All Activity
- Past hour
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பிரித்தானிய நேரப்படி நாளை சனி 28 பெப் ஒரு சுப்பர் 8 சுற்றுப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 62) சுப்பர் 8: குழு 2:சனி 28 பெப்: 1:30 PM, பல்லேகல, பாகிஸ்தான் (Y3) எதிர் சிறிலங்கா (Y4) PAK எதிர் SL 13 பேர் பாகிஸ்தான் அணி வெல்வதாகவும் 09 பேர் சிறிலங்கா அணி வெல்வதாகவும், ஒருவர் சுப்பர் 8 சுற்றில் இல்லாத நெதர்லாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். நெதர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த @சுவைப்பிரியன் க்கு புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் செம்பாட்டான் SL ஏராளன் PAK வசீ SL புலவர் PAK சுவைப்பிரியன் NED அல்வாயன் PAK ஈழப்பிரியன் PAK நியூ பலன்ஸ் PAK வாத்தியார் SL கறுப்பி SL வாதவூரான் SL வீரப் பையன்26 PAK சுவி PAK கிருபன் PAK கோஷான் சே PAK அஹஸ்தியன் PAK கந்தப்பு PAK நியாயம் SL எப்போதும் தமிழன் PAK ரசோதரன் SL பிரபா SL நிலாமதி SL நந்தன் PAK இப்போட்டியில் எவர் புள்ளிகள் எடுப்பார்கள்?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எதுக்கும் மேற்கிந்தியாவ ஒரு வார்த்தை கேளுங்க.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தொடர்ந்து செய்வோம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
டுப்பிளசி இங்கிலாந்து இறுதிப்போட்டிக்கு செல்லாது என கூறுகிறார்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நன்றி @செம்பாட்டான் . புள்ளிகளை கூட்டி வரிசையை ஒழுங்காக காண்பித்ததற்கு. இன்னும் சில நாட்கள் உதவி தேவைப்படும்
-
ஆடுகளம்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அரையிறுதியில் இங்கிலாந்தும் இந்தியாவும் (?) மோதும் என நினைக்கிறேன், இங்கிலாந்தினை வெல்வது இலகுவான விடயாமாக இருக்காது போல உள்ளது!
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
அடுத்த மூன்று மாதத்தில் விஜை ஆட்சிக்கு வந்தால் தனக்கு நீதி கிடைப்பது கடினமாகிவிடும் என்பதால் தான் ஆட்சிக்கு வர முதல் சங்கீதா வழக்கு போட்டுள்ளார் என்றால் அது சரியானதே.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சாச்சா. நான் சும்மா பியோன். அங்க எடுத்து இங்க வைக்கிற வேலை.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
பவர் இருந்தால் இராஐதந்திரம் தானாக வருமண்ணை. பெயரை மாற்றி எழுதி விட்டீர்களோ அது நிவேதா பெ த்துராஜ் இல்லை...? இப்போது அதிகார பீடமாக இருந்தால் அண்ணி சங்கீதாவும் கோர்ட்டு படியேற மூன்றுக்கு நான்கு முறை யோசித்திருப்பார். பாவம் தூயசக்தி தமிழ்நாடு தற்போதைய அரசியலை M.G.R காலத்து அரதப்பழசு அரசியலுடன் காம்பேர் பண்ணி இப்போ காமசக்தியாக திரு திருவென்று முழிக்கிறது. இதுவரை ஏழரை இனி அஷ்டமமும் சேர்ந்து பயலை காக்டெயில் போடப்போகுது
- Today
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
😂 வேற லெவல் போங்கோ😂 நாளைக்கு எடுக்கும் போது ஒரு தென்னம்பிள்ளையை சேத்து எரிக்கோணும் 😂 கந்தப்பு செஞ்சுரி அடிச்சிட்டார். இப்ப நீங்களோ கிளாக்கர் வேலை? 😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நேற்றைய இன்றையப் போட்டிகளின் பின், நீங்கள் ஆவலுடன் எதிர் பார்த்த புள்ளி விபரம். முதல் இருவரும் குத்துக் கல்லாடம் போல் அங்கேயே இருக்க, அல்வாயன் 3வது இடத்துக்குத் தாவியுள்ளார். சுமைதாங்கிகளில் மாற்றமில்லை. இன்னும் 3 போட்டிகளே மீதமுள்ளன.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சனிப்பிணம் தனிப்போகாது, இலங்கை பாகிஸ்தானையும் கூட்டிகொண்டு வெளியே போகும். நியுசிலாந்தின் துடுப்பாட்டம் வேலை இடைவேளையில் பார்த்த போது எடுத்திருந்த ஓட்டம் மிகுதி ஓவருக்கு ஒவ்வொரு பந்திற்கும் 1 ஓட்டமாக எடுதாலே 170 எட்டி விடும், நியுசிலாந்து வென்றுவிடும் என நினைத்தேன் 159 மட்டும் எடுத்துள்ளது, நல்ல போட்டியாக இருந்திருக்கும் என நினைக்கிறேன், இங்கிலாந்து அணி உலக கோப்பையினை எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை (நியுசிலாந்தும் சிறப்பாக விளையாடுகிறது).
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வர்ணணை கேட்டபோது நீங்கள் சொன்னதுதான் மனதில் வந்து போனது. இன்னும் எத்தனை போட்டிகளைத்தான் இங்கிலாந்து ஒரு தனி மனிதனால் வெல்ல முடியும்?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய சூப்பர் 8 சுற்றுப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, துடுப்பெடுத்தாடத் தொடங்கியது. ஆச்சரின் முதல் பந்து பரிமாற்றத்தில் ஓட்டங்கள் எதுவும் பெறாமல் மெதுவாக ஆரம்பித்த அவர்கள் துடுப்பாட்டம், மெதுவாக சூடு பிடித்த தொடங்கியது. பவர் பிளேயில் 54 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்கள். ஆனால், இங்கிலாந்தின் சுழல் பந்துவீச்சாளர்கள், அவர்களை கட்டுப்படுத்தினார்கள். விக்கெட்டை இளக்கத் தொடங்கி, தட்டுத் தடுமாறி, 159 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்கள். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியும், தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று, மெதுவாகவே தங்கள் ஆட்டத்தை ஆரம்பித்தார்கள். விக்கெட்டை பறிகொடுத்துக் கொண்டே இருந்தார்கள். 17வது பரிமாற்றத்தின் முடிவில் ஆறு விக்கட்டுகளை இழந்து, 117 ஓட்டங்களையே பெற்றிருந்தார்கள். 18 பந்துகளில் 43 ஓட்டங்கள் அடிக்க வேண்டிய நிலையில், பில் ஜாக்சுடன் இணைந்த ரெகான் அகமட், அடிக்கத் தொடங்கினார்கள். அடுத்த 15 பந்துகளில் 44 ஓட்டங்களை குவித்து, இங்கிலாந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்கள்.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
தோழர், எந்த ஊர் பெண் என்றாலும் அவர் நியாயம் சபை ஏற வேண்டும். இதிலே அவர் கூறி உள்ள குற்றசாட்டுகள் யூகேயில் domestic violence என்ற வரையறக்குள் வரும். வஞ்சிக்கப்படும் ஒவ்வொரு பெண்ணுக்கும் தக்க நியாயம் கிடைக்கவேண்டும். அது விஜி அண்ணியாகிலும், சங்கீதா அண்ணியாகிலும். இதில் ஐஸ்வர்யா பெத்துராஜ் திருமணத்தை முன்னின்று நடத்திவர்களின் இராஜதந்திரத்தையும் மெச்சல் வேண்டும்.
-
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
நடக்கும் ஒவ்வொரு சம்பவத்திலும் தான் எப்படி பட்ட ஒரு தத்தி என்பதை விஜை நிருபிக்கிறார். மணமுறிவு ஒண்டும் பஞ்சமா பாதகமில்லை. அதே போல் தமிழக அரசியல், சினிமா மட்டும் அல்ல, பொதுவான வாழ்வில் கூட, குறிப்பாக ஆண்கள் தனி மனித ஒழுக்கம் தவறுவது பெரிய மேட்டர் அல்ல. பெரியார், அண்ணா, காமராஜர், எம் ஜி ஆர், கருணாநிதி, உதய நிதி, போன்ற பெரிய அரசியல்வாதிகள் முதல், பெரிய கருப்பன், சீமான் போன்ற சின்ன அரசியல்வாதிகள் வரை அனைவரினதும் வாழ்க்கையும் பயில்வான் ரங்கநாதன் கதைக்கும் ரேஞ்ச்சுதான். ஆனாலும் அவர்கள் தலைவர்கள். ஆனால் இதை விஜை அழகாக கையாண்டு இருக்கலாம். இணைந்து வாழ முடியாது என தெரிந்ததும்… தனுஷ்-ஐஸ்வர்யா, ஜீவிபி- சைந்தவி ஜோடிகள் போல் இணக்கமாக பிரிந்திருக்கலாம். இப்படி கோர்ட் படியேறி… நடிகையுடன் உறவில் இருந்தார்… என்னை மனதளவில் டார்ச்சர் செய்தார்… புறக்கணித்தார்… நிதியை முடக்கினார்… என்றெல்லாம் குற்றம்சாட்ட படாமல். அதுவும் அரசியலுக்கு வரும் எண்ணம் இருந்தால்…இதை வரமுதலே வெட்டி முடித்திருக்க வேண்டும். வளர்ந்த பெண் பிள்ளை வேறு…. சரியான அடி முட்டாளாக இருக்கிறார். எஸ் ஏ சி மட்டும் இல்லை என்றால் - ஆளை எப்பவோ காக்கா தூக்கி போயிருக்கும் போல😂. 😂 என்ன மொட்டையா திரிசா… அப்படி கூப்பிட நீங்க என்ன விஜையா? புரட்சி தலைவி, இதயதெய்வம், அம்மா… அவ்வளவுதான். பெயர் எல்லாம் சொல்லப்படாது😂 போராட்டத்தை தலைமை ஏற்க வட்டுகோட்டை விரைகிறார் சுமந்திரன்!😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி கிளென் பிலிப்ஸின் வேகமான 39 (28 பந்துகள்), டிம் செய்ஃபேர்ட்டின் விரைவான 35 (25 பந்துகள்), பின் அலெனின் அதிரடியான 29 (19 ) ஓட்டங்களுடனும் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகளை பறிகொடுத்து தோல்வியை நோக்கி போயிருந்தபோதும் டொம் பண்டனின் வேகமான 33 (24 பந்துகள்), வில் ஜக்ஸ் ஆட்டமிழக்காமல் அதிரடியாக எடுத்த 32 (18 பந்துகள்), இறுதி ஓவர்களில் றெஹான் அஹ்மட் ஆட்டம் இழக்காமல் புயல்வேகத்தில் எடுத்த 19 (07 பந்துகள்) ஓட்டங்களுடன் 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 161 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த நான்கு பேருக்குப் புள்ளிகள் கிடையாது. அத்தோடு சுப்பர் 8 சுற்றில் விளையாடாத ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கும் புள்ளிகள் கிடையாது!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நானும் ரெகான் இப்பிடி காளி ஆடுவான் என்று எதிர்பார்க்கவில்லை. இங்கிலாந்து வழமை போல் தாங்களே தங்கள் மேல் மண் அள்ளிப் போட்டார்கள் என்று நினைத்தேன். பில் ஜாக்ஸ் தொடர்ந்து அசத்திக் கொண்டே இருக்கிறார். அந்தக் கடைசி நாலை அடித்துவிட்டு தோளை உலுப்பினார். என்னங்டா என்று தன் அணி வீரர்களைப் பார்த்து கேட்டது போல் இருந்தது.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
அவங்கள் சும்மாவே தூக்கி, தூக்கி அடிப்பாங்கள்… இரும்பு நல்லா இளகின வாகில சிக்கி இருக்கு😂
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
தோழர் என்ன இருந்தாலும் சங்கீதா ஈழத்து பெண் . உண்மையில் நீதி கோரி போராட்டத்தை ஆரம்பிக்கதான் வேணும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ரேடியோ வர்ணனையில் கேட்டு கொண்டே கார் பார்க்கிங் நோக்கி போனேன். போகும் போது இங்கிலாந்து எப்படியும் தோக்கும், முடிவை கேட்கதேவையில்லை, பார்க் பண்ணி விட்டு இறங்கி போவோம் என நினைத்தேன்: ரெஹான் ஆஹ்மெட் உள்ளே வர, அவர் அண்மையில் இங்கிலாந்து வீரர்கள் தமாசாக தமக்குள் நடத்திய range hitting இல் வென்றவர் எண்டார்கள்.. அட இதுவும் ஒரு ரேஞ் ஹிட்டிங் போட்டி போலத்தானே வந்து நிக்கிது என நினைத்தபடி, காரில் இருந்து கேட்க ஆரம்பித்தேன். சொன்ன படியே அடித்து துவம்சம் பண்ணி விட்டார்கள் ரெஹானும், வில்லும். ரெஹென் ஆமெட் இரெட்டை குடியுரிமை எடுத்தால் சாத்தியம்😂
-
தலங்கம -அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு-இருவர் உயிரிழப்பு!
நான் 48 பேரை சுட்டு கொலை செய்துள்ளேன் : அக்குரேகொட துப்பாக்கிதாரி அதிர்ச்சி வாக்குமூலம் அக்குரேகொடவில் வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட இரட்டைக்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டாவது துப்பாக்கித்தாரி தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்தேகநபரிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில், தென் மாகாணம் உட்பட பல பகுதிகளில் சுமார் 48 பேரை சுட்டு கொலை செய்தது தான் என்றும் பொலிஸாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கிடையில், மாலபே பகுதியில் ரூ. 200,000 பணத்தைப் பெற்றுக்கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்தியவர் அன்றைய தினம் மொனராகலைக்கு தப்பிச்சென்றதும் தெரியவந்துள்ளது. இதன் பின்னர் அவர் அதிவேக நெடுஞ்சாலை வழியாக மத்தளையை அடைந்ததாகவும் கூறியிருந்தார். மொனராகலையின் நக்கல பகுதிக்கு சென்ற பிறகு, அழைத்துச்செல்ல அங்கொட லொக்கா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் நண்பரான கெலும் என்ற மற்றொரு சந்தேகநபர் வந்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. இதன்பின்னர், துபாயிலிருந்து ஒருவர் கெலுமை அழைத்து, "ஒருவர் வருகிறார்... அவரை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்" என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார். கரந்தெனிய சுத்தா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த கொலைகள் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. "ஐயா... சுத்தா என் கடவுள்.. நான் சுத்தாவுக்காக எதையும் செய்வேன்.. நான் பணத்திற்காக இதைச் செய்யவில்லை..", என்று சந்தேகநபர் விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தியவரிடமிருந்து மேலும் வாக்குமூலங்கள் எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர். Ceylon Focus News
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாகிஸ்தான் இப்ப என்ன செய்யப் போகிறது. இலங்கையை ஒரு 120 க்க அமத்தி, ஒரு 12 பந்துப் பரிமாற்றத்தில துரத்திப் பிடிக்க வேணும். இது நடக்கும் என்டுறியல்????
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
யாழ். வட்டுக்கோட்டையில் விஜய்க்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்! இளைய தளபதி விஜயக்கு எதிராக எதிர்வரும் 2026.02.29 அன்று யாழ். வட்டுக்கோட்டையில் மாபெரும் கண்டன நிழல் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடிகர் விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை தொடர்ந்து வருவதாகக் குற்றம் சாட்டி, அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். தான் கண்டுபிடித்த பிறகும் விஜய் அந்த உறவை கைவிடவில்லை என சங்கீதா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சங்கீதாவின் பிறந்த ஊரான யாழ். வட்டுக்கோட்டை பகுதி மக்கள் இணைந்து இந்த நிழல் ஆர்ப்பாட்டத்தை 2026.02.29 அன்று முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். இது விஜயின் அரசியலுக்கு மிகவும் பாதகமான ஒரு விடயமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. (யாவும் கற்பனையே😏) கஜி ரிப்போர்ட்