All Activity
- Past hour
-
கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!
காணொளி: 👉 https://www.facebook.com/reel/860162666636509 👈 தண்ணீர் குடித்து... உண்ணாவிரதம். 😂 🤣
- Today
-
கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!
சென்ற முறை... "மலிபன் பிஸ்கற்" சாப்பிட்டு உண்ணாவிரதம் இருந்த போது... கோத்த பாயா... தவண்டு வந்து, ஆறுதல் சொல்லிய காட்சி. 😂
-
கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!
கண்கள் செருகிக் கொண்டு வருகின்றது. ஆள்… தப்புவது கடினம். தேசியக் கொடியை... அரைக் கம்பத்தில் பறக்க விடுங்கப்பா.
-
கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!
இரவு, பகல் போராட்டம் என கூறி... நள்ளிரவில் வீட்டிற்கு சென்று திரும்பிய விமல் வீரவன்ச. 😂
-
6 ஆண்டுகளில் 390 கோடி ரூபாய் இழப்பு : மத்தள விமான நிலையத்தை மீட்க புதிய திட்டம்
6 ஆண்டுகளில் 390 கோடி ரூபாய் இழப்பு : மத்தள விமான நிலையத்தை மீட்க புதிய திட்டம் 13 January 2026 இலங்கையின் மத்தள சர்வதேச விமான நிலையம் கடந்த ஆறு ஆண்டுகளில் சுமார் 39.3 பில்லியன் ரூபாய் நிகர இழப்பைச் சந்தித்துள்ளதாக அண்மைய கணக்காய்வு அறிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த நிதி நெருக்கடியைச் சமாளிக்க, விமான நிலையத்தின் நிர்வாகத்தை தனியார் மற்றும் அரச பங்களிப்புடன் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் புதிய தீர்மானத்தை எடுத்துள்ளது. "வெள்ளை யானை" என விமர்சிக்கப்படும் மத்தள விமான நிலையம், 2024 ஆம் நிதியாண்டில் மட்டும் 3.36 பில்லியன் ரூபாய் இயக்க இழப்பைப் பதிவு செய்துள்ளது. இங்கு வருமானத்தை விட செலவு 15 மடங்கு அதிகமாக உள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 2024 இல் விமான நிலையத்தின் வருமானம் வெறும் 242.2 மில்லியன் ரூபாயாகும். ஆனால், அதன் இயக்கச் செலவு 3.6 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு 10 இலட்சம் பயணிகளைக் கையாளத் திட்டமிடப்பட்ட போதிலும், கடந்த 6 ஆண்டுகளில் மொத்தம் 321,577 பயணிகள் மட்டுமே இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தியுள்ளனர். கட்டுமானத்திற்காகப் பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன்களுக்காக ஆண்டுதோறும் சுமார் 2.05 பில்லியன் ரூபாய் வட்டிச் செலவு கணக்கிடப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் இந்திய - ரஷ்ய கூட்டு நிறுவனம் ஒன்றிடம் விமான நிலையத்தை ஒப்படைக்க எடுக்கப்பட்டிருந்த தீர்மானத்தை தற்போதைய அரசாங்கம் இரத்து செய்துள்ளது. அதற்குப் பதிலாக, புதிய விருப்பக் கோரல் மூலம் தனியார் பங்களிப்புடன் வணிக நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு போன்ற முக்கிய பிரிவுகள் அரசாங்கத்தின் கீழேயே இருக்கும். அதேவேளை, சரக்கு கையாளுதல், விமானப் பராமரிப்பு மற்றும் விருந்தோம்பல் போன்ற துறைகள் தனியார் முதலீடுகளுக்குத் திறந்துவிடப்படவுள்ளன. தற்போதைய 2025/2026 குளிர்கால பருவத்தில் ரஷ்யாவின் ரெட் விங்ஸ், பெலாரஸின் பெலாவியா மற்றும் உக்ரைனின் ஸ்கை அப் போன்ற விமான நிறுவனங்கள் மத்தளத்திற்குச் சேவைகளை ஆரம்பித்துள்ளன. இது விமான நிலையத்திற்குச் சற்று புத்துயிர் அளித்திருந்தாலும், பாரிய கடன் சுமைகளை ஈடுகட்ட இந்த வருமானம் போதுமானதாக இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://hirunews.lk/tm/440408/loss-of-rs-390-crore-in-6-years-new-plan-to-revive-mattala-airport
-
அக்கரைப்பற்று வைத்தியசாலையின் வைத்தியர்கள் வேலைநிறுத்தம்
அக்கரைப்பற்று வைத்தியசாலையின் வைத்தியர்கள் வேலைநிறுத்தம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் (GMOA) இன்று (13) கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வைத்தியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மீது சுமத்தப்பட்டுள்ள நிர்வாக மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகள் காரணமாக, அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு புதிய பணிப்பாளர் ஒருவரை நியமிக்குமாறு கோரி இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கிழக்கு மாகாணத்திலுள்ள 02 பொது வைத்தியசாலைகள், ஒரு போதனா வைத்தியசாலை, 17 ஆதார வைத்தியசாலைகள், 52 பிரதேச வைத்தியசாலைகள் மற்றும் 113 ஆரம்ப சுகாதார மத்திய நிலையங்களில் இந்த வேலைநிறுத்தம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளையும் சேர்ந்த வைத்தியர்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான வைத்தியர் ஜனித் பேதுருஆரச்சி தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmkc6hsg303ulo29ncanq1074
-
பாலியல் காட்சிகள் மூலம் பணம் பறிக்கும் கும்பல் அதிகரித்து வருகிறது
பாலியல் காட்சிகள் மூலம் பணம் பறிக்கும் கும்பல் அதிகரித்து வருகிறது திருமணமான பெண்கள் மற்றும் அவர்களது காதலர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் பாலியல் உறவுகளை வீடியோவாக பதிவு செய்து, வீடியோக்களை இணையதளங்களில் பகிர்வதாக மிரட்டி பணம் பறிப்பது தொடர்பான புகார்கள் அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். காலி தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி குற்றப் புலனாய்வுத் துறையின் பொறுப்பதிகாரி கே.கே.ஆர். அல்விஸ் கூறுகையில், குற்றவாளிகள் ரகசியமாக வீடியோக்களை பதிவு செய்ய மேம்பட்ட தொழில்நுட்ப கேமராக்களைப் பயன்படுத்துகின்றனர். “இந்த கேமராக்கள் சட்டை காலர்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன, பாக்கெட்டில் பேனா அல்லது லாட்ஜ்களில் படுக்கைகளுக்குள் உள்ளன. தனிநபர்கள் தங்கள் எஜமானிகள் மற்றும் இளம் காதலர்களுடனான பாலியல் உறவுகள் ரகசியமாக பதிவு செய்யப்பட்டு வலைத்தளங்களில் வெளியிடப்படுகின்றன. பெரும்பாலும், தாங்கள் காதலிக்கும் பெண்களை லாட்ஜ்களுக்கு அழைத்துச் சென்று, அந்த இளம் பெண்ணின் நிர்வாணக் காட்சிகளை வீடியோவாகப் பதிவு செய்து, அவர்களை மிரட்டி பணம் பறிக்கப் பயன்படுத்துகின்றனர்.” “சமீபத்தில், வெளிநாட்டில் பணிபுரியும் 45 வயதுடைய ஒரு பெண், ஒரு பேக்கரியில் பணிபுரியும் ஒரு ஊழியரை காதலித்தார். அவர் அவர்களின் பாலியல் உறவுகளை ரகசியமாக வீடியோவாக பதிவு செய்திருந்தார். அந்த காட்சிகளை இணையதளங்களில் பகிர்வதாக மிரட்டி இப்போது தன்னிடம் பணம் பறிப்பதாக அவர் பொலிஸில் புகார் அளித்துள்ளார்.” "இதேபோன்ற ஒரு சம்பவத்தில், நோய்வாய்ப்பட்ட குழந்தையை மந்திரங்கள் மூலம் குணப்படுத்துவதற்காக வீட்டில் தங்கியிருந்த ஒரு பேய் விரட்டுபவர், அந்தப் பெண்ணை அவள் கிரகத்தின் தீய செல்வாக்கின் கீழ் இருப்பதாகவும், அதை அகற்ற சடங்குகளைச் செய்வதாகவும் கூறி, தன்னுடன் உடலுறவு கொள்ளும்படி கவர்ந்தார். அவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். புலன்களை ரகசியமாக வீடியோ பதிவு செய்த பேய் விரட்டுபவர் இப்போது மிரட்டி பணம் பறிக்கின்றார். இது தொடர்பிலான முறைப்பாடும் கிடைத்துள்ளது," என்று காவல்துறை அதிகாரி கூறினார். இளம் பெண்கள் தங்கள் காதலர்களுடன் பழகும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், திருமணமான பெண்கள் தங்கள் கள்ளக்காதலர்களுடன் ரகசிய உறவு வைத்திருப்பதால் அவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்து குறித்தும் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டுள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/பாலியல்-காட்சிகள்-மூலம்-பணம்-பறிக்கும்-கும்பல்-அதிகரித்து-வருகிறது/175-370959
-
கருத்து படங்கள்
- யாழ்ப்பாணத்திற்கு இந்த ஆண்டு முதல் கட்டமாக 500 வீடுகள்
யாழ்ப்பாணத்திற்கு இந்த ஆண்டு முதல் கட்டமாக 500 வீடுகள். யாழ்ப்பாணத்தில் இந்த ஆண்டு 500 வீடுகளை நிர்மாணிப்பதற்கு வீடமைப்பு , நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக யாழ். மாவட்ட செயலர் ம பிரதீபன் தெரிவித்துள்ளார். இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீட்டுத்திட்டம் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் நடைபெறாது. குறித்த கலந்துரையாடலின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சினால் முதற்கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 500 வீடுகள் நிர்மாணிப்பதற்கான ஒதுக்கீடுகள் கிடைத்துள்ளது என்றார். வீட்டுத்திட்ட பயனாளிகள் பட்டியல்களை சுற்றுநிருபத்திற்கு அமைய தெரிவு செய்யுங்கள் எனவும், வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு கொடுப்பனவுகள் கிடைக்கப் பெறாத நபர்கள் மற்றும் கொடுப்பனவு தேவைப்படுபவர்கள் தொடர்பிலான விபரங்களை கையளியுங்கள் என பிரதேச செயலர்களிடம் கோரினார். இக் கலந்துரையாடலில் மேலதிக செயலர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், பிரதி உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக விடய உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். https://athavannews.com/2026/1459705- 10 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா செல்கிறார் டொனால்ட் ட்ரம்ப்: சர்வதேச அரசியலில் புதிய திருப்பம்
10 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா செல்கிறார் டொனால்ட் ட்ரம்ப்: சர்வதேச அரசியலில் புதிய திருப்பம். வாஷிங்டனுக்கான அவுஸ்திரேலிய தூதர் கெவின் ரூட் (Kevin Rudd) தனது பதவியிலிருந்து விலகிய சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சீனாவுக்குத் தனது முதல் அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொள்ள உள்ளார். ஏறக்குறைய 10 ஆண்டுகளில் சீனாவுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பதால், சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தற்போதைய ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ், குறிப்பாகச் சமீபத்திய மாதங்களில், சீனா அமெரிக்காவின் நேரடி கவனத்திலிருந்து விலகியிருந்ததாகக் கருதப்படுகிறது. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளில் சீனாவுடனான மோதல்கள் அல்லது பேச்சுவார்த்தைகள் முன்னுரிமை பெறாத சூழலில், இந்தத் திடீர் பயண அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. கெவின் ரூட் போன்ற அனுபவம் வாய்ந்த தூதர்கள் வாஷிங்டனை விட்டு வெளியேறும் வேளையில், இந்த மாற்றம் ஆசிய-பசிபிக் பிராந்திய அரசியலில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த காலங்களில் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் சீனாவுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்த ட்ரம்ப், தற்போது இந்தப் பயணத்தின் மூலம் எத்தகைய உறவை முன்னெடுக்கப் போகிறார் என்பது உலக நாடுகளின் கேள்வியாக உள்ளது. https://athavannews.com/2026/1459694- ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி – தெஹ்ரானுக்கான ட்ரம்பின் புதிய அழுத்தம்!
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி – தெஹ்ரானுக்கான ட்ரம்பின் புதிய அழுத்தம்! ஈரானுடன் வணிக உறவுகளைக் கொண்ட நாடுகளின் பொருட்களுக்கு 25% வரி விதித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (12) தெரிவித்தார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையிலான இந்த உத்தரவு ஈரான் இஸ்லாமிய குடியரசுடன் வணிகம் செய்யும் எந்தவொரு நாடும் அமெரிக்காவுடன் செய்யப்படும் எந்தவொரு மற்றும் அனைத்து வணிகத்திற்கும் 25% வரியை செலுத்தும் என்று ட்ரம்ப் சமூக ஊடகத்தளமான ட்ரூத் சோஷியலில் கூறினார். எந்த நாடுகளின் இறக்குமதிகள் கடுமையாக பாதிக்கப்படும் என்பது உள்ளிட்ட வரிகள் பற்றிய கூடுதல் தகவல்களை வெள்ளை மாளிகை பகிர்ந்து கொள்ளவில்லை. ஈரானில் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் மூன்றாவது வாரத்தில் நுழையும் போது, இந்த நடவடிக்கை தெஹ்ரானுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கக்கூடும். சீனா ஈரானின் மிகப்பெரிய வர்த்தக பங்காளி, அதைத் தொடர்ந்து ஈராக், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி மற்றும் இந்தியா உள்ளன. தெஹ்ரான் போராட்டக்காரர்களைக் கொன்றால் இராணுவ ரீதியாக தலையிடுவதாக ட்ரம்ப் அச்சுறுத்தியதைத் தொடர்ந்து புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்கள் உள்ளிட்ட இராணுவ விருப்பங்கள் இன்னும் பேசுபொருளாக இருப்பதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் திங்களன்று தெரிவித்தார். ஈரானிய நாணயமான ரியாலின் மதிப்பு சரிந்து வருவதால் ஏற்பட்ட கோபம் டிசம்பர் மாத இறுதியில் போராட்டங்களைத் தூண்டியது. இது ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு சட்டபூர்வமான நெருக்கடியாக வளர்ந்துள்ளது. வன்முறையின் விளைாவக ஈரானில் கிட்டத்தட்ட 500 போராட்டக்காரர்கள் மற்றும் 48 பாதுகாப்புப் பணியாளர்களின் இறப்புகளை சரிபார்த்துள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர் செய்தி நிறுவனம் (HRANA) தெரிவித்துள்ளது. அதேநேரம், ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதாகவும் அது கூறுகின்றது. ஈரானின் அணுசக்தித் திட்டம் மீதான சர்வதேசத் தடைகள் நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இது அரசாங்கத்தின் தவறான மேலாண்மை மற்றும் ஊழலால் பலவீனமடைந்துள்ளது. டிசம்பர் 28 அன்று, திறந்த சந்தையில் அமெரிக்க டொலருக்கு எதிராக ரியாலின் மதிப்பு மீண்டும் கடுமையாக வீழ்ச்சியடைந்ததைக் கண்டு தங்கள் கோபத்தை வெளிப்படுத்த கடைக்காரர்கள் தெஹ்ரானின் வீதிகளில் இறங்கினர். பணவீக்கம் கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவிற்கு சரிந்துள்ளது. அதே நேரத்தில் பணவீக்கம் 40% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக சமையல் எண்ணெய் மற்றும் இறைச்சி போன்ற அன்றாடப் பொருட்களுக்கான கூர்மையான விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1459678- கிரீன்லாந்து தனது கோரிக்கைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்
கிரீன்லாந்து தனது கோரிக்கைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். சீனா அல்லது ரஷ்யாவால் கைப்பற்றப்படுவதற்கு முன்பு கிரீன்லாந்து தனது கோரிக்கைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். நட்பு நாடுகளின் எச்சரிக்கைகளை புறக்கணித்த அவர், கிரீன்லாந்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற தனது கோரிக்கையை இரட்டிப்பாக்கி, ஆர்க்டிக் பிரதேசத்தை கையகப்படுத்துவது நேட்டோவை வருத்தப்படுத்தினாலும் தனக்கு கவலையில்லை என்று கூறியுள்ளார். வொஷிங்டனுக்குத் திரும்பும் போது எயார்போர்ஸ் வன் (Air Force One) கப்பலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது செய்தியாளர்கள், கிரீன்லாந்தை ஆக்கிரமிப்பதால் நேட்டோ கூட்டணி உடையுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த அவர், நேட்டோவை இந்த விடயம் பாதிக்கும் என்பதையும் ஒப்புக்கொண்டார். இருப்பினும் நேட்டோ ஏனையவர்களை விட அமெரிக்காவிற்கு அதிகம் தேவை என்றும் கூறியுள்ளார். ‘நாம் கிரீன்லாந்தை எடுத்துக் கொள்ளாவிட்டால், ரஷ்யா அல்லது சீனா எடுக்கும். நான் அதை நடக்க விடப் போவதில்லை… எப்படியிருந்தாலும், நமக்கு கிரீன்லாந்து கிடைக்கும்,’ என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். https://athavannews.com/2026/1459615- சமஷ்டி தீர்வு என்பது நாட்டைப் பிளவுபடுத்துவது அல்ல எனும் நிலைப்பாட்டை வெளிப்படுத்துங்கள் - நோர்வே உயர்மட்டப் பிரதிநிதியிடம் கஜேந்திரகுமார் தரப்பு வலியுறுத்தல்
சமஷ்டி தீர்வு என்பது நாட்டைப் பிளவுபடுத்துவது அல்ல எனும் நிலைப்பாட்டை வெளிப்படுத்துங்கள் - நோர்வே உயர்மட்டப் பிரதிநிதியிடம் கஜேந்திரகுமார் தரப்பு வலியுறுத்தல் 13 Jan, 2026 | 08:58 AM (நா.தனுஜா) தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையுடன்கூடிய சமஷ்டி தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்குரிய அழுத்தங்களை நோர்வே பிரயோகிக்கவேண்டும் எனவும், குறைந்தபட்சம் சமஷ்டி தீர்வு என்பது நாட்டைப் பிளவுபடுத்துவது அல்ல என்ற நிலைப்பாட்டையேனும் நோர்வே வெளிப்படுத்தவேண்டும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் உயர்மட்டப் பிரதிநிதியிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் வலியுறுத்தியுள்ளனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் இம்மாதத் தொடக்கம் முதல் ஐரோப்பிய நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டு, அங்கு பலதரப்பட்ட சந்திப்புக்களை நடாத்தி வருகின்றனர். அதன்படி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் தலைமையில் அதன் செயலாளர் செ.கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், உத்தியோகபூர்வப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ், கொள்கைபரப்புச் செயலாளர் ந.காண்டீபன் உள்ளிட்ட குழுவினர் அண்மையில் நோர்வே வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட அதிகாரியை சந்தித்து, உள்நாட்டில் தமிழர்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் மற்றும் தீர்வு எதிர்பார்க்கை குறித்து விரிவாக விளக்கமளித்தனர். இதன்போது தமிழர்களுக்கான அரசியல் தீர்வை ஒற்றையாட்சிக்குள் முடக்கும் வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சி மற்றும் தமது சமஷ்டி தீர்வுக்கான கோரிக்கை என்பன தொடர்பில் நோர்வே வெளிவிவகார அமைச்சின் அதிகாரியிடம் விரிவாக விளக்கமளித்தனர். அதனை செவிமடுத்த அதிகாரி, தீர்வு விடயத்தில் தாம் நடுநிலையான போக்கையே கடைப்பிடிப்பதாகப் பதிலளித்தார். அதனை நிராகரித்த கஜேந்திரகுமார் தரப்பு, இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் நோர்வே உள்ளிட்ட உலகநாடுகள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் சமஷ்டி தீர்வுக்கு இணங்காமல், தனிநாட்டையே கோருகின்றனர் என்ற அடிப்படையில் அல்லவா பின்னர் யுத்தத்தை ஆதரித்தீர்கள் எனக் கேள்வி எழுப்பியதுடன், குறைந்தபட்சம் சமஷ்டி தீர்வு என்பது நாட்டைப் பிளவுபடுத்துவது அல்ல என்ற நிலைப்பாட்டையேனும் நோர்வே வெளிப்படுத்தவேண்டும் என வலியுறுத்தினர். அதுமாத்திரமன்றி பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்வதற்கான புதிய சட்ட வரைவு, வட, கிழக்கு மாகாணங்களில் தொடரும் பௌத்த மற்றும் இராணுவமயமாக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் இன்னமும் உறுதிப்படுத்தப்படாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் நோர்வே அதிகாரிக்கு அவர்கள் விளக்கமளித்தனர். அதனையடுத்து டென்மார்க் வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட அதிகாரியுடன் நடைபெற்ற சந்திப்பிலும் இவ்விடயங்கள் வலியுறுத்தப்பட்டன. இது இவ்வாறிருக்க, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீண்டும் நாடு திரும்பியுள்ள போதிலும், கட்சியின் ஏனைய பிரதிநிதிகள் எதிர்வரும் தினங்களில் பெல்ஜியம், நெதர்லாந்து, சுவிட்ஸர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் இவ்வாறான உயர்மட்ட மற்றும் மக்கள் சந்திப்புக்களை நடாத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235883- சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார்
சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார் ! 13 Jan, 2026 | 08:47 AM இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் இன்று செவ்வாய்க்கிழமை (13) அதிகாலை காலமானார். சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் தனது 81 ஆவது வயதில் காலமாகியுள்ளார். இவர் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, வெளியிட்ட அறிக்கைகளுக்காக சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்டவர் ஆவார். ஊடகத்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட இவர், பல முக்கிய செய்திகளை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளார். இக்பால் அத்தாஸின் இறுதிச் சடங்கு இன்று பிற்பகல் தெஹிவளை பெரிய பள்ளிவாசல் மயானத்தில் நடைபெறவுள்ளது. அன்னாரது பூதவுடல் இலக்கம் 11 C/1, சிறிவர்தன வீதி, ஹில் வீதி, தெஹிவளை என்ற முகவரியில் அமைந்துள்ள இல்லத்தில் இன்று காலை 9.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235881- இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
எல்லை தாண்டி மீன்பிடித்த 10 இந்திய மீனவர்கள் கைது Jan 13, 2026 - 07:28 AM ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற ஒரு விசைப்படகையும் (TN 10 MM 513), அதிலிருந்த பத்து மீனவர்களையும் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் இன்று (13) அதிகாலை கைது செய்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இவர்கள், படகுடன் காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கைதான மீனவர்கள் மற்றும் படகு ஆகியன நீரியல் வளத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmkbxzxho03u0o29npg42tay5- திருத்தப்பட்ட பயங்கரவாத பெயர் பட்டியல் வெளியானது
பாதுகாப்பு அமைச்சின் தடை பட்டியலில் 16 அமைப்புக்கள், 206 தனிநபர்கள் - பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டிருப்பதே காரணமாம் 12 Jan, 2026 | 07:22 PM (நா.தனுஜா) தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு உள்ளடங்கலாக தடைசெய்யப்பட்ட 16 அமைப்புக்கள் மற்றும் 206 தனிநபர்களின் பெயர் விபரங்களைக் குறிப்பிட்டு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்தாவினால் புதுப்பிக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 1968 ஆம் ஆண்டின் 45ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபைச் சட்டத்தின் பிரகாரம் பயங்கரவாத செயற்பாடுகளுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புகளைப் பேணிவரும் மற்றும் அவற்றைத் தூண்டும் வகையில் இயங்கிவரும் அமைப்புக்களைத் தடைசெய்து இலங்கை அரசாங்கங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டுவருகின்றன. அவ்வாறு தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலில் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புக்களின் பெயர்கள் தொடர்ந்து உள்ளடக்கப்பட்டு வருகின்றன. அதன்படி அரசாங்கத்தினால் கடந்த 6 ஆம் திகதி வெளியிடப்பட்டிருக்கும் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தலில் தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழர் புனர்வாழ்வு அமைப்பு, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, உலகத் தமிழர் இயக்கம், நாடு கடந்த தமிழீழ அரசு, உலகத் தமிழர் நிவாரண நிதியம், தலைமையகக் குழு, கனேடிய தமிழர் Nதுசிய அவை, தமிழ் இளைஞர் அமைப்பு மற்றும் சேவ் த பேர்ள்ஸ் ஆகிய தமிழ் இயக்கங்கள் மற்றும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பெயர்களும் தேசிய தௌஹித் ஜமாத், ஜமாதே மிலாதே இப்ராஹிம், விலயாத் அஸ் செயிலானி, டருள் ஆதர் அத்தபவியா, இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம் மற்றும் சுப்பர் முஸ்லிம் ஆகிய இஸ்லாமிய அமைப்புக்களின் பெயர்களும் உள்ளடங்கியுள்ளன. அதேபோன்று ஜேசுராசா அமலதாஸ், விஸ்வநாதன் ருத்ரகுமரன், அப்பாத்துரை செந்தில் விநாயகம், சந்திரா வரதகுமார், வீரசிங்கம் நாகேஸ்வரன், நடராஜா சத்தியசீலன், அமிர்தலிங்கம் திலீபன், விநாயகமூர்த்தி மோகனசுந்தரம், மொஹமது இப்திகார் மொஹமது இன்சாப், அப்துல் காதர் மொஹமட் ஷாஸ்னி, மொஹமது பாருக் முஹம்மது ஹிலாம், முகமது இப்ராகிம் சாதிக் அப்துல்லா, மொஹம்மது சரிபு ஆதம் லெப்பே, அப்துல் லதீப் மொஹமட் சாபி ஆகியோர் உள்ளடங்கலாக 206 தனிநபர்களின் பெயர்களும் அவ்வர்த்தமானி அறிவித்தலில் உள்வாங்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் தடைப்பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதன் மூலம் இவ்வமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் சார்ந்த செயற்பாடுகள், நிதியங்கள் மற்றும் சொத்துக்கள் என்பன நாட்டுக்குள் முடக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235867- சீன ஆய்வுக் கப்பல்களுக்கான தடை நீங்குமா? - முக்கிய இராஜதந்திர நகர்வுடன் கொழும்பு வருகிறார் வோங் யீ
இலங்கைக்காக சீன வெளிவிவகார அமைச்சர் வழங்கிய உறுதி Jan 12, 2026 - 11:55 PM நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள வீதிகள், புகையிரத பாதைகள் மற்றும் பாலங்களைப் புனரமைத்தல் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தினால் சீன அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட விசேட கோரிக்கை தொடர்பில் தான் தனிப்பட்ட ரீதியில் தலையிடுவதாக சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ (Wang Yi) உறுதியளித்துள்ளார். இலங்கை விரைவில் வழமைக்குத் திரும்புவதற்குச் சரியான பாதையில் பயணிப்பதாகத் தான் நம்புவதாகவும், அதற்காக சீன அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் வாங் யீ மீண்டும் உறுதிப்படுத்தினார். இன்று காலை (12) சீன மக்கள் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இலங்கைக்கு மேற்கொண்ட குறுகிய கால விஜயத்தின் போது அமைச்சர் விஜித ஹேரத்தைச் சந்தித்தார். டித்வா புயலுக்குப் பின்னர் சீனா இலங்கைக்கு வழங்கிய அவசர அனர்த்த நிவாரணங்களுக்காக, சீன அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் அமைச்சர் விஜித ஹேரத் இதன்போது தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இரு அமைச்சர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலில் வர்த்தகம் மற்றும் முதலீடு, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் சுற்றுலாத் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் முன்னெடுத்துச் செல்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, டித்வா புயலுக்குப் பின்னர் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் செயல்முறை குறித்தும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmkbhudif03txo29ntqq22m1o- ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 தொடர்
தென் ஆபிரிக்காவுடனான 19 இன் கீழ் உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியில் 12 ஓட்டங்களால் இலங்கை வெற்றி 12 Jan, 2026 | 09:34 PM (நெவில் அன்தனி) நமிபியாவிலும் ஸிம்பாப்வேயிலும் தைப் பொங்கல் தினத்தன்று ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்னோடியாக நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் தென் ஆபிரிக்காவை டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 12 ஓட்டங்களால் இலங்கை வெற்றிகொண்டது. நமிபியாவின் விண்ட்ஹோக், யுனைட்டட் கிரிக்கெட் கழக மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தப் பயிற்சிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 48.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 225 ஓட்டங்களைக் குவித்தது. ஆரம்ப வீரர்களான திமன்த மஹாவித்தான, விரான் சமுதித்த ஆகிய இருவரும் 121 பந்துகளில் 100 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். அதன் பின்னர் சீரான இடைவெளியில் இலங்கை இளையோர் அணி 4 விக்கெட்களை இழந்தது. (49 - 4 விக்.) இந் நிலையில் கவிஜ கமகே, சாமிக்க ஹீனட்டிகல ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கையை 200 ஓட்டங்களாக உயர்த்தினர். திமன்த மஹாவித்தான 87 ஓட்டங்களையும் விரான் சமுதித்த 45 ஓட்டங்களையும் உப அணித் தலைவர் கவிஜ கமகே 48 ஓட்டங்களையும் சாமிக்க ஹீனட்டிகல 14 ஓட்டங்களையும் பெற்றனர். வேறு எவரும் 10 ஓட்டங்களை எட்டவில்லை. 226 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட தென் ஆபிரிக்காவின் வெற்றி இலக்கு மழை காரணமாக டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 34 ஓவர்களில் 176 ஓட்டங்கள் என திருத்தி அமைக்கப்பட்டது. தென் ஆபிரிக்கா 33.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 163 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது. பந்துவீச்சில் குகதாஸ் மாதுளன் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சாமிக்க ஹீனட்டிகல 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் விரான் சமுதித்த 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மலின்த சில்வா 19 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கொழும்பு வெஸ்லி கல்லூரி வீரர் ஸ்ரீராம் ஜீவகன் 21 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். துடுப்பாட்டத்தில் 11 வீரர்களும் பந்துவீச்சில் 11 வீரர்களும் பயன்படுத்தப்பட்ட இந்தப் போட்டியில் விக்னேஸ்வரன் ஆகாஷ் விளையாடவில்லை. இலங்கைக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான பயிற்சிப் போட்டி இதே மைதானத்தில் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது. அப் போட்டியில் ஆகாஷுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவுஸ்திரேலியா, அயர்லாந்து, ஜப்பான் ஆகிய அணிகளுடன் ஏ குழுவில் இடம்பெறும் இலங்கை அணி தனது முதல் சுற்று போட்டிளை நமிபியாவில் விiளாடவுள்ளது. ஜப்பனை 17ஆம் திகதியும் அயர்லாந்தை 19ஆம் திகதியும் அவுஸ்திரேலியாவை 23ஆம் திகதியும் எதிர்த்தாடவுள்ள இலங்கை சுப்ப 6 சுற்றில் விளையாட தகுதிபெறும் என நம்பப்படுகிறது. இலங்கை இளையோர் அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக திரித்துவ கல்லூரியின் வேகப்பந்துவீச்சாளர் செத்மிக்க செனவிரட்ன கருதப்படுகின்றார். ஐசிசியினால் பெயரிடப்பட்டுள்ள கவனிக்கத்த வீரர்களில் செத்மிக்க செனவிரட்னவும் ஒருவராவார். பத்து இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள செத்மிக்க 16 விக்கெட்களைக் கைபற்றியுள்ளார். 19 வயதின்கீழ் இலங்கை குழாம் விமத் தின்சார (அணித் தலைவர் - றோயல் கல்லூரி), கவிஜ கமகே (உதவித் தலைவர் - கிங்ஸ்வூட் கல்லூரி), திமன்த மஹாவித்தான, ஆதம் ஹில்மி, செத்மிக்க செனவிரட்ன (மூவரும் திரித்துவ கல்லூரி), விரான் சமுதித்த, சமரிந்து நெத்சார (இருவரும் மாத்தறை சென். செர்வேஷியஸ் கல்லூரி), துல்னித் சிகேரா, சாமிக்க ஹீனட்டிகல (இருவரும் மஹாநாம கல்லூரி), குகதாஸ் மாதுளன் (யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி), ரசித் நிம்சார (வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை), விக்னேஸ்வரன் ஆகாஷ், சேனுஜ வேக்குனாகொட (இருவரும் மருதானை புனித சூசையப்பர் கல்லூரி), ஸ்ரீராம் ஜீவகன் (வெஸ்லி கல்லூரி), மலின்த சில்வா (மொறட்டுவை புனித செபஸ்தியார் கல்லூரி) https://www.virakesari.lk/article/235873- 'டித்வா' புயலின் தாக்கத்தால் 4,800 மண்சரிவுகள்!
'டித்வா' புயலின் தாக்கத்தால் 4,800 மண்சரிவுகள்! Jan 12, 2026 - 11:05 PM 'டித்வா' புயலுக்குப் பின்னர் செயற்கைக்கோள் தரவுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் சுமார் 4,800 மண்சரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஆத்தர் சி. கிளார்க் நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் குமாரி மிகஹகொடுவ தெரிவித்துள்ளார். இன்று (12) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார். 'டித்வா புயல் ஏற்பட்டதன் பின்னர் பெறப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் தரவுகளைப் பயன்படுத்தி மண்சரிவு வரைபடமாக்கல் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். அந்த வரைபடங்களை பகுப்பாய்வு செய்தபோது, ஊடகங்கள் வாயிலாக இதுவரை அறிவிக்கப்பட்டதை விடவும் மிக அதிக எண்ணிக்கையிலான மண்சரிவுகள் பதிவாகியுள்ளமை கண்டறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். "செயற்கைக்கோள் புகைப்படப் பகுப்பாய்வு மூலம் நாடு தழுவிய ரீதியில் மண்சரிவுகள் முழுமையாக வரைபடமாக்கப்பட்டதுடன், இதன் மூலம் மொத்த மண்சரிவு சம்பவங்களின் எண்ணிக்கை 4,800 இற்கு அருகில் இருப்பது தெரியவந்துள்ளது. 'டித்வா' புயல் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் செயற்கைக்கோள் புகைப்படங்கள் ஊடாகப் பெறப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி நாம் மண்சரிவுகளை வரைபடமாக்கினோம். அந்த வரைபடங்களின்படி, ஊடகங்கள் வாயிலாகப் பிரசாரப்படுத்தப்பட்ட மண்சரிவுகளின் எண்ணிக்கையை விடவும் பாரிய அளவிலான மண்சரிவுகள் இடம்பெற்றுள்ளதை நாம் கண்டறிந்தோம். அந்தச் செயற்கைக்கோள் புகைப்படங்கள் ஊடாகச் சுமார் 4,800 மண்சரிவுகள் பதிவாகியுள்ளன." என்றார். கேள்வி: தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) செயற்கைக்கோள் புகைப்படங்களின் அடிப்படையில் 1,241 இடங்களில் பாரிய மண்சரிவுகள் காணப்பட்டதாகக் கூறியிருந்தது. அதைத் தவிர சிறிய மற்றும் நடுத்தர அளவிலான மண்சரிவுகள் குறித்து அவர்கள் இன்னும் ஆராய்ந்து வருகின்றனர். ஆனால் நீங்கள் 4,800 மண்சரிவுகள் பதிவாகியுள்ளதாகக் கூறுகிறீர்கள். இது நான்கு மடங்கு அதிகமாகும். அப்படியென்றால் இந்த 4,800 மண்சரிவுகளும் கொஸ்லந்த மண்சரிவைப் போன்ற பாரிய அளவிலானவையா? பணிப்பாளர் நாயகம் குமாரி மிகஹகொடுவ: "இல்லை, இதில் சிறிய அளவிலான மண் சரிவுகளையும் நாம் செயற்கைக்கோள் புகைப்படங்கள் ஊடாகப் பெற்றுள்ளோம். அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்கள் வாழும் பகுதிகள் மற்றும் அவர்கள் தலையிட வேண்டிய இடங்களை மாத்திரம் அடையாளம் கண்டிருக்கலாம். ஆனால் எமது செயற்கைக்கோள் புகைப்படங்களில் காடுகளுக்குள் இடம்பெற்ற மண்சரிவுகள் கூடக் கணக்கிடப்படுகின்றன. அதனால்தான் எமது தரவுகளில் எண்ணிக்கை அதிகமாக உள்ளது." என்றார். கேள்வி: அப்படியென்றால் இது 'டித்வா' புயலின் பின்னர் ஏற்பட்ட மொத்த மண்சரிவுகளின் எண்ணிக்கையா? இது நாடு முழுவதிலுமானதா அல்லது மத்திய மலைநாடு தொடர்பானதா? பணிப்பாளர் நாயகம் குமாரி மிகஹகொடுவ: "ஆம், இவை 'டித்வா' புயலுக்குப் பின்னர் ஏற்பட்டவை. அதிகமான மண்சரிவுகள் மத்திய மலைநாட்டிலேயே பதிவாகியுள்ளன. எனினும், இந்த எண்ணிக்கை நாடு முழுவதையும் உள்ளடக்கிய ஒரு கணக்கெடுப்பாகும். சிறிய அளவிலான மண் சரிவுகளையும் நாம் இதில் கவனத்தில் கொண்டுள்ளோம்." என்றார். https://adaderanatamil.lk/news/cmkbg1gq503two29ng0lfmdfl- அமெரிக்கா முந்தாவிட்டால் கிரீன்லாந்து ரஷ்யாவுடன் இணையும்: டிமிட்ரி மெத்வதேவ் அதிரடி எச்சரிக்கை!
அமெரிக்கா முந்தாவிட்டால் கிரீன்லாந்து ரஷ்யாவுடன் இணையும்: டிமிட்ரி மெத்வதேவ் அதிரடி எச்சரிக்கை! Published By: Digital Desk 3 13 Jan, 2026 | 09:15 AM ஆர்க்டிக் பிராந்தியத்தில் உள்ள கிரீன்லாந்து தீவைக் கைப்பற்றுவதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தாமதம் காட்டினால், அந்தத் தீவு மக்கள் ரஷ்யாவுடன் இணைய வாக்களிக்கும் சூழல் உருவாகும் என ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் டிமிட்ரி மெத்வதேவ் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை (12) இன்டர்ஃபாக்ஸ் (Interfax) செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, மெத்வதேவ் தெரிவித்துள்ளதாவது, "ட்ரம்ப் விரைந்து செயல்பட வேண்டும். எங்களுக்குக் கிடைத்துள்ள உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி, இன்னும் சில நாட்களில் அங்கு திடீர் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படலாம். இதில் சுமார் 55,000 பேர் வாழ்கின்ற கிரீன்லாந்து ஒட்டுமொத்தமாக ரஷ்யாவுடன் இணைய வாக்களிக்க வாய்ப்புள்ளது." "இது நடந்துவிட்டால் அவ்வளவுதான். அமெரிக்கக் கொடியில் புதிய நட்சத்திரங்கள் (புதிய மாகாணங்கள்) சேர்வதற்கு இடமிருக்காது," என அவர் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார். டென்மார்க் நாட்டின் தன்னாட்சி அதிகாரத்திற்குட்பட்ட கிரீன்லாந்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி ட்ரம்ப் தீவிரமாக உள்ளார். ஆர்க்டிக் பகுதியில் ரஷ்யாவின் ஆதிக்கத்தைத் தடுக்க இது அவசியம் என்பது அவர் வாதம். கிரீன்லாந்து மீது தங்களுக்கு உரிமை கோரும் எண்ணம் இல்லை என ரஷ்யா கூறினாலும், அங்குள்ள அமெரிக்க இராணுவத் தளம் மற்றும் விண்வெளி கண்காணிப்பு மையங்களை ரஷ்யா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. ட்ரம்ப்பின் இந்த முயற்சிக்கு டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். 'கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல' என அவர்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளனர். காலநிலை மாற்றத்தால் ஆர்க்டிக் பகுதியில் பனி உருகி வருவதால், புதிய கடல் வழித்தடங்கள் மற்றும் அங்குள்ள இயற்கை வளங்களைக் கைப்பற்ற வல்லரசு நாடுகளிடையே போட்டி அதிகரித்துள்ளது. குறிப்பாக, 2022-ல் உக்ரேன் மீது ரஷ்யா தொடுத்த போருக்குப் பின்னர் ஆர்க்டிக் ஒத்துழைப்பு பாதிக்கப்பட்டு, அப்பகுதி பதற்றம் நிறைந்த ஒன்றாக மாறியுள்ளது. https://www.virakesari.lk/article/235884- அமைச்சர் லால்காந்தவின் கருத்தை உடனடியாக மீளப் பெறப்பட வேண்டும்
அமைச்சர் லால்காந்தவின் கருத்தை உடனடியாக மீளப் பெறப்பட வேண்டும் Jan 12, 2026 - 10:02 PM மகா சங்கத்தினரை இழிவாகவும் கேவலமாகவும் விமர்சித்த அமைச்சர் லால் காந்தவுக்கு எதிராக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிடில், அதன் மோசமான விளைவுகளை விரைவில் சந்திக்க நேரிடும் என தேசிய சங்க சம்மேளனத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய லியன்வல சாஸனரதன தேரர் தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளுக்கும் மகா சங்கத்தினருக்கும் இடையில் பல்வேறு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தாலும், நாட்டின் வரலாற்றில் எந்தவொரு அரசியல்வாதியும் மகா சங்கத்தினரை இவ்வாறு தரம் தாழ்ந்த முறையில் அவமதித்ததில்லை என அவர் குறிப்பிட்டார். கண்டி, மடவல ஜனமங்கலாராம சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தேசிய சங்க சம்மேளனத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய லியன்வல சாஸனரதன தேரர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். "நாட்டைச் சீரழிக்கும் வஞ்சகமான தந்திரோபாய நிகழ்ச்சி நிரல்கள் முன்னெடுக்கப்படுமானால், அவற்றுக்குச் சவால் விடும் உரிமை எமக்கு நிச்சயமாக உண்டு. அதற்காகவே வரலாற்றிலிருந்தே மகா சங்கத்தினர் குரல் கொடுத்து வருகின்றனர். அமைச்சர் லால் காந்த காட்டில் இருக்கும் ஒரு மிருகத்தைப் போன்று வெளியே வந்து, காட்டுமிராண்டித்தனமான, தரம் தாழ்ந்த மற்றும் இழிவானதொரு கூற்றை முன்வைத்துள்ளதை நாம் பார்த்தோம். தயவுசெய்து உங்களது கூற்றை மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அந்த அமைச்சருக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறோம். ஏனெனில், அவ்வாறு செய்யாவிடில் இந்த நாடு எத்திசையை நோக்கிச் செல்லும் என்பதை எம்மால் ஊகிக்க முடியாது. ஜனாதிபதி அவர்களே, இவரை உடனடியாகக் கட்டுப்படுத்தாவிட்டால், இந்த நாடு இதைவிடப் பாரிய ஆபத்தை எதிர்கொள்ளும், அதை யாராலும் தடுக்க முடியாது என நாம் கூறுகிறோம். தயவுசெய்து நீங்கள் இந்த கலாசாரத்திற்குள் உங்களை மாற்றிக்கொள்ளாவிட்டால், இந்நாட்டு மக்கள் மிக விரைவில் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்." என்றார். https://adaderanatamil.lk/news/cmkbdsdwu03tvo29n4a349m2v- அச்சுறுத்தலாக மாறியுள்ளது 'க்ரோக்' ஏஐ தொழில்நுட்பம் ; பெண்களே விழிப்புடன் இருங்கள்
இந்தோனேசியாவில் க்ரொக் செயற்கை நுண்ணறிவுக்குத் தடை 12 Jan, 2026 | 04:11 PM இந்தோனேசியாவில் க்ரொக் (Grok) செயற்கை நுண்ணறிவு தளத்தைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, க்ரொக் செயற்கை நுண்ணறிவு தளத்தை தடை செய்த முதல் நாடாக இந்தோனேசியா விளங்குகிறது. உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்கின் எக்ஸ் சமூக ஊடக தளத்துடன் இணைந்து க்ரொக் செயற்கை நுண்ணறிவு சேவை இயங்கி வருகிறது. செயற்கை நுண்ணறிவு உரையாடல் தளமான க்ரொக், பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றுவது போன்ற செயல்களுக்காக அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் இது சட்டம், கலாசார உணர்வுகளை புண்படுத்துவதாகவும் அந்நாட்டின் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சு தெரிவித்துள்ளது. க்ரொக் பலர் தவறாக பயன்படுத்துவதால் பெண்கள், சிறுவர்கள் மன ரீதியாக பெரிதும் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டி, இந்தோனேசிய அரசு க்ரொக் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளது. https://www.virakesari.lk/article/235847- சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார்
சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார் Jan 13, 2026 - 10:02 AM சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளரும் பாதுகாப்பு விவகார பத்தி எழுத்தாளருமான இக்பால் அத்தாஸ் காலமானார். உயிரிழக்கும் போது அவருக்கு 81 வயது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmkc3irs103u9o29nhf08zjby- கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!
விமலுக்கு நன்றாகவே தெரியும், தான் உண்ணாவிரதமிருந்தால் எல்லாரும் சேர்ந்து தன்னை சாக விட்டுவிடுவார்கள் என்பது. அதனாலேயே சத்தியாக்கிரகமாக மாற்றியிருப்பார். அவர் என்ன போராட்டம் செய்தாலும் அவரது கோரிக்கை நிறைவேற்றப்படப்போவதில்லை, இருந்து, எழும்பி, பின் களைத்து வராமலே போய்விடுவார். இவருக்கு இருப்பது வாய் மட்டுந்தான். திஸ்ஸ விகாரைக்கு மக்களை திரட்ட பிக்குகளையும் திரட்டிக்கொண்டு தெருவில நின்று ஊழையிட்டு விட்டு போய் படுத்தவர், இப்போ வந்து கருணாநிதி ஸ்ரைலில் கருப்பு கண்ணாடி, வந்த கணத்திலேயே படுத்துவிட்டார், தூக்கம் கலைய எழும்பிப்போவார். பொதுஅரங்கில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இப்படி அசிங்கமாக பேசிக்கொண்டு, எப்படி கல்வி திட்டத்திற்கு எதிராக சத்தியாக்கிரகம் செய்ய முடியுது இவரால்? அசிங்கமாக பேசுவது இவர்களுக்கு சர்வ சாதாரணம், பிறகு கல்வி திட்டம் பிழையாம் என்கிற குற்றச்சாட்டு. இவரை ஏன் இன்னும் போலீசார் கைது செய்யவில்லை? ஒரு நாட்டின் பிரதமரை பகிரங்கமாக இழிவு படுத்துவதை வேடிக்கை பார்ப்பது தான் பொலிஸாரின் கடமையா? ஐ .நாவின் மனித உரிமையாளரை தான் கலியாணம் கட்டுகிறேன் என்று சொன்னார் மேவின், அது அவரின் கருத்து சுதந்திரமென்று விளக்கமளித்தார் மஹிந்தா. இதுதான் ஒரு நாட்டின் ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம், கருத்துச்சுதந்திரம். நாமல் பேரணி நடத்தினார் எதுவும் சாதிக்க முடியவில்லை. வந்தது இயற்கை சீற்றம். பயமுறுத்தல், இல்லாத விடயங்களை பரப்புதல், சேறடித்தல் வேலைகளை செய்கிறார். பூச்சாண்டி பிடிக்கும் என்று குழந்தைகளுக்கு பயம் காட்டுவதுபோல், அமெரிக்கா இலங்கைக்குள் நுழையப்போகுதாம் என்று அனுராவுக்கு பயம் காட்டுகிறார். இவர் எதிர்கால ஜனாதிபதியாம். இவர் ஜனாதிபதியாக வந்தால் எப்படியிருக்கும்? இனவாதம் மதவாதம் பேசும் அரசியல் கலாச்சாரமே இந்த நாட்டில் இருக்கவேண்டும், அது இல்லாத, பேசாதவர் அரசியல் செய்யக்கூடாது என்பது இவர்களின் எழுதப்படாத சட்டம். எப்போ இவர்களின் ஊழல், கொலை, கொள்ளை வெளிவருகிறதோ, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறதோ உடனே நாட்டை குழப்பி, ஆட்சியை பிடித்து தம்மை புனிதர்களாக, சிங்கள, பௌத்த காவலர்களாக காட்டுவார்கள். இதில இன்னொரு பகிடி என்னவென்றால்; தேசிய மக்கள் சக்தி பாரியளவில் பொய்பிரசாரங்களை மேற்கொண்டு ஆட்சியை கைப்பற்றியதால்தெய்வ கோபம் ஏற்பட்டு நாடு அனர்த்தங்களை எதிர்நோக்கியதாம், வஜிர அபேவர்த்தன சொல்கிறார். அப்போ, சுனாமி ஏன் வந்தது? எத்தனை உயிர்களை துடிக்க துடிக்க கொன்று குவிக்கும்போது தெய்வம் மகிழ்ச்சியடைந்ததோ? சரி, இவர்களது பொய்யால் அனர்த்தம் ஏற்பட்டதென்றால் அவர்கள் ஆட்சியை கைப்பற்றியவுடன் அல்லவா அனர்த்தம் நேரிடிருக்க வேண்டும்? பருவகால அனர்தத்திற்கும், தெய்வ கோபத்திற்கும் வேறுபாடு தெரியாத அமைச்சர். கல்வியறிவு இல்லை, திறமையில்லை நாட்டை நிர்வகிக்க. இனவாதம், மதவாதம் பேசி அரசியலை கைப்பற்றி கொள்ளையடிப்பது, கேள்வி கேட்போரை கொலை செய்வது, இவர்கள்தான் சிறந்த அரசியல்வாதிகள். நாட்டில் மக்களை சிந்திக்க விடுவதில்லை, உண்மையை தெரிந்துகொள்ள அனுமதிப்பதில்லை.- சிறீதரனை பதவிவிலகுமாறு பணிப்புரை! எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானம்
தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதி என்று சொல்லிக்கொள்பவர், தமிழர் பிரதேசங்களிலும் தனக்கு உயிரச்சுறுத்தல் எனக்கூறி அந்த மக்களை கொன்றொழித்த இராணுவத்தின் பாதுகாப்பு, அதற்கும் மேலதிகமாக போலீஸ் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு பெற்று வலம் வந்து, அந்த மக்களின் வாக்கோடு பாராளுமன்றம் சென்ற ஒரு உறுப்பினரை உலகில் வேறெங்காவது நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? இவர் செய்கிற கோமாளித்தனம் அதுதான். அந்தமக்களால் தனது உயிருக்கு ஆபத்து என்று சொல்லிக்கொண்டு, அந்த மக்களிடம் வாக்கு பெற்று, அந்த மக்களை கைகழுவி, தன் பதவி காப்பவர். அறிவுமில்லை, திறமையுமில்லை, மனச்சாட்சியுமில்லை. ஆனால் எல்லா வசதிகளும், பதவிகளும், தகுதிகளும் தான் அனுபவிக்க வேண்டுமென்கிற பேராசை மட்டுந்தான். அதற்காக அடம்பிடித்து எதுவேண்டுமானாலும் செய்வார். - யாழ்ப்பாணத்திற்கு இந்த ஆண்டு முதல் கட்டமாக 500 வீடுகள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.