Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. அய்யய்யய்யா ........வசுந்தராதேவி (வைஜந்திமாலாவின் தாயார் ) & ரஞ்சன் (முன்பு எம் . ஜி . ஆர் ருக்கு போட்டியாய் இருந்தவர்)......! 😍
  3. 'நாடு திறந்தவெளி சிறையாக மாறும்' - இலங்கையில் புதிய சட்ட வரைவுக்கு எதிர்ப்பு ஏன்? பட மூலாதாரம்,UGC கட்டுரை தகவல் ஆர்.யசிஹரன் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் இலங்கையின் வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய மற்றும் அடக்குமுறைச் சட்டமாகக் கருதப்படும் 1979-ஆம் ஆண்டின் 48-ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (பிடிஏ) முழுமையாக நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக "பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்'' (பிஎஸ்டிஏ) எனும் புதிய சட்ட மூலத்தை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தற்போது தயார் செய்துள்ளது. எனினும், இந்த புதிய வரைவு பழைய சட்டத்தை விடவும் அதிக அடக்குமுறைத் தன்மைகளைக் கொண்டிருப்பதாக சிவில் சமூக அமைப்புகளும் அரசியல் பிரதிநிதிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வாக்குறுதி மீறப்படுகிறதா? இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தனது தேர்தல் பரப்புரைகளின் போது 'அடக்குமுறைச் சட்டங்களை ஒழிப்போம்' என உறுதியளித்திருந்தது. இந்நிலையில், புதிய சட்ட மூலம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள 'அனைவருக்கும் நீதி' என்ற சிவில் சமூகக் கூட்டமைப்பு, அரசாங்கம் தனது வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளது. பேராசிரியர் ஜயதேவ உயாங்கொட, கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன உள்ளிட்ட மூத்த புத்திஜீவிகள் கையெழுத்திட்டுள்ள அந்த அறிக்கையில், "இப்புதிய சட்டம் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்குப் பதிலாக ஒடுக்குமுறையையே சட்டப்பூர்வமாக்குகிறது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'அனைவருக்கும் நீதி' அமைப்பு புதிய சட்டமூலத்தில் பிரதான சிக்கல்களாக சிலவற்றை சுட்டிக்காட்டியுள்ளது. ''பரந்த வரையறை: பயங்கரவாதம் என்பதற்கான வரைவிலக்கணம் மிகவும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது அரசாங்கத்திற்கு எதிரான அமைதியான போராட்டங்களைக் கூட 'பயங்கரவாதம்' என முத்திரை குத்த வழிவகுக்கும். கைது செய்யும் அதிகாரம்: பழைய பிடிஏ சட்டத்தில் கைது செய்ய உயர் அதிகாரிகள் அனுமதி தேவைப்பட்டது. ஆனால் புதிய சட்டத்தில் பொலிஸார் மட்டுமன்றி, ராணுவம் மற்றும் கடலோர பாதுகாப்புப் படையினருக்கும் கைது செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நிர்வாகத் தடுப்புக்காவல்: குற்றப்பத்திரிகை இன்றி ஒரு நபரை இரண்டு ஆண்டுகள் வரை தடுத்து வைக்க இது வழிசெய்கிறது நிறைவேற்று அதிகார விரிவாக்கம்: ஜனாதிபதியினால் அமைப்புகளைத் தடை செய்யவும், அவசரகால சட்டத்தை அறிவிக்கவும், பாதுகாப்புச் செயலாளர் சில இடங்களை 'தடைசெய்யப்பட்ட இடமாக' அறிவிக்கவும் மேலுயர் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேற்கண்ட 4 விஷயங்கள் புதிய சட்ட வரைவில் சிக்கல்களாக இருப்பதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,UGC படக்குறிப்பு,ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பதில் முகாமைத்துவப் பணிப்பாளர் பாவோலா பம்பலோனி ஐரோப்பிய ஒன்றியத்தின் கேள்வி இந்நிலையில் இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு கொழும்பில், இலங்கை கூட்டு ஆணைக்குழுவுடன் நடத்திய சந்திப்பின் போது, அரசாங்கத்தின் இந்தத் திடீர் நிலைப்பாட்டு மாற்றம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளமையானது சர்வதேச ரீதியில் பேசுபொருளாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பதில் முகாமைத்துவப் பணிப்பாளர் பாவோலா பம்பலோனி, "பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (பிடிஏ) நீக்க வேண்டும் என முன்னர் உறுதியாக இருந்த தேசிய மக்கள் சக்தியினர், இப்போது ஏன் அதற்கு நேரெதிரான சட்டத்தைக் கொண்டு வருகிறார்கள்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்குப் பதிலளித்த தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், "முதலில் எதிர்க்கட்சியில் இருந்தவர்கள், இப்போது அரசாங்கத்தில் இருக்கிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம். ஆனால் இப்போதும் பாதுகாப்புத் தரப்பின் வசமே முழுமையான கட்டுப்பாடு இருக்கிறது என்பதையே இது வெளிப்படுத்துகிறது," எனத் தெரிவித்துள்ளார். 'தந்திரோபாயமான ஏமாற்று வேலை' புதிய சட்ட வரைவின் பின்னணியில் ஒரு அரசியல் தந்திரம் ஒளிந்திருப்பதாவும் எம்.ஏ. சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். "பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (பிடிஏ) விட மிக மோசமான ஒரு சட்டத்தை அரசாங்கம் முன்மொழியும். அதற்கு எதிராக மக்கள் போராடுவார்கள். பின்னர் அரசாங்கம் அந்த புதிய வரைவை வாபஸ் பெறும். ஆனால், உண்மையில் பழைய பிடிஏ சட்டம் தொடர்ந்து அமலிலேயே இருக்கும். இதுவே இந்த புதிய வரைவு முன்மொழியப்பட்டதன் உண்மையான உள்நோக்கமாகும்," என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் பல தசாப்தங்களாக அமலில் இருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் (பிடிஏ) பதிலாக, "பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்'' (பிஎஸ்டிஏ) என்ற புதிய சட்டமூலத்தை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. எனினும், இது 'பழைய வீணையில் புதிய ராகம்' என சிவில் சமூக அமைப்புகளும் அரசியல் பிரதிநிதிகளும் கடுமையாக எச்சரித்துள்ளனர். "பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்'' குறித்து தமது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்த சிவில் மற்றும் அரசியல் பிரதிநிதிகள், அரசாங்கம் மக்கள் கருத்துக்கு கொடுத்துள்ள காலக்கெடுவான பிப்ரவரி 28ஆம் திகதி வரையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அதேபோல் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதற்கும், புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவை வாபஸ் பெறுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் இணைந்து நாடளாவிய ரீதியில் பல்வேறு கலந்துரையாடல்களையும், விழிப்புணர்வூட்டல் கூட்டங்களையும், எதிர்ப்புப் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். 'செயற்பட முடியாமல் இருப்பது கவலைக்குரியது' பட மூலாதாரம்,Facebook/shanakiyan rasamanickam படக்குறிப்பு,இரா.சாணக்கியன் இந்நிலையில், கொழும்பில் நடைபெற்ற எதிர்ப்புப் போராட்டத்தின் போது கருத்து வெளியிட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சாணக்கியன், "2023-ஆம் ஆண்டில் இதேபோன்ற ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டபோது, தற்போது அமைச்சர்களாக இருக்கும் வசந்த சமரசிங்க, நளிந்த ஜயதிஸ்ஸ, சுனில் ஹந்துனெத்தி ஆகியோர் அதற்கு எதிராகக் கையெழுத்திட்டனர். ஆனால் இன்று அதே நபர்கள் அமைச்சரவையில் இருக்கும்போது, மிக மோசமான சட்ட வரைவு கொண்டுவரப்படுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது." என்று அவர் தெரிவித்தார். மேலும், "நீதித்துறை அனுபவம் வாய்ந்த அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோர் இந்த விடயத்தில் மௌனமாக இருப்பது அல்லது செயற்பட முடியாமல் இருப்பது கவலைக்குரியது." என்றும் அவர் குறிப்பிட்டார். படக்குறிப்பு,அருட்தந்தை சக்திவேல் 'நாடு ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக மாறும்' சிவில் சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் இந்தப் புதிய சட்ட மூலத்தை 'அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு கவசம்' என விமர்சித்தார். வட கிழக்கில் மாத்திரமன்றி தற்போது தெற்கிலும் எழுந்துள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து அரசாங்கத்தைக் காப்பாற்றவே இந்தச் சட்டம் பயன்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். "இச்சட்டத்தின் ஊடாக மதவழிபாட்டுத் தலங்கள், போராட்டங்கள் மற்றும் கருத்து வெளிப்பாடுகள் என அனைத்தும் பயங்கரவாதமாகச் சித்திரிக்கப்படும். இளைஞர்கள், அரசியல் ஆர்வலர்கள் என யாருக்குமே எதிர்காலம் இல்லாமல் போய்விடும். இறுதியில் நாடு ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக மாறும்," என அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,UGC இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான அம்பிகா சற்குணநாதன், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளைச் சந்தித்து இப்புதிய சட்ட வரைவின் உள்ளடக்கம் குறித்து பேசியுள்ளார். போதைப்பொருள் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் புதிய சட்டமூலங்கள் மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கலாம் என்று அவர் கூறுகிறார். "சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை அவற்றின் கொள்ளளவை விடப் பன்மடங்கு உயர்வாகக் காணப்படுவதால் கைதிகள் பெரும் பாதிப்புகளைச் சந்திக்கின்றனர். மரணதண்டனை வழங்கலை முடிவுக்குக் கொண்டுவருவதாக அரசாங்கங்கள் அளித்த வாக்குறுதி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை," என்றும் குறிப்பிட்டார் அவர். படக்குறிப்பு,சிவில் சமூக செயற்பாட்டாரான அம்பிகா சற்குணநாதன் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராகப் போராடி வரும் குமுதினி சாமுவேல், தனது 70 வயதிலும் அதே போராட்டக்களத்தில் நிற்க வேண்டி இருப்பதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார். 1979 இல் 'தற்காலிக ஏற்பாடாக' கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம், எவ்வாறு வலிந்து காணாமலாக்கப்படுதலுக்கும், குடும்பங்களின் சிதைவுக்கும் காரணமாக அமைந்தது என்பது அனைவரும் அறிந்ததே என்கிறார் அவர். ஐரோப்பிய ஒன்றியத்தின் அழுத்தம் கொழும்பில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 27-வது கூட்டத்தில், இலங்கைக்கான வரிச்சலுகை ஒப்பந்தங்கள் குறித்து தீவிரமாக ஆராயப்பட்டது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார சேவைப்பிரிவின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பதில் முகாமைத்துவப்பணிப்பாளர் பாவோலா பம்பலோனி ஆகியோரின் இணைத்தலைமையில் கடந்த வியாழக்கிழமை இந்த சந்திப்பு நடைபெற்றது. அதில் ஜிஎஸ்பி+ வரிச்சலுகையின் கீழ் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை உரிய காலப்பகுதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என இலங்கையிடம் வலியுறுத்தப்பட்டது. முக்கியமாக, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை சர்வதேச மனித உரிமை நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 'பொதுமக்கள் கருத்துக்களுக்கு மதிப்பளிப்போம்' பட மூலாதாரம்,Facebook/Harshana Nanayakkara படக்குறிப்பு,நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இந்தப் பின்னணியில், புதிய சட்டமூலம் குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் தொடர்பாக பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, புதிய சட்டம் தொடர்பான ஆலோசனைகளை ஆராய அரசாங்கம் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார். "இந்த விவகாரத்தில் முதலில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அதற்காகவே இம்மாதம் 28ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் ஆலோசனைகளை சாதகமாகப் பரிசீலித்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். மிகவும் வலுவான மற்றும் பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையிலான சட்டத்தையே அரசாங்கம் நடைமுறைப்படுத்தும்," என அவர் தெரிவித்தார். மேலும், இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சர்வதேச தரப்புக்கும் அரசாங்கம் உரிய விளக்கங்களை அளித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். தரவுகள் கூறுவது என்ன? நீண்டகாலத் தடுப்புக்காவல்: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (HRCSL) தரவுகளின்படி, 2018ஆம் ஆண்டு நிலவரப்படி, சுமார் 29 கைதிகள் 5 முதல் 10 ஆண்டுகள் வரையும், 11 கைதிகள் 10 முதல் 15 ஆண்டுகள் வரையும் எந்தவித விசாரணையுமின்றி தடுப்புக்காவலில் வைக்கப்படிருந்தனர். சித்திரவதை புகார்கள்: ஐநா மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கைகள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகத் தெரிவிக்கின்றன. அண்மைக்கால கைதுகள்: 2024ஆம் ஆண்டு முழுவதும் 38 கைதுகள் இடம்பெற்ற நிலையில், 2025ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் 49 கைதுகள் இந்தச் சட்டத்தின் கீழ் பதிவாகியுள்ளதாக ஐநா மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது இந்தச் சட்டத்தின் பயன்பாடு குறையவில்லை என்பதைக் காட்டுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czx4kllp7g9o
  4. வணக்கம் வாத்தியார் . ....! இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் குழு : யூ யூ யூ யூ ராக் இட் பேபி ராக் இட் பேபி யூ யூ யூ யூ ராக் இட் பேபி ராக் இட் பேபி ஆண் : ஓ பியாரி பாணி பூரி பம்பாய் நாரி நீதான் எந்தன் நக்மா நக்மா நக்மா சில்வெஸ்ட்டர் ஸ்டால்லோன் போலே அப்பன்காரன் கூட வந்தா தகுமா தகுமா தகுமா ஆண் : சைனீஸ் நூடுல்ஸ் நீதான் டோமேடோ சாசும் நான் தான் இது பாஸ்ட் புட் காலம் அடி வேஸ்ட் வெட்கம் நாணம் நாணம் ஆண் : நடு ரோட்டுல பாட்டி ஒருத்தி லிப்டுன்னு கேட்டா டோன்ட் மிஸ் அவ வீட்டுல பேத்தி ஒருத்தி அழகா இருப்பா டோன்ட் மிஸ் ஆண் : உன்ன பாத்ததும் தேங்க்ஸ்னு சொல்லி காபி கொடுப்பா டோன்ட் மிஸ் அவ நெஞ்சுல அரவிந்த்சாமியா உன்ன நெனைப்பா டோன்ட் மிஸ் ஆண் : விஸ்கி பீரு மத்தவன் காசுல வாங்கி கொடுத்தா குழு : டோன்ட் மிஸ் ஆண் : வேல வெட்டி ஏதும் இல்லாமல் சோறு கிடச்சா குழு : டோன்ட் மிஸ் ஆண் : எக்ஸாம் எக்ஸாம் வந்தா எஸ்கேப் பண்ணாத மாமா பேப்பர் பார்த்தோ பிட் அடிச்சோ பாஸ் பண்ணம்மா குழு : ஹூவா ஹூவா ஹூவ்வல்லா ஹூவா ஹூவா ஹூவா ஹூவ்வல்லா ஹூவா ஆண் : கம் ஆன் கிவிட் இட் அப்பு கம் ஆன் கிவிட் இட் அப்பு கம் ஆன் கம் ஆன் கிவிட் இட் அப்பு ஆண் : வாட்ச்மேனா லேடீஸ் ஹாஸ்டல்ல வேல கெடச்சா டோன்ட் மிஸ் சேல்ஸ்மேனா நாயுடு ஹால்ல சேர சொன்னாக்க டோன்ட் மிஸ் ஆண் : ப்ளௌஸ் தைக்கிற லேடீஸ் டைலெரின் சிநேகம் கெடச்சா டோன்ட் மிஸ் ஸ்டெபி கிராப்பு டென்னிஸ் மேட்ச்சில எகிரி குதிச்சா டோன்ட் மிஸ் ஆண் : டாடி போட்ட புல் ஹான்ட் சர்ட்டுல சில்லர இருந்தா குழு : டோன்ட் மிஸ் ஆண் : டாடி ஊதும் சிகெரட் பாக்கெட்ல மிச்சம் இருந்தா குழு : டோன்ட் மிஸ் ஆண் : அப்பாக்கள் செய்யாத தப்பா தாத்தாக்கள் சிந்தாத ஜொள்ளா வாலிபத்தில் ரைட்டும் இல்ல ராங்கும் இல்லம்மா… ஆண் : சைனீஸ் நூடுல்ஸ் நீதான் டோமேடோ சாசும் நான் தான் இது பாஸ்ட் புட் காலம் அடி வேஸ்ட் வெட்கம் நாணம் நாணம் ......! --- ஓ பியாரி பாணி பூரி ---
  5. நாளையான் மூன்று போட்டியும் பெரிய‌ ம‌லைக‌ளுட‌ன் சின்ன‌ அணிக‌ள்.....................
  6. தமிழக இடைக்கால வேளாண் பட்ஜெட் 2026: முக்கிய அம்சங்கள் என்னென்ன? சென்னை: தமிழக அரசின் 2026-27 இடைக்கால வேளாண் பட்ஜெட்டை இன்று (பிப்.17) சட்டப்பேரவையில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்: > தென்னை விவசாயத்தை ஊக்குவிக்க 53 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. 21 லட்சம் பழச்செடிச் தொகுப்புகள் பயனாளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன. > நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தில் 900 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு 70,000 விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. > நெல் சாகுபடிப் பரப்பை அதிகரிக்க குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டம் ரூ.5.482 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு 19.51 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். > 2021-22 முதல் 2024-25 ஆம் ஆண்டு வரை, இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்குதல் திட்டம் மூலம் 456 பட்டதாரி இளைஞர்கள் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ஊக்குவிக்கப்பட்டு, அவர்களுக்கு ரூ.4.56 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. > தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் 2023-24-ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டுத் திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், இதுவரை 12.84 லட்சம் விவசாயிகள் ரூ.178 கோடி நிதியில் பயனடைந்துள்ளனர். 20 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் சிறுதானியப் பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. > தேசிய அளவில், தமிழ்நாடு கேழ்வரகு உற்பத்தித் திறனில் முதல் இடம், கேழ்வரகு உற்பத்தியில் இரண்டாம் இடம், குறுதானியங்கள் உற்பத்தியில் ஐந்தாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது. > கம்பு சாகுபடிப் பரப்பு 113 லட்சம் ஏக்கரிலிருந்து 133 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது. > வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 77,499 வேளாண் இயந்திரங்கள், கருவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. 1,320 வேளாண் இயந்திர வாடகை மையங்களும் நிறுவப்பட்டன. இதற்கென மானியமாக மொத்தம் ரூ.783 கோடி வழங்கப்பட்டது. > 4,150 சூரிய சக்தி பம்புசெட்டுகள் நிறுவப்பட்டு ரூ.83 கோடி மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5,954 புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகளும் ரூ.7.67 கோடி மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன. > கடந்த ஐந்து ஆண்டுகளில், இதுவரை சுமார் 2 லட்சம் புதிய இலவச மின்சார இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. > கடந்த 5 ஆண்டுகளில், தோட்டக்கலைத் துறை மூலம் 68 லட்சம் பனை விதைகள், 1 லட்சத்து 28 ஆயிரம் பனங்கன்றுகள் விநியோகம், 354 பனை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடங்கள் ஆகிய செயல்படுத்தப்பட்டன. > சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.156/-ம், சாதாரண ரகங்களுக்கு ரூ.131/-ம் ஊக்கத்தொகையாக வழங்கி அவற்றின் கொள்முதல் விலை முறையே ரூ.2,545 மற்றும் ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. > 5 ஆண்டுகளில் இதுவரை 186 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.2,118 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. > பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் 5 ஆண்டுகளில் 184 லட்சம் ஏக்கர் பரப்பு, சுமார் 80 லட்சம் விவசாயிகளால் காப்பீடு செய்யப்பட்டது. இத்திட்டத்தில், மகசூல் இழப்பிற்கு 38 லட்சம் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் ரூ.6,063 கோடி வழங்கப்பட்டுள்ளது. > தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில், இயற்கைப் பேரிடர்களால் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் 16.20 லட்சம் ஹெக்டரில் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு ரூ.2.045 கோடி நிவாரணமாக வழங்கப்பட்டது. இதனால் 25.36 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். > நாகப்பட்டினம். சிவகங்கை, கரூர் மாவட்டங்களில் மூன்று அரசு வேளாண் கல்லூரிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு தோட்டக்கலைக்கல்லூரி புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. > கடந்த ஐந்து ஆண்டுகளில், 101 புதிய பயிர் ரகங்கள், 21 வேளாண் நுட்பங்கள், 16 புதிய பண்ணைக் கருவிகள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. > வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு 2021-ஆம் ஆண்டில் 74 சதவீதமாக இருந்த இளங்கலை மொத்த மாணவர் சேர்க்கை 2025-ஆம் ஆண்டில் 97 சதவீதமாக உயர்ந்துள்ளது. > கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை 83 இலட்சத்து 64 ஆயிரம் விவசாயிகளுக்கு 69.457 கோடி ரூபாய் பயிர்க்கடனும், 16 இலட்சத்து 9 ஆயிரம் நபர்களுக்கு 8,938 கோடி ரூபாய் கால்நடை வளர்ப்பு. மீன் வளர்ப்பு உள்ளிட்ட வேளாண் சார்ந்த நடவடிக்கைகளுக்கான கடனும் வழங்கப்பட்டுள்ளன. > உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் இதுவரை, 6.47 இலட்சம் பயனாளிகளுக்கு கல்வி, திருமணம், விபத்து நிவாரணம், மரணம் போன்றவற்றிற்கு உதவித்தொகையாக ரூ. 819 கோடி வழங்கப்பட்டுள்ளது. > 2011-12 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024-25 ஆம் ஆண்டில் வேளாண்மையில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 9.97 சதவீதம் உயர்ந்துள்ளது. > 2011-12ஆம் ஆண்டில், 53,75,639 லட்சம் ரூபாயாக இருந்த மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 2024-25 ஆம் ஆண்டில், 59,11,708 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. > 2021-22 ஆம் ஆண்டில், வரவு செலவுத்திட்டத்தில் ரூ.34,220 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு, 2025-26 ஆம் ஆண்டில், ரூ.45,661 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. > 2026-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில், வேளாண்மை உழவர்நலத் துறைக்கு 47,248.24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. https://www.hindutamil.in/news/tamilnadu/tamil-nadu-interim-budget-2026-for-agriculture-highlights
  7. பனையால் விழுந்தவன் மழை வெள்ளத்தில் அடிபட்டும் போகின்றான்................ அவனை ஓமானும் ஓடிப் போய் அடிப்பதா.................🤣.
  8. நியூஸிலாந்துக்கு எதிராக ரி20 உலகக் கிண்ண சதம் குவித்து வரலாற்றுச் சாதனை படைத்தார் கனேடிய வீரர் யுவ்ராஜ் 17 Feb, 2026 | 04:40 PM (நெவில் அன்தனி) சென்னை சேப்பாக்கம் எம்.எஸ். சிதம்பரம் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான ஐசிசி ரி20 உலகக் கிண்ண டி குழு போட்டியில் கனடாவின் 19 வயதுடைய யுவ்ராஜ் சம்ரா அபார சதம் குவித்து சாதனை படைத்தார். ரி20 உலகக் கிண்ணப் போட்டி வரலாற்றில் ஐசிசி பூரண அந்தஸ்துபெற்ற நாடொன்றுக்கு எதிராக சதம் குவித்த முதலாவது இணை அங்கத்துவ நாட்டைச் சேர்ந்த வீரர் என்ற சாதனையை யுவ்ராஜ் இன்று நிலைநாட்டினார். மேலும் ரி20 உலகக் கிண்ண வராற்றில் கிறிஸ் கேல் (2), சுரேஷ் ரெய்னா, மஹேல ஜயவர்தன, ப்றெண்டன் மெக்கலம், அலெக்ஸ் ஹேல்ஸ், அஹ்மத் ஷெஹ்ஸாத், தமிம் இக்பால், ஜொஸ் பட்லர், ரைலி ரூசொவ், க்லென் பிலிப்ஸ், பெத்தும் நிஸ்ஸன்க ஆகியோரைத் தொடர்ந்து சதம் குவித்த 12ஆவது வீரர் யுவ்ராஜ் சம்ரா ஆவார். எனினும் உலகத் தரம்வாய்ந்த பந்துவீச்சாளர்கள் கனேடிய அணியில் இல்லாததால் அப் போட்டியில் நியூஸிலாந்து 8 விக்கெட்களால் வெற்றியீட்டியது. இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றது. பூரண அந்தஸ்து நாடொன்றுக்கு எதிராக சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளிலும் ரி20 உலகக் கிண்ணப் போட்டியிலும் கனடா பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும். யுவ்ராஜ் சம்ரா, அனுபவம் வாய்ந்த வீரரைப் போன்று மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அணித் தலைவர் டில்ப்ரீத் பஜ்வாவுடன் 116 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தார். ரி20 உலகக் கிண்ணத்தில் சகல விக்கெட்களுக்குமான கனடாவின் அதிசிறந்த இணைப்பாட்டம் இதுவாகும். யுவ்ராஜ் சம்ரா 65 பந்துகளை எதிர்கொண்டு 11 பவண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 110 ஓட்டங்களைக் குவித்தார். டில்ப்ரீட் பஜ்வா 36 ஓட்டங்களைப் பெற்றார். அவர்களைவிட நவ்னீத் தாலிவல் 10 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ஜேக்கப் டஃபி (25 - 1 விக்.), மெட் ஹென்றி (28 - 1 விக்.) ஆகிய இருவரே ஒரளவு கட்டுப்பாட்டுடன் பந்துவீசினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 15.1 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 176 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. நியூஸிலாந்துக்கு ஆரம்பத்தில் சவால் விடுத்த கனடா பந்துவீச்சாளர்கள் அதன் முதல் இரண்டு விக்கெட்ளை 30 ஓட்டங்களுக்கு வீழ்த்தினர். ஆனால், க்லென் பிலிப்ஸ் (36 பந்துகளில் 4 பவுண்டறிகள், 6 சிக்ஸ்கள் உட்பட 76 ஓட்டங்கள்), ரச்சின் ரவிந்த்ரா (39 பந்துகளில் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 59 ஓட்டங்கள்) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 72 பந்துகளில் 146 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்தின் வெற்றயை இலகுவாக்கினர். ஆட்டநாயகன்: க்லென் பிலிப்ஸ் https://www.virakesari.lk/article/238877
  9. இன்னும் மூன்று அணிகள்தான் ஒரு போட்டியிலும் வெல்லவில்லை. ஓமான், கனடா, நமீபியா. ஓமான் அவுஸ்ரேலியாவுக்கு அடிப்பதன் மூலமும் கனடா ஆப்கானிஸ்தானுக்கு அடிப்பதன் மூலமும் நமீபியா பாகிஸ்தானுக்கு அடிப்பதன் மூலமும் அந்தக் குறைகளை நிவர்த்தி செய்யலாம். அது நடக்குமா. நடந்திடுமா.
  10. வங்கதேச பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்பு! விழாவில் ஓம் பிர்லா பங்கேற்பு டாக்கா: வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவரான தாரிக் ரஹ்மான், அந்நாட்டின் பிரதமராக இன்று பதவியேற்றார். அதிபர் முகம்மது ஷகாபுதின் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். வங்கதேச நாடாளுமன்றத்துக்கு கடந்த 12-ம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 297 இடங்களில் 209 இடங்களை வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) கைப்பற்றியது. மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிக இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, அதன் தலைவரான தாரிக் ரஹ்மான் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து இன்று அவர் பிரதமராக பதவியேற்றார். வங்கதேச நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் வங்கதேச அதிபர் முகம்மது ஷகாபுதின் அவருக்குப் பதிவிப் பிரமாணம் செய்து வைத்தார். தாரிக் ரஹ்மானுடன் 25 அமைச்சர்களும், 24 இணை அமைச்சர்களும் பதவியேற்றனர். அமைச்சர்களாக பதவியேற்ற 25 பேரில், தாரிக் ரஹ்மான் உட்பட 17 பேர் புதிதாக பதவியேற்றனர். பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்காக டாக்கா சென்ற இந்திய குழுவினரை, வங்கதேச வெளியுறவுச் செயலாளர் நஸ்ரூல் இஸ்லாம் வரவேற்றார். இது ஒரு முக்கியமான தருணம் என குறிப்பிட்ட ஓம் பிர்லா, இரு நாட்டு மக்களுடனான உறவுகளை வலுப்படுத்தும் என்றார். மேலும், இந்தியாவும் வங்கதேசமும் ஜனநாயக விழுமியங்களை பகிர்ந்து கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார். தாரிக் ரஹ்மான் வெற்றி பெற்றதை அடுத்து அவரை முதலில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர். அப்போது, பதவியேற்புக்குப் பிறகு சவுகரியமான ஒரு தருணத்தில் இந்தியாவுக்கு வருமாறு தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதன் தொடர்ச்சியாக, தாரிக் ரஹ்மானின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு வங்கதேச அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும், இந்தியாவில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதால் அவருக்குப் பதிலாக ஓம் பிர்லாவை அனுப்பிவைத்தார். பதவியேற்பு விழாவை முன்னிட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. காவல்துறை, அதிபருக்கான காவல் படை, எஸ்எஸ்எஃப் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். https://www.hindutamil.in/news/world/tarique-rahman-takes-oath-as-bangladesh-pm
  11. நேபால் அணி 7 விக்கட்டுகளால் வெற்றி ........! 😂
  12. எங்களுக்கு முட்டைகள் கிடைத்தாலும் எதிரணியை வாழ்த்தும் அந்த மனது தான் கடவுள், பையன் சார்......................🤣. நல்ல ஒரு போட்டி...............👍.
  13. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 107 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 107 / பின் இணைப்பு – இராசவலியவின் சுருக்கம் பக்கம் 23 இல் தேவநம்பியதீசனின் ஆட்சிக் காலத்தில், உச்ச அதிகாரத்தை அடைந்த தர்ம அசோகர், ஜம்புத் தீவின் [இந்தியாவின்] ஒரே பேரரசராக ஆட்சி செய்தார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இது சோழர்கள், பாண்டியர்கள், சத்தியபுத்திரர்கள் மற்றும் கேரளபுத்திரர்கள் [Cholas, Pandyas, Satiyaputras and Keralaputras] அண்டை வீட்டாராகவும் அசோக இராச்சியத்தில் இருந்து சுயாதீனமாகவும் இருப்பதாகக் கூறும் அசோகரின் பாறை ஆணைகள் 2 மற்றும் 13 உடன் முரண்படுகிறது. பக்கம் 23 இன் கீழே ஒரு கூற்று உள்ளது: அவர் [இது மகிந்த தேரரை அல்லது புனித போதி மரக் கிளையை இலங்கைக்கு கொண்டு போவதற்கு ஈடுபட்ட ஒருவரைக் குறிக்கலாம்?] ஜம்புத் தீவில் (பண்டைய இந்தியா) இருந்தபோது, புத்தர் தனது முதுகை சாய்ந்து வைத்திருந்த அந்த புனித போதி மரத்தின் வலது கிளையில் தங்க பென்சிலைப் பயன்படுத்தி குங்குமப்பூவால் குறி வைத்தார். பின்னர் அவர் அந்தக் கிளையை இலங்கைக்கு வருமாறு வேண்டுகோள் விடுத்தார். அதிசயமாக, அந்தக் கிளை ஒரு வாளால் வெட்டப்பட்டது போல, நேர்த்தியாக மரத்திலிருந்து பிரிந்தது, வானத்தில் உயர்ந்து, இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியால், காற்றின் வழியாக இலங்கைக்குச் சென்றது. அந்தக் கிளை முந்தைய மூன்று புத்தர்களின் போதி மரங்கள்? ஒரு காலத்தில் நின்ற இடத்திற்கு வந்து சேர்ந்தது. அது காற்றில் மிதந்து, பின்னர் கவனமாக ஒரு தங்கப் பானையில் வைக்கப்பட்டு அந்த இடத்தில் நடப்பட்டது. என்றாலும் தேரி சங்கமித்தாவால் அந்தப் போதி மரக்கிளை இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டதாக மற்ற இரண்டு நாளாகமங்களிலும் கூறப்பட்டத்திற்கு இது முற்றிலும் மாறுபட்டது. மேலும் மகாவம்சம், 18 - 39 இல் இருந்து 42 இன் படி தேரி சங்கமித்தா இடது கிளையைக் கொண்டு வந்தார் என்பது உறுதியாகிறது. - வழிபட்ட பின்பு, மும்முறை வலம் வந்தான். எட்டு இடங்களில் கைகூப்பி வணங்கினன். பிறகு தங்கத் தொட்டியை ஒரு ஆசனத்தில் வைக்கச் சொன்னன். அந்த ஆசனம் தங்கம் வைத்து இழைத்தது. பலவித ரத்தினங்கள் பதிப்பிக்கப் பெற்றது. ஏறுவதற்கு எளிதாக அமைந்தது. கிளையின் உயரத்துக்குச் சரியாகப் புனிதமான அக்கிளை யைப் பெற்றுக் கொள்வதற்காக ஏறி, அரசன் நின்று கொண்டான். தங்கப் பிடி போட்ட செந்தூரத் துண்டினால் கிளையைச் சுற்றி ஒரு கோடு கிழித்தான். பின் பவித்திரமான இப்பிரகடனத்தைச் செய்தான்: போதி விருட்சம் இங்கிருந்து இலங்கைக்குப் போவது எவ்வளவு உண்மையோ, புத்த மார்க்கத்தில் உறுதி குலையாமல் நான் இருப்பேன் என்பது எந்த அளவு உண்மையோ, "அதைப் போல் இந்தப் போதி மரத்தின் தென் புறக்கிளை தானாகத் துண்டுபட்டு இத் தொட்டியில் இடம் பெறுவதாக." பிறகு மகாபோதி மரக்கிளை கோடு கிழித்த இடத்தில் தானாகத் துண்டுபட்டது. மணம் நிரம்பிய மண் உள்ள தொட்டிக்கு மேலே மிதந்தது. முதலில் வரைந்த கோட்டுக்கு மேலே மூன்று விரற்கடைக்கு மேல். சுற்றிலும் பத்து கோடுகள் கிழித்தான் அரசன். முதற் கோட்டிலிருந்து பத்து ஆணி வேர்கள் தோன்றின. பின்னல் கீரப்பட்ட கோடுகள் ஒவ்வொன்றிலிருந்தும் பத்துக் கிளைவேர்கள் தோன்றி வலைபோல் பின்னிக்கொண்டன. இந்த அதிசயத்தைக் கண்ட மன்னன் மகிழ்ச்சிப் பெருக்கில் கத்திவிட்டான். அவனுடன் இருந்தவர்களும் பெரு மகிழ்வடைந்தனர். பிக்குகள் களிப்பினால் துள்ளிய இதயத்துடன் எம்பெருமானை வணங்கினர். இவ் வாறாக நூறு வேர்களுடன் மகா போதி மரம் தொட்டியிலிருந்த நறுமண மண்ணில், மக்களுக்கு நம்பிக்கை ஏற்படச்செய்து, ஊன்றிக் கொண்டது. - ஆனால் இராசவலியத்தின் படி வலது கிளை இலங்கைக்கு பறந்து சென்றது. என்ன ஒரு முரண்பாடு! இவைதான், சங்கமித்தா ஒரு கண்டு பிடிக்கப்பட்ட கதாபாத்திரம் என்பதற்கான காரணங்களில் ஒன்றாகிறது. சங்கமித்தா, மகிந்தா பற்றி ஏற்கனவே விரிவாக ஆராயப்பட்டுள்ளது. தேவநம்பியதீசனின் இரண்டாவது சகோதரர் மனா [king Mana], மற்ற இரண்டு நாளேடுகளிலும் மகாநாகன் [King Mahanaga] இவன் ஆவான் , மற்றும் தேவநம்பியதீசனின் மனைவி, மனாவை விஷம் வைத்து கொல்ல முயன்றார். இதனால், பின்னர் மனா பாதுகாப்பாக இருக்க, உருகுணைக்குச் [Ruhuna] சென்று தனது சொந்த இராச்சியத்தை நிறுவி மாகாமம் [Magama] நகரத்தை கட்டினார். பாரம்பரியமாக அரியணை மன்னனிடம் இருந்து மூத்த மகனுக்குச் செல்வதால் இந்தக் கதை மிகவும் சந்தேகத்திற்குரியது? எனவே, இந்த பாரம்பரிய முறை, தலைமுறை தலைமுறையாக நிலைத்து இருப்பதால், அதன் மூலம் அரியணை தனது மகனுக்கு உறுதி செய்யப்படுவதால், ராணி இங்கு கவலைப்பட வேண்டிய அவசியம் இருந்து இருக்காது. பின்னர் எல்லாளனைக் கொல்ல 'துட்டகாமினி' என்ற கதாபாத்திரம் உருவாக்ககப்பட்டது. துட்டகாமினி ஒரு கண்டு பிடிக்கப்பட்ட கதாபாத்திரம். இதைப்பற்றி ஏற்கனவே ஆராயப்பட்டுள்ளது. மனாவின் மகன், மன்னன் யதல தீசன் [Yatalatissa], களனி நகரத்தைக் கட்டி அங்கு ஆட்சி செய்தான். பின்னர், யதல தீசனின் மகன் கோதபயா [Gothabhaya], தெற்கில் ஒரு முக்கியமான நகரமான மாகாமவின் [Magama] மன்னனானான். கோதபயாவின் மகன் கவன் தீசன் [Kavantissa], மாகாமவின் அடுத்த மன்னரானான். (அவன் பிரபலமான மன்னன் துட்டகாமினியின் தந்தை ஆகும்) அதேபோல, கெலனி தீசன் [Kelanitissa] களனியில் ஆட்சி செய்தான் (ஒரு புத்த துறவி கொல்லப்பட்டது தொடர்பான ஒரு சோகக் கதைக்கு இவன் ஆளாகியதுடன், இது ஒரு பெரிய வெள்ளத்திற்கும் வழிவகுத்தது, இந்த கதையும் முன்பு விரிவாக ஆராயப்பட்டுள்ளது). எனவே, மனா, யதல தீசன், கோதபயா மற்றும் கவன் தீசன் ... ஆகியோர் இலங்கைக்குள் வெவ்வேறு பகுதிகளின் ஆட்சியாளர்களாக இருந்தனர் என்றாலும், அனுராதபுரத்திலிருந்து ஆட்சி செய்யவில்லை என்பதால், அவர்கள் மன்னர்களின் முக்கிய பட்டியலில் இலங்கையின் அதிகாரப்பூர்வ ஆட்சியாளர்களாக இங்கு பட்டியலிடப்படவில்லை. Part: 107 / APPENDIX – "Summary of Rajavaliya" It is stated in the page 23 that Dharmasoka was the sole emperor of Jambudvipa (India) which is in conflict with the Rock Edicts 2 and 13 of Asoka which say Cholas, Pandyas, Satiyaputras and Keralaputras are neighbours and independent of the kingdom of Asoka. There is a statement at the bottom of the page 23: ’He also, when in Jamvudvipa, had marked with a gold pencil vermilion on the right branch of the sacred Bo tree, against which Buddha had leant his back; and having requested it to pass over to Lanka it severed itself as if cut by a saw, ascended to the sky, descended to this island of Lanka by supernatural power’. This is in sharp contrast with the narrative given in the other two chronicles in which that Bo branch was brought to Lanka by Theri Samghamitta. Theri Samghamitta brought the left branch as per the Mahavamsa, 18 – 34, but as per the Rajavaliya it is the right branch which flew to Lanka on its own. What a contradiction! This is also one of the reasons that Samghamitta is an invented character. His second brother is Mana, Mahanaga in other two chronicles, and Devenipetissa’s wife tried to kill Mana by poisoning. Mana then to be safe, went away to Ruhuna, and established his own kingdom and built a city of Magama. This story line is very suspicious as traditionally the throne passes from the king to the eldest son. The queen mother, therefore, should not to have bothered as the throne was assured to her son. This story line is invented to create the character ‘Duttha Gamani’ to slay Elala later. Duttha Gamani is an invented character. Mana’s son, king Yatalatissa, built the city of Kelaniya and ruled there. His son Gothabhaya ruled at Magama. Kavantissa, son of Gothabhaya, was the next king at Magama. Kelanitissa ruled at Kelaniya. Mana, Yatalatissa, Gothabhaya and Kavantissa ruled not at Anuradhapura, and, therefore, they are not listed in the list of sovereigns. They also reigned in Lanka. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 108 தொடரும் / Will follow துளி/DROP: 2042 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 107 https://www.facebook.com/groups/978753388866632/posts/33862079050107308/?
  14. அவவுக்கும் சிலவேளை (திருக்குறள் நிறைய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்காம்) தெரிந்திருக்கலாம் அண்ணை, ஆனால் சிரிக்கும் சிறார்களுக்கு தெரிந்திருக்க சந்தர்ப்பம் குறைவு! அவர்கள் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் என நினைக்கிறேன்.
  15. மூன்றாவ‌து பாட்ன‌ சிப்பின் அடி அமோக‌ம் வாழ்த்துக்க‌ள் நேபால் அணிக்கு................................
  16. இலங்கை மற்றும் ஜப்பான் இடையே பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து Published By: Digital Desk 3 17 Feb, 2026 | 04:44 PM இலங்கை மற்றும் ஜப்பான் இடையிலான பொருளாதார உறவுகளை ஒரு புதிய திசைக்கு இட்டுச் செல்லும் வகையில், "இலங்கை - ஜப்பான் அரசுகளுக்கிடையிலான பொருளாதாரக் கொள்கை உரையாடல்" (Intergovernmental Economic Policy Dialogue) திங்கட்கிழமை (16) நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிகழ்வின் ஒரு முக்கிய மைல்கல்லாக, இரு நாடுகளின் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுக்கு இடையே பொருளாதாரக் கொள்கை உரையாடல் தொடர்பான ஒத்துழைப்பு ஒப்பந்தம் (Memorandum of Cooperation - MoC) கைச்சாத்திடப்பட்டு பரிமாறிக்கொள்ளப்பட்டது. இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.ஏ. விமலெந்திரராஜா மற்றும் வெளிவிவகார அமைச்சின் பதில் மேலதிக செயலாளர் (இருதரப்பு பொருளாதார விவகாரங்கள்) தர்ஷன எம். பெரேரா ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஜப்பான் அரசாங்கத்தின் சார்பில் ஜப்பானிய பொருளாதார, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சின் (METI) சர்வதேச விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் மட்சுவோ தகேஹிகோ (Matsuo Takehiko) மற்றும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சின் தென்மேற்கு ஆசியப் பிரிவின் பணிப்பாளர் முரோதானி மசகட்சு (Murotani Masakatsu) ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்தக் கொள்கை உரையாடலின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கான வரைபடம் (Roadmap) குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், இலங்கையின் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை மற்றும் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை (FDI) ஈர்ப்பதற்கான வாய்ப்புகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும், ஒரு கைத்தொழில்துறை வழித்தடத்தை (Industrial Corridor) உருவாக்குவதற்கான வரைபடம் மற்றும் இலங்கையின் ஏற்றுமதித் திறன் குறித்த ஆய்வு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. இலங்கையில் ஜப்பானிய நிறுவனங்களுக்கான வணிகச் சூழல் குறித்து ஜெட்ரோ (JETRO) நிறுவனம் அறிக்கை சமர்ப்பித்ததுடன், Itochu மற்றும் Mitsui போன்ற முன்னணி ஜப்பானிய நிறுவனங்கள் தமது வணிக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் கொள்கை உரையாடல் மூலம் இலங்கை மற்றும் ஜப்பான் இடையே நிலவும் நீண்டகால நட்புறவு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஒரு புதிய யுகத்திற்குள் பிரவேசிக்கும் என இரு நாட்டுப் பிரதிநிதிகளும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். இந்நிகழ்வில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதுவர் இசோமதா அகியோ (Isomata Akio), ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, இலங்கை முதலீட்டுச் சபையின் (BOI) பணிப்பாளர் நாயகம் ரேணுகா வீரகோன், இலங்கை வர்த்தகச் சபையின் தலைவர் கிரிஷான் பாலேந்திரா மற்றும் ஜப்பான்-இலங்கை வணிக ஒத்துழைப்புக் குழுவின் தலைவர் புமிஹிகோ கொபயாஷி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/238876
  17. “ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.1.27 லட்சம் கடன் சுமை” - தமிழக இடைக்கால பட்ஜெட் மீது அன்புமணி விமர்சனம் சென்னை: “ஒரே ஆண்டில் ரூ.1.84 லட்சம் கோடி கடனை திமுக அரசு வாங்கியுள்ளது. இதன் மூலம் ஒவ்வொருவரின் தலையிலும் ரூ.1.27 லட்சம் கடன் சுமை சுமத்தப்பட்டுள்ளது” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டை கடந்த ஐந்தாண்டுகளாக ஆட்சி செய்து வரும் திமுக அரசு, தமிழ்நாட்டை எந்த அளவுக்கு கடன்கார மாநிலமாக மாற்றி வைத்திருக்கிறது என்பதற்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கை தான் சான்று ஆகும். சொந்த வரி வருவாயாக ரூ.2.06 லட்சம் கோடியை மட்டுமே ஈட்டியிருக்கும் திமுக அரசு, அதில் 90 விழுக்காட்டை, அதாவது 1.84 லட்சம் கோடியை கடனாக வாங்கிக் குவித்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொருவரின் தலையிலும் ரூ. 1.27 லட்சம் கடன் சுமை சுமத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். இடைக்கால நிதிநிலை அறிக்கை என்பதால் இதில் புதிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. ஆனால், 2025-26ஆம் ஆண்டிற்கான திமுக அரசின் நிதிச் செயல்பாடுகள் தமிழ்நாட்டை சீரழித்து, கடன் வலையில் வீழ்த்துவதாக அமைந்திருக்கின்றன. திமுக அரசின் மிக மோசமான செயல்பாடுகள் காரணமாக நடப்பாண்டில் மட்டும் கணிக்கப்பட்டதை விட 21% அதிகமாக ரூ.1 லட்சத்து 84,551 கோடியை கடனாக மு.க.ஸ்டாலின் அரசு வாங்கிக் குவித்திருக்கிறது. ஒரு மாநில அரசு மூலதனச் செலவுகளுக்காக மட்டும் தான் கடன் வாங்க வேண்டும். அதன்படி பார்த்தால், 2025-26ஆம் ஆண்டில் மூலதனச் செலவாக ரூ.51,443 கோடியை மட்டுமே செலவழித்திருக்கிறது. இது 2025&26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த ரூ.57,231 கோடியை விட ரூ.6788 கோடி குறைவாகும். ரூ.51,443 கோடிக்கு மூலதனச் செலவுகளை செய்துள்ள திமுக அரசு, அந்த அளவுக்கு மட்டும் தான் கடன் வாங்கியிருக்க வேண்டும். ஆனால், அதை விட மூன்றரை மடங்கு அதிகமாக ரூ.1.84 லட்சம் கோடியை கடனாக வாங்கியுள்ளது. இதை விட மோசமான நிதி மேலாண்மை இருக்க முடியாது. வாங்கிய கடனில் மூலதன செலவுகளை செய்தது போக மீதமுள்ள சுமார் ரூ.1.33 லட்சம் கோடியை திமுக அரசு என்ன செய்தது? கடந்த காலங்களில் வாங்கிய கடன்களில் ரூ.55,844 கோடி கடன் நடப்பாண்டில் திருப்பி செலுத்தப்பட்டு உள்ளது. இந்தத் தொகையை நடப்பாண்டில் கடனாக வாங்கிய ரூ.1.84 லட்சம் கோடியிலிருந்து தான் திமுக அரசு செலுத்தியுள்ளது. புதிய கடனை வாங்கி, பழைய கடனை அடைக்கும் அற்புதமான நிதி நிர்வாகத்தைத் தான் திமுக செய்திருக்கிறது. கடனை அடைக்க செலுத்தப்பட்ட தொகையும் போக, கடனாக வாங்கிய ரூ.1.84 லட்சம் கோடியில் ரூ.77,223 கோடி மீதமிருக்க வேண்டும். ஆனால், அந்தத் தொகை எங்கு போனது என்பது தெரியவில்லை. வருவாய்ப் பற்றாக்குறையை முற்றிலுமாக ஒழித்து, வருவாய் உபரியை ஏற்படுத்துவதாகக் கூறித் தான் திமுக ஆட்சிக்கு வந்தது. அடுத்த ஆண்டு முதல் வருவாய்ப் பற்றாக்குறை ஒழிக்கப்படும் என்று ஒவ்வொரு ஆண்டும் கூறி வந்தது. ஆனால், இன்று வரை திமுக அரசு வருவாய்ப் பற்றாக்குறையை ஒழிக்கவில்லை; மாறாக உயர்த்தி வைத்திருக்கிறது. 2025-26ஆம் ஆண்டில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.41,635 கோடியாக இருக்கும் என்று கடந்த நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. திமுக அரசுக்கு நிதி மேலாண்மைத் திறன் இருந்திருந்தால் இதை இயன்றவரை குறைத்திருக்க வேண்டும். ஆனால், இலக்கை விட 66%, அதாவது ரூ.27,584 கோடி அதிகமாக ரூ.69,219 கோடியாக வருவாய்ப் பற்றாக்குறை அதிகரித்திருக்கிறது. அரசு ஊழியர்கள் ஊதியம், சமூகநலத் திட்டங்கள் உள்ளிட்ட வருவாய்ச் செலவுகளைக் கூட திமுக அரசால் சமாளிக்க முடியவில்லை; அதைக் கூட கடன் வாங்கித் தான் அரசு செலவு செய்திருக்கிறது என்பதை இது காட்டுகிறது. வருவாய்ப் பற்றாக்குறை குறைக்கப்பட்டிருந்தால் தமிழக அரசு தேவையின்றி கடன் வாங்கியிருக்க வேண்டியிருந்திருக்காது. மூலதன செலவுகளுக்காக மட்டும் கடன் வாங்கி, மொத்தக் கடன் சுமையை குறைத்திருக்க முடியும். ஆனால், அதற்கான திறனும், அறிவும் திமுக அரசுக்கு இல்லை. வருவாயைப் பெருக்குவதும், அதற்குள் செலவு செய்வதும் தான் சிறந்த நிதி நிர்வாகம் ஆகும். ஆனால், இந்த இரண்டிலுமே திமுக அரசு படுதோல்வி அடைந்துள்ளது. 2025-26ஆம் ஆண்டில் ரூ.2.20 லட்சம் கோடி சொந்த வரி வருவாய் ரூ.2.06 லட்சம் கோடியாக குறைந்திருக்கிறது. இது இலக்கை விட ரூ.14,355 கோடி, அதாவது 6.50% குறைவு ஆகும். அதேபோல், வரி அல்லாத வருவாய் இலக்கை விட 7.82%, அதாவது ரூ.2554 கோடி குறைந்து விட்டது. மொத்த வருவாயும் ரூ.3.31 லட்சம் கோடி என்ற இலக்கில் இருந்து ரூ.21,871 கோடி (6.6%) குறைந்து ரூ.3.09 லட்சம் கோடியாக சுருங்கி விட்டது. அதே நேரத்தில் அரசின் வருவாய் செலவுகள் ரூ.5113 கோடி அதிகரித்து ரூ.3 லட்சத்து 78,917 கோடியாக உயர்ந்துள்ளது. ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் கடன் வாங்கிக் குவித்ததைத் தவிர வேறு எந்த சாதனையும் செய்யப் படவில்லை. இந்திய விடுதலைக்குப் பிறகு, தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஏற்படுத்தப்பட்ட 1952-ஆம் ஆண்டிலிருந்து திமுக அரசு பொறுப்பேற்பதற்கு முந்தைய 2020-21ஆம் நிதியாண்டின் இறுதி வரையிலான 70 ஆண்டுகளில் தமிழகத்தின் நேரடிக் கடன் ரூ.4.56 லட்சம் கோடி மட்டும் தான். ஆனால், அதன்பின் பொறுப்பேற்ற திமுக அரசு ஐந்தாண்டுகளில் வாங்கிக் குவித்துள்ள கடன் மட்டும் ரூ.4.96 லட்சம் கோடி ஆகும். 70 ஆண்டுகளில் வாங்கப்பட்ட கடனை விட 109% கடனை திமுக ஐந்தாண்டுகளில் வாங்கிக் குவித்திருக்கிறது. தமிழ்நாட்டிலிலுள்ள ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.1.27 லட்சமும், 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் பெயரில் ரூ.5.08 லட்சமும் கடன் சுமையை மு.க.ஸ்டாலின் அரசு சுமத்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் திமுக அரசு தொடர்ந்தால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் வங்கிகளிடம் அடகு வைக்கப்பட்டு விடும். தமிழ்நாடு திவாலாவதை தடுக்க வேண்டும் என்றால், திமுக அரசு உடனடியாக அகற்றப்பட வேண்டும். அதை அடுத்த சில வாரங்களில் நடைபெறவுள்ள தேர்தலில் தமிழக மக்கள் செய்து முடிப்பார்கள்” என்று அவர் தெரிவித்தார். https://www.hindutamil.in/news/tamilnadu/nbumani-criticizes-tamil-nadus-interim-budget
  18. நேபாளமும் விடாம அடிக்கினம். ஆருக்கு முட்டை.
  19. Today
  20. அவர்கள் இறுதிப் போட்டிக்குப் போகும் என்று ஞானும். கடைசியா கன பேருக்கு ஆப்புதான்
  21. என்ன இன்று உங்க காட்டில மழை போல. கோசானை பதியவிட்டு கிழப்பிவிட்டது.
  22. அவுஸ் வெளியேற என்ன காரணம்? ஐ பில் எல் செய்த சூனியமோ?
  23. சர்வதேச நாணய நிதியத்திற்கு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வலு உள்ளது. தமிழ் அரசியல்வாதிகள் யாராவது இவரைச் சந்தித்துப் பேச முயற்சிக்கலாம். குறைந்தபட்சம் இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டங்கள் மூலம் சிறுபான்மையினரின் சுதந்திரம் பறிக்கப்படுவதையாவது சுட்டிக் காட்டலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.