவரோ அல்லது அவருடன் கொல்லப்பட்ட மற்ற தலைவர்களோ எதையும் செய்ய முடியாமல் போனது. இரான் மக்கள் தங்கள் நாட்டை மீட்டெடுப்பதற்கான மிகப்பெரிய வாய்ப்பு இதுவாகும்' என்று குறிப்பிட்டுள்ளார். டெஹ்ரானில் தாக்குதல்கள் பட மூலாதாரம்,ISNA/AFP via Getty Images படக்குறிப்பு,இரான் தலைநகர் டெஹ்ரான் அருகே நடைபெற்ற தாக்குதலுக்கு பிந்தைய காட்சி செய்திகளின்படி, தலைநகரில் இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானின் அலுவலகமும் முதல் தாக்குதல்களில் இலக்கு வைக்கப்பட்டது. அதிபர் பெசெஷ்கியான் 'பாதுகாப்பாக' இருப்பதாக இரான் அரசு தொலைக்காட்சி தெரிவித்தது, பின்னர் அவர் ஒரு அறிக்கையையும் வெளியிட்டார். நாள் முழுவதும் தாக்குதல்கள் மற்றும் வெடிப்புகள் குறித்த பல சம்பவங்கள் நடந்திருந்தாலும் சனிக்கிழமை காலை கிட்டத்தட்ட முழுமையான இணைய முடக்கம் இருந்ததை கண்காணிப்பாளர்கள் கண்டறிந்தனர். டெஹ்ரான், கரஜ் மற்றும் கோம் ஆகியவற்றுடன் மேற்கு மாகாணங்களான லோரெஸ்தான், ஹமாதான், கெர்மான்ஷா மற்றும் இலாம், வடமேற்கில் தப்ரிஸ், மற்றும் தெற்கு வளைகுடா மாகாணமான ஹோர்மோஸ்கானின் சில பகுதிகள், கெஷ்ம் தீவு உட்பட பல இடங்களில் வெடிப்புகள் நிகழ்ந்ததாக, இரான் அரசு செய்தி நிறுவனமான இர்னா தெரிவித்துள்ளது. மேற்கு நகரமான டெஸ்புல், தெற்கில் ஷிராஸ் மற்றும் கெர்மானின் புறநகர்ப் பகுதிகள், வடமேற்கில் குர்திஸ்தான் மற்றும் மேற்கு அஜர்பைஜான், மத்திய மாகாணமான மர்காசி, வடக்கில் கஸ்வின் மற்றும் ஜான்ஜன், மற்றும் தென்கிழக்கில் சிஸ்தான் பலுசிஸ்தான் ஆகியவற்றிலும் வெடிப்புகள் நிகழ்ந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. சனிக்கிழமை மாலை, இரான் செம்பிறை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் உள்ளூர் ஊடகங்களிடம் கூறுகையில், இரான் நாட்டின் 31 மாகாணங்களில் 24 மாகாணங்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களில் இலக்கு வைக்கப்பட்டன என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், அன்று இரவு 20:45 மணி வரை நாடு முழுவதும் மொத்தம் 201 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 747 பேர் காயமடைந்தனர், ஆனால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்த விரிவான விவரங்களை அவர் அளிக்கவில்லை. ஹோர்மோஸ்கான் மாகாணத்தின் மினாப்பில் உள்ள சிறுமிகளுக்கான ஆரம்பப் பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலில் குறைந்தது 85 பேர் கொல்லப்பட்டதாக அரசு ஊடகங்கள் தெரிவித்தன. பிபிசியால் இந்தத் தகவல்களை உறுதிப்படுத்த முடியவில்லை. அடுத்த அறிவிப்பு வரும் வரை நாட்டின் வான்பரப்பு மூடப்படுவதாக இரான் விமானப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் கூறியது என்ன? பட மூலாதாரம்,@netanyahu படக்குறிப்பு,இஸ்ரேலின் இருப்புக்கான அச்சுறுத்தலை நீக்கவே இரான் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக நெதன்யாகு கூறினார் சனிக்கிழமை காலை முதல் அறிக்கையை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் வெளியிட்டார். அவர் கூறுகையில், தனது நாடு "அச்சுறுத்தல்களை அகற்றுவதற்காக இரான் மீது முன்னெச்சரிக்கை தாக்குதல் நடத்தியுள்ளது" என்றும், இஸ்ரேலியர்கள் பதில் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களுக்குத் தயாராக இருக்குமாறும் எச்சரித்தார். சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் ஒரு வீடியோவைப் பதிவிட்டார். அதில் தாக்குதல்களில் அமெரிக்கா ஈடுபட்டிருப்பதை உறுதிப்படுத்திய அவர், இதன் நோக்கம் "இரான் ஆட்சியிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களை முடிவுக்குக் கொண்டு வந்து அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதாகும்" என்று கூறினார். "நாங்கள் அவர்களின் ஏவுகணைகளை அழிப்போம், அவர்களின் ஏவுகணைத் தொழிலை மண்ணோடு மண்ணாக ஆக்குவோம். அது முழுமையாக அழிக்கப்படும். நாங்கள் அவர்களின் கடற்படையை அழிப்போம். இப்பிராந்தியத்தின் பயங்கரவாத பினாமிகள் இனி இப்பகுதியையோ அல்லது உலகையோ சீர்குலைக்க முடியாது என்பதையும், எங்களது ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த முடியாது என்பதையும் நாங்கள் உறுதி செய்வோம்," என அவர் மேலும் கூறினார். "இரான் அணு ஆயுதங்களைப் பெறாமல் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம்" என்று டிரம்ப் கூறினார். முன்னதாக, டிரம்ப் பல வாரங்களாக இரான் நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்து வந்தார். "இரான் தனது அணுசக்தி திட்டம் குறித்த புதிய ஒப்பந்தத்திற்கு உடன்படாவிட்டால், ராணுவ நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவேன்" என்று அவர் கூறியிருந்தார். தனது அணுசக்தி திட்டம் முற்றிலும் அமைதிக்கானது என்றும், தான் அணு ஆயுதங்களைப் பெற விரும்பவில்லை என்றும் இரான் பலமுறை கூறியுள்ளது. இரான் பாதுகாப்புப் படையினர் ஆயுதங்களை கைவிட்டால் முழுமையான பாதுகாப்பை பெறலாம் அல்லது "நிச்சயமான மரணத்தை எதிர்கொள்ள நேரிடும்" என்று டிரம்ப் கூறினார். இரான் குடிமக்களையும் தங்கள் வீடுகளிலேயே இருக்குமாறும், மதகுருமார்கள் வர்க்கத்தை தூக்கியெறியத் தயாராக இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். "எங்கள் வேலை முடிந்ததும், உங்கள் அரசாங்கத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதை நீங்களே எடுத்துக்கொள்ள வேண்டும். இது பல தலைமுறைகளில் உங்களுக்குக் கிடைக்கும் ஒரே வாய்ப்பாக இருக்கலாம்" என்று டிரம்ப் கூறினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரான் மக்களின் சுதந்திரத்துக்கான நேரம் நெருங்கிவிட்டது என்று டிரம்ப் கூறினார் இஸ்ரேலும் அமெரிக்காவும் "இரான் பயங்கரவாத ஆட்சியால் உருவான தனது (இஸ்ரேலின்) இருப்புக்கான அச்சுறுத்தலை அகற்ற இந்த நடவடிக்கையை" மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். டிரம்புக்கு நன்றி தெரிவித்த அவர், "முழு மனிதகுலத்திற்கும் அச்சுறுத்தலாக மாறும் வகையில் இரான் அணு ஆயுதங்களை பெற அனுமதிக்கக் கூடாது" என்ற தனது செய்தியை மீண்டும் வலியுறுத்தினார். இந்தத் தாக்குதல்கள் "வீரம் மிக்க இரான் மக்கள் தங்கள் விதியைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதற்கான வாய்ப்பை உருவாக்கும்" என்று அவர் கூறினார். "இரான் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் அடக்குமுறையிலிருந்து விடுபடவும், சுதந்திரமான மற்றும் அமைதியை விரும்பும் இரான் நாட்டை உருவாக்கவும் இதுவே தருணம்" என்று நெதன்யாகு கூறினார். அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையம் சனிக்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் "இரான் அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைப்பைத் தகர்க்க, உடனடி அச்சுறுத்தலாக இருக்கும் இடங்களுக்கு முன்னுரிமை அளித்து இலக்குகளைத் தாக்கத் தொடங்கியுள்ளன" என்று தெரிவித்தது. இந்த இலக்குகளில் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தலைமையகம் மற்றும் கட்டுப்பாட்டு வசதிகள், வான் பாதுகாப்பு திறன்கள், ஏவுகணை மற்றும் டிரோன் ஏவுதளங்கள் மற்றும் ராணுவ விமான ஓடுதளங்கள் ஆகியவை அடங்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், மேற்கு மற்றும் மத்திய இரான் பகுதிகளில் "ஏவுகணை வரிசைகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு எதிரான மிகப்பெரிய தாக்குதலில்" சுமார் 200 போர் விமானங்கள் பங்கேற்றதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது. போர் விமானங்கள் ஒரே நேரத்தில் சுமார் ஐந்நூறு இலக்குகளின் மீது நூற்றுக்கணக்கான ஆயுதங்களை வீசியதாகவும், இதில் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணை ஏவுதளங்கள் அடங்கும் என்றும், இது இரான் நாட்டின் தாக்குதல் நடத்தும் திறனைப் பெருமளவு குறைத்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்கள் "காமனெயி ஆட்சியின் முக்கிய அதிகாரிகள், புரட்சிகர காவல்படையின் தளபதிகள் மற்றும் அணுசக்தி திட்டத்தின் முக்கிய நபர்களைச் செயலிழக்கச் செய்துவிட்டன" என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறினார். இரான் பாதுகாப்பு அமைப்பின் ஏழு முக்கிய உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாகக் கூறி இஸ்ரேல் ராணுவம் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளது. அவர்களில் இரான் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளரும் காமனெயியின் நம்பிக்கைக்குரிய ஆலோசகருமான அலி சம்கானி, ஐஆர்ஜிசி தளபதி மேஜர் ஜெனரல் முகமது பாக்பூர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் அஜீஸ் நசீர்சாதே ஆகியோர் அடங்குவர். ஐடிஎஃப் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் இயால் ஜமீர் கூறுகையில், கடந்த ஜூன் மாதம் இஸ்ரேலுக்கும் இரான் நாட்டுக்கும் இடையே நடந்த 12 நாள் போருக்குப் பிறகு, இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க அரசியல் மற்றும் ராணுவத் தலைமை சனிக்கிழமை தாக்குதல்களுக்காக ஓர் "ஆழமான மற்றும் முழுமையான கூட்டு செயல்பாட்டுத் திட்டமிடல் செயல்முறையை" தொடங்கியதாகத் தெரிவித்தார். இந்தத் தாக்குதல்களின் போது, இரான் நாட்டின் மூன்று குறிப்பிட்ட அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருந்தது. இரான் என்ன பதில் அளித்துள்ளது? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இரான் ஏவுகணைகளை ஏவியது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா "முற்றிலும் தூண்டுதலற்ற, சட்டவிரோதமான மற்றும் அநியாயமான" போரைத் தொடங்கியதாக இரான் வெளியுறவு அமைச்சர் குற்றம் சாட்டினார். இரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி எக்ஸ் தளத்தில், "எமது சக்திவாய்ந்த ராணுவம் இந்த நாளுக்காகத் தயாராக உள்ளது. தாக்குதல் நடத்தியவர்களுக்கு தகுந்த பாடத்தைக் கற்பிப்போம்" என்று எழுதினார். இரான் பாதுகாப்பு அமைச்சகமும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் "கொடூரமான தாக்குதலுக்கு" "கடுமையான மற்றும் இரு நாடுகளிலும் வருத்தத்தை ஏற்படுத்தும்" பதிலடியைக் கொடுப்பதாகச் சூளுரைத்தது. இரான் நாட்டின் தஸ்னிம் செய்தி நிறுவனம், ஐஆர்ஜிசி-யை மேற்கோள் காட்டி, அதன் படைகள் இஸ்ரேலின் பல இடங்கள் மீதும், இப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் ஐந்து முக்கிய ராணுவ தளங்களான - கத்தாரில் உள்ள அல் உதைத் விமான தளம், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் தஃப்ரா விமான தளம், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ஐந்தாவது கடற்படைத் தலைமையகம், குவைத்தில் உள்ள அலி அல் சலேம் விமான தளம் மற்றும் ஜோர்டானில் உள்ள முவஃபக் சால்டி விமான தளம் - ஆகியவற்றின் மீதும் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்ததாகக் கூறியது. அந்த செய்தியின்படி, அமெரிக்காவின் போருக்கு உறுதுணையாக இருக்கும் கப்பல் மீது ஏவுகணைகளால் "கடுமையான தாக்குதல்கள்" நடத்தப்பட்டதாகவும், கத்தாரில் உள்ள அமெரிக்காவின் PF-132 ரேடார் அமைப்பு "முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும்" ஐஆர்ஜிசி கூறியுள்ளது. இதற்கிடையில், இப்பிராந்தியத்தில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்படைப் பிரிவான 'யுனாவ்ஃபோர் அஸ்பைட்ஸ்' (EUNAVFOR ASPIDES), வளைகுடா பகுதியில் "எந்தவொரு கப்பலும் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல அனுமதியில்லை" என்று ஐஆர்ஜிசி வானொலி செய்தி மூலம் கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்தது. உலகின் மொத்த எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியில் சுமார் 20% இந்த வழியாகவே செல்கிறது. அமெரிக்க மத்திய கட்டளை மையம் தனது படைகள் சனிக்கிழமை "இரான் ஏவுகணை மற்றும் டிரோன்களின் நூற்றுக்கணக்கான தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்தன" என்று கூறியது. அமெரிக்கர்கள் எவரும் கொல்லப்படவில்லை அல்லது காயமடையவில்லை என்றும், இப்பகுதியில் உள்ள அமெரிக்க நிலைகளுக்கு "குறைந்தபட்ச சேதமே ஏற்பட்டுள்ளது மற்றும் இதனால் செயல்பாடுகளில் எந்தப் பாதிப்பும் இல்லை" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அதே சமயம் இஸ்ரேலிய ஊடகங்கள், இரான் இஸ்ரேலை நோக்கி சுமார் 150 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாகவும், அவற்றில் பெரும்பாலானவை சிறியவை என்றும், அத்துடன் டஜன்கணக்கான தாக்குதல் டிரோன்களையும் ஏவியதாகத் தெரிவித்தன. வான் பாதுகாப்பு அமைப்புகள் பல ஏவுகணைகளைத் தடுத்ததாகவும், சில திறந்தவெளிகளில் விழுந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேகன் டேவிட் அடோம் ஆம்புலன்ஸ் சேவை, மத்திய இஸ்ரேலில் காயமடைந்த ஒரு சிறுவனுக்கும், வடக்கில் காயமடைந்த ஒருவருக்கும் சிகிச்சை அளித்துள்ளதாகக் கூறியது. வடக்கில் மற்றொரு நபர் ஏவுகணை வெடிப்புக்குப் பிறகு உயரமான இடத்திலிருந்து விழுந்து காயமடைந்ததாகவும் அது மேலும் கூறியது. ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம், தனது வான் பாதுகாப்பு அமைப்பு "இரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை உள்ளடக்கிய ஒரு தாக்குதலை" எதிர்கொண்டதாகவும், அவற்றில் பலவற்றைத் இடைமறித்ததாகவும் கூறியது. இருப்பினும், அபுதாபி நகரில் விழுந்த இடிபாடுகளால் பாகிஸ்தான் குடிமகன் ஒருவர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். துபையில் உள்ள பிரபலமான பாம் டெவலப்மென்ட் பகுதியில் நான்கு பேர் காயமடைந்தனர். துபை விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சனிக்கிழமை மாலை நடந்த ஒரு "சம்பவத்தில்", உலகின் பரபரப்பான சர்வதேச போக்குவரத்து விமான நிலையமான துபை சர்வதேச விமான நிலையத்தின் ஒரு பகுதி சேதமடைந்ததாகவும், நான்கு பணியாளர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான முனையங்களிலிருந்து பயணிகள் ஏற்கெனவே வெளியேற்றப்பட்டுவிட்டதாக அது தெரிவித்தது. அமெரிக்க தளம் அமைத்திருக்கும் அலி அல் சலேம் விமான தளத்தை இரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் குறி வைத்ததாகவும், இதனால் மூன்று குவைத் வீரர்கள் காயமடைந்ததாகவும் குவைத் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. குவைத் சர்வதேச விமான நிலையத்திலும் ஒரு டிரோன் தாக்குதல் நடந்துள்ளது, இதனால் சிலருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதுடன், பொருட் சேதமும் ஏற்பட்டது. பஹ்ரைன் உள்துறை அமைச்சகம், மனாமா மற்றும் முஹராக் ஆகிய இடங்களில் மூன்று குடியிருப்பு கட்டடங்கள் டரோன் தாக்குதல்கள் மற்றும் இடைமறித்து அழிக்கப்பட்ட ஏவுகணையின் உடைந்த துண்டுகள் விழுந்ததால் சேதமடைந்ததாகக் கூறியது. பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது பிரிவு சேவை மையத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடந்ததாகவும் பஹ்ரைன் அரசாங்கம் தெரிவித்தது. தனது நாட்டை நோக்கி ஏவப்பட்ட பல ஏவுகணைகளைத் தனது ராணுவம் தடுத்து நிறுத்தியதாக கத்தார் கூறியது. தலைநகர் தோஹாவில் பல வெடிப்புச் சத்தங்கள் கேட்டன. இங்கே பயணம் செய்வது பாதுகாப்பானதா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மத்திய கிழக்கு நிலவரம் காரணமாக விமான சேவைகள் பெரிய அளவில் நிறுத்தப்பட்டுள்ளதால் சனிக்கிழமை பெய்ரூட் விமான நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது பெரிய விமான நிறுவனங்கள் பாதுகாப்பு கவலைகளைச் சுட்டிக்காட்டி மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் நூற்றுக்கணக்கான விமானங்களைத் திருப்பிவிட்டுள்ளன அல்லது ரத்து செய்துள்ளன. வான்பயணங்கள் பகுப்பாய்வு நிறுவனமான 'சிரியம்' அளித்த தரவுகளின்படி, சனிக்கிழமை இப்பகுதியில் தரையிறங்க வேண்டிய சுமார் 4,218 விமானங்களில் 966 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை 4,329 திட்டமிடப்பட்ட விமானங்களில் 716 விமானங்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. விஸ்ஏர் (Wizz Air) நிறுவனம் இஸ்ரேலுக்கு மார்ச் 7 வரைpயலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபை மற்றும் அபுதாபி, ஜோர்டானில் உள்ள அம்மான் மற்றும் செளதி அரேபியாவிற்கு செல்லும் விமானங்களை செவ்வாய்க்கிழமை வரையிலும் நிறுத்தி வைத்துள்ளது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் டெல் அவிவ் மற்றும் பஹ்ரைனுக்கான விமானங்களை புதன்கிழமை வரை ரத்து செய்துள்ளது. "நீங்கள் லண்டன் ஹீத்ரோ மற்றும் அபுதாபி, அம்மான், பஹ்ரைன், தோஹா, துபை அல்லது டெல் அவிவ் இடையே விமானத்தில் செல்லவிருந்தால், மார்ச் 6 வரை உங்கள் விமானத்தை எவ்வித கட்டணமும் இன்றி மாற்றிக்கொள்ளலாம்" என்று நிறுவனம் கூறியுள்ளது. அந்த நிறுவனத்தின் படி, "மார்ச் 4 வரை பயணம் செய்யும் வாடிக்கையாளர்கள் முழு பணத்தையும் திரும்பப் பெற கோரலாம்." சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் ஒரு அறிக்கையில், "சுவிஸ் மற்றும் லுஃப்தான்சா குழும ஏர்லைன்ஸ் மார்ச் 7 வரை டெல் அவிவ், (லெபனானில் உள்ள) பெய்ரூட், அம்மான், (இராக்கில் உள்ள) எர்பில் மற்றும் டெஹ்ரானுக்கான விமானங்களை நிறுத்தி வைத்துள்ளன" என்று கூறியது. அரசு ஊடகங்களின்படி, குவைத் விமான போக்குவரத்து ஆணையம் அடுத்த அறிவிப்பு வரும் வரை இரான் நாட்டிற்கான அனைத்து விமானங்களையும் நிறுத்துவதாகக் கூறியுள்ளது. துபைக்கு வரும் மற்றும் அங்கிருந்து செல்லும் விமானங்களை எமிரேட்ஸ் நிறுவனம் சிறிது காலத்திற்கு நிறுத்தி வைத்துள்ளது. லுஃப்தான்சா, ஏர் இந்தியா, விர்ஜின் அட்லாண்டிக் மற்றும் டர்கிஷ் ஏர்லைன்ஸ் ஆகியவையும் விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளன. இராக் மற்றும் ஜோர்டான் உள்ளிட்ட இப்பகுதியின் சில நாடுகளும் தங்கள் வான்வெளியை மூடியுள்ளன. ஐக்கிய அரபு அமீரகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தனது வான்வெளியைச் "சிறிதளவும் மற்றும் சில காலத்துக்கும்" மூடியுள்ளதாக அரசு ஊடகங்கள் தெரிவித்தன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c99j7myzxv8o
  14. Google Translate is now available in 110 new languages. telungu Tamil ஜக்கம்மா தயவுசெய்து இந்தியானு ஓடிம்பஜெயண்டி.
  15. ஈரானின் இடைக்கால உச்சத் தலைவர் நியமனம் Mar 1, 2026 - 04:21 PM ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி காலமானதைத் தொடர்ந்து, நாட்டின் புதிய இடைக்கால உச்சத் தலைவராக அயதுல்லா அலிரேசா அராஃபி நியமிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானிய அரசியலமைப்பின் 111 ஆவது பிரிவின்படி, உச்சத் தலைவர் ஒருவர் பதவியில் இல்லாதபோது அல்லது அவர் காலமானால், புதிய தலைவர் ஒருவரை நிபுணர்கள் பேரவை தேர்ந்தெடுக்கும் வரை ஒரு தற்காலிகத் தலைமைப் பொறுப்பு உருவாக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில், உயர்மட்ட மதகுருமார்கள் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனையின் பின்னர் அலிரேசா அராஃபி இந்தப் பொறுப்பிற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அயதுல்லா அலிரேசா அராஃபி ஈரானின் செல்வாக்குமிக்க மத மற்றும் அரசியல் தலைவர்களில் ஒருவராவார். அவர் தற்போது ஈரானின் சக்திவாய்ந்த பாதுகாவலர் சபையின் உறுப்பினர், ஈரானிய மதக் கல்விக்கூடங்களின் தலைவர் மற்றும் நிபுணர்கள் பேரவையின் மூத்த உறுப்பினர் ஆகிய முக்கிய பொறுப்புகளை வகித்து வருகின்றார். மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், அலி காமேனியின் மறைவு ஈரானுக்குப் பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இத்தருணத்தில், நாட்டின் நிர்வாகம் மற்றும் இராணுவக் கட்டமைப்பைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்காக அலிரேசா அராஃபியின் நியமனம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஈரானின் நிபுணர்கள் பேரவை விரைவில் கூடி, நிரந்தரமான ஒரு புதிய உச்சத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை அலிரேசா அராஃபி நாட்டின் உயரிய முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தைக் கொண்டிருப்பார். இடைக்காலத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டாலும், தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் உள்ளடங்கிய தற்காலிக சபையுடன் இணைந்து அவர் பணியாற்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் இடைக்கால உச்சத் தலைவர் நியமனம்
  16. ராஸாவின் அதிரடிக்கு மத்தியில் தோல்வி அடையாத அணியாக அரை இறுதிக்குள் நுழைந்தது தென் ஆபிரிக்கா Published By: Vishnu 01 Mar, 2026 | 08:15 PM (நெவில் அன்தனி) டெல்லி, அருண் ஜய்ட்லி விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற ஸிம்பாப்வேக்கு எதிரான ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சுப்பர் 8 குழு 1 போட்டியில் தென் ஆபிரிக்கா 5 விக்கெட்களால் வெற்றியீட்டியது. இந்தப் போட்டியில் ஸிம்பாப்வே அணித் தலைவர் சிக்கந்தர் ராஸா சகலதுறைகளிலும் பிரகாசித்தபோதிலும் அவரது அணியினால் வெற்றிபெற முடியாமல் போனது. இதனை அடுத்து இந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் தோல்வி அடையாத ஒரே ஒரு அணியாக தென் ஆபிரிக்கா அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது. இக் குழுவில் முதலிடத்தில் உள்ள தென் ஆபிரிக்கா, பி குழுவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற நியூஸிலாந்தை கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் புதன்கிழமை நடைபெறவுள்ள முதலாவது அரை இறுதிப் போட்டியில் எதிர்த்தாடவுள்ளது. இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஸிம்பாப்வே 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றது. அணித் தலைவர் சிக்கந்தர் ராஸா மாத்திரம் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 43 பந்துகளில் 8 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 73 ஓட்டங்களைப் பெற்றார். அவரை விட க்ளைவ் மதண்டே 26 ஓட்டங்களைப் பெற்றார். வேறு எவரும் 20 ஓட்டங்களை எட்டவில்லை. பந்துவீச்சில் க்வேனா மஃபாக்கா 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கொர்பின் பொஷ் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 17.5 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. தென் அபிரிக்காவின் முதல் இரண்டு விக்கெட்கள் முதல் 3 ஓவர்களுக்குள் வீழ்த்தப்பட்டதால் அவ்வணி நெருக்கடியை எதிர்கொண்டது. ஆனால், அடுத்த நால்வரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி தென் ஆபிரிக்காவை வெற்றிபெறச் செய்தனர். ரெயான் ரிக்ல்டன் 31 ஓட்டங்களையும் டிவோல்ட் ப்ரெவிஸ் 42 ஓட்டங்களையும் டேவிட் மில்லர் 22 ஓட்டங்களையும் ட்ரைஸ்டன் ஆட்டம் இழக்காமல் 21 ஓட்டங்களையும் ஜோர்ஜ் லிண்டே ஆட்டம் இழக்காமல் 30 ஓட்டங்களையும் பெற்றனர். சிக்கந்தர் ராஸா 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை கைப்பற்றினார். இந்தப் போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்த சிக்கந்தர் ராஸா ஆட்டநாயகனானார். ராஸாவின் அதிரடிக்கு மத்தியில் தோல்வி அடையாத அணியாக அரை இறுதிக்குள் நுழைந்தது தென் ஆபிரிக்கா
  17. நான் டி.வி ய விட்டு விலத்தி வந்துவிட்டேன்...பாகிஸ்தான் காரன்போல் டி.வியை உடைத்துவிட்டு ..புதிசு வாங்கமுடியாது..
  18. அபிசெக்கும்...கிசனும் வந்த வேகத்தில் கதிரையில்..போய் இருந்திட்டினம் ஒன்னுமாப் புரியல...ஜக்கம்மா பாசையில்..சொன்னால் நமக்கு எப்படிப் புரியும்
  19. ஈரானின் இடைக்கால உயர் தலைவராக அலிரேசா அராபி நியமனம்! 01 Mar, 2026 | 05:44 PM ஈரானின் ஆன்மிக மற்றும் அரசியல் ரீதியான உயர் தலைவர் அலி கமேனியின் மறைவைத் தொடர்ந்து, நாட்டின் புதிய இடைக்கால உயர் தலைவராக 67 வயதுடைய அலிரேசா அராபி நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஷியா கொள்கைவாதியான அலிரேசா அராபி, ஈரானின் மத மற்றும் அரசியல் விவகாரங்களில் நீண்ட அனுபவம் கொண்டவர். கமேனியின் மறைவுக்குப் பின்னர் நாட்டின் அதிகாரக் கட்டமைப்பை வழிநடத்தும் உயரிய பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. புதிய தலைவரைத் தீர்மானிக்கும் மற்றும் வழிகாட்டும் இந்தக் கவுன்சிலில் ஈரானின் தற்போதைய ஜனாதிபதி மசூத் பெஷெஸ்கியான் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் உறுப்பினர்களாக உள்வாங்கப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் மற்றும் ஈரானின் உள்நாட்டு அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில் இடைக்கால உயர் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். அலி கமேனியின் நீண்டகால தலைமைத்துவத்திற்குப் பிறகு ஈரான் எந்த திசையை நோக்கிப் பயணிக்கும் என்பதைத் தீர்மானிப்பதில் புதிய தலைவர் அராபியின் பங்கு முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகிறது. ஈரானின் உத்தியோகபூர்வ ஊடகங்கள் இந்த மாற்றங்கள் குறித்த மேலதிக தகவல்களை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/239913
  20. Today
  21. జక్కమ్మా దయచేసి ఇండియాను ఓడింపజేయండి.
  22. ஈரானின் உயர் தலைவர் உயிரிழப்பு : 40 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும்; ஒரு வாரம் பொது விடுமுறை - ஈரான் அரசு அறிவிப்பு 01 Mar, 2026 | 11:45 AM ஈரானின் உயர் தலைவர் அயத்துல்லா அலி காமெனி கொல்லப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என ஈரான் அரசு அறிவித்துள்ளது. அத்துடன் ஈரானின் உயர் தலைவரின் மறைவை முன்னிட்டு அந்நாட்டில் ஒரு வாரத்துக்கு பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க - இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய பாரிய தாக்குதலில் ஈரானின் உயர் தலைவர் அயத்துல்லா அலி காமெனி கொல்லப்பட்டதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, அவரது மகள், மருமகன், பேத்தி ஆகியோரும் உயிரிழந்துவிட்டதாக ஈரானின் ஃபோர்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டது. மேலும், ஈரானின் உயர் தலைவர் உயிரிழந்த தகவலை அந்நாட்டு அரசு ஊடக நிறுவனமான ஐஆர்என்ஏ உறுதிப்படுத்தியதையடுத்து, பல்வேறு நாடுகளில் உள்ள ஈரான் தூதரகங்களில் அந்நாட்டு கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. ஈரானின் உயர் தலைவர் உயிரிழப்பு : 40 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும்; ஒரு வாரம் பொது விடுமுறை - ஈரான் அரசு அறிவிப்பு
  23. அமெரிக்கா - இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் ஈரானில் குறைந்தது 133 பொதுமக்கள் பலி 01 Mar, 2026 | 11:00 AM ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் ஈரானில் குறைந்தது 133 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் 200க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவம் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரானில் உயிரிழந்தவர்களில் ஈரானின் உயர் தலைவர் அயத்துல்லா அலி காமெனி மற்றும் அவரது குடும்பத்தினரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், சில கணிப்புகளின்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 201ஆகவும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 700க்கும் மேற்பட்டதாகவும் உள்ளதாக கருதப்படுகிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் நேற்று (28) ஈரான் மீது நடத்திய பாரிய தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதோடு, ஈரான் உயர் தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் வீட்டை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டது. தலைநகர் தெஹ்ரான் உட்பட பல முக்கிய நகரங்களில் அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொண்டது. இத்தாக்குதல் சூழலில் ஈரானின் உயர் தலைவர் அயத்துல்லா அலி காமெனி மற்றும் அவரது மகள், மருமகன், பேத்தி ஆகியோரும் கொல்லப்பட்டதாக ஈரான் உறுதிப்படுத்தியது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படலாம் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/239868
  24. போதைப்பொருள் ஒழிப்பு வாரம் இன்று முதல் அமுல் Mar 1, 2026 - 07:01 AM முழு நாடும் ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக நடைமுறைப்படுத்தப்படும் "போதைப்பொருள் ஒழிப்பு வாரம்" இன்று (01) முதல் ஆரம்பமாகவுள்ளது. இன்று ஆரம்பமாகும் வாரத்தை போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்துவதற்கு, போதைப்பொருள் அனர்த்தத்தை ஒழிப்பதற்கான முழு நாடும் ஒன்றாக தேசிய செயற்பாட்டு சபை தீர்மானித்துள்ளது. இது தொடர்பான 07/2026 ஆம் இலக்க அரச நிர்வாகச் சுற்றறிக்கை, அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாரத்தின் ஊடாக போதைப்பொருள் விற்பனையைக் கட்டுப்படுத்தி ஒடுக்குதல், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையானவர்களை மீட்டு, அவர்களை புனர்வாழ்விற்கு உட்படுத்துதல், இதற்காகத் தேவையான மக்கள் விழிப்புணர்வு மற்றும் மேம்பட்ட சமூக உரையாடலை உருவாக்குதல் போன்ற நோக்கங்களை அடைவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கமைய, இந்த வாரத்தில் அரச நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் அடிமட்ட அளவில் விரிவான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அரசாங்க அமைச்சுகள் உட்பட அனைத்து இணைந்த நிறுவனங்களின் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் பல திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் பல்வகையான புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. அத்துடன், பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பாடசாலை போக்குவரத்து வாகனங்களை மையப்படுத்தி பல்வேறு பிரசார நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன. போதைப்பொருள் அனர்த்தத்தை ஒழிப்பதற்காக சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் ஊடாகத் தேவையான சட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட ஏனைய தலையீடுகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படும் அதேவேளை, இந்தத் தேசிய செயற்பாட்டை வெற்றிபெறச் செய்வதற்கு அவசியமான பரந்த சமூக விழிப்புணர்வை இந்த அனைத்துத் திட்டங்கள் மூலமும் ஏற்படுத்த எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmm72onn70002356p0gq80mxy
  25. ஏற்பாடுகளில் குறை உள்ளதாக முகப்புத்தகத்தில் எழுதினார்கள். குறிப்பாக மலசலகூடங்கள் மிகக்குறைவாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.