All Activity
- Past hour
-
ஈரானுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக சீனா அறிவிப்பு
ஈரானின் இறையாண்மைக்கு சீனாவின் முழு ஆதரவு – சீன வெளியுறவு அமைச்சர் உறுதி Published By: Vishnu 02 Mar, 2026 | 08:53 PM ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க பெய்ஜிங் ஆட்சி முழு ஆதரவை வழங்கும் என்று சீன வெளியுறவு அமைச்சர் ஈரானிய வெளியுறவு அமைச்சரிடம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் திங்கட்கிழமை (02) செய்தி வெளியிட்டுள்ளன. இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையிலான கலந்துரையாடலின் போது இந்தக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதாக சீன அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/239997
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
அமெரிக்கா - இரான் மோதலில் எந்த நாடு யார் பக்கம்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இஸ்ரேலும் அமெரிக்காவும் சனிக்கிழமை அன்று இரான் மீது தாக்குதல் நடத்தின. 2 மார்ச் 2026, 08:20 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, உலகம் இரண்டு முகாம்களாகப் பிரிந்திருப்பது போல் தோன்றுகிறது. பல நாடுகள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை ஆதரித்துள்ள நிலையில், சில நாடுகள் இரானுக்கு ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன. பல நாடுகள் மிகவும் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை எடுத்து நடுநிலையாக அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. இஸ்ரேலும் அமெரிக்காவும் சனிக்கிழமை இரான் மீது தாக்குதல் நடத்தின. இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி உட்பட பல முக்கிய தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை இரான் குறிவைக்கத் தொடங்கியது. இந்தியா இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, ஞாயிற்றுக்கிழமை இரவு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசினார். இரு தலைவர்களும் தற்போதைய சூழ்நிலை குறித்து விவாதித்தனர். சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் பிரதமர் மோதி எழுதிய பதிவில், சமீபத்திய நிகழ்வுகள் குறித்து இந்தியாவின் கவலையை வெளிப்படுத்தியதாகவும், குடிமக்களின் பாதுகாப்பிற்கு முதலிடம் அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். மோதலை விரைவில் நிறுத்துவது முக்கியம் என்பதையும் பிரதமர் மோதி மீண்டும் வலியுறுத்தினார். முன்னதாக, பிரதமர் ஞாயிற்றுக்கிழமை இரவு ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடனும் பேசினார். ஐக்கிய அரபு அமீரகம் மீதான தாக்குதல்களைப் பிரதமர் மோதி கண்டித்ததுடன், அங்கு வசிக்கும் இந்தியச் சமூகத்தினரைப் பாதுகாப்பாகக் கவனித்துக் கொள்வதற்காக ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு நன்றி தெரிவித்தார். இதற்கிடையில், வளைகுடா பிராந்தியத்தின் நிலைமை குறித்து கவலை தெரிவித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் பிப்ரவரி 28, சனிக்கிழமை ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது. "இரான் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய நிகழ்வுகள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. அனைத்துத் தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம் என்றும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கவும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்"என்று வெளியுறவு அமைச்சகம் கூறியிருந்தது . "பதற்றத்தைக் குறைக்கவும், சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கவும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜ்ஜீய வழிகளைப் பின்பற்ற வேண்டும். அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தது. அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்ற பிரிட்டன் பட மூலாதாரம்,X / Keir Starmer படக்குறிப்பு,பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மர் ஒரு காணொளி அறிக்கையை வெளியிட்டார். இரானிய ஏவுகணைத் தளங்கள் மீதான "தற்காப்பு" தாக்குதல்களுக்குப் பிரிட்டிஷ் ராணுவத் தளங்களைப் பயன்படுத்துவதற்கான அமெரிக்காவின் கோரிக்கைக்குப் பிரிட்டன் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தகவலைப் பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மர் வழங்கினார். இருப்பினும், பிரிட்டன் "இராக் தவறுகளில்" இருந்து பாடம் கற்றுக்கொண்டதாகவும், இரான் மீதான ஆரம்பக்கட்டத் தாக்குதலில் அது ஈடுபடவில்லை என்றும், "இனி வரும் எந்தத் தாக்குதல்களிலும் ஈடுபடாது" என்றும் அவர் கூறினார். அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்கும் முடிவு, கூட்டாளிகளின் "கூட்டுத் தற்காப்புக்காகவும்", பிரிட்டிஷ் உயிர்களைக் காப்பாற்றுவதற்காகவும் எடுக்கப்பட்டது என்று ஸ்டார்மர் கூறினார். மத்திய கிழக்கு நாடுகள் மீது இரான் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களை விமர்சித்து பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜெர்மனி அதிபர் ஃபிரடெரிக் மெர்ஸ் ஆகியோர் மத்திய கிழக்கில் தங்களது நலன்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர். ஐரோப்பிய நாடுகள் யாருக்கு சார்பாக உள்ளன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (கோப்புப் படம்) இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் மற்றும் இரானின் பதிலடி நடவடிக்கைக்குப் பிறகு, ஐரோப்பிய தலைவர்களின் எதிர்வினைகள் வெளிவந்துள்ளன. ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், இரானின் "கொலைவெறி ஆட்சிக்கு" எதிராக ஐரோப்பிய ஒன்றியம் விரிவான தடைகளை விதித்துள்ளதை நினைவுபடுத்தினார். "அனைத்துத் தரப்பினரும் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், பொதுமக்களைப் பாதுகாக்கவும், சர்வதேச சட்டத்தை முழுமையாக மதிக்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்று அவர் கூறினார். இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் அலுவலகம், இரான் மக்களுடன் இணைந்து நிற்பதாக கூறியுள்ளது. அவரது அறிக்கையில், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை மதிப்பதற்கான கோரிக்கை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பதற்றத்தைக் குறைக்கும் முயற்சியாக மெலோனி தனது கூட்டாளிகள் மற்றும் பிராந்தியத் தலைவர்களுடன் பேசுவார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகையில், தனது நாடு "இரானிய மக்கள் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் போது அவர்களுடன் நிற்கிறது" என்றும், இரான் அணு ஆயுதங்களைப் பெறுவதைத் தடுப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிகளை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார். இரானுக்கு வளைகுடா நாடுகள் எச்சரிக்கை பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரானை எச்சரிக்கும் நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று. வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளின் மீது இரான் நடத்திய தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விவாதிக்க, அதன் உறுப்பு நாடுகள் ஞாயிற்றுக்கிழமை கூடின. மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகள் இலக்கு வைக்கப்பட்டதாக ஜி.சி.சி கூறுகிறது. ஜி.சி.சி அமைப்பில் ஐக்கிய அரபு அமீரகம் , பஹ்ரைன், சௌதி அரேபியா, ஓமன், கத்தார் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகள் அனைத்தும் இரானின் தாக்குதல்களைக் கண்டித்ததுடன், இரான் தங்களது இறையாண்மையையும் சர்வதேச சட்டத்தையும் மீறுவதாகக் குற்றம் சாட்டின. ஒரு செய்திக் குறிப்பில், தாக்குதல்களை நிறுத்துமாறு இரானை வலியுறுத்தியதுடன், பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தையும் ஜி.சி.சி வலியுறுத்தியது. இருப்பினும், தங்களை தற்காத்துக் கொள்ள "தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்" எடுப்போம் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. இதற்கிடையில், அண்டை நாடுகளை இலக்கு வைத்ததாக கூறப்படுவதை இரானிய வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராக்சி மறுத்துள்ளார். "நாங்கள் பாரசீக வளைகுடா நாடுகளில் உள்ள எங்களது அண்டை நாடுகளைத் தாக்கவில்லை, அந்த நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ இருப்பையே நாங்கள் இலக்கு வைக்கிறோம். அண்டை நாடுகள் தங்கள் குறைகளை இந்தப் போரைத் தீர்மானித்தவர்களிடம் தெரிவிக்க வேண்டும்," என்று அவர் அல் ஜசீராவிடம் தெரிவித்தார். பாகிஸ்தான் இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி மறைவுக்குப் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தத் துயரமான நேரத்தில் பாகிஸ்தான் அரசாங்கமும் மக்களும் இரான் மக்களுடன் நிற்பதாக அவர் கூறினார். "இந்தத் துயரமான நேரத்தில் (பாகிஸ்தான்) அரசாங்கமும் மக்களும் இரானிய மக்களுடன் நிற்கிறோம். காமனெயியின் 'தியாகத்திற்கு' எங்களது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். "சர்வதேசச் சட்டத்தை மீறுவது குறித்து பாகிஸ்தான் கவலை தெரிவிக்கிறது. எந்தவொரு நாட்டின் தலைவரையும் இலக்கு வைக்கக் கூடாது என்பது நீண்ட காலமாகப் பின்பற்றப்படும் மரபு" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிபிசி உருது செய்தியின் படி, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்பும் இரான் மீதான சமீபத்திய தாக்குதல்களுக்கு "ஆழ்ந்த வருத்தத்தை" தெரிவித்ததுடன், அவை "மிகவும் வருந்தத்தக்கவை" என்றும் கூறியுள்ளார். "பாகிஸ்தான் இரானுக்கு அனைத்து வகையிலும் ராஜ்ஜீய மற்றும் தார்மீக ஆதரவை வழங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் இரான் மீதான தாக்குதலைப் பாகிஸ்தான் தெளிவாகக் கண்டித்துள்ளது" என்று கவாஜா ஆசிப் கூறியுள்ளார். சீனா இரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் உச்ச தலைவர் காமனெயி மறைவு குறித்து சீனா ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதனை "ஐ.நா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கு எதிரானது" என்று சீனா அதில் குறிப்பிட்டுள்ளது. "இரானின் உச்ச தலைவர் மீதான தாக்குதல் மற்றும் படுகொலை என்பது இரானின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை கடுமையாக மீறும் செயலாகும். இந்த நடவடிக்கை ஐ.நா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கும், சர்வதேச உறவுகளின் அடிப்படை நெறிமுறைகளுக்கும் எதிரானது. சீனா இதனை வன்மையாக எதிர்ப்பதுடன் கண்டிக்கிறது" என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமைதியைப் பேணுமாறும் சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது. "ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவும், பதற்றமான சூழலை மேலும் அதிகரிக்க வேண்டாம் என்றும், மத்திய கிழக்கு மற்றும் உலகம் முழுவதும் அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணுமாறும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்," என்றும் என்று சீனா தெரிவித்துள்ளது. ரஷ்யா இரான் உச்ச தலைவர் காமனெயி மறைவுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளதாக ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான டாஸ் தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் செய்தியின்படி, "அலி காமனெயி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் மரணம் 'மனித விழுமியங்கள் மற்றும் சர்வதேச சட்டத்திற்கு எதிரான கொலை'" என்று புதின் இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனிடம் கூறினார். "அரசியல் மற்றும் ராஜ்ஜீய தீர்வை நோக்கிய பாதைக்கு உடனடியாகத் திரும்ப வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்" என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தனது டெலிகிராம் சேனலில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்தப் பிராந்தியத்தை "மானுடவியல், பொருளாதார மற்றும் கதிரியக்கப் பேரழிவை நோக்கித் தள்ளுவதாக" ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு அமெரிக்கா - இரான் மோதலில் எந்த நாடு யார் பக்கம்?
-
தமிழர்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி நீதியமைச்சர் பதவி அழைப்பை நிராகரித்தேன்; ஒருபோதும் சுயதேவைகளின் அடிப்படையில் செயற்படவில்லை - சுமந்திரன்
தமிழர்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி நீதியமைச்சர் பதவி அழைப்பை நிராகரித்தேன் ; ஒருபோதும் சுயதேவைகளின் அடிப்படையில் செயற்படவில்லை - சுமந்திரன் 02 Mar, 2026 | 06:48 PM (நா.தனுஜா) அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் எனக்கு நீதியமைச்சர் பதவியை வழங்குவதாகக் கூறினார். நாங்கள் சுயதேவைகளைப் பூர்த்திசெய்ய விரும்புபவர்களாக இருந்திருந்தால், நான் அந்த அமைச்சுப்பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்டிருப்பேன். ஆனால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எமக்கென ஒரு சுயாட்சி அவசியம் என்ற தமிழ்மக்களின் அபிலாசைகளைப் பூர்த்திசெய்வது ஒன்றே எமது இலக்காக இருப்பதன் காரணமாகவே நான் அதனை நிராகரித்தேன் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியமும் லண்டன் மற்றும் இலங்கை தமிழ் இலக்கிய நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த மறைந்த மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் ஓராண்டு நினைவஞ்சலிக் கூட்டம் மற்றும் நூல் வெளியீட்டு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (1) கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: நானறிந்தவரை பாரதி மிகப்பண்பானவர். யாருடைய மனமும் நோகாதபடி நடந்துகொள்ளக்கூடியவர். நான் கூறியதாக ஏதேனும் செய்திகள் வரும்போது எல்லாம், என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, 'இப்படி ஒரு செய்தியைப் பார்த்தேன். நீங்கள் இவ்வாறு கூறினீர்களா?' எனக் கேட்பார். அவ்வாறு அவர் கேட்ட பல சந்தர்ப்பங்களில் எனது பதில் 'இல்லை' என்பதாகவே இருந்திருக்கிறது. எனவே ஒரு செய்தியைப் பிரசுரிப்பதற்கு முன்னர் அதன் உண்மைத்தன்மை பற்றி உரிய நபரிடமே கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளும் பண்பு அவரிடம் இருந்தது. அடுத்தது பொதுவாக அஞ்சலிக் கூட்டங்களில் நான் அரசியல் பேசுவதற்கு விரும்புவதில்லை. ஆனால் இங்கு எம்மை நோக்கி சில மோசமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டமையினால், அவற்றுக்குப் பதிலளிக்கவேண்டிய கடப்பாடு எனக்கு இருக்கிறது. அதாவது மலையக அரசியல் கட்சிகளும், முஸ்லிம் அரசியல் கட்சிகளும் ஒற்றுமையாக செயற்படுவதாகக்கூறி அவர்களுக்கு வெள்ளை அடிக்கப்பட்டதுடன் மாத்திரமன்றி, தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தமது சுயதேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்காக அரசாங்கத்துடன் இணைந்தும் இணையாமலும் செயற்படுவதாக மிக அபாண்டமான குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கும் மனோகணேசன் முன்னைய அரசாங்கத்தில் அமைச்சராகப் பதவி வகித்திருக்கிறார். ரவூப் ஹக்கீம் பல்வேறு அரசாங்கங்களில் அமைச்சராகப் பதவி வகித்திருக்கிறார். ஆனால் தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளான நாங்கள் எந்தவொரு அரசாங்கத்திலும் அமைச்சர்களாகப் பதவி வகித்ததில்லை. மாறாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எமக்கென ஒரு சுயாட்சி இருக்கவேண்டும் என்ற தமிழ்மக்களின் அபிலாசையில் நாம் எப்போதும் உறுதியாக நின்றிருக்கிறோம். தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் ஒருமித்த நிலைப்பாட்டிலேயே இருக்கிறோம். நாம் கடந்த காலங்களில் மக்கள் விடுதலை முன்னணியினருடன் சுமுகமான அறிமுகத்தைப் பேணியிருந்தாலும் அவர்களுக்கும் எமக்கும் இடையில் கொள்கை ரீதியிலான வேறுபாடுகள் உண்டு. குறிப்பாக ஆரம்பத்தில் இலங்கையில் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்ற நிலைப்பாட்டிலேயே மக்கள் விடுதலை முன்னணி இருந்தது. ஆனால் 1989 ஆம் ஆண்டு கட்சிக்குள் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பின் ஊடாக தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை இல்லை என மக்கள் விடுதலை முன்னணி தமது நிலைப்பாட்டை உத்தியோகபூர்வமாக மாற்றிக்கொண்டது. அதனைத்தொடர்ந்து அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் ஊடாகக் கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமையையும் கடுமையாக எதிர்த்தது. இன்று அக்கொள்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் தான் ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கிறார்கள். உண்மையைக் கூறவேண்டுமானால், அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் எனக்கு நீதியமைச்சர் பதவியை வழங்குவதாகக் கூறினார். நாங்கள் சுயதேவைகளைப் பூர்த்திசெய்ய விரும்புபவர்களாக இருந்திருந்தால், நான் அந்த அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்டிருப்பேன். ஆனால் தமிழ்மக்களின் அபிலாசைகளைப் பூர்த்திசெய்வது ஒன்றே எமது இலக்காக இருந்திருக்கிறது என்றார். தமிழர்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி நீதியமைச்சர் பதவி அழைப்பை நிராகரித்தேன்; ஒருபோதும் சுயதேவைகளின் அடிப்படையில் செயற்படவில்லை - சுமந்திரன்
-
ஏராளன் started following புதிய அரசியலமைப்பு : தமிழ் மக்களின் ஒருமுக தீர்மானம் அவசியம் - தமிழ் சட்டத்தரணிகள் பேரவை திறந்த கலந்துரையாடலுக்கு ஏற்பாடு , தமிழர்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி நீதியமைச்சர் பதவி அழைப்பை நிராகரித்தேன்; ஒருபோதும் சுயதேவைகளின் அடிப்படையில் செயற்படவில்லை - சுமந்திரன் , ஈரானுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக சீனா அறிவிப்பு and 2 others
-
தெற்கு ஈரானில் ஆரம்பப் பாடசாலை மீது இஸ்ரேல் தாக்குதல்: 40 மாணவிகள் பலி – பலர் காயம்
ஈரான் சிறுவர் பாடசாலை மீது நடாத்தப்பட்ட குண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை நூற்றுக்கு மேல் என சி.என்.என், பி.பி.சி யில் உள்ளது.
-
ஈரானுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக சீனா அறிவிப்பு
சும்மா கிளுகிளுப்பு சூடேற்றலுக்கு எழுதப்பட்ட செய்தி போல் உள்ளதே. இப்படியான ஒரு தகவல் இதுவரை மேற்கத்தைய ஊடகங்களில் வெளியானதாக தெரியவில்லை.
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
எனக்கு அறிமுகம் இல்லாத 86 வயது தாத்தா ஒருவர் ஈரானில் கொல்லப்பட்டு உள்ளார். தாத்தாவின் இறப்பை கொண்டாடுவது உங்கள் பிரச்சனை. இதற்கு ஒப்பாரி வைக்கும் அளவிற்கு நான் வெட்டியாக இல்லை.
-
ஈரானுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக சீனா அறிவிப்பு
ஈரானுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக சீனா அறிவிப்பு Mar 2, 2026 - 07:47 PM மத்திய கிழக்கில் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில். ஈரானுக்கு ஆதரவாக சீனா கருத்து வௌியிட்டுள்ளது. ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் தாம் முழுமையான ஆதரவை வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது. ஈரானிய வெளிவிவகார அமைச்சருடனான உயர்மட்டப் பேச்சுவார்த்தையின் போது, சீன வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிராந்தியத்தில் நிலவும் அசாதாரண நிலைமைகளுக்கு மத்தியில் ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீடுகளை நிராகரிப்பதாகவும், ஈரானின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் இராஜதந்திர ரீதியில் சீனா ஒத்துழைப்பு வழங்கும் என்றும் இந்தப் பேச்சுவார்த்தையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் ஈரானுடன் நீண்டகால நட்புறவைக் கொண்டுள்ள சீனா, தற்போதைய நெருக்கடியான கட்டத்தில் ஈரானுக்குப் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளமை சர்வதேச மட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நகர்வாகப் பார்க்கப்படுகிறது. ஈரானுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக சீனா அறிவிப்பு
-
மட்டு. கொண்டையங்கேணி தமிழர்களின் பூர்வீக கிராமத்தை முஸ்லிம் கிராமம் என பெயர் சூட்டி அபகரிக்க முயற்சி - பிரதேச சபை உறுப்பினர் தனபாலசிங்கம் நிர்மலன் கண்டனம்
மட்டு. கொண்டையங்கேணி தமிழர்களின் பூர்வீக கிராமத்தை முஸ்லிம் கிராமம் என பெயர் சூட்டி அபகரிக்க முயற்சி - பிரதேச சபை உறுப்பினர் தனபாலசிங்கம் நிர்மலன் கண்டனம் 02 Mar, 2026 | 06:46 PM தனித் தமிழ் மக்கள் வாழும் வாழைச்சேனை கொண்டையங்கேணி கிராமம் இன்று கொண்டயன்கேணி முஸ்லிம் கிராமம் என்று உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழர்களுடைய பூர்வீக கிராமங்களின் பெயர்களை தங்களுடைய கிராமங்கள் என தெரிவித்து எதிர்காலத்தில் இந்த கிராமத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள் என அபகரிப்பதற்காக செயற்படுகின்றனர். இதனை வன்மையாக கண்டிப்பதாக கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தனபாலசிங்கம் நிர்மலன் தெரிவித்தார். வாழைச்சேனை கிண்ணியடியில் உள்ள அவரது காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (1) நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த 26ஆம் திகதி நடைபெற்ற சபை அமர்வில் வாழைச்சேனை பிரதேச சபையின் வருமானத்தை அதிகரிப்பதற்காக வட்டார எல்லைகளின் எல்லை நிர்ணயத்தை அடையாளப்படுத்தும் பிரேரணை ஒன்று தவிசாளரால் கொண்டுவரப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த பிரதேசம் கடந்த காலத்தில் எல்லை நிர்ணய பிரச்சினை. ஒரு தீர்க்கப்படாத இந்த பிரச்சினைக்கு ஒரு முழுமையான தீர்வு காணப்படாமல் இந்த எல்லை நிர்ணயங்களை தங்களுக்கு தாங்களே தீர்க்கமாக தீர்மானித்து ஒரு வருமானத்தை நோக்கமாகக் கொண்டு எமது சமூகத்தின் எல்லையை பின்னுக்குத் தள்ளுகின்ற செயற்பாட்டை செய்யக் கூடாது என வலியுறுத்தினேன். அவர்கள் அதனை ஏற்றுக்கொள்வதாக இல்லை. கோறளைப்பற்று பிரதேசத்தில் 14 வட்டாரங்கள். இதில் 4 முஸ்லிம் வட்டாரங்கள், 10 வட்டாரங்களில் தமிழர்கள் வாழ்கின்றனர். இருந்தபோதும் 8 வட்டாரங்கள் முழுக்க முழுக்க தமிழர்கள் வாழ்கின்ற சூழல் இருக்கின்ற நிலையில் 2 வட்டாரங்கள் தமிழர்கள் முஸ்லிம்கள் எதேச்சையாக குடியேற்றப்பட்டு வாழந்து வருகின்ற வட்டாரங்களாகும். இதில் எங்களுக்கான ஒரு எல்லை நிர்ணயம் வகுக்கப்படாமல் பிரதேச சபையால் அவர்களாகவே எல்லை நிர்ணயங்களை தயாரித்து அதில் வருமானங்களை அதிகரிக்க வேண்டும் என்பது எதிர்காலத்திலே தமிழ் கிராமங்கள் சுருங்கிப் போகக்கூடிய அளவிற்கு ஆதாரங்களாக அமைந்துவிடும். எனவே வாழைச்சேனை வட்டாரம், கறுவாக்கேணி வட்டாரம் என்பது இரண்டு தமிழ் கிராமங்கள். இந்த கிராமங்களிலே தான் இந்த பிரச்சினைகள் இருக்கின்றன. கறுவாக்கேணி வட்டாரம் என்பது வாழைச்சேனை இலங்கை மின்சார சபையின் வீதியை ஒட்டியதாக அமைந்திருக்கிறது.South Asians & Diaspora ஆனால், அது அடையாளப்படுத்தப்பட்டபோது அதற்கு எதிராக குழப்பங்கள் எழுப்பப்பட்டபோது அவை அனைத்தும் இடை நடுவில் விடப்பட்டது. இந்த நிலையில் பிரதேச சபையின் நிர்வாகம் எதனூடாக கறுவாக்கேணி 10ஆம் வட்டாரத்தை பிரித்து, இது தான் கறுவாக்கேணி 10ஆம் வட்டாரம் என அறிவிக்கப்போகிறது என்பது சந்தேகத்துக்கு இடமாக உள்ளது. கோறளைப்பற்று பிரதேச சபை என்பது தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பிரதேச சபையாக இருந்தாலும் மக்களுக்கான ஒரு சரியான தீர்வுகளையும் முடிவுகளையும் எடுக்க முடியாமல் இருக்கும் ஒரு பிரதேச சபையாக இருக்கின்றது. இந்த கறுவாக்கேணி 10ஆம் வட்டாரத்தில் கிராம சேவகர் பிரிவு தனித்தமிழ் மக்களை சேர்ந்த பிரிவு. ஆனால், இதே கறுவாக்கேணி கிராம சேவகர் பிரிவுடன் உள்ள கொண்டையன்கேணி என்கின்ற கிராமம் இன்று கொண்டயன்கேணி முஸ்லிம் கிராமம் என உருவாக்கப்பட்டு கொண்டயன்கேணி கிராம அபிவிருத்தி சங்கம், மற்றும் பள்ளிவாசல், சனசமூக நிலையம் என அரசு சார்ந்த சங்கங்கள் அனைத்தும் கொண்டயங்கேணி முஸ்லிம் கிராமம் என உருவாக்கப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக கொண்டையன்கேணி கறுவாக்கேணி இணைந்து கறுவாக்கேணி கிராம சேவகர் பிரிவில் இயங்குகின்ற ஒரு கிராமம். இந்த கொண்டையங்கேணி என்று உருவாக்கப்பட்டுள்ள பெயர் மட்டும்தான் கொண்டையங்கேணி முஸ்லிம் என்று இருக்கின்றதே தவிர அவர்களுடைய அனைத்து நிர்வாக செயற்பாடுகள் ஓட்டுமாவடி பிரதேச செயலகத்திற்கு உள்ள செம்மண் ஓடை கிராம சேவகர் பிரிவுக்குள் நடைபெறுகின்றது. ஓட்டுமாவடி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள செம்மண் ஓடை கிராம சேவகர் பிரிவில் நிர்வாக நடவடிக்கையை மேற்கொள்ள முடியுமானால் ஏன் கொண்டையங்கேணி முஸ்லிம் கிராமம் என இந்த கிராமத்துக்கு பெயர் சூட்டவேண்டும். இது மிகவும் ஆபத்தான விடயம். தமிழர்கள் வாழ்ந்துவரும் பூர்வீக கிராமங்களின் பெயர்களை தங்களுடைய கிராமங்கள் இன்றி தெரிவித்து, எதிர்காலத்தில் இந்த கிராமத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள் என்ற ஆதாரத்தை காட்டுவதற்காக செயற்படுகின்றனர். இதனை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் கல்குடா தேர்தல் தொகுதி என்பது முஸ்லிம்களுடனும் தமிழர்களுடனும் ஒரு தேர்தல் நோக்கத்துக்கான தொகுதி. ஆனால், ஓட்டமாவடியில் இருந்து உருவாக்கப்படுகின்ற இந்த சங்கங்கள், அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள், வெளிநாடுகளில் இருந்து உருவாக்கப்படுகின்ற சங்கங்கள் எல்லாமே தங்களுடைய விலாசத்தை, அடையாளத்தை கல்குடா என்று பதிவு செய்து வருகின்றனர். இது ஏன் தேவை? இது இன்னொரு 20 வருடங்களுக்கு பின்னர் முஸ்லிம் சமூகத்தின் பிள்ளைகள் சொல்லும் இது முஸ்லிம்களின் பூர்வீக நிலம் என்பர். எனவே, கோறளைப்பற்று பிரதேசத்தில் எங்கள் சமூகம், மக்கள் சார்ந்து யாரும் பேசுவதில்லை. அரசியல் ரீதியாக பிரதேச சபைகளில் இருக்கின்ற அவர்கள் அனைவரும் வாய்மூடிகளாக தங்களுடைய அற்ப சொற்ப பிரதேச சபை ஆசனத்தை பாதுகாப்பதற்காக பேசாமல் இருக்கின்றனர் அல்லது பேசத் தெரியாமல் மடந்தையாக இருக்கின்றனர். நாங்கள் அப்படி இருக்க முடியாது. எனவே கல்குடா தொகுதிக்குள் இருக்கும் மக்களே உன்னிப்பாக சிந்திக்க வேண்டும். அதேவேளை பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்பது வாழைச்சேனை வட்டாரம், கறுவாக்கேணி வட்டாரம் ஆகிய இரண்டு வட்டாரம் என்பது பரிசீலனை செய்யப்பட்டு எல்லை நிர்ணயம் ஒழுங்காக செய்யப்பட்டதன் பின்னர் தான் பிரதேச சபைக்குரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேவேளை கல்குடா என்று அழைப்பது தொடர்பாக பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கவனத்துக்கு கொண்டுவந்து, இவ்வாறு இயங்குகின்ற அமைப்புக்களை தடைசெய்து, அவர்கள் அவர்களுடைய பிரதேசத்தில் அவர்களுடைய அமைப்புக்களை நடாத்துவதில் எந்தவித பிரச்சினையும் இதற்கு இல்லை. தீர்வுகளை பெற்றுத்தருமாறு கோரியுள்ளேன். அதேவேளை கல்குடா என இன்னொரு கிராம சேவகர் பிரிவை அடையாளப்படுத்தி அவர்களுடைய அடையாளம் என இனிவரும் காலங்களில் காட்டக்கூடாது. ஒரு இனத்தின் மொழியும் அடையாளமும் முகவரியும் எங்கு களவாடப்படுகிறதோ, அங்கே இந்த இனத்துக்கு எதிராக வன்முறையும் பயங்கரவாதமும் தோற்றுவிக்கப்படுகிறது என்றார். மட்டு. கொண்டையங்கேணி தமிழர்களின் பூர்வீக கிராமத்தை முஸ்லிம் கிராமம் என பெயர் சூட்டி அபகரிக்க முயற்சி - பிரதேச சபை உறுப்பினர் தனபாலசிங்கம் நிர்மலன் கண்டனம்
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 120 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 120 / பின் இணைப்பு - "புத்தரின் பண்புநலனுக்கும் அல்லது நடத்தைக்கும் இலங்கை நாளேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் அல்லது முரண்பாடுகள் " கொஞ்சம் விபரமாக அங்கு நடந்ததைப் பார்ப்போமானால்: 49. இந்தச் சூழ்நிலையை கருணையுடன் எண்ணிச் சிந்தித்த பெரிய வீரரான சம்புத்தர், ஜம்புதீபத்திலிருந்து வானில் எழுந்து இங்கு வந்தார். 50. யக்கர்கள் கூடிய அந்தக் கூட்டத்தின் மத்தியில், அவர்களின் தலைகளுக்கு மேல், புத்தர் தம் ஆசனத்தைக் கையிலே வைத்தபடி வானத்தில் நிலைத்து நின்றார். 51. அந்த இடத்தில் கூடியிருந்த இயக்கர்களின் கூட்டம், அவரை புத்தர் என எண்ணவில்லை; ஒருவேளை வேறொரு இயக்கன் என்று தான் அப்பொழுது நினைத்தார்கள். 52. மஹியா போக்லா என்ற இடத்திற்கு அருகில் உள்ள ஆற்றங் கரையில், சுபாங்கனா தூபா அமைந்த இடத்தில், அதாவது பிற்காலத்தில் மஹியங்கான ஸ்தூபம் அமைந்த புனித இடத்தில், மனிதர்களுள் சிறந்தவர் (புத்தர்), உயர்ந்த தியானத்தில் வானத்திலே நிலைத்து நின்றார். 54. அந்த மகத்தான வீரர், மாயாஜாலங்கள் நிகழ்த்தி, இயக்கன் போல வலிமைமிக்கவனாக, வான வெளியில் மேகக் கூடல்களை உருவாக்கி, மழை, குளிர்ந்த காற்று மற்றும் இருண்ட வானத்தை ஏற்படுத்தினார். 55. (பின் புத்தர் இயக்கர்களிடம் கூறினார்:) “எனக்கு தீயை அடக்கும் சக்தியும், அபாயங்களை நீக்கும் திறனும் உண்டு. இங்கே நான் உட்காருவதற்கு ஒர் இடம் கொடுங்கள். [இல்லையேல்] நான் உங்களுக்கு வெப்பத்தை அளிக்கப் போகிறேன்” என்றார். 56. [இயக்கர்கள் பதிலளித்தனர்]: “நீங்கள் தீய வெப்பத்தை நீக்க இயலுமானால், உங்களுக்கு விருப்பமான இடத்தில் உட்காருங்கள். நாங்கள் அனைவரும் ஒப்புக்கொள்கிறோம்; உங்கள் சக்தியை காண்பியுங்கள்.” என்றனர். 57. (புத்தர் பதில் அளித்தார்) : “நீங்கள் அனைவரும் வெப்பத்தை வேண்டுகிறீர்கள்; அதிகப்படியான வெப்பம், எரியும் தீ போன்ற வெப்பத்தை விரைவில் உண்டாக்குகிறேன்.” என்றார். 58. வெயிலான காலத்தில் மதிய நேரத்தில் சூரியன் போல, இயக்கர்களின் கூட்டத்தில் ஒரு கடுமையான வெப்பம் பரவியது. 59. ஒரு உலகம் அழியும் சமயத்தில், கல்பகால முடிவில் [பாலி மொழியில், "கப்பா" (က္ပ) என்பது சமஸ்கிருதத்தில் "கல்பம்" என்று மொழிபெயர்க்கப் படுகிறது, மேலும் இது பொதுவாக ஒரு நீண்ட காலத்தை, காலச் சுழற்சியை அல்லது உலகின் ஒரு யுகத்தைக் குறிக்கிறது.], நான்கு சூரியர்கள் வானத்தில் தோன்றி எரிக்கும் வெப்பத்தை விடவும், புத்தர் அமர்ந்த ஆசனத்தில் இருந்து வந்த வெப்பமும் ஒளியும் அதைவிட அதிகமாக இருந்தது. 63. அந்த வெப்பம் தீவுகளுக்கெல்லாம் பரவி, தாங்க முடியாததாகியது.இயக்கர்கள் பத்துத் திசைகளிலும்—கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, மேலே, கீழே என— எல்லா திசை நோக்கி அமைதிக்காக ஓடினார்கள். 66. ஆனால் அந்த மகா அனுபவசாலியான புத்தர் — முனிவர்களின் தலைவன், மகிழ்ச்சியை அளிப்பவரும், கருணையுள்ளவருமான அவர், இயக்கர்கள் துயரத்துடன் பயத்தில் குலைந்ததைப் பார்த்து, அவர்களது மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்த நினைத்தார். 67. [பின்னர் அவர் சிந்தித்தார்] — இதே போல் [இலங்கை போல்] காணப்படும், உயர்வும் தாழ்வுமாக மற்றும் அழகாக அமைந்த நதிகள், மலைகள், குளங்கள், காடுகள் கொண்ட, இலங்கையை முற்றிலும் ஒத்த, கிரி தீவு [the island of Giri] என்னும் மற்றொரு தீவை நினைத்தார் என்று அறிய முடிகிறது. புத்தரும் இயக்கர்களும் ஒரே மாதிரியாகத் தோன்றுவதால், இருவரும் ஒரே இனமாக, ஆகவே மனிதர்களாக இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது. பின்னர் புத்தர் பலத்த மழை, குளிர் காற்று, இருள் மற்றும் கடுமையான வெப்பம் போன்றவற்றை அனுப்பி இயக்கர்களைப் பயமுறுத்தினார். அப்படி என்றால், புத்தர் உலகின் முதல் பயங்கரவாதி என்று ஒருவர், இந்த சம்பவத்தை வைத்து இலகுவாக் கூறலாம்! அது உண்மை என்பது போல, இன்று இலங்கையின் வடக்கு கிழக்கில் அவரின் சிலைகள் அத்துமீறி அடாவடியாகத் தோன்றுவதைக் கூறலாம்? இறுதியில், கருணையுள்ள புத்தர், இயக்கர்களை வேறொரு தீவுக்கு, கிரிதீபாவுக்கு ஒருபோதும் திரும்பி வரக்கூடாது என்று ஓடச் செய்தார். தீபவம்சம் 1-78. இதற்கு உதாரணம். 76. புத்தர் தன் மாய சக்தியால், ஒரு கயிறு கொண்டு மாடுகளை இழுப்பது போல, அந்தத் தீவை தன் பக்கம் இழுத்தார். அவர் அந்த தீவுகளைக் [இலங்கை மற்றும் கிரி] கப்பல்களை ஒரு வலுவான கயிற்றால் இணைப்பது போல ஒன்றோடொன்று சேர்த்தார். 77. அழகான தீவை மற்றதுடன் இணைத்த பின்பு, "இனி எல்லா இயக்கர்களும் (அரக்கர்களும்) கிரிதீபத்தில் வாழட்டும்" என புத்தர் கூறினார். 78. வெயிலில் தாகம் அடைந்தவர்கள் நதியை நாடுவது போல, இயக்கர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கிரிதீபத்திற்குச் சென்றனர். அவர்கள் அனைவரும் மீண்டும் ஒருபோதும் திரும்பி வராமல் அதற்குள் நுழைந்தனர்; பின்னர் முனிவர் அந்த தீவை அதன் பழைய இடத்திற்கு மீண்டும் கொண்டு சென்றார் என்கிறது. கருணையும், இரக்கமுமாய் உயிர்களுக்கு நற்பயன் செய்வதையே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்ட மகா முனிவரை, இப்படிப் பட்ட கொடுமைகள் செய்வதாகச் சொல்லப்படும் படி, இத்தகைய அநாகரிக, குற்றமிக்க செயல்களை அவருக்கே ஒப்புவித்து, புனித புத்தரை அவமதித்துப் புகழிழப்பித்தது அந்த புத்த பிக்கு ஆசிரியர்களே! அவர்கள் செய்தது புத்தருக்க்கு உண்மையில் துரோகமே!! அத்தகைய பொய்க் கதைகளை இயற்றி, அதில் ஏதேதோ பெருமைகளை நிலை நாட்ட முயன்ற அந்தக் காப்பியக்காரர்களுக்கு இது உண்மையில் அவமானமும் வெட்கமுமே! புத்தர், தாழ்வான நிலமும், உயரமான நிலமும் கொண்ட, மற்றும் பல்வேறு அம்சங்களுடன், ஆறுகள், மலைகள் மற்றும் ஏரிகளால் அழகாக அலங்கரிக்கப்பட்ட, லங்கா [இலங்கை] நாட்டைப் போலவே, இலங்கைக்கு அருகில் இருந்த கிரி தீவைக் கண்டறிந்தபோது, அவர்களை [இயக்கர்களை] அந்தத் தீவுக்குத் துரத்துவதன் நோக்கம் தான் என்ன? இது ஒரு புத்தியுள்ள, பண்பாடு நிறைந்த நாகரிக மனிதனின் செயாலா?? கொஞ்சம் சிந்தியுங்கள்! அதற்குப் பதிலாக, கட்டாயம் அவர் [புத்தர்] அந்தத் தீவைத் தான் தேர்ந்தெடுத்திருப்பார், ஏனெனில் அது ஏற்கனவே அதே பகுதியில், முற்றிலும் இதே போன்ற நிலையில் காலியாக உள்ளது ?? Part: 120 / APPENDIX – "Conflict between buddha's characters and the events mentioned in Ceylon chronicles" [49. Having considered this matter, full of compassion, the great hero rose into the air and came hither from Jambudīpa. 50. In the midst of the assembly of Yakkhas, above their heads, he was seen, standing in the air, holding his seat (in his hands). 51. The assembled hosts of Yakkhas saw the Sambuddha standing there, but they did not think that he was the Buddha; they supposed him to be another Yakkha. 54. There the hero stood, performing miracles by his (magical) power, like a Yakkha of high (magical) power and great (supernatural) faculties; gathering (?) thick clouds, containing thousands of rain drops, he sent rain, cold winds, and darkness. 55. (He then spoke to the Yakkhas:) “I will send you heat; give unto me a place where I may sit down. I possess such power over the fire as will dispel these dangers.” 58. As the sun shines in summer at noon, so fearful heat penetrated the assembly of Yakkhas. 59. Like the heat spread by the four suns at the end of a Kappa, such and greater still was the glow sent forth by the seat of the Teacher. 63. It spread insupportable heat over the islands. The Yakkhas quickly fled in all ten directions, to the east, the west, the south, the north, above, and beneath. 66. And Buddha, the chief among Sages, the bringer of happiness, the compassionate, merciful great Sage, when he saw the afflicted, frightened Yakkhas, thought how to administer joy to the minds of these non-human beings. 67. (He) then (thought of) another island, similar to this, with low ground and high ground, with many various aspects, beautifully adorned by rivers, mountains, and lakes, the island of Giri, most similar to the country of Laṅkā.] Both, the Buddha and the Yakkhas, must have been humans to look similar. The Buddha then terrorized Yakkhas by sending heavy rain, cold wind, darkness and extreme heat etc. The first terrorist of the world, one may say! In the end, the merciful Buddha, made the Yakkhas run away to another island, Giridipa; never to return, Dipavamsa 1-78. [76. Gotama by his (magical) power drew the island towards himself, like the headstalls of bullocks which are drawn (towards the driver) with a strong rope. The Sage drew together one island towards the other, like two ships which are surrounded by stout ropes. 77. Having joined the beautiful island to the other, the Tathāgata transported (?) the Rakkhasas, (saying:) “May all Rakkhasas dwell in Giridīpa . . ” 78. The eager Yakkhas ran to Giridīpa, like thirsty people in summer to a river; they all entered it never to return; the Sage (then) restored the island to its former place.] What kind of merciful and compassionate Buddha was he to indulge in these cruelties? The monkish chroniclers betrayed the Buddha by ascribing these sorts of uncivilized and criminal acts to the Buddha, shame on them! When Buddha found another island, with low ground and high ground, with many various aspects, beautifully adorned by rivers, mountains, and lakes, the island of Giri, most similar to the country of Laṅkā, and also closed to Lanka, What is the purpose of chasing them to that said Island, Instead of that, He would have choose that said Island for his any purposes as It is already vacant with similar condition in same area ?? நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 121 தொடரும் / Will follow துளி/DROP: 2068 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 120 https://www.facebook.com/groups/978753388866632/posts/34085106881137856/?
-
கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” [பத்து பாகங்கள்]
கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” / பாகம் – 5 பாகம் – 5 / “முன்னேஸ்வரத்திற்கும் சிலுவைக்கும் இடையில் நிற்கும் சமந்தி [செந்தூரி]” முன்னேஸ்வரம் அன்று சிறப்பாக அலங்கரிக்கப்படவில்லை. அது ஒரு சாதாரண நாள். அதுதான் சமந்திக்கும் [செந்தூரிக்கும்] பிடித்திருந்தது. இங்கே, யாரும் யாரையும் சோதிக்கவில்லை. “நீ யார்?” என்று யாரும் கேட்கவில்லை, கடவுள் கூட கேட்கவில்லை. அன்று காலை, அவள் வாழ்க்கையில் முதல் முறையாக, தானாகவே கோவிலுக்கு வந்தாள். அவள் தன் தலைமுடியில் பூக்களை அணிந்தாளா? - இல்லை. அவள் புனித திருநீரைப் [விபூதி] பூசினாளா? - இல்லை. அவள் அங்கே தன்னை மதம் மாற்றிக்கொள்ள வரவில்லை. தன்னை மீட்டுக் கொள்ள வந்தாள். கற்பூர வாசனை அவள் மூச்சை அடைந்ததும், ஒரு நினைவு அவளுக்கு திரும்பியது. அது அவளுடைய பாட்டியின் குரல்: “நீ எதையாவது ஏற்றுக்கொண்டால், குழந்தாய், அது ஒருபோதும் பயத்தின் காரணமாக இருக்கக்கூடாது. [“If you accept something out of fear, then it is not truly yours.” / "நீங்கள் பயத்தால் எதையாவது ஏற்றுக்கொண்டால், அது உண்மையிலேயே உங்களுடையது அல்ல."]” அந்த நினைவு அவளுக்கு பலத்தைத் கொடுத்தது. சமந்தி [செந்தூரி] மூன்று அடிகள் முன்னோக்கி நகர்ந்தாள். சிவலிங்கம் பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் அது அவளை பணிவாக உணர வைத்தது. “எனக்கு என்ன வேண்டும்?” அவள் தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். தன்னை மாற்றுவதா இல்லை அமைதியாக்குவதா ? - இல்லை எது சொந்தமோ, அது உரிமை என்று மனம் கூறியது. அவள் தானாக [herself] இருக்க பயப்படாத இடம் ஒன்றில், அவள் சொந்தமாக இருக்க விரும்பினாள். சமந்தி முன்னேஸ்வரத்தில் இருக்கும் போது, அவளுடைய அம்மாவும் பாட்டியும் சிலாபத்தில் உள்ள தேவாலயத்தின் முன் நின்றனர். யாரோ ஒருவள் அவர்களிடம் சொன்னார்கள்: "உங்கள் சமந்தி மாறிவிட்டாள் என்று கேள்விப்பட்டேன்." அம்மா பதில் அளிக்கமுன், அவளுடைய பாட்டி சொன்னார்: "இல்லை. இப்போதுதான் அவள் அவளாகவே மாறிவிட்டாள்." முன்னேஸ்வரத்தில் பூசாரி சமந்தியை பார்க்கும் போது, ஒரு கணம் அவள் பின்னால் ஒரு வரலாறு நின்றது. - போர்த்துகீசிய காலனித்துவவாதிகள். - கட்டாய மதமாற்றங்கள். - வாள். - பைபிள். - பயம். ஆனால் இந்தக் கணத்தில் அவை எல்லாம் இல்லை. ஒரு பெண்ணின் மூச்சு மட்டுமே இருந்தது. அவள் விளக்கை ஏற்றவில்லை - அவள் சுடரை மட்டுமே பார்த்தாள். "வெளிச்சம் வெளியில் இருந்து வர வேண்டியதில்லை. அது உள் மனதில் இருந்து வரவேண்டும்" என்பதே அவளின் நம்பிக்கை அங்கேயே அவள் ஒரு சக்திவாய்ந்த செய்தியை ஆதனுக்கு அனுப்பினாள்: "மக்கள் மாறும் இடம் முன்னேஸ்வரம் அல்ல - நீங்கள் யார் என்பதைக் கண்டறியும் இடம் அது." இது அவளுடைய ஆன்மீக விழிப்புணர்வை ஆதனுக்கு வெளிப்படுத்தியது. ஆதன் அந்த குறும் செய்தியை மூன்று முறை படித்தான். அதன் கனத்தை அவன் ஆழமாக உணர்ந்தான். ஆனால் பதில் போடவில்லை. அவன் உடப்புக் கடலோரமாக, கடலுக்கு எதிரே அப்பொழுது நின்றான். மீனவர்கள் வலை உலர்த்திக் கொண்டிருந்தார்கள். ஒரு மீனவன் அவனிடம் கேட்டான்: “டீச்சர் சார், அந்தப் பெண் வேறு மதத்தைச் சேர்ந்தவரா?” ஆனால், ஆதனுக்கு எந்த குழப்பமோ தடுமாற்றமோ இல்லை. அவன் உடனடியாக, தெளிவாக பதிலளிதான்: “ஆம்.” அந்த மீனவன் மீண்டும் கேட்டான்: “அதனால் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை வராதா?” ஆதன் உறுதியாகக் கூறினான்: “பிரச்சனை வேறொரு மதம் அல்ல - உண்மையை மறைப்பதுதான் பிரச்சினை - அடையாளத்தை இழப்பதுதான் பிரச்சினை” என்றான். மருத்துவமனையில் மாலை நேரம், ஒரு சிங்கள நர்ஸ் சமந்தியிடம் கேட்டாள்: “நீங்க இந்து கோவிலுக்குப் போனதா கேள்விப்பட்டேன்.” சமந்தி புன்னகையுடன் “நான் என் வீட்டுக்குப் போனேன்.” என்று சொன்னாள். அவள் வெட்கப்படவில்லை. அவள் தன் உண்மையான பாரம்பரியத்தை ஏற்றுக் கொண்டாள் என்பதை மறைமுகமாகச் சொன்னாள். அன்று இரவு ஆதனும் சமந்தியும் முதன்முறையாக தொலைபேசியில் பேசினர். அது ஒரு நீண்ட உரையாடல் அல்ல. ஆனால் ஒரு வாக்கியம் மட்டுமே சமந்தி: “நான் தேர்வு செய்த காதல் என் அடையாளத்தை அழிக்கமாட்டுன்னு நம்புறேன்.” யாரையும் மகிழ்விக்க அவள் தன் மதத்தை / வேர்களை மாற்ற மாட்டாள் என்று அந்த ஒற்றை வார்த்தையில் திடமாக கூறினாள். ஆதன்: “அப்படிச் செய்தா அது காதல் அல்ல.” என்று அவனும் பதிலளித்தான். உண்மையான அன்பு நீங்கள் யார் என்பதை அழிக்க வேண்டும் என்று என்றும் கோருவதில்லை என்பதில் அவன் நம்பிக்கையுடன் இருந்தான். அந்த இரவில் சமந்தி கோவில் மற்றும் தேவாலயம் இந்து மற்றும் கிறிஸ்தவம் தமிழ் மற்றும் சிங்களம் கடந்த காலம் மற்றும் நிகழ்காலம் இவற்றின் இடையில் தன்னை மாட்டிக்கொள்ளவில்லை. தன்னுடனே [herself] நின்றாள். - அவளுடைய உண்மையான அடையாளம் இனி மறைக்கப்படுவதில்லை. அது அவள் ஏற்றுக்கொண்டு பெருமைப்படும் ஒன்றாக மாறுகிறது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] துளி/DROP: 2067 [கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” / பாகம் – 5 https://www.facebook.com/groups/978753388866632/posts/34084781131170431/?
-
தெற்கு ஈரானில் ஆரம்பப் பாடசாலை மீது இஸ்ரேல் தாக்குதல்: 40 மாணவிகள் பலி – பலர் காயம்
- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
- லெபனான் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல்
- இஸ்ரேல் - கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்
இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஈரான் தாக்குதல்? Mar 2, 2026 - 05:58 PM ஈரான் அணு ஆயுத தயாரிப்பை நிறுத்த வேண்டும், யுரேனியம் செறிவூட்டலை நிறுத்த வேண்டும், நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணை திட்டங்களை ரத்து செய்ய வேண்டும், மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் தனது கிளர்ச்சி படைகளின் செயல்பாட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்டிரம்ப் வலியுறுத்தினார். ஆனால் இதற்கான ஒப்பந்தத்தில் ஈரான் கையொப்பமிட மறுத்தது. இதுதொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே நடைபெற்ற 2 சுற்று பேச்சுவார்த்தைகளிலும் சுமுகமான உடன்பாடு ஏற்படவில்லை. அதைத் தொடர்ந்து, ஈரான் உடனடியாக ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் மோசமான பேரழிவைச் சந்திக்க நேரிடும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இராணுவத்தினர் இணைந்து ஈரான் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்பட பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஈரான் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். தெஹ்ரானில் உள்ள கமேனியின் இல்லம் தரைமட்டமாக்கப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்தார். இந்த தாக்குதலில் கமேனியின் மகள், மருமகன் மற்றும் பேரப்பிள்ளை ஆகியோரும் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. அலி கமேனி உயிரிழந்ததையடுத்து ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பஹ்ரைன், கட்டார், சவுதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தியது. அதே சமயம், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் தொடர்ந்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், டெல் அவிவ் நகரில் உள்ள இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது. அதே போல், இஸ்ரேல் விமானப்படை தளபதியின் இருப்பிடம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இந்த தாக்குதல்கள் கெய்பர் ஷேகான் பெலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் துல்லியமாக நடத்தப்பட்டதாகவும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை குறிப்பிட்டுள்ளது. ஆனால், தாக்குதல் நடத்தப்பட்ட சமயத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அவரது அலுவலகத்தில் இருந்தாரா? என்ற விவரம் தெரியவில்லை. இதனால் நெதன்யாகுவின் நிலை என்ன? அவர் உயிருடன் இருக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஈரான் தாக்குதல்?- ஈரானின் இடைக்கால உயர் தலைவராக அலிரேசா அராபி நியமனம்!
ஈரானின் இடைக்கால உயர் தலைவர் அலிரேசா அராஃபி வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டாரா? - அதிர்வூட்டும் சமூக ஊடக பதிவுகள் 02 Mar, 2026 | 05:12 PM ஈரானின் இடைக்கால உயர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அலிரேசா அராஃபி, தனது கடமையை பொறுப்பேற்று 24 மணிநேரம் நிறைவடைவதற்கு முன்னரே, வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக, சரிபார்க்கப்படாத சில சமூக ஊடகங்கள் வெளியிட்டு வரும் செய்திகள் வைரலாகி, சர்வதேச மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், அலிரேசா அராஃபி கொல்லப்பட்டதாக பரப்பப்பட்ட செய்தி, ஈரானிய அரசு ஊடகங்களாலோ சர்வதேச செய்தி நிறுவனங்களாலோ உறுதிப்படுத்தப்படவில்லை. ஈரானின் உயர் தலைவரான அலி காமேனி இஸ்ரேல் - அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து, அலிரேசா அராஃபி இடைக்கால உயர் தலைவராக நேற்று (1) நியமிக்கப்பட்டார். மேலும், அலிரேசா அராஃபி வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ரெடிட் மற்றும் பிற சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் செய்தி, தெஹ்ரானில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதோடு, சர்வதேசம் முழுவதும் உள்ள நாடுகளின் அரசாங்கங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல், லெபனான் முதலான நாடுகளில் இடம்பெற்று வரும் மோதல்கள், தாக்குதல்களுக்கு மத்தியில் வெளிக்கிளம்பியுள்ள, ஈரானின் இடைக்கால உயர் தலைவர் அலிரேசா அராஃபி தொடர்பான கூற்று, உறுதிப்படுத்தப்படாத நிலையில், அது, வதந்தியாகவே இருப்பதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. ஈரானின் இடைக்கால உயர் தலைவர் அலிரேசா அராஃபி வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டாரா? - அதிர்வூட்டும் சமூக ஊடக பதிவுகள்- லெபனான் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல்
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனானில் 31 பேர் பலி; 149 பேர் காயம் 02 Mar, 2026 | 01:56 PM லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 31 பேர் உயிரிழந்ததாகவும் 149 பேர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதனால் கோபமடைந்த இஸ்ரேல், ஹிஸ்புல்லா அமைப்பு செயற்பட்டு வரும் லெபனான் மீது பாரிய தாக்குதலை மேற்கொண்டது. ஹிஸ்புல்லாவின் ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாகவே லெபனான் முழுவதும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பை இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அலி காமேனி தூய இரத்தம் சிந்தியதற்கு பழிவாங்கும் விதமாகவும் லெபனான் மற்றும் அதன் மக்களை பாதுகாப்பதற்காகவும் மீண்டும் மீண்டும் தாக்குகின்ற இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களால் தாக்குதல் நடத்தி வருவதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனானில் 31 பேர் பலி; 149 பேர் காயம்- தெற்கு ஈரானில் ஆரம்பப் பாடசாலை மீது இஸ்ரேல் தாக்குதல்: 40 மாணவிகள் பலி – பலர் காயம்
ஈரானில் பெண்கள் பாடசாலை மீதான தாக்குதல் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 165ஆக உயர்வு 02 Mar, 2026 | 12:29 PM தெற்கு ஈரானில் உள்ள பெண்கள் ஆரம்பப் பாடசாலையின் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் உயிரிழந்த மாணவியரின் எண்ணிக்கை 165ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த தாக்குதலில் சிக்கி 96 பேர் காயமடைந்துள்ளதாக ஐ.ஆர்.என்.ஏ செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை (28) ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள மினாப் நகரில் அமைந்திருக்கும் இந்த பெண்கள் ஆரம்பப் பாடசாலையின் மீது சரமாரியாக வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. முதற்கட்ட விசாரணையின்போது 85 மாணவிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போதைய நிலைவரப்படி, இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பாடசாலை மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் “காட்டுமிராண்டித்தனமான செயல்” என ஈரான் ஜனாதிபதி கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஈரானில் பெண்கள் பாடசாலை மீதான தாக்குதல் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 165ஆக உயர்வு- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
உங்களுக்கு திருமணம் செய்யும் போது.... சாத்திரம், சாதகம், நல்ல நாள், வளர்பிறை, முகூர்த்தம் எல்லாம் பார்த்துத்தானே திருமணம் செய்தீர்கள். பிறகு என்னத்துக்கு... உங்களுக்கு ஒரு ஞாயம், மற்றவனுக்கு ஒரு ஞாயம். 😂- Today
- ஈரான் மீதான தாக்குதல் : அமெரிக்க மக்களிடையே கடும் எதிர்ப்பு
ஈரான் மீதான தாக்குதல் : அமெரிக்க மக்களிடையே கடும் எதிர்ப்பு 02 Mar, 2026 | 10:17 AM ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய பாரிய இராணுவத் தாக்குதலுக்கு அமெரிக்கப் பொதுமக்களிடையே மிகக் குறைந்த அளவிலான ஆதரவே கிடைத்துள்ளதாக அண்மைக்காலக் கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் மீதான தாக்குதலைத் தொடர்ந்து பிராந்திய ரீதியான பதிலடித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ரொய்ட்டர்ஸ்/இப்சோஸ் (Reuters/Ipsos) நடத்திய இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை (01) வெளியாகின. கருத்துக்கணிப்பின் முக்கிய அம்சங்கள் அமெரிக்கர்களில் நான்கில் ஒருவர் (25%) மட்டுமே இந்தத் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சுமார் 43 சதவீதம் பேர் இந்த இராணுவ நடவடிக்கையை எதிர்த்துள்ளனர். மேலும் 29 சதவீதம் பேர் இது குறித்து உறுதியான கருத்து தெரிவிக்கவில்லை. குடியரசுக் கட்சியினர்: 55% பேர் தாக்குதலுக்கு ஆதரவு அளித்துள்ளனர், 13% பேர் எதிர்த்துள்ளனர். ஜனநாயகக் கட்சியினர்: 74% பேர் இந்தத் தாக்குதலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்த இராணுவ நடவடிக்கையில் முதல்முறையாக மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே இந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இது குறித்துப் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், "அனைத்து நோக்கங்களும் நிறைவேறும் வரை இந்த நீதி மிக்க பணி தொடரும்" என்று உறுதிபடக் கூறினார். மேலும், "மோதல் முடிவதற்குள் இன்னும் பல உயிரிழப்புகள் ஏற்படக்கூடும்" என்றும் அவர் எச்சரித்தார். ஈரானின் ஆன்மிகத் தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதையடுத்து, ஈரான் நாகரிகத்திற்கு எதிரான போரைத் தொடுத்துள்ளதாக டிரம்ப் குற்றம் சாட்டினார். இருப்பினும், அமெரிக்கப் பொதுமக்கள் ஈரானை ஒரு நேரடி அச்சுறுத்தலாகக் கருதவில்லை என்பதை இந்தக் கருத்துக்கணிப்பு உணர்த்துகிறது. எரிபொருள் விலை அதிகரித்தால் இந்தத் தாக்குதலுக்கான ஆதரவு மேலும் குறையும் என 45% பேர் தெரிவித்துள்ளனர். "முடிவில்லாப் போர்களை நிறுத்துவேன்" என்ற டிரம்ப்பின் தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளதால், அவரது MAGA (Make America Great Again) ஆதரவாளர்களிடையேயும் அதிருப்தி ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஜனநாயகக் கட்சியினர் இந்தத் தாக்குதலைக் கடுமையாகச் சாடி வருகின்றனர். "டிரம்ப் போரைத் தவிர்ப்பதாகக் கூறினார். ஆனால் இது அவராகத் தேடிக்கொண்ட போர்" என்று செனட்டர் கிறிஸ் வான் ஹோலன் பதிவிட்டுள்ளார். இந்த இராணுவ நடவடிக்கைக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைக் கோரும் "யுத்த அதிகாரத் தீர்மானம்" (War Powers Resolution) மீதான வாக்கெடுப்பு இந்த வார தொடக்கத்தில் நடைபெறவுள்ளது. ஈரான் மீதான தாக்குதல் : அமெரிக்க மக்களிடையே கடும் எதிர்ப்பு- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
குவைத்தில் அமெரிக்க விமானங்கள் வீழ்த்தப்பட்டமைக்கு இதுவா காரணம்! Mar 2, 2026 - 05:39 PM ஈரானுக்கு எதிரான 'Operation Epic Fury' இராணுவ நடவடிக்கையின் போது, அமெரிக்காவின் மூன்று F-15 போர் விமானங்கள் நட்புமுறைத் தாக்குதல் காரணமாக வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் அறிவித்துள்ளது. ஈரானிய விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களின் தாக்குதல்கள் ஒருபுறம் தீவிரமாக நடந்துகொண்டிருந்த வேளையில், குவைத் வான் பாதுகாப்புப் படையினர் தவறுதலாக அமெரிக்கப் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியுள்ளனர். விமானங்களில் இருந்த 6 பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேறியதுடன், அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு தற்போது சீரான உடல்நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை குவைத் ஒப்புக்கொண்டுள்ளது. தற்போதைய இராணுவ நடவடிக்கையில் குவைத் பாதுகாப்புப் படைகள் வழங்கி வரும் ஆதரவிற்கும் முயற்சிகளுக்கும் அமெரிக்கா தனது நன்றியைத் தெரிவித்துள்ளது. குறித்த விபத்துக்கான பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. குவைத்தில் அமெரிக்க விமானங்கள் வீழ்த்தப்பட்டமைக்கு இதுவா காரணம்!- பாட்டாளி வர்க்கத்தின் அதிகாரத்தை வென்றெடுப்போம்; முன்னிலை சோசலிச கட்சியின் 4 ஆவது தேசிய மாநாட்டில் அறைகூவல்
அமெரிக்காவின் கொடூரமான அதிகாரப் போட்டிக்கு எதிராகக் குரல் கொடுக்க ஐக்கிய நாடுகள் சபைக்கு முதுகெலும்பு இல்லை - முன்னிலை சோசலிசக் கட்சி மாநாட்டில் குமார் குணரத்தினம் குற்றச்சாட்டு Published By: Vishnu 02 Mar, 2026 | 04:12 AM (க.சிவலிங்கமூர்த்தி) உலக நாடுகளை தற்போது அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கியுள்ள அமெரிக்காவின் கொடூரமான அதிகாரப் போட்டிக்கு எதிராகக் குரல் கொடுக்க ஐக்கிய நாடுகள் சபைக்கு முதுகெலும்பு இல்லை எனவும் அவர்கள் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் எனவும் முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரத்னம் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். "வர்க்கத்திற்கு அதிகாரம் - அதிகாரத்திற்கு கட்சி" எனும் தொனிப்பொருளில் முன்னிலை சோசலிசக் கட்சியின் நான்காவது தேசிய மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது இதில் தலைமையுரை ஆற்றும் போதே குமார் குணரத்தினம் இவ்வாறு தெரிவித்துள்ளார். Beaches & Islands அங்கு அவர் தனது உரையில் மேலும் கூறுகையில்; இன்று இந்நாட்டை ஆட்சி செய்யும் ஜே.வி.பி தலைமையிலான அரசாங்கம் தமக்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகளை மிக மோசமான முறையில் மீறி வருகின்றது. வரலாற்றில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த ஒரு கட்சி இன்று அதிகாரத்திற்கு வந்தவுடன் அதனை விடவும் பாரதூரமான பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபு எனும் அடக்குமுறைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முனைகின்றது. இலவசக் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக நின்றவர்கள் இன்று சர்வதேச நாணய நிதியத்தின் நவ தாராளவாதக் கொள்கைகளை எவ்வித தயக்கமுமின்றி அமுல்படுத்தத் தொடங்கியுள்ளனர். அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்தியா மற்றும் அமெரிக்காவிடம் மண்டியிட்டுள்ளது மாத்திரமன்றி மோடி மற்றும் ட்ரம்ப் போன்றோரின் பொருளாதார மற்றும் அரசியல் தேவைகளுக்காக முழு நாட்டையும் மக்களையும் காட்டிக்கொடுத்துள்ளது. அமெரிக்கா தனது பொருளாதார ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் வெறியில் மத்திய கிழக்கைத் தாக்கி வருகின்றது. இஸ்ரேல் எனும் பொம்மை அரசை முன்னிறுத்தி காசா பகுதியில் பெரும் இனப்படுகொலை முன்னெடுக்கப்பட்டது. வெனிசுலாவின் ஜனாதிபதி கடத்தப்பட்டமை மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் கனிம வளங்களைக் குறிவைத்துள்ளமை என அமெரிக்கப் பேரரசுவாதம் தனது மனிதாபிமானமற்ற முகத்தைக் காட்டி நிற்கின்றது.Politics மத்திய கிழக்கில் நடக்கும் போர்களுக்குப் பின்னால் அமெரிக்க மூலதனத்தின் தேவைகளே ஒளிந்துள்ளன. உலகத் தொழிலாளர் வர்க்கத்தைச் சுரண்டி இலாபம் ஈட்டிய பெரு மூலதன உரிமையாளர்கள் இன்று அதிகார போதையில் உள்ளனர். அமெரிக்காவின் இந்த பேரரசுவாத அதிகார வெறிக்கு எதிராக எமக்குள்ள ஒரே மாற்று வழி சோசலிசம் மாத்திரமேயாகும். சர்வதேச ரீதியிலான பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் மூலமே இதனைத் தோற்கடிக்க முடியும். கியூபா இன்றும் மனிதாபிமானத்தின் அடையாளமாகத் திகழ்கின்றது. உலகில் சிறந்த கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்பைக் கொண்டுள்ள கியூபா கொரோனா காலப்பகுதியில் பல நாடுகளுக்கு இலவச மருத்துவ உதவிகளை வழங்கியது. பேரரசுவாத இருளுக்கு மத்தியில் கியூபா இன்றும் சிவப்புக்கொடியை ஏந்தி மனிதாபிமானத்தை உலகிற்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றது. மாறி மாறி இந்நாட்டை ஆட்சி செய்த அரசியல் கட்சிகள் அனைத்தும் இன்று சிதைந்து போயுள்ளன. அந்தச் சிதைவுகளுக்குள் இனியும் மாற்றத்தைத் தேடுவது முட்டாள்தனமானது. ஜே.வி.பி அரசாங்கம் இன்று திருடர்களைப் பாதுகாக்கும் கொள்கையைப் பின்பற்றி வருகின்றது. இந்தியாவின் தேவைக்காக இந்நாட்டின் நிலங்கள் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை விற்பனை செய்ய இந்த அரசாங்கம் திட்டமிடுகின்றது. எனவே முகங்களை மாற்றுவதால் அல்லது கட்சிகளை மாற்றுவதால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காது. உழைக்கும் வர்க்கத்தினர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதே ஒரே தீர்வாகும். பேரரசுவாதம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு எதிராக ஒரு மக்கள் சக்தியைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு இந்நாட்டின் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம் என்றார். அமெரிக்காவின் கொடூரமான அதிகாரப் போட்டிக்கு எதிராகக் குரல் கொடுக்க ஐக்கிய நாடுகள் சபைக்கு முதுகெலும்பு இல்லை- புதிய அரசியலமைப்பு : தமிழ் மக்களின் ஒருமுக தீர்மானம் அவசியம் - தமிழ் சட்டத்தரணிகள் பேரவை திறந்த கலந்துரையாடலுக்கு ஏற்பாடு
புதிய அரசியலமைப்பு : தமிழ் மக்களின் ஒருமுக தீர்மானம் அவசியம் - தமிழ் சட்டத்தரணிகள் பேரவை திறந்த கலந்துரையாடலுக்கு ஏற்பாடு 02 Mar, 2026 | 10:16 AM அண்மைக்காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வடக்கு–கிழக்கில் தமிழ்தேசிய கட்சிகள் சந்தித்த பின்னடைவை கருத்தில் கொண்டு, மேலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருவதை அவதானித்தும், தமிழ் மக்களின் ஒருமுகப்படுத்தப்பட்ட அரசியல் தீர்மானம் காலத்தின் அவசியமாகியுள்ளது என வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்தேசியத்தை பலவீனப்படுத்தக்கூடிய அக மற்றும் புறச் சூழல்கள் பலமடைவதையும், கடந்த காலங்களில் அரசியல் தீர்வு தொடர்பில் பொதுநிலைப்பாட்டை எடுப்பதில் ஏற்பட்ட பின்னடைவுகளையும் அதன் அனுபவங்களையும் கருத்தில் கொண்டு, தமிழ் மக்களை ஒருமுக தீர்மானத்தை நோக்கி நகர்த்த வேண்டிய தேவை எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், பாராளுமன்றத்தில் தமிழ்தேசியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள், தமிழ்தேசிய அரசியல் கட்சிகள், தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள், பொதுமக்கள் மற்றும் தமிழ்தேசிய பரப்பில் செயற்படும் பொது அமைப்புக்கள் ஆகியவை ஒன்றிணைந்து, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் மற்றும் எதிர்காலத் தீர்மானங்கள் குறித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில், புதிய அரசியலமைப்பு தொடர்பில் தமிழ்க்கட்சிகளின் பொதுநிலைப்பாடு, நீண்டகால அரசியல் எண்ணக்கோட்பாடுகள் மற்றும் தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக தமிழ் சட்டத்தரணிகள் பேரவை திறந்த கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்தேசிய கட்சிகளின் தலைவர்களுக்கு இந்த கலந்துரையாடலுக்கான உத்தியோகபூர்வ அழைப்பை தமிழ் சட்டத்தரணிகள் பேரவை விடுத்துள்ளது. இந்தக் கலந்துரையாடல், இன்று திங்கட்கிழமை ( 02.03.2026 ) பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள துவாரகா வரவேற்பு மண்டபத்தில் ( Dwaraka Restaurant Reception Hall, Bambalapitiya) பிற்பகல் 3.00 மணி முதல் 5.00 மணி வரை இடம்பெறவுள்ளது. தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பான ஒருமித்த நிலைப்பாட்டை உருவாக்கும் நோக்கில் நடைபெறும் இந்த கலந்துரையாடல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. புதிய அரசியலமைப்பு : தமிழ் மக்களின் ஒருமுக தீர்மானம் அவசியம் - தமிழ் சட்டத்தரணிகள் பேரவை திறந்த கலந்துரையாடலுக்கு ஏற்பாடு- லெபனான் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல்
ஹிஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர் மீது இஸ்ரேல் தாக்குதல் Mar 2, 2026 - 03:15 PM பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவரை இலக்கு வைத்து துல்லியமான தாக்குதலை நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளன. ஹிஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர் மீது இஸ்ரேல் தாக்குதல்- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
2009 இல் முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரில் இலங்கைக்கான ஈரானின் பங்கு மிகப் பெரியது. 2006 இல் ஆரம்பித்த கொடிய இனவழிப்பு யுத்தத்தை 2009.மே.18 இல் இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களை இனவழிப்பு செய்து முடித்து வைத்தார்கள். ஈரான், இலங்கை அரசிற்கு ஆதரவு கொடுத்து எம்மை அழித்ததோடு, வழங்கிய ஆயுதங்கள் தமிழர்களின் உயிர்களைக் குடித்தது. எம் மண்ணில் எங்களைக் கொன்று குவித்து மகிழ்ச்சி அடைந்தவர்கள், எங்களை அழிக்க அனைத்து வகையிலும் உதவியவர்கள், எம்மை ஒன்றாக சேர்ந்து அழித்தவர்கள் இப்போ தமக்குள்ளே மோதி அழிந்து கொண்டிருக்கின்றார்கள். அரசு அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும். நாங்களும் இப்படித்தான் கதறினோம். மறந்து போவதற்கு அது ஒன்றும் ஒருநாள் வலியல்ல. சர்வதேச நீதிமன்றம், ஐ. நா சபை வழங்க மறுத்த நீதியினை இன்று கர்மா வழங்கிக்கொண்டிருக்கின்றது. பல வல்லரசுகளுடன் தனித்து போராடினார்கள் விடுதலைப் புலிகள். எங்கள் மாவீரச் செல்வங்களின் கண்ணீரும் எம் தமிழ் மக்களின் சாபமும் ஒருபோதும் எம் இனத்தை கொன்றவர்களை சும்மா விடாது. நம்ம யாழ்ப்பாணம்- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதல்வர் @Ahasthiyan க்கு வாழ்த்துக்கள். - ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.