All Activity
- Past hour
-
ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை அமெரிக்கா பயன்படுத்துகிறதா? புது டெல்லியின் பதில்!
ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை அமெரிக்கா பயன்படுத்துகிறதா? புது டெல்லியின் பதில்! மத்திய கிழக்கில் நடந்து வரும் இராணுவ மோதல்களுக்கு மத்தியில், ஈரானுக்கு எதிராக தாக்குதல்களை நடத்த அமெரிக்கா இந்திய துறைமுகங்களைப் பயன்படுத்துவதாகக் கூறும் அறிக்கையை இந்திய வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒன் அமெரிக்கா ஓபன் நியூஸ் (OAN) அலைவரிசைக்கு அளித்த செவ்வியின் போது முன்னாள் அமெரிக்க இராணுவ கர்னல் டக்ளஸ் மேக்ரிகோர் இந்தக் கூற்றை முன்வைத்ததைத் தொடர்ந்து இந்தியாவின் இந்த அறிக்கை வந்துள்ளது. நேர்காணலின் போது, அமெரிக்கா தனது சொந்த தளங்கள் மற்றும் துறைமுக வசதிகள் சேதமடைந்த பின்னர் இந்திய துறைமுகங்களை நம்பியிருப்பதாக மெக்ரிகோர் குறிப்பிட்டார். எவ்வாறெனினும் இந்திய வெளிவிவகார அமைச்சு இந்தக் கூற்றினை நிரகாரித்துள்ளது. அமெரிக்க கடற்படையால் இந்திய துறைமுகங்கள் பயன்படுத்தப்படுவதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு அலைவரிசையான OAN இல் கூறப்படும் கூற்றுகள் போலியானவை மற்றும் தவறானவை. இதுபோன்ற ஆதாரமற்ற மற்றும் ஜோடிக்கப்பட்ட கருத்துக்களுக்கு எதிராக நாங்கள் எச்சரிக்கிறோம் வெளிவிவகார அமைச்சு ஒரு அறிக்கையில் கூறியது. அதேநேரம், ஈரானிலும் பரந்த மேற்கு ஆசிய பிராந்தியத்திலும் அதிகரித்து வரும் மோதலை உடனடியாக நிறுத்துமாறு இந்திய வெளிவிவகார அமைச்சு செவ்வாயன்று அழைப்பு விடுத்தது. நீடித்த உறுதியற்ற தன்மை இந்திய குடிமக்கள், பொருளாதார நலன்கள் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று எச்சரித்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1467283
-
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உண்மையில் நடந்தது என்ன? ஆங்கிலமொழி கட்டுரை காணொளி வடிவில்👇 https://www.facebook.com/reel/2417312185358807
-
-
நேபாளத்தில் இன்று பொதுத் தேர்தல்; மக்கள் வாக்களிப்பில் மும்முரம்
நேபாளத்தில் இன்று பொதுத் தேர்தல்; மக்கள் வாக்களிப்பில் மும்முரம் 05 Mar, 2026 | 12:36 PM நேபாளத்தில் இன்று (5) பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு நேபாளத்தில் பிரதமராக பதவி வகித்த கே.பி.சர்மா ஒலிக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்போதைய போராட்ட நிலைமை கட்டுப்படுத்தப்படாத நிலையில், அன்றைய பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர், இடைக்கால பிரதமராக சுஷிலா கார்கி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்று வருகிறது. இந்த பொதுத் தேர்தலில் நேபாள காங்கிரஸ் கட்சி, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி முதலான கட்சிகள் களமிறங்கியுள்ளன. நேபாள நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் மொத்தம் 275 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 165 பேர் நேரடியாகவும் 110 பேர் விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்யப்படுவர் என தெரிவிக்கப்படுகிறது. வாக்களிப்பு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை நிறைவடைய சில நாட்கள் ஆகும் என்றும் கூறப்படுகிறது. நேபாளத்தில் இன்று பொதுத் தேர்தல்; மக்கள் வாக்களிப்பில் மும்முரம்
-
சர்வதேச கடற்பரப்புக்கு செல்ல வேண்டாம் - இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
இரான் - அமெரிக்கா சண்டை, இங்கைதான் நடக்குது. இந்திய மீனவர்களையும்... இலங்கை கடற்பரப்புக்கு வர வேண்டாம் என்று சொல்ல வேணும்.
-
சர்வதேச போர்க்கப்பல் அணிவகுப்பு: இந்திய கடற்படைத் தளபதியுடன் இலங்கை கடற்படைத் தளபதி பங்கேற்பு
அப்படிப் போலதான் இருக்கு ஏராளன். 😂
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
நல்லூர் போகலாம்😂 - ஆனால் நேரடி விமானத்தில் அல்லது துருக்கி வழியே போக வேண்டி வரலாம்.
-
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!
சுரேஷ் சலேயின் கைதுக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் Mar 5, 2026 - 03:57 PM அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை விமானப்படையின் ஓய்வுபெற்ற அதிகாரியொருவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், இதன் பிரதிவாதிகளாகப் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட பலரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. சுரேஷ் சலேயின் கைதுக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல்
-
சர்வதேச கடற்பரப்புக்கு செல்ல வேண்டாம் - இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
சர்வதேச கடற்பரப்புக்கு செல்ல வேண்டாம் - இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல் Mar 5, 2026 - 04:06 PM இலங்கை கடற்பரப்பை மீறி சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை மீனவர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர். கடற்றொழில் அமைச்சர் ராமலிங்க சந்திரசேகர் பாராளுமன்றில் இந்த அறிவிப்பை இன்று (5) வௌியிட்டார். சர்வதேச கடற்பரப்புக்கு செல்ல வேண்டாம் - இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
ஈரானின் ஷகீட் டிரோன்களை எதிர்பது பற்றிய வழிவகைகளை அரபு நாடுகளுடன் பகிர தன் அரசுக்கு செலென்ஸ்கி உத்தரவு. பல அரபு நாடுகளிடமும் இது சம்பந்தமாக பேச்சு. ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்😂 வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் 😂 😂 இல்லை மாலுமிகளை இறக்கிய பின், கப்பலை ஏதாவது ஒரு துறைமுகத்திற்கு கொண்டு போய் நங்கூரம் இட்டால் அமெரிக்கா அதிகம் டென்சன் ஆகாது என நினைக்கிறேன். இந்த பேரீச்சம் பழத்துக்கு போடும் கப்பல் யுத்தமுனைக்கு அப்பால் போர் முடியும் வரை முடக்கப்பட்டால் - அமெரிகா அதை சட்டை செய்யாது. இப்போ இருக்கும் நிலையில் ஈரானுக்காக இலங்கை அமெரிக்காவை பகைக்காது. அப்படி ஒரு நிலை வந்தால் அமெரிக்கா கேட்பதையே இலங்கை செய்யும். சீனாவும், ரஸ்யாவும் கூட அடக்கி வாசிக்க வீணா தலையை கொடுக்க இலங்கை விரும்பாது.
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
நீங்கள் சொல்வது போல்... இப்போது பயணத்தை தொடர்ந்தால் கப்பலுக்கு எப்படியும் அடி விழும். இலங்கையில் நிற்க அனுமதி கொடுத்தால்... இலங்கைக்கு பிரச்சினை வரும். ஸ்ரீலங்கா எமக்கு எதிரான போரில்... அமெரிக்காவிடமும், ஈரானிடமும் மிகவும் கடமைப் பட்டுள்ளார்கள். என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. கடைசியில் இரண்டு பேரும் சேர்ந்து இலங்கைக்கு அடி விழப் போகுதோ தெரியாது. 😂 இந்த வருச... நல்லூர் திருவிழாவுக்கு போக ஏலாது போல கிடக்கு. 🤣
-
சர்வதேச போர்க்கப்பல் அணிவகுப்பு: இந்திய கடற்படைத் தளபதியுடன் இலங்கை கடற்படைத் தளபதி பங்கேற்பு
அண்ணை உங்கள் வாய்முகூர்த்தம் பலித்துவிட்டதே!!
-
நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்தடை
நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்தடை Mar 5, 2026 - 01:58 PM புதிய அனுராதபுரம் மற்றும் வவுனியா மின் விநியோகத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. குறித்த தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தேசிய மின் கட்டமைப்புத் தொகுதியின் அதிர்வெண்ணில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, களனிதிஸ்ஸ ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையத்தின் நீராவி விசையாழி செயலிழந்து, அது கட்டமைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தேசிய மின் கட்டமைப்புத் தொகுதியில் 55 மெகாவாட் மின்சாரக் கொள்ளளவு இழக்கப்பட்டதால், நாட்டின் சில பகுதிகளில் இவ்வாறு மின்தடை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், சில நிமிடங்களிலேயே நிலைமையை மீண்டும் வழமைக்குக் கொண்டுவர முடிந்ததாக மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்தடை
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
ரம்ழான் ஸ்பெஷல் .......! 👍
- Today
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
இந்த கப்பல் தாக்கப்படவில்லை போல தெரிகிறது. பயணத்தை தொடர்ந்தால் அடி நிச்சயம் என்ற நிலையில் - இலங்கையிடம் கப்பலை விட்டு வெளியேற உதவி கேட்டுள்ளாரோ கப்டன் ? நேற்று - கமேனி மறைவுக்கு ஈரான் தூதரகம் போய் அஞ்சலி செலுத்தினார் அசர்பைஜன் அதிபர். இன்று அசர்பைஜானை தாக்கியது ஈரான்😂
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
இலங்கை தனது கடற்கரையில் மற்றொரு ஈரானிய கப்பலில் "உயிர்களைப் பாதுகாக்க" முயற்சிப்பதாக அந்நாட்டின் அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை தெரிவித்தார், அந்தக் கப்பல் தெற்காசிய தீவு நாட்டின் பிராந்திய நீர்நிலைகளுக்கு அப்பால் பொருளாதார மண்டலத்தில் இருப்பதாகவும் கூறினார். The Morning ##################### ########################## இலங்கைக்கு அருகே இன்னொரு ஈரானிய கப்பல்..! இலங்கைக்கு அருகே, சர்வதேச கடற்பரப்பில் மற்றுமொரு ஈரானியக் கப்பலாகிய Bushehr தரித்து நிற்பதாகவும், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்கை அரசு கவனம் செலுத்திவருவதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தகவல். Rajeevan Ramalingam
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
வந்து கொண்டிருக்கும் செய்தி இன்னொரு ஈரானிய கப்பல் இலங்கை அருகே நிற்கிறதாம். மாலுமிகளை மீட்க இலங்கை நேவி முயற்சி. அசர்பைஜானின் நக்சிவன் விமான நிலையம் மீது ஈரான் தாக்குதல். மீளதாக்கும் உரிமை தமக்கு உண்டென் அசர்பைஜான் கூற்று.
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
################### ####################### அந்த IRIS Dena கப்பல்... போகும் வழியில், இலங்கை துறைமுகத்தில் தரித்து நிற்பதற்காக அனுமதி கோரி... 11 மணித்தியாலத்துக்கு மேல் எதிர்பார்த்து நின்றததாம். எனக்கு என்னவோ... நடந்த சம்பவங்களை பார்க்க, அமெரிக்க நீர்மூழ்கி கப்பலின் தாக்குதலுக்கு.. ஈரான் கப்பல் இரையாக... இலங்கையும், இந்தியாவும்... மறைமுக உதவி செய்ததாகவே கருத வேண்டி உள்ளது. இந்த இரண்டு நாடுகளும்... காட்டிக் கொடுக்கக் கூடிய நாடுகள் என்பதில் சந்தேகம் இல்லை.
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
EEZ க்கு அப்பாலான இடமே international waters என்பது சரிதான். ஆனால் territorial zone க்கு அப்பால் எந்த நாட்டுக்கும் இறைமை-உரித்து இல்லை. Navigational rights எனப்படும் பயணிக்க அனுமதிக்கும் உரிமை ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் territorial zone இல் மட்டுமே உண்டு. EEZ இல் வளங்களை அனுபவிக்கும் உரிமை மட்டுமே உண்டு. பயணத்தை தடுக்கும் அதிகாரம் இல்லை. ஆகவே இலங்கையின் EEZ வைத்து போட்டது சட்ட மீறல் அல்ல.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
(Three ஷா.) 😂 சுவியர்… சுவைப்பிரியனுக்கு வயசுக் கோளாறாக இருக்குமோ… 🤣
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் ..........! இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும் ஆண் : { ஒரே வானிலே ஒரே மண்ணிலே } (2) ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் ஆண் : காற்று நம்மை அடிமை என்று விலக வில்லையே கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே ஆண் : காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே ஆண் : தோன்றும்போது தாயில்லாமல் தோன்ற வில்லையே சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே ஆண் : வாழும்போது பசியில்லாமல் வாழ வில்லையே போகும்போது வேறு பாதை போகவில்லையே ஆண் : கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை கோயில் போலே நாடு காண வேண்டும் விடுதலை ஆண் : அச்சமின்றி ஆடி பாட வேண்டும் விடுதலை அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை குழு : ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் ......! --- அதோ அந்த பறவை போல ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆணாகப் பிறந்ததெல்லாம் ......... படம் : சபாஷ் மீனா , நடனம் : சரோஜாதேவி & ஜெமினி சந்திரா . ......பாடியவர்கள் : பி . சுசிலா & கே . ஜமுனாராணி ........ இசை : T . G லிங்கப்பா ......! 😍
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
நோ ...... அவர் 3 சாவை கவனித்து வந்திருக்கிறார் . ........! 😂
-
அயத்துல்லா அலி காமெனி மறைவு: சம்மாந்துறையில் துக்கக் கொடியேற்றம்!
அயத்துல்லா அலி காமெனீ அவர்களின் மறைவையொட்டி சம்மாந்துறையில் துக்கக் கொடிகள் ஏற்றப்பட்டன. Jaffna Muslim
-
அயத்துல்லா அலி காமெனி மறைவு: சம்மாந்துறையில் துக்கக் கொடியேற்றம்!
இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தன. 😂
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
சீமான் திருமணம் செய்தபின் எப்போது விஜியுடன் தொடர்பில் இருந்தார்?? விளங்காத ஒருவர் இதற்கு பச்சை புள்ளிவேறு போடுகிறார்!!